Pages

எவ்வளவு குடிக்கலாம்?
ஈரோடு பதிவர் சந்திப்பினால் பதிவர்கள் பல சந்தித்துக் கொண்டதும், கருத்துக்களைப் பறிமாறிக் கொண்டதும் சில நல்ல விளைவுகள் என்றால், இன்னொரு நல்ல காரியமும் தன்னே நடந்துள்ளது.

சவூதி அரேபியா, யூ.ஏ.இ., மற்றும் இன்னும் சில நாடுகளில் வேகம்தான் விபத்துக்களுக்கு முக்கிய காரணம். அதைத் தடுக்க ஒரு யுத்தியாக, விபத்தில் சிதிலமடைந்த கார்களை அகற்றாமல் ரோட்டோரத்தில் சிலகாலத்திற்குப் போட்டு வைத்துவிடுவார்கள். பல விளம்பரங்கள், அபராதங்களில் கிடைக்காத பலன் இதில் நிச்சயம் இருக்கும்.

அதேபோல, குடியின் தீமைகளில் ஒன்றை மட்டும் விளக்கி, ஒரு “live demo" நடந்துள்ளது. பார்த்தவர்கள், படித்தவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.


(ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?).

இந்நிகழ்ச்சியின் தொடர்விளைவுகளை வாசித்து வந்ததில் எனக்குச் சில கேள்விகள் எழுந்துள்ளன. அதாவது, சிலர் சொல்கிறார்கள், ஒரு குடிகாரனை நண்பனாக உடையவர்கள், அவனின் இயல்போடு அவனை நண்பனாக ஏற்றுக் கொள்வதுதான் நியாயமாம். அப்படின்னா, குடிப்பவன் குடிக்கட்டும். ஆட்டம் போடட்டும். அவன் அழிவதோடு, குடும்பமும் அழியட்டும். ஆனால் நண்பனை நாம் திருத்த முயலக் கூடாது, அப்படித்தானே?

இதுவே, ஒரு திருடன் அல்லது கொலைகாரனைக்கூட இதே மாதிரி இயல்போடு நண்பனா ஏற்றுக் கொள்வாங்களா இவங்க? கூட வேலை பார்க்கிற நண்பர், கம்பெனி பணத்தைக் கையாடல் செய்கிறார்னா, சொல்லித் திருத்துவோமா இல்லை திருடினாலும் நீ என் நண்பன்னு பெருமையா சொல்வோமா?

அதிலயும் ஒருசிலர் மட்டும் போனாப் போகுதுன்னு அட்வைஸ் சொல்றாங்க. அதுவும் குடிக்காதீங்கன்னு இல்லை, கொஞ்சமா குடிங்கன்னு!! சிலர் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு வரும்போது மட்டுமாவது கொஞ்சமா குடிங்கன்னு சொல்றாங்க. மத்த நேரத்தில எப்படியும் தொலைங்கன்னு சொல்றாங்களோ? இது, “தவறான உடலுறவுக்குமுன் ஆணுறை பயன்படுத்துங்கள்” என்ற அரசின் எய்ட்ஸ் விளம்பரத்தைத்தான் நினைவுபடுத்துது எனக்கு.

குடியிலென்ன கொஞ்சம் குடிப்பதும், நிறையக் குடிப்பதும்? எல்லாம் ஒன்றுதானே?

ஒரு காலத்தில குடிப்பது என்றால் அருவருப்பாகப் பார்த்த நிலை மாறி, இப்ப குடிப்பதும் நம் கலாச்சாரத்தில் ஒன்று என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலை வந்துவிட்டது. அதனால்தான் குடிப்பவர்களைக் கொஞ்சமாகக் குடியுங்கள் என நல்வழிப்படுத்துகிறோம்!! முன்பெல்லாம் சில ஆண்கள் குடித்தாலும் வெளியில் அந்தப் பழக்கமிருப்பதாகக் காட்டிக்கொள்ள வெட்குவார்கள். ஆனால், இப்போ குடிப்பதை வெளிப்படையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். நண்பர்கள் சந்தித்தால் உடனே டீ, காபி குடிப்பதைப் போலக் குடிக்கிறார்கள். அவர்களின் மனைவியரும் இதை அனுமதிப்பதும் ஆச்சர்யமான விஷயமே!! சிலரின் மனைவியர் கோட்டா வைத்துக் குடிக்கச் சொல்கிறார்களாம், ஒரு மாதத்துக்கு இவ்வளவு என்று!!

இஸ்லாமியக் குடும்பங்களில் உள்ள ஆண்கள் குடிப்பதில்லை. அதுவும் முஸ்லிம்கள் பெரும்பானமையாக வாழும் ஊர்களில் குடிக்கே இடமில்லை என்று நிச்சயமாகச் சொல்லமுடியும். ஆனால், நகரங்களில் வாழும் முஸ்லிம் ஆண்களில் வெகுச்சிலர், கார்ப்போரேட் கலாச்சாரத்தில் மூழ்கியோ, சினிமாத் தொடர்புகளாலோ, கூடா நட்புகளாலோ ஆட்பட்டு குடிக்கின்றனர். சிலர் பீர் மட்டும்தான் குடிப்பேன் என்று (பெருமையுடன்) சொல்லிக் கொள்கின்றனர். பின் அது ஒரு ஆரம்பமாக அமைந்துவிடுகின்றது. இவ்வளவிலும் குடிக்காமல் கட்டுப்பாட்டோடு இருப்பவர்கள், தம் நண்பர்கள் குடித்தழிவதற்கு ஒரு சாட்சியாக இருக்கிறார்கள். கேட்டால், அது அவர்கள் விருப்பம். அவர்களது தனிமனிதச் சுதந்திரத்தில் தலையிடுவது தவறு என்பார்கள்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.


(ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்குமாம்).

இந்த தனிமனிதச் சுதந்திரம் பத்தி அவருக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லாததினாலத்தான் திருவள்ளுவர் இப்படிச் சொல்லிட்டாரோ?Post Comment

42 comments:

KULIR NILA said...

netla alasi paarunga evlo muslims drink pandrangannu neenga oru karpanaya valathukkaatheenga. illene local bar poi paarunga ungalukku unmai velangum.

சென்ஷி said...

மிகப் பிரபல பதிவர் ஆகிட்டீங்க. மைனஸ் ஓட்டு குமிஞ்சு இருக்குது :)

நாஞ்சில் பிரதாப் said...

என்ன பிரச்சாரம் பண்ணினாலும் தனித மனித ஓழுக்கம் என்பது அவன் அவனா நினைச்சாதாங்க முடியும், இப்ப என்னை மாதிரின்னு வச்சுக்கோங்களேன் :-)

நல்ல பதிவு. திருக்குறளையெல்லாம் மேற்கோள் காட்டி சே...பின்னிட்டிங்கபோங்க...

angel said...

me the first apdinu ninaikren apdithane?

angel said...

30ml kudicha naladhame apdiah????

நட்புடன் ஜமால் said...

இஸ்லாமியக் குடும்பங்களில் உள்ள ஆண்கள் குடிப்பதில்லை. அதுவும் முஸ்லிம்கள் பெரும்பானமையாக வாழும் ஊர்களில் குடிக்கே இடமில்லை]]

இது சரியென்று சொல்வதற்கில்லை

----------------------

கட்டுப்பாட்டோடு இருப்பவர்கள், தம் நண்பர்கள் குடித்தழிவதற்கு ஒரு சாட்சியாக இருக்கிறார்கள்.

வெறும் சாட்சி மட்டுமில்லீங்க வெளிநாட்டிலிருந்து ஊருக்கு செல்கையில் நண்பனுக்கென்று எடுத்து போவார்கள் - கொடுமை.

---------------------

நன்மையை ஏவி தீமையை தடுங்கள்.

----------------

நல்ல பதிவு.

ஈரோடு கோடீஸ் said...

ஹுஸைனம்மா - வணக்கம்.

நட்பு என்பது நகுதற்பொருட்டன்று. இடித்தலும் வேண்டும்தான். ஆனால் சபையில் அல்ல, தனியில். குறை இல்லாத மனிதர்கள் யார்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இந்த தனிமனிதச் சுதந்திரம் பத்தி அவருக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லாததினாலத்தான் திருவள்ளுவர் இப்படிச் சொல்லிட்டாரோ?// நல்லா சொன்னீங்க :) நாலும் தெரிஞ்ச மனுசருக்கு இது தெரியாம இருந்திருக்கே.. பாருங்க..

S.A. நவாஸுதீன் said...

அருமை அருமை அருமை. இப்படி சாட்டையடி அவங்கவங்க வீட்லயும் கொடுத்தா நல்லா இருக்கும்.

தாரணி பிரியா said...

சரியா சொல்லி இருக்கீங்க ஹூசைனம்மா.

மணிப்பக்கம் said...

நல்ல பதிவு, வரவேற்கிறேன்!

// இஸ்லாமியக் குடும்பங்களில் உள்ள ஆண்கள் குடிப்பதில்லை. அதுவும் முஸ்லிம்கள் பெரும்பானமையாக வாழும் ஊர்களில் குடிக்கே இடமில்லை என்று நிச்சயமாகச் சொல்லமுடியும்.//

எனது ஊரில் முஸ்லீம்கள் அதிகம்,
அநேகம் பேர் குடிப்பார்கள்,
இந்த எண்ணம் யாரிடமும் இல்லை என்பதே நிஜம்!
நீங்கள் நினைத்து கொண்டிருப்பது போன தலைமுறையில் இருந்திருக்கலாம்..!! :)

நாஸியா said...

அதென்ன மைனஸ் ஓட்டுக்களா? நீங்க பிரபலமாகிட்டே வர்றீங்க சகோதரி.. :)

ஆமா, கார்ப்பரேட் கல்ச்சர் எனும் குப்பைத்தொட்டியில் ஆண்களும் பெண்களும் குடிப்பது சகஜமாகிவிட்டது..இந்த கொடுமையெல்லாம் வேண்டாம்னே கார்ப்பரேட் கல்ச்சர்ல இருந்து விலகிட்டேன்!!

சாரயத்தை கொஞ்சமா எடுக்குறதுல தப்பில்லைன்னு சொல்லிட்டு குடிச்சிட்டு இருக்காங்க. ஆனா அந்த மூடர்களுக்கு ஏன் தெரிய மாட்டெங்குது, அதுல இருக்கும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்று?

"Experts with the American Cancer Society and the American Heart Association say that though these studies do show some benefits to moderate drinking, the health risks from alcohol consumption far outweigh the potential rewards.

Drinking any alcohol at all is known to increase your risk for contracting a number of types of cancer, said Susan Gapstur, vice president of epidemiology for the American Cancer Society. These include cancers of the mouth, pharynx, larynx, esophagus, liver, colon/rectum and breast."

http://news.healingwell.com/index.php?p=news1&id=629696(2:219) நபியே! மதுபானத்தையும் சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது

ஹுஸைனம்மா said...

சென்ஷி: அட, ஆமா. எத்தனை மைனஸ் ஓட்டு? நீங்க சொன்னப்புறம்தான் பார்த்தேன்.

என்னையும் பிரபலமாக்குனவங்களுக்கு ரொமப நன்றி!!

(நீங்களும் போட்டீங்களா?)

பாலா said...

நல்ல பதிவுங்க அக்கா
ரொம்ப நல்ல விஷயம்
(ஆனாலும் எதிர்வினயாற்றலாம் வேணாம் விடுங்க )

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தனி மனித சுதந்திரம் என்கிற ஒற்றை வார்த்தையை மையமாகக் கொண்டுதான் அத்தனை குடிகாரர்களும் குடித்துக் கொண்டேயிருக்கிறார்கள்..!

இப்போதெல்லாம் குடிக்காவிட்டால் அவன் ஆம்பளையே இல்லை என்கிற அளவுக்கு ஆண் வர்க்கம் சிந்திக்கத் தொடங்கிவிட்டது..!

குடியினால் கஷ்டம் வரும்போது அவரவர் குடும்பத்தினரும் சேர்த்து அவதிப்படுகிறார்களே.. அப்போது அந்த தனி மனித சுதந்திரத்தை அந்தக் குடிகாரர்கள் ஏற்றுக் கொள்வார்களா..? சக குடும்பத்தினர் அவரைக் கண்டுகொள்ளாமல் சென்றால் என்ன செய்வார்..? என்ன சொல்வார்..? அது அவர்கள் உரிமை என்பாரா..? அல்லது...............?

அமிர்தவர்ஷினி அம்மா said...

நச் பதிவு

கமெண்ட் பாக்ஸ் மாற்றியமைத்தமைக்கு நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

தேவையான நேரத்தில் தேவையான பதிவு.

Jaleela said...

சரியான நல்ல தொரு பகிர்வு.
கலக்குங்க கலக்குங்க

UFO said...

"தனி மனித சுதந்திரம்" :- இது ஒரு அர்த்தமற்ற கொடுமையான கேலிக்கூத்து.

நம் நாட்டில், அடுத்தவருக்கு எப்பாதிப்புமின்றி தற்கொலை செய்து கொள்பவனுக்கு தரப்படாத இந்த உரிமையை மதுவும் சிகரட்டும் குடிப்பவனுக்கு தந்திருக்கிறார்களே..! இது ஒன்று போதும், நமது அரசும் நீதி மன்றமும் எவ்வளவு அயோக்கிய முட்டாள்கள் என்பதற்கு.

சிகரட் பிடிக்காத எனக்கு, சிகரட் துர்நாற்றமில்லா தூய காற்றை சுவாசிக்க - அப்படி வேண்டும் எனக்கேட்க தனிமனித உரிமை இல்லை.

மது குடித்து போதை தலைக்கேறி என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நினைவு தவறி, அப்பாவிகளை கொன்ற சித்து எம்பி யாம், சல்மான்கான் சூப்பர் ஸ்டாராம்.

இதுபோல கோடிக்கணக்கான உதாரணங்கள் தினமும் உள்ளன, குடிகாரர்களால் தனி மனித உரிமை கொல்லப்பட்டதற்கு...!

குடிகாரர்கள் ஒழிக...!குடிகாரர்களுக்கு நரக நெருப்புக்குண்டமே இறுதிப்புகலிடம்...! தனிமனித உரிமைக்கு எதிரான இந்த குடிகாரர்களுக்கு,"ஆணுறை உபயோகித்து விபச்சாரம் செய்யச்சொல்லும்",எந்த'குடிகார அரசாங்கம்'தண்டனை வழங்கும்?

ஹுஸைனம்மா said...

சென்ஷி
பிரதாப்
ஏஞ்சல்
ஜமால்
முத்தக்கா
நவாஸ்
தாரணி
மணிப்பக்கம்
ஜமால்
அமித்தம்மா
அப்துல்லா
பாலா
ஜலீலாக்கா
____________

எல்லாருக்கும் நன்றி!!


நாஸியா: ஆமாம், திருக்குர் ஆனில் அன்றே சொல்லப்பட்ட பலவற்றையும்தான் இன்று சோதனை செய்து புதிதாகக் கண்டுபிடித்ததுபோல் சொல்கிறார்கள்.

உண்மைத்தமிழன் & உஃபொ: நன்றி உங்கள் இருவரின் முதல் வருகைக்கும். இந்த தனிமனிதச் சுதந்திரம் என்ற வார்த்தைதான் நம் குடும்பத்தினரிடமிருந்தே நம்மை அந்நியமாக்குகிறது.

ஹுஸைனம்மா said...

கோடீஸ் சார்: வருகைக்கு நன்றி. குறை இல்லாத மனிதர்கள் இல்லை; ஆனால் அவர்களைக் குறையோடே ஏன் வைத்திருக்க வேண்டும்? குறையைக் களைய நாமும் முயலலாமே?

ஹுஸைனம்மா said...

ஒரு விளக்கம்: இஸ்லாம் குடியை அடியோடு விலக்கியுள்ளது. அதாவது ஹராமாக்கப்பட்டுள்ளது.

மதத்தின் பெயரால் தீவிரவாதம் செய்யும் ஒருவன் எப்படி முஸ்லிம் இல்லையோ, அதுபோல குடிப்பவர்களும் இஸ்லாமியன் அல்ல.

அதனால், இஸ்லாமியர்கள் குடிக்கமாட்டார்கள்

எல் போர்ட் said...

நானே தான் - சரியாக் கண்டுபிடிச்சிட்டீங்க :).

நடத்துங்க நடத்துங்க.. நீங்க மிக உறுதியாக சில விஷயங்களை நம்பறீங்க. நீங்க சொன்னதுல பாதி - வெரி ஓகே. மீதிப் பாதி - ம்ஹூம். இதை இங்க விளக்கனும்ன்னும் விரும்பலை - ஏன்னா குடிக்காம இருக்கறது நல்லது தான். என்னொட வ்யூல குடியோட பெரும் தீமையா கருதறது - அது தரும் போதை, அதனால் ஏற்ப்படும் விளைவுகள் தான். இது உடனிருப்பவர்களையும் மத்தவங்களையும் பாதிக்கும். அடுத்தது - அடிக்‌ஷன் லயபிலிட்டி.

ஸாதிகா said...

//இஸ்லாமியக் குடும்பங்களில் உள்ள ஆண்கள் குடிப்பதில்லை. அதுவும் முஸ்லிம்கள் பெரும்பானமையாக வாழும் ஊர்களில் குடிக்கே இடமில்லை என்று நிச்சயமாகச் சொல்லமுடியும்//ஓரளவு உண்மைதான் ஹுசைனம்மா.அருமையான பதிவு.

rehannisha said...

தானும் குடித்து சீரழிவது இல்லாமல் மற்றவருக்கும் தன் சுயமதி இழப்பினால் எந்தவித சட்டத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்படாமல் அடுத்தவருக்கும் தொல்லை கொடுக்கும் இந்த குடிகாரப்பாவிகளுக்கு எதிரான இந்த பதிவிற்கு...,

(சிறந்த பதிவு..!நன்றி:ஹுசைனம்மா)

...ஆதரவு ஒட்டுக்களைவிட எதிப்பு ஓட்டுக்கள் இரு மடங்கா??? அடப்பாவி மக்கா!!! பதிவர்களில் இவ்வளவுபேர், குடித்துக்குடித்து தானும் கெட்டு தன் குடியையும் கெடுத்து பிறர் குடியையும் குலைக்கும் படுபாவிகளா..?!?!?

எதிப்பு ஒட்டு போட்ட அத்தனை குடிகார அரக்கர்களும் மண்ணோடு மண்ணாகி நாசமாய் போக...

rehannisha said...

தானும் குடித்து சீரழிவது இல்லாமல் மற்றவருக்கும் தன் சுயமதி இழப்பினால் எந்தவித சட்டத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்படாமல் அடுத்தவருக்கும் தொல்லை கொடுக்கும் இந்த குடிகாரப்பாவிகளுக்கு எதிரான இந்த பதிவிற்கு...,

(சிறந்த பதிவு..!நன்றி:ஹுசைனம்மா)

...ஆதரவு ஒட்டுக்களைவிட எதிப்பு ஓட்டுக்கள் இரு மடங்கா??? அடப்பாவி மக்கா!!! பதிவர்களில் இவ்வளவுபேர், குடித்துக்குடித்து தானும் கெட்டு தன் குடியையும் கெடுத்து பிறர் குடியையும் குலைக்கும் படுபாவிகளா..?!?!?

எதிப்பு ஒட்டு போட்ட அத்தனை குடிகார அரக்கர்களும் மண்ணோடு மண்ணாகி நாசமாய் போக...

போஸ்கோ said...

ungal pathivu nala pathivu...neengal india-vil irunthukondu ethanai muslim naadugalai parthu irukireergal ? nan irupathu Afghanishtan. islamia samuthayathileye pigavum porulathara pinthangia matrum islamia patru athigam ulla naadu. ingu alcohol seivathum oru muslim, athai virpathu oru muslim, athai athigam paer vangi arunthuvathu yar endru neengal ninaikireergal ? malaysiavil illatha bar gala ? athai nadathuvathu yar ? dubai ? madham saarntha vishayangal paesumpothu thelivana karuthu illamal allathu unmai enna vendru theriamal neengal eluthuvathu mutrilum thavarana onru !
ivai nan neril parthathai kondu ezhuthugiren. kaathaal ketavaiyum illai, en karpanaiyo allathu oogangalo illai.
nanri !

பீர் | Peer said...

பீர் குடிக்கிறது தப்பாங்க..?

இங்கெல்லாம் பொட்டிக் கடைல கூட வச்சு விக்கிறாங்களே... :)

அ.மு.செய்யது said...

நல்லதொரு பதிவு.

பிரிச்சி மேய்ஞ்சிர்க்கீங்க..!!! இன்னும் நிறைய இந்த மாதிரி எழுதுங்க..!

அ.மு.செய்யது said...

//அதனால், இஸ்லாமியர்கள் குடிக்கமாட்டார்கள்//

குடிமகன்கள் இங்கும் இருக்கிறார்கள்.போகப் போக திருந்துவார்கள்.

பலா பட்டறை said...

இடித்துரைப்பாரில்லா மன்னன் கெடுப்பார் இல்லாவிட்டாலும் கெடுவான் என்பது போல குடிப்பவர்கள் அருகில் அப்பழக்கம் இல்லாமலிருப்பவர்கள் கடுமையாக எதிர்த்தாலே நல்ல மாற்றங்கள் தெரியும். இது தனி மனித விஷயமல்ல.. அரசாங்கமே ஒரு தலைமுறையை பாழ் பண்ணிக்கொண்டிருக்கிறது. நல்ல பதிவு. நன்றி.

ஹுஸைனம்மா said...

எல் போர்ட்: எந்தப் பாதி உங்களுக்கு ஒத்த கருத்தில்லை? இஸ்லாமியர்கள் குறித்தது என்றால், என் கருத்து மாறுதலுக்கானதில்லை.
ஆனாலும் தொடர்ந்து வாங்க.

ஸாதிகாக்கா: நன்றி கருத்துக்கு.

ரெஹன்னிஸா: முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. உண்மைத் தமிழன் சொல்வ‌துபோல, குடிப்பதை ஆண்மையின் அடையாளமாக நினைக்கிறார்கள். அதுதான் இத்தனை எதிர்ப்பு ஓட்டு.

போஸ்கோ: வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. துபாயிலும், அபுதாபியிலும்கூட இந்நாட்டு "குடி"மகன்கள் உண்டு. அறிவேன். ஆனால் நான் சொன்னதுபோல், குடிப்பவன் இஸ்லாமியன் ஆகமாட்டான். நாம்கேவாஸ்தா முஸ்லிம்கள்தான் அவர்கள்.

ஹுஸைனம்மா said...

It was reported by Anas (may Allah be pleased with him), that Prophet Muhammad (pbuh) said:

“God’s curse falls on ten groups of people who deal with alcohol. The one who distills it, the one for whom it has been distilled, the one who drinks it, the one who transports it, the one to who it has been brought, the one whom serves it, the one who sells it, the one who utilizes money from it, the one who buys it and the one who buys it for someone else.”

mohamed ashik said...

முதன்முதலாய் பீர்பாட்டிலை அதிர்ச்சியுடன் கண்ணால் கண்டது, என் நண்பர்கள் எல்லாரிடமும்-பத்தாவது பாஸ்பன்னியபோதுதான்.

அடுத்தது ஒரு சிலரின் அக்கா,அண்ணன் திருமணங்களின்போது, பல நண்பர்களின் கைகளில், பல வகை மதுவகைகள். ஆச்சர்யம்.

பின்னர், பிளஸ்டூ என்ட்ரன்ஸ் எக்ஸாம் முடிந்தவுடன் அன்று அனைவர் கைகளிலும் மீண்டும்.அட..!

அதன்பின்னர், கல்லூரி நாட்களின் என் ஹாஸ்டல்அறையில் வாரவாரம் சனிக்கிழமை இரவு மற்றும் பல விடுமுறை/ஸ்ட்ரைக் /பண்டிகை/மணவிழாக்கள் நாடகளில்...நண்பர்களின் ஸ்பான்சர்ஷிப்பில் (அப்பாக்களின் காசு) ஃபிரீயாக...

பின்னர்,ஒரு பெரிய கம்பெனியில் நல்ல வேலையில் சேர்ந்தவுடன்...அடிக்கடி...வாரத்தில் ஒருசில தினங்கள் நீங்கலாக...ஏதாவது ஒரு காரணம் கூறி அலுவலக ஊழியர்கள்-எக்சிகுடிவ் டைரக்டர் முதல் ஆபீஸ் பாய் வரை-அனைவரிடமும்...பார்ட்டி என்ற பெயரில்...கம்பெனி செலவில் முற்றிலும் இலவசம்.

நம்பினால் நம்புங்கள். 'இது' என்னையே சுற்றிசுற்றி வந்தாலும் ஒருமுறை கூட என் வாழ்நாளில் 'அதனை' தொட்டுப்பார்த்தது கூட கிடையாது. 'குடித்துப்பார்த்தால் என்ன' என்று கூட தோன்றியது கிடையாது. காரணம்:- ஒன்பதாவது படிக்கும் காலத்திலிருந்தே இஸ்லாமை விளங்கிய நான் தினமும் தொழும் ஒரு உண்மையான இறையச்சம் கொண்ட முஸ்லிம். ஹாஸ்டல்அறையில் ஒருமூலையில் மதுகுடிக்கும் மாணவர் கும்பல். மறு மூலையில் நான் தொழுதுகொண்டு...
///இஸ்லாம் குடியை அடியோடு விலக்கியுள்ளது. அதாவது ஹராமாக்கப்பட்டுள்ளது.///
//இஸ்லாமியர்கள் குடிக்கமாட்டார்கள்//
சரியாக சொன்னீர்கள், ஹுசைனம்மா.

எல் போர்ட் said...

//இஸ்லாமியர்கள் குறித்தது என்றால், என் கருத்து மாறுதலுக்கானதில்லை//

இப்படிச் சொல்லிப்போட்டீங்களே ஹூசைனம்மா!! என்னுடைய இஸ்லாமிய நண்பர்கள் குறைவு. குடிப்பார்களா என்று தெரியவும் தெரியாது. கண்டிப்பாக அது பற்றி இல்லை.

நான் குடியை ஃபேவர் பண்ணுபவர் இல்லை. தேவையில்லாத வேண்டாத பழக்கம் என்று தான் நினைப்பவர். இருந்தாலும், குடிப்பவர்கள் வேறு, குடிகாரர் வேறு என்பது என் எண்ணம்.

குடிகாரர்கள் (ஆங்கிலத்தில் ஆல்கஹாலிக்ஸ்) - இவர்களுக்கென்று தனியான கேள்விக் க்ரைட்டீரியா உள்ளது. தனக்கும், குடும்பத்துக்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும் இவர்கள் கேடு விளைவிக்கிறார்கள் என்பதில் எந்த எதிர்க் கருத்தும் கிடையாது - ஊரில் நான் கண்ட பலரும் இவ்வாறானவர்களே!! இவர்கள் கண்டிப்பாக தங்கள் பழக்கத்தினை படிப்படியாக குறைத்து கைவிடும் வழியினைத் தேட வேண்டும்.

சிறு வயதில் இது போன்ற சில உறவினர்களை கண்டதாலும், அம்மா சொல்லி சொல்லி வளர்த்ததாலும் அது ஒரு கெட்ட பழக்கம் என்றே மனத்தில் இருந்தது. பிறகு இங்கு வந்த பிறகு அந்த எண்ணம் மாறி விட்டது - காரணம், எப்போதாவது சிறிதாக குடித்து போதை அதிகம் ஏறாமல் அதை ஒரு பழக்கமாக மாற்றிக் கொள்ளாமல் சுய கண்ட்ரோல் அதிகமாக அதை ஒரு கோக் போன்றே அருந்தும் மனிதர்களை பார்த்து இருக்கிறேன். என்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு தாத்தா பாடம் நடத்துகிறார். ஈவ்னிங் அவ்வப்போது மார்ட்டினி (அது என்னவென்று கூட எனக்குத் தெரியாதென்பது வேறு விஷயம்) அருந்துவேன் என்று ஒரு நாள் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் பாட்டுக்கு வீட்டில் அடித்து விட்டு தூங்கி விடுகிறார். அடுத்த நாள் தெளிவாக எழுந்து வந்து இந்த தள்ளாத வயதிலும் அவர் தன் வாழ்நாள் முழுக்க கற்றதை பாடமாக நடத்திவிட்டு போகிறார். தன் பிள்ளைகளை சரியாக வளர்த்திருக்கிறார், தன் கடமையை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். அவரை குடிப்பவர் என்று ஒத்துக்கொண்டாலும், கண்டிப்பாக குடிகாரர், கொலைகாரர், திருடர் என்று என்னால் ஒப்புக் கொள்ளவே முடியாது. மேலும் அந்த ஒரு விஷயத்தை வைத்தே முன்பு நான் செய்தது போன்று மனிதர்களை வெறுக்கவும் செய்வதில்லை. நீங்கள் இவர்களைப் போன்றவர்களை அதிகம் கண்டதில்லை என்பதால் நான் ஊரில் இருந்த போது எந்த மனநிலையில் இருந்தேனோ அதே மாதிரி இருக்கிறீர்கள். அதனால் இதனை உங்கள் கண்ணோட்டமாக ஒப்புக் கொள்வேன். ஆனால் என்னுடைய கண்ணோட்டதில் இருந்து ஒப்புக் கொள்ள முடியாது. சில வருடங்களுக்கு முன்பு நானும் இதே டயலாக் தான் குடியைப் பற்றி அடித்திருக்கிறேன் - அஞ்சு ரூபா திருடினாலும் ஐனூறு திருடினாலும் திருடன் திருடன் தான். ஆனால் இன்று குடிப்பவர்கள் அனைவரும் திருடனுக்கு சமமானவர்கள் என்பதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. இதை அவர்களின் தனிப்பட்ட விஷயமாகவே கருதுகிறேன். அட்வைஸ் செய்யவும் விரும்பவில்லை.

என் தனிப்பட்ட கருத்தை பொறுத்தவரை - இதுவரை இந்த விஷயத்தை பழகாதவர்கள் அவ்வாறே இனிமேலும் தன் மனத்தையும் வாயையும் கட்டிக் காத்தலே நன்று - அதுவும் இந்திய இளைஞர்கள் அங்கிருந்தவரைக்கும் குடும்ப சமூக கட்டுப்பாடு காரணமாக அவ்வளவாக எதையும் தொடாமல் இருந்துவிட்டு இங்கு வந்து இதை வாரயிறுதிப் பழக்கமாக பழக ஆரம்ப்பிப்பது மனத்தை வருத்துகிறது. என்னைக் கேட்டால், இத்தனை நாள் இருந்திராத அந்தப் பழக்கம் இப்போது புதிதாகத் தேவையேயில்லை. இந்த விஷயத்தில் நான் உங்களுடன் ஒத்துப் போகிறேன். அது நல்லதொரு பழக்கமுமில்லை - சுய கண்ட்ரோல் குறைவானவர்கள் எளிதில் அடிக்ட் ஆகி குடிகாரர் ஆகிவிடும் அபாயமுண்டு - புதிதாகப் பழகுவதால் நம் ஆட்களுக்கு கண்ட்ரோலும் வேறு குறைவு.

இதைப் படிப்பவர்கள் எவ்வாறு புரிந்து கொள்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனினும், என்னைத் தவறாக எண்ணாமல் திட்டாமல் இருந்தார்களென்றால் அதுவே எனக்குப் போதும்.

SUFFIX said...

அருமையான கருத்து, பீர் குடிப்பவர்கள் சிலர், அது ஆரோக்கியமானதும் கூட சொல்கிறார்கள் அதற்கு அவர்கள் சொல்வது அதில் ஃப்லேவினாய்ட் (Flavinoid) என்று சொல்லக்கூடிய Anti Oxidants இருக்கு. குடிப்பதற்க்கு இது ஒரு சாக்கு. இந்த வகை விட்டமின்கள் காய்கரிகள், மற்றும் பழங்களிலும் நிறைய இருக்கு. 30மில்லியோ 300 மில்லியோ அது ஒரு தீமையே. படும் முன் திருந்தினால நலம்.

Rithu`s Dad said...

மிக நல்ல பதிவு.. ஆனால் என்னை பொருத்தவரை குடியைக் காட்டிலும் “ புகைப்பிடிப்பதையே” மிகத்தவறான செயலாக குறிப்பிடவேண்டியது.. குடிப்பவர்களாவது அவர்கள் பணத்தையும் உடம்பையும் செலவலித்து கெடுத்துக்கொள்கிறார்கள்.. ஆனால் புகைப்பவர்கள் மற்றவர்களையும் சேர்த்துக் “கொள்கிறார்கள்”..

அது சரி, இந்த குடிப்பழக்கம் இந்த காலத்தில் வந்ததுன்னா நினைக்கிறீங்க.. எத்தனை ஆண்டண்டு காலமாய்.. அரசன் முதல் ஆண்டவன் வரை அனைவருக்கும்னு ல்ல இது பொதுவா இருந்திருக்கிறது??

இன்னோனு எனக்கு தெரிஞ்சு.... புகைப்பதும் மது அருந்துவதும் எல்லா மதத்தினரும் பொதுவாக செய்துவருவதே..இந்த மதத்தில் மட்டும் குறைவு என்று எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்..

அந்த வீட்டு ”மாரல்” கல்வி என்றோ வழக்கொழிந்து எல்லா மதத்தினர் வீட்டிலும் இப்பொழுது நடப்பது என்னவோ.. “survival of the fittest" போதனைகள் மட்டுமே.. சரி தானே..!?

Anonymous said...

குடி குடியை கெடுக்கும். இஸ்லாத்தில் குடி ஹராம். ஆனால் பீர் சவுதி அரேபியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆல்கஹால் இல்லாதது. இதை குடிக்கலாம். இந்தியாவில் கள்ளச்சாராயம் குடித்து எத்தனைப் பேர் கண் அவிந்து போனாலும் திரும்ப திரும்ப குடிக்கே அடிமை ஆகிறார்கள். உங்கள் பதிவு அருமை. நன்றி

நட்புடன் ஜமால் said...

அதுபோல குடிப்பவர்களும் இஸ்லாமியன் அல்ல.

அதனால், இஸ்லாமியர்கள் குடிக்கமாட்டார்கள்]]


அட டாப்புங்க - நல்ல பார்வை.

குடிப்பவன்(போதை முழுமையாக குறையும் வரை) முஸ்லீம் கிடையாது.

கபிலன் said...

"இதுவே, ஒரு திருடன் அல்லது கொலைகாரனைக்கூட இதே மாதிரி இயல்போடு நண்பனா ஏற்றுக் கொள்வாங்களா இவங்க? "
எனக்கு சரியா புரியலைங்க ஹுசைனம்மா. குடிகாரனையும், திருடனையும் ஒப்பிடுவதில் நியாயமே இல்லை. குடிப்பவர் தன்னுடைய இன்பத்திற்காக, தன்னுடலை வருத்திக் கொள்கிறார். மற்றவரை காயப் படுத்தவில்லை. இதுல தவறான குணம் என்று சொல்வதற்கு இடமே இல்லை. ஆனால், திருடனும், கொள்ளைக்காரனும் அப்படி இல்லை.
இதுல அந்த சமயத்தைச் சேர்ந்தவன் குடிப்பது இல்லை, இந்த சமயத்தைச் சேர்ந்தவர்ன் குடிப்பது இல்லை என்று கிடையாது. இஸ்லாமிய நாடுகளில் இவைகளுக்கு தடை இருந்தாலும், கள்ளச் சந்தையில் அமோக வியாபாரம் நடந்து கொண்டிருப்பது ஊரறிந்த ரகசியம்.
அடுத்தவரை தொந்தரவு செய்யாதவரை, புன்படுத்தாதவரை எல்லா பழக்கமும் நல்ல பழக்கம் தான் என்பது என் கருத்து. உடல் நிலை கெட்டுப் போகுது குடிக்காதீங்கன்னு சொல்லுங்க அது ஓகே. ஆனா, ஏதோ குடிகாரனை திருடனோட, கொள்ளைக்காரனோட கம்பேர் பண்றதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க.

ஹுஸைனம்மா said...

முஹம்மது ஆஷிக், கருத்துக்களுக்கும், அனுபவத்துக்கும் நன்றி. நீங்கள் சொன்னது போல பல முஸ்லிம் மாணவர்களும் பின்பற்றுகிறார்கள்;

எல் போர்ட: அட, உங்களுக்கான நான் என் பதிலில் ஸ்மைலி போட மறந்துட்டேன். அதான் நான் தப்பா புரிஞ்சுகிட்ட மாதிரி ஆகிடுச்சு!! நீங்க சொல்ற மாதிரி கேரக்டர்கள் நானும் தினமும் சந்திக்கிறேன். ஆனாலும், பின்மண்டையில ஒரு வார்னிங் மாதிரி ஓடிகிட்டிருக்கும், இவர் குடிப்பவர் என்று. நீங்க சொன்னமாதிரி, //நான் ஊரில் இருந்த போது எந்த மனநிலையில் இருந்தேனோ அதே மாதிரி இருக்கிறீர்கள்// இதுவும் காரணமாக இருக்கலாம்.

ரீத்து அப்பா //”மாரல்” கல்வி என்றோ வழக்கொழிந்து எல்லா மதத்தினர் வீட்டிலும் இப்பொழுது நடப்பது என்னவோ.. “survival of the fittest" போதனைகள் மட்டுமே..// உண்மைதான், அதிக மார்க் வாங்கச் சொல்லி அறிவுரை சொல்வதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம், நல்ல பழக்கங்கள் சொல்லிக்கொடுப்பதில் இல்லை.

ஷஃபிக்ஸ், நல்ல கருத்து. நன்றி.

ஷஃபியுத்தீன், பீர் பத்தி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கருத்து வச்சிருக்கோம். இருந்தாலும் பீரால் நனமை இல்லையெனும் போது அதையும் தவிர்ப்பதே நல்லது என்று தோன்றுகிறது. நன்றி கருத்துக்கு.

ஜமால், போதை இறங்குவதற்குள் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாயிடுவாங்களே, அப்புறம் எங்க முஸ்லிம் ஆகிறது?

கபிலன், குடிப்பவரால் அவருக்கு மட்டுமா, அவரது சுற்றம், உற்றமும்தானே பாதிக்கப்படுகிறது?

பலா பட்டறை, //குடிப்பவர்கள் அருகில் அப்பழக்கம் இல்லாமலிருப்பவர்கள் கடுமையாக எதிர்த்தாலே நல்ல மாற்றங்கள் தெரியும்// நன்றி நல்ல கருத்துக்கு.

செய்யது, நன்றி.

பீர், தெளிவாச் சொல்லுங்க: பீர் (beer) குடிப்பது தவறான்னு கேக்கறீங்களா, இல்லை Peer குடிப்பது தவறான்னு கேக்கறீங்களா? :-D

..:: Mãstän ::.. said...

நல்ல பதிவு ஹுஸைனம்மா.

<<<
இஸ்லாமியக் குடும்பங்களில் உள்ள ஆண்கள் குடிப்பதில்லை. அதுவும் முஸ்லிம்கள் பெரும்பானமையாக வாழும் ஊர்களில் குடிக்கே இடமில்லை என்று நிச்சயமாகச் சொல்லமுடியும்.
>>>
எந்திரீங்க,எந்திரீங்க... விடுஞ்சுடுச்சு... :D எந்த காலதுல இருக்கீங்க? இதெல்லாம் மலை ஏறி போச்சு...

நல்லா கேட்டுக்குங்க... பீர் பீர் குடிச்சசலும் தப்புதானே? ;)

<<<
கபிலன் Says:
28/12/2009 14:21
"இதுவே, ஒரு திருடன் அல்லது கொலைகாரனைக்கூட இதே மாதிரி இயல்போடு நண்பனா ஏற்றுக் கொள்வாங்களா இவங்க? "
எனக்கு சரியா புரியலைங்க ஹுசைனம்மா. குடிகாரனையும், திருடனையும் ஒப்பிடுவதில் நியாயமே இல்லை. குடிப்பவர் தன்னுடைய இன்பத்திற்காக, தன்னுடலை வருத்திக் கொள்கிறார். மற்றவரை காயப் படுத்தவில்லை. இதுல தவறான குணம் என்று சொல்வதற்கு இடமே இல்லை. ஆனால், திருடனும், கொள்ளைக்காரனும் அப்படி இல்லை.
இதுல அந்த சமயத்தைச் சேர்ந்தவன் குடிப்பது இல்லை, இந்த சமயத்தைச் சேர்ந்தவர்ன் குடிப்பது இல்லை என்று கிடையாது. இஸ்லாமிய நாடுகளில் இவைகளுக்கு தடை இருந்தாலும், கள்ளச் சந்தையில் அமோக வியாபாரம் நடந்து கொண்டிருப்பது ஊரறிந்த ரகசியம்.
அடுத்தவரை தொந்தரவு செய்யாதவரை, புன்படுத்தாதவரை எல்லா பழக்கமும் நல்ல பழக்கம் தான் என்பது என் கருத்து. உடல் நிலை கெட்டுப் போகுது குடிக்காதீங்கன்னு சொல்லுங்க அது ஓகே. ஆனா, ஏதோ குடிகாரனை திருடனோட, கொள்ளைக்காரனோட கம்பேர் பண்றதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க.
>>>
வெல், கபிலன் சொன்னதையே நானும் வழிமொழிய ஆசைபடுறேன், ஆனால் புன்படுத்தாதவரை என்பதை புண்படுத்தாதவரை என்று இருந்தால்