Pages

கேள்வியின் நாயகன் - 3




guardian.co.uk

”ம்மா, உனக்கு ராபின்ஹூட் தெரியுமா?” (ஓ, லைப்ரரி புக்கைப் படிச்சி முடிச்சாச்சு போல!!)

“ம்.. ம்.. புக்ல படிச்சிருக்கேன்”

“அவர் என்ன செஞ்சார் தெரியுமா? அவரோட கண்ட்ரில (country) இருக்க ஏழைங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்காக, அங்க உள்ள பணக்காரங்ககிட்ட பணத்தைத் திருடினார்”

“திருடுறது தப்பில்லியா?”

“ஆனா, அவர் புவர் பீப்பிளுக்கு ஹெல்ப் பண்ணத்தானே திருடினார்?”

“யாருக்காவது ஹெல்ப் பண்ணனுன்னா, நம்மகிட்ட இருக்கிறதைத்தான் கொடுக்கணும். திருடவெல்லாம் கூடாது.”

“அவர்கிட்ட அவ்ளோ மணி (money) இல்லை. அதான் திருடிக் கொடுத்தார்.”

“சம்பாதிச்சுக் கொடுக்கணும். இல்லைன்னா, அந்தப் பணக்காரங்ககிட்ட போய்ப் பேசி, ஏழைங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்கன்னு சொல்லிருக்கணும். திருடக்கூடாது.”

“ம்ம்மாஆஆ!!.. (எப்பா, என்னா கோவம்..) அந்த புவர் பீப்பிள்ஸ்லாம் அந்தப் பணக்காரங்களோட ஃபேக்டரிலயும், ஃபார்ம்லயும்தான் வேலை செஞ்சாங்க. ஆனா அவங்களுக்கு ரொம்பக் கொஞ்சமாத்தான் சம்பளம் கொடுத்தாங்க. அது அவங்களுக்குக் காணாது.  அவர் அந்தப் பணக்காரங்ககிட்ட நிறையப் பணம் கொடுக்கச் சொல்லத்தான் செஞ்சார். ஆனா, அவுங்க அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதான் ராபின்ஹூட் திருடிக் கொடுத்தார்.”

”சம்பளம் கொஞ்சமாக் கொடுத்தாங்கன்னா, அங்க வேலை பாக்கமாட்டோம்னு எல்லாரும் சேந்து சொல்லிருக்கணும். அல்லது, சம்பளம் நிறையக் கிடைக்கிற வேற வேலை தேடிருக்கலாம்.  ஏன், ராபின் ஹூட்டே அந்த புவர் பீப்பிளையெல்லாம் ஒண்ணாச் சேத்து ஏதாவது தொழில் ஆரம்பிச்சு எல்லாருக்கும் நிறையச் சம்பாதிக்க வழிபண்ணிருக்கலாம். (சினிமால ஒர்ரே பாட்டுல பெரீய்ய ஆளாகிறதைப் பாத்த எஃபெக்டோ??!!) இப்படி எதாவது வழி கண்டுபிடிச்சிருக்கணும். அதைவிட்டுட்டு, திருடித்தான் ஹெல்ப் பண்ணணும்னு நினைக்கிறதெல்லாம் ரொம்பத் தப்பு.”

“......”

“சரி, இப்ப போலீஸ்கிட்ட  அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணத்தான் திருடுனேன்னு சொன்னா, திருடனை  விட்டுடுவாங்களா சொல்லு? (இல்லைன்னு தலையாட்டல்) விடமாட்டாங்கள்ல? ஏன்னா, எதுக்காகச் செஞ்சாலும் திருட்டு திருட்டுதான். புரியுதா?”

“ம்..” (தலைவர் சிந்திக்கிறார்!!)

ஸ்ஸப்பா.. வாசிக்கிறது நல்லப் பழக்கம்னுதானே சொன்னாங்க.  இப்பிடியெல்லாம் வில்லங்கம் வரும்னு சொல்லவேயில்லியே??!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

”வாப்பா, நம்ம வீட்டு கேட்(gate)டையும் ரிமோட் கேட்டா ஆக்கிடலாம் வாப்பா. (கார் போக-வர கேட்டைத் திறந்துமூடுவது பிள்ளைகள் வேலை. அவன் கஷ்டம் அவனுக்கு!!)
 
“அதெல்லாம் வேண்டாம் மகனே, தன் கையே தனக்குதவி.”

“அப்படின்னா?”

“நம்ம கைதான் நமக்கு எப்பவும் உதவும்னு அர்த்தம்”

“வாப்பா, ரிமோட்டையும் நம்ம கையாலதானே அமுத்துவோம்? அதனால சீக்கிரம் ரிமோட் வைங்க!!”

எனக்கு என்னா சந்தோஷமாருக்கு!! ஃபார் எ சேஞ்ச், இந்த முறை வாப்பாவுக்கு பல்பு!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

உறவினர் குடும்பத்தோடு ஷாப்பிங் மாலுக்குப் போயிருந்தோம். சின்னவன், அவர்களின் மகள் (நல்ல சிவந்த நிறம்) கையைப் பிடித்துக் கொண்டு, எங்களுக்கு முன்னால் நடந்துகொண்டிருந்தான். திடீரென்று அவள் ஓடிவந்து என்னிடம், “சின்னம்மா, இவன் ஏன் என்கிட்ட இப்பிடிச் சொன்னான்?”

”என்ன சொன்னான்?”

“நான் அவன்கிட்ட ஒண்ணுமே கேக்கலை. ஆனாலும், அவனா அப்பிடிச் சொன்னான். ஏன்?”

அப்படி என்ன சொல்லித் தொலைஞ்சான்னு தெரியலையே.... என்னவர்  பக்கத்துலதான் இருக்காரான்னு பாத்துகிட்டேன். ‘உங்க பிள்ளை....’ன்னு பழிபோட ஆள் வேணுமே!!

“என்ன சொன்னான்னு முதல்ல சொல்லு..”

“ஒருநாள் அவன் உங்ககிட்ட ”நான் ஏன் கருப்பா இருக்கேன்”னு கேட்டானாம். அதுக்கு நீங்க, “Be happy with what you have"னு சொன்னீங்களாம். என்கிட்ட எதுக்கு இப்ப இதைச் சொல்றான்? நான் அவனை ஒண்ணுமே சொல்லலியே?”

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

”ம்மா, வயிறு வலிக்குது. எண்ணெய் தேச்சுவிடு”

“நான் மீன் கழுவிட்டிருக்கேன். நீ வாப்பாட்ட தேச்சுவிடச் சொல்லு”

“வேண்டாம். வாப்பா ஒண்ணுமே சொல்லாம, சும்மா தேச்சு மட்டும் விடுவாங்க. நீதான் வயிறு வலி சீக்கிரம் சரியாகணும்னு துஆ செஞ்சுகிட்டே தேச்சுவிடுவே.  நீயே அப்புறமா வந்து தேய்.”

அப்படியே உச்சிகுளிர்ந்துபோய், உடனே கைகழுவிட்டு, எண்ணெய் தேச்சுவிட்டேன். அப்புறம்தான் யோசிச்சேன், இப்பிடியிப்பிடிச் செய்ங்கன்னு வாப்பாவுக்கு ஆர்டர் போடாம, நானே ஏன் ஓடினேன்? ம்ம்ம்.. .. ‘பின்புத்தி’!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 ”ம்மா,  இந்த வாட்டி நான் எப்படியாவது நல்லாப் படிச்சு ஃபர்ஸ்ட் ரேங் வாங்கிடுறேன். (நடக்கிற காரியமாப் பேசு மகனே!!) அப்ப எனக்கு அந்த ஃப்ரீ கார் ஆஃபர் உள்ள ”கெல்லாக்ஸ் சாக்கோரிங்க்ஸ்” வாங்கித் தருவியா?”

மண்டைக்குள் ‘சிவப்பு விளக்கு’ எரிய, உடனே உஷாராகினேன். ”நீ நல்லாப் படிச்சு, நல்ல மார்க் வாங்கினா உனக்கு எப்பவும் நல்லது. அது வாங்கித் தந்தா ஃப்ர்ஸ்ட் ரேங்க் எடுப்பேன், இத வாங்கித் தந்தா 10 அவுட் ஆஃப் 10 எடுப்பேன்னெல்லாம் சொல்றது நல்ல ஸ்டூடண்டுக்கு அழகு இல்லை.  அதேமாதிரி ஏதாவது வேணும்னா என்கிட்ட சொல்லு. நல்லதா இருந்தா வாங்கித் தர்றேன். அப்பிடியில்லாம, இதைச் செஞ்சா, அதைச் செஞ்சா வாங்கித் தான்னு சொல்லக்கூடாது. சரியா?”

பிள்ளை காருக்காகப் படிக்கவே துணிஞ்சுட்டானேன்னு நெகிழ்ந்துபோய், கார் (மட்டும்) வாங்கிக் கொடுத்தாச்சு. அப்புறம் எக்ஸாம் நேரத்துல படிக்க வைக்க பட்ட பாட்டுல, பேசாம அவன் டீலுக்கே ஒத்துகிட்டிருக்கலாமோன்னு தோணியது!! காரும் கொடுத்து, பாடும் பட்டு.....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Post Comment

25 comments:

Admin said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

அனைத்தும் படிக்கும் போதே நெகிழ்ச்சியாக இருந்தது. இறைவன் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தையும், இன்னும் அதிகம் கேள்வி(!) ஞானத்தையும் வழங்க பிரார்த்தனை செய்கிறேன்!

கீதமஞ்சரி said...

ராபின் ஹூட் விஷயத்தில் நீங்கதான் கேள்வியின் நாயகியாயிட்டீங்க போல. பாவம் பிள்ளை. இனி கொஞ்சம் எச்சரிக்கையாதான் இருக்கும். நம் கைதான் நமக்கு உதவி. பிள்ளை சரியாத்தானே புரிஞ்சிருக்கான். உங்க கேட்டை ரிமோட் கேட்டாக்கிடுங்க.
சமர்த்துப் பிள்ளை!

Seeni said...

anupavangal!
suvaraasiyam!

ஸ்ரீராம். said...

குட்டி பதினாறடி பாய்கிறான்! சுவாரஸ்யம்.

Roomil said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வ வ)
சிறியவர் உலகம் அற்புதமானது
மாற்றி யோசிக்க தெரிந்தவர்கள் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறையவே பெரியவங்களுக்கு இருக்கு. உங்கள் பதிவிலும் கூட.
அன்புடன் ரூமில்

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

//பேசாம அவன் டீலுக்கே ஒத்துகிட்டிருக்கலாமோன்னு தோணியது!! காரும் கொடுத்து, பாடும் பட்டு.....//அனுபவப்பதிவோ ?ரசிக்க நல்ல இருக்கு ஆனா அந்த வாப்பா நிலைமைல இருக்குறவங்களுக்கு தான் குடும்ப சுமை தெரியும்...


புதிய வரவுகள்:
மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்,இறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ. ஹுசைனம்மா..!
நல்ல கருத்துக்களுடன் நன்றாக இருந்தது பதிவு. ஆனால் ஒரு விஷயம் உறுத்துது சகோ..!

உம்மாவை 'வா' 'போ' ன்னும் வாப்பாவை 'வாங்க' 'போங்க'ன்னும் அழைக்கும்படி பிள்ளைகளை பழக்கி இருக்கீங்க..!

ஏனோ... சில பல குடும்பத்தில் இப்படித்தான் இருக்கு..! வளர்ப்பில் அம்மாக்களின் கேர்லஸ்னஸ் தான் காரணம்..!

பெண்ணாக இருந்தா கூட பிரச்சினை இல்லை... ஆனால் ஆண் பிள்ளையாக இருப்பதால்... வளர்ந்து பிற்காலத்தில் பெண்களை தாழ்வாகவும் தம்மை உயர்வாகவும் என்ன வைத்துவிடலாம் இந்த பழக்கம்..!

ஐந்தில் வளைக்கலைன்னா அப்புறம் பதினஞ்சில் வளைக்கிறது ரொம்ப கஷ்டம் சகோ..! என் மனைவியை, திருமணத்துக்கு அப்புறம்... என் மாமியாரை 'வாங்க' 'போங்க' ன்னு சொல்ல வைக்க நான் பட்ட பாடு..!ஒருவழியா இருபதிலும் வலைச்சோம்ல..! அல்ஹம்துலில்லாஹ்...!

நீங்களும் உங்கள் மகனிடத்தில் இன்ஷாஅல்லாஹ் ட்ரை பண்ணுங்க சகோ.ஹுசைனம்மா..!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சமர்த்து.
(உங்க பையன்)

அப்பாதுரை said...

இதான் parenting நிறைவு. எஞ்சாய் பண்ணுங்க.

எல் கே said...

நல்ல கேள்விகள்தான். உஷாரா பேசணும் இந்த காலத்து வாண்டுகள் கிட்ட

ராமலக்ஷ்மி said...

பின் புத்தி இல்லைங்க. நமக்கே நமக்கான பொன் புத்தி:)!

நாயகன் அசத்துகிறான்.

ஸாதிகா said...

ஹுசைனம்மா குழந்தைங்களா கொக்கா?சின்னவரை நான் அவசியம் பார்க்கணுமே!!!!!

ஹுஸைனம்மா said...

அப்துல் பாஸித் - வ அலைக்கும் ஸலாம். //அதிகம் கேள்வி(!) ஞானத்தையும்//
ஆமாம்னும் சொல்லமுடியலை, இல்லைன்னும் சொல்லமுடியலை. :-))))

கீதமஞ்சரி - நன்றிப்பா. ராபின்ஹூட் கதையில் இப்படி ஒரு கேள்வி சிறுவயதில் நமக்குள்ளும் வந்தது உண்டு. வெளிப்படையாக யாரிடமும் கேட்டதில்லை. நல்லவேளை இவன் கேட்டுட்டான். ரிமோட் வைக்கும் ஐடியா இல்லை. சின்னச்சின்ன வேலைகள் செய்து பழகட்டுமே!!

சீனி -நன்றி.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - நன்றி.

ரூமில் பாய் - வ அலைக்கும் ஸலாம். மிகவும் நன்றி.

திருவா. முஸ்லீம் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

முஹம்மது ஆஷிக் - Salam.
//வளர்ப்பில் அம்மாக்களின் கேர்லஸ்னஸ்//
இருக்கட்டும். அப்பாக்கள் என்ன செய்துகொண்டிருந்தார்களாம்? :-)))))

//வளர்ந்து பிற்காலத்தில் பெண்களை தாழ்வாகவும் தம்மை உயர்வாகவும் எண்ண வைத்துவிடலாம் //
இதற்கு நீ, வா, போ என்று அழைப்பது மட்டுமே காரணம் என்று சொல்லமுடியாது. தன் தந்தை தன் தாய், மனைவி, சகோதரிகளை எப்படி நடத்துகிறார் என்கிற அவதானிப்புதான் பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தும்.

ஹுஸைனம்மா said...

நிஜாமுத்தீன் - நன்றிங்க.

அப்பாத்துரை - நன்றிங்க.

எல்.கே. - ரொம்பவே உஷாரா இருக்க வேண்டியிருக்கு!! நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ராமலக்ஷ்மிக்கா - //பொன் புத்தி// உண்மை!! நன்றிக்கா.

ஸாதிகாக்கா - //சின்னவரை நான் அவசியம் பார்க்கணுமே//
அப்ப அடுத்த அமீரக விஸிட் எப்போ? சொல்லுங்க ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செஞ்சிடுவோம்... :-))))))

enrenrum16 said...

இதெல்லாம் ரொம்ப ஓவருங்க....பாவம் அந்த பச்சபுள்ளய இப்படியா குழப்பிவிடுறது....? ஒரு அப்ராணிகிட்ட ஜெயிச்சதெல்லாம் செல்லாது ....செல்லாதூஊஊஊஉ....

//அவர்களின் மகள் (நல்ல சிவந்த நிறம்) /// அப்படி வாங்க வழிக்கு...;))

//இப்பிடியிப்பிடிச் செய்ங்கன்னு வாப்பாவுக்கு ஆர்டர் போடாம, நானே ஏன் ஓடினேன்? ம்ம்ம்.. .. ‘பின்புத்தி’!!// இப்படியிப்படிச் சொன்னா உங்க உம்மா ஓடி வந்துடுவாங்க, எனக்கும் வேலை மிச்சம்ன்னு உங்க ரங்க்ஸ் ஏவிவிட்டிருப்பாரோ...?! doubt!!!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.ஹுசைனம்மா...

//அப்பாக்கள் என்ன செய்துகொண்டிருந்தார்களாம்? :-)))))//
---இந்த பதிவில் வரும் கேர்லஸ் கேரக்டர், அவரே இதனை (எதிர்க்காமல்)ஆதரித்தால்... அப்பா கேரக்டர் கேர் எடுத்தாலும்(எடுக்க வேண்டும்), குழந்தைகள்...? who will care it..? அவ்வ்வ்வ்... :-)))))

//நீ, வா, போ என்று அழைப்பது மட்டுமே காரணம் என்று//---நான் சொல்லவில்லையே சகோ..!? :-))))) Please note.. //...லாம்// in my comment..!

'பொதுவாக பெற்றோரிடம் அழகிய கண்ணிய மரியாதையான வார்த்தைகள் மட்டுமே பேச வேண்டும்' என்று குழந்தைகள் சுயமாக சிந்தித்து உணரும் ஒரு தருணத்தில்... இன்ஷாஅல்லாஹ் they will overthrow any contradictory past 'not-good' inputs..!

ஹுஸைனம்மா said...

என்றென்றும் 16 -
//இப்படியிப்படிச் சொன்னா உங்க உம்மா ஓடி வந்துடுவாங்க//

அப்படிங்கிறீங்க? இருக்கும்.. இருக்கும்.. செஞ்சாலும் செய்வாரு.. ஒரு கை பாத்துட வேண்டியதுதான்...

முஹம்மது ஆஷிக் - //கேர்லஸ் கேரக்டர்//

:-((((

இதைப் பற்றிப் பதில் எழுதணும்னு ஆரம்பிச்சா, ஒரு பதிவே எழுதிடலாம்போல பெரீஈஈய்ய பதிலாக வருது!! இன்ஷா அல்லாஹ், பதிவாகவே எழுதுறேன். :-)))))

நட்புடன் ஜமால் said...

Assalamu Alaikkum.

அவர் பல்பு வாங்கியதில் அம்பூட்டு சந்தோஷமா!!!

நீங்க மீன் கழுவிகிட்டு இருந்தாலும், என்னா சொன்னா எழுந்து வருவீங்கன்னு மகனுக்கு, வாப்பா சொல்லி கொடுத்து இருப்பாரோ

:P

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

பிரதமர் மன்மோகன் இஸ்லாத்தை ஏற்றார்-நேரடி பேட்டி

உடனே பார்க்கவும்
WWW.TVPMUSLIM.BLOGSPOT.COM

இமா க்றிஸ் said...

அவங்க யாரு! ஹுசைனம்மா பையன்ல! :)) ரசித்துச் சிரிக்க வைத்த இடுகை.

பாச மலர் / Paasa Malar said...

சுவாரஸ்யம்...ரசனை..நெகிழ்ச்சி..இந்தப் பின்புத்தி சமாச்சாரம் உலகளாவிய அனுபவம் போலும்

pudugaithendral said...

ஹுசைனம்மா நீங்க பதிவுலகத்துல கேள்வியின் நாயகி. உங்க புத்திரரும் அப்படியே இருப்பதுல ஆச்சரியம் ஏதும் இல்லை. :)

ரசித்தேன்