Pages

கவன ஈர்ப்பு
கவனத்தை ஈர்த்த சில செய்திகள்!!


ஊறிய கால்கள்!!
 சத்தியாக்கிரகம் தெரியும்; “ஜல சத்தியாக்கிரகம்” தெரியுமா?

மத்திய பிரதேசத்தில், கோங்கோல் என்ற ஊரில், நர்மதா ஆற்றின் இந்திரா சாகர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால், தம் ஊரிலுள்ள வீடுகள், பயிர்நிலங்கள் மூழ்கப் போவதை எதிர்த்தும், அதற்குரிய நிவாரணங்களை முறையாக வழங்கக் கோரியும் அம்மக்கள் ஆற்றில் நின்று போராட்டம் நடத்திவருகிறார்கள். ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் அல்ல; 15 நாட்களுக்கு மேலாக, நாள்முழுதும் தண்ணீரிலேயே நின்றுக் கொண்டிருக்கிறார்கள்!! 

முதலில் நெஞ்சுவரை இருந்த நீர்மட்டம், தற்போது கழுத்து அளவு வந்துவிட்டது. மழையும் பெய்துவருகிறது. என்றாலும், மனம்தளராமல் நின்று போராடி வருகிறார்கள்.  மாநில பிஜேபி அரசு, 15 நாட்களுக்குப் பின்னரே தன் மந்திரிகளை அனுப்பி விசாரித்துள்ளது. எனினும் தம் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை, காலவரையற்ற போராட்ட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

மகாராஷ்டிர மாநில தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்த  அமைச்சர் லட்சுமணராவ் டோப்லே, ”கற்பழிப்புக்கு ஆளானவர்களுக்காக நியாயம் கேட்டு, நேரத்தை வீணடிக்கும்  போராட்டங்கள் நடத்துவதால், எந்த பயனும் இல்லை. பதிலாக, பாதிக்கப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கு, முறையான கல்வியும், சட்ட நடைமுறைகளையும் கற்றுத்தர வேண்டும். பின்  சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். இதைவிடுத்து, போராட்டங்கள் நடத்துவது என்பது, வழக்கின் தீவிர தன்மையை குறைத்து விடும்” என்று கூறியுள்ளார்.

ரஜினி-சத்தியராஜ் நடித்த ’என்னம்மா கண்ணு சௌக்கியமா’ பாடல் இடம்பெற்ற   ”மிஸ்டர். பாரத்” படம் மாதிரியான நடவடிக்கைகள்தான் இந்த நாட்டுக்குச் சரிவரும்னு சொல்றாரு அரசாங்க மந்திரி!! :-(((

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்காக போராட்டக் குழுவினர், போராட்டத்தின்போது இறப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இது உண்மையெனில், என்ன சொல்ல வருகிறார்கள் இதன்மூலம்? 

விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டால், அதுக்குன்னே காத்திருக்கும் அரசாஙகமே ஓடிவந்து உடன்ன்ன்னே பணம் தருமே. பின், இவர்களுக்கும் அரசிற்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் அரசு வழங்கிய நிகழ்ச்சியில், ஒரு சிறுமி, “பணம் வேண்டாம்; என் அப்பாதான் வேணும்” என்று அழுதாளாம்.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

சிவகாசி வெடிவிபத்து நடந்த இடத்திற்கு வெகுஅருகில் அரசு பள்ளி ஒன்று இருக்கிறது. முதல் வெடிச்சத்தம் கேட்ட நேரம்,  உணவு இடைவேளை நேரம் சமீபத்திருந்தது என்பதால் குழந்தைகளை வெளியே விடாமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொண்டனர். விட்டிருந்தால், ஆர்வத்தின் காரணமாக விபத்தை வேடிக்கை பார்க்கச் சென்றிருப்பர். அடுத்து நடந்த வெடிப்பில் இவர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம்!! 

மேலும் வெடிவிபத்தின் அதிர்வால் பள்ளி கட்டிடத்திலும் விரிசல் விழுமென்று எதிர்பார்த்து, மாணவர்களை கட்டிடத்தைவிட்டு வெளியேற்றி மைதானத்தில் வைத்துப் பாதுகாத்துள்ளனர் ஆசிரியர்கள்!! எதிர்பார்த்ததுபோலவே, விரிசலும் விழுந்துள்ளதாம்.

இதற்கிடையே  சாலை மோசமாக இருந்ததால், தீயணைப்புப் படையினர் வந்துசேரத் தாமதமாகியிருக்கிறது. இதுவும் நல்லதுக்குத்தானாம். ஒருவேளை சீக்கிரம் வந்திருந்தால், கடைசி வெடிப்பின்போது தீயணைப்பு வீரர்கள், அதனருகே இருந்திருப்பார்கள்!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
 
அமெரிக்கா, தன் நாட்டில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்று சொல்லப்படும் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றி வருகிறது.  மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க நாட்டினரே இவ்வாறு குடியறியவர்களில் பெரும்பான்மை. என்றாலும், இவர்கள் அமெரிக்கா வந்தபின் பெற்ற பிள்ளைகள் அமெரிக்கக் குடியுரிமை கொண்டவர்கள் என்பதால், பல குடும்பங்களில் பெற்றோர் வெளியேற்றப்பட்டு, குழந்தைகள் அமெரிக்காவில் என குடும்பங்கள் பிரிக்கப்படுவதும் நிகழ்கிறது.

இந்நடவடிக்கைகளுக்கு அமெரிக்கர்களிடையே  “அமெரிக்கர்கள் செய்யத் தயங்கும் கீழ்மட்ட வேலைகளை இவர்கள் செய்தார்கள். அவர்களை வெளியேற்றுவது துரோகச் செயல்” என்று ஆதரவும், “இவர்களால்தான் நாட்டில் குற்றங்கள் பெருகிவிட்டது; குறைந்த சம்பளத்தில் இவர்கள் வேலை பார்க்க முன்வருவதன்மூலம் மற்றவர்களின் வேலைவாய்ப்பில் குறுக்கிட்டார்கள். எனவே வெளியேற்றுவது சரியே” என்று எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இதெல்லாம் மற்ற நாடுகளில்தான் உள்ளது என்ற நினைப்பு இருந்தது. அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கில்லைபோல!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

இந்தியாவிலும், பிற நாட்டிலிருந்து குடியேறுபவர்கள் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலிருந்து குடியேறுபவர்களைக்கூட வெளியேற்ற வேண்டும் என்று சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்க, நம் அண்டை நாடான “பூடான்” சத்தமேயில்லாமல், 31 இந்தியர்களை தன் நாட்டிலிருந்து இதே சட்டவிரோதக் குடியேற்றக் காரணத்தால்  வெளியேற்றியுள்ளது!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

நீதி தாமதமானாலும் சாகாது என்பதை மெய்ப்பிக்கும்விதமாக இரண்டு தீர்ப்புகள்: கசாப் மரணதண்டனை மற்றும் நரோடா பாட்டியா தீர்ப்புகள். என்ன, கசாப்  இனி அடுத்து ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புற சாத்தியக்கூறுகளைத் தடுக்கணும்.

 -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

Post Comment

32 comments:

விச்சு said...

கதம்பமான செய்திகள் என்றாலும் சுவராஷ்யமான செய்திகள்தான்.

சுவனப் பிரியன் said...

//நீதி தாமதமானாலும் சாகாது என்பதை மெய்ப்பிக்கும்விதமாக இரண்டு தீர்ப்புகள்: கசாப் மரணதண்டனை மற்றும் நரோடா பாட்டியா தீர்ப்புகள். என்ன, கசாப் இனி அடுத்து ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புற சாத்தியக்கூறுகளைத் தடுக்கணும்.//

கசாப் ஒரு துருப்புதான். அவனுக்கும் மும்பைக்கும் என்ன கொடுக்கல் வாங்கல்? அவனை மூளை சலவை செய்த கள்ள முல்லாக்களும், அவர்கள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் ஊடுருவ உதவியாக இருந்த நம் நாட்டு தேச துரோக கும்பலும் யார் என்பதையும் விசாரித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.

மற்றபடி கலவையாக வந்த இந்த பதிவு அருமை.

தொழிற்களம் குழு said...

உங்கள் பதிவுகள் பலரையும் சென்று சேர
தமிழ்பதிவர்கள் திரட்டியில் இணையுங்கள்

தொழிற்களம் குழு said...

உங்கள் பதிவுகள் பலரையும் சென்று சேர
தமிழ்பதிவர்கள் திரட்டியில் இணையுங்கள்

T.N.MURALIDHARAN said...

முக்கியமான செய்திகளை பகிர்ந்திருக்கிறீர்கள் நன்றி.

அப்பாதுரை said...

பதினைந்து நாட்களாக நீரில் நின்று போராடுவது அபாயமென்றால் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை நினைத்து இன்னும் பயமாக இருக்கிறது.

கூடங்குளம் பற்றிய உங்கள் சந்தேகம் சிரிப்பையும் சிந்தனையையும் தூண்டுகிறது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் பார்ப்போம். எதற்கும் விலை உண்டு, sadly.

பாச மலர் / Paasa Malar said...

கசாப் விஷயத்தில் இழுபறி நீடிக்கும் என்று தோன்றுகிறது..
ஜலசத்யாக்கிரகம்....வெல்ல வாழ்த்துவோம்...

வல்லிசிம்ஹன் said...

அருமையான செய்திகள் . வருத்தம் தரும் விஷயம் நர்மதா போராட்டம்.மக்களுக்கு நல்லதே செய்ய மாட்டார்களா இவர்கள்.
நன்றி ஹுசைனம்மா.

ராமலக்ஷ்மி said...

ஜல சத்தியாக்கிரகம்.. எளிய மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைக்காக எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது:(? கூடங்குளம் இன்னொரு உதாரணமாகிக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீராம். said...

முதல் செய்தி விஷுவலாக செய்திச் சேனலில் பார்த்தேன். மனம் பதறியது!
சிவகாசி வெடிவிபத்து நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் வேடிக்கை பார்க்க வந்தவர்களே என்றும் படித்தேன்.

எல் கே said...

கூடங்குளம் என்ன சொல்ல. மக்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர். இதுக்கு மேல வாய திறக்கலை .

எல்லா நாட்டிலையும் இது உண்டு.

கீதமஞ்சரி said...

மனம் நெகிழ வைக்கும் செய்திகள். பாமர மக்களின் பரிதாப நிலையை நினைக்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெரிய நாடோ சின்ன நாடோ ப்ரச்சனைகள் மட்டும் பெரிசு பெரிசா இருக்கு.
நதியில் நிக்கிறதெல்லாம் நினைச்சுக்கூட பாக்கமுடியல..வாழ்க்கைய நழுவ விடக்கூடாதுன்னு இது போன்ற விசயங்களை செய்யராங்க.. :(

அமைதிச்சாரல் said...

முதல் செய்தியை சானல்களில் பார்த்தப்ப ரொம்பவும் வருத்தமா இருந்தது. அரசாங்க இயந்திரம் கொஞ்சம் வேகமா வேலை செய்யக்கூடாதோ..


திண்டுக்கல் தனபாலன் said...

வேதனையான சில செய்திகள் இருந்தாலும்... தொகுப்பிற்கு நன்றி...

கோவை2தில்லி said...

ஜல சத்தியாகிரகம் நடத்தும் மக்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றட்டும் அரசு....

மாதேவி said...

உங்கள் பகிர்வில் பல செய்திகள்.

ezhil said...

கேள்விப்படாத பல செய்திகள். தகவலுக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

ஜல சத்யாகிரகம்... உரிமைக்காய் எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது.....

பல செய்திகள்... உங்கள் பக்கத்தில்... பகிர்வுக்கு நன்றி.

அமுதா கிருஷ்ணா said...

நர்மதா போராட்டம் பாவம் அந்த மக்கள்.

சிவகாசி பக்கம் க்ராஸ் செய்தாலே அந்த வெயில் உக்கிரம் நம்மை தாக்கும். அந்த பொல்லாத வெயிலில் அப்படி ஒரு வெடி விபத்து.

புதுகைத் தென்றல் said...

இந்தியாவிலேயே பாதுகாப்பான ஆள் அதிகம் அரசாங்க செலவில் வாழ்வது கசாப் தான் :))

ஜலசத்யாகிரகம்... புதுமையா இருக்கு. வெற்றிபெற வாழ்த்துக்கள்

Riyas said...

ஜல சத்தியாகிரகம் ஆச்சர்யமான செய்திதான் பாவம் அந்த மக்கள்!

Vijiskitchencreations said...

நல்ல பதிவு. உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அத்தனையும் பயனுள்ள செய்திகள். நான் கொஞ்சம் லேட்டாக வந்து தான் படித்தேன்.

மனோ சாமிநாதன் said...

எல்லாமே முக்கிய செய்திகள் தான்! அதுவும் இந்த ஜல சத்யாகிரகத்தை நானும் பார்த்து அசந்து போன அதே நேரத்தில் அவர்களை நினைத்துப் ப‌ரிதாபமாகவும் இருந்தது. இந்த சத்தியாகிரகம் எல்லாம் நம்ம ஊரு அரசியல்வாதிகளை மாற்றி விடுமா என்ன?

கோமதி அரசு said...

ஜலசத்தியாகிரகத்தில் ஊறிய காலகளை பார்க்க கஷ்டமாய் உள்ளது.


ஒரு சிறுமி, “பணம் வேண்டாம்; என் அப்பாதான் வேணும்” என்று அழுதாளாம்.//

இதை படித்த போது மனம் கனத்து போனது பணத்தால் அவள் அப்பாவை மீட்டுக் கொடுக்க முடியுமா?

பல செய்திகளும் மனதை வருந்த செய்வதாய் தான் உள்ளது.
வாழ்க்கையே போரட்டாமாய் சிலருக்கு ஆகி போனதை நினைத்தால் வருத்தபடாமல் இருக்க முடியவில்லை.

சந்திர வம்சம் said...

உங்க தளத்தைப் பற்றி வேறொரு தளத்தில் [நல்லவிதமாகத்தான்!] பார்த்து வருகிறேன்.
செய்தியினை படித்தேன். நீதி வெற்றிபெறும்.
நேரம் வாய்ப்பின் வருக!பத்மாவின் தாமரை மதுரை

ஹுஸைனம்மா said...

விச்சு - நன்றிங்க.

சுவனப்பிரியன் - //கசாப் ஒரு துருப்புதான்//
"Who killed Karkare" புத்தகத்தில் இந்த சம்பவத்தின் பாகம் மட்டும் வாசித்து வருகீறேன். படிக்கப் படிக்க, இப்படியும் இருக்குமா என்று அதிர்ச்சி வருகிறது. CST ரயில் நிலையத்தில் கசாப் சுட்டதாகச் சொல்லப்படும் அதே நேரத்தில், சரியாக, ஒரு ப்ளாட்ஃபாரத்தின் 16 கேமராக்களும் செயலிழந்துள்ளன, இன்னொன்றில் வேறுபக்கமாகத் திருப்பி வைக்கப்பட்டுள்ளன. இது எல்லாமே எப்படி “தற்செயல்” என்று கேள்வியெழுப்புகிறார் ஆசிரியர். அவன் சென்று சுட்ட மருத்துவமனையிலும் நடந்த குளறுபடிகளையும் விளக்குகிறார்.

எப்படியாகிலும், கசாப்பும் இதற்கு துணைநின்றதால் குற்றவாளியே என்பது என் கருத்து.

ஹுஸைனம்மா said...

தொழிற்களம் குழு - நன்றிங்க.

முரளிதரன் - நன்றிங்க.

அப்பாதுரை - ஜலசத்தியாக்கிரகம் நின்றவர்களைக் கைது, போராட்டத்தை முடித்துவைத்திருக்கிறார்கள்.

பாசமலர் - எதிர்பார்த்ததுபோலவே, கசாப் கருணை மனு போட்டிருக்கிறான். இன்னும் எத்தனை வருஷமோ?!

வல்லிமா - நன்றி.

ஹுஸைனம்மா said...

ராமலஷ்மிக்கா - மக்களின் நலம் பேணும் அரசாங்கம் என்பதும் வரலாற்றில் மட்டுமே பார்க்கமுடிவதாகிப் போய்விடும்போல, இந்தியாவில்.

ஸ்ரீராம் சார் - சிவகாசி விபத்தில் இறந்தவர்கள், வேடிக்கை பார்த்தவர்கள், காப்பாற்ற முயன்றவர்களும் அடங்குவர் என்று செய்திகள். தீவிபத்துகளில் உடன் உள்ளே செல்ல முயலக்கூடாது என்று தீயணைப்பு வீரர்களுக்கே மறந்துவிடும் விஷயம். (சென்னை பிரியா மட்டுமல்ல, 9/11-ல் அமெரிக்க தீயணைப்பு வீரர்களும் பாதிக்கப்பட்டனர்)

எல்.கே. - கூடங்குளம்: உணமைதான், ஜார்ஜ் புஷ் "You are either with us or against us" என்று சொன்னதுபோலத்தான் ஆகிவிட்டது. எந்தப் பக்கமும் கருத்துச் சொன்னாலும் எதிர்ப்புதான்!!

கீத மஞ்சரி - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

முத்து அக்கா - பெரிய குடும்பங்களில் பிரச்னையே இருக்காதோ என்று கீழ்த்தட்டு மக்கள் நினைப்பதுபோலத்தான்; வல்லரசு நாடுகளிலும் உள்நாட்டுப் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யுதுன்னு தெரிஞ்சிக்கீறதுல ஒரு (குரூர) சந்தோஷம்!! :-))))

அமைதிக்கா - //அரசாங்க இயந்திரம் கொஞ்சம் வேகமா வேலை செய்யக்கூடாதோ/
செஞ்சுட்டாங்க!! கைது செஞ்சுட்டாங்க!! :-) :-(

தனபாலன் - நன்றிங்க.

கோவை2தில்லி - நன்றிப்பா.

மாதேவி - நன்றிங்க.

எழில் - நன்றிங்க.

வெங்கட் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

அமுதா - ஆமாம், மதுரை போகும்போது சிவகாசி தாண்டும்வரை, தகிக்கும்.

புதுகைத் தென்றல் - நன்றிப்பா.

ரியாஸ் - நன்றி.

விஜி - ரொம்ப நன்றிப்பா.

ஹுஸைனம்மா said...

மனோக்கா - //இந்த சத்தியாகிரகம் எல்லாம் நம்ம ஊரு அரசியல்வாதிகளை மாற்றி விடுமா என்ன?//
கரெக்டாச் சொன்னீங்கக்கா. அவர்களைக் கைதுசெய்து போராட்டத்தை கட்டாய முடிவுக்குக் கொண்டுவந்துட்டாங்க.

கோமதிக்கா - தினமும் செய்திகளைப் பார்த்தால் மனம் பாரமாகிவிடுகீறதுதான்.

சந்திர வம்சம் - நன்றிங்க.