Pages

புது இடமும், புது வருடமும்
இந்த வருஷத்தின் கடைசி நாள் இன்று!!

பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்திற்கும் பொருந்தும் போல!! இநத வருஷம் என்று சொல்லிக்கொண்டிருந்த 2009,  இன்னும் பன்னிரெண்டு மணிநேரத்தில் போன வருடம் ஆகிவிடும்!! ஒரு வயது அதிகரிக்கிறதே என்ற வருத்தமிருந்தாலும், வாழ்நாளில் ஒரு வருடம் கூடிப்போனது குறித்து மகிழ்வும், இறைவனுக்கு நன்றிகளும்!! கழிந்த வருடங்களைப் போலவே இனியும் இறைவன் எல்லாருக்கும் நோயற்ற வாழ்வைத் தரவேண்டும்!!

**************

பிள்ளைகளுக்கு இரண்டு வார குளிர்கால விடுமுறை; இவ்வருடம் நானும் விடுமுறை எடுத்து அவர்களோடு வீட்டில் இருக்கிறேன். தங்கையும் கைக்குழந்தையோடு வந்திருந்தாள். நல்ல ஜாலியா நேரம் போகிறது.  வீட்டில் பிஸியாக இருந்ததால் பதிவுலகக் கலகங்கள் எதையும் தலையில் ஏற்றாமல் இருக்க முடிந்தது.

சனிக்கிழமை ஷார்ஜாவில் “Discovery Center" போய் வந்தோம். நல்லாருந்தது. 6 முதல் 12 வயதினருக்கு அறிவியல் விஷயங்களை விளையாட்டுடன் விளக்கும் இடம்.  கலர்ஃபுல்லாகவும் இருப்பதால் சிறுவயதினருக்கு மிகவும் பிடிக்கும்.

விவரங்களுக்கு www.sharjahmuseums.ae போய்ப் பாருங்க. Airport museum, Wildlife Sanctuary - இங்கேயும் போயிருந்தோம். ஷார்ஜாவில் நிறைய சுற்றுலாத் தலங்கள் இருக்கிறதென்பது நிறைய பேருக்குத் தெரிவதில்லை. ஒரு லீவு கிடைச்சா, உடனே துபாய் கிளம்பிடறாங்க!!

டிஸ்கவரி செண்டரில் ஒரு டி.வி.ஸ்டேஷன் மாடல் வைத்திருக்கிறார்கள். அதில் நம் பிள்ளைகளைப் பாடவோ, பேசவோ சொன்னால், பதிவு செய்து, அங்கிருக்கும் பெரிய ஸ்கிரீனில் உடனே ஒளிபரப்புகிறார்கள்.

கட்டட கட்டுமானங்கள் செய்முறை விளக்கமாக அறிந்துகொள்ள சின்னசின்ன கிரேன்கள், Pulley system, பில்டிங் பிளாக்குகள் என்று வைத்திருப்பதால் அவற்றின் பயன்பாடுகள் குறித்து சிறார்கள் தாங்களே  செய்து அறிந்து கொள்ள முடிகிறது. 

அதுபோலவே  மனித உடல் பாகங்களின் செயல்பாடுகள், கார் வொர்க்‌ஷாப், ஏர்போர்ட், இன்னும் பலவற்றின் மாடல்கள் இருக்கின்றன. சாலை விதிகள் தெரிந்துகொள்ள சாலையில் கார் ஓட்டியே தெரிந்துகொள்ளலாம்!!

சுவாரஸ்யமான விளையாடுக்களில் 3 மணிநேரம் கரைந்துபோனதே தெரியவில்லை. சிறுவர்களோடு, பெரியவர்களும் அனுபவிக்கக் கூடிய இடம்.
 ஷார்ஜா பழைய ஏர்போர்ட் இருந்த இடத்தைத்தான் இப்போ அருங்காட்சியகமா ஆக்கிட்டாங்க. நல்ல விளக்கமான  தகவல்களோட,  பழைய பிளேன்கள், அவற்றின் இஞ்சின்கள், பாகங்கள்,  பழைய தகவலேடுகள், வானிலைக் குறிப்புப் புத்தகங்கள்னு அழகா வச்சிருக்காங்க. 
லண்டனிலிருந்து ஆஸ்திரேலியா போகும் வழியில் ஒரு நிறுத்துமிடமாக ஆரம்பித்த ஷார்ஜா விமான நிலையத்தின் வளர்ச்சியைப் படிப்படியாக விளக்கியிருக்கிறார்கள். அப்போ வந்த ஆங்கிலேயர்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு தியேட்டரின் மாதிரியும் வச்சிருந்தாங்க. அதில உட்காரும் இருக்கைகளாகப் பயன்படுத்தப்பட்டது என்ன தெரியுமா? தகர டப்பாக்கள்!! இன்னும் அதை வச்சிருக்காங்க அங்க!! நம்மூரில் இன்றும் பயன்படுத்தும் பெரிய எண்ணெய் டின்கள்தான் அவை.

விமானம் கண்டுபிடித்த வரலாறையும் படமாகக் காட்டுகிறார்கள். ஆதிகால விமான மாடல்களைப் பார்க்க சுவாரசியமா இருந்தது!!

Wildlife Sanctuary-ல் பாலைவன உயிரினங்களைப் பற்றிப் பார்த்து, படித்து அறிந்துகொள்ளலாம். அதனருகே இருக்கும் மரைன் மியுஸியம்,  குழந்தைகள் (விரும்பும் ஆடு, மாடு, கோழி) பண்ணை ஆகியவையும் உண்டு.

இங்கெல்லாம் போக நினைப்பவர்கள் சரியான மேப் அந்தந்த வலைத் தளங்களிலிருந்து எடுத்துச் செல்வது வழிதவறாமலிருக்க உதவும்.

போனமுறை போல இம்முறையும் நான் ஷார்ஜாவிலருந்து கிளம்பிய பிறகு மழையாம்!! நான் காலடி வைக்கிற நேரமெல்லாம் மழை வருதுபோல!! கன்ஃபர்மா நான் நல்லவதான்!!

புதுவருஷம் அல்-அய்னில கொண்டாடப் போறோம்!! அல்-அய்னின் சிறப்பான ஜெபல் ஹஃபீட் மலையடிவாரத்தில் உள்ள வெந்நீர் ஊற்றுக்களில் கடந்த ஒருமாதமா தண்ணீர் வரல்லையாம்!! நான் போற நேரம் வந்துரும்னு நினைக்கிறேன்!! வெற்றிச் செய்தியோட வர்றேன்!!

அனவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! அடுத்த வருஷம் சந்திப்போம்!!

Post Comment

21 comments:

ஷாகுல் said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Me the first

ஷாகுல் said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Me the first

நாஞ்சில் பிரதாப் said...

ஷார்ஜாவில இவ்வளோ மேட்டரு இருக்கா...என்ன இருந்தாலும் துபாய் ரேன்சுக்கு வராது...

உங்களுக்கும், குடும்பாத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))

Jaleela said...

ஹுஸைம்மா எனக்கும் ஆசை இந்த பத்து நாள் லீவு போட்டு கொன்டு மகன்களோடு இருக்கனும் என்று முடியாமல் போய் விட்டது.

ஒகே ரைட் அடுத்தவருடம் பார்க்கலாம், முடிந்தால் அல் அயினில் பார்க்கலாம்.


ஓவ்வொரு வீக் என்டைலும் துபாய். பரவாயில்லை ஜாலி தான். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

//போனமுறை போல இம்முறையும் நான் ஷார்ஜாவிலருந்து கிளம்பிய பிறகு மழையாம்!! நான் காலடி வைக்கிற நேரமெல்லாம் மழை வருதுபோல!! கன்ஃபர்மா நான் நல்லவதான்!!//

:-)

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஹுசைனம்மா.

அ.மு.செய்யது said...

ஷார்ஜாவைப் பத்தி நிறைய விஷயம் எழுதியிருக்கீங்க..!!!

ஷார்ஜா என்ற வார்த்தையை கேட்கும் போதெல்லாம் இப்போது ஏதோ ஒருவித வலி
மனதில் எழுகிறது.

( அது ஏன் என்பது வாசகர் கற்பனைக்கே விடப்படுகிறது )

S.A. நவாஸுதீன் said...

ஷார்ஜாவோட பி.ஆர்.ஓ ஆயிடலாம் நீங்க. அவ்ளோ விஷயம் அதுக்குள்ள தெரிஞ்சுகிட்டுருக்கீங்க. சந்தோசம்.

நல்ல உடல் ஆரோக்கியமும், நிம்மதியான வாழ்வாகவும், மனித நேயம் மேலோங்கிய வாழ்வாகவும் எல்லோருக்கும் அமையட்டும்.

ஸாதிகா said...

அல் ஐன் சென்று வந்து இன்னும் புதிய சுவாரஸ்யமான செய்திகளைத்தாருங்கள்.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அகல்விளக்கு said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வரும் வருடம் நலமாக அமையட்டும்...

ராஜவம்சம் said...

பிறக்கும் புத்தாண்டில் நம் எண்ணங்களும் புதிதாக

நமது வலிகளும் ரணங்களும் அகண்று

பலைய சுகங்களும் சொந்தங்களும் கூடவே வர

வாழ்த்துக்கள்

கண்மணி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சூர்யா ௧ண்ணன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

SUFFIX said...

ஷார்ஜான்னாலே நான் இதுவரை கேள்வி பட்டது, துபாயில் உள்ளவர்கள் வீட்டு வசதிக்காக அங்கே போய் குடியிருப்பார்கள் என்பதே, ஆனால் இவ்ளோ இருக்கா? அடுத்த முறை அமீரக பயணத்தின் போது ஷார்ஜாவிற்கு உஙகள நம்பி ஒரு ரவுண்டு போவலாமுங்களா?

jailani said...

ஷார்ஜாவில் பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய உன்டு உன்மைதான். இருந்தாலும் இந்த 11வருடகாலத்தில் பக்கத்தில்(150மீட்டர்)உள்ள அல்ஜஜீரா பார்க் உள்ளேயே நான் போனதில்லை.நீங்க புட்டு புட்டு வைக்கிறீங்க.புது வருட வாழ்த்துக்கள்...

நாஸியா said...

அல் ஐன் நிஜம்மாகவே ரொம்ப நல்லா இருந்தது..நீங்க போனப்போ தண்ணி இருந்துச்சா? நல்லா என்ஜாய் பண்ணினோம்..

நாங்க ஓமான் பார்டர்ல இருக்குற டிப்பாவுக்கு போனோம்.. அங்க போயி ஆட்டுக்குட்டி, நம்மூரு காக்கையெல்லாம் பாத்தோம்!

ஹுஸைனம்மா said...

ஷாஹுல் - ந்ன்றி

பிரதாப் - குண்டுச்சட்டிக்குள்ளயே குதிர ஓட்டாதீங்க. இருக்கிற இடத்த விட்டு வெளிய வந்தாத்தான் நாலு நல்லது கெட்டது தெரியும்.

தாரணி - நன்றி.

ஜலீலாக்கா - அல் ஐனில் பார்க்க முடியலன்னாலும், ஞாபகமாப் பேசிக்கிட்டோமே!!

சென்ஷி - அல் ஐனிலும் மழை பெய்ஞ்சுதே!! எனக்கே ரொம்ப டவுட் வருது, ஓவரா நல்லவளா இருக்கோமோன்னு!!

நவாஸ் - உங்க வாழ்த்து பலிக்க இறைவன் கிருபை செய்யட்டும்.

ஸாதிகாக்கா - அல் ஐனில் வெளியே எங்கயும் போகலை. மைனி வீட்டிலயே நேரம் போயிட்டுது.

செய்யது - //ஷார்ஜா என்ற வார்த்தையை கேட்கும் போதெல்லாம் இப்போது ஏதோ ஒருவித வலி மனதில் எழுகிறது.//

இது என்ன கொடுமை? என்னன்னு சொல்லிடுங்க ப்ளீஸ்!! இல்லன்னா நான் அடிக்கடி ஷார்ஜா போய் வர்றதுனாலத்தான்னு எல்லாரும் நினைக்கப் போறாங்க.

ராமலக்‌ஷ்மி அக்கா - நன்றி.

அகல்விளக்கு - நன்றி வாழ்த்துக்களுக்கு.

ராஜவம்சம் - //நமது வலிகளும் ரணங்களும் அகண்று

பலைய சுகங்களும் சொந்தங்களும் கூடவே வர// - நலமே நடக்கட்டும்.

கண்மணி - நன்றி

சூர்யா கண்ணன் - நன்றி.

ஷஃபிக்ஸ் - வாடகை குறைவுதான். ஆனால் இதுபோல அறியப்படாத இடங்களும் உண்டு அங்கு.

ஜெய்லானி - நம்ம ஊர் அருமையை அடுத்தவங்க சொல்லித் தெரிஞ்சுக்கிறதிலேயும் ஒரு சுகம்தான்!! போய்ப் பாருங்க கண்டிப்பா.

நாஸியா - அல் அய்ன் ரெண்டு, மூணு தரம் பார்க்கலாம். (ஃபன் சிட்டியில டைனமிக் தியேட்டர் போனீங்களா?) பிறகு புதிதாக ஒன்றும் இல்லை. தண்ணி கொஞ்சமா வந்ததா ஜலீலாக்கா சொன்னாங்க. திப்பாவும் நல்லா இருக்கும். இப்பவே நிறைய இடங்கள் சுத்திப் பாத்துடுங்க. அப்புறம் நேரமும் கிடைக்காது.

பீர் | Peer said...

ஷார்ஜா ஏர்போட் ரொம்ப சின்னதா தான இருக்கு, எங்கூரு பஸ்டாண்ட் அளவுக்குகூட இருக்கிறமாதிரி தெரியலையே. பொழுதுபோக்க பல இடங்கள் இருக்கிறது மகிழ்ச்சியே.

jailani said...

\\\ஷார்ஜா ஏர்போட் ரொம்ப சின்னதா தான இருக்கு, எங்கூரு பஸ்டாண்ட் அளவுக்குகூட இருக்கிறமாதிரி தெரியலையே.\\\

ஷார்ஜா ஏர் போர்ட் சிரியதுதான் அதன் கலைநயம் நிறைய பேருக்கு தெரியாது
வானிலிருந்து பார்த்தால் புறா சிறகை விரித்து பறப்பதுபோல் இருக்கும் நெட்டில்
கூகுல் எர்த் போய் பாருங்கள்

கலைநயத்தில் அரபுலகில் யுனெஸ்கோ விருது‍‍ ((கல்ச்சுரல் சிட்டி))வாங்கியது ஷார்ஜா..மட்டுமே......துபாய் இல்லை,அபுதாபி இல்லை..

தமிழ் பிரியன் said...

ஷார்ஜாவில் ஏழு வருடம் குப்பை கொட்டி இருக்கேன்.. இம்புட்டு மேட்டர் இருப்பது தெரியல.. லேபிளில் பார்த்ததும் உடனே வந்தேன்.. கண்களில் நினைவுகள் ஒரு துளி நீராக உருமாறின... :-)