Pages

பேபி... மாதாஜி!!!





வந்தாச்சு... இறையருளால் நல்லபடியா எல்லாம் நலமே முடிச்சு வந்தாச்சு. என்னாலும் முடியுமா என்றிருந்தேன்.. ஏகனை நோக்கிய எல்லாரின் பிரார்த்தனைகளும் உறுதுணையாய் இருந்து உதவின என்றுதான் சொல்ல வேண்டும்.

போய் வந்து ரெண்டு வாரமாகுது. ஆனாலும் இன்னும் அந்த பிரமிப்பு, பரவசம், மகிழ்ச்சியிலிருந்து விடுபட முடியவில்லை. பதிவு எழுதலாம் என்று நினைத்தால், எங்கு தொடங்க, எதை எழுத, எதை விட என்று பிடிபடாத நிலை. எல்லாவற்றையும் எழுதினால் தொடராகவே ஆகிவிடும்.

இந்த வருட நோன்பில் (ஆகஸ்ட்) திடீரென ஒரு நாள் ஹஜ்ஜுக்குப் போவோம்னு முடிவெடுத்து, தனியார் ஹஜ் பயண நிறுவனங்களில் விசாரித்து,  பதிவு செய்து, விஸா வரத் தாமதமாகி, புறப்படும் நாள் வரை இந்த வருடம் போவோமா மாட்டோமோ என்று சஸ்பென்ஸாகவே இருந்து, பின் இறைநாட்டத்தால் எல்லாம் கைகூடி... இதோ போய்ட்டு வந்தும் ஆச்சு. ஹஜ் செய்ய ஆசைப்பட்டு, வருடக்கணக்கில் காத்திருப்பவர்கள் இருக்க, ஒரே நாளில் எங்களை முடிவெடுக்க வைத்து, புறப்படச் செய்த இறைவனின் கருணை... என்னவென்று சொல்ல...


முதலில் மதீனா... ஒரு ஏகாந்த அமைதியுடன் காணப்படும் நகரம். நான்கு நாட்கள் அங்கு தங்கிவிட்டு, பின் மக்கா. எப்பொழுதும் பரபரப்பும், சுறுசுறுப்புமாய் இருக்கும் தூங்கா நகரம். இரு நகர்களிலும் முக்கியமான பள்ளிவாசல்கள் உண்டு. ஹஜ் காலங்களில், இரண்டிலும் தினமும் தொழுகைக்காக, ஐந்து நேரமும் மில்லியன் கணக்கில் மக்கள் வெள்ளம் காணப்படும். என்றாலும், பள்ளி வளாகங்களில் எங்கு நோக்கினும் சுத்தம், சுத்தம், பளிச்சிடும் சுத்தம்தான்!! (பிரார்த்தனைகளைப் பத்திச் சொல்லாம, சுத்தத்தைப் பத்தி ப்ரஸ்தாபிக்கிறாளேன்னு நினைப்பீங்க. சுத்தம்தானே பிரார்த்தனையின் முதல் பகுதி!! "Cleanliness is next to Godliness" இல்லையா? )


கூட்டம், கூட்டமாய் மக்கள். உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் ஆட்கள் உண்டு. மொழி, உணவு, உடை, பழக்கவழக்கம் என்று எல்லாவற்றிலும் வேறுபட்டவர்களாயிருந்தும், ஒரே இறைவனை நோக்கிய ஒரே பிரார்த்தனை முறை எனப் பிரமிக்க வைத்தனர்!! அரசாங்கக் குறிப்பின்படி, வெளிநாட்டினர் மட்டுமே 30 லட்சம்பேர் என்றாலும், மொத்தம் 35 லட்சம்பேருக்கும் அதிகம்  இருந்திருக்கலாம். எனினும்,  அலங்கார வளைவுகள், டிஜிட்டல் பேனர்கள், சீட்டுக்கச்சேரி, டாஸ்மாக் அலம்பல்கள், காதைச் செவிடாக்கும் ஸ்பீக்கர்கள், பெண்களைக் குறிவைக்கும் கும்பல்கள்,  கேமராக் கோணங்கள், நாராசக் காலர் ட்யூன்கள்,  முன்னுரிமை சிபாரிசுகள், முதல் மரியாதைகள், டொனேஷன் புக், உண்டியல் குலுக்கல்கள், பிரியாணிப் பொட்டலங்கள் என்று கவனத்தைச் சிதறடிக்கும் எதுவும் இல்லாமல், மனதை பிரார்த்தனையில் மட்டுமே ஒருமுகப்படுத்தத் தோதானச் சூழல். 

வருடாவருடம் பெருகிவரும் புனிதப் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சவூதி அரசு செய்யும் பிரம்மாண்டமான வசதிகள் வியப்பளிக்கின்றன. நெரிசலைத் தவிர்க்க செய்யப்படும் அவர்களின் முயற்சிகள் பலனளித்து வருவதும் மகிழ்ச்சி.   இந்த வருடமும், வந்த இடத்தில் உடல்நலமில்லாமல் போன ஹஜ் பயணிகளுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்திருக்கின்றனர்.  மருத்துவமனையில் படுக்கையில் இருப்பவர்களில் பலரை அரசே  தன் செலவில், ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சர்களிலேயே ஊழியர்கள் துணையோடு  ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற உதவியுள்ளது. சும்மா இல்லை சவூதி அரசாங்கம் செல்வத்தில் கொழிப்பது - தொட்டனைத் தூறும் மணற்கேணி!!

கவனத்தைக் கவர்ந்த இன்னொரு விஷயம் - முதியவர்கள்!! நெகிழவும், பல சமயங்களில் கலங்கவும் வைத்தனர். தம்பதியராய் வந்திருந்த முதியவர்கள், ஒருவருக்கொருவர் கைப்பிடித்து ஆதரவாய் தாங்கிச் செல்வது கண்கொள்ளாக் காட்சி. தனியே வந்திருந்த முதியவர்கள் - ஆண்களே பெரும்பாலும் - தட்டுத்தடுமாறிச் செல்லும்போது நம்மைத் தவிக்கவும் வைக்கின்றனர். ஒருமுறை என்னருகே சென்ற முதியவரொருவர், பெருந்தொலைவு நடந்த களைப்பினால் நிலைதடுமாறி விழப்போக, நான் இருமுறை பிடித்துத் தூக்கிவிட்டும், தள்ளாடியவாறே நடந்து சென்றது இன்னும் கண்களுக்குள்ளேயே நிற்கிறது. காலத்தே என் துணையோடு கடமையை நிறைவேற்ற வைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும், நன்றியும்.

உடன் வந்திருந்த என் மாமியாரை நாங்கள் வீல்சேரில் அழைத்துச் செல்லும்போதெல்லாம், வழியில் காணும் பல முதியவர்களின் பார்வைகளில் ஏக்கம் வெளிப்படையாகத் தெரியும். சிலர் என் கணவரைத் தட்டிக்கொடுத்து, அவர்கள் மொழியில் பாராட்டவும் செய்தனர்.

அடுத்த அதிசயம் - ஸம்ஸம் ஊற்று நீர்!! வந்திருந்த 35 மில்லியன் மக்களும் திரும்பிச் செல்லும்போது, குறைந்த பட்சம் 10லி ஸம்ஸம் நீர் தம்மோடு எடுத்துச் செல்வார்கள். மேலும், ஒவ்வொருவரும் அங்கிருக்கும் அனைத்து நாட்களும் (10 முதல் 40 நாட்கள்) அந்நீரையே பருகவும் பயன்படுத்துவார்கள். எனினும்  வற்றாத இறைவன் கருணையாய் அந்த ஊற்றும்!!

இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்!! ஹஜ்ஜின் ஐந்து நாட்களில் மினா என்ற இடத்தில் கூடாரத்தில் தங்க வேண்டும். ஜனத்திரள் காரணமாய், ஒருவருக்கு ஆறடி இடமே கிடைக்கும். அதாவது படுத்துறங்க மட்டும்!!  உலகில் நீ எவ்வளவு இடம் சேர்த்தாலும், கடைசியில் தேவைப்படுவது ஆறடி நிலமே என்று உணர்த்துவது போலிருந்தது. இப்படி இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம். மொத்தத்தில், அந்த ஐந்து நாள் பரதேச வாழ்வு ஒரு பற்றற்ற நிலை வரவைக்கும்.

இதைச் சொல்லும்போது சென்ற வாரம் பேசிய ஒரு தோழி கேட்டது நினைவுக்கு வருகிறது. “ஹஜ்ஜுக்குப் போய்ட்டு வந்தப்புறம் கிட்டத்தட்ட ஒரு துறவு வாழ்க்கைத்தான் வாழணுமாமே? டிவிகூடப் பார்க்கக் கூடாதாம். நீங்கவேற சின்ன வயசிலேயே போய்ட்டீங்க. கஷ்டமாருக்குமே?” என்று கேட்டார்!!  அவ்வ்வ்... விட்டா என்னையும் “மாதாஜி” ஆக்கிடுவாங்க போலன்னு பதறி, ”அப்படிலாம் இல்லை. ஹஜ்ஜுக்குப் போனாலும் போகலையின்னாலும் எப்பவுமே வாழ்க்கையில ஒரு கட்டுப்பாடு இருக்கணும். நல்லது கெட்டது அறிஞ்சு நடக்கறது எப்பவுமே அவசியம்தான்”னு  அவசரமா  விளக்கம் சொன்னேன்.

ஆனாலும், என் சின்னவன் “ம்மா, நீ இப்ப ஒரு நியூ பேபி மாதிரி, தெரியுமா?”வென்று கேட்டது, கூடுதல் கவனம் வேண்டுமென்பதையே உணர்த்தியது.


குறிப்பு:  ஒருவர் செய்த ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவரது பாவங்கள் மன்னிக்கப்பெற்று, அன்று பிறந்த குழந்தையைப் போல ஆகிவிடுவார் என்பது நபிமொழி.

Post Comment

78 comments:

ஸாதிகா said...

காலத்தே என் துணையோடு கடமையை நிறைவேற்ற வைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும், நன்றியும்.//உண்மைதான் ஹுசைனம்மா.இறைவன் அந்த தருணத்தை எனக்கு எப்பொழுது தரப்போகின்றானோ?இரு வருடங்களாக முயன்றும் நிறைவேற்ற இயலவில்லை.என் கணவரின் தம்பி,என்னுடைய தம்பிகள் தங்கை கடமையை நிறைவேற்றிய பொழுதும் எங்களுக்கு மட்டும் முடியாமலே உள்ளது.

கஃபாவை நோக்கும் பொழுது எங்களுக்காக பிராத்தித்தீர்களா?


ஆனாலும், என் சின்னவன் “ம்மா, நீ இப்ப ஒரு நியூ பேபி மாதிரி, தெரியுமா?”வென்று கேட்டது, கூடுதல் கவனம் வேண்டுமென்பதையே உணர்த்தியது.////
:)

ஆமினா said...

அல்ஹம்துலில்லாஹ்...

மிக்க மகிழ்ச்சி நியூபேபி :-)

அனுபவம் கேட்க மகிழ்ச்சிகரமாக இருந்தது.

ராமலக்ஷ்மி said...

முதியவர்களைப் பற்றிய பகிர்வு நெகிழ வைத்தது. யாத்திரை குறித்து சிறப்பான பதிவு. பேபி மாதாஜிக்கு எங்கள் நன்றி:)!

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள்....ஹஜ் தந்த அனுபவங்களைச் சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஹஜ் மப்ரூக் சகோ.ஹுசைனம்மா..!
ஹஜ்ஜே மப்ரூர் இன்ஷாஅல்லாஹ்..!

அரபுத்தமிழன் said...

பெண்களுக்கான ஜிஹாதை வெற்றிகரமாக நிறைவேற்றித்
திரும்பியுள்ள பேபி ஹுசைனம்மா நாச்சியாரை வருக‌
வருகவென வரவேற்கிறோம். இனி குழந்தைகளுக்கான‌
பதிவுகள் அதிகம் தர வேண்டுமெனக் கேட்டுக் கொ(ல்)கிறோம்.

Unknown said...

ஸலாம்

இன்ஷா அல்லாஹ் ... உங்கள் ஹஜ்ஜை ஏற்று உங்கள் பாவங்களை இறைவன் மன்னிக்க வேண்டுகிறேன் ..

அப்ப நீங்க பாவம் செய்யாத புது குழந்தை ...

//இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது; இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது //

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சிறப்பான அனுபவ பகிர்வு

//பள்ளி வளாகங்களில் எங்கு நோக்கினும் சுத்தம், சுத்தம், பளிச்சிடும் சுத்தம்தான்!!///

முஹம்மது நபி (ஸல்) அருளினார்கள்
(நாத(f)பா மினல் ஈமான்)
தூய்மை சுத்தம் அது ஈமானில் பாதி

சுத்தம் இல்லாதவனிடம் ஈமான் முழு அளவில் இருக்காது

தெளிவாக அழகாக பகிர்ந்துள்ளீர்கள் நன்றி சகோ

வெங்கட் நாகராஜ் said...

பகிர்வு நெகிழ வைத்தது.....

இது ஒரு புனிதமான பயணம் அல்லவா! அந்த மகிழ்ச்சி உங்கள் எழுத்திலும் தெரிகிறது... வாழ்த்துகள்....

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துகள்.....

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அல்ஹம்துலில்லாஹ்! ஹஜ் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு
ஜஸாகல்ல்லாஹ் கைரன்

//குறிப்பு: ஒருவர் செய்த ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவரது பாவங்கள் மன்னிக்கப்பெற்று, அன்று பிறந்த குழந்தையைப் போல ஆகிவிடுவார் என்பது நபிமொழி.//

அந்த பாக்கியத்தை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் வழங்க போதுமானவன்!

ரிஷபன் said...

ஹஜ்ஜுக்குப் போனாலும் போகலையின்னாலும் எப்பவுமே வாழ்க்கையில ஒரு கட்டுப்பாடு இருக்கணும். நல்லது கெட்டது அறிஞ்சு நடக்கறது எப்பவுமே அவசியம்தான்

அர்த்தமுள்ள வரிகள்.
ஹஜ் நல்லபடி முடிச்சு வந்ததில் மகிழ்ச்சி.

Avargal Unmaigal said...

இஸ்லாத்தின் கடமையை சிறுவயதில் நிறைவேற்றி அனுபவத்தில் பெருமகளாகி இனிய பயணத்தை முடித்து வந்திருக்கும் ஹுசைனம்மா உங்களை பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்..எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவதில்லை. ஆனால் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தமைக்கு எனக்கு மிக சந்தோசமாக இருக்கிறது..உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !!!!!!!!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///காலத்தே என் துணையோடு கடமையை நிறைவேற்ற வைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும், நன்றியும்.///

---ஹஜ் சென்று வந்த ஒவ்வொருவரும் நினைப்பதும், இறைவனுக்கு நன்றி கூறுவதும், மற்றவருக்கு தவறாமல் சொல்வதும் இதுதான். அனுபவம்.தாங்கள் இவ்வளவுநாள் ரெஸ்ட் எடுக்கும்போதே தெரியும்..!

ஆகவே... அனைவருக்கும் சொல்லப்படு

ம் செய்தி, இறுதிக்கடமைதானே என்று ஹஜ்ஜை வாழ்க்கையின் வயோகத்திற்கு ஒத்தி வைத்து விடாதீர்கள். சிரமப்பட வேண்டி இருக்கும். எல்லாருக்கும் வீல் சேர் தள்ள மகன்/மருமகள் கிடைப்பது இல்லை.

தராசு said...

congrats

ஷர்புதீன் said...

:-)

தராசு said...

அப்ப இனிமே சண்டைக்கு வரமாட்டீங்களா????

((((((((((

VANJOOR said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஹஜ்ஜம்மா !

ஹஜ்ஜா ஹுஸைனம்மா!!

வாழ்த்துக்கள்.

நினவை கிளறிவிட்டது உங்கள் பதிவு.

1995 ல் குடும்பத்துடன் உம்ரா நிறைவேற்றி

1996 ல் குடும்பத்துடன் ஹஜ் கடமை முடித்து

பின் தொடர்ந்து குடும்பத்துடன் வருடாவருடம் 10 வருடங்கள்
தொடர்ச்சியாக உம்ரா நிறைவேற்ற உடல் நலத்தையும்
பொருளாதாரத்தையும் எனக்கருளிய வல்ல நாயனின்
பேரருளை எண்ணி ஆனந்த கண்ணீர் பெருகுகிறது.

ஸுக்கூர் அல்ஹம்துலில்லாஹ்.



வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

புதுகை.அப்துல்லா said...

அல்ஹம்துலில்லாஹ்! makes feel me so happy. though i have gone there many times still my eager is endless. pls pray for me to go there again and again.

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்.....
சகோ மார்கத்தின் ஐந்தாவது கடமையாகிய
" ஹஜ் " ஐ நிறைவேற்ற வாய்ப்பு நல்கிய
இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்.....
சகோ மார்கத்தின் ஐந்தாவது கடமையாகிய
" ஹஜ் " ஐ நிறைவேற்ற வாய்ப்பு நல்கிய
இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்

சென்னை பித்தன் said...

//ஹஜ்ஜுக்குப் போனாலும் போகலையின்னாலும் எப்பவுமே வாழ்க்கையில ஒரு கட்டுப்பாடு இருக்கணும். நல்லது கெட்டது அறிஞ்சு நடக்கறது எப்பவுமே அவசியம்தான்”//
உண்மைதான்.

வாழ்த்துகள்.

Rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஹஜ் கிரியைகளை விளக்கமாக சொல்லிய விதம் அருமை


" அடுத்த அதிசயம் - ஸம்ஸம் ஊற்று நீர்!! வந்திருந்த 35 மில்லியன் மக்களும் திரும்பிச் செல்லும்போது, குறைந்த பட்சம் 10லி ஸம்ஸம் நீர் தம்மோடு எடுத்துச் செல்வார்கள்."

இதில் 35 மில்லியன் எனக்குறிப்பிட்டு இருக்கிறீர்கள் அது 3.5 மில்லியன் அல்லது 35 லட்சம் என இருக்க வேண்டும் என நினைக்கிறேன்
நல்லதோர் பதிவை அளித்தமைக்கு
ஜஸாக்கல்லாஹ் கைரன்

Mohamed Faaique said...

வாழ்த்துக்கள்...
எமக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்க பிரார்த்தியுங்கள்

ஜெய்லானி said...

//ஹஜ் செய்ய ஆசைப்பட்டு, வருடக்கணக்கில் காத்திருப்பவர்கள் இருக்க, ஒரே நாளில் எங்களை முடிவெடுக்க வைத்து, புறப்படச் செய்த இறைவனின் கருணை... என்னவென்று சொல்ல..//

மாஷா அல்லாஹ்...!! :-)

மூன்று வருடம் அதே நாட்டில் இருந்தும் முடியவில்லை , 15.வருடம் இதே நாட்டில் முயன்றும் (சில காரனங்களால்) முடியவில்லை....!!.
மற்ற கடமைகளை மட்டும் தொடர்ந்து வருகிறேன் .


உங்க(குடும்பத்தாரு)ளுடைய ஹஜ் , ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக இருக்க துவா செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் :-)

ஹஜ் மப்ரூக்...!!

ஜெய்லானி said...

//காலத்தே என் துணையோடு கடமையை நிறைவேற்ற வைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும், நன்றியும்.//


:-)

Prathap Kumar S. said...

புது பேபி தானே நீங்க....அப்போ இனிமே பதிவு எழுதி திரும்பவும் பாவத்தை சம்பாதிக்காதிங்க.... இத்தோட விட்ருங்க :)

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஹுஸைனம்மா... அடடே...ஹஜ் கடமையை இறைவனின் நாட்டத்தால் முடித்துவிட்டு வந்துவிட்டீர்கள்...அல்ஹம்துலில்லாஹ்
இந்த நற்செய்தியை படிக்கவும்,மிகவும் சந்தோஷமாக இருந்தது.அதை விட உங்கள் அனுபவத்தை படிக்க படிக்க உடம்பே ஏனோ சிலிர்த்து போனது....
நான் 2001-ல் இதே போல் மாமியாரை அழைத்துக் கொண்டு ஹஜ் செய்ய துபாயிலிருந்து ஏற்பாடு செய்து முடியாமல் போக உம்ராவை மட்டுமே செய்ய முடிந்தது.உங்கள் அனுபவத்தை படிக்கும்போது அவை காட்சிகளாகவே தெரிந்தது.
இந்த பாக்கியம்,இறைவனுடைய நாட்டம் இவையெல்லாம் எல்லோருக்கும் கிடைக்க இறைவனிடம் துஆ செய்யுவோம்...

என்றும் அன்புடன்,
அப்சரா.

நட்புடன் ஜமால் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல் ஹம்துலில்லாஹ் நல்லதொரு கடமையை முடித்து வந்துள்ளீர்கள்

எங்களுக்காகவும் துவா செய்யுங்கள்

நிச்சியம் ஒரு மாற்றம் உங்களிடம் எதிர்ப்பார்க்கலாம் ...

துளசி கோபால் said...

மனது விரும்பி ஏங்கும் 'புண்ணிய தல யாத்திரை' நிறைவேறிட்டால்....... ஏற்படும் பிரமிப்பு லேசில் அடங்காதுப்பா. அந்த திருப்தியை வெளியில் முழுவதுமாச் சொல்லக்கூடச் சொற்கள் கிடைக்காது.

சுத்தம் பற்றிய குறிப்பு மனம் நிறைந்தது. நானும் எங்கே போனாலும் சுத்தத்தைக் கவனிக்காம இருக்கமாட்டேன்.

பதிவு அருமை.

பேபி மாதாஜி இப்ப ஒரு ஹாஜியாரா?

அஸ்மா said...

அஸ்ஸலாமுஅலைக்கும் ஹுஸைனம்மா! ஹஜ் கடமையை சிறப்பாக நிறைவேற்றிவிட்டு வந்தமைக்கு, அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் உங்களது ஹஜ்ஜை ஏற்றுக்கொள்ளவும், எங்களுக்கும் விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன். நீங்களும் எங்களுக்காக‌ துஆ செய்யுங்கள்.

CS. Mohan Kumar said...

Good to know this. Happy for you Maathaaji !

கோமதி அரசு said...

என் துணையோடு கடமையை நிறைவேற்ற வைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும், நன்றியும்.

உடன் வந்திருந்த என் மாமியாரை நாங்கள் வீல்சேரில் அழைத்துச் செல்லும்போதெல்லாம், வழியில் காணும் பல முதியவர்களின் பார்வைகளில் ஏக்கம் வெளிப்படையாகத் தெரியும். சிலர் என் கணவரைத் தட்டிக்கொடுத்து, அவர்கள் மொழியில் பாராட்டவும் செய்தனர்.//

மாமியாரின் ஆசியும்,
எல்லோருடைய பாராட்டும், இறைவனின் ஆசியும் நிச்சியம் உங்களுக்கு உண்டு ஹீஸைனம்மா.


அருமையாய் சொன்ன பேபி மாதாஜிக்கு நன்றி.

பேபிக்கு வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

்மாஷா அல்லாஹ் நல்லபடியா ஹஜ் கடமை நி்றைவேறியதஅ.

படிக்கும் போதே உட்ம்பு சிலிர்க்கிற்து.


நீங்க ஒரே நாளில் முடி்வெடுடத்தது போல் தான் ந்ாங்க உம்ரா போனொதும் கடைசி நிமிடம் ் வரை ரொம்ப சஸ்பென்சாவே இருந்தது.



//காலத்தே என் துணையோடு கடமையை நிறைவேற்ற வைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும், நன்றியும்.//மிக்ச்சரியே.

உங்க மாமியாரையும் கூப்பிட்டு சென்றீர்களா?பரவாயில்லை நல்ல பாக்கி்யம். உங்கள் கணவர்ுக்கு மிகுந்த நன்மை.

RAMA RAVI (RAMVI) said...

இறைவனின் கருணையால் தங்களின் ஹஜ் பயணம் நல்ல விதமாக முடிந்தது பற்றி மிகவும் சந்தோஷம் ஹுஸைனம்மா.

ஹஜ் பயணம் பற்றிய மிகவும் அருமையாக விளக்கி இருக்கீங்க.நல்ல பதிவு நன்றி பகிர்வுக்கு.

சாந்தி மாரியப்பன் said...

//ஹஜ்ஜுக்குப் போனாலும் போகலையின்னாலும் எப்பவுமே வாழ்க்கையில ஒரு கட்டுப்பாடு இருக்கணும். நல்லது கெட்டது அறிஞ்சு நடக்கறது எப்பவுமே அவசியம்தான்//

ரொம்பவே கரெக்டா சொல்லியிருக்கீங்க பேபி மாத்தாஜி :-))

வல்லிசிம்ஹன் said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் ஹுசைனம்மா. அமைதியான யாத்திரை .இவ்வளவு லட்சம் மக்கள் பிரார்த்திக்கும்போது அந்த இறைவன் உலக நலத்தையே கொடுப்பார்.

ADHI VENKAT said...

ஹஜ் யாத்திரையை நல்லபடியாக முடித்து வந்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
நானும் சுத்தம் தான் முதலில் பார்ப்பேன். முதியவர்கள் பற்றி கூறியது மனதை நெகிழ வைத்தது.

Anisha Yunus said...

அஸ் ஸலாமு அலைக்கும் அக்கா,

அல்ஹம்துலில்லாஹ் ரப்பில் ஆலமீன். நீங்களும் உங்கள் அன்பின் உறவுகளும் ஹஜ்ஜை செவ்வனே முடித்து, நலமுடன் திரும்பி வந்தது, மகிழ்ச்சியிலும் மிகுந்த மகிழ்ச்சி. இன்னும் எவ்வளவோ எழுத மனம் எண்ணுகிறது. ஆனால், உங்களின் அளவிலா மகிழ்ச்சியை பதிவின் மூலமே கண்டதில் எனக்குள்ளும் ஆனந்தம் தளும்பி நிற்கிறது, வார்த்தைகள் வெளி வர மறுக்கிறது. அல்ஹம்துலில்லாஹ் அக்கா.... உங்களின் எல்லா து’ஆக்களும் கபூல் செய்யப்பட்டு, அல்லாஹு ரப்புல் ஆலமீன் இந்த வருடம் ஹஜ் செய்த எல்லோரின் ஹஜ்ஜையும் கபூல் செய்து தருவானாக,. ஆமீன். ஆமீன். சும்ம ஆமீன்.

உங்களின் சிறிய மகன் சொன்னது போல நீங்கள் இப்பொழுது நியூ பேபியே, எனவே இன்னும் இன்னும் அதிக நன்மைகளை நாடிக்கொள்ளுங்கள், தேடிக்கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ், நாம் தேடிய வண்ணம் நமக்கு கூலி தர இறைவன் போதுமானவன். ஹஸ்புனல்லாஹ்...

Mahi_Granny said...

வாசிக்கும் போதே உங்களின் உற்சாகத்தையும் திருப்தியையும் உணர முடிகிறது. இது தான் புனிதப் பயணத்தின் வெளிப்பாடு. welcome பேபி... மாதாஜி !!!

Ahamed irshad said...

அஸ்ஸ‌லாமு அலைக்கும்,

மிக்க‌ ச‌ந்தோஷ‌ம்..ஹ‌ஜ்ஜீக்கு போய்ட்டு ப‌திவு அழ‌கு ப்ள‌ஸ் ப‌ர‌க்க‌த்..இன்ஷா அல்லாஹ் நிய்ய‌த் இருக்கிற‌து கூடிய‌ விரைவில் ஹ‌ஜ்ஜீக்கு செல்ல‌..

sri said...

ALL GLORY BE TO HIM,THE MOST MERCIFUL !
well shared dear sister!

sri said...

ALL GLORY BE TO HIM,THE MOST MERCIFUL!
well shared dear sister

sri said...

ALL GLORY BE TO HIM,THE MOST MERCIFUL !
well shared dear sister!

எம் அப்துல் காதர் said...

உங்கள் பார்வையில் ஹஜ் வித்தியாசமாய் மிகச் சிறப்பாய் வந்திருக்கு! அல்ஹம்துலில்லாஹ்!!

இறைவன் எல்லோருக்கும் வளத்தையும், பலத்தையும் தந்து ஹஜ் நிறைவேற துஆ இறைஞ்சியவனாக!

ஸ்ரீராம். said...

முதிய வயதில் வருபவர்கள் பற்றி சொன்னதும், வாய்ப்பே கிடைக்காதவர்கள் பற்றி சொன்னதும் மனதை நெகிழ வைத்தது. உங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்கு இறைவன் கருணையே காரணம். எல்லாப் புகழும் இறைவனுக்கே. ஹஜ் யாத்திரை சென்று வந்தவர்களை (ஆண்கள்) ஹாஜியார் என்று அழைப்பார்கள் என்று நினைக்கிறேன் . பெண்களை மாதாஜி என்றுதான் அழைப்பார்களா...

Unknown said...

புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...

மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவீல் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..

http://ithu-mangayarulagam.blogspot.com

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பேபி மாதாஜிக்கு வணக்கங்கள்..:)
பதிவுல அழகா உங்கள் அனுபவங்களைச் சொல்லி இருக்கீங்க..
பாராட்டுக்கள்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஹூசைனம்மா..

ஹஜ் புனித யாத்திரை போயிட்டு வந்தாச்சா..ம். மக்கா, மதீனாவுக்கு சென்றாலே ஒரு இனம்புரியாத உணர்வு. அதனை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. ரொம்ப சந்தோசமா இருக்கு. அல்லாஹூ ஸல்மக்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

இன்ஷா அல்லாஹ்! ஹஜ் பயணம் எல்லோருக்கும் இனிதே கிடைக்க வல்ல இறைவன் நாடியருள்வானாக. ஆமீன்.

அப்பாதுரை said...

படிக்கும் பொழுதே பரவசமாக இருந்தது. இது போன்ற மிகச்சில சாதனைகள் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகின்றன. இன்னொருவர் சாதனை புரிய உதவுவதால் நம்முடைய சாதனையின் பயனும் தொடர்கிறது, வளர்கிறது. முடிந்தால் இன்னொருவருக்கும் உதவுங்கள்.

வாழ்த்துக்கள்.

கீதமஞ்சரி said...

மனம் நெகிழ்த்திய பதிவு. பயணம் இனிதே முடிந்து நல்லபடியாக மனநிறைவுடன் வந்ததில் மிக்க மகிழ்ச்சி.

Suresh Subramanian said...

உங்கள் பார்வையில் ஹஜ் வித்தியாசமாய் மிகச் சிறப்பாய் வந்திருக்கு! .... thanks to share www.rishvan.com

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - அந்த வரிகளை எழுதும்போது, எனக்கு உங்கள் நினைவுதான் வந்தது. நாம் பேசும்போதெல்லாம் அதைக் குறித்தே நீங்கள் வருத்தப்பட்டதுதான் மனதிலேயே நின்றது. வல்ல நாயன் ஹஜ்ஜின் பாக்யத்தைத் தரவேண்டி உங்களுக்கும், எல்லாருக்காகவும் பிரார்த்திதேன்க்கா.

ஹுஸைனம்மா said...

ஆமினா - நன்றிப்பா.

ராமலக்ஷ்மிக்கா - நன்றிக்கா. எனக்கும் முதுமை வருமே என்பதாலோ என்னவோ முதியவர்களின்மீது அதிகம் கவனம்.

பாசமலர் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

முஹம்மது ஆஷிக் - வ அலைக்கும் ஸலாம். வாழ்த்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றிகள்.
//இறுதிக்கடமைதானே என்று ஹஜ்ஜை வாழ்க்கையின் வயோகத்திற்கு ஒத்தி வைத்து விடாதீர்கள். சிரமப்பட வேண்டி இருக்கும்//
கரெக்டுங்க, ஹஜ் போயிட்டு வந்த என் தோழி என்னிடம் சொன்ன இதைத்தான் நானும் சொல்லிகிட்டிருக்கேன்.

ஹுஸைனம்மா said...

அரபுத்தமிழன் - நாச்சியார் பட்டம், ஜிஹாத்னெல்லாம் வேற சொல்றீங்க.... சொல்லும்போதே ஒரு வீரம் வருது. :-))))

நல்லதைத் தேடி - ஸலாம். நன்றிங்க.

ஹைதர் அலி - வ அலைக்கும் ஸலாம். ”சுத்தம் ஈமானின் பகுதி” - ஆமாம்; தொழுமுன் கைகால்முகம் சுத்தம் செய்வது (ஒலு), நோன்புக்கும் சுத்தம அவசியம், ஹஜ்ஜுக்கும் இஹ்ராம் என்ற தூய்மை நிலை, இப்படி ப்ரார்த்தனைகளின் முதல் அவசியமே சுத்தம்தானே!!

ஹுஸைனம்மா said...

வெங்கட் நாகராஜ் - நன்றிங்க.

வித்யா - நன்றி.

குலாம் - வ அலைக்கும் ஸலாம். துஆவுக்கு நன்றி.

ரிஷபன் சார் - நன்றி.

ஹுஸைனம்மா said...

அவர்கள் உண்மைகள் - எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கே இத்தனை மகிழ்ச்சி கொள்ளும் உங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வல்லோனைப் பிரார்த்திக்கிறேன்.

தராசு - நன்றிங்க. எப்ப நான் சண்டைக்கு வந்திருக்கேன், இப்ப வர்றதுக்கு? :-))))))

ஷர்ஃபுதீன் - :-))

ஹுஸைனம்மா said...

ஜனாப். வாஞ்சூர் பாய் - எத்தனை முறை போனாலும் இன்னும் இன்னும் போக வேண்டும் என்ற ஆசையைத்தான் தூண்டுகீறது. உங்களுக்கும் அந்தப் பாக்கியம் பலமுறை கிடைத்ததில் மகிழ்ச்சி.

அப்துல்லா - வருடா வருடம் உங்கள் தாயாரோடு உம்ரா செய்வதாக உங்கள் பதிவில் படித்த ஞாபகம் (சரியா?) ஹஜ்ஜும் செய்திருக்கிறீர்களா? மாஷா அல்லாஹ். இறைவன் உங்களுக்குத் தந்திருக்கும் பெரும்வசதிக்கு வருடா வருடம் நீங்களும் போய்வருவதுடன், வாய்ப்பில்லாதவர்களுக்கும் உங்கள் மூலம் உதவ கிருபை செய்யட்டும்.

ஹுஸைனம்மா said...

நாசர்- வ அலைக்கும் ஸலாம். இறைவனுக்கே எல்லாப் புகழும்..

சென்னைப் பித்தன் - நன்றி சார்.

ரப்பானி - வ அலைக்கும் ஸலாம். நீங்க சொன்னது சரியே, தவறுதலா டைப் பண்ணிருக்கேன். அது 35 லட்சம்தான். நன்றிஙக்.

ஹுஸைனம்மா said...

ஜெய்லானி - எனது ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட துஆ செய்ங்க.
//மூன்று வருடம் அதே நாட்டில் இருந்தும் முடியவில்லை , 15.வருடம் இதே நாட்டில் முயன்றும் (சில காரனங்களால்) முடியவில்லை....!!.//
நீங்க மட்டும் இல்லை, பலருக்கும் இதுபோல சூழ்நிலை இருக்கிறது. என் உறவினர், சவூதியில் 18 வருடங்கள் இருந்தும் இந்த வருடம்தான் ஹஜ் செய்தார். இன்னொருவர் 25 வருடங்களுக்கு மேல் இருக்கிறார். எத்தனை ஹஜ் செய்தீர்கள் என்று கேட்டால், “கணக்கு வைத்திருக்கவில்லை” என்கிறார்.

இன்னொரு பெண்ணைச் சந்தித்தேன் அங்கு; கணவருடன் மூன்று வருடங்களாக அங்கு இருக்கிறாராம். ஹஜ் செய்ய பேராவல் இருந்தும், தான் (இந்தியாவிலிருந்து) உடன் வரும்வரை செய்யக்கூடாது என்று மாமியார் ஆணை பிறப்பித்திருக்கிறாராம்!! இப்படியும் சிலர்!! என்ன சொல்ல?

எல்லாம் இறைவன் செயல்; என்றாலும் நம் முயற்சியைத் தொடர்வோம். இறைவன் நிறைவேற்றித் தருவானாக.

ஹுஸைனம்மா said...

பாயிக் - எல்லோருக்கும் வல்ல நாயன் அருள் புரியட்டும்.


பிரதாப் - //இனிமே பதிவு எழுதி திரும்பவும் பாவத்தை சம்பாதிக்காதிங்க// அப்போ நீங்க கொஞ்ச நாளா எழுதாம இருப்பதன் இரகசியம் இதுதானா? ;-))))


அப்ஸரா - என் மாமியாருக்கு இது இரண்டாவது ஹஜ் அக்கா!! நாங்கள் போகிறோம் என்று சொன்னதும், நானும் வரட்டா என்று சின்னப்பிள்ளை போலக் கேட்டார். எனக்குத்தான் அவரது முதுமை கண்டு பயமாயிருந்தது. என்றாலும் இறைவன் எல்லாம் லேசாக்கித் தந்தான்.

ஹுஸைனம்மா said...

ஜமால் - வ அலைக்கும் ஸலாம். //ஒரு மாற்றம் உங்களிடம் எதிர்ப்பார்க்கலாம்// அவ்வ்வ்.... பயங்கட்டுறீங்களே!! :-))))

துளசி டீச்சர் - வாங்க. கருத்துக்கு மிகவும் நன்றி.

//மனது விரும்பி ஏங்கும் 'புண்ணிய தல யாத்திரை//
கரெக்ட் டீச்சர்!!

//இப்ப ஒரு ஹாஜியாரா?//
இல்லை டீச்சர், இப்பவும் நான் அதே ஹுஸைனம்மாதான்!! இந்த மாதிரி அடைமொழிகள் எதுவும் ‘சட்டப்படி’ அவசியமில்லை!! :-)))))

ஹுஸைனம்மா said...

அஸ்மாக்கா - வ அலைக்கும் ஸலாம்க்கா. எனக்காகப் பிரார்த்திக்கும் உங்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன்.

மோகன்குமார் - நன்றி.

கோமதிக்கா - வாழ்த்துக்கும், கருத்துரைக்கும் மிகவும் நன்றி அக்கா.

ஹுஸைனம்மா said...

ஜலீலாக்கா - நீங்கள் ஃபோனில் அழைத்துப் பேசியது நினைவுக்கு வருகிறது. மீண்டும் முயற்சியைத் துவக்குங்கள் அக்கா. இறைவன் இந்தப் பாக்கியத்தை எல்லாருக்கும் தரவேண்டும்.

ராம்வி - மிகவும் நன்றிக்கா.

அமைதிக்கா - அதானே, கட்டுப்பாடு எப்பவுந்தான் வேணும், இல்லியா? :-))

ஹுஸைனம்மா said...

வல்லிமா - //இவ்வளவு லட்சம் மக்கள் பிரார்த்திக்கும்போது அந்த இறைவன் உலக நலத்தையே கொடுப்பார்//
நான் ஹஜ் செல்லுமுன் ஒரு பெரியவரிடம் சொன்னபோது, “உலக அமைதிக்காகப் பிரார்த்தனை செய்” என்று சொன்னார். அவர் மட்டுமே அவ்வாறு சொன்னார். இப்போ நீங்க சொல்றீங்க. நிச்சயம் அமைதி நிலவ வேண்டும். ஒவ்வொருவரும் ஏங்குவது அதற்குத்தானே. இல்லியா.

கோவை2தில்லி - நன்றிப்பா.

அன்னு - வ அலைக்கும் ஸலாம். ஹஜ்ஜைக் குறித்து உங்களைவிட அதிகம் ஏங்குபவர் யார் என்றுதான் எப்பவும் நினைப்பேன் அனிஷா. இறைவன் நிறைவேற்றுவான், நாடினால்.

ஹுஸைனம்மா said...

மஹி மேடம் - உணமைதான். இத்தனை பேர் சொல்லும்போது எனக்கே இன்னும் பிரமிப்பு தீரவில்லை. நன்றி!!

இர்ஷாத் - இந்தியா போய் செட்டிலாகுமுன் சீக்கிரம் செய்ங்க.

ஸ்ரீ - ஆம், அவனுக்கே எல்லாப் புகழும். நன்றி ஸ்ரீ!!

காதர் பாய் - துஆ வுக்கு மிகவும் நன்றி.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - //உங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்கு இறைவன் கருணையே காரணம்.// ஆமாம் சார். ஒரு கனவு போல எல்லாம் நடந்தது.

//ஹாஜியார் என்று அழைப்பார்கள் என்று நினைக்கிறேன் . பெண்களை மாதாஜி என்றுதான் அழைப்பார்களா...//

சார்..... :-))))

என்னோட இந்தப் பதிவைப் பாருங்க - http://hussainamma.blogspot.com/2011/09/blog-post.html, அதுல இதுக்கு விளக்கம் இருக்கும்!!

ஹுஸைனம்மா said...

முத்து அக்கா - நன்றிக்கா.

ஸ்டார்ஜன் - வ அலைக்கும் ஸலாம். //அல்லாஹூ ஸல்மக்.// இதுக்கு நீங்க (மெயிலில்) சொன்ன அர்த்தத்தையும் இங்கே சொல்லிடுறேன் - அரபியில் அல்லாஹூ ஸலாமக் என்பது பயணம் சென்று வந்தவர்களை வாழ்த்துவது என்று சொல்வாங்க.

மிகவும் நன்றி.

ஹுஸைனம்மா said...

அப்பாதுரை - நிச்சயமா, இன்னும் அதிகம் உதவ வேண்டும் என்ற ஆவல் அதிகரித்திருக்கிறது.

கீதா - நன்றி.

ரிஷ்வன் - மிகவும் நன்றி.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் நலமா?உங்களின் இந்த பதிவினை படிக்கும் பொழுதே ஹஜ் செய்த உணர்வு வருகிறது.. எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க தூவா செய்யுங்கள். (3 நாட்களுக்கு முன்பு வந்து கருத்து சொன்னேன்.. அந்த கருத்தினை காணம் (கருத்து அனுப்பும் பொழுது பவர் கட் ஆச்சு )சந்தேகத்துடன் தான் இன்று வந்து பார்த்தேன்..

Naazar - Madukkur said...

அல்ஹம்துலில்லாஹ்,
இறையருளால் நல்ல விதமாய் ஹஜ் முடித்து வந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

அமைதி அப்பா said...

மிக அழகாக விவரித்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

'பேபி மாதாஜி'க்கு எங்கள் வாழ்த்துக்கள்.

Riyas said...

மாஷா அல்லாஹ்...!! :-)

தளிகா said...

அஸ்ஸலாமு அலைக்கும் மிசஸ் ஹுசேன்..அல்ஹம்துலில்லாஹ் நல்லபடியாக பெரிய கடமையை நிறைவேற்றிட்டு வந்துட்டீங்க..உங்க பதிவு எங்கள் ஆசையை ரொம்பவே தூண்டி விடுது..இன்னும் விளக்கமான பதிவை எதிர்பார்க்கிறேன்.ஃபேரிலேன்டை கண்ட குழந்தையின் குதூகலம் உங்க பதிவில் பளிச்சிடுது..பல லட்சம் மக்களுடன் ஒரே இலக்கு நோக்கி ஆஹா கற்பனை பண்ணவே முடியவில்லை...Goose bumps!!!

ஹுஸைனம்மா said...

நாஸர் மதுக்கூர் - நன்றிங்க.

அமைதி அப்பா - நன்றி.

ரியாஸ் - நன்றி.

தளிகா - ரொம்ப சந்தோஷம்ப்பா உங்க பதிலுக்கு. இன்னும் நிறைய எழுதணும், இன்ஷா அல்லாஹ். எனக்கும் சொல்ல வேண்டியதைச் சொல்லாம இருந்தா தலை வெடிச்சிடும் போல இருக்கும். அதனால அப்பப்ப எழுதிருவேன்!!

//ஃபேரிலேன்டை கண்ட குழந்தையின் குதூகலம் //
அவ்வ்வ்வ்.... நான் இன்னும் வளரணும்கிறீங்களோ??!! ;-))))))))

கிளியனூர் இஸ்மத் said...

இறுதிக் கடமையை உறுதியாய் நிறைவேற்றி வந்த உங்கள் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்...
உங்கள் ஹஜ் அனுபவங்களை இன்னும் விரிவுபடுத்தலாம்...