Pages

டிரங்குப் பொட்டி - 4
கவிதையின் கதை:

என்னமோ எனக்கும் அந்த ஆசை வந்துடிச்சி. நிச்சயத்துக்கும், கல்யாணத்துக்கும் நடுவில கூட கவிதை எழுதணும்னு தோணலை. இப்பப் போயி, ஹூம், என்னத்தச் சொல்ல!!

காலேஜுல கொஞ்ச நாள் வேலைபாத்தப்ப, பக்கத்தில ஒரு பொண்ணு, அவ டேபிளைக் குப்பை மாதிரிப் போட்டு வச்சிருப்பா. எனக்கோ எல்லாம் தூசி தும்பில்லாம அழகா அடுக்கி வச்சிருக்கணும். பக்கத்து டேபிள் எனக்கு பார்வைல பட்டுகிட்டே இருக்குங்கிறதால எரிச்சல் எரிச்சலா வரும். நானாவது அடுக்கித் தரேண்டின்னு அவகிட்டச் சொன்னா, பதறிடுவா. டச் பண்ணாத, எனக்கு இப்படி இருந்தாத்தான் வசதிம்பா. ஸ்டூடண்ட்ஸ் சப்மிட் செஞ்ச ரெக்கார்ட், அஸைன்மெண்ட்டெல்லாம் கேட்டு வந்தாங்கன்னா ஒருமணி நேரமாவது தேடாமக் கிடைக்காது. கிடைக்காமலே போனதும் உண்டு. (முரண் அப்படின்னு தலைப்பு போட்டு இதையே ஒரு கவிதயா எழுதியிருக்கலாமோ? ஆஹா, வட போச்சே..)

வேலை இடத்தில மட்டுமில்ல, வீட்டிலயும் அப்படித்தான். அதிலயும், கிச்சனை அவ்வளவு சுத்தமா வச்சுருப்பேன். சமையலும் அவ்வளவா வராதது ரொம்ப வசதியாப் போச்சு.

ஒரு நெருங்கிய உறவினர் வீட்டுக்கு அடிக்கடி போவேன். (பெரிய மாமியெல்லாம் இல்லை, அது சும்மா ’ப’னாவுக்குப் ’ப’னா வரணும்கிறதுக்காக...) அவங்க கிச்சன் ரொம்ப அழுக்கா இருக்கும். நானும், அவங்க நல்ல சமையல் நிறைய செய்யறதுனால நேரமே இல்லை போலன்னு போற நேரமெல்லாம் தேச்சு, அடுக்கிச் சுத்தம் செய்து கொடுப்பேன். (தெரிஞ்ச வேலையைத்தானே செய்ய முடியும்..)  மீண்டும் மீண்டும் அதே நிலையில் கிச்சன் இருக்கவும்தான் மேலே சொன்ன தோழி ஞாபகத்துக்கு வந்தா. அவங்க வீடு, அவங்க இஷ்டம். என் விருப்பம் என் எல்லைக்குள் மட்டுமேன்னு புரிஞ்சுகிட்டேன். இதத்தான் கவிதையிலச் சொல்ல வந்தேன். சொல்லியிருந்தேனா? ஏங்க, காதல் பத்தி மட்டும்தான் கவிதை எழுதணுமா?


பதிவர் சந்திப்பும், மழையும்:

அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் ஓமன்னு எல்லா இடத்திலயும் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. ஒரு பத்து வருஷம் முன்ன வரை, வருஷத்துக்கு ஒரு முறை தூறல் விழுந்தாலே அதிகம். இப்ப இப்படி மழை!! இதுக்கெல்லாம் இங்க நடுற மரங்கள்தான் காரணம்னு ஒரு பேச்சு நடக்குது. மரம் நடுறதெல்லாம் ஷேக் ஸாயத் காலத்தோட போச்சு. (இப்ப இருக்க அதிபரின் மறைந்த தந்தை).

இங்கயும் இப்ப காடுகளை அழிச்சு கட்டிடங்கள் கட்டுறாங்க. காஃப் (Ghaf - Prosopis cineraria)  மரங்கள் இந்த மண்ணின் தனித்தன்மை. இந்தக் காடுகளை நகரத்தின் நடுவே கூட முன்பு நிறைய பார்க்கலாம். இப்ப இந்த மரத்தை அரசின் அனுமதியின்றி வெட்டக்கூடாதுன்னு தடை போடற அளவுக்கு அரிதாகிவிட்டது.

சென்னைல ரெண்டு, மூணு வருஷம் முன்னாடி புயல்ல நிறைய மரங்கள் விழுந்தன. காரணம் என்னன்னு சொன்னாங்கன்னா, அழகுக்காக நடப்படும்  “Flame of the forest" மரத்தின் (நெருப்புச் சிவப்புல பூப்பூக்கும், தமிழ்ப் பெயர் தெரியல)  வேர்கள் ஆழமாகப் போகாது. அதனால சின்னப் புயலுக்குக் கூட நிக்காம விழுந்துடுமாம். அந்த வகை மரங்கள்தான் நிறைய விழுந்தன அப்போ!!  இப்ப இங்கயும் இந்த மரங்கள்தான் நிறைய தென்படுகின்றன. வேப்பமரங்களும் நிறைய இருக்கு!! புதிதாக நடப்படும் மரங்கள் அழகுக்காகத்தானே தவிர, மண்ணின் வளத்துக்கோ, மழைக்கோ எவ்வளவு உதவும்  என்று தெரியவில்லை. எப்படியோ, மரங்கள் நட்டா சரிதான்!! Something is better than nothing.

எனக்கென்னவோ, மழைக்குக் காரணம், ஷார்ஜாவில வர்ற வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருக்க பதிவர் சந்திப்புதான்னு தோணுது!!

குளிர்:  

ஏற்கனவே குளிர் லேசா ஆரம்பிச்சிருந்துது. மழையில இன்னும் அதிகமாகிவிட்டது. பசங்க ரெண்டு பேருக்கும் காலையில குளிர்ல தலை, காது, மூக்கு மறைக்கும் “Monkey Cap" போட்டுட்டுப் போறது எவ்ளோ கஷ்டமாயிருக்கு? இப்பவே ஸ்டைல் பாக்கிறாங்க. பெரியவன் முடியவே முடியாதுன்னு சாதிச்சுட்டான். என் வற்புறுத்தலினால ஜெர்கின்ஸின் “hood"ஐ தலையில சும்மா வச்சுட்டுப் போறான் பெயரளவில!!

தினம்தினம் வீட்டில் வார்த்தைக்கு வார்த்தை எதிர்வாதம், பிடிவாதம் எல்லாம்  பெரியவர் டீனேஜில் நுழைகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. அவங்கப்பாவிடம் சொன்னால், அவன் டீனேஜ்,  அதனால் வாதம் செய்கிறான். உனக்கும் இன்னும் டீனேஜுன்னு நினைப்பா? என்று அவர் பாணியில் தாக்குகிறார். மூன்று ஆண்களுக்கு நடுவில் நான் தனியாக!!

சின்னவனும், ஆறரை வயசுதான் ஆகுது, அதுக்குள்ளே என்னா அலப்பரை பண்றான்? அப்படியே அண்ணனை இமிடேட் செய்றான். வீட்டிலருந்து அஞ்சு நிமிஷ நடையில பள்ளி. அதுக்குள்ள, தொப்பியை இப்பக் கழட்டிடவா? இப்பக் கழட்டிடவா?ன்னு ஒரு நூறு தரம் கேட்டுகிட்டு வருவான்.  பள்ளியின் வாசல் தென்பட்டதும் அனுமதிக்கெல்லாம் காத்திராமல் கழட்டித் தந்துவிடுவான். கிளாஸ்மேட்ஸ் யாராவது  பார்த்துவிட்டார்களா என்ற அவன் தவிப்பைப் பார்க்கச் சிரிப்பாக வரும். பயலுக்கு இப்பவே கேர்ள் ஃபிரண்ட்ஸ் நிறைய இருக்காங்க!!

Post Comment

28 comments:

☀நான் ஆதவன்☀ said...

//எனக்கென்னவோ, மழைக்குக் காரணம், ஷார்ஜாவில வர்ற வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருக்க பதிவர் சந்திப்புதான்னு தோணுது!!//

வருவீங்களா?

டிரங்கு பெட்டி அருமையா இருக்கு.

ஹுஸைனம்மா said...

//☀நான் ஆதவன்☀ Says:
டிரங்கு பெட்டி அருமையா இருக்கு.//

நன்றி ஆதவன்.

//வருவீங்களா?//
ஆமா. ஆனா பயமாயிருக்கு. நான் பிரபல பதிவர்ங்கிறதால, அடிக்க ஒரு குரூப், ஆதரவுக்கு ஒரு குரூப்புன்னு பிரிஞ்சு நிப்பாங்களோன்னு....

S.A. நவாஸுதீன் said...

///வேலை இடத்தில மட்டுமில்ல, வீட்டிலயும் அப்படித்தான். அதிலயும், கிச்சனை அவ்வளவு சுத்தமா வச்சுருப்பேன். சமையலும் அவ்வளவா வராதது ரொம்ப வசதியாப் போச்சு.///

இது

///சமையலும் அவ்வளவா வராதது ரொம்ப வசதியாப் போச்சு, அதனாலதான் கிச்சனை அவ்வளவு சுத்தமா வச்சுருப்பேன்/// என்று இருக்கனுமோ. ஹா ஹா ஹா

அ.மு.செய்யது said...

// இப்பவே கேர்ள் ஃபிரண்ட்ஸ் நிறைய இருக்காங்க!! //

கடைசில வெச்சீங்க பாரு ஒரு பஞ்ச்...அசால்ட்டு...சீக்கிரம் ரெண்டு பேரையும் ப்ளாக் ஓபன் பண்ணி நிலா நீ வானம் காற்றுன்னு ( உங்களுக்கு போட்டியா ) கவிதை எழுதி உரையாடல் போட்டிக்கு அனுப்ப சொல்லுங்க..!!

S.A. நவாஸுதீன் said...

///எனக்கென்னவோ, மழைக்குக் காரணம், ஷார்ஜாவில வர்ற வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருக்க பதிவர் சந்திப்புதான்னு தோணுது!!///

ஹா ஹா ஹா. சூப்பர்

அ.மு.செய்யது said...

உங்கள் ப்ளாகில் பின்னூட்ட முறையை மாற்றுங்கள் ஹூசைனம்மா..!!!

பிரபல பதிவர்கள் சிலர் ஹூசைனம்மா பதிவில் பின்னூட்டமுடியவில்லைன்னு ஜிடாக்கில் என்னிடம் முறையிடுகிறார்கள்.

S.A. நவாஸுதீன் said...

///அவங்கப்பாவிடம் சொன்னால், அவன் டீனேஜ், அதனால் வாதம் செய்கிறான். உனக்கும் இன்னும் டீனேஜுன்னு நினைப்பா? என்று அவர் பாணியில் தாக்குகிறார்.///

மச்சானோட டைமிங் ஜோக் செமையா இருக்கு

SUFFIX said...

//இப்பப் போயி//

நிஜமா, சீரியஸாவே கவிதையாயினி ஆயிட்டிங்களா?

SUFFIX said...

//அவங்க வீடு, அவங்க இஷ்டம்//

உணமைதான், ஏதோ நாம போயி மூக்கை நுழைக்கிற மாதிரி நினைச்சுப்பாங்க.

//மரங்களும் நிறைய இருக்கு!//

சில நாட்கள் தங்கியிருந்த அனுபவத்தில், துபாயை விட அபூதாபி எத்தனையோ மடங்கு மேல், பசுமையிலும், நீலத்திலும்!!

//பிடிவாதம் எல்லாம் பெரியவர் டீனேஜில் நுழைகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது//

எனது மகனிடம் சந்திக்கும் அதே சேலஞ்ச்!!

Rithu`s Dad said...

//அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் ஓமன்னு எல்லா இடத்திலயும் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. ஒரு பத்து வருஷம் முன்ன வரை, வருஷத்துக்கு ஒரு முறை தூறல் விழுந்தாலே அதிகம்.//

இங்கும் வெள்ளி இரவிலிருந்து இன்று வரை மாலையில் நல்ல மழை.. முதல் நாள் ரித்துவுடன் சென்ற மழை நடை அருமை..:) .. இங்கு நேற்று பள்ளிக்கு விடுமுறையும் விட்டு விட்டார்கள்.. !!


//வருவீங்களா?//
ஆமா. //

சென்று வென்று வருக!!

அண்ணாமலையான் said...

இத போடற நேரம் இங்கயும் மழை கொட்டுது. (ஒரு வேளை இந்த பதிவோட எஃபக்ட்டோ?)

தராசு said...

பசங்க பெருசாகறாங்கன்னா அதுல அம்மாவுக்கு பெருமை தான இருக்கணும்.

அதுசரி, அந்த குப்பை மேட்டர்ல என்ன கவிதை இருக்குதுன்னு இவ்வளவு பில்டப்பு குடுக்கறீங்க????

ஸாதிகா said...

பசங்களின் குறும்பை எழுதி இருக்கீங்க.இன்னும் சற்று பெரியவர்களானதும் பதிவைஎல்லாம் பசங்க பார்த்தால் ஹுசைனம்மா கதை கந்தலாகி விடும்.பார்த்து..:-)

ஸாதிகா said...

//தினம்தினம் வீட்டில் வார்த்தைக்கு வார்த்தை எதிர்வாதம், பிடிவாதம் எல்லாம் பெரியவர் டீனேஜில் நுழைகிறார் என்பதை //உறுதிப்படுத்துகிறது// //சின்னவனும், ஆறரை வயசுதான் ஆகுது, அதுக்குள்ளே என்னா அலப்பரை பண்றான்?//இப்பவே தங்கச்சி இப்படி விசனப்பட்டுக்கொள்கின்றீர்களே?இன்னும் இருக்கு அலப்பரை.

பிரியமுடன்...வசந்த் said...

//இப்ப இப்படி மழை!! இதுக்கெல்லாம் இங்க நடுற மரங்கள்தான் காரணம்னு ஒரு பேச்சு நடக்குது.//

இனி பாலைவனம்ன்னு யாரும் சொல்ல முடியாது எல்லாம் சோலைவனமாயிட்டு வருது இங்கேயும் கத்தார்லயும் ஷேக் அசோகர ஃபாலோ பண்ணி ரோடு ரெண்டுபக்கமும் மரமா நட்டு தள்ளுறார் இனி இங்கேயும் புயல் மழையில் சாலையோர மரம் விழுந்து போக்குவரத்து நெரிசல்ன்னு நியூஸ் வரும் நாள் ரொம்ப தூரமில்லை...

ட்ரங்குபெட்டி அழகான தலைப்பு...

எம்.எம்.அப்துல்லா said...

Something is better than nothing //

nothing is better than non-sence :)

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நல்லாயிருக்கு இன்றைய எழுத்து.

நான் வளர்கிறேனே மம்மி என்று சொல்லாமல் சொல்லுகின்றார் உங்க பெரிய பையன்.

சின்னப் பையனைப் பற்றி சொன்னது அழகா இருந்தது..

Chitra said...

அனுபவ கதை அருமை.

Jaleela said...

ஹுஸைனாம்மா பதிவர் சங்க அழைப்பால் தான் மழை இப்படி வெள்ளம் எடுத்து ஓடுது, நாலு முறை மெயில் பண்ணீங்க, என் பையன் வந்தாச்சு ஆகையால் என்னால் பதிவர் கூட்டத்துக்கு வரமுடியாது என் நினைக்கிறேன்.

ஓ நீங்களும் முன்று ஆண்களுக்கு நடுவிலா நானும் தான் ....

சமையல் அவ்வளவா தெரியாதா அப்ப கிச்சன் படு சுத்தம் தான் போங்க...
இரண்டு பசங்களுக்கு ஆக்கி போடுறீங்க சமையல் தெரியாதுன்னு சொல்றீங்களே இது சரியா?

பாத்திமா ஜொஹ்ரா said...

சூப்பர்

ஷாகுல் said...

டிரங்கு பெட்டிய திறந்தாசா?

எல்லாமே சூப்பர்.

நாஞ்சில் பிரதாப் said...

//இப்ப இப்படி மழை!! இதுக்கெல்லாம் இங்க நடுற மரங்கள்தான் காரணம்னு ஒரு பேச்சு நடக்குது//
இருக்கலாம். ஆனா உண்மையான காரணம்ன்னு பார்த்தீங்கன்னா என்னைமாதிரி சிலபேர் இங்க வந்திருக்காங்க அதுதான்.

//எனக்கென்னவோ, மழைக்குக் காரணம், ஷார்ஜாவில வர்ற வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருக்க பதிவர் சந்திப்புதான்னு தோணுது!!//
அதுமட்டுமல்ல, 18ந்தேதி பெரிய புயலே காத்திட்டுருக்கு... அன்னைக்கு எங்கள் குலதெய்வம் ஆசிப் அண்ணாச்சி ஹீரோவாக நடித்த "அண்ணாச்சி அழைக்கிறார் படம் ரிலீஸ்" ப்ரிவ்யூ பார்க்க வர்றீங்களா?

//பயலுக்கு இப்பவே கேர்ள் ஃபிரண்ட்ஸ் நிறைய இருக்காங்க!! //

ம்ஹும்... சின்னவர்கிட்ட ஒரு ஆட்டோகிராப் வாங்கிகொடுங்க...என்னால இந்தவயசுல கூடபண்ண முடியாத பல விசயங்களை பண்ணுறாரு... :-)

சென்ஷி said...

:-)

பதிவர் சந்திப்புக்காக மழையா.. நல்லாருக்குதே கதை. நீங்களும் வருவீங்களா.. ஆதரவுக்கொடி கோஷம் போட எம்புட்டு காசு கொடுப்பீங்க..

புதுகைத் தென்றல் said...

ஆதரவுக்கொடி கோஷம் போட எம்புட்டு காசு கொடுப்பீங்க..//

தானே பிரியாணி செஞ்சு அந்தப் பொட்டலம் கொடுப்பாங்க

எல் போர்ட் said...

//பயலுக்கு இப்பவே கேர்ள் ஃபிரண்ட்ஸ் நிறைய இருக்காங்க//

அதுக்கெல்லாம் ஒரு முக ராசி வேணும் ஹூசைனம்மா :) நீங்க பெருமூச்சு விட்டு என்ன ப்ரயோசனம்?

ப்ரொபைல் ல போட்டோ போட்டிருக்கீங்கன்னு சொன்னதும் பயந்து போயி நானே ஒருக்கா எட்டிப் பாத்துகிட்டேன் :)ஹி ஹி - அழகா இருக்கேனா? :)

Anonymous said...

உண்மையிலேயே நீங்க‌ ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ங்க‌.

angel said...

நாஞ்சில் பிரதாப் said...


இருக்கலாம். ஆனா உண்மையான காரணம்ன்னு பார்த்தீங்கன்னா என்னைமாதிரி சிலபேர் இங்க
வந்திருக்காங்க அதுதான்.


illina anga inum nala malai penjirukum

thn kavithai inum anupalaya ?

இப்படிக்கு நிஜாம்.., said...

//தினம்தினம் வீட்டில் வார்த்தைக்கு வார்த்தை எதிர்வாதம், பிடிவாதம் எல்லாம் பெரியவர் டீனேஜில் நுழைகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. அவங்கப்பாவிடம் சொன்னால், அவன் டீனேஜ், அதனால் வாதம் செய்கிறான். உனக்கும் இன்னும் டீனேஜுன்னு நினைப்பா? என்று அவர் பாணியில் தாக்குகிறார். மூன்று ஆண்களுக்கு நடுவில் நான் தனியாக!!//

ஒரு பெண் நினைத்தால் நூறு பேரை வைத்துக்கூட மேய்க்க முடியும் ஹூசைனம்மா! இங்க 3 பேருக்கே இப்படியா? இறைவனின் புண்ணியம் நம் தாய்மண்ணில் இந்த குளிர் குரங்கு குல்லா இம்சை இல்லை. ஊட்டியைத் தவிர.