Pages

வரலாறும், பொறியலும் ...
டிஸ்கி: தலைப்பில் பிழையில்லை.

பதிவு எழுத வந்து ரெண்டே ரெண்டு மாசம் மட்டுமே ஆன பதிவுலகக் குழந்தையான  என்னையும் வரலாறு எழுதச் சொன்னதுலயே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் நான் ஒரு "Child Prodigy"ன்னு!! (வளர்ந்ததுக்கப்புறம் இந்த prodigy எல்லாம் காணாமப் போயிடுறாங்களேன்னு நக்கல் பேசக்கூடாது.)

முஸ்லிம்கள்னா அசைவம்தான் அதிகம் சாப்பிடுவாங்கன்ற முதுமொழிக்கு ஏற்ப அசைவமே சமைச்சுகிட்டிருந்த நான், எடை எக்கச்சக்கமா கூடிப்போயி உக்கார்றதும், எந்திக்கறதுமே ஒரு பெரிய வேலையா ஆகிப்போன நிலையில கொஞ்சமாவது சைவத்துக்கு மாறலாம்னு முடிவெடுத்துச் செய்ய ஆரம்பிச்சப்போதான் முதுமொழிக்கான காரணம் புரிஞ்சது. அசைவத்தை எப்படி சமைச்சாலும் ருசியா இருக்கும்; காய்கறிகளை கொஞ்சம் கருத்தா சமைச்சாதான் வாயிலயாவது வைக்க முடியும்னு தெரிஞ்சுது.

(இந்த இடத்தில, தொடர் எழுத அழைச்ச பீர் நினைக்கிறார்: “என்னது, இந்தம்மாட்ட எழுத வந்த கதயச் சொல்லச்சொன்னா, இது சமைக்க வந்த கதய சொல்லிகிட்டிருக்கு?”.  வெயிட் பீர், எங்க வெயிட்டக் குறைச்ச கதையிலதான் அந்தக் கதையும் இருக்கு.)

இருந்தாலும் எடுத்த முடிவில பின்வாங்கக்கூடாதுன்னு உறுதியோட வலையை வலம்வந்து அறுசுவைங்கிற தளத்துக்குள்ள நுழைஞ்சா, அங்கே சுஹைனா (சுமஜ்லா)வோட அறிமுகம் கிடைச்சுது. அங்கயும் கவிதைகள்  எழுதிகிட்டிருந்த அவர், அவரோட ஹஜ் பயணத்தைப் பத்தி அந்தத் தளத்துல எழுத நினைச்சப்போ, அனுமதி கிடைக்காததால, தனியா பிளாக் ஆரம்பிச்சார். அதைப் படிக்க வந்தப்பதான் இங்க தனியா ஒரு ப்ளாக் மாஃபியாவே நடந்துகிட்டிருக்கது தெரிஞ்சுது!!

கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு மாசமா ஒழுங்கா பிளாக்குகளைப் படிச்சுகிட்டு மட்டுமே இருந்தேன் . இடையில அறுசுவையில சில விவாதங்களிலும், அனுபவங்களையும் நான் எழுதப்போக, அப்பதான் எனக்குள்ள ஒளிஞ்சுகிட்டு இருந்த எழுத்துத் தெறம எனக்கே தெரிஞ்சுது. இதுல சில பிளாக்குகளைப் பாத்துட்டு, Why not me? என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழவும் (இழவு இல்லை; வந்தது என்ற அர்த்தம்) எழுத ஆரம்பிச்சேன். (புலி/பூனை,  மயில்/வான்கோழி, பருந்து/குருவி.. இப்படியெல்லாம் உங்க மனசுக்குள்ள எண்ணங்கள் ஓடுதுன்னு எனக்குத் தெரியும்...)

பிளாக் எழுத ஆரம்பிச்சதில வேற ஒரு லட்சியமும் இல்ல.என் எழுதும் ஆசையைத் தீர்த்துக் கொள்(ல்)வது மட்டுமே. ஆனா,  அப்படியே இந்த “காதல்” படத்தில சொல்ற மாதிரி, “முதல்ல ஹீரோ, அப்புறம் கட்சி, சி.எம்., பி.எம்” ங்கிற மாதிரி எனக்கும் வாய்ப்புக்கள் வரலாம் ஒருவேளை!! (ஈஸி, ஈஸி பீர்; கூல், கூல், தனியா ரூம்ல இப்படி வெறிபிடிச்ச மாதிரி கத்தினா தப்பா எடுத்துக்கப் போறாங்க!)


எழுத ஆரம்பித்துச் சில வாரங்கள் வாசகர்களோ, பின்னூட்டங்களோ அதிகம் இல்லாமல் ஈ ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்பத்தான் பிரபல பதிவர் அ.மு.செய்யது என்னை ஒரு தொடர்பதிவு எழுத அழைத்தார். அதில் நான் சொல்லியிருந்த முற்போக்கான சில கருத்துக்கள் எனக்கு பொதுமக்களிடையே பேராதரவைப் பெற்றுத் தந்தது. (சரி, சரி).  ஓடாத படத்துக்கு விளம்பரம் வேண்டி யாரையாவது வச்சு கேஸ் போடுவாங்களே, அது மாதிரி எனக்கும் விளம்பரம் கிடைச்சுது; எப்படி விளம்பரம் தேடிக்கிறதுங்குற யுத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுது!!


மிகக் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்டதாலும், ஒரு மிகமிகச்சிறிய அரசியல் பிண்ணனி இருப்பதாலும் எனக்கு சமூகச் சிந்தனைகள் (சிந்தனைகள் மட்டுமே) அதிகம்.  (அட, நம்புங்க!) அதையும் மீறி என் பதிவுகளில் தென்படும் மெலிதான நகைச்சுவைக்கு  முழுமுதற் காரணம் என்னவர்தான். ஒரு ஆறேழு மாசம் முன்னாடி ரிஸெஷன்ல இவர் வேலைக்கும் அபாயம் வர்ற மாதிரி இருந்துது. என்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டு குறட்டை விட்டு தூங்கிட்டார். நான் தூக்கம் வராமல் தவிச்சு, கோபத்தில் இவரை எழுப்பி,  எவ்வளவு லோன் இருக்கு, கவலையே இல்லாம இப்படி தூங்குறீங்களேன்னு கத்த, அதுபத்தி லோன் கொடுத்தவந்தான் கவலைப்படணும். நான் ஏன் கவலைப்படணும்னு சொல்லிட்டு மறுபடியும் குறட்டை... இப்பவெல்லாம் சண்டை ஆரம்பிக்குமுன்பே சொல்லிவிடுவேன், நடுவில எதாச்சும் ஜோக்கடிச்சீங்க, கொன்னுடுவேன் என்று. அதனால் என் மொக்கை பதிவுகளுக்கு காரணம் அவரே !! (நாஞ்சில் பிரதாப், உங்க கேள்விக்குப் பதில் கிடைச்சுதா?)

நிற்க!! (எழுந்து நிக்காதீங்க, அப்படின்னு பயங்கர மொக்கையெல்லாம் போடமாட்டேன்)

பள்ளிக்காலம் முதலே தமிழ்ப் பாடம் பிடிக்கும். தமிழில் வாசிக்கும் ஆர்வமும்  இருந்தது. அதாவது புரியாத இலக்கியம், கவிதை, பின்/முன் நவீனம் இந்த மாதிரி ஆர்வம் இல்லை. சாதாரண பேச்சுத்தமிழ் நடையில் ஒரு “காமன் வுமன்” ஆன எனக்குப் புரியும்படியான எழுத்து பிடிக்கும். வெகுஜன பத்திரிக்கைகள்தான் என் ஆர்வத்திற்குத் தீனி போட்டன.

தமிழ் எழுத முதல்ல tamileditor.org-ம்,  தற்போது NHM editor-ம் உபயோகிக்கிறேன்.  திரட்டிகள் பற்றி அதிகம் தெரியவில்லை. எப்படி உபயோகப்படுத்திக்கொள்வது என்று யாராவது டியூஷன் எடுப்பார்களா? என் பதிவுகள் அதிகம் பேரை சென்றடைய தமிழ்மணம், தமிழிஷ் ஆகியவற்றில் சமர்ப்பிக்கிறேன், அவ்வளவே. அபுதாபியில் பதிவர் பட்டறை நடக்குமா என்று எதிர்பார்த்திருக்கிறேன். (ஆனா, கவிதை, இலக்கியம்னு பேசுவீங்கன்னா, வரமாட்டேன்).

நான் ஏற்கனவே சொன்னதுபோல, எழுத்துலகில் நான் இன்னும் ஒரு குழந்தைதான். குழந்தை என்ன செய்தாலும் சுற்றியிருப்பவர் மகிழ்வதுபோல, என் எழுத்துக்களையும் படித்து ஆதரவளிக்கும் நீங்களே என் வளர்ச்சிக்குக் காரணம். (கட்சிக் கூட்டத்தில பேசற மாதிரி இருந்தாலும், இதுதான் உண்மை). முடிந்தவரை பிழைகள் இல்லாமல் எழுத முனைகிறேன். சந்திப் பிழை, இலக்கணப் பிழைகள் அதிகம் அறியாததால் இருக்கலாம்; எழுத்துப் பிழைகளைக் கவனமாகத் தவிர்க்கிறேன். எனக்கு பதிவுகள் குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டால் தயங்காமல் உதவி செய்யும்/ செய்யப்போகும் சக பதிவர்களுக்கு மிக நன்றி.

இதைத் தொடர யாரைக் கூப்பிடலாம்? போன தொடர்ல நான் கூப்பிட்டவங்கள்ல, புதுகைத் தென்றல் அக்கா தவிர யாரும் எழுதல, ரொம்பப் பிஸியாம்!!

1. நாஞ்சில் பிரதாப்
2. அ.மு.செய்யது (பழி வாங்கிட்டேனே!!)
3. ஸாதிகா அக்கா
4. தேவன்மாயம்

இனி யாராவது தொடர்பதிவுக்கு அழைப்பீங்க?

 

 

   

Post Comment

32 comments:

ஸாதிகா said...

ஹுசைனம்மா,பிளாக் உலகத்திற்கு வந்த கதையை படு சுவையாக விவரித்து இருந்தது சுவாரஸ்யமாக இருக்கின்றது.என்னையும் தொடர் எழுத அழைத்தமைக்கு நன்றி.நீங்கள் அழைத்திருக்கும் பிற பதிவர்கள் பதிவு போட்ட பின் நான் போடுகின்றேன்.

S.A. நவாஸுதீன் said...

வரலாரு பொறிஞ்சு தள்ளிட்டீங்க.

ஆனாலும் மச்சான் (லோன் பத்தி) சொன்னது கரெக்ட்தான். தூக்க கலக்கத்திலேயே இந்த போடு போட்டா, மத்தபடி கேக்கவே வேணாம் போல.

ரொம்ப சுவாரசியமா இருக்கு.

சந்தனமுல்லை said...

சுவாரசியம்! தொடர்ந்து எழுதுங்கள்!

♠ ராஜு ♠ said...

கலக்கலுங்கோ..!
கலக்குங்கோ..!
அடைப்புக்குள்ள இருக்குறதெல்லாம் சுவாரஸியம்.

கிளியனூர் இஸ்மத் said...

நகைச்சுவை உங்களிடம் அதிகம் இருப்பதால் உங்க வீட்டுக்காரர் ரொம்ப கொடுத்து வச்சவரு....ஏன்னு கேக்குறீங்களா..?..உங்களுக்கு நகையே தேவைஇல்லை பாருங்க...ப்ளீஸ் சிரிச்சிடுங்க.

cheena (சீனா) said...

அன்பின் ஹூஸைனம்மா

அருமையான வரலாறு - அழகாக எழுதுகிறீர்கள்

நல்வாழ்த்துகள்

SUFFIX said...

அருமையா எழுதியிருக்கிங்க ஹுசைனம்மா!! வரலாறு முக்கியம் அமைச்சரே...

அ.மு.செய்யது$ said...

தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு மிக்க நன்றி !!!!

ஏற்கெனவே "அமித்து அம்மா" கொடுத்த ஹோம்வொர்க் அ இன்னி வரைக்கும் செய்யல..திரும்பவும் அதே அசைன்மென்ட்டா ??? செய்றேன்.இன்ஷா அல்லாஹ்.

//பிரபல பதிவர் அ.மு.செய்யது //

8 மாசமா குடியிருக்கேன்.எங்க அபார்ட்மென்ட் வாட்சுமேனுக்கே என்ன யாருன்னு தெரியமாட்டங்கு..இதுல பிரபல பதிவராமாம்.

க.பாலாசி said...

அனுபவத்தை விவரித்த விதம் அழகு....எல்லோரின் அனுபவமும் ஒவ்வொருமுறையில் ரசிக்கவைக்கிறது.

அன்புடன் மலிக்கா said...

ஹுசைனம்மா கலக்குறீங்க கலக்கவந்தத சொன்னவிதம் சூப்பரப்பு..

நாஸியா said...

எவ்வளவு சுவாரசியமா எழுதுறீங்க.. ரொம்ப நல்லா இருக்கு, படிக்க..

மாஷா அல்லாஹ்.. உங்க வீட்டுல உள்ளவங்களுக்கு நல்ல டெம்பரமென்ட்.. :)

நாஞ்சில் பிரதாப் said...

//கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு மாசமா ஒழுங்கா பிளாக்குகளைப் படிச்சுகிட்டு மட்டுமே இருந்தேன் //

அதையே கன்டினியு பண்ணிருக்கலாமே...:-)

//எனக்குள்ள ஒளிஞ்சுகிட்டு இருந்த எழுத்துத் தெறம எனக்கே தெரிஞ்சுது//

என்ன கொடுமைங்க... இதெல்லாம் கேட்க யாருமே இல்லையா...???

சின்ன வயசுல தென்னைமரம் தன்னைப்பற்றி கூறுதல் அப்படின்னு கட்டுரை எழுதுன
ஞாபகம் வந்துடுச்சு...

நண்பர் பீர்-க்கு போட்ட பின்னூட்டத்துல உங்களை கலாய்ச்ச ஒரே குற்றதத்துக்காக இவ்ளோ பெரிய தண்டனையா...அவ்வ்வ்..:-( இருந்தாலும் கூப்பிட்டது நீங்களாச்சே எழுதறேன்...

திரட்டிகள் பற்றி என்ன சந்தேகம்...கேளுங்க சொல்றேன்.

எம்.எம்.அப்துல்லா said...

//இதுல சில பிளாக்குகளைப் பாத்துட்டு, Why not me? என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழவும் //

உண்மையைச் சொல்லுங்க... அது என் பிளாக்தானே??

:))

காற்றில் எந்தன் கீதம் said...

போரியல் நல்லா இருக்கு ஹுசைன்னம்மா.............
(இது என் முதல் பின்னூடம்)

உங்கள் தோழி கிருத்திகா said...

வரலாறு அருமை.....ஜாகரபியயும் எடுத்து உட்ரது :)(சும்மாங்க..)
நல்ல முயற்சி...நடுவுல விட்டுடாம தொடர்ச்சியா எழுதுங்க...வாழ்த்துக்கள்

செ.சரவணக்குமார் said...

கலக்கலா எழுதியிருக்கீங்க ஹீஸைனம்மா.

ஷாகுல் said...

வரலாறு......

நல்லா இருந்துதுக்கா..

shabi said...

உங்களின் mail id தர முடியுமா..

Anonymous said...

//எம்.எம்.அப்துல்லா Says:
07/12/09 15:56

//இதுல சில பிளாக்குகளைப் பாத்துட்டு, Why not me? என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழவும் //

உண்மையைச் சொல்லுங்க... அது என் பிளாக்தானே??

:))//

இதப்பாரு, அப்துல்லா ஒண்ணும் சரியில்லை :)

பீர் | Peer said...

ஓ... சார்கிட்ட இருந்துதான் நகைச்சுவை கத்துக்கிட்டீங்களா??
அந்த மைன்ட் ரீட் யாருங்க சொல்லி தந்தது.. எல்லாமே தப்பு. (மீ எஸ்கேப்பு)

அது போகட்டும், வைரஸ் எப்டி அனுப்புறதுன்னு சொல்லித்தாங்களேன். சில பல கடமைகள் காத்துக்கெடக்கு.

லெமூரியன்... said...

வரலாறும் பொறியியலும் னு நெனைச்சி....(பொறியாளன் ஆச்சே நா ...ஒரு ஆர்வம் தான் ) ஓடி வந்தா.........நான் சின்ன புள்ளைன்னு சொல்லி தப்பிசீடீங்க.........ஆனாலும் நம்ம ஊரு புள்ளையாச்சே நீங்க.....எழுத்துல அப்பிடியே நம்ம ஊர் கேலி கிண்டலாம் தெரியிது....! :-) :-)

ஹுஸைனம்மா said...

ஸாதிகா அக்கா, நன்றி. சீக்கிரமே எழுதுங்கள்.

நவாஸ், நன்றி.

சந்தனமுல்லை, நன்றி. பிளாக் பிரச்னை முடிஞ்சுதா?

டக்ளஸ் ராஜூ, நன்றி.

//நகைச்சுவை உங்களிடம் அதிகம் இருப்பதால் .. உங்களுக்கு நகையே தேவைஇல்லை//

இஸ்மத் அண்ணே,அதுக்குத்தானே நான் வீட்டில சிரிக்கிறதே இல்லை!!

சீனா சார், மிக்க நன்றி.

ஷ‌ஃபி, நன்றி. அமைச்சர் யாரு?

செய்யது, நம்மள நாமளே பிரபலம் சொல்லிகிட்டாதான் உண்டு!! அப்புறம், அஸைன்மெண்ட் இப்பவும் முடிக்கலைன்னா, அடுத்து இம்போஸிஷன்தான்; அல்லது ஜின் ஏவிவிடப்படும்!!

பாலாசி (ஏன் 'ஜி' இல்லை?), நன்றி.

மலிக்கா, நன்றி.

நாஸியா, அதென்ன எங்க வீட்டில உள்ளவங்களுக்குப் பாராட்டு, என்னையும் வச்சு சமாளிக்கிறாங்களேன்னா? :‍-(

//தென்னைமரம் தன்னைப்பற்றி கூறுதல்//

நாஞ்சில் பிரதாப், நக்கல்?? தென்னைமரத்தின் பயன்களும் அதிலே வருமே, படிச்சதில்லையா? உங்ககிட்ட சந்தேகம் கேட்கிறதைவிட, அது சந்தேகமாவே இருந்துட்டுப் போகட்டும். ;-(

//உண்மையைச் சொல்லுங்க... அது என் பிளாக்தானே??//

அப்துல்லா, இல்லை, அது, பிரதாப்போடதுன்னு சொல்ல ஆசை!! :‍-))

காற்றில் எந்தன் கீதம், நன்றி முதல் மற்றும் தொடரப்போகும் பின்னூட்டங்களுக்கு.

கிருத்திகா, ஜியாக்ரஃபி, கொஞ்சம் அலர்ஜி. வரலாறாவது கதை அளந்துடலாம். புவியியல்ல முடியாதே!!

செ.சரவணக்குமார், நன்றி.

தம்பி ஷாஹுல், நன்றி.

ஷபி, என் மெயில் ஐ.டி. என் ப்ரொஃபைல் பக்கத்தில் உள்ளது. (நல்லவருங்க நீங்க. பொதுவில திட்ட வேண்டாம்னு நினைக்கிறீங்க பாருங்க!!)


//இதப்பாரு, அப்துல்லா ஒண்ணும் சரியில்லை//
சின்ன அம்மிணி, எது சரியில்லை, அப்துல்லா பிளாக்கா, என் பதிவா? தெளிவாச் சொல்லுங்க!! :-)

பீர், நான் எழுதின மைண்ட் ரீடிங்க் தப்புன்னா, அப்போ இதவிடக் கேவலமா நினைச்சீங்களா?
அப்ப உண்மைத் தமிழனுக்கு வைரஸ் நீங்க அனுப்பலையா?

லெமூரியன், நன்றி. நீங்க பொறியாளர்னா, எலிப்பொறி விக்கிறீங்களா? நல்லா சேல்ஸ் ஆவுதுங்களா? :-))

புதுகைத் தென்றல் said...

புதுகைத் தென்றல் அக்கா தவிர யாரும் எழுதல//

நெம்ப புகழீறீங்க. வெக்க வெக்கமா வருது. பதிவெழுதுவதே வேலைன்னு கிடக்கேன். அதான் சட்டுன்னு எழுதிப்புட்டேன். :)))

தாரணி பிரியா said...

வாவ் செம கலக்கலா எழுதறீங்க ஹூசைனம்மா :).

☀நான் ஆதவன்☀ said...

பதிவு முழுசும் நகைச்சுவை. பின்றீங்களே :)

குறட்டை மேட்டர் படிச்சுட்டு சிரிப்பை அடக்க முடியல போங்க :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ஒரு ஆறேழு மாசம் முன்னாடி ரிஸெஷன்ல இவர் வேலைக்கும் அபாயம் வர்ற மாதிரி இருந்துது. என்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டு குறட்டை விட்டு தூங்கிட்டார். நான் தூக்கம் வராமல் தவிச்சு, கோபத்தில் இவரை எழுப்பி, எவ்வளவு லோன் இருக்கு, கவலையே இல்லாம இப்படி தூங்குறீங்களேன்னு கத்த, அதுபத்தி லோன் கொடுத்தவந்தான் கவலைப்படணும். நான் ஏன் கவலைப்படணும்னு சொல்லிட்டு மறுபடியும் குறட்டை//

வாழ்க்கையின் யதார்த்தம் புரிந்த மனிதர்........நீங்கள் கொடுத்து வைத்தவர்

பாத்திமா ஜொஹ்ரா said...

அசத்தீட்டீங்க அக்கா.

angel said...

கவிதை, இலக்கியம்னு பேசுவீங்கன்னா, வரமாட்டேன்)

ivlo nala eluthuringa kavithaiyum try panunga
unga kavithai vasika arvamaga irukum vasiki

ஹுஸைனம்மா said...

புதுகை தென்றல் அக்கா, நன்றி.

தாரணிப் பிரியா, நன்றி.

நான் ஆதவன், நன்றி.

பெயர் சொல்ல விருப்பமில்லை, நன்றி. //வாழ்க்கையின் யதார்த்தம் புரிந்த மனிதர்// ஆமாம், நான் பிரச்னை வருவதற்கு முன்பே புலம்ப ஆரம்பித்து விடுவேன், அவரோ, "Let the river overflow" என்பார்.

பாத்திமா ஜொஹ்ரா, நன்றி.

ஏஞ்சல், ஏம்மா உனக்கு இவ்வளவு காண்டு? அதுவும் எம்மேல இருந்தாக் கூடப் பரவாயில்லை!!

Madhu said...

super

Madhu said...

super

Madhu said...

super