Pages

2010 & 2011: டைரி & பிளானர்




 
 


விஜிஸ் கிரியேஷன்ஸின் விஜி அழைத்த தொடர்பதிவு இது.

பொதுவாகவே டைரி எழுதும் பழக்கமோ, புது வருட உறுதிமொழி எடுக்கும் பழக்கமெல்லாம் இல்லை எனக்கு. அதெல்லாம் நல்ல பழக்கமாச்சே!! ஆனால், இந்தத் தொடர்பதிவின் தலைப்பைப் பார்த்தபோது, நல்ல விஷயம்தானே எழுதுவோம் என்று நினைத்துச் சம்மதித்தேன். ஆனால், கிட்டத்தட்ட ஒரு மாசமா யோசிக்கிறேன்.. ம்ஹும்.. செஞ்சதாச் சொல்ல ஒரு பாயிண்டும் கிடைக்கலை.. என்னச் செய்யப் போறேன்னு யோசிச்சாலும் ‘ஞே’ தான்!!

இருந்தாலும் விட்டுடுவோமா நாம, படிக்காமலே 30-40 பக்கத்துக்கு காலேஜில எக்ஸாம் எழுதின அனுபவம் இருக்குல்ல!!
 
2001லன்னு நினைக்கிறேன், இந்தியாவின் மக்கள்தொகை ரொம்பப் பெருகிட்டு வருது, இது இந்தியாவின் வளர்ச்சிக்கு நல்லதில்லை, ஆ.. ஊ..ன்னு அலாரம் அடிச்ச ஊடகங்கள், இந்தியாவின் முதல் பில்லியனாவது குழந்தை இத்தனாவது நாள், இத்தனாவது மணிக்கு, இந்த ஊர்ல, இந்த ஆஸ்பத்திரியில் பிறக்கப் போகுதுன்னு கணக்குப் பாத்து (அது எப்படிங்க?) அறிவிச்சுட்டு, கரெக்டா அன்னிக்கு அங்க குழுமிட்டாங்க. நானும் படபடப்பா, அந்த துரதிர்ஷ்ட(??) குழந்தையைப் பெற்ற பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும், என்ன சொல்வாங்களோ,  அப்படின்னு நினைச்சுகிட்டே சோகத்தோட பாத்துகிட்டிருந்தேன்.

ஆனா, என்ன நடந்துச்சு தெரியுமா? ஒரு பெண் மத்திய அமைச்சர் கையில அந்த பில்லியனாவது குழந்தையைக் கொடுத்து “ஸ்வீட் எடு.. கொண்டாடு”ன்னு ஒரே ஆட்டம், பாட்டம்தான் போங்க!! ஒரு சின்னஞ்சிறு குழந்தை அந்தச் சூழ்நிலையையே மாற்றிவிட்டது!! இந்திய மக்கட்தொகை அதிகரிப்பது ஆபத்து என்று அறிவிக்க அங்கே கூடிய அனைவரும் அதையெல்லாம் மறந்து, குதூகலித்ததைப் பார்த்தால், மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கொண்டாடுவதுபோல எதிர்மறையாக ஆகிப்போனதுதான் காமெடி!!

சம்பந்தமில்லாம இது எதுக்கு இங்கேன்னா, ஒரு வருஷக் காலத்தில் எத்தனையோ நடந்திருக்கும். நல்லதிலும் கெட்டது உண்டு; கெட்டதிலும் நல்லது உண்டு என்பதாக, அவற்றின் மூலம் நாம் பெற்ற “புத்தி கொள்முதல்”களைத் தான் நினைத்துப் பார்த்துக் கொள்ளவேண்டும், இல்லையா?

உதாரணத்துக்கு, என் அலுவலகத்திலும் ரெஸெஷனால் வரிசையாக ப்ராஜக்டுகள் கைவிட்டுப் போக, கவலையோடு ஈயோட்ட ஆரம்பித்த நான், பதிவெழுதவும் ஆரம்பிக்க, மிக வித்தியாசமான கருத்துகள், அனுபவங்கள், அறிவுரைகள், அழிமானங்கள் என்று எல்லாம் கலந்த சங்கமமாகப் பதிவுலகைக் கண்டேன். இதுதான் என்றில்லாமல், அரசியல், விஞ்ஞானம், விவசாயம், சமையல் என்று எல்லா துறைகளிலும் பல்வேறு கண்ணோட்டங்கள், எனக்கு அவைகுறித்த பரந்த அறிவைத் தந்தன. ஒரு இழப்பில், ஒரு லாபம்!! (ஒருத்தரோட இழப்பு, இன்னொருத்தருக்கு லாபம்னும் கொள்ளலாம்!! :-))) )

என்னுடைய “ஃபேவரைட்”டுகளான (இயற்கை) விவசாயம், Three "R"s, உலக வெப்பமயமாதல், தண்ணீர் சிக்கனம் குறித்து நிறைய விழிப்புணர்வுத் தகவல்கள் கிடைக்கின்றன. ஒவ்வொருமுறை தண்ணீர் பைப்பைத் திறக்கும்போதும் இப்பதிவுகள் ஞாபகம் வந்து மிரட்டுகிறது!!  அதுபோல, விவசாயத்தைச் சின்ன அளவில் இப்பொழுதே நடைமுறைப்படுத்திப் பார்க்க ஆசை!! ஆனாலும், ”ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க” என்ற பழமொழியும் நினைவில் வந்துத் தொலைக்கிறது!! :-(

பதிவுலகிலக மற்றும் கல்லூரி நட்புகளை நேரில் சந்திக்க முடிந்தது இவ்வருடத்தில் பெரும் மகிழ்ச்சி தந்த நிகழ்ச்சி!!

சென்ற வருடத்தில், அறிந்த, தெரிந்த பலரும் ரிஸெஷனால் வேலையிழந்ததுதான் மிகவும் பாதித்ததென்றாலும், அனைவரும் வெவ்வேறு இடங்களில் மீண்டும் செட்டிலாகிவிட்டது மகிழ்ச்சியே!! உடல்நலப் பாதிப்புகள் இல்லாமலிருக்கும்வரை எதுவும் பெரிய இழப்பில்லை என்னைப் பொறுத்த வரை.  புதிதுபுதிதாய் வரும் நோய்களும், நடக்கும் விபத்துகள் மட்டுமே என்னைக் கலவரப்படுத்தியுள்ளன.

இப்படிக் கவலைக்குரிய விஷயங்களை யோசித்து யோசித்து எழுதுமளவுக்கு நிம்மதியான, நலமான வாழ்வைத் தந்த இறைவனுக்கு நன்றி!! அடுத்தடுத்த வருடங்களும் இதேபோல கவலைகளை யோசிக்கும் வாழ்வை இறைவன் தரவேண்டுமே என்பதைத் தவிர, தற்போது பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை!! அனைவருக்கும் இப்படியான நல்வாழ்வை எப்பொழுதும் தர வல்ல நாயனை வேண்டுகிறேன் .
 
 

Post Comment

52 comments:

Thenammai Lakshmanan said...

அட நான் மெயின் ஷீட்ல ரெண்டு பக்கம் எழுதும் போதே திடீர்னு எந்திரிச்சு அடிஷனல் ஷீட் வாங்கின ஆளு நீதானா..:)))))))))))))


சும்மா ஜாலிக்காக கலாய்ச்சேன் ஹுசைனம்மா..

(அக்கா படிச்சு கொஞ்ச வருஷம் கழிச்சுதான் நீங்க படிச்சிருப்பீங்க. ஆனா நான் எம் ஏ கரஸ்ல பண்ணும் போது ஒரு ஆள் இப்படித்தான் என்னை பயமுறுத்தினார்.. நான் எப்படி அவ்ளோ சீக்கிரம் மெயின் ஷீட்டை முடிச்சார்னு கேட்டா ., தெரியாதா.. தொலைதூரக் கல்வியில் படிச்சா பேப்பர் வெயிட் போட்டு அரை கிலோ இருந்தா 50 மார்க்கு கொடுப்பாங்கன்னாரே பார்க்கணும்..:))

Prathap Kumar S. said...

டச்சிட்டிங்க....:)

புதிய வருடத்தில் பத்து ஏக்கரில் ஊர்ல வாங்கிய நிலம் 20 ஏக்கராக மாற வாழ்த்துக்கள்..:)

ஹுஸைனம்மா said...

//நாஞ்சில் பிரதாப்™ said...
புதிய வருடத்தில் பத்து ஏக்கரில் ஊர்ல வாங்கிய நிலம் 20 ஏக்கராக மாற வாழ்த்துக்கள்..:)//

பத்து வருஷமா ஒரு வயல்/தோட்டம் வாங்கணுங்கிற ஆசை ஏக்கமாகவே ஆகிவிட்டது இப்போது. எப்போ நிறைவேறுமோ? இந்த வருடத்திலாவது உங்க வாக்கு பலிக்கட்டும்!! நன்றி வாழ்த்துக்கு!!

Vidhya Chandrasekaran said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள்:)

ஸாதிகா said...

//அடுத்தடுத்த வருடங்களும் இதேபோல கவலைகளை யோசிக்கும் வாழ்வை இறைவன் தரவேண்டுமே என்பதைத் தவிர, தற்போது பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை!// ஹுசைனம்மா..இங்கே..இங்கே தான் ஹுசைனம்மா நிக்கறீங்க.அட வயல்,தோட்டம் வாங்கனுன்னு ஆசையா?அடடா...வாங்கிவிட்டால் அவசியம் என்னையும் கூட்டிப்போய் காட்டுங்க.ஏன்னா வயல் ,வரப்பு என்று வாங்குவதற்கு ஆசை இல்லாவிட்டாலும் அந்த இயற்கை சூழ்நிலையை அனுபவிக்க ரொம்ப ஆசையா இருக்கு.

சாந்தி மாரியப்பன் said...

உங்களோட வயல்/தோட்டம் கனவு இந்த புத்தாண்டில் நிறைவேறட்டும்..

சிநேகிதன் அக்பர் said...

//உடல்நலப் பாதிப்புகள் இல்லாமலிருக்கும்வரை எதுவும் பெரிய இழப்பில்லை என்னைப் பொறுத்த வரை. புதிதுபுதிதாய் வரும் நோய்களும், நடக்கும் விபத்துகள் மட்டுமே என்னைக் கலவரப்படுத்தியுள்ளன. //

உண்மையான எழுத்து ஹுஸைனம்மா.

நீங்கதான் டிஜிட்டல் டைரி எழுதுறீங்களே ( வலைப்பூவை சொன்னேன் :))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//ஆனால், கிட்டத்தட்ட ஒரு மாசமா யோசிக்கிறேன்.. ம்ஹும்.. செஞ்சதாச் சொல்ல ஒரு பாயிண்டும் கிடைக்கலை.. //

உண்டு உறங்கி பதிவெழுதி பின்னூட்டமிட்டு.. எம்புட்டு சிரமமான ஒரு வருஷ வாழ்க்கைய இம்புட்டு எளிதா நீந்தி கடந்து வந்திருக்கோம்?? :))

vanathy said...

நல்லா இருக்கு பதிவு. நானும் எதையும் அவசரப்பட்டு புதுவருடத்தில் அது செய்வேன், இது செய்வேன்னு சொல்றதில்லை. எனக்குத் தெரியாதா என்னைப் பற்றி!!!

ஸ்ரீராம். said...

கடைசி பாரா அபாரம். கடந்துபோன நாட்களின் சந்தோஷத்தை வரும் நாட்களில் கிடைக்கும் சந்தோஷங்கள் மிஞ்சட்டும்.

எம்.எம்.அப்துல்லா said...

// உடல்நலப் பாதிப்புகள் இல்லாமலிருக்கும்வரை எதுவும் பெரிய இழப்பில்லை என்னைப் பொறுத்த வரை

//

well said.

ஆமினா said...

நல்ல பதிவு

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

உங்களது கனவு புத்தாண்டில் பலிக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

உங்கள் கனவு நினைவாக ஆண்டவ்ன் கிருபை புரியட்டும்.
அருமையாக எழுதி இருக்கீங்க

RAZIN ABDUL RAHMAN said...

சகோ ஹுஸைனம்மா..

தங்களின் இறையஞ்சிதலுக்கு எனது ஆமீன்..

அன்புடன்
ரஜின்

கோமதி அரசு said...

ஹீஸைனம்மா,வரும் புத்தாண்டு உங்கள் கனவை நனவாக்கட்டும். வாழ்த்துக்கள்!

கருணைக்கடல்,கற்பகவிருக்ஷம் இறைவன்.அவர் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார்.

வாழ்த்துக்கள்.

CS. Mohan Kumar said...

அருமை. பதிவுலக நட்பே கல்லூரி நண்பர்கள் போல கலக்கலா தான் இருக்கு

RAZIN ABDUL RAHMAN said...

//இறையஞ்சிதலுக்கு//

இறையஞ்சுதல்....எழுத்துப்பிழை...

pudugaithendral said...

சேம் ப்ளட் ஹுசைனம்மா,

எதுக்குன்னு கேக்கறீங்களா பேப்பர் திருத்தறவங்க போரடிச்சு போற அளவுக்கு 40-50 பக்கம் எழுதி தள்ளுவேன். :))

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

(ஒருத்தரோட இழப்பு, இன்னொருத்தருக்கு லாபம்னும் கொள்ளலாம்!! :-))) )


இதை உங்க மேனேஜ்மெண்ட் படிக்கனும் :))))

உதாரணத்துக்கு, என் அலுவலகத்திலும் ரெஸெஷனால் வரிசையாக ப்ராஜக்டுகள் கைவிட்டுப் போக, கவலையோடு ஈயோட்ட ஆரம்பித்த நான், பதிவெழுதவும் ஆரம்பிக்க //

உங்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை பார்த்தீங்களா, நானும் இப்படி ஒரு ஈ ஓட்டும் பொழுதில் தான் ப்லாகுக்கு வந்தேன் ;)

தூயவனின் அடிமை said...

Aim in the life.Advance cong.

ADHI VENKAT said...

உங்கள் ஆசைகள், கனவுகள் அனைத்தும் நிறைவேற ஆண்டவன் அருள் புரியட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

தேனக்கா - வாங்க; ஆமாக்கா, கரஸ் & பார்ட்-டைம் படிக்கிறவங்க பாடு கொஞ்சம் கஷ்டம்தான். திருத்துறவங்க ரொம்ப லீனியண்டா திருத்துவாங்களாம்.

பிரதாப் - வாங்க; நன்றி.

வித்யா - புத்தாண்டு வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - இன்ஷா அல்லாஹ் வாங்கினதும் கண்டிப்பா அங்கே ஒரு ‘பதிவர் சந்திப்பு’ வச்சிடலாம்க்கா!!

அமைதிச்சாரல்க்கா - நன்றிக்கா!!

அக்பர் - //டிஜிட்டல் டைரி// - அட, ஆமாம்ல? நன்றி.

ஹுஸைனம்மா said...

எல் போர்ட் - ஆமா, பதிவெழுதுறதுதான் சிரமமான வேலை!!

வானதி - ஆமா, நாமெல்லாம், “சொல்லாதே; செய்”தான்!!

ஸ்ரீராம் சார் - நன்றி!!

ஹுஸைனம்மா said...

அப்துல்லா - எங்கே ஆளையேக் காணோம்? மறுபடியும் பிஸியா இல்லை டூரா?

ஆமினா - நன்றி.

வெங்கட் சார் - நன்றி!!

ஜலீலாக்கா - நன்றிக்கா.

ரஜின் - நன்றி.

ஹுஸைனம்மா said...

கோமதிக்கா - நிச்சயம் நிறைவேற்றித் தருவான் இறைவன். நன்றிக்கா.

மோகன்குமார் - ஆமா, கல்லூரிக்காலம் போலவே எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நட்புகள்.

புதுகைத் தென்றல் - ஆஹா, நீங்களும் அதேதானா? நான் இந்த டெக்னிக்கை மூணாவது செமெஸ்டர்லதான் கண்டுகிட்டேன்!!

ஹுஸைனம்மா said...

அமித்தம்மா - மேனேஜ்மெண்ட் தந்த பதிலை அடுத்த பதிவுல சொல்றேன் சரியா?
பாருங்க, நாம ரெண்டு பேருமே ஃபிரீ டைமையும் யூஸ்ஃபுல்லா பயன்படுத்துறோம்!! :-)))

ஹுஸைனம்மா said...

தூயவன் - நன்றி.

கோவை2டில்லி - ரொம்ப நன்றிங்க.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!

Anonymous said...

wonderful blog and writeup...fantastic. I have so much to read here and will be a regular on your posts....great work.
Reva.

Unknown said...

பதிவு அருமை.
உங்களுடைய கனவு இந்த புத்தாண்டில் நிறைவேற வாழ்த்துக்கள்..

Anonymous said...

//எதுக்குன்னு கேக்கறீங்களா பேப்பர் திருத்தறவங்க போரடிச்சு போற அளவுக்கு 40-50 பக்கம் எழுதி தள்ளுவேன். :))//
அடப்பாவிங்களா? பாவம் உங்க லெகசரர்மார். =))

அன்புடன் அருணா said...

கனவுகள் நனவாக பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்!

நிலாமதி said...

புத்தாண்டு இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

சண்முககுமார் said...

அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

ப.கந்தசாமி said...

ஆஹா, உங்க பிளாக்கை கண்டு பிடித்துவிட்டேன். கமென்ட் போடற எடத்தைக் கண்டுபிடிக்கத்தான் சற்று நேரமாகி விட்டது.

நலமா? ஊர்ல நெலம் வாங்கிருக்கீங்க போல. சொல்லவேயில்ல?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இருந்தாலும் விட்டுடுவோமா நாம, படிக்காமலே 30-40 பக்கத்துக்கு காலேஜில எக்ஸாம் எழுதின அனுபவம் இருக்குல்ல//

நீங்களுமா? ஹா ஹா... சேம் ப்ளட்....

சூப்பர் டைரி... பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா... உங்கள் வயலும் வாழ்வும் ஆசை இந்த புது வருடத்தில் நிறைவேற எனது வாழ்த்துக்கள். எனக்கும் அந்த ஆசை உண்டு...

Vijiskitchencreations said...

ஹுஸைனம்மா. ரொம்ப நல்லா எழுதிடிங்க. என் அழைப்பை ஏற்று உங்க பிஸியான டைம்மில் எழுதியது எனக்கு மிக பெருமையாகவும்,சந்தோஷமாகவும் இருக்கு.

அதைவிட எனக்கு பிடித்தது பக்கம் பக்கமா எழுதி தள்ளுவது தான் நானும் காலேஜ் படிக்கும் போது கடைசி டைம் வரை எழுதிகுடுத்திருக்கேன்.

வரும் புத்தாண்டில் எல்லா எண்ணங்களும் ஆசைகளும் நிறைவேற இறைவன் அருள் புரிவார்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்வில் எல்லா வளமும் பெற இறைவன் அருள் புரிவார்.

நன்றி நன்றி என் தொடர்பதிவை ஏற்று எழுதியது எனக்கு மிக சந்தோஷமாக இருக்கு.

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு:)!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹுஸைனம்மா!

ஹைஷ்126 said...

அருட்பேராற்றலின் கருணையினால்

தங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்

இப் புத்தாண்டு முதல்

உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்

பெற்று வாழ்க வளமுடன்.

எல் கே said...

எனக்கும் டைரி எழுதறப் பழக்கம் லேது. உங்கள் ஆசைகள் புது வருடத்தில் நிறைவேறட்டும்

எல் கே said...

@தேனக்கா

மத்தவங்க அடிஷனல் சீட் வாங்கும் பொழுது பேப்பரை கட்டி கொடுத்துவிட்டு வரும் ஆள் நான். (விஷயம் இருந்தாதான எழுத )

venkat said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எம் அப்துல் காதர் said...

இந்த வருஷத்து புது டைரி வாங்கியாச்சா? வயல் எல்லாம் வேணாம். தோட்டம் ஏதாச்சும் வாங்கி போடுங்க. மாங்கா தேங்கா மரமிருந்தால் கூடுதல் வசதி. காசுக்கு காசு. ஊரில் போய் உட்காருகிற காலத்தில் பொழுதும் போகும். :-)))

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

enrenrum16 said...

இன்று போல் என்றும் சந்தோஷமாய் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட உங்க கனவு நனவாகட்டும்..வாழ்த்துக்கள்..

அமித்தும்மாக்கும் உங்களுக்கும் வேலை இல்லைன்னா வருவீங்களா.. நல்லா இருக்கே..அப்ப் வேலை வந்தா எங்களை எல்லாம் மறந்துராதீங்கம்மா..:)

Thamiz Priyan said...

நாங்களும் ஆடு, மாடு, மரங்கள் எல்லாம் நிறைய வச்சு பெரிய நிலப்பரப்பில் விதை போட்டு அறுவடை செய்து விவசாயம் பண்றோமே.. ஹிஹிஹி பார்ம்வில்லே பேஸ்புக்கில்.. ;-)

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்

வல்லிசிம்ஹன் said...

நல்ல டயரி எழுதி முடிச்சிருக்கீங்க. உங்கள் கனவுகளும் ஆசைகளும் இறைவன் எண்ணப்படி நிறைவேறும் ஹுசைனம்மா. லேட்டாகப் புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்ளுகிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

நாம் பெற்ற “புத்தி கொள்முதல்”களைத் தான் நினைத்துப் பார்த்துக் கொள்ளவேண்டும், //
sure. வாழ்த்துக்கள்..: