Pages

நான் மறக்கவில்லை
இது அமீரக தேசிய தினம் பற்றிய பதிவு. ஆனா அப்படித் தலைப்பு வச்சா யாரும் வரமாட்டீங்களே, அதனாலத்தான் கவிதை மாதிரி ஒரு தலைப்பு!!எப்படியோ வந்துட்டீங்கல்ல, முழுசும் வாசிச்சுடுங்க.1971, டிசம்பர் 2-ந்தேதி அபுதாபி, ஷார்ஜா, துபாய், மற்றும் இன்னபிற (மொத்தம் ஏழு) சமஸ்தானங்களைச் சேர்த்து ஐக்கிய அமீரகம் என்று ஒரே நாடாக்கினாங்க. அதைத்தான் வருஷாவருஷம் தேசிய தினம்னு கொண்டாடுறாங்க. அதற்குச் சிலகாலம் முன்வரை பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் இருந்தது இந்த சமஸ்தானங்கள்.  இதுதான் தேசிய தினத்தின் வரலாறு!! (இதுலயும் வரலாறா...)

ஒரு முப்பது வருஷம் வரைக்கும் அதிக ஆடம்பரமில்லாமத்தான் கொண்டாடிகிட்டு இருந்தாங்க. இந்த காதலர் தினம், மகளிர் தினம், அன்னையர் தினம், அப்பா தினம், அக்கா தினம்னு எல்லாமே சந்தைப்படுத்தப்பட்டு திடீர்னு எல்லாராலயுமே கொண்டாடப்பட ஆரம்பிச்ச மாதிரி, அமீரக தேசிய தினமும் ஒரு பரபரப்பான தினமாகிவிட்டது இப்போது.

இந்நாட்டு குடிமக்களோடு இணைந்து, இங்கு வாழும் வெளிநாட்டினரும் இத்தினத்தை ஆவலோடு எதிர்பார்த்து இருப்பர். நாட்டுப்பற்றுடன், அன்றைய தினம் விடுமுறை என்பதும் ஒரு காரணம்!! சமீப காலமாக இங்கு வாழும் வெளிநாட்டவர்களும் இக்கொண்டாட்டங்களில் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர்.
இத்தினத்தையொட்டி நாடு முழுதும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும். பிரபல அலுவலகக் கட்டிடங்களும் ஒளிமயமாக இருக்கும். பார்க்கும்போதே நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். பற்பல சிறப்பு நிகழ்ச்சிகள் அரசாலும், தனியாராலும் ஏற்பாடு செய்யப்படும்.


முதல் பரிசு வாங்கிய கார்


அவை மட்டுமல்ல, கார்களும் விதவிதமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.  ஒரு குடும்பத்தின் கௌரவத்தில், அவர்களின் காருக்குச் செய்யப்பட்டிருக்கும்  அலங்காரத்திலும் பங்கு இருப்பதாகவும், அது தேசப்பற்றின் அளவுகோலாகவும் (!!) இருப்பதாக, அமீரகப் பெண்மணியொருவர் பேட்டி  கொடுத்திருந்தார்!! இம்முறை அழகிய அலங்காரத்திற்கானப் பரிசுகளும் காரின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் சில அலங்கரிக்கப்பட்ட கார்கள் இங்கே பார்க்கலாம்.அதிலும் இம்முறை, சரியாக இந்நேரம் பார்த்து துபாய் வேர்ல்ட்டின் கடன் பிரச்னை வெளிவர,  இல்லை, நாங்கள் நன்றாகவே இருக்கிறோம் என்று காட்ட வேண்டிய அவசியம் வந்ததால் கொஞ்சம் அதிகப்படியானக் கொண்டாட்டங்கள்.
கடைகளிலும், தேசிய தின சிறப்பு வெளியீடுகளாக, அமீரகக் கொடிகள்,  பேட்ஜுகள், ஸ்டிக்கர்கள், தொப்பிகள், உடைகள், கேக்குகள், சாக்லேட்டுகள் என்று இன்னதுதான் என்றில்லாமல் எதை எடுத்தாலும் தேசியக் கொடியின் வர்ணங்களில்!!


அன்றிரவு உலகிலேயே மிகப் பெரிய வாண வேடிக்கை (Firecrackers show) அபுதாபி கடற்கரைப் பக்கம் நடந்தது .  மிக அழகாக, வண்ணமயமாக இருந்தது.

அன்று மாலைவேளையில் ஊர்வலமாகக் கார்களில் இளைஞர்கள் வித்தைகள் காட்டிப் பறப்பது வழக்கம். போன வருடம் ஆண்களுக்குப் பெண்கள் சளைத்தவர்களல்ல என்று நிறைய இளைஞிகளும் களத்தில் இருந்தனர். ஆனால் இந்த வருடம் காரோட்டமெல்லாம் கொஞ்சம் குறைவாத்தான் இருந்துது; அதிலயும் பொம்பளைப் புள்ளைகளை ரொம்பக் காணோமேனு என்னவர் ரொம்பவே வருத்தப்பட்டார்.


இந்நாட்டினர்  தமது நாட்டின் மீதான பற்றில் தேசிய தினத்தைக் கொண்டாட, மற்றவர்களுக்கு "A home away from home" ஆகிவிட்ட இந்நாட்டின் மீதான தம் நேசத்தை நிரூபிக்க, கொண்டாட வேண்டியக் கட்டாயமாகவும் ஆகிவிட்டது!!

இன்னொரு காரணம், நம்மூருல, இதுபோன்ற தினங்கள்ல, நம்ம வீட்டு வாசல்ல அல்லது கார்ல ஒரு கொடிகூட க/ஒட்டி வைக்க முடியாது. கட்டினா ஒரு குரூப் முறைப்பாங்க, கட்டலைன்னாக்க இன்னொரு குரூப் “தேசப்பற்றில்லாதவர்கள்”னு முத்திரை குத்த காத்துகிட்டிருப்பாங்க.  இதுல அன்னிக்கு நம்ம வெளியே கூட எங்கயும் போக முடியாது.  என்ன நடக்குமோன்னு பயந்து இல்லங்க, எதுவும் நடந்துருமோன்னு இந்த போலீஸ்காரங்க சோதனைன்னு பண்ற அலப்பரைக்குப் பயந்துதான். ஊருக்குப் போக, திரும்பி வர்றதுக்குக் கூட சில தேதிகளைக் கவனமாத் தவிர்க்க வேண்டியிருக்கு.

அதையும் மீறி, ஆசையா கொடியோ அல்லது வேற ஏதாவதோ ஒட்டினா, அதையும் தப்பாச் செஞ்சுட்டோம்னு போட்டுக் கொடுத்துருவாங்களோன்னு பயமாயிருக்கு. இந்த மாதிரி குற்றங்களில் மாட்டினா, மீண்டு வர்றது கனவுதான். இந்தக் கட்டுப்பாடுகள்தான் நம்மவர்களை வெளிநாடுகளில் இதுபோன்றக் கொண்டாட்டங்களில் ஆர்வத்துடன் பங்குபெற வைக்கிறதோ என்னவோ.

சில வருடங்கள் முன்பு படித்தேன்:  இந்தியாவில் ஒரு ரூபாய் காயினில் ஓட்டைப் போட்டு செயினில் டாலராகப் போட்டிருந்ததைப் பார்த்த ஒருவர் அவருக்கு அறிவுறுத்தினாராம், அவ்வாறு செய்வது இந்திய அரசியல் சட்டப்படி மிகப் பெரிய குற்றம் என்று!!

ஒரு விதத்துல, இவங்க கொண்டாடறதைப் பாத்தாப் பொறாமையா இருக்குது. எவ்ளோ ஃப்ரீயா, சந்தோஷமா, கொண்டாடுறாங்க எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து!! ஒரே மொழி, மதம் என்றாலும் கூட, நம்மைப் போல மாநிலங்கள் வாரியாகக் கூடப் பிரிந்திருக்கவில்லையே இவர்கள். ஒரு மாநிலத்துக்குக் கஷ்டம் என்றால் அடுத்த மாநிலத்தவர் ஓடி வந்து உதவுகிறார்களே!! பல இனத்தவர்களும் உண்டு இவர்களில், ஆனாலும் பிரிவினையில்லை.

அதுவுமில்லாம, ஒரு விஷயம் கவனித்தேன், இங்கே தேசியக் கொடியை/ வர்ணங்களை எதிலும், அதாவது, டி-ஷர்ட்,தொப்பி, கேக், சாக்லேட், இன்னும் என்னவாக வேண்டுமானாலும் உருவகப் படுத்திக் கொள்கிறார்கள். பல நாடுகளிலும் அவ்வாறே செய்வதைக் கண்டிருக்கிறேன். இதுலயும் நம்மூரில கொடியை அப்படி பண்ணக்கூடாது, இப்படிச் செய்யக்கூடாதுன்னு ரொம்பக் கட்டுப்பாடு இருக்கு. போன வருஷமோ அதுக்கு முன்னாடியோ, ஒரு வெளிநாட்டுல உள்ள இந்தியத் தூதரகத்துல இந்தியத் தேசியக்கொடி மாதிரி கேக் செஞ்சு வெட்டி சாப்பிட்டுட்டாங்கன்னு ஒரே பரபரப்பா இருந்துது. யூ.ஏ.இ.-ன் தேசியச் சின்னத்தை (Falcon) அனுமதியில்லாமல் பயன்படுத்தக் கூடாது என்று புதியச் சட்டம் இங்கு நேற்று வந்திருக்கிறது.

அப்புறம், அடுத்த பதிவில, ஒருவேளை ஒரு நல்ல செய்தி பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கலாம் உங்களோடு!!  (பதிவெழுதுறதை நிறுத்துவேன்னு மட்டும் கனவு காணவேண்டாம்).

Pictures: GulfNews.com,  team1uae.blogspot.com, www.manipaldubaiblog.com
Post Comment

31 comments:

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு ஹீஸைனம்மா.

சென்ஷி said...

:)

எறும்பு said...

//1971, டிசம்பர் 2-ந்தேதி அபுதாபி, ஷார்ஜா, துபாய், மற்றும் இன்னபிற (மொத்தம் ஏழு) சமஸ்தானங்களைச் சேர்த்து ஐக்கிய அமீரகம் என்று ஒரே நாடாக்கினாங்க. அதைத்தான் வருஷாவருஷம் தேசிய தினம்னு கொண்டாடுறாங்க.//

இன்னைக்கு ஒரு அம்பது ப்ளாக் படிச்சதுல ஒரு உருப்படியான விசயம் தெரிஞ்சுகிட்டேன்... நன்றி....

:-)

எறும்பு said...

//அடுத்த பதிவில, ஒருவேளை ஒரு நல்ல செய்தி பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கலாம் உங்களோடு!!///

அப்ப இது நல்ல செய்தி இல்லையா??

தராசு said...

//அப்புறம், அடுத்த பதிவில, ஒருவேளை ஒரு நல்ல செய்தி பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கலாம் உங்களோடு!! (பதிவெழுதுறதை நிறுத்துவேன்னு மட்டும் கனவு காணவேண்டாம்).//

அடச்சே, முதல் வரியப் படிச்சுட்டு சந்தோஷமா இருந்தேன். ஆனா அடைப்புக் குறிக்குள்ள....... இப்படி ஒரு.....ஹூக்கும்.

S.A. நவாஸுதீன் said...

கொஞ்சம் பெருசா இருந்தாலும் நல்ல பகிர்வு.

அ.மு.செய்யது said...

Gud one !!! Intersting !!!

ஷாகுல் said...

//1971, டிசம்பர் 2-ந்தேதி அபுதாபி, ஷார்ஜா, துபாய், மற்றும் இன்னபிற (மொத்தம் ஏழு) சமஸ்தானங்களைச்//

Al Ain, Fujairah, Ajman, Umm Al Quin தான் மீதி எமிரேட்ஸ்.

நல்ல சொல்லிருகீங்க

எம்.எம்.அப்துல்லா said...

1999 ஆம் வருடம் தேசியநாள் அன்றுதான் முதன்முதலில் அமீரகம் வந்து இறங்கினேன். வீதியெங்கும்,கட்டிடங்களெங்கும் வண்ண வண்ண விளக்கு அலங்காரங்கள். நான் தேசியநாள் கொண்டாட்டம் என்ற விஷயமெல்லாம் தெரியாது எப்பவும் இப்படித்தான் இருக்கும்போல என்று நினைத்தேன் :))

ஹுஸைனம்மா said...

//எம்.எம்.அப்துல்லா Says:
முதன்முதலில் அமீரகம் வந்து இறங்கினேன். வீதியெங்கும், கட்டிடங்களெங்கும் வண்ண வண்ண விளக்கு அலங்காரங்கள்.//

உங்களை வரவேற்க செஞ்சிருக்காங்கன்னு நினைக்காமப் போனீங்களே!!

//எப்பவும் இப்படித்தான் இருக்கும்போல என்று நினைத்தேன்//

அவ்வளவு அப்பாவியா நீங்க???? :-D

லெமூரியன்... said...

\\இது அமீரக தேசிய தினம் பற்றிய பதிவு. ஆனா அப்படித் தலைப்பு வச்சா யாரும் வரமாட்டீங்களே, அதனாலத்தான் கவிதை மாதிரி ஒரு தலைப்பு!!எப்படியோ வந்துட்டீங்கல்ல, முழுசும் வாசிச்சுடுங்க....//

என்ன ஒரு வில்லத்தனம்...!
முழுசா வாசிச்சிட்டோம்..! :-)

\\ஒரே மொழி, மதம் என்றாலும் கூட, நம்மைப் போல மாநிலங்கள் வாரியாகக் கூடப் பிரிந்திருக்கவில்லையே இவர்கள்...//
இங்கே அதுதானே பிரச்சினையே...
பல்வேறு மொழி...பல்வேறு கலாசாரம்..!

\\அப்புறம், அடுத்த பதிவில, ஒருவேளை ஒரு நல்ல செய்தி பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கலாம் உங்களோடு!! (பதிவெழுதுறதை நிறுத்துவேன்னு மட்டும் கனவு காணவேண்டாம்)...//

என் கணிப்பு படி நீங்க சதக்அப்துல்லா காலேஜில படிச்சிருக்கணும்....
நா சொன்னது சரியா??? :-) :-)

ஹுஸைனம்மா said...

//லெமூரியன்... Says:
என் கணிப்பு படி நீங்க சதக்அப்துல்லா காலேஜில படிச்சிருக்கணும்//

எப்படி கணிச்சீங்க? என் எழுத்து சதக் சதக்னு இருக்கதாலயா இல்ல
//என்ன ஒரு வில்லத்தனம்...!// இதாலயா?

தப்புக் கணக்கு. எனக்கும் திருநெல்வேலிதான்.

புதுகைத் தென்றல் said...

அறிந்திராத புதிய தகவல்கள்.

அடுத்த பதிவில, ஒருவேளை ஒரு நல்ல செய்தி பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கலாம் உங்களோடு!! //

நிறைய்ய கற்பனை செஞ்சு வெச்சிருக்கேன். எதை சொல்றீங்கன்னு பாப்போம்.

// (பதிவெழுதுறதை நிறுத்துவேன்னு மட்டும் கனவு காணவேண்டாம்)//

சான்சே இல்லை. பதிவெழுத நிறுத்தினா அமீரகத்துக்கு ஆட்டோ அனுப்புவோம் தெரியும்ல. அப்துல்லா இவங்களுக்கு சொல்லிவைங்க :))

ஹுஸைனம்மா said...

//புதுகைத் தென்றல் Says:
பதிவெழுத நிறுத்தினா அமீரகத்துக்கு ஆட்டோ அனுப்புவோம் தெரியும்ல. அப்துல்லா இவங்களுக்கு சொல்லிவைங்க //

இப்பத்தான் அப்துல்லாவை அப்பாவியான்னு கேட்டு வாய்மூடலை, அதுக்குள்ள... அப்படின்னா,

அப்துல்லா, அடியாளா நீங்க ?

புதுகைத் தென்றல் said...

அப்துல்லாவுக்கு அக்கா நான். :))))

எம்.எம்.அப்துல்லா said...

//அப்துல்லா, அடியாளா நீங்க ? //

aVVVVVVVV :)

SUFFIX said...

இப்பொ கவிதை மாதிரி தலைப்பு வைக்க ஆரம்பிச்சிட்டிங்க, அடுத்தது இது நான் எழுதிய முதல் கவிதைன்னு சொல்லக்கூடிய காலம் மிக விரைவில்னு பட்சி சொல்லுது!! Good progress, கலக்குங்க‌.

SUFFIX said...

//ஆனால் இந்த வருடம் காரோட்டமெல்லாம் கொஞ்சம் குறைவாத்தான் இருந்துது; அதிலயும் பொம்பளைப் புள்ளைகளை ரொம்பக் காணோமேனு என்னவர் ரொம்பவே வருத்தப்பட்டார்.//

மச்சான் அடுத்த முறை ரூட்டை மாத்திப் போங்க, முடிஞ்சா தனியா போங்க, கூட எதுக்கு எஸ்கார்ட் வேற.

ஹுஸைனம்மா said...

/SUFFIX Says:
இப்பொ கவிதை மாதிரி தலைப்பு ..அடுத்தது இது நான் எழுதிய முதல் கவிதைன்னு சொல்லக்கூடிய காலம் மிக விரைவில்னு பட்சி சொல்லுது!!//

நடுநடுவுல எண்டர் தட்டிட்டா கவிதையாம்ல, மடத்தில சொன்னாங்க. ஒருக்கா நாமளும் தட்டிரணும்.

தேவன் மாயம் said...

1971, டிசம்பர் 2-ந்தேதி அபுதாபி, ஷார்ஜா, துபாய், மற்றும் இன்னபிற (மொத்தம் ஏழு) சமஸ்தானங்களைச் சேர்த்து ஐக்கிய அமீரகம் என்று ஒரே நாடாக்கினாங்க. அதைத்தான் வருஷாவருஷம் தேசிய தினம்னு கொண்டாடுறாங்க. அதற்குச் சிலகாலம் முன்வரை பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் இருந்தது இந்த சமஸ்தானங்கள். இதுதான் தேசிய தினத்தின் வரலாறு!! (///

தெரியாததை தெரிந்துகொண்டேன்!

shabi said...

உங்க profile click பண்ணா mail id open ஆகவில்லை எனக்கு ஒரு test message அனுப்புங்க...அபுதாபில இருக்கேன்...

ஹுஸைனம்மா said...

ஷபி, என் மெயில் ஐ.டி. hussainamma@gmail.com. என்ன அனுப்பப்போறீங்களோன்னு டென்ஷனா இருக்கு.

cheena (சீனா) said...

அன்பின் ஹூஸைனம்மா

பல தெரியாத தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி

நல்வாழ்த்துக்ள்

..:: Mãstän ::.. said...

<<<
அன்றைய தினம் விடுமுறை என்பதும் ஒரு காரணம்!!
>>>
ஹிஹி... இதான் உண்மையான காரணம். :)

<<<
கட்டினா ஒரு குரூப் முறைப்பாங்க, கட்டலைன்னாக்க இன்னொரு குரூப் “தேசப்பற்றில்லாதவர்கள்”னு முத்திரை குத்த காத்துகிட்டிருப்பாங்க
>>>

இதை வன்மையா ஆதரிக்கிறேன் :D

Anonymous said...

நல்ல பகிர்வு ஹுசைனம்மா

பாத்திமா ஜொஹ்ரா said...

தெரியாததை தெரிந்துகொண்டேன்!

நாஞ்சில் பிரதாப் said...

//1971, டிசம்பர் 2-ந்தேதி அபுதாபி, ஷார்ஜா, துபாய், மற்றும் இன்னபிற (மொத்தம் ஏழு) சமஸ்தானங்களைச் சேர்த்து ஐக்கிய அமீரகம் என்று ஒரே நாடாக்கினாங்க. அதைத்தான் வருஷாவருஷம் தேசிய தினம்னு கொண்டாடுறாங்க.//

நல்ல பதிவு...ஆனால் ஒரு தப்புபண்ணீட்டிங்க... அஜ்மன், உம்அல்குய்ன்,ரஸ்அல்கைமா, மற்றும் புஜைரா என்ற மற்ற சமஸ்தானங்களையும் சேர்த்து தெரியப்படுத்திருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்திருக்க முடியும்.

பீர் | Peer said...

அந்த நல்ல சேதிக்கு இன்னும் எத்தன நாள் காத்திருக்கணும்?

பெரும்பாலான வளைகுடா நாடுகளின் தேசிய கொடிகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கிறதே. நீங்கல்லாம் இருக்கீங்க.. மாத்தி யோசிக்க சொல்லிக்கொடுங்களேன்.

BTW தலைப்புல புழு வைக்கிற ட்ரிக் :-)

Ammu Madhu said...

intresting..

Rithu`s Dad said...

// ஒரே மொழி, மதம் என்றாலும் கூட, நம்மைப் போல மாநிலங்கள் வாரியாகக் கூடப் பிரிந்திருக்கவில்லையே இவர்கள்.//

ஏழு மாநிலமா பிரிச்சுடலங்களாங்கலா??

//ஒரு மாநிலத்துக்குக் கஷ்டம் என்றால் அடுத்த மாநிலத்தவர் ஓடி வந்து உதவுகிறார்களே!! பல இனத்தவர்களும் உண்டு இவர்களில், ஆனாலும் பிரிவினையில்லை.//

சரி தான்.. “சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா??? ”

இப்படிக்கு நிஜாம்.., said...

// (பதிவெழுதுறதை நிறுத்துவேன்னு மட்டும் கனவு காணவேண்டாம்).//

யாருப்பா அது ஹூசைனம்மாகிட்ட ஒரண்ட இழுத்தது. ஜாக்கிரதையா இருந்துக்குங்க சொல்லிப்புட்டேன் ஆமா!