Pages

கேள்வியின் நாயகன் - 2

கேள்வியின் நாயகன்-1

 
இப்ப பள்ளிகளுக்கெல்லாம் குளிர்கால விடுமுறை. பசங்க சும்மா இருக்கறதைப் பார்க்கப் பொறுக்காம, சின்னவனை, அவன் வேண்டாம், வேண்டாம்னு அலறுனாலும் விடாம, தமிழ் படிக்க வாடான்னு பிடிச்சு உக்கார வச்சதப் பாத்த ரங்ஸ், “அவந்தான் வேணாங்கிறான்ல, விடேன். தமிழ் நல்லா பேசத் தெரியுதுல்ல, அது போதாதா”ன்னார்.

“நாமெல்லாம் தமிழங்க! பேசத் தெரிஞ்சாப் போதுமா? எழுதத்தெரியலன்னாலும் அட்லீஸ்ட் வாசிக்கவாவது தெரிஞ்சிருக்க வேண்டாமா? நீங்க சும்மாருங்க. ”

“அவன் இப்போ எந்த காவியத்தை வாசிக்கப் போறான்? இப்பல்லாம் யாரும் லெட்டரும் எழுதுறதில்லை. லீவுல கூட ஃப்ரீயா விடாம தொணதொணன்னுட்டு..”

“ஊருக்குப் போறவாற நேரம், ஒரு பஸ் ரூட்டு வாசிக்க, நாட்டு நடப்பு தெரிஞ்சுக்க ஒரு நியூஸ்பேப்பர் வாசிக்கத் தெரியவேணாமா? அட, நாளபின்ன என் பிளாக் வாசிக்கணும்னு ஆசப்பட்டான்னா முடியாமப் போயிடக்கூடாதே?”

”அது நடந்திடக்கூடாதேன்னுதான் சொல்றேன். அப்புறம் உம்பிள்ளை உம்மேல வச்சிருக்க கொஞ்சநஞ்ச மரியாதயும் போயிடும்!! விஷப்பரீட்சை வேணாம்.”
______________________________

இதுக்கெல்லாம் பயப்படுவோமா? நாமெல்லாம் யாரு? ”உக்காந்து வாசிடா”ன்னு மூணாங்கிளாஸ் தமிழ்ப் புத்தகத்தைக் கொடுத்தேன்.

“மரா-த்தில்-லிருந்த குரங்கு இதைப்பு பார்த்துக்கு கோ-ண்டிருந்தது.” வாசித்தவன் சந்தேகம் கேட்டான், “ம்மா, புக்ல இருக்க தமிழ் ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு? நாம பேசுற தமிழ் எவ்வளவு ஈஸியா இருக்கு? அதேமாதிரியே புக்லயும் இருக்கலாம்ல?”

அவ்வ்வ்... அப்ப நாளைபின்ன மொபைல்ல எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பிச்சான்னா, புஸ்தகத்துல இருக்க இங்லீஷ் ஏன் இவ்வளவு கஷ்டமாருக்குன்னு கேப்பானோ?

______________________________

“குரங்கு வாரிக்கு-திரையை நோக்கி....  ம்மா, இது தமிழ் புக்தானே, அப்புறம் ஏன் ”நோக்கி”னு மலையாளம்லாம் வருது? தமிழ்னா தமிழ் மட்டுந்தான இருக்கணும்?”

அவ்வ்வ்...  ”அது தமிழ்லருந்துதாண்டா மலையாளத்துக்குப் போச்சு!!”
______________________________

”இ-ரயில் (e-ரயில் இல்லை; சாதாரண ரயில்தான்!!) ....  ம்மா, ரயில்னுதானே சொல்வோம்? ஏன் இ-ரயில்னு எழுதிருக்கு புக்ல?”

அவ்வ்வ்... இத எப்படி விளக்குவேன்? “அது... ’ர’ வச்சு ஆரம்பிக்குற nouns-க்கு முன்னாடி இப்படி ஒரு ‘இ’ போடணும். ஆனா, அது “சைலண்ட்”தான்”

“அது ஏன் அப்படி...”ன்னு ஆரம்பிச்சவன், “ஓ.. இங்க்லீஷ்ல, "Knight" “tsunami" - இதிலெல்லாம் வர்ற மாதிரியா?”ன்னான்.

ஹப்பாடா, பிழைச்சேன்!!
______________________________

”ஆட்டு மந்தை.... மந்தைன்னா என்ன?”

” ’Herd of cattle’னு சொல்வோம்லியா, அதுல ’herd’னா மந்தைன்னு அர்த்தம்..”

“அப்படியா.. அப்ப நீ ஏன் முன்னாடியே சொல்லல”

அதானே, நான் ஏன் சொல்லல? ஆனாலும் சமாளிப்போம். “நீ கேக்கல, அதான் சொல்லல”

“அது எப்படி? ஒரு நல்ல உம்மான்னா, கேக்காமலே எல்லாம் சொல்லித் தரணும்..”

ஹும்ம்.. இதுதான் சொ.செ.சூ.வா!!

______________________________

’பொருத்தமான சொற்களை எழுதுக’வில் ‘உடை’ என்பதன் அர்த்தமான ‘ஆடை’ என்ற வார்த்தை கொடுக்கப்படிருக்கிறது.

“ம்மா, இதுல ‘உடை’ங்கிறதுக்கு அர்த்தமே கொடுக்கலை”

“ஒழுங்காப் பாரு, இருக்கத்தான் செய்யும்”

“எங்க இருக்கு? ‘உடை’ன்னா ஒடைக்கிறதுதானே? அந்த வேர்டே இல்ல பாரு”

மறுபடியுமா... “அடேய், உடைக்கு  டிரஸ்ஸுன்னும் அர்த்தம் உண்டு. அதான், ‘ஆடை’ன்னு கொடுத்திருக்கு பார்!!”

”அப்ப ஆடைன்னா, பால்ல இருக்குற ஆடை இல்லியா?”

அவ்வ்வ்வ்...

அதன்பிறகு ’அரை, அறை’ வார்த்தைகள் வந்தன. ”அரைன்னா அரைக்கிறது, அறைன்னா அறையறதுதானே”ன்னான்.

”அப்படியும் சொல்லலாம். அரைன்னா பாதி, அறைன்னா ரூம்னும் அர்த்தம் உண்டு”

“இதென்ன லாங்வேஜ் இந்தத் தமிழ், இப்படி ரெண்டு ரெண்டு மீனிங்கா இருக்கு? பேசும்போது எந்த வேர்ட் சொல்றதுன்னு குழப்பாதா? கேக்குறவங்களுக்கும் கன்ஃப்யூஸ் ஆகும்ல...”

“அதெல்லாம் பழகப் பழகப் புரியும்..”

“அதெப்படி... நீ என்கிட்ட இந்தமாதிரி எதாவது சொன்னா, எதச் சொல்றேன்னு புரியாததால நான் செய்யாம  இருப்பேன். அப்புறம் சொன்னத ஏன் செய்யலன்னு நீ என்னத்தான திட்டுவே!!”

முடீல... என்னால முடியல...

Post Comment

33 comments:

கீதா said...

உங்க மகன் கேட்ட கேள்விகளில் நியாயம் இருக்கு. மக்குப் பிள்ளைகளை வளர்ப்பதில் எந்த சிரமமும் இல்லையாம். புத்திசாலிப் பிள்ளைகளை வளர்ப்பதுதான் சிரமம் என்று என் மாமனார் சொல்வார். புத்திசாலிப் பிள்ளையைப் பெற்றதற்கு நீங்கள் பெருமைப்படலாம்.

என் பையனும் இப்படிப் படுத்தின பாட்டில் தமிழ் சொல்லித் தரும் ஆசையே போயிட்டுதே. ஆனாலும் மனசு கேக்காம உங்களை மாதிரி அப்பப்போ தமிழ் புத்தகத்தை கையில கொடுத்து உக்காரவைக்கிறதுதான். இம்சை அரசன் படத்தின்போது கூட தமிழில் (?) மொழிபெயர்ப்பு தேவைப்பட்டது. ஏன் தமிழை இவ்வளவு கஷ்டப்பட்டு பேசுறாங்க என்று கேட்கும்போது அழுகைதான் வருது.

அமைதிச்சாரல் said...

//“அதெப்படி... நீ என்கிட்ட இந்தமாதிரி எதாவது சொன்னா, எதச் சொல்றேன்னு புரியாததால நான் செய்யாம இருப்பேன். அப்புறம் சொன்னத ஏன் செய்யலன்னு நீ என்னத்தான திட்டுவே!!”//

அதானே.. புள்ளை சொல்றதும் சரிதாம்ப்பா :-))

NIZAMUDEEN said...

இதன் தொடர்ச்சி வருமா?
எந்தப் பக்கம் போனாலும் எடக்கு மடக்கா மடக்கறானே பையன்! லொல், காமெடி 100 விழுக்காடு!

மோகன் குமார் said...

தமிழ் கத்துக்க நீங்க சொன்ன காரணம் இருக்கு பாருங்க அங்கே நிக்குறீங்க ஹுசைனம்மா நீங்க :)))

RAMVI said...

உங்க பையன் சுட்டி,நிறைய சந்தேகம் கேட்கிறான்,சீக்கிரத்தில் பிடித்துக்கொண்டு விடுவான்.
இவர்களுக்கு தமிழ் கத்துக்கொடுக்க வேண்டுமானால் நமக்கு அங்கிலம் நன்றாக தெரிய வேண்டும் போல இருக்கு!!என் பெண்களுக்கும் நான் இப்படி கஷ்டப்பட்டுதான் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

VANJOOR said...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

******1.
புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.

புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..
***********************************


2. *******
ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1

மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
********

.

சுவனப்பிரியன் said...

இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் மொழியை தமிழகத்தில் தேட வேண்டி வரலாம். அந்த அளவு ஆங்கில மோகம் அனைவரையும் பிடித்தாட்டுகிறது. ஆங்கிலம் கற்ப்பிப்பதோடு தாய்மொழி தமிழையும், மார்க்கத்துக்கு அரபியையும் சிறு வயதிலிருந்தே கற்ப்பிக்கத் தொடங்க வேண்டும்.

சிறந்த இடுகை.

அப்பாதுரை said...

ரசித்தேன். கேள்வியின் நாயகனை என் சார்பில் தட்டிக் கொடுங்கள்.
தமிழ் சுலபம்னு யாரு சொன்னாங்க?

ஸ்ரீராம். said...

:))))))
பதில் சொல்ல முடியா கேள்விகளா சொல்லி மாளாத கேள்விகளா..

Avargal Unmaigal said...

இப்படியா குழந்தையை படுத்தி எடுக்கிறது. பாருங்க வளர்ந்த பின் உங்களை மேலை நாட்ட்டுக்கு கூட்டி போய் அங்குள்ள மொழியை உங்களுக்கு வயசான காலத்தில் சொல்லிகொடுத்து உங்களை பழி வாங்க போறான்

enrenrum16 said...

/“அது எப்படி? ஒரு நல்ல உம்மான்னா, கேக்காமலே எல்லாம் சொல்லித் தரணும்..”/

ரங்க்ஸ் சொன்ன கொஞ்ச நஞ்ச மரியாதை போயிடுச்சே....;)

அரை,அறை,நோக்கி எல்லாமே டாப்.... அப்டியே அவர் தமிழ் வாசிக்கிறத youtube il ஏத்தினா கொலவெறி தோத்துடும் போங்க.....உங்க புள்ளைக்கு தமிழ் மேல இருக்கிற கொலைவெறிப் பார்த்து கேட்கிறவங்களுக்கு கொலைவெறி வந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல...ஹி..ஹி..

ஹுஸைனம்மா said...

கீதா - //படுத்தின பாட்டில் தமிழ் சொல்லித் தரும் ஆசையே போயிட்டுதே//
ஆனாலும், மனசு தளராம, விக்கிரமாதித்தான் மாதிரி, முயற்சிகளைத் தொடருவோம்ல, இல்லப்பா??

//ஏன் தமிழை இவ்வளவு கஷ்டப்பட்டு பேசுறாங்க என்று கேட்கும்போது//
தமிழ் புத்தகத்துல ஒரு வரியை வாசிச்சு அர்த்தம் கேட்டான். அதுக்கு, அவனே அர்த்தம் புரிந்துகொள்ளும்படி அந்த வாக்கியத்தையே மறுபடி வார்த்தைகளைப் பிரிச்சு மெதுவாச் சொன்னேன். அதுக்கு அவன் பதில், “நீ தமிழ்ல பேசாதே. நம்ம பேசுற மாதிரி ஈஸியாப் பேசு!!” அவ்வ்வ்... குட்டிச்சுவர்தான் தேடுறேன்!!

என்னை மாதிரியே நீங்களும் அவதிப்படுறீங்கன்னு தெரிஞ்சு, எனக்கு ஒரு ஆறுதல்!! :-))))))

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா - உங்களுக்கென்ன, இந்தியாவுக்குள்ள இருக்கதுனால, தமிழ் அப்பப்ப கண்ணு, காதுல பட்டுகிட்டுத்தான் இருக்கும். அதான் பிள்ளைக்கு சப்போர்ட் பண்றீங்க!! :-))))

நிஜாம் பாய் - தொடர்ச்சி, அவன் வளர்ந்து, வேலை, கல்யாணம், பிள்ளைன்னு செட்டிலானாலும் வரும்!! எல்லா அம்மாவுக்கும் புள்ளை புராணம் முடிவே அடையாது!! :-))))

மோகன் - பின்ன, ஒரு பின்னூட்டம், ஓட்டு கூடுதலாக் கிடைக்கும்ல??

ஹுஸைனம்மா said...

ராம்வி - ஆஹா, நீங்களும் “தமிழ் டீச்சர்” அவதாரம் எடுப்பீங்களா? அப்ப என் கஷ்டம் புரிஞ்சிருக்கும். நன்றிங்க.

வாஞ்சூர் பாய் - நன்றி.

சுவனப்பிரியன் - இரு தரப்பு பாட்டி-தாத்தாக்களோடும் பிள்ளைகள் சகஜமாக உரையாட வேண்டுமே என்பதற்காகவே வீட்டில் தமிழ் மட்டுமே பேசுவோம். அரபி பள்ளியில் சொல்லித் தருகிறார்கள்.

ஹுஸைனம்மா said...

அப்பாதுரை சார் - ஆமாங்க, தமிழ் சொல்லிப் புரிய வைக்கிறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. அதிலும், பேச்சுத் தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்கும் இருக்கும் வேறுபாடுகள் - ஒரு புது மொழிபோலவே அயர்ச்சியடைய வைக்கீறது!! நன்றிங்க பாராட்டுக்கு!!

ஸ்ரீராம் சார் - பதில் சொல்ல முடிகிறது. ஆனால், புரிய வைக்கச் சிரமப்படுகீறேன் போல!! :-))))

ஹுஸைனம்மா said...

அவர்கள் உண்மைகள் - //வளர்ந்த பின் உங்களை மேலை நாட்ட்டுக்கு கூட்டி போய் அங்குள்ள மொழியை உங்களுக்கு வயசான காலத்தில் சொல்லிகொடுத்து உங்களை பழி வாங்க போறான்//

செஞ்சாலும் செய்வான் எம்புள்ள.... அவன் செய்யலன்னாலும், எஈங்க தேடிப்பிடிச்சு ஐடியா கொடுப்பீங்க போல!! :-))))

ஹுஸைனம்மா said...

என்றென்றும் 16 - //கொஞ்ச நஞ்ச மரியாதை போயிடுச்சே// அதெல்லாம் எப்பவோ..... ஆனாலும், எவ்ளோ அடிச்சாலும் தாங்குற மாதிரியே இருந்துகிட்டாலும், வெளியே சொல்லமாட்டோம்ல!!

//அவர் தமிழ் வாசிக்கிறத youtube il ஏத்தினா கொலவெறி தோத்துடும்//
அதை வலையேத்துன என் மேல கொலைவெறி வந்துடக்கூடாதேன்னுதான் ஒரு பயம்!!

நட்புடன் ஜமால் said...

:) :) :)

முடீல எங்கனாலையும் முடீல ...

zalha said...

அஸ்ஸலாமு அளிக்கும் சகோ
பொல்லை கொடுத்து அடிவாங்கிய கதையா?

கோமதி அரசு said...

“அவன் இப்போ எந்த காவியத்தை வாசிக்கப் போறான்? இப்பல்லாம் யாரும் லெட்டரும் எழுதுறதில்லை. லீவுல கூட ஃப்ரீயா விடாம தொணதொணன்னுட்டு..”//

அது தானே குழந்தையை ஃ ப்ரீயா விடாம!

வேங்கட ஸ்ரீனிவாசன் said...

ஆஹா!! எல்லா வீட்டிலயும் இந்த கதை இருக்கிறதா?

என் நண்பர் ஒருவர் குழந்தைக்கு இப்படித்தான் தமிழ் எழுத்துகளை விடுமுறையில் அறிமுகப் படுத்த, அக்குழந்தையோ பள்ளி ஆரம்பித்தவுடன் இந்தி எழுத்துக்கு பதிலாக தமிழ் எழுத்தை எழுத, டீச்சருக்குக் குழப்பமாகிவிட்டது!!!

Kanchana Radhakrishnan said...

சிறந்த இடுகை.

கோமதி அரசு said...

வெள்ளிக் கிழமை வலைச்சரத்தில் நம்பிக்கை தான் வாழ்க்கையில் உங்கள் ஹஜ் யாத்திரை.

ஜெய்லானி said...

//“அவன் இப்போ எந்த காவியத்தை வாசிக்கப் போறான்? இப்பல்லாம் யாரும் லெட்டரும் எழுதுறதில்லை. லீவுல கூட ஃப்ரீயா விடாம தொணதொணன்னுட்டு..”//

அதே டையலாக் உங்க வீட்டிலயும் இதே கதைதானா . ஹி..ஹி.... :-))).

சிந்தனை said...

ஸலாம் வே !!!

அம்மாடியோவ் என்னாலயும் முடியலங்க.. தமிழ் நா

என்னாம்மா நு கேட்காமா போயிட்டான் பையன் ...

ரொம்ப கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு எழுதிரீகீங்க போல ..

கதை ல ஒரு twist இருக்குமா ?

சிரித்தேன் சிந்தித்தேன் ... தூக்கம் தான் வரல ... உங்க ப்ளாக்

படிச்சு தூங்கிரலாம்னு பார்த்தேன் வே .. தூக்கம் தான் வரல வே

.. வர வர சிந்திக்க லாம் சொல்லுவீங்க போலே வே ..

இப்பதான் புரியுது எல்லாரும் ஏன் ப்ளாக் வசுருக்காங்கனு ..

என்னோமோ ஏதோ வே !! என்னோமோ சொல்ல வரீங்க

புரியத்தான் மாடீங்கிது ...

நானும் ஒரு காமெடி பண்ணிக்கிறேன் வே !!

//என் பாட்டுக்கு எசப்பாட்டு இங்க...//

கேட்குதா .. கேட்குதா...

விளங்கும் ...

[வே - வே நு சொல்லுவது எங்க ஊரு பழக்கம் - கடைசியா

நல்லா இருக்கீகள வே .. பில்லைகளாம் எப்புடி இருக்காகலாம்

வே !!. சரி வே நான் வாறேன் வே !!

ஆதி மனிதன் said...

ஹ்ம்ம்...வெளி நாடுகளில் பிள்ளைகளுக்கு தமிழையும் நம் பழக்க வழக்கத்தையும் சொல்லி குடுத்து பழக்க படுத்துவதற்குள்...எங்கள் பிரச்சனையை இங்கே போய் பாருங்கள்.

http://aathimanithan.blogspot.com/2012/01/blog-post.html

அன்புடன் மலிக்கா said...

அடடா இங்குமா.

ஆமாம் நேரில் பார்த்தேனே நிஜமாவே கேள்வியின் நாயகந்தான் அவர்.. மகன்களுக்கு எனது சலாத்தினையும் செல்லத்தையும் சொல்லுங்கள் ஹுசைனம்மா..
நல்ல பதிவு..

இதேபோல் தான் நம்ம குட்டீஸும் செய்தது

ஏன் மம்மி இப்படி தமிழ் தமிழுன்னு படிக்கசொல்லி என்னை படுத்துறீங்க.
அப்புறம் தலைகீழாபோயிடும் தமிழ்.என்றாரே பார்க்கலாம்.

அப்படி சொல்லக்கூடாது செல்லம் முதல்ல தமிழ கவிதையிலேர்ந்து ஆரம்பிப்போமா என்றதும்.

ஹைய்யா அப்படின்னா சரின்னு தலையாட்டினார் மனதுக்குள் பயம்தான் இருந்தாலும். தைரியமாக மேடையேற்றினார் தமிழே எடுக்காமல் இருந்துவிட்டு முதல் முதலாக அவர் வாசித்த கவிதைதான் என் தமிழ் http://niroodai.blogspot.com/2011/04/blog-post_11.html..

இப்போதும் கொஞ்சம் சிரமமாகத்தான் வருகிறது போகப்போக சரியாகிவிடும் என்றார் நம்ம மச்சான்ஸ்..

கோவை2தில்லி said...

ரோஷ்ணி தமிழ் எழுத ஆரம்பித்திருக்கிறாள். அ, ஆ, இ, ஈ மட்டும் தான் நான் சொல்லிக் கொடுத்தது. பத்திரிக்கைகளில் வரும் சிறு வார்த்தைகளை தானே படிக்க ஆரம்பித்திருக்கிறாள். ”அ” வை ஹிந்தி ba மாதிரி எழுதுவாள்.

Jaleela Kamal said...

எப்ப்டியாவது தமிழை கற்று கொடுத்துடனும் என்று எனக்கு முன்பு ரொம்ப கவலையா இருக்கும்
தமிழ் புக் வாங்கி எல்லாம் என் பெரிய பையனுக்கு சொல்லி கொடுத்தேன்.ஓரளவுக்கு அவனுக்கு தெரியும்,
வேலைக்கு வர ஆரம்பிச்சதில் இருந்து எதுவும் கற்று கொடுக்க முடியல சிறியவனுக்கு கொஞ்சம் சொல்லி கொடுத்தேன்,.
உங்கள் பையன் கேள்வி செம்ம .. ஹிஹி

ஹுஸைனம்மா said...

ஜமால் - வாசிச்ச உங்களுக்கே இப்படின்னா, என் நிலைமை... ??!!

ஸல்ஹா - வ அலைக்கும் ஸலாம். நாங்க, “தடி கொடுத்து அடி வாங்குறது”ன்னு சொல்வோம்!! ‘பொல்லை’ன்னா கம்பா?

கோமதிக்கா - அது, பிள்ளைங்க எப்பவும் புதுசா எதையாவ்து தெரிஞ்சிக்கணும்னு அம்மாவுக்கு இருக்க ஆசைதான் இப்படியெல்லாம் செய்ய வைக்குது!!

ஹுஸைனம்மா said...

வேங்கட ஸ்ரீனிவாசன் - வாங்க. ஆமாங்க, கே.ஜி. வகுப்புகளில் ஏற்கனவே ஆங்கிலம், ஹிந்தி மொழிகளின் எழுத்துகள் படிச்சிகிட்டு இருக்கும்போது, தமிழும் சேர்ந்தா கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கும்.

காஞ்சனாக்கா - நன்றி.

ஜெய்லானி - ஸேம் ப்ளட்??!! :-)))

ஹுஸைனம்மா said...

சிந்தனை - என்னவே, எப்டிருக்கீரு? எம்பிளாக் படிச்சு தூக்கம் வர்றதுக்கு நான் என்ன தாலாட்டாவே எழுதுறேன்? சிந்தனென்னு பேரு வச்சுகிட்டு, தூங்க வழி பாக்கீரே??

ஆமா வே, நீரு எந்த ஊரு? பொம்பளயளயும் வே,வேங்கீரு? எங்க தின்னேலில இப்படிலாம் பேச மாட்டாவளேவே... :-))))))

ஹுஸைனம்மா said...

ஆதி மனிதன் - வாங்க. அட, அப்ப ஒவ்வொரு என்.ஆர்.ஐ.யின் கதையும் இதுதானா? :-)))

மலிக்கா - வாங்க, வாங்க. பாவம் புள்ளைய முதல்ல கவிதைய வாசிக்கச் சொல்லிட்டீங்க? ப்ரவாலையே, அவரும் பயப்படாம வாசிச்சுட்டாரே... வெரிகுட்!! இப்ப தமிழ் எப்படி படிக்கிறாராம் தலைவர்?

கோவ2தில்லி - ஹிந்தி எழுத்தெல்லாம் எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ? எனக்கு அதக் கண்டாலே அல்ர்ஜி!! எவ்ளோ கஷ்டம் எழுதறதுக்கு!! (நம்ம தமிழப் பாத்து அவங்க இப்படிச் சொல்வாங்களோ? :-))) )