Pages

திறப்புவிழா


ஸ்ஸப்பா... வருஷா வருஷம் இது ஒரு வேலையாப் போச்சு. நம்மூர்ல போகிப் பொங்கலுக்கு இதைச் செய்வாங்க. நான் வருஷத்துக்கொருவாட்டி ஊருக்குப் போகும்போதெல்லாம் இதைச் செய்யவேண்டி இருக்கு...

என்னன்னு சொல்லாமலே புலம்பிகிட்டிருக்கேன் பாத்தீங்களா.. என் ரங்க்ஸும் இதத்தான் சொல்வாரு. முதல்ல விஷயத்தைச் சொல்லிட்டு அப்புறம் புலம்புன்னு. அப்படின்னா அவரும் கரெக்டாத்தான் சொல்லிருக்காரு போல.. நாந்தான் உடனே அதுக்கும் கூட நாலு புலம்பல் சேர்த்துப் புலம்புவேன்.

சரி..சரி.. நீங்களும் டென்ஷனாகாதீங்க..  வேறென்னங்க.. வருஷா வருஷம் லீவுல ஊருக்குப் போறோம்னு ஒருவார்த்தையில சொல்லிட்டுக் கிளம்பிடுறோம். ஆனா, அந்த ஒரு வார்த்தைக்குப் பின்னாடி எம்புட்டு வேலை இருக்கு தெரியுமா? கிளம்புற ஒரு மாசத்துக்கு மின்னயே அரிசி, பருப்பு, புளின்னு மளிகைகளை எல்லாம் கணக்குப் பாத்துச் செலவு பண்ணிக் காலி பண்ணிடனும். ஃப்ரிட்ஜிலயும் காய்கறிகளோட பட்டர், ஜாம், சாஸ்,சீஸ் எல்லாத்தையும்  காலி பண்ணனும். அதுவும் எப்படின்னா, கரெக்டா கடைசி நாள்தான் எல்லாம் காலியாகிற மாதிரி பாத்துக்கணும். கடைசி நாள் சிம்பிளாவாவது சமைக்கவேண்டாமா பின்ன? (யாரது.. தினமுமே என் சமையல் சிம்பிள்தானே நக்கலடிக்கிறது..)

அப்புறம் பேப்பர், ஃபோன், தண்ணி கட் பண்றதுக்கு ஃபோன் பண்ணியாச்சான்னு ரங்க்ஸை நச்சரிக்கணும்.. கிச்சன்ல அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் முதல் ஹால் ஃபர்னிச்சர் - ஸோஃபா, டைனிங் டேபிள், சேர், கம்ப்யூட்டர்+டேபிள் போன்ற எல்லாத்தையும் தூசி அடையாம இருக்க பெட்ஷீட் அல்லது பேப்பர் போட்டு மூடணும். இடையில் ஊருக்குப் போற ஷாப்பிங், பேக்கிங்.. நடுவுல பசங்க பரிட்சை, ஹோம் வர்க்.. இதுல குக்கிங்கும் செய்யணும்...  கதவு, ஏஸி, ஜன்னல்னு காத்துல தூசி வீட்டுக்குள்ள வர்ற வழிகளை டைட்டா மூடி/பேப்பர் வச்சு அடைக்கணும்.

இருந்தாலும் ஒரு பத்து நாளைக்கொரு தரம் வீட்டைத் திறந்து பாத்துக்கச் சொல்லி யார்கிட்டயாவது பொறுப்பாச் சாவி கொடுக்கணும். நட்புகள், உறவுகள்னு எல்லார்கிட்டயும் ஊருக்குப் போறேன்/வர்றேன்னு தகவல் சொல்லணும். செடிகளுக்குத் தண்ணி ஊத்த ஆள் ஏற்பாடு பண்ணனும். அந்த ஆள் தவறாம வர்றாரான்னு கவனிச்சுக்க இன்னொரு ஆள்கிட்டச் சொல்லி (alternative) வைக்கணும்... என்னது இதுக்கே “ஸ்ஸப்பா”ங்கிறீங்க..இப்ப ஊருக்குப் போயாச்சு. அப்பாடான்னு மூச்சு விடாதீங்க.. அங்க பூட்டிக் கிடக்கிற வீட்டைத் திறந்து ”திறப்பு விழா”  நடத்தணும்.. அதாங்க.. சுத்தம் செய்யணும். அவ்வ்வ்வ்...  பேப்பர், பால், தண்ணி, வேலைக்காரர் எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணனும்.  சமையலுக்கு இங்க போட்ட மாதிரியே ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடியைப் போட்டுட்டு, “அச்சச்சோ, காரம் கூடிப் போச்சே”ன்னு மாமியார்கிட்டே அசடு வழியணும்... ஒரு வழியா “கை திருந்தி” சமைக்க ஆரம்பிக்கும்போது லீவு முடியும். மறுபடி எல்லாம் ஏறக்கட்டி,  காலி பண்ணி...  கிளம்பி இங்க வந்து... ”இனிமே யாராவது லீவுல ஊருக்குப் போணும்னு சொல்லிப் பாருங்க”ன்னு புலம்பிகிட்டே இங்க மறுபடி எல்லாத்துக்கும் ”திறப்பு விழா” நடத்தி...

அதெங்கே..? ‘பிரசவ வைராக்கியம்’ மாதிரி அடுத்த மாசமே, “இன்ஷா அல்லாஹ் அடுத்த வாட்டி ஊருக்குப் போகும்போது...”ன்னு ஆரம்பிக்கிறது வேற யாரு.. நானேதான்... ஹூம்...

இதெல்லாம் போறாதுன்னு இப்ப ஒரு மூணு வருஷமா இன்னொன்னுக்கும் சேத்து மூடு விழா/ திறப்புவிழா நடத்த வேண்டியிருக்கு. என்னன்னு கண்டுபிடிங்க பாப்போம்..  ஆமாம், “வலைப்பூ”வுக்குத்தான்!!

ஊருக்குப் போயாச்சு, வந்தாச்சு.. அப்புறமென்ன... வழக்கம்போல அடுத்த பதிவு “India Special Edition"தான்!!

Post Comment

42 comments:

ராமலக்ஷ்மி said...

தடபுடலான திறப்புவிழா. நேசம் வெற்றிக்கு வாழ்த்துகள்! இன்டியா ஸ்பெஷல் எடிஷனுக்கு வெயிட்டிங்:)!

சாந்தி மாரியப்பன் said...

அட..!!.. ஏங்க அந்த கஷ்ட காலத்தையெல்லாம் ஞாபகப் படுத்திக்கிட்டு?.. கரெக்டா நாம ஃப்ரிஜ்ஜைக் காலி செஞ்சுட்டோம்ன்னு நினைக்கிறப்பத்தான் ஒரு பாக்கெட் ஐஸ்க்ரீம் உள்ளே வந்து உக்காரும்... அவ்வ்வ்வ்வ்...

CS. Mohan Kumar said...

இந்தியாவில் பதிவர்கள் யாரையாவது சந்திசீங்களா? உங்களை பார்க்க முடியாதில் வருத்தம் தான்

ஹுஸைனம்மா said...

ராமலக்ஷ்மிக்கா, நன்றிக்கா.

அமைதிக்கா, ஐஸ்கிரீம்னா நான் ஒரு ஆளாவே தீத்துடுவேனே. கஷ்டப்பட்டு தக்காளி சாதம், தக்காளி ரசம், தக்காளிக்குழம்புன்னு தக்காளியைக் காலி பண்ணிட்டு, ‘ஒருவழியா தீர்ந்தது தக்காளி”ன்னு வெற்றிச் சிரிப்பு சிரிச்ச அடுத்த நாள்...

“தக்காளி காலியாகிடுச்சுன்னு சொன்னியே..”ன்னு கையில ஒரு கிலோ தக்காளியோட “திடீர் பொறுப்பான குடும்பத் தலைவனா” அவதாரம் எடுப்பார் என்னவர்!! அப்ப வரும் பாருங்க... கோபம்.. ச்சே.. ச்சே... அவர் மேலே இல்லை... தக்காளி மேலத்தான்..

அந்தத் தக்காளியை (எனக்கு) தெரிஞ்சவங்க ஒவ்வொருத்தர்கிட்டயா “நீ கேளேன், ஏய் நீ கேளேன்”ன்னு கேட்டுக் கேட்டுக் கொடுத்து காலி பண்றதுக்குள்ள... ஆண்டவா..

ஸ்ரீராம். said...

உண்மைதான்....அந்தந்த வேளை, வேலை நெருங்கி வரும்போதுதான் லிஸ்ட் போட்டுச் செய்யும் போதுதான் கஷ்டம் தெரிகிறது! எவ்வளவு முன்னேற்பாடுகள்....! இந்திய விஜயப் பதிவுகளுக்கு நானும் வெய்ட்டிங் .

Vijayan Durai said...

I MENTION YOU IN MY BLOG
http://vijayandurai.blogspot.com/2012/04/blog-post.htmlhtml

பாச மலர் / Paasa Malar said...

அதே அதே...same blood

அமுதா கிருஷ்ணா said...

அடுத்து வரும் போது அந்த ஊரு தக்காளிய இங்க வந்து தெரிந்தவர்களுக்கு கொடுத்துடுங்க.அப்பாடி எனக்கு இந்த பிரச்சனையே இல்லை.ஏன்னா?? என் அம்மா என் கூடவே இருக்காங்க.மாமியாரும் இல்லை.எனவே 3 இல்லை 4 நாட்கள் தான் நம் பயணம் எல்லாம்.

ஸாதிகா said...

ஒரு வழியா “கை திருந்தி” சமைக்க ஆரம்பிக்கும்போது //ஹுசைனம்மா இது ரொம்ப ஓவரா இல்லை.?.

ஸாதிகா said...

எல்லாவீடுகளிலும் உள்ளதுதான்...இங்கே மட்டும் என்ன ?ஒரு வாரத்துக்கு ஊருக்கு போவ்தென்றால் கூட இந்த பாடுதான்.சில சமயம் தேவையா என்றாகி விடும்.

அதிலும் ஊருக்கு போய்ட்டு வந்து பேப்பர் காரர்,பால்க்காரரிடம் கணக்கு தீர்ப்பதற்குள்: ட்ங்கு வாறு அறுந்து போய்டும்
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்.தாமதிக்காமல் சீக்கிரம் போடுங்க.

கோமதி அரசு said...

இதெல்லாம் போறாதுன்னு இப்ப ஒரு மூணு வருஷமா இன்னொன்னுக்கும் சேத்து மூடு விழா/ திறப்புவிழா நடத்த வேண்டியிருக்கு. என்னன்னு கண்டுபிடிங்க பாப்போம்.. ஆமாம், “வலைப்பூ”வுக்குத்தான்!! //

இப்போது இது வேறு கூடுதல் பொறுப்பு! உண்மைதான்.

மற்றவைகள் நீங்கள் சொன்னது போல் தான் எல்லாம்.

சுவையான பகிர்வுகளை எதிர்ப்பார்க்கிறோம்.அக்னி நட்சத்திர வெயிலுக்கு முன் ஊர் திரும்பி விட்டீர்களா?

வெங்கட் நாகராஜ் said...

வெல்கம் பேக்!

ஊர் பற்றிய உங்கள் சுவையான பதிவுகளை எதிர்நோக்கி இருக்கிறேன்.

Prathap Kumar S. said...

//இந்தியாவில் பதிவர்கள் யாரையாவது சந்திசீங்களா? உங்களை பார்க்க முடியாதில் வருத்தம் தான்//

மோகன் சார், சந்தோசப்பட வேண்டிய விசயத்துக்கெல்லாம் வருத்தப்படற நீங்க உண்மைலயே நல்லவரா கெட்டவரா? :)

Prathap Kumar S. said...

அந்த சுசீந்திரம் பக்கம் பத்து ஏக்கர் தோட்டத்தை இந்த வருசமாவது ரெஜீஸ்ட்ர் பண்ணிங்களா இல்லயா? :)

நட்புடன் ஜமால் said...

Me too back, in your City :)

R. Gopi said...

:-)

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு ஹுசைனம்மா:) பதிவுலகிற்கு.
ஊருக்குப் போகிற கோராமையைச் சொல்லி மாளாது. இந்த வருஷம்தான் எங்கயும் கிளம்பாம நிம்மதியா இருக்கோம். அதுவும் 15 நாள் டஸ்ட் ச்டார்ம் இருந்ததாமே.
பையனார் சொன்னார். கண்ணு காது மூகு எல்லாம்கெட்டுதுன்னு, காருக்குள்ள எல்லாம் தூசு. என்று வருத்தப்பட்டான். எப்படியோ எங்களையெல்லாம் பார்க்காம ஊருக்குப் போயிட்டீங்க.:(தக்காளிக் கதை சூப்பர்.

Roomil said...

நன்றிங்க
மீண்டும்; அதே சிங்கார தமிழில் தங்கள் பதிவை பார்த்தவுடன் யுத்தத்தில் தொலைந்த நண்பனை நேரில் கண்ட சந்தோசம் நீங்கள் அனுப்பிய செய்திக்கும் இணைப்புக்கும் மேலும் நன்றிகள்
விடுமுறையில் கூடங்குளம் இடைத்தேர்தல் என அட்டகாசமாய் பொழுது போனதா
உங்கள் பதிவுகளில் சந்திப்போம்

Unknown said...

//ஊருக்குப் போயாச்சு, வந்தாச்சு.. அப்புறமென்ன... வழக்கம்போல அடுத்த பதிவு “India Special Edition"தான்!!//

பதிவிற்க்காக ஆவலுடன்....

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ...
வந்தாச்சா...இன்ஷா அல்லாஹ் எழுத ஆரம்பிங்கொ...

//(யாரது.. தினமுமே என் சமையல் சிம்பிள்தானே நக்கலடிக்கிறது..)//

என்ன என்னோட மைண்ட் வாய்ஸ் இப்பல்லா வெளிய கேக்க ஆரம்பிசுடுச்சா? :)

அன்புடன்
ரஜின்

அம்பிகா said...

வெல்கம் பேக் ஹூஸைனம்மா! பதிவுகளுக்காக வெயிட்டிங்.

ADHI VENKAT said...

வந்துட்டீங்கள....வாங்க வாங்க....

//கிளம்புற ஒரு மாசத்துக்கு மின்னயே அரிசி, பருப்பு, புளின்னு மளிகைகளை எல்லாம் கணக்குப் பாத்துச் செலவு பண்ணிக் காலி பண்ணிடனும். ஃப்ரிட்ஜிலயும் காய்கறிகளோட பட்டர், ஜாம், சாஸ்,சீஸ் எல்லாத்தையும் காலி பண்ணனும். அதுவும் எப்படின்னா, கரெக்டா கடைசி நாள்தான் எல்லாம் காலியாகிற மாதிரி பாத்துக்கணும்.//

அதே..அதே....இப்ப ஒரு மாசமா நான் அதைத் தான் பண்ணிட்டு இருக்கிறேன். தூசி வராம எல்லாத்தையும் பாதுகாத்து வைக்கணும். பால்காரன், பேப்பர்காரன் எல்லாரையும் நிறுத்தணும். அப்பப்பா.....

அடுத்த வாரம் முதல் நானும் மூடுவிழா அறிவிப்பு விடணும். ஒரு பெரிய பொறுப்பு இல்லையா...

இந்திய விஜயத்தை பத்தி பதிவுகள் போடுங்க. காத்திருக்கிறோம்.

அப்பாதுரை said...

ஐயோ பாவங்க நீங்க.. எத்தனை வேலை..

abdul said...

eppudithan entha visaythayum sirippa eluthirungilo? thanimaiyil iruppathal enkalukkum antha kastam irukku.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ப்ரசவ வைராக்கியம் ..அதே அதே..
:))

அமைதி அப்பா said...

பிரசவ வைராக்கியம். மிகச் சரியாச் சொன்னீங்க! ஊருக்கு போய் வர்ற வங்க எல்லோரும் படுறதை, அப்படியே சொல்லிட்டீங்க.

எதிர்பார்ப்பை உண்டு பண்ணிவிட்டது இன்டியா ஸ்பெஷல்!

Seeni said...

ithai kooda suraasyamaa sollideenga!

முத்தரசு said...

நெடும் தொடர் எதிர்பார்ப்புடன்

ஷர்புதீன் said...

salaam!

welcome back and waiting for the article of indian visits

enrenrum16 said...

ஹ்.ம்...நீங்க போயிட்டு வந்திட்டீங்க... நாங்க இனி தான் போகணும். எப்படிடா வீட்டை ஒதுக்கப்போறோம்ணு நினச்சா மலைப்பாதான் இருக்கு....பேசாம இதுக்கு ஒரு பதிவு போடுங்களேன்... நிறைய பேருக்கு (அப்படியே உங்களுக்கும்) ஊருக்கு போகும்போது உதவியா இருக்கும்..(அட ..... சீரியஸா சொல்றேங்க...)அப்பதானே ஊருக்கு போறோம்ணு ஜஸ்ட் டிக்கட்டை மட்டும் புக் பண்ணிட்டு ஜாலியா ஆபீஸ் போய் தூங்கிட்டு வர்றவங்களுக்கு குடும்பத்தலைவிகள் நாம(அதுவும் வொர்க்கிங் லேடீஸ்) எவ்ளோ கஷ்டப்பட்டு வீட்டை ஒதுக்கறோம்ணு தெரியும். என்ன சொல்றீங்க?! :))

ஹுஸைனம்மா said...

மோகன் - சென்னைப் பதிவர்களைத் தான் சந்திக்கணும்னு நினைச்சிருந்தேன், முடியவில்லை. பரவாயில்லை, அதுவும் நல்லதுக்குத்தான். இல்லைன்னா, அமீரகத்தில் நடந்த இரு சந்திப்புகளில் சக பதிவர்கள் சொன்னதுபோல “ஆர்ப்பாட்டமான எழுத்துக்கும், அமைதியான உங்களுக்கும் சம்பந்தமேயில்லை”ன்னு சொல்லிருப்பீங்க!! :-)))))

ஆமா, லீவுக்கு எங்கேல்லாமோ போறீங்க, துபாய் வர்லாம்ல? இப்ப துபாய் டிர்ப் சீப்தானாம், வர்றவங்க சொல்றாங்க.

ஸ்ரீராம் சார் - இதோ பக்கத்துல இருக்க துபாய்க்குப் போனாகூட ரெண்டு நாள் தங்க முடியலை. அடிக்கிற வெயிலுக்கு செடிக்குத் தண்ணி ஊத்தணுமேன்னு ஓடிவரவேண்டியிருக்கு!!

விஜயன் - நன்றிங்க!!

ஹுஸைனம்மா said...

பாசமலர் - எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கணுமே!!

அமுதா - ஹலோ, தக்காளியைப் போய் நாடுவிட்டு நாடுகடத்திக் கொண்டுவர, அது என்ன தங்கமா? இந்தியா வர்றவங்களுக்கு லக்கேஜ் வெயிட் பெரிய்ய பிரச்னையாக்கும்!! அதனால என்ன கொண்டுவர்றோம்னு பாத்துதான் கொண்டுவரணும்.

ஹுஸைனம்மா said...

சாதிகாக்கா - அதேதான்க்கா. ஊருக்குப் போணும்னு நினைச்சாலே கலங்கடிக்கும்.

//ஒரு வழியா “கை திருந்தி” சமைக்க ஆரம்பிக்கும்போது //ஹுசைனம்மா இது ரொம்ப ஓவரா இல்லை.?.//

இல்லைக்கா, கிளைமேட் மாதிரி, உணவுப் பொருட்களும் ஊருக்கு ஊர் சுவை வேறுபடுமேக்கா. உதாரணமா சீனி - இங்கேல்லாம் ஒரு ஸ்பூன் போட்டாலே கரெக்டாருக்கும் ஒரு கப் டீக்கு. அதுவே அங்க ரெண்டு ஸ்பூன் போட வேண்டிருக்குக்கா!!

ஹுஸைனம்மா said...

கோமதிக்கா - ஆமாக்கா, அக்னி நட்சத்திரத்திற்கு முன்னாடியே கிளம்பிட்டோனுதான் நினைக்கிறேன். ஒரு வழியா சமாளிச்சுட்டேன். பிள்ளைகளின் உடல் நலன் பாதிக்கவில்லையென்பதே பெருமகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ்.

வெங்கட் - நன்றிங்க.

பிரதாப் - ஓ, அப்ப நான் கலந்துகொண்ட பதிவர் சந்திப்புக்கு நீங்க வராம இருந்ததுக்கு இதுதான் காரணமா? அவ்ளோ பயமா? :-)))

//சுசீந்திரம் பக்கம் பத்து ஏக்கர் தோட்டத்தை// - ம்க்கும், உங்க ஊர்ல தோப்பு துரவெல்லாம் எங்கே இருக்கு இப்போ? எல்லாம் ப்ளாட்டாவுல்ல ஆகிப்போச்சு!!

ஹுஸைனம்மா said...

ஜமால் - வந்தாச்சா? நலமா?

கோபி - அடுத்த துபாய் பயணம் எப்போ?

வல்லிமா - ஊருக்குப் போறதைக் “கோராமை”ன்னு நீங்க சொல்றதிலிருந்தே எத்தனைக் கொடுமையானதுன்னு புரியுது. மணல் புயல் அடிச்சப்போ நாங்க இங்க இல்லை; நல்லவேளை!! வரும்போதே லேசா மழைமேகம் இருந்துது. இப்பவரை மழை இல்லைன்னாலும், காற்று இல்லைங்கிறதே நிம்மதி!!

இப்ராஹிம் சார் - //அதே சிங்கார தமிழில் தங்கள் பதிவை// என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே? :-)))))) ச்சும்மா..

ஹுஸைனம்மா said...

செய்யது இப்ராம்ஷா - நன்றிங்க.

ரஜின் - ஓ, அது உங்க மைண்ட் வாய்ஸ்தானா? ஹோட்டல்ல சாப்பிடுற உங்களுக்கு இது கொஞ்சம் ஓவர்தான்!! :-)))))

அம்பிகாக்கா - நலமா? நீங்களும் எழுதுங்கக்கா.

கோவை2தில்லி - ஊரிக்குக் கிளம்பிட்டிருக்கீங்களாப்பா? எஞ்சாய்!!

ஹுஸைனம்மா said...

அப்பாத்துரை - //ஐயோ பாவங்க நீங்க.. எத்தனை வேலை..// இது வஞ்சப்புகழ்ச்சி இல்லியே? :-))))

அப்துல் - என்ன செய்ய, இப்படிச் சொல்லித்தான் சோகத்தை மறைக்க வேண்டிருக்கு!! :-)))

முத்தக்கா - பாதி இதுக்குப் பயந்துதான் போன வருஷம் இந்தியா போகலை. அதனாலே இந்த வருஷம் தவிர்க்க முடியலை.

அமைதி அப்பா - நலமா? இதைப் போய் எழுதுறோமேன்னு தோணுச்சு. ஆனா, எல்லாருக்குமே இந்தச் சிரமம் இருக்குன்னு புரியுது.

ஹுஸைனம்மா said...

சீனி - மேலே அப்துலுக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும்!!

மனசாட்சி - பேர் சூப்பராருக்கே?? நன்றிங்க.

ஷர்ஃபுதீன் - ஸலாம். எல்லாரும் என் அடுத்த பதிவுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கீங்க. அவ்வளவுக்கு வொர்த் இல்லீங்க அந்த அடுத்தப் பதிவு. நம்புங்க!! பயம்மா இருக்கு.

ஹுஸைனம்மா said...

என்றென்றும் 16 - //இதுக்கு ஒரு பதிவு போடுங்களேன்..// எங்க வீட்டுல ஒரு நோட்புக்ல என்னென்ன செய்யணும்னு லிஸ்ட் போட்டு எழுதி வச்சிருக்கேன். ஏழெட்டு வருஷமா, ஊருக்குப் போணும்னு முடிவு பண்ணதும் அதைத் தேடி எடுத்து வச்சுக்குவேன். சிரிக்காதீங்க!! வேணும்னா வந்து அதைப் பாத்துக்கோங்க. பதிவெல்லாம் போட்டா என்னை அடிக்க வந்துடுவாங்க!!

ஆனா, நீங்க சொன்னது கரெக்டுங்க. ஆன்லைன்ல நாலு டிக்கெட் புக் பண்றதையே பெரிய பாரமா நினைச்சுகிட்டு, அதைச் செய்றதையே பெரும் பாரமா நினைக்கிற ஆம்பளைங்களுக்கு எங்கே நம்ம கஷ்டம் புரியும்?

அது ஒரு கனாக் காலம் said...

நட்சித்திர வாழ்த்துக்கள்

அது ஒரு கனாக் காலம் said...

நட்சித்திர வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

தமிழ்மணம் நட்சத்திர வாழ்த்துக்கள்!