Pages

டிரங்குப்பெட்டி - 26


இந்த வருஷம் வரப்போகிற புயல் ரொம்ப கடுமையான விளைவுகளைத் தரும்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. மழையையேக் காணோம், புயல் எங்கிட்டிருந்து வரும்னு கேக்குறீங்களா? இது சூரியப்புயல் - Solar storm!!  மழைப் புயல் தரும் விளைவுகளைவிட,  சூரியப்புயலில் காந்தத்துகள்கள் பூமியின்மீது தெளிக்கப்படும்போது வரக்கூடிய விளைவுகள் மிகக் மிகக் கடுமையானது. ஏற்கனவே ஜனவரியிலும், மார்ச்சிலும் அமெரிக்காவில் சூரியப்புயல் வீசியது. இனி வரப்போகும் புயலினால், அமெரிக்காவில் இன்னும் கடும் வறட்சி நிலவும் (இப்போதே வறட்சிதான்). அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் மின்சாரத் தொகுப்பு (electric grid) மோசமான பாதிப்புகளுக்குள்ளாகும் என்பதுதான் மிகவும் கவலையான நிகழ்வாக எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்தும், செயற்கைக் கோள்களும்கூட பாதிக்கப்படும்.

அமெரிக்கா தவிர மற்ற நாடுகளுக்கு ஒருவேளை மின்சாரப் பாதிப்பு  ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                                                    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

கிபி 12ம் நூற்றாண்டில் ஸ்பெயினில் அப்போதைய இஸ்லாமிய ஆட்சியாளர்களால், ஐரோப்பாவின் முதல் வானிலை ஆய்வுக்கூடம் (Observatory) கட்டப்பட்டது. பின்னர் கிறிஸ்தவ ஆட்சியின்கீழ் வந்ததும் அந்த கட்டிடம் ஒரு ஆய்வுக்கூடம் என்பதே தெரியாமல், அதை எப்படி பயன்படுத்த வேண்டுமென்றும் தெரியாமல், அதை  “மணிக்கூண்டு”  ஆக ஆக்கிக் கொண்டார்களாம்!!

இது பரவாயில்லைன்னு சொல்ற அளவுக்கு இருக்கு, தமிழ்நாட்டில் புதிய (பழைய??) தலைமையகத்தின் இன்றைய நிலை!! பாம்புகள் குடியிருக்கும் ஸ்நேக் பார் ஆகிட்டு வருதாம்.

                                                   -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


ஜப்பானில் சென்ற வருடம் நடந்த ஃபுகுஷிமா அணு ஆலை விபத்தின் விளைவுகளை, அங்கு தற்போது காணப்படும் வண்ணத்துப்பூச்சிகள் பிரதிபலிக்கின்றன. விபத்து நடந்தபோது லார்வாக்களாக இருந்தவைகளுக்கு கதிர்வீச்சு தந்த மரபணு பாதிப்பினால், வண்ணத்துப் பூச்சிகளாக ஆனபோது மிகச் சிறிய சிறகுகளும், பாதிக்கப்பட்ட கண்பார்வையும்  உடையவைகளாக இருக்கின்றன. மனிதர்களிடம் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், ஏதும் இருப்பின், இனி தெரியவரும், ஜப்பான் அரசு அனுமதித்தால்.

                                                                                                                                                      -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


  
துபாயில் ஒரு அரண்மனைப் பகுதியில் (Zabeel Palace) மயில்கள் நிறைய வளர்க்கப்படுகின்றன. மக்கள் அவற்றை சுற்றுலாவாகப் போய்ப் பார்க்கலாம். எக்கசக்கமா மயில்கள் நிற்கின்றன; அதைவிட ஆச்சர்யம், பள்ளிகளில் மேகம் கறுத்து மழைவருவது போலிருந்தால்தான், மயில் தோகை விரிக்கும் என்று படித்திருக்கிறோம். ஆனால், இங்கே ஜூலை மாத 47 டிகிரி உச்சி வெயிலிலும், அநேகமா எல்லா மயிலுமே சர்வசாதாரணமாக தோகை விரித்து நடமாடுகின்றன. கொஞ்சம் ‘சப்’புன்னுதான் ஆகிப்போச்சு!! :-)))))

                                                   -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

ஜூனியர் விகடனில், “மயக்கம் என்ன” என்கிற தொடர்கட்டுரை வந்து கொண்டிருக்கிறது. குடியையும், அதன் பாதிப்புகளையும், அதிலிருந்து மீளும் வழிகளையும் விரிவாக - மருத்துவ ரீதியாக - அலசுகிறது. அதில் வந்த சில வரிகளை அப்படியே இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:
சிலர் சொல்வார்கள், ''எப்போவாச்​சும் குடிப்பேன்... கம்பெனி மீட்டிங்... ஃப்ரெண்ட்ஸ் கெட் டு கெதெர்... மன்த்லி ஒன்ஸ்... வெளியூர் போனால்தான்... ஆனா, நான் குடிகாரன் இல்லை'' என்று. குடிக்கும் பழக்கம் இருக்கும் எவருக்கும் நான் குடிகாரன் இல்லை என்று சொல்லும் தகுதி கிடையாது. ஏனெனில் மனநல மருத்துவர்கள் மது குடிப்பதை 'குடிப்பழக்கம்’ என்று சொல்வது இல்லை. 'குடிநோய்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ஒரு முறை குடித்தாலும் கிருமி, கிருமிதானே? அதேபோல, 'எப்போதாவது குடிக்​கிறேன் ஆசாமி’கள் பார்க்க ஆரோக்கிய​மாகத் தெரியலாம். ஆனால், குடிப் பழக்கம் உள்ள எவருக்கும் கல்லீரல், கணையம் போன்றவை குறைந்தது 10 சதவிகிதமாவது பாதிக்கப்பட்டு இருக்கும். ஆக, 'எப்போதாவது குடிக்கிறேன் ஆசாமி’கள் முதல்நிலைக் குடிநோயாளிகள்!

இது பற்றிய போற்றுதலும், தூற்றுதலும் விகடனுக்கே சமர்ப்பணம்!! :-))

                                                   -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

Post Comment

18 comments:

azeem basha said...

அஸ்ஸலாமுஅலைக்கும் ,
குடி பற்றிய தங்கள் மேற்கோள் அருமை
படித்து நமது பாசமுள்ள குடிகார சகோதரர்கள் திருந்தினால் சரிதான்,
விதண்டாவாதம் செய்பவர்களை எல்லாம் வல்ல இறைவன் திருத்துவனாக (ஆமின்)

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பல தகவல்கள்.... பாராட்டுக்கள்...

அங்கங்கே இணைப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... (TM 2)

M said...

//மேகம் கறுத்து மழைவருவது போலிருந்தால்தான், மயில் தோகை விரிக்கும் //
இருந்தால் தான் அல்ல. மயில் தோகை விரித்தால் மழை வரலாம் என்று தான் சொல்வார்கள். வானிலை ஆராய்ச்சி நிலையம் சொன்னாலே சொல்வது போல நடப்பதில்லை. மயில் எம்மாத்திரம்.

M said...

இஸ்லாமியர்களைப் பற்றி மட்டும் எழுதப்படும் தளத்தை ஆதாரமாக வைத்து எழுதுவதை விட, அதைப் பற்றி ஆராய்ந்து, ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தளங்களை சைட் செய்து எழுதலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

அப்பாதுரை said...

இதுக்குப் பேருதாங்க ஐக்யூ.

பழனி.கந்தசாமி said...

ரசித்தேன்.

ஹுஸைனம்மா said...

@ M:

//ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தளங்களை சைட் செய்து எழுதலாம்//

The tower of Giralda is the observatory which I referred here. Almost all the sites refer it to as an minaret (tall tower of an old mosque), which is not the right info. That's why I have to quote those sites where it is rightly mentioned as observatory.

Sorry for the english.

One more thing, the tower was & is used as "bell tower" and not as "clock tower" as the name ”மணிக்கூண்டு” suggests.

கவிதா | Kavitha said...

Good collections..

மயில் மழையில்லாத நேரத்தில், தோகை விரித்து நிற்பதை நானும் பார்த்து இருக்கேன். ஆனா நிறைய இல்ல, ஒன்னு தான்

****

13 வருடமாக குடித்து, குடியைத்தவிர வேறு ஒன்றை அறியாமல் போன ஒருவரை , சென்னையில் வி.ஹெச். எஸ்ஸில் சேர்த்து, 24 நாள் சிகிச்சையில் அவர் குணமாகி வெளியில் வந்து, இன்று முன்பு போல வியாபாரத்தை தொடங்கி சூப்பரா இருக்காரு.. ஆனா திருந்தனும்னு அவரு முடிவு செய்ததால் மட்டுமே முடிந்தது.

அவரைப்பார்க்க சென்ற போது, விதவிதமான குடிகாரர்களை பார்க்க நேர்ந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை. .ஆனால் ஒவ்வொரு குடிகாரருக்கு பக்கத்திலும் அவரின் மனைவி அல்லது தாய் இருந்தார்கள். :(. இவர்களால் அதிகமாக துன்பப்பட்டது அந்த பெண்களே !! :((

ஸ்ரீராம். said...

-இப்பவே மின்சார பாதிப்பு தாங்க முடியலை!
-சிறகுறைந்த (!!) வண்ணத்துப் பூசிகளைப் பார்க்கப் பாவமா இருக்கு!
-மயில் மழைக்காக (மட்டும்) இல்லை, குஷி வந்தாலே தோகை விரித்தாடும்!

@அப்பாதுரை.... அதானே...!

வெங்கட் நாகராஜ் said...

டிரங்குப் பெட்டியினுள்ளிலிருந்து நல்ல விஷயங்கள்.

மயில் நடனம்... :)

அமைதிச்சாரல் said...

நிறைவான தகவல்கள் ட்ரெங்குப்பெட்டியில்.

மழை பின்னியெடுக்க வேண்டிய ஆகஸ்ட் மாசத்துல சுள்ளுன்னு வெய்யிலடிக்குது மும்பையில். அப்படியிருக்க மழை இல்லாத சமயத்துல மயில்கள் ஆடுறதும் ஆச்சரியமில்லைதான். கலி முத்திருச்சு :-)

புதுகைத் தென்றல் said...

ரசித்தேன்

ஜோதிஜி திருப்பூர் said...

வித்யாசமான விசயங்களை எழுதிய உங்களுக்கு பாராட்டலாம்ன்னு நினைச்சா தவறான நேரத்தில் (கடைசியில்) சரியான விசயத்தை எழுதியிருக்கீங்க. எழுதிய நோக்கம் இந்த சமயத்தில் வேறு விதமாக பார்க்கப்படும்,

எல் கே said...

கடைசி லைன் எதுக்குன்னு புரிந்தது ....

Rasan said...

கதம்பாமாய் தகவல்கள் தந்துள்ளீர்கள்.

என்னுடைய தளத்தில்
ஏணிப்படி

தன்னம்பிக்கை

நம்பிக்கை


தொடருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா,
அருமையான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். பல புதிய செய்திகளையும் சொல்லி இருக்கிறீர்கள்.
துபாய்ல மனிதர்களே வெய்யிலுக்குப் பழகி விடுகிறார்கள். மயிலுக்கும் தெரிந்துவிட்டது.எப்போ மழை வர எப்ப நான் ஆடன்னு தீர்மானித்துவிட்டது:)

விஜயன் said...

//Solar storm!//
உலக அழிவுக்கே காரணமாக அமையலாம் என்றும் சொல்லப்படுகிறது :)
//ஜப்பான் அரசு அனுமதித்தால்//
உண்மை தான்...

நாஞ்சில் பிரதாப்™ said...

TM, fb,Twitter,G+, Indli, tamil10,Udance adengappa :))