Pages

டிரங்குப் பொட்டி - 21

இந்தியாவின் எல்லைகளில் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால்கள், பனிபடர்ந்த இமயமலைகளில் பணிபுரியும்போதுதான் மிக அதிகம். சராசரி தினப்படி வேலைகள் செய்வதுகூட மிகவும் கடினம் அங்கு. இதனை எதிர்கொள்ளவேண்டி இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி நிறுவனம் பல கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளது. இவை இயற்கை முறைகளை அடித்தளமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 25 கண்டுபிடிப்புகளை அடித்தட்டு பொதுமக்களின் நலன்கருதி, அவர்களின் பயன்பாட்டுக்குத் தகுந்தவாறு குறைந்த விலையில் சந்தைகளில் விற்கப் போவதாகக் கூறியுள்ளது.

பனிப்பொழிவினால் உடல் உறுப்புகள் மரத்துப் போதலைத் தவிர்க்க (Frost bite) சோற்றுக் கற்றாழையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட க்ரீம் தற்போது மார்க்கெட்டில் கிடைக்கிறதாம். அணுக்கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து தப்பிக்க துளசியைக் கொண்டு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சிப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாம். ஸ்வெட்டர் போன்ற கம்பளித் துணிகளில் பூஞ்சைக் காளான் பிடிக்காமல் இருப்பதற்கும் ஸ்ப்ரே, பனிமலைகளில் உபயோகிக்கத்தகுந்த (அண்டார்டிகாவில் கிடைக்கும் ஒருவகை பாக்டீரியாக்களைப் பயன்படுத்தும்) கழிவறைகளும் இந்தப் பட்டியலில் உண்டு.

-o0o-o0o-o0o-

இரட்டையர்கள் என்றாலே ஒரே பிரசவத்தில் ஒரே நாளில் சில நிமிட வித்தியாசத்தில் பிறந்தவர்கள் என்றுதான் அர்த்தம். அரிதாக டிஸம்பர் 31 நள்ளிரவு பிறக்க நேரிட்டால் ”ஒரு வருட வித்தியாசம்” இரட்டையர்களுக்கு நேரும். ஆனால், ஐந்து வருட வித்தியாசத்தில் இரட்டையர்கள் பிறந்திருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா?

இங்கிலாந்தில் 2005-ம் வருடம் இரு தம்பதியர் குழந்தைபெற எடுத்துக் கொண்ட சிகிச்சையில், ஐந்து கருக்கள் உருவாகின. அவற்றில் ஒன்றை தன் கருப்பையில் செலுத்தி பெற்றெடுத்தவர்கள், மீதியை “சேமித்து” வைத்திருந்தனர். இன்னொரு குழந்தைக்கு தேவையெனக் கருதியதும், இன்னொரு கருவை ஃப்ரீஸரிலிருந்து எடுத்து, பெற்றுக்கொண்டனர்!! 

சீனாவிலும் குழந்தைக்கான ட்ரீட்மெண்டுகள் அதிகம் செய்துகொள்கிறார்களாம். அங்கு ஒருவருக்கு ஒரே குழந்தை நியதி. ஆனால், அந்த ஒரு குழந்தையும் தாமதமாவது அதிகரித்துள்ளதாம். அதிலும், பெண்களுக்கு கருமுட்டை உருவாவதில்தான் அதிகப் பிரச்னை என்பதால், கருமுட்டை தானம் என்பது பல இளம்பெண்களுக்கு பெரும்பணம் சம்பாதிக்கும் இலகுவான வழியாக ஆகிவிட்டது!! அதிலும், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்புகள் படிக்கும் அழகான பெண்களுக்குத்தான் மிக டிமாண்டாம்!! கருமுட்டை தானம் செய்வது சீனாவில் சட்டவிரோதமானது என்றாலும், பயமில்லாமல் திரைமறைவில் வியாபாரம் அமோகமாக நடக்கத்தான் செய்கிறது. 

ஒரு குழந்தையிடம் அதன் தந்தை யார் என்று அம்மா சொன்னால்தான் தெரியும். இனி “அம்மா”வும் யார் என்று அம்மாதான் சொல்லணும்போல! மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ந்ததற்கு மகிழ்வதா, இல்லை மெடிக்கல்/ சோஷியல் எதிக்ஸ் தொலைந்ததற்கு வருந்துவதா.

-o0o-o0o-o0o-

சென்னை “எழிலகத்தில்” நடந்த தீவிபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் இறந்ததும், மேலும் சிலர் காயமடைந்ததும் வருத்தற்குரியது. எனினும், எரிந்து கொண்டிருக்கும் கட்டிடத்திற்குள் எப்படி  இவ்வளவு அஜாக்கிரதையாக உள்ளே சென்றார்கள் என்ற கேள்வி எழுகிறது. 

முன்பு தீயணைப்பு வீரர்கள் குறித்து நான் எழுதிய பதிவொன்றில்    இப்படி எழுதியிருந்தேன்:

திறந்தவெளி தீ விபத்தைவிட, மூடிய இடங்களின் தீ விபத்துகளில் (closed fire) ரொம்பக் கவனமாகத் தீயணைப்பை மேற்கொள்ள வேண்டுமாம்.  ... எரியும் தீ, ஒரு கட்டத்தில், போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் இருக்கும்; ஆனால் முழுதும் அணைந்துவிடாது. ... அச்சமயத்தில் கதவையோ, ஜன்னலையோ திறப்பது, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்ததுபோல, பெரும்வெடிப்பை ஏற்படுத்தி, பலத்த உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்த வல்லது. தணலில் ஊதினால் நெருப்பு பற்றிக் கொள்ளுமே, அதுபோல!! இதற்கு backdraft, flashover என்று பெயர். ... இதைத் தவிர்க்க, இவ்விளைவினால் ஆபத்து ஏற்படாமலும், புகையை வெளியேற்றவும், முதலில் கூரைப் பகுதியிலோ அல்லது அதிக ஆபத்து ஏற்படாதபடி ஒரு இடத்திலோ ஒரு திறப்பு ஏற்படுத்திக் கொள்வார்களாம்.

அந்தத் துறை அதிகாரிகளுக்கு இது தெரியாமலா இருந்திருக்கும்? என்ன காரணம் என்று அதிகாரி பிரியா சொன்னால்தான் தெரியும்.

-o0o-o0o-o0o-

தமிழ்ப் பதிவுலகில் இப்ப நிறைய திரட்டிகள் வந்துவிட்டன. ஒவ்வொன்றிலும் ரிஜிஸ்டர் செய்து, வோட் பட்டனையும் பதிவில் இணைப்பதே ஒரு பெரிய வேலை. அதை ஒரு வழியாச் செஞ்சு முடிச்சுட்டேன்.  (ஒண்ணு மட்டும் இன்னும் தகராறா இருக்கு..) ஆனா, இப்ப என்னன்னா, ஒவ்வொரு பதிவு எழுதும்போதும் அதை  இணைக்கவோ, ஓட்டு போடவோ, மற்றவர்களின் பதிவுகளுக்கு ஓட்டு போடவோ செய்யணும்னா, அதுக்கு ஒவ்வொரு முறையும் லாகின் செஞ்சு, புது ஜன்னல் (தானே) திறந்து, ஓட்டுப் பட்டனைத் தேடி, கிளிக்கி, அதை மூடி... ஸ்ஸப்பா... இதுக்குப் பயந்தே ஓட்டு போட சோம்பலா இருக்கு.

1. ஒவ்வொரு புது பதிவிற்கும், நாம் சென்று இணைப்பதைவிட, ஏன் இந்தத் திரட்டிகள் தம்மிடம் ரிஜிஸ்டர் செய்துகொண்டவர்களின் பதிவுகளைத் தானாகவேத் திரட்டிக் கொள்ளக் கூடாது? (இண்டி பிளாக்கர் இப்படித்தான் செய்கிறது)

2. பதிவுகளுக்கு ஓட்டு போட, அந்த ஓட்டுப்பட்டையைக் கிளிக்கினால், புது Window/tab திறக்காமலே ஓட்டு சேரும்படி ஏன் செய்யவில்லை? (யுடான்ஸ் பட்டை இப்படித்தான் செயல்படுகிறது)

இதெல்லாம் எல்லாப் பதிவர்களுக்குமே இருக்கும் கோரிக்கைகள்னு நினைக்கிறேன். திரட்டிகளிடம் சொல்லுவோமா? சங்கம் வச்சுச் சொன்னாத்தான் மதிச்சுக் கேப்பாய்ங்களோ? :-)))))))

-o0o-o0o-o0o-

பாகிஸ்தானைச் சேர்ந்த “அர்ஃபா கரீம்” என்கிற 16 வயதுப் பெண் ஜனவரி 14 அன்று இறந்துவிட்டாள். இவள், 9 வயதிலேயே, மைக்ரோஸாப்டின் தேர்வுகள் எழுதி, கின்னஸ் சாதனை புரிந்தவள். இதன்மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தால், மேலும் பலப்பல விருதுகளும், பாராட்டுகளும் பெற்று, தொடர்ந்து செய்திகளில் இருந்து வந்தாள். நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாமல், ஆரோக்கியமாக இருந்தவள். மற்ற சில ஆய்வுகளோடு, தனது ”O” லெவல் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவள், திடீரென வலிப்பு வந்து கோமாவில் ஆழ்ந்து அப்படியே போயும்விட்டாள்.

மிகச்சிறுவயதிலேயே சாதனை புரிபவர்களைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம் போன்ஸாய் மரம்தான் நினைவுக்கு வருகிறது.

-o0o-o0o-o0o-

ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில், ஏதாவது குற்றம் நடந்தால், அதற்குக் கண்ணால் கண்ட சாட்சிகள் அல்லது சிசிடிவிதான் முக்கிய ஆதாரம்.  அப்படி ஜனங்க நிறைஞ்ச இடத்துல ஒரு குற்றம் நடந்து, ஆனா யாருமே அதைப் பாத்திருக்க முடியலைன்னா எப்படி இருக்கும்? (நோ, நோ.. நான் நம்ம ஊர்ல பட்டப்பகல்ல நடுவீதியில் ரவுடிங்க கொலையே பண்ணாலும், நாம யாருமே “பாத்திருக்க” மாட்டோமே, அதைச் சொல்லலை... ) இதுல நிஜமாவே நம்மால “பார்க்க” முடியாது.  குழப்புறேனா? இது ஒரு கண்கட்டு வித்தை மாதிரின்னு கற்பனை பண்ணிக்கோங்களேன்.. புரியும்..

அதாவது, ஒரு பொருளை நாம ”பாக்கிறோம்” அப்படின்னா என்ன அர்த்தம்? ஒளிக்கற்றைகள் அந்தப் பொருளின்மேல் பட்டு, பின் நம் கண்ணில் பிரதிபலிக்கின்றன. இந்த நிகழ்வைத்தான் “பார்ப்பது” அப்படின்னு சொல்றோம். ஆனா, ஒளிக்கற்றைகளை அந்தப் பொருளின்மேல் விழாமல் செய்துவிட்டால், அந்தப் பொருள் இருப்பதே நமக்குத் தெரியாது இல்லியா? (லைட் ஆஃப் பண்ணாலும் தெரியாதேன்னு சின்னப்புள்ளத்தனமாச் சொல்லக்கூடாது :-)))) ) 

அதாவது, ஒரு சிறிய கருவியின் உதவியோடு, ஒரு குறிப்பிட்ட பொருளின்மீதோ அல்லது ஒரு இடத்தின்மீதோ விழக்கூடிய ஒளிக்கற்றைகளைத் தடுத்துவைத்து, சிறிது நேரம் கழித்து அனுப்பினா, குறிப்பிட்ட அந்த நேர இடைவெளியில் (time delay) அந்த இடத்தில் நடந்தவைகளை நாம் காண முடியாது.  புரியும்படிச் சொல்லணும்னா, ட்ராஃபிக் ஜாம்ல மாட்டிகிட்டா போய்ச்சேர வேண்டிய இடத்துக்கு லேட்டாப் போய்ச் சேருவோம்ல, அதுமாதிரி ஒளிக்கற்றைகளையும் (light rays)  தாமதப்படுத்துவது!!


ரெண்டு வாரம் முன்னே, ஆராய்ச்சியின் ஆரம்பநிலையில் உள்ள விஞ்ஞானிகள், இந்த முறையில் 50 trillionths of a second என்ற மிகநுண்ணிய நேர அளவுக்கு time delay செஞ்சு காமிச்சிருக்காங்க. இதற்கு “time cloak" - நேரத்தை மறைக்கும் அங்கி என்று பெயர் சூட்டிருக்காங்க. 

எனக்கு ஒரு சந்தேகம், ஒளியை மறைக்கலாம்; ஒலி?  மறைக்கப்பட்ட நிகழ்வினால் எழும் சத்தத்தை எப்படி மறைப்பாங்க?

-o0o-o0o-o0o-

இதுவும் பதிவுலகு சம்பந்தப்பட்டதுதான். இப்ப “பஸ்”ஸை இழுத்து மூடிட்டதால, பிளாக்கிலருந்து அங்கே போன பதிவர்களில் நிறைய பேர் மீண்டும் பிளாக்குக்குத் திரும்பி வர ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களை வரவேற்கிறேன்.  சிலபேரு டிவிலருந்து சினிமாவுக்குப் போய், அங்கே மார்க்கெட் போனதும், மறுபடியும் டிவிக்கு வருவாங்க. இல்ல.. ஞாபகம் வந்துச்சு.. சொன்னேன்... :-))))

-o0o-o0o-o0o-

Post Comment

35 comments:

அம்பிகா said...

உங்கள் டிரங்குபெட்டி ரொம்ப உபயோகமான டிரங்குபெட்டி. அடிக்கடி திறக்கலாமே!!!

ஸ்ரீராம். said...

டிரங்குப் பெட்டின்னா பழைய விஷயங்கள் வரணும். இங்க எல்லாம் புதிய விஷயங்களா இருக்கு. நிறைய தெரிஞ்சிகிட்டேன்.
திரட்டிகள் பற்றி நீங்கள் சொல்வது முற்றிலும் சரி....என் வோட்டும் இதற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிராஜ் said...

சலாம் சகோ ஹுசைனம்மா,

இது தான் உங்கள் தளத்திற்கு முதல் விசிட். ரொம்ப சுவாரசியமான தொகுப்பு. பல தளங்களை தொட்டுள்ளீர்கள். இதை போன்று நிறைய பேர் எழுதுகிறார்கள், ஆனால் அவற்றில் பெரும்பாலும் சினிமாதான்.

மோகன் குமார் said...

பஸ் பற்றிய கடைசி கமன்ட் தவிர மற்றவை மிக ரசித்தேன்.

வித்யா said...

யப்பா. எவ்ளோ டீடெய்ல்ஸ். நல்லாருந்துச்சு.

எம் அப்துல் காதர் said...

// எனக்கு ஒரு சந்தேகம், ஒளியை மறைக்கலாம்; ஒலி? மறைக்கப்பட்ட நிகழ்வினால் எழும் சத்தத்தை எப்படி மறைப்பாங்க? //

# டவுட்டு எங்களுக்கும் தான்.சீக்கிரம் அதையும் படித்து எங்களுக்கு தெளிவு படுத்துங்க ஹுசைனம்மா.

இந்த தடவை டிரங்கு பெட்டியில் ஜோடனைகள் ஜோர்.. ஜோர்..

S.Menaga said...

சுவையான தகவல்களுடன் டிரங்குப்பெட்டி அசத்தல்!!

காற்றில் எந்தன் கீதம் said...

நல்ல பல விஷயங்கள் சொல்லுறீங்க ஹுசைனம்மா..

//சின்ன வயதில் சாதிப்பவர்களை பார்க்கும போது போன்சாய் மரம தான் நினைவுக்கு வருகிறது//
எனக்கும்..

பீர் | Peer said...

:-)

சிநேகிதி said...

டிரங்குப்பெட்டியில் நிறைய பயனுள்ள விஷயங்கள் இருக்கு...

புதுகை.அப்துல்லா said...

இப்ப “பஸ்”ஸை இழுத்து மூடிட்டதால, பிளாக்கிலருந்து அங்கே போன பதிவர்களில் நிறைய பேர் மீண்டும் பிளாக்குக்குத் திரும்பி வர ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களை வரவேற்கிறேன். சிலபேரு டிவிலருந்து சினிமாவுக்குப் போய், அங்கே மார்க்கெட் போனதும், மறுபடியும் டிவிக்கு வருவாங்க. இல்ல.. ஞாபகம் வந்துச்சு.. சொன்னேன்... :-))

//

என்னைய நேரடியாவே திட்டி இருக்கலாம் :)))

நட்புடன் ஜமால் said...

back draft, flashover வைத்து ஒரு சிறந்த கதை எழுதலாம் போல் இருக்கு,

நல்ல நிறைய தகவல்கள்,

-------------
திரு மோகன் குமார் அவர்கள் சொன்னதை நானும் ஒருக்கா சொல்லிக்கிறேன் ...

சுவனப்பிரியன் said...

டிரெங்குப் பெட்டியில் பல உபயோகமான தகவல்களை தெரிந்து கொண்டேன்.

கீதா said...

அறிவியல் செய்திகளை சுவாரசியமாகத் தருவதோடு நல்ல தெளிவான நடையில் எழுதிப் புரியவைக்கிறீங்க. உங்கள் முயற்சிக்கு பெரும் பாராட்டு. இளம் மேதைகள் பற்றிச் சொன்னது ரொம்பவே மனம் பாதித்தது. அவர்களுக்கு திணிக்கப்படும் மன அழுத்தமே அவர்களுடைய வாழ்வைப் பறித்திடுமோ?

இன்னும் எனக்கு எந்த திரட்டியிலும் ஓட்டுப் போடத் தெரியல. தெளிவான வழிமுறைகள் இருந்தால் எளிதில் கற்றுக்கொள்ளலாம்.

கடைசிச்செய்தியில் உங்க உவமையை வெகுவாக ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி ஹூஸைனம்மா.

கோமதி அரசு said...

பனிப்பொழிவினால் உடல் உறுப்புகள் மரத்துப் போதலைத் தவிர்க்க (Frost bite) சோற்றுக் கற்றாழையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட க்ரீம் தற்போது மார்க்கெட்டில் கிடைக்கிறதாம். அணுக்கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து தப்பிக்க துளசியைக் கொண்டு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சிப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாம். ஸ்வெட்டர் போன்ற கம்பளித் துணிகளில் பூஞ்சைக் காளான் பிடிக்காமல் இருப்பதற்கும் ஸ்ப்ரே, பனிமலைகளில் உபயோகிக்கத்தகுந்த (அண்டார்டிகாவில் கிடைக்கும் ஒருவகை பாக்டீரியாக்களைப் பயன்படுத்தும்) கழிவறைகளும் இந்தப் பட்டியலில் உண்டு.//

குளிர் பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு நல்ல செய்தி.

டிரங்கு பெட்டி நல்ல பல செய்திகளை சொல்லி இருக்கிறது.
டிரங்கு பெட்டிக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.

ஸாதிகா said...
This comment has been removed by the author.
அரபுத்தமிழன் said...

டிரங்குப் பொட்டி செம வெயிட்டு,
நிறைய அறிவார்ந்த தகவல்கள்.
ஹாஜியார்னா சும்மாவா :)

ஹுஸைனம்மா said...

@ வக்கீல் சார்
@ ஜமால்
மற்றும்

//புதுகை.அப்துல்லா said...
என்னைய நேரடியாவே திட்டி இருக்கலாம்//

இதை ஒரு நகைச்சுவையாகவேச் சொன்னேன். சினிமாவுலயாவது மார்க்கெட் போனாத்தான் திரும்பி டிவிக்கு வருவாங்க. ஆனா பஸ்ஸை நிறுத்தியதால்தானே நீங்கல்லாம் மறுபடி (அதுவும் கொஞ்சமாத்தான் - இன்னும் ப்ளஸ்லயும், டிவிட்டர்லயும் நிறைய மக்கள்ஸ் இருக்காங்க) பிளாக் பக்கம் மீண்டு வந்திருக்கீங்க. இல்லன்னா வந்திருப்பீங்களா?

எனக்கு ப்ளஸ்ஸில் ஆர்வம் இல்லை என்பதால் போகவில்லை. (எனக்குத்தான் சுருக்கமா பேசவே வராதே) இங்கேயே இருந்துவிட்டேன். இல்லைன்னா, நானும்தானே ‘திரும்பி’ வந்திருப்பேன்!!

அதுவும் போனவங்களும், வந்தவங்களும் என்னைவிட சீனியர் பதிவர்கள். அவங்க திரும்பி வந்ததுல எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. யோசிங்க, என் பதிவுக்கு நீங்க கமெண்ட் எழுதி எத்தனை மாசமாச்சு? இப்ப வந்துட்டீங்க. இது இனி தொடரும் என நான் நம்புகிறேன். :-)))))

RAMVI said...

டிரங்கு பெட்டியில் நல்ல பயனுள்ள எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் கொடுத்திருக்கீங்க.
ஒளிக்கற்றைகளைப்பற்றிய ஆராய்ச்சி தகவல் சிறப்பாக இருக்கு.

கோவை2தில்லி said...

இந்த முறை டிரங்குப் பெட்டியில் சுவாரசியமான, அதே சமயம் பயனுள்ள தகவல்களும் கிடைத்தது.

VANJOOR said...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்


1.
காணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .
மழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.


.

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

2. ---- >
புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
< ----

அமுதா கிருஷ்ணா said...

செய்திகள் அத்தனையும் தெரிந்து கொண்டோம்.

ஸாதிகா said...

இந்த முறை டிரங்கு பொட்டி வாசனை தூக்கல் ஹுசைனம்மா.திரட்டிகள் பற்றிய பகிர்வு..ம்ம்..நீங்கள் சொல்வதைப்போன்று இருந்தால் மிக வசதியாக இருக்கும்.

அமைதிச்சாரல் said...

ஒளியை மறைக்கிறதுக்கான தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிச்ச மாதிரி ஒலியை மறைக்கிற நுட்பத்தைக் கண்டுபிடிக்கவும் உக்காந்து யோசிப்பாங்களோ???????

வல்லிசிம்ஹன் said...

திரட்டிகளில் இணைப்பது படா வேலையாக இருக்கிறது.
செய்வதில்லை. ட்ரன்க்பெட்டியில் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன் ஹுசைனம்மா.
ப்ளஸ்ல இணைத்தாலும் நம் வலையில் பின்னூட்ட்டம் பார்க்கும் போது ஏற்படும் சந்தோஷம் தனி.ப்ளஸ் ஒரு கருத்துப் பரிமாற்றமே.

புதுகைத் தென்றல் said...

நிறைய்ய மேட்டர் தெரிஞ்சுகிட்டேன். அந்த கடைசி பாரா........... :))) சூப்பர் ஹுசைனம்மா

ஹுஸைனம்மா said...

அம்பிகா - வாங்க. ரொம்ம்ம்ம்ப நாள் கழிச்சு பாக்கறதுல ரொம்ப சந்தோஷம்!!

ஸ்ரீராம் சார் - //டிரங்குப் பெட்டின்னா பழைய விஷயங்கள் வரணும். இங்க எல்லாம் புதிய விஷயங்களா//

அதுவா.... நாங்கல்லாம் புதுமையில் பழமை காணும் யூத்து!! :-)))

சிராஜ் - ஸலாம். வாங்க. வாங்க.
//அவற்றில் பெரும்பாலும் சினிமாதான்//
நல்லவேளை, நான் சினிமாபத்தி இதுல எழுதல. அதனால தப்பிச்சேன்!! :-)))))

ஹுஸைனம்மா said...

மோகன் - வாங்க. நன்றி.

வித்யா - நன்றிங்க!!

எம். அப்துல்காதர் - பாய்!! எங்கே ஆளையேக் காணோம்?

//சீக்கிரம் அதையும் படித்து எங்களுக்கு தெளிவு படுத்துங்க// அதை எங்கே போய் நான் தேடுவேன்??!!

ஹுஸைனம்மா said...

மேனகா - வாங்கப்பா. நன்றி.

காற்றில் எந்தன் கீதம் - நன்றிங்க.

பீர் - சிக்கனத்திலகம், ஸ்மைலி மட்டும்தானா? (இதுக்கு “வாய்த் திறந்து பேசுனா முத்தா உதிர்ந்திடும்” அப்படின்னு அர்த்தம் பண்ணிக்கப்படாது, ஓகே?)

சிநேகிதி - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

அப்துல்லா - சின்ஸியரான விளக்கத்துக்கப்புறமும் ஆளைக் காணோம்? (ஹூம்.. சொன்னமாதிரி திட்டியிருந்தா, கூட பத்து (சண்டை) பின்னூட்டங்களும், கொஞ்சம் ஹிட்ஸும் கிடைச்சிருக்குமே... ஐ மிஸ்ட் இட்!!)

சுவனப்பிரியன் - நன்றிங்க.

கீதா - நன்றிங்க. //அவர்களுக்கு திணிக்கப்படும் மன அழுத்தமே அவர்களுடைய வாழ்வைப் பறித்திடுமோ? // ஆமாங்க, அர்ஃபாவின் மரணத்தில் எனக்கும் அந்தச் சந்தேகம் உண்டு!!

ஹுஸைனம்மா said...

கோமதிக்கா - வருகைக்கும், கருத்துக்கும் நன்றிக்கா!!

அரபுத் தமிழன் - //பொட்டி செம வெயிட்டு//
அப்ப போர்ட்டர் வச்சுக்கோங்க!! :-)))))

ராம்வி - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

கோவை2தில்லி - நன்றிங்க.

அமுதா - நன்றிங்க. //செய்திகள் அத்தனையும் தெரிந்து கொண்டோம்.//
அப்ப, உடனே பதில் எழுதுங்க!!
(புரியலயா? அந்தக் காலத்துல(!!), கடிதங்கள்ல, “லெட்டர் பார்த்து செய்திகள் அத்தனையும் தெரிந்து கொண்டோம்” அப்படின்னு ஒரு வரி கண்டிப்பா இருக்கும், அதான் கலாய்ச்சேன்!!)

Chitra said...

ஐந்து வருட இடைவெளியில் இரட்டை குழந்தை, வித்தியாசமான செய்தி. தகவல் பகிர்வுகளுக்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுவாரசியம் ..வழக்கம் போலவே..

இன்னும் ப்ளஸ் ல தான் இருக்கோம்.. :)

கவிதா | Kavitha said...

இன்னைக்கு தான் எப்பவும் போல மொத்தமா எல்லா பதிவுகளையும், சேர்த்து படிச்சேன். :) இந்த பதிவில் ஒரு தகவலை என் பதிவுக்கு எடுத்துக்கறேன். எப்ப பதிவிடுவேன்னு தெரியல