Pages

எய்ட்ஸும், கேன்ஸரும்

டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினம்.எண்பதுகளின் தொடக்கத்தில் அங்கங்கே தென்பட ஆரம்பித்த இந்நோய் இன்று நீக்குபோக்கில்லாமல் எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது. எய்ட்ஸ் வருவதன் முக்கிய காரணம் எல்லாரும் அறிந்ததே. அதாவது தவறான வாழ்க்கைமுறை வாழ்பவர்கள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடற்று வாழ்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகியோர் தெரிந்தே தருவித்துக் கொள்ளும் நோய் எய்ட்ஸ். அதுதவிர, சுத்திகரிக்கப்படாத ஊசி, சோதிக்கப்படாத இரத்த மாற்று (blood transfusion), நோயை மறைத்துத் திருமணம் செய்பவர்களின் மனைவி, மக்கள் என்று அறியாமல் அதன் வலைக்குள் சிக்கிக்கொள்பவர்களும் உண்டு.


இந்த நோய்க்கு மருந்து இல்லை, வந்தால் நிச்சயம் மரணம்தான் என்பதால் இதைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த பல்வேறு அரசுகளும், WHO, UN ஆகியவை கணக்கில்லாமல் பணத்தைச் செலவழித்து முயன்று கொண்டிருக்கின்றன.ஆனால் HIV/எய்ட்ஸ் மூலம் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.


வாழ்க்கையைச் சரியான முறையில் வாழ்ந்து வந்தால் எய்ட்ஸ் நோய் பாதிக்காது. ஏற்கனவே கூறியபடி முறையற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கே இந்நோய் பீடிக்கும் அபாயம் உள்ளதால், இதைக் குறித்த அறிவுரை என்னவாக இருக்க வேண்டும்? இல்லறத்தை நல்லறமாகப் பேணுவோம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உடலுறவு கூடாது என்பதை மெதுவாகச் சொல்லிக் கொண்டு, அது முடியவில்லை என்றால் ஆணுறை பயன்படுத்துங்கள் என்று சத்தமாக  நல்வழி காட்டுகிறார்கள்!!


முழுக்க முழுக்க தனிப்பட்ட ஒருவனின்/ ஒருத்தியின் திமிரெடுத்த ஆசைகளினால் வரும் நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கங்களும், ஐ.நா., உலக சுகாதார மையங்களும் இந்தளவு மெனக்கெட வேண்டிய அவசியம் என்ன? இதற்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை, மருந்து என்று இந்திய அரசாங்கம் செலவழிக்கும் தொகையும் மிக அதிகம். அதை வைத்துச் சில தொண்டு நிறுவனங்கள் ஆதாயம் பார்க்கும் கொடுமையும் நடக்கிறது.
இது போன்ற இன்னொரு கொடுமையான நோய் புற்றுநோய்!! இந்நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப் பட்டால் மீண்டு விடலாம்.  உடலில் பலபாகங்களில் வரக்கூடியது.   ஒருவரின் புகை, குடி, தவறான உணவுப் பழக்கங்கள் காரணமாக இந்நோய் தாக்குவதாகக் கூறப்பட்டாலும் பாதிக்கப்பட்ட பலரும் தவறான பழக்கங்கள் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். கெட்ட பழக்கங்கள் இல்லாத ஒருவருக்கு கேன்ஸர் வருவதன் காரணம் இதுவரை அறியப்படவில்லை. அதுபோல காலம்காலமாகக் குடியும், புகையுமாக இருப்பவருக்குக் கேன்ஸர் வராததும் புதிரே!!மேலும் இந்நோய்க்கு எடுக்க வேண்டிய சிகிச்சைக்கு அதிகப் பணம் தேவைப்படும்.அரசாங்க மருத்துவமனைகளில் (சில) தரமான மருத்துவர்களும், சிகிச்சை உபகரணங்களும் இருந்தாலும், அங்கு சிகிச்சைக்கு நேரம் ஒதுக்கப்பட காத்திருக்க வேண்டும். நாம் காத்திருக்கலாம், நோய் காத்திருக்குமா? முதல்வரே அரசு மருத்துவமனையை நம்பாமல்தானே தனியாரிடம் சிகிச்சை பெறுகிறார்!!


அரசு மருத்துவமனைகளில் இருக்கும் அதிகப்படியான கூட்டத்தினால், நோயாளிகளுக்கு மிக அவசியமான ஆதரவும், ஆறுதலும் மருத்துவர்களால் தரமுடிவதில்லை. இன்னும் பல காரணங்களால் அரசு மருத்துவமனைகளை மக்கள் அதிகம் நாடுவதில்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் இதில் கொள்ளை லாபம் பார்க்கின்றன. ஒரு கட்ட சிகிச்சைக்கு மட்டுமே  குறைந்தது 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இது சாமானிய மனிதனால் புரட்டக்கூடியதா? 


இது தவிர, மேல் சிகிச்சை, மருந்துகள், தொடர் கண்காணிப்பு பரிசோதனைகள் என்று மிகுந்த செலவு பிடிக்கும் நோய் இது. நோய் வருமுன் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால் ஓரளவு சமாளித்துவிடலாம். நோய் வந்தபின் எடுப்பதற்கு காப்பீட்டு நிறுவனங்களின் கட்டண முறைகள் அத்துணை சாதகமாக இல்லை.


நோயிலிருந்து மீண்டு வருவதற்கும், சிகிச்சை விளைவுகளைத் தாங்கிக் கொள்ளவும் மிகுந்த மனதைரியமும், பொறுமையும், தன்னம்பிக்கையும் வேண்டும்.  அதோடு செலவுகளும் கைமீறிப் போனால்? 


திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கேன்ஸரால் பாதிக்கப்பட்டவர்கள் திருவனந்தபுரம் கேன்ஸர் இன்ஸ்டிடியூட் மற்றும்  சித்திரைத் திருநாள் மருத்துவமனைகளுக்கே செல்கின்றனர். 

 பதிவர் திருமதி. அனுராதா அவர்களின் கேன்ஸருக்கு எதிரான போராட்டத்தைப் பலமாதங்கள் முன்பே வாசித்திருக்கிறேன். பலரின் அனுபவங்களைப் பத்திரிக்கைகளில் படித்திருந்தாலும், அவர்களின் விரிவான பதிவுகளைப் பார்க்கும்போது ஒரு நடுக்கம் வருகிறது. யாருக்கும் இந்நிலை நேரலாம் நாளை. அதற்குத் தேவையான விழிப்புணர்வு இருக்கிறதா நம்மிடையே?


 சில வெளிநாட்டுத் தனியார் தொண்டு நிறுவனங்களின் புண்ணியத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பரவி வருகிறது. சுய பரிசோதனைகள் விளக்கப்படுகின்றன. 


கேன்ஸர் எதனால் வரும்? எவ்வாறு அறியலாம்? தடுப்பது எப்படி? முன்னெச்சரிக்கையாகச் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்னென்ன?  இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இதற்கென என்ன செய்யப்படுகிறது என்று யாருக்காவது தெரியுமா? புத்தகங்கள், பத்திரிக்கைகள் வாசிக்கும் மக்களுக்கு வேண்டுமானால் சுயமுயற்சியால் இதுகுறித்த சிறு விழிப்புணர்வு இருக்கலாம். ஆனால் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களிடம் இதுகுறித்த எந்த விழிப்புணர்வும் இல்லை. வந்தபிறகுகூட, சரியான சிகிச்சை பெறவேண்டும் என்று அறியாமலே இருக்கிறார்கள். தெரிந்தாலும் அதற்குரிய பணமும், நேரமும் செலவழிக்க இயலாத நிலையே பலருக்கும். அரசாங்கமும் அதுகுறித்து கவலைப்படவில்லை.


புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்று கேட்டு கேட்டு எய்ட்ஸ் பற்றி அறியாதவர்கள் இன்றில்லை. ஆனால் புற்றுநோய் குறித்த அறிவு மக்களுக்குக் கிடைப்பது தமிழ்த் திரைப்படங்களின் மூலமே! அதுவும் கேன்ஸர் வந்தால் ரத்தம் கக்கியே செத்துவிடுவார்கள் என்று போதித்து எய்ட்ஸை விட கேன்ஸர் மோசமாகச் சித்தரிக்கப்படுகிறது .


சரியான நேரத்தில், சரியான சிகிச்சை கிடைத்தால் புற்றுநோயை வெல்லலாம். அதற்குப் போதுமான விழிப்புணர்வு தேவை. அரசை எதிர்பாராமல் நாமே விழித்துக் கொள்வோம்.

Post Comment

21 comments:

S.A. நவாஸுதீன் said...

நல்ல சமூக சிந்தனையுடன் அலசியிருக்கின்றீன்ர்கள். பாராட்டுக்கள்

அ.மு.செய்யது said...

ம்ஹூம்...பயனுள்ள இடுகை.வலையுலகில் கொஞ்சம் கவனிக்கப் படவேண்டிய இடுகைகளுள் ஒன்றாக இருக்கும் இது.

(அடிக்கடி இப்படி அதிரடி பதிவு போட்டு வாலண்டியரா வந்து ஜீப்புல
ஏர்றீங்க..!ரைட்டு நடத்துங்க..!!)

Keep scoring !!

அ.மு.செய்யது said...

ம்ஹூம்...பயனுள்ள இடுகை.வலையுலகில் கொஞ்சம் கவனிக்கப் படவேண்டிய இடுகைகளுள் ஒன்றாக இருக்கும் இது.

அடிக்கடி இப்படி அதிரடி பதிவு போட்டு வாலண்டியரா வந்து ஜீப்புல ஏர்றீங்க..!
ரைட்டு நடத்துங்க..!!
!

எம்.எம்.அப்துல்லா said...

நம் பதிவர் டாக்டர்.புருனோ அவர்களிடம் நீண்ட நேரம் இதுபற்றிப் பேசிக்கொண்டு இருந்துவிட்டு இப்பொழுதுதான் வீடு திரும்புகின்றேன். நான் இதைப் பற்றி நாளை(நள்ளிரவு மணி 2 ஆகிவிட்டதால் இன்று என்றும் சொல்லலாம்) எழுதலாம் என்று இருக்கின்றேன்.

பீர் | Peer said...

//முழுக்க முழுக்க தனிப்பட்ட ஒருவனின்/ ஒருத்தியின் திமிரெடுத்த ஆசைகளினால் வரும்...//

சரிதான். ஏன் இலவச மருத்துவ சேவை செய்யணும்?
இந்தப்பயலுவதான் விபச்சாரத்தை அங்கீகரிக்கணும்னு சொல்றானுவளே. அடுத்ததா இலவச விபச்சாரம் வேணும்னு கேட்பானுவ...

Anonymous said...

பயனுள்ள இடுகை ஹுசைன் அம்மா

Ammu Madhu said...

good post.

ஸாதிகா said...

அருமையான அலசல்.

ரோஸ்விக் said...

பயனுள்ள இடுகை ஹுசைன் அம்மா. எனது குடும்பத்திலும் புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். புற்று நோய் மிக மிக கொடியது.

இப்படிக்கு நிஜாம்.., said...

மிகத் தேவையான அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விசயம் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஒருவனுக்கு ஒருத்தி என சொல்லும் இந்தியா தான் எய்ட்ஸில் முன்னனியில் இருக்கிறது.

விக்னேஷ்வரி said...

முழுக்க முழுக்க தனிப்பட்ட ஒருவனின்/ ஒருத்தியின் திமிரெடுத்த ஆசைகளினால் வரும் நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கங்களும், ஐ.நா., உலக சுகாதார மையங்களும் இந்தளவு மெனக்கெட வேண்டிய அவசியம் என்ன? //
அபப்டி இல்லைங்க, பலருக்கும் இப்போவெல்லாம் இரத்தம் மூலம் தான் இந்நோய் பரவுதாம்.

கெட்ட பழக்கங்கள் இல்லாத ஒருவருக்கு கேன்ஸர் வருவதன் காரணம் இதுவரை அறியப்படவில்லை. //
சத்துள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளாமையாலும், இன்றைய வாழ்க்கை முறைகளும் தான்.

முதல்வரே அரசு மருத்துவமனையை நம்பாமல்தானே தனியாரிடம் சிகிச்சை பெறுகிறார்!! //
இது பாயிண்டு. எப்போ தலைவர்களெல்லாம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்ற சட்டம் வருகிறதோ அப்போ மருத்துவமனைகள் சிறப்படையும்.

புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்று கேட்டு கேட்டு எய்ட்ஸ் பற்றி அறியாதவர்கள் இன்றில்லை. ஆனால் புற்றுநோய் குறித்த அறிவு மக்களுக்குக் கிடைப்பது தமிழ்த் திரைப்படங்களின் மூலமே! //
ரொம்ப சரியா சொன்னீங்க.

நல்ல பதிவு ஹுஸைனம்மா.

நாஞ்சில் பிரதாப் said...

எய்ட்ஸ் தவிர்க்க ஒரே வழி விழிப்புணர்வு மட்டுமே. நமது இந்திய அரசு இதற்காக செலவிட்டதும்,எடுத்துக்கொண்ட முயற்சிகளும் ரொம்ப குறைவு. எதுஎதுக்கோ கோடிக்கணக்கில் பட்ஜெட்டில் ஒதுக்க இதற்காக ஒதுக்கும் தொகை மிகக்குறைவு. எதிர்காலதில் எய்ட்ஸ் நோயை தவிர்க்க ஒரேவழி பள்ளியில் பாலியல் கல்வியை அறிமுகப்படுததுவதே. ஆனால் அதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ. எல்லாம் பழைமைபேசும் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொலைநோக்கு பார்வை இல்லாதவர்கள். நாடு எங்க உருப்படறது.


புற்றுநோய் - உயிர்கொல்லி நோய். கெரில்லா தாக்குதல் மாதிரி. மறைந்திருந்து அதிரடி தாக்குதல் நடத்தும்.
புற்றுநோயை தடுக்கும் வழிமுறைகளை ஒருதடவை படிச்சேங்க. அதுப்படி வாழறது எல்லாராலும் முடியாது.
ரொம்ப கஷ்டம் அதுவும் எங்களைப்போல வெளிநாட்டில் வாழ்பவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

எப்படி திடீர்னு நல்ல பதிவகள்லாம் போட ஆரம்பிச்சீங்க :-). எல்லாம் சாரோட அட்வைஸா இருக்கும். தின்னவேலிக்காரங்க என்னைக்கு இந்த மாதில்லாம் யோசிச்சிருக்காங்க?

SUFFIX said...

அருமையா எழுதி இருக்கிங்க, கேன்ஸர் பற்றி தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை, யாருக்கு, எப்போது, எங்கே வரும், இது ஒரு புரியாத புதிர், கேன்ஸரில் ஆயிரக்கணக்கான் வகை உண்டு, சினிமா எடுப்பவர்கள் இது பற்றி எங்கே சிந்திக்கப் போகிறார்கள், அவர்களுக்கு வேண்டியது காட்சி மனதை உருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளே. கேன்ஸர் என்பது மன வலிமையாலும், உடல் எதிர்ப்பு சக்தியாலும் போராட வேண்டிய ஒன்று, மது, புகை மற்ற தீய பழக்கங்கள் இல்லாத ஒருவருக்கு கேன்ஸர் வந்தால், அதனை குண்மாக்குவது எளிது, 2008 தொடக்கத்தில் Non Hodgkins Lymphoma என்ற ஒரு வகை கேன்சரால் பாதிக்கப்படேன், ஸ்டேஜ் 4 வரை சென்று விட்டது, இது கேன்சர் தான் கண்டு பிடிக்கவே இரண்டு மாதம் வரை ஆகிவிட்டது, பின்னர் சென்னை சேத்துப்பட்டில் இருக்கும் VS Hospitalல் சேர்ந்து, 6 மாத காலம் ட்ரீட்மென்ட் எடுத்து இறைவன் உதவியால் தற்பொழுது நன்றாக் உள்ளேன்.
இறைவனின் நாட்டம் எதுவோ அது நடந்தே தீரும்.

SUFFIX said...

VS Hospital முகவரி:
13, East Spurtank Road
Chetpet, Chennai, Tamil nadu 600031,
India
044 28191020
www.vshospitals.com

நட்புடன் ஜமால் said...

நல்ல பதிவுங்க - இச்சைகளின் எச்சங்கள்

அரசாங்கம் சட்டம் போட்டு மிறட்டல் விடுப்பது போல இல்லை

ஜாக்கிரதையா தப்பு செய்ங்கடான்னு சொல்ற மாதிரி இருக்கு

cheena (சீனா) said...

உண்மை உண்மை ஹூஸைனம்மா

எய்ட்ஸுக்குக் கொடுக்கும் மரியாதை - விழிப்புணர்வுப் பிரச்சாரம் புற்று நோய்க்குக் கொடுக்கப்படுவதில்லை. அரசு ஆவன செய்ய வேண்டும்

நல்ல சிந்தனை நல்வாழ்த்துகள்

ஹுஸைனம்மா said...

சீனா சார்,

முடிச்சிட்டீங்களா? ஒரே மூச்சுல என் எல்லா பதிவுகளைப் படிச்சு, பின்னூட்டமும் போட்டு...

ரொம்பப் பொறுமை சார் உங்களுக்கு.
ரொம்ப மகிழ்ச்சி எனக்கு!!

நன்றி!!

ஹுஸைனம்மா said...

நவாஸ் நன்றி.

செய்யது நன்றி!! ஓ, ஆட்டோ இல்லையா, இப்பல்லாம் ஜீப்பா? :‍‍_)

அப்துல்லா, எய்ட்ஸ் குறித்த பதிவு எங்கே இன்னும் காணோம்?

பீர், ஓட்டு கிடைக்கும்னா இலவசமா கொடுக்கிறதுக்கு அரசும் ரெடியா இருந்தாலும் இருக்கும்.

சின்ன அம்மிணி, நன்றி.

அம்மு‍_மது, நன்றி.

ஸாதிகா அக்கா, நன்றி தவறாத வருகைக்கு.

ரோஸ்விக், புற்றுநோய் என்பது அடிக்கடி கேள்விப்படும் நோயாகிவிட்டது இப்ப.

நிஜாம், வேதனைதான்.

விக்னேஷ்வரி, இரத்தம் மூலமும் பரவுகிறது. ஆனால் விகிதம் குறைவு. அதேபோல, கிராமத்தில் நல்ல வாழ்க்கை வாழ்பவர்களுக்கும் கேன்ஸர் வருகிறது. என்னவோ, இறைவன் எல்லாரையும் காத்து அருள்புரியட்டும். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!!

நாஞ்சில் பிரதாப், போதிய விழிப்புணர்வு இல்லை என்று சொல்லமுடியாது. சில லாரி டிரைவர்களின் அலட்சியப் போக்கைப் படித்திருக்கிறேன். தடுக்கும் வழி தெரிந்தாலும் பின்பற்ற மறுப்பார்கள்.

உங்களின் கேள்விக்கு என் அடுத்த பதிவில் பதில் சொல்லியிருக்கிறேன்.

ஷ‌ஃபி, கேன்ஸரை வென்றதுக்கு இறைவனுக்கு நன்றி. உங்களின் இந்த விளக்கம் பலருக்கும் ஊக்கமாக அமையலாம்.

நட்புடன் ஜமால், அட நம்ம பின்னூட்ட சுனாமி!! உங்களைத்தான் காணோமேன்னு சொல்லிகிட்டிருந்தேன். முதல் வருகைக்கு நன்றி!! அடிக்கடி வாங்க!!

mohamed ashik said...

நான் நீண்ட நாளாய் எண்ணியவை உங்கள் பதிவில் கண்டவுடன் மகிழ்ச்சி. அதே நேரம் பதிவில் சில சறுக்கல்கள் உள்ளன. முக்கியமாய்...

நம் நாட்டில் எய்ட்ஸ் பரவுவதற்கான முழுமுதல் காரணகர்த்தாவே நமது அரசாங்கமும் அதன் பலகோடி செலவழித்து செய்யப்படும் விளம்பரமும்தான். அட, அம்மாங்க. அதுதான் உண்மை. அவர்கள் விளம்பரம் உங்களையே மாத்திடுச்சே..!
///ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடற்று வாழ்பவர்கள்/// --- இதுக்கு என்னா அர்த்தம் ஹுசைனம்மா? ஒருத்தனுக்கு நான்கு மனைவிகள் இருந்தால் எய்ட்ஸ் வரும் என்கிறீர்களா?

எய்ட்சை ஒழிக்க நினைக்கும் எண்ணம் இருந்தால், நியாயமா அரசு விளம்பரம் எப்படி இருந்திருக்க வேண்டும்?

"எய்ட்ஸ் வராமல் தடுக்க காண்டம் உபயோகியுங்கள்" -- ச்சீ..! கேவலமா இல்லை? விளம்பரம் இப்படியா இருக்க வேண்டும்?

"எய்ட்சை ஒழிக்க விபச்சாரம் செய்யாதீர்கள்" -- இப்படி அல்லவா விளம்பரம் இருந்திருக்க வேண்டும்?

mohamed ashik said...
This comment has been removed by the author.
malar said...

ரொம்ப நல்ல பதிவு