Pages

பதினேழாம் வாய்ப்பாடு
சென்ற வாரம் தோனி படம் பார்த்தோம். நல்ல படம். நல்ல மெஸேஜ் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். அதாவது, மாணவர்களுக்கு விருப்பமானதைப் படிக்க விடுங்கள், திணிக்காதீர்கள் என்று சொல்றாங்க. இதுவரை ஓகே, fine. ஆனால், எல்லாப் பாடங்களிலும் ஒரு அடிப்படை அறிவு என்பது அவசியம்தானே?

உதாரணமாக, ஒரு எஞ்சினியர் தொழிற்சாலைத் தொடங்குகிறார் என்றால், அவருக்குத் தொழிற்நுட்ப அறிவு கண்டிப்பாக வேண்டும். அத்தோடு, ‘மேலாண்மை’, ‘கணக்கியல்’, போன்றவற்றிலும் அடிப்படை அறிவு இருந்தால்தானே தொழிற்சாலையைச் சரியாக நிர்வகிக்க முடியும்? அட, அதுக்குன்னு ஆட்களை நியமிச்சாலுங்கூட, அவர்கள் சொல்லும் கணக்கைப் புரிந்துகொள்ளும் அளவுக்காவது அந்தத் துறைகளைத் தெரிஞ்சு வச்சிருக்கணும்ல?

அதேபோல, ’கணக்கு’ என்கிற பாடம் எல்லா துறைகளுக்கும் அடிப்படை. ஆனால், படத்திலோ மாணவன், அடியோடு அதை வெறுத்து, அதைப் புரிந்துகொள்வதற்குத் துளிகூட முயற்சி எடுக்கவில்லை. எனக்கும் 12-ம் வாய்ப்பாடே திணறத்தான் செய்யும். இன்றைக்கும் வாய்ப்பாடு பயன்படுத்த வேண்டிவந்தால், அதைப் பத்து, பத்தாகப் பிரித்து எளிமைப் படுத்தி பெருக்கி, கூட்டிச் சொல்லத்தான் தெரியுமே தவிர, வாய்ப்பாடுகள் மனப்பாடமாகத் தெரியாது.

படம் முழுதும், பிரகாஷ் ராஜ், செவண்டீன் எய்ட்ஸ் ஆர் எவ்வளவு தெரியுமா என்று பார்ப்பவர்களிடமெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கிறார். எனக்கோ யோவ், அது பைத்தெட்டு எம்பது, ஏழெட்டு அம்பத்தாறு, ஆக நூத்துமுப்பத்தாறு என்று கத்தணும் போல இருந்தது. (17x8 = (10x8) + (7x8) = 136)

கணக்கிலும், அறிவியலிலும் அந்த மாணவன் ஒற்றை இலக்க மதிப்பெண்களே எடுக்கிறான். விளையாட்டில் ஆர்வம் இருக்க வேண்டியதுதான். ஆனால், அடிப்படைப் பாடங்களைத் துறந்துதான் ஆர்வம் காட்ட வேண்டுமென்றில்லை. பாடங்கள், விளையாட்டு இரண்டிலுமே அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளுமளவுக்காவது ஆர்வம் இருக்க வேண்டும். கணக்கில் ஆர்வம் இருப்பதால், மொழிப் பாடத்தைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்றில்லை; தமிழ் பிடிக்கும் என்பதால் அறிவியலை ஒதுக்கக் கூடாது. அதே போலத்தான் விளையாட்டும்கூட.

ஒருவேளை கணக்கையும், அறிவியலையும் எளிதாக்கிச் சொல்லித் தரும் ஆசிரியர்கள் அவனுக்கு வாய்க்கவில்லையோ என்னவோ? நல்ல ஆசிரியர்கள் கிடைப்பதும் வரமே. இந்தச் செய்தியையும் படத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கலாம்.

இன்னொன்றும் சொல்ல வேண்டும். விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், மாவட்ட, மாநில, தேசிய அணிகளில் சேர்ந்து விளையாட வேண்டுமென்றால், பள்ளி/கல்லூரிகளின் மூலம்தானே எளிதாகச் சேரமுடியும்? அதற்காகவாவது பாஸ் மார்க் எடுக்க வேண்டாமா? ஏன், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கல்லூரி சீட், வேலைவாய்ப்புப் பெற வேண்டுமென்றால்கூட, இந்தப் பாடங்களைப் படித்து பாஸ் செய்தால்தானே முடியும்? கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் வரும்போது ஒருவேளை இந்நிலை மாறலாம். ஆனால், தற்போது இந்தக் கல்வித் திட்டத்தைத்தானே பின்பற்றியாக வேண்டும்.

படத்திலோ மாணவன், திமிராகப் பேசுவது சரியெனவேச் சித்தரிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. அதென்ன எப்பப் பாத்தாலும், ‘பிடிக்கலை, பிடிக்கலை’ன்னே சொல்லிகிட்டிருக்கிறான்? ’புரியவில்லை’ என்று சொன்னால், சற்றேனும் ஈடுபாடு இருப்பதாகவும், முயற்சி செய்பவனாகவும் கொள்ளலாம். தன் தந்தை பணத்திற்காகப் படும் கஷ்டங்களை உணர்ந்தவனாகவும் தெரியவில்லை.  இதைப் பார்க்கும் மாணவர்கள் தவறாகவே புரிந்துகொள்வார்கள். என் மகனிடமும் மேற்சொன்ன விஷயங்களை எடுத்துச் சொன்ன பிறகே எனக்கும் நிம்மதி.

நல்லவராகக் காட்டப்படும் ’கோச்’சாவது நிதர்சனங்களை எடுத்துச் சொல்லியிருக்கலாம். தோனின்னா அவ்ளோ உசிரா இருக்கிறவன், தோனியின் புள்ளிவிவரங்களை மனப்பாடம் ஆக்கி வைத்திருக்கிறவன், கிரிக்கெட் உலகின் ஸ்டாராக இருக்கிற இந்த நேரத்திலும், தோனி B.Com. படிப்புக்கானத் தேர்வுகள் எழுதி வருவதையும் தெரிந்து வைத்திருக்கலாம்!!

என்னைப் பொறுத்தவரை, தன் வருமானத்துக்கு மீறீய வகையில் செலவு செய்து பெரிய பள்ளியில் படிக்கவைக்கும் பிரகாஷ் ராஜ்தான் (உடனடியாக) மாறவேண்டியவர். மகனுக்கு ஆர்வம் படிப்பில் இல்லை, கிரிக்கெட்டில்தான் என்று தெரிந்ததும் செலவு குறைந்த (அரசு) பள்ளியில் சேர்த்துவிட்டு, கிரிக்கெட் கோச்சிங்கிற்குச் செலவழித்திருக்க வேண்டும். படத்தில் இதை யாருமே அவருக்கு எடுத்துச் சொல்லவில்லை!! கல்வித் திட்டம் மாற்றப்பட வேண்டியதுதான். ஆனால் உடனடி மாற்றங்கள் தேவைப்படுவது பெற்றோர்களிடத்தில்தான் என்பது என் கருத்து.

சொல்ல வந்தது நல்ல விஷயம்; சொல்லப் பட்டிருப்பதோ தவறான மெஸேஜ். Miscommunication!!


Post Comment

47 comments:

ஸாதிகா said...

எனக்கோ யோவ், அது பைத்தெட்டு எம்பது, ஏழெட்டு அம்பத்தாறு, ஆக நூத்துமுப்பத்தாறு என்று கத்தணும் போல இருந்தது. (17x8 = (10x8) + (7x8) = 136)
///அடடா..சூப்பர் ஐடியாவா இருக்கே...!

DHANS said...

excellent view, I have also thought the same.

when i was doing schooling I have been told to mug up up to 16th table that is also up to 16th.

no one knows 17th table by heart in tamilnadu I beleive.

பாச மலர் / Paasa Malar said...

உண்மைதான் ஹுஸைனம்மா...கருத்தைத் தெளிவாகச் சொல்லாமல் முரடாகச் சொல்லிச் சொதப்பிவிட்டதாகத்தான் நானும் உணர்ந்தேன்....

Starjan (ஸ்டார்ஜன்) said...

வித்யாசமான பார்வை ஹூசைனம்மா.. இப்படிக்கூட இருக்கலாமோ என்று யோசிக்க வைத்தது!!!... சரியா சொன்னீங்க.. தன்னுடைய பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்லா இருக்க வேண்டும் என்று பெற்றோர் நினைப்பது தப்பா?.. இந்த படத்தில் தந்தையின் கனவுகள் பாதிபடத்துக்கு மேல் சுக்குநூறானதே.. அதுவும் அந்த டிவி நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜ் வாதிடும் காட்சிகள் அருமை. பெற்றோர்கள் கண்டிப்பது தன் நலனுக்காகத்தான் என்று தெரியாமல் வீணாபோகும் பிள்ளைதான் அந்த பையன்.

இது ஒரு சினிமா அவ்வளவே!!.. மற்றபடி வாழ்க்கை வேறு!.

நல்ல பகிர்வு ஹூசைனம்மா.

சாந்தி மாரியப்பன் said...

//எனக்கோ யோவ், அது பைத்தெட்டு எம்பது, ஏழெட்டு அம்பத்தாறு, ஆக நூத்துமுப்பத்தாறு என்று கத்தணும் போல இருந்தது. (17x8 = (10x8) + (7x8) = 136)//

நம்மூர்ல இப்படித்தான் மனக்கணக்காவே எத்தனை பெரிய கணக்கானாலும் தீர்வு சொல்லிருவோம்.. இங்கியும் ஸ்கூல்ல அந்த முறை உண்டு. ஆனா பய புள்ளைக அதையும் மனப்பாடமாவே உருப்போட நினைக்கிறதுதான் கொடுமை.. நாம சொன்னாலொழிய இப்படி பிரிச்சு கணக்குப் போடலாம்ன்னு தோணாது..

கோமதி அரசு said...

நல்லவராகக் காட்டப்படும் ’கோச்’சாவது நிதர்சனங்களை எடுத்துச் சொல்லியிருக்கலாம். தோனின்னா அவ்ளோ உசிரா இருக்கிறவன், தோனியின் புள்ளிவிவரங்களை மனப்பாடம் ஆக்கி வைத்திருக்கிறவன், கிரிக்கெட் உலகின் ஸ்டாராக இருக்கிற இந்த நேரத்திலும், தோனி B.Com. படிப்புக்கானத் தேர்வுகள் எழுதி வருவதையும் தெரிந்து வைத்திருக்கலாம்!!//

நன்றாக சொன்னீர்கள் ஹுஸைனம்மா.

கௌதமன் said...

நியாயமான வாதம்.

ADHI VENKAT said...

நீங்க சொல்லியிருப்பது மிகச்சரியானது. இந்த படத்தை பார்க்கும் மாணவர்கள் அப்படித் தான் யோசிப்பாங்க. அதை தான் உதாரணமா எடுத்துப்பாங்க.

கல்வித் திட்டமும் மாற்ற வேண்டியது தான்.ஒண்ணாம் கிளாசில் பன்னிரெண்டாம் வாய்ப்பாடு வரை தேவை தானா என்று தான் சில சமயம் தோன்றுகிறது.

ஷர்புதீன் said...

சினிமாகேன்றே சில மிகைபடுத்தல்கள் தவிர்க்க இயலாதவையே., அப்படி எடுத்தால் வெகுஜன சினிமாவாக இருக்காது!


சினிமா பார்க்கும் வெகுஜன மக்களுக்கு உங்களை /என்னை போன்று
கேள்வி கேட்க தெரியாது. இன்றும் கூட சினிமா பார்த்து கெட்டு போகிறவர்கள் சினிமாவை "பார்க்க" தெரியாதவர்களே, அவர்களுக்கு இந்த மாதிரியாக எடுத்தால்தான் புரியும், நம்மை போன்று அலசி ஆராயுபவர்களுக்கு இரானிய சினிமா போன்றுதான் எடுக்கணும்.

ரவுடியாக நடிச்சு படம் எடுத்து கூட பிரகாஷ் ராஜால் சம்பாதிக்க முடியும், ஏதோ இந்த மாதிரியாவது சொல்கிறாரே என்று சந்தோசப்படுவோம்!

உங்களின் விமர்சனம் பரந்து சிந்திப்பவர்களுக்கு புடிக்கும்! தேவையும் அதுவே!

CS. Mohan Kumar said...

வட போச்சே !

நானும் இதே மாதிரி கருத்தை தான் இப்படம் பற்றி எழுத நினைத்தேன். சில விஷயத்தை தள்ளி போட கூடாது சுட சுட முடிச்சிடனும். இப்ப பாருங்க ஹுசைனம்மா முந்திக்கிட்டாங்க. (க்கும். எப்ப வந்த படத்தை பத்தி எவ்ளோ நாள் எழுதாம இருந்துட்டு இங்கே வந்து புலம்புறதை பாரு)

கீதமஞ்சரி said...

\\எனக்கோ யோவ், அது பைத்தெட்டு எம்பது, ஏழெட்டு அம்பத்தாறு, ஆக நூத்துமுப்பத்தாறு என்று கத்தணும் போல இருந்தது.\\

எனக்கும் இப்படிதான் தோன்றியது. ஒரு எளிய வழிமுறை இருக்கும்போது எதற்கு தலையைச் சுற்றி மூக்கைத் தொடவேண்டும்?

அதுபோல் தகுதிக்கு மேல் செலவு செய்து படிக்கவைப்பதும் தேவையில்லாதது. நன்றாகப் படிக்கும் பிள்ளையாயிருந்தாலும் பரவாயில்லை.

முதலில் தன் தரப்புத் தவறைத் திருத்திக்கொண்டு மற்றவர்களைக் குறை சொல்லவேண்டும்.

நல்ல பரந்த விமர்சனக் கருத்து. பாராட்டுகிறேன் ஹூஸைனம்மா.

Menaga Sathia said...

வித்தியாசமான பார்வை,இதை பைத்த பிறகுதா எனக்கும் புரிந்தது இப்படியும் சொல்லியிருக்கலாம் என்று...பாராட்டுக்கள் ஹூசைனம்மா!!

ராமலக்ஷ்மி said...

படம் பார்க்கவில்லையென்றாலும் சில காட்சிகள் சேனல் ஒளிபரப்பில் பார்த்தேன்./படத்திலோ மாணவன், திமிராகப் பேசுவது சரியெனவேச் சித்தரிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. அதென்ன எப்பப் பாத்தாலும், ‘பிடிக்கலை, பிடிக்கலை’ன்னே சொல்லிகிட்டிருக்கிறான்?/ எனக்கும் தோன்றியது.

உங்கள் அத்தனை கருத்துகளையும் ஆமோதிக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

பத்திரிகைகளும், பதிவுகளும் பாராட்டு மழை பொழிந்த படமாச்சே,நாம் மாற்றுக் கருத்துச் சொன்னா எடுபடுமோ, சண்டைக்கு வருவாங்களோன்னு நினைச்சேன். என்னைப் போலவே நிறைய பேர் நினைச்சிருக்கீங்கங்கிறது ஆறுதலாவும், ஊக்கமாகவும் இருக்கு!! அனைவருக்கும் ந்னறி!!

ஹுஸைனம்மா said...

ஷர்ஃபுதீன் - மிகைப்படுத்தல்கள் இருக்கலாம். ஆனால், தவ்றான வழிகட்டுதல்கள் இருக்கக்கூடாது. இந்தப் படம் அப்படித்தான் இருக்கீறது.

மோகன் - ஆஹா, நானே ‘லேட் ரங்கம்மா’வா விமர்சனம் எழுதிருக்கேன். நீங்க பிஸியாயிருக்கதுனால மிஸ் பண்ணிட்டீங்க போல. நல்லவேளை!! :-))))) நீங்களும் உங்க ’பார்வை’யை எழுதுங்க, சுவாரசியமாத்தான் இருக்கும். முக்கியமா உங்க மகளின் கருத்தையும் கேட்டு எழுதுங்க.

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா
தன்ஸ்
பாச மலர்
ஸ்டார்ஜன்
அமைதிக்கா
கோமதிக்கா
கௌதமன் சார்
கோவை2தில்லி
கீதமஞ்சரி
மேனகா
ராமலக்ஷ்மிக்கா

அனைவருக்கும் நன்றிகள்!!

ஸ்ரீராம். said...

நான் படம் பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது சரியென்றே படுகிறது. அதுவும் குறிப்பாக அடிப்படை விஷயங்கள் அவசியம் என்பது. மொழியறிவு மிக அவசியம். மாறுதலாக எடுக்கிறோம் என்று என்னமோ செய்திருக்கிறார்கள் போலும். ஸ்ரீக்காந்த், கும்ப்ளே போன்றவர்கள் பொறியியல் படித்து விட்டு விளையாட வந்தவர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம்.....

சில விஷயங்கள் இப்படித்தான்.... 17-ஆம் வாய்ப்பாடு... கஷ்டம் தான்... :)))

சிநேகிதன் அக்பர் said...

என் மனதில் இருந்ததை நீங்க அழகா சொல்லிட்டீங்க.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்விக்கூடங்கள். இந்த நான்கில் மாணவனின் பிரச்சனையை மட்டுமே மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள் அவ்வளவே!

இது போல ஆசிரியர் தரப்பு நியாயங்களையும் வைத்து இன்னொரு படம் எடுக்கலாம் அதுவும் ’அட இவங்க சொல்றதும் சரிதானே’ என்று தோன்றும். (சமீபத்தில் நடந்த ஆசிரியை படுகொலை).

இப்படி அவரவர் தரப்புக்கும் ஒரு நியாயம் என்றுமே இருக்கத்தான் செய்கின்றன.

இதற்கெல்லாம் சம்பந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்விக்கூடங்கள். அனைவருக்கும் பொதுவான ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கு அரசு முயற்சி செய்ய வேண்டும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நம்மை ஆள்பவர்களுக்கு இதை விட வேறு வேலைகள் நிறைய இருக்கின்றன.

இந்த இடத்தில் நண்பர் இப்னு ஹம்தூன் விமர்ச்சனத்துக்கு இட்ட பின்னூட்டத்தை இணைப்பது பொருத்தமாக இருக்கும்.

//
படத்தோட மையக்கருத்து மிக அருமை, ஆனால் கிரிக்கெட் என்பது விளையாட்டு அல்லது கலையாகத்தான் பார்க்க முடியுமே ஒழிய தொழிலாக எடுத்துக்கொள்ள முடியாது.
எனக்குத்தெரிந்து நான் உட்பட அனைவருக்குமே படிப்பதை விட விளையாடத்தான் பிடிக்கும் அதற்காக அவரவர் இஷ்டத்திற்கு விட்டு விட முடியாது.

நம்மூரில் இன்னும் சில வீடுகளில் படிப்பு வராத பிள்ளைகளை ஏதாவது மளிகை கடை, டெய்லர் கடை, டீக்கடைகளில் சேர்த்து விடுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் விளையாட மட்டும் விட மாட்டார்கள். பிற்காலத்தில் அதே தொழிலில் சிறந்து விளங்குபவர்களையும் பார்த்திருக்கிறேன்.

உங்கள் நண்பர் சேமியா செய்வது போன்றவற்றை கூட சிறுதொழில் வகையில் சேர்க்கலாம்.

கலை, விளையாட்டு போன்றவற்றை பொழுது போக்காக செய்யலாமே தவிர அதையே எல்லோராலும் தொழிலாகக் கொண்டு வாழ முடியாது.

இந்த படத்தை பார்க்கும் பெரியவர்களை விட்டுவிடுவோம். பார்க்கும் குழந்தைகள் இனிமே படிக்காமல் விளையாண்டால் தப்பில்லை என நினைத்தால் என்ன செய்ய முடியும்? //

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகா சொல்லி இருக்கீங்க ஹுசனைம்மா.. கஷ்டம் இந்த சினிமாக்காரங்களோட..

baleno said...

நீங்கள் கூறியதை ஏற்று கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை தன் வருமானத்துக்கு மீறீய வகையில் செலவு செய்து பெரிய பள்ளியில் படிக்கவைக்கும் பிரகாஷ் ராஜ்தான் (உடனடியாக) மாறவேண்டியவர்.

மிகவும் சரி. நானும் நினைத்தேன்.

Seeni said...

naan padamellaam virumpi
paarkkura thilla!
nalla velai!

வல்லிசிம்ஹன் said...

கொஞ்சம் ஆர்வக் கோளாறு அதிகமாகி விட்ட மாதிரி தெரிகிறது.
தோனியினால் மாற்றங்கள் கொண்டு வரமுடியுமா தெரியவில்லை.
தந்தையின் புலம்பல்கள் அதிகம். பிள்ளையின் பிடிவாதம் அதிகம்.ஏற்கனவே சூப்பர் சிங்கரும் , நாட்டியங்களும் குழந்தைகளை வேறு வழிக்குக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றன.... பெற்றொரும் பணபுலன் படைத்தவர்களாக இருக்கும் பட்சத்தில் வேண்டுமானால் இது நடக்கலாம்.
தோனியில் நல்லதும் இருக்கு. மிஸ்லீடிங்காக செய்தி குழந்தைகளை அடையக் கூடாது. நல்ல பகிர்வு ஹுசைனம்மா.

அப்பாதுரை said...

interesting.

சிராஜ் said...

/* இன்னொன்றும் சொல்ல வேண்டும். விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், மாவட்ட, மாநில, தேசிய அணிகளில் சேர்ந்து விளையாட வேண்டுமென்றால், பள்ளி/கல்லூரிகளின் மூலம்தானே எளிதாகச் சேரமுடியும்? அதற்காகவாவது பாஸ் மார்க் எடுக்க வேண்டாமா? ஏன், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கல்லூரி சீட், வேலைவாய்ப்புப் பெற வேண்டுமென்றால்கூட, இந்தப் பாடங்களைப் படித்து பாஸ் செய்தால்தானே முடியும்? கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் வரும்போது ஒருவேளை இந்நிலை மாறலாம். ஆனால், தற்போது இந்தக் கல்வித் திட்டத்தைத்தானே பின்பற்றியாக வேண்டும். */

வெரி valid பாயிண்ட். Superb . மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ ஹுசைனம்மா.

சிராஜ் said...

சினிமா விமர்ச்சனம்னு சொல்லாமலே எவ்வளவு அழகா ஒரு படத்துக்கு விமர்ச்சனம் எழுதிட்டீங்க.. உங்ககிட்ட கத்துக்க வேண்டியது நெறைய இருக்குங்க சகோ... சினிமா விமர்ச்சனங்கள எதிர்ப்பவர்கள் கூட

இந்த போஸ்ட கண்டிக்கிறதா ஆதரிக்கிரதான்னு கொழம்பி இருப்பாங்க. அந்த குழப்பம் தான் உங்களோட வெற்றி ஹுசைனம்மா. கலக்குங்க....

சிராஜ் said...

/* சொல்ல வந்தது நல்ல விஷயம்; சொல்லப் பட்டிருப்பதோ தவறான மெஸேஜ். Miscommunication!! */

இது Good communication .ஹி.ஹி...ஹி ...

Radhakrishnan said...

:) தங்களின் பார்வை மிகவும் சரியான பார்வை என்றே கருதுகிறேன். கல்வி என்பது ஏதோ பள்ளிக்கூடத்திலும், கல்லூரியில் சென்று படிப்பது என்றே கருதுகிறார்கள்.

வாகை சூட வா என்றொரு படம் அரையணா கணக்கு எல்லாம் சொல்வார்கள். அந்த அரையணா கணக்கு எந்த பள்ளிக்கூடம் சொல்லி தந்தது.

கற்பவரின் ஆர்வமே எல்லாம். நல்லதொரு பதிவு சகோதரி.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - நன்றி.
வெங்கட் - நன்றி.
அக்பர் - இப்னுஹம்தூனின் பதிவின் லிங்கையும் தாருங்களேன். நல்ல கருத்துகள். அழகாச் சொல்லிருக்கீங்க.
முத்தக்கா - நன்றி.
பலேனோ - நன்றி.
சீனி - தேர்ந்தெடுத்த நல்ல படங்கள் பாருங்க. தப்பில்லை. நாங்க அப்படித்தான் பார்ப்போம்.
வல்லிமா - ஆமா, பசங்க எப்படி எடுத்துக்குவாங்கன்னுதான் கவலையாருக்கு.
அப்பாதுரை - நன்றி.
சிராஜ் - //சினிமா விமர்சனங்கள எதிர்ப்பவர்கள் கூட // எல்லாவற்றிலுமே நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. நீரைப் பிரித்து பாலை மட்டும் அருந்தும் அன்னம்போல வாழவேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கிறோம். கத்தி காயும் வெட்டும், கழுத்தும் வெட்டுமே.

இதுபோன்ற சில நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து குடும்பத்தோடு பார்ப்பதுண்டு சிராஜ்.

ஹுஸைனம்மா said...

சரிங்க, எல்லார்கிட்டயும் விடைபெற்றுக் கொள்கிறேன். இந்தியா செல்கிறேன் இன்றிரவு, இன்ஷா அல்லாஹ்.

ஒரு மாதம் உங்களுக்கெல்லாம் லீவு. எஞ்சாய்!! :-))))

இன்ஷா அல்லாஹ், திரும்பி வந்ததும் பார்ப்போம்.

சிநேகிதன் அக்பர் said...

http://www.inneram.com/opinion/cinema-opinion/dhoni-movie-review-3764.html

இதுதான் அந்த லிங்க்.

அன்புடன் மலிக்கா said...

ஹுசைனம்மா நலமா? ரொம்ப நாளைக்கப்புறம் எட்டிப்பார்த்தேன் வலைப்பக்கம் பதினேழாம் வாய்ப்பாட்டை படிக்கச்சொல்லுது பதிவு..

//பத்திரிகைகளும், பதிவுகளும் பாராட்டு மழை பொழிந்த படமாச்சே,நாம் மாற்றுக் கருத்துச் சொன்னா எடுபடுமோ, சண்டைக்கு வருவாங்களோன்னு நினைச்சேன். என்னைப் போலவே நிறைய பேர் நினைச்சிருக்கீங்கங்கிறது//

ஹா ஹா நாங்களெல்லாம் யாரு அவுங்கதானே நீங்க.

மனோ சாமிநாதன் said...

அலசல் அருமை ஹுஸைனம்மா! இன்றைய பெற்றோருக்குத் தேவையான கருத்துக்கள்!!

இன்னும் இந்தப் படம் பார்க்கவில்லை. உங்கள் கருத்துக்களைப் படித்த பிறகு பார்த்து விட வேன்டியது தான் என்று தோன்றுகிற‌து!

ஹேமா said...

நானும் படம் பார்த்தேன்.நீங்கள் சொன்ன விதம் அருமை !

மாதேவி said...

நான் படம் பார்க்கவில்லை.

நீங்கள் கூறியவை சரியானதாகவே தெரிகின்றது.

எல் கே said...

உங்களைப் பற்றி அதீதம் வலையோசையில் http://www.atheetham.com/?p=309

Vijayan Durai said...

நான் தங்களை என் பிலாகில் குறிப்பிட்டிருக்கிறேன்.நான் தங்களுக்கு வழங்கியுள்ள விருதை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
http://vijayandurai.blogspot.in/2012/04/blog-post.html

இமா க்றிஸ் said...

இன்னமும் இந்தப் படம் பார்க்கவில்லை ஹுஸைனம்மா. இப்போ பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. காரணம் உங்கள் இடுகை மட்டுமல்ல; இங்குள்ள கருத்துக்களும். ;)

அன்புடன் அருணா said...

அட! படம் இன்னும் பார்க்கவில்லை! ஆனால் அறிந்து கொண்டவற்றிலிருந்து A different perspective!

Unknown said...

நான் இன்னமும் படம் பார்க்கவில்லை.

பிள்ளைகளுக்கு பிடித்தை படிக்க வைப்பது சரி. அவர்கள் விளையாட்டு வீரனாக வேண்டுமென்றாலும் அதற்கும் அடிப்படை படிப்பு கண்டிப்பாக வேண்டும் எனும் உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

R. Gopi said...

நான் படம் பாக்கலை. இருந்தாலும் நீங்க சொன்னா சரியா இருக்கும்னு நம்புறேன். மோகன் குமாரும் நீங்க சொல்றது சரின்னே சொல்றார். அப்போ நிச்சயம் சரியாத்தான் இருக்கும்.

Unknown said...

படம் பற்றிய என்னோட கருத்தை அப்படியே பிரதிபலிச்ச மாதிரி இருக்கு இந்தப் பதிவு

Muniappan Pakkangal said...

well said Hussainamaa.Basic education is a must.The choice of profession is only after that.

கோபிநாத் said...

\\என்னைப் பொறுத்தவரை, தன் வருமானத்துக்கு மீறீய வகையில் செலவு செய்து பெரிய பள்ளியில் படிக்கவைக்கும் பிரகாஷ் ராஜ்தான் (உடனடியாக) மாறவேண்டியவர்.\\

கலக்கல் ;-))

விஜய் டியில் பேசுறேன்னு பேசுறது எல்லாம் செம இம்சை ! ;-)

சுசி said...

ரொம்ப சரியான பதிவு ! இன்றைய மாணவர்களிடம் படிப்பு சம்பந்தமான கேள்விகளை கேட்டு அவர்களை கஷ்ட படுத்த கூடாது. அவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறார் போல் சினிமா, கிரிக்கெட் பற்றி மட்டும் தான் கேட்கவேண்டும்.

கோமதி அரசு said...

ஹுஸைனம்மாவின் மகுடத்தில் மற்றுமொரு சிறகாகச் சேர்ந்திருக்கிறது, சென்ற வாரம் அறிவிப்பான, நேசம் அமைப்பும் யுடான்ஸ் திரட்டியும் நடத்திய ‘புற்றுநோய் விழிப்புணர்வுக் கட்டுரைப் போட்டி’யில் இவர் எழுதிய இரண்டு கட்டுரைகளும் இணைந்து தட்டிச் சென்ற முதல் பரிசு.அதீதம் பத்திக்கையில் //

வாழ்த்துக்கள் ஹுஸைன்ம்மா.
முதல் பரிசு பெற்றதற்கு.
மேலும், மேலும் இந்த மாதிரி நிறைய பரிசுகள் பெற வாழ்த்துக்கள்.
ராமலக்ஷ்மியின் பாராட்டு அற்புதம்.

ஹுஸைனம்மா said...

கருத்து தெரிவித்த ஆனைவருக்கும் நன்றிகள். எல்லாருமே என் கருத்தை வழிமொழிவது மகிழ்ச்சி தருகிறது. அப்போ, நானும் அப்பப்ப சரியாத்தான் பேசுறேன்!! :-D

நன்றிங்க எல்லாருக்கும்.