Pages

அவன்

காலையில் தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக, வீட்டுக் கதவைத் திறந்தபோதுதான், வாசல் கேட்டின் ஓரமாக நின்றிருந்த அவனைக் கவனித்தாள். பார்க்கவே பரிதாபமான தோற்றத்துடன், கெஞ்சும் பார்வையுடன் நின்றிருந்தான்.

யாருக்கும் மனதில் ஈரத்தை ஏற்படுத்தும் காட்சி. அவளையும் ஒரு நிமிடம் தடுமாறத்தான் வைத்தது. உடலெல்லாம் அங்கங்கே காயங்கள் - இவனைப் போன்று ஊரில் அலையும் சில ரவுடிகளுடன் ஏற்பட்ட தகராறுகள் காரணாமாயிருக்கும். இங்கே அவளோடு வீட்டில் ஒன்றாக இருந்தவரை, புஷ்டியாகத்தான் இருந்தான். ஒருநாள் தன் புத்தியைக் காட்டப் போய், அவள் அவனை விரட்டியடித்தாள்.

அவன் தற்போது அவளுடன் இல்லை என்று தெரிந்ததும், அவ்வப்போது சில அக்கம்பக்கத்துப் பெருச்சாளிகள் வந்து குதறப் பார்க்கத்தான் செய்கின்றன. போன வாரம்கூட, இருட்டியபின் தோட்டத்தில் ஒரு பெருச்சாளி கள்ளத்தனமாக ஒளிந்து நிற்பதைப் பாத்து அலறவும், வழியே போன நல்லவர் ஒருவர் வந்து உதவினார்.  இப்படி எத்தனை நாளுக்கு அடுத்தவர் உதவியை எதிர்பார்க்க முடியும்?

இதற்காகவாவது அவனை வீட்டில் சேர்த்துக் கொள்ளலாம்தான். ஆனால், அந்தச் சிட்டுகள்? மகன்கள் பள்ளியிலிருந்து மாலை வரும்வரை, தனியே இருக்கும் அவளுக்கு, பகலில் அவள்வீட்டைத் தேடிவரும் அக்கம்பக்கத்துச் சின்னஞ்சிட்டுகள்தான் துணை. இதோ இன்னும் கொஞ்ச நேரம் போனால் எல்லாரும் வந்துவிடுவார்கள். தோட்டத்தில்தான் அத்தனை ஆட்டங்களும், பாட்டங்களும். இவள் கொடுக்கும் டிஃபனைக் கொறித்துக் கொண்டு, தண்ணீரையும் குடித்துக் கொண்டே விளையாட்டுகள் தொடரும்.

ஒருவரையொருவர் சீண்டிக் கொண்டும், துரத்திக் கொண்டும், பாடிக் கொண்டும், ஓடிக் கொண்டும், மண்ணைக் கிளறி விளையாடுவதென துறுதுறுவென்று அலையும் அந்த மொட்டுகள்தான் அவளின் நண்பர்கள்.  குறும்புக்கார பயல்கள், பிள்ளைகளைச் சீண்டுவதும், இப்பவே அப்படியா என்று அவள் அவர்களை ரசித்துச் சிரிக்க, அந்தப் பெண்குட்டிகள் நேக்காக  அவர்களைத் தவிர்க்கும் லாகவம் பார்த்து அதிசயப்படுவதுமாக அவள் நாள் கழியும்.  


மதிய நேரம், பக்கத்தில் உள்ள பெண்கள் பள்ளியில் இவர்கள் ஆட்டம் தொடரும். அங்கே மரத்தடிகளில் மதிய உணவருந்தும்நேரத்தில், மாணவிகளும் இவர்களோடு சேர்ந்து சிறகடித்து விளையாட,  அவர்கள் உணவையும்  சுவைத்துவிட்டு, பிறகு மீண்டும் மாலையில் இவள் தோட்டத்தில் தஞ்சமடைபவர்கள், இருட்டும்வரை அங்குதான் சுற்றிக் கொண்டிருப்பார்கள். 

இருட்டத் தொடங்கியதும், எல்லாரும் சிட்டாகப் பறந்து தத்தம் வீடு திரும்புவார்கள். இப்படி இவளுக்கு நேரம் போவதே தெரியாமல், தனிமை பயமில்லாமல் பார்த்துக் கொள்ளும் அவர்களை இவனுக்காக இழக்கவா? இவளிடமே இன்னும் தயங்கியேப் பழகும் அந்த பிஞ்சுகள், இவனைக் கண்டால் இனி இவள் வீட்டுப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள்.

ஏற்கனவே அந்த கயவன் ஒருமுறை இவர்களிடம் எண்ணிப் பார்க்கவே இயலாத மாபாதகத்தைச் செய்யத் துணிந்ததன் விளைவாய்த்தான், விரட்டப்பட்டு, வீடிழந்து தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கிறான். அந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்தச் சின்னஞ்சிறுசுகளிடம் நம்பிக்கையை மீட்டெடுக்க இவள் பட்ட பாடு!! இப்போது மீண்டும் வந்து நிற்கிறான். அவன் இருந்தால், எச்சில்காக்கைகளிடமிருந்து பாதுகாப்புதான். ஆனாலும், இவர்களை இழப்பதா!! குழம்பினாள்.

ஒரு உறுதியான தீர்மானத்திற்கு வந்தவளாய், கையில் கம்புடன் வாசலுக்கு வந்து, முன்பு குருவியைக் கவ்வித் தின்ற
அந்தப் பூனையை “ச்சூ... ச்சூ...” என விரட்டினாள்.

Post Comment

27 comments:

அமைதிச்சாரல் said...

புத்தின்னு படிச்சதும் நாயோன்னு நினைச்சேன். பூனைன்னு ட்விஸ்ட் வெச்சீங்க பாருங்க... அங்கதான் நிக்கிறீங்க நீங்க :-)))))))))

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்ம்... ரொம்ப மோசமானவனா இருக்கானே ”அவன்”!!!

Seeni said...

ada...:

கோமதி அரசு said...

கதை மிக அருமையாக இருக்கிறது.
தொலைக்காட்சி, கம்பியூட்டர் எல்லாம் இல்லாத போது எனக்கும் இப்படித்தான் இயற்கை, பறவைகள் என்று போகும். இப்போதும் அதிகாலையில் மொட்டைமாடியில் அரை மணி நேரம் பறவைகளின் கீதங்கள், அதன் உற்சாக துள்ளல்களை பார்த்து ரசிப்பேன்.

கதையை மிக ரசித்தேன்.
அவன் மிக பொல்லாதவன் தான். விரட்டுங்க, விரட்டுங்க உடனே.

கோவை2தில்லி said...

லேபிள் நல்லா இருக்குங்க....:))

பகிர்வுக்கு நன்றி.

சிநேகிதி said...

மொக்கை கதை எல்லாம் இது இல்லை... நல்லா இருக்கு

ஆமினா said...

ஹி..ஹி..ஹி...

அவன நாய் என்று நினைத்தேன் :-)))

ஆனாலும் உங்களுக்கு குழந்தை மனசு ஹுசைனம்மா... சான்சே இல்ல! நான்லாம் வீட்டுக்கு என்ன வந்தாலும் துரத்திவிட்டுட்டுதான் மறூவேலை பார்ப்பேன்... வச்சு அழகுலாம் பார்க்க மாட்டேன்..

நீங்க இத வச்சு பதிவே போட்டுட்டீங்க :-)

திண்டுக்கல் தனபாலன் said...

எதிர்பாராத முடிவு... நன்றி...

மாதேவி said...

ஆகா! அருமை.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

ஒரே கதைக்குள்ள ரவுடியிசத்தையும், குழந்தை மேல் உள்ள பாசத்தையும், குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகும் குழ்ந்தை பாலியல் வன்முறையையும், கணவன் மனைவி பிரச்சனையையும், கணவன் இல்லாத மனைவி படும் கஷ்டத்தையும் சூப்பரா சொல்லி இருக்கிங்க

Naazar - Madukkur said...

நல்லாத்தான் இருக்கு

அப்பாதுரை said...

45/100 :)

ஸ்ரீராம். said...

நானும் நாய் என்றுதான் நினைத்தேன்...! பூனையா? நாயையாவது பழக்கி விடலாம். பூனை ம்....ஹூம்! ஆனாலும் 'அவன்' பாவம்தான்!

லாவகமா லாகவமா... எனக்கு ரொம்ப நாளா இந்தச் சந்தேகம் உண்டு!

எல் கே said...

முதலில் நாய்னு நெனச்சேன். ஆனால் பெருச்சாளின்னு பார்த்தவுடன் பூனைன்னு முடிவு பண்ணேன். அதே மாதிரிதான் ஆச்சு.


லேபிள் : நீங்க அடிக்கடி உண்மையே பேசறீங்க

வல்லிசிம்ஹன் said...

என்னவோ ஏதோ என்று படிக்க வைத்துவிட்டீர்கள் ஹுசைனம்மா:)
அருமையான பொழுதுபோக்கு இந்தப் பறவைகளுடன்.
அதை நல்ல கற்பனையோடு சேர்ந்து ரசிக்கும்படி கொடுத்திருக்கிறீர்கள்.ரௌடியைக் கிட்டச் சேர்க்காதீர்கள்:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

ஹுஸைனம்மா said...

அமைதிக்கா - முதல்லயே கண்டுபிடிச்சுட்டீங்களா? என்னை மாதிரியே புத்திசாலி!!

வெங்கட் - ம், படுமோசமானவன்தான்!! நன்றிங்க.

சீனி - ஏங்க, “அட”ன்னு நொந்துக்கிறீங்களா? :-)))

ஹுஸைனம்மா said...

கோமதிக்கா - என் கணிணியின் ஜன்னலுக்கு அருகில்தான் எல்லா பறவைகளும் வந்து நிற்கும். அவற்றின் சப்தங்கள் கேட்டுக் கொண்டேதான் இருக்கும் எப்போதும். நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

கோவை2தில்லி - அப்ப லேபிள் “மட்டும்”தான் நல்லாருக்குங்கிறீங்க... ஓகே, ஓக்கே. :-)))

சிநேகிதி - ரொம்ப நன்றிப்பா.

ஆமினா - ம்ஹூம், பூனை, நாய் ரெண்டையுமே வீட்டுப் பக்கம் வர விடுறதில்லை. பயம்!! தோட்டத்துல ஒரு எலியைப் பாத்தப்போ, இந்தக் கதைக்கான “கரு” கிடைச்சுது!! :-))

ஹுஸைனம்மா said...

தனபாலன் - நன்றிங்க.

மாதேவி - ரொம்ப சந்தோஷம்ப்பா உங்க பின்னூட்டம்!

அபுநிஹான் - அவ்வ்வ்வ்வ்... வொய் திஸ் கொலவெறி? என் கதையையே உங்க பின்னூட்டம் beat பண்ணிடுச்சு. :-)))

ஹுஸைனம்மா said...

நாஸர் - நன்றிங்க.

அப்பாத்துரை - அட, 45 மார்க்கா!! நானே எனக்கு ஷொட்டு கொடுத்துக்கிறேன். (சில சமயம், விகடனில் மொக்கைப் படத்துக்கும் 40 மார்க் கொடுப்பாங்க) :-))))

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார் - எல்லாருமே கரெக்டா ஆரம்பத்திலயே யூகிச்சுட்டீங்க போல. என் வாசகர்களல்லவா!! :-)))

“இலகு” என்ற வார்த்தையிலிருந்து “லாகவம்” வந்ததாக ஒரு மூத்த பதிவர் (யாரென்று நினைவில்லை) விளக்கம் அளித்ததை படித்தபின்புதான் எனக்கும் இந்தக் குழப்பம் நீங்கியது.

ஹுஸைனம்மா said...

எல்.கே. - மத்தவங்களாவது நாய்னுதான் யூகிச்சாஙக்.நீங்க மட்டும்தான் சரியா கணிச்சிருக்கீங்க!! பரிசு கொடுக்கலாமான்னு ஒரு செகண்ட் மட்டுமே யோசிச்சேன். //நீங்க அடிக்கடி உண்மையே பேசறீங்க // இதைப் பாத்ததால வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். :-)))))

நாஸியா said...

ஒரு விஷயத்துக்காக ரொம்ப ஃபீல் பண்றேன்..

ஏன் நான் அபு தாபிக்கும் ஷார்ஜாக்கும் இவ்ளோ தூரம்?

ஹுஸைனம்மா said...

வல்லிமா - நன்றிமா.

முத்தக்கா - என்ன வெறும் ஸ்மைலி மட்டும்? (தலையில அடிச்சுக்கீறதுக்கு ஒரு ஸ்மைலி இருந்தா, அதையேப் போட்டிருப்பேனேன்னு சொல்றீங்களோ?) :-)))

நாஸியா -
//ஏன் அபுதாபிக்கும் ஷார்ஜாக்கும் இவ்ளோ தூரம்?//
நல்லவேளை, இவ்ளோ தூரமா இருக்கப் போய் நான் பிழைச்சேன். இல்லன்னா, கல், முட்டை, தக்காளி எல்லாம் பறந்து வந்திருக்கும் போல!! :-)))))

அன்னு said...

கதைய விட எனக்கு லேபிள்தான் பிடிச்சிருக்கு அக்கா.... ஸ்ட்ராங்கா அதை ரெண்டு தடவை எழுதியிருக்கீங்க பாருங்க....அந்த விதத்துல.... இன்னொரு நாள் விரட்டப்பட்ட பூனையின் பார்வையிலிருந்தும் கதை எழுதுங்க.... இதுக்கே இவ்ளோ கமெண்ட்ஸ்.... நம்மாளுங்க எதையும் தாங்கும் இதயம் :))))))))))))))

ராமலக்ஷ்மி said...

அழகாக நகர்த்திச் சென்றிருக்கிறீர்கள்:)!