மூணு-மூணரை வயசான (அப்போ) என் பெரியவனுக்கும், உடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பரின் 4 வயது மகளுக்கும் சண்டை வந்தது.
அவள்... “நான் எங்கப்பாகிட்ட சொல்றேன், பாரு..”
இவன்... “ஏஏஏய்ய்.. நான் எங்கம்ம்மாகிட்ட சொல்லிடுவேன்..”
நண்பர் என் கணவரைப் பார்க்க, அவர்..”அமெரிக்காவுலயும் ஜனாதிபதி இருக்காரு... இந்தியாவிலயும் ஜனாதிபதி இருக்காரு... ஐ யம் இண்டியன்!!”
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
இன்னொரு குடும்ப நண்பரின் குடும்பமும், நாங்களும் ஒரே காரில் சுற்றுலா போயிருந்தோம். அரையே அரை நாள் கழிந்ததும் நண்பர் என்னிடம் “இல்ல.. பொதுவா இந்த வயசுப் பசங்க இவ்வளவு அமைதியா இருந்து நான் பாத்ததில்லை. உங்க பையன் குணமே அப்படித்தானா, இல்லை மிரட்டி வச்சிருக்கீங்களா?” என்றார்.
நான் என்ன சொல்லன்னு.. அதாவது எப்படி பாலீஷாப் பதில் சொல்றதுன்னு யோசிச்சுகிட்டிருக்கும்போதே, என் சின்னவன் பாஞ்சுகிட்டு, “மிரட்டிதான் வச்சிருக்காங்க மாமா!” என்றான்.
அவ்வ்வ்வ்... இந்த மாதிரி எல்லார் முன்னாடியும் புத்திரர்கள் உண்மை விளம்பிகளாகும் சமயத்துல, அவங்களைத் திட்டவும் முடியாம... குட்டவும் முடியாம அசடு வழியறது இருக்கே...
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
சின்னவனுக்கு அவ்வப்போது பல் விளக்கி விடுவது உண்டு. ஒருமுறை ’பல் விளக்கும் படலம்’ முடிந்தவுடன்:
“ம்மா... அதெப்படிம்மா நீ தேச்சா மட்டும் பல் க்ளீனா ஆகுது? நீ இப்ப சும்மாதானே இருக்கே.. பேசாம ‘டெண்டிஸ்ட் டாக்டர்’ ஆகிடு. அப்புறம், எல்லார் பல்லையும் க்ளீன் பண்ணி விடலாம். ”
அடேய்......
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
”Adjectives" படித்துக் கொண்டிருக்கிறான். பள்ளியில் பயிற்சிக்காக வீட்டுப் பாடம் கொடுத்திருந்தார்கள். Tea, sun, sea, wind, girl என்று கொடுக்கப்பட்டிருந்த வார்த்தைகளுக்கு நான் நினைத்ததுபோலவே முறையே hot, bright, blue, cool என்று எழுதிக் கொண்டு வந்தவன், அடுத்த வார்த்தையான “girl"க்கு “beautiful" என்று எழுதுவான் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் “a clever girl" என்று எழுதினான்!!
நான் வளர்த்த புள்ளை வேற எப்படி இருப்பான்!! பெருமை தாங்கலை எனக்கு!!
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
அவனின் Social science பாடத்தில், “brown rice"தான் நல்லது என்று கொடுத்திருக்கிறது. Brown rice என்றால் என்ன, ஏன் நல்லது, எப்படி எல்லாம் கேட்டுக் கொண்டான்.
“அப்ப ஏன் நாம அந்த அரிசி வாங்குறதில்லை?”
“பிரவுன் ரைஸ் நல்லது. ஆனா, ரொம்ப டேஸ்டா இருக்காது. நீங்கல்லாம் டேஸ்டா இருந்தாத்தானே சாப்பிடுறீங்க. உங்களுக்கெல்லாம் பர்கர், பீட்ஸாவெல்லாம்தானே பிடிக்குது. அதெல்லாம் வெள்ளை அரிசிச் சோறு மாதிரி பார்க்கவும் சாப்பிடவும் நல்லாருக்கும். ஆனா ஹெல்த்தி ஃபுட் கிடையாது. ஹெல்த்தியான சாப்பாடு டேஸ்டா இருக்காது. அது எங்கே புரியுது உங்களுக்கு?”
ஒரு அரை நிமிஷம்போல யோசிச்சுட்டுச் சொன்னான், “நீ சமைக்கிற எல்லா சாப்பாடுமே ஹெல்த்தி ஃபுட், இல்லியாமா?”
ஹூம்... எனக்கு வில்லன் வெளியே இல்லை...
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
|
Tweet | |||
26 comments:
கேள்வியின் நாயகன் மிகவும் ரசிக்கவைக்கிறார்...
ஹாஹா.... எல்லாமே சுவாரஸ்யமா இருக்கும் போலேருக்கே.... (எங்களுக்கு!) :)))
மகனைப்பற்றிய புராணங்களில் எத்தனை பெருமிதம் ஒரு அம்மாவிற்கு!! அத்தனையையும் மிகவும் ரசித்தேன்!!
மரத்தை விட்டு நிழல் ரொம்ப தூரம் விழுந்துருமா என்ன?
குறும்புக்கார குட்டன்!
குழந்தைகிட்ட பேசி ஜெயிக்க முடியாது. நல்ல பதிவு.
“girl"க்கு “beautiful" என்று எழுதுவான் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் “a clever girl" என்று எழுதினான்!!//
புத்திசாலி அம்மாவின் மகன் வேறு எப்படிச் சொல்வார்!
கேள்வியின் நாயகன் கேள்விகள் எல்லாம் அருமை.
ஒவ்வொன்றையும் ரசிக்க முடிந்தது.... :)
ஹா..ஹா..ஹா.. கலக்கல் போங்க.
கடைசி வரி.. நீங்க ரொம்ப லேட்டாப் புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க ஹுஸைனம்மா :-))
மாணிக்கங்களை அல்லவாப் பெற்று வைத்திருக்கிறோம்:)
எங்க பேத்தி(ஐந்து வயது வருகிறது அடுத்த மாதம்)
இரவு இரண்டு மணிவரை
வேலை செய்துவிட்டு வந்து தூங்கும் அப்பாவை எழுப்பிக் கேட்டிருக்கிறாள்.
அப்பா இப்ப 12 மணி ஆகிறது.ஆஃபீஸிலயும் இப்படித்தான் தூங்குவியா?
பையர் விழித்துக் கொண்டுவிட்டார்.
வெகு நேரம் புரிய வைத்தபிறகு ,பேத்தியுடைய தீர்ப்பு 'அப்பா வேலைக்குப் போகவேண்டாம்.:)
மாணிக்கங்களை அல்லவாப் பெற்று வைத்திருக்கிறோம்:)
எங்க பேத்தி(ஐந்து வயது வருகிறது அடுத்த மாதம்)
இரவு இரண்டு மணிவரை
வேலை செய்துவிட்டு வந்து தூங்கும் அப்பாவை எழுப்பிக் கேட்டிருக்கிறாள்.
அப்பா இப்ப 12 மணி ஆகிறது.ஆஃபீஸிலயும் இப்படித்தான் தூங்குவியா?
பையர் விழித்துக் கொண்டுவிட்டார்.
வெகு நேரம் புரிய வைத்தபிறகு ,பேத்தியுடைய தீர்ப்பு 'அப்பா வேலைக்குப் போகவேண்டாம்.:)
ஹிஹி.. அப்போ நானும் உங்கள் மாதிரி தான் ஹூசைனம்மா ஹெல்தி ஃபுட் தான் டெய்லி செய்வேன்
குழந்தைகள் எப்போதுமே நம்மை வியக்கவைக்கிறார்கள்... எல்லாமே நகைச்சுவையாய் தோன்றினாலும் அதன் பின்னே உள்ள அறிவு... தீட்டப்படும்போது இன்னம் ஜொலிக்கும்
நல்ல கேள்விகள் உங்கள் பிள்ளை அல்லவா?
ஹஹஹஹா!! உங்க பையன் ரொம்ப புத்திசாலி தான்...
நீங்க எப்போ டென்டிஸ்ட் ஆனீங்க???
//“நீ சமைக்கிற எல்லா சாப்பாடுமே ஹெல்த்தி ஃபுட், இல்லியாமா?”//
ஹா.. ஹா..! நல்லாவே சிந்திக்கிறார். சபாஷ்! :))
நீங்க எதுக்கு 'ஹெல்த்தியான சாப்பாடு டேஸ்டா இருக்காது'ன்னு சொன்னீங்க ஹுஸைனம்மா, தேவையா இது..? "ஹெல்த்தியான 'சில' சாப்பாடு"ன்னு அங்க ஒரு தொக்கு வச்சிருக்கலாம்ல? :)
இரசித்தேன்:)!
இராஜேஸ்வரி மேடம் - நன்றிங்க.
ஸ்ரீராம் சார் - நன்றிங்க.
மனோக்கா - ஆமாம்க்கா, (பிள்ளைக்கு) எத்தனை வயசானாலும் ”எம்புள்ளை..”ன்னு ஆரம்பிச்சு பெருமையடிக்கிறது ஒரு சுகம்தான். இந்தியா போகும்போது, என் மாமியார் அப்படிச் சொல்லும்போது ரசித்துக் கேட்டுக் கிண்டலடிப்பதுண்டு. :-))
அப்பாதுரைஜி - ஹை, மரம்-நிழல்: புதுசா இருக்கு, ரசனையாவும் இருக்கு. வழக்கமா, புலி-பூனை, தாய் எட்டடி... இதத்தான் சொல்லுவாங்க. நன்றி.
நிலாமகள் - அதே...
முரளி - ஆமாங்க, நன்றிங்க.
கோமதிக்கா - அவன் “clever' என்று எழுதியதும், ‘கேர்ள்’ என்றால் ‘ப்யூட்டிஃபுல்’ என்று நம் (என்) மூளையில் பதிந்துவிட்டதோ என்று எனக்கே வெட்கமாகிவிட்டது.
வெங்கட் - நன்றிங்க.
அமைதிக்கா - அது எனக்கேத் தெரிஞ்சதுதான், ஆனாலும் என்னைபப்த்தி ஒரு பயம், மரியாதை பிள்ளைங்ககிட்ட இருக்குன்னு நம்ம்ம்பிகிட்டிருந்தேன்!! :-)))
வல்லிமா - ”ஆஃபீஸிலயும் இப்படித்தான் தூங்குவியா?” - ஆஆஆஆ!! ஒரு செகண்டில் எப்பேர்ப்பட்டத் தூக்கத்தையும் கலைத்துவிடும் கேள்வி!!
நாஸியா - அதானே, நாம எப்பவும் ஸேம் ப்ளட் ஆச்சே!! :-)))
எழில் - வாங்க. ஆமாங்க, அவங்க எப்படியெல்லாம் யோசிக்கீறாங்கன்னு ஆச்சரியமாருக்கும்.
சங்கீதா - நன்றிப்பா.
சமீரா - என்னை அவனே டாக்டர் ஆக்கி, எங்கப்பாவின் நிறைவேறா ஆசையை ஒரே நிமிஷத்தில் பூர்த்தி செஞ்சுட்டான்!!
அஸ்மா - நம்புங்க, எனக்கு அவ்வளவு சமயோசிதமா பேசத் தெரியாது. நானே வாயக்கொடுத்து மாட்டிக்கீறது எங்க வீட்டுல வாடிக்கையான வேடிக்கை!!
ராமலக்ஷ்மிக்கா - நன்றி.
//ஒரு அரை நிமிஷம்போல யோசிச்சுட்டுச் சொன்னான், “நீ சமைக்கிற எல்லா சாப்பாடுமே ஹெல்த்தி ஃபுட், இல்லியாமா?”//
ஆனாலும் இவ்ளோ பிரில்லியண்ட்டா இருப்பான்னு நான் யோசிக்கவே இல்லை :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
ஒரே பந்தில் க்ளீன் ஆவுறது ஜகஜமா போச்சு !!!
Good collections.. :)
அத்தனை கேள்விகளையும் பதில்களையும் ரசித்தேன்....
பல இடங்களில் நம் மானத்தை வாங்கி விடுவார்கள். நாம் அசடு வழிய வேண்டியது தான்...:)
Post a Comment