Pages

டெக்கி பக்கீஸ்

”என்னாங்க, இந்த பேங்க்லருந்து என்னமோ மெயில் வந்திருக்கு.  உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணிருக்கேன். பாத்துட்டு, என்னன்னு பேங்க்ல கூப்பிட்டுப் பேசுங்க.”

“ஏன், உனக்கு பேசத் தெரியாதா? நீ கூப்பிட்டு கேளேன்.”

“அதெல்லாம் பேசத் தெரியும்.  கூப்பிட்டா ஆயிரத்தெட்டு டீட்டெய்ல்ஸ் கேப்பாங்க. எனக்கு வேலை இருக்கு. நீங்க சும்மாத்தானே இருக்கீங்க? பேசுங்க”

“ம்க்கும்...  தெரியாதுன்னு ஒத்துக்கோ. அதவிட்டுட்டு, நேரமில்லன்னு சாக்கு.. ப்ரைம் மினிஸ்டர் பி.ஏ.ன்னு நெனப்பு..”

“ஹலோ.. கல்யாணத்துக்கு முன்னாடி எங்கூட்ல உள்ள எல்லார் அக்கவுண்டையும் மேனேஜ் பண்ணது நாந்தான் தெரியுமா? இப்ப ‘குடும்பத்தலைவி’ன்னு ப்ரமோஷன் ஆனப்புறமும் இந்த ஸில்லி மேட்டரெல்லாம் நான் பார்க்கமுடியுமா? ... வெவரமில்லையாம்ல...”

____________________________

“”ம்மா... அந்தக் காரைப் பாரு.. அது என்ன மாடல் சொல்லு பாப்போம்..... “

“என்னதுடா அது.. டொயோட்டாவா,  நிஸ்ஸானா...?”

“ம்ம்ம்ம்மாஆஆஆ.. இந்த ரெண்டையும் விட்டா உனக்கொண்ணும் தெரியாதா? அது "செவி கேமரோ” (Chevrolet Camaro) கார். ஜஸ்ட் 3.9 செகண்ட்ஸ்ல 100கி.மீ. ஸ்பீடுக்குப் போயிடலாம்...”

“டேய்.. உங்கும்மாக்கு அம்பாஸடர், ஃபியட் பத்மினியைத் தவிர டொயோட்டோவும், நிஸ்ஸானும் தெரிஞ்சிருக்கதே பெரிய விசியம்...”

“ஆம்மா...  இந்த கொமாரோ டமாரோல்லாம் தெரிஞ்சுகிட்டதனால உங்க இஸ்கூல்ல ரெண்டு மார்க்  கூடப்போடுவாங்களா, இல்ல உங்க ஆப்பீஸ்லதான் இந்த மாசம் நூறு ரூவா சம்பளம் கூட்டித் தரப்போறாங்களா..? நமக்குப் பைஸா பிரயோஜனமில்லாததத் தெரிஞ்சுக்காததனால எனக்கு ஒண்ணும் குறைஞ்சு போகல...!!”

_____________________________________

“டேய்.. இந்த கேமராவுல  வீடியோ எடுக்கும்போது, க்ளோஸப்-பா எடுக்க முடியல, என்னன்னு பாரு...”

“..... ஆமா, பிக்ஸல் கூட்டி வச்சா, எப்படி க்ளோஸப் வரும்..? இது ஒரு சிம்பிள் மேட்டர்தானம்மா.. இதக்கூடப் பாத்து சரிபண்ணத் தெரியாதா உனக்கு?”

“எலேய்.. நானா பிக்ஸல் கூட்டி வச்சேன்.. எல்லாரும் கேமராவ எடுத்து நோண்டவேண்டியது; அதில யார் என்னத்த செஞ்சு வெக்கிறீங்கன்னு எனக்கெப்படித் தெரியும்?”

“நீயும் எடுத்துப் பாக்குறதுதானே... இல்ல அட்லீஸ்ட் இப்ப ப்ரச்னை வந்தப்புறமாவது என்ன ஏதுன்னு நோண்டிப் பாக்குறதுதானே? எதாவது ட்ரை பண்ணாத்தானே புதுசாப் படிக்க முடியும்?”

“டேய்... ரொம்ப அட்வைஸ் பண்ணாத... நீயெல்லாம் பொறக்க முன்னாடியும், எங்கல்யாணத்துக்கு முன்னாடில்லாம் எனக்கு யாரு இதெல்லாம் செஞ்சுத் தந்தா? நானேதான் எல்லாம் பாத்துக்கிட்டேன். அப்ப செஞ்ச எனக்கு இப்ப செய்யத் தெரியாதா? உங்களையெல்லாம் வேலை வாங்க வேணாமா, அதுக்குத்தான்”

“மேனேஜர் மாதிரி பேச்சுக்கொண்ணும் கொறவில்ல. இப்படிப் பேசியே சமாளிச்சிடு..”

___________________________________________

”இந்தாங்க, இந்தக் கம்ப்யூட்டரைக் கொஞ்சம் என்னன்னு பாருங்க. எப்பப்பாத்தாலும் ஹேங்காகித் தொலையுது. எல்லாரும் புதுசு புதுசா லேப்டாப் வாங்கி வச்சிருக்காங்க. எனக்குதான் இன்னும் இந்த பழைய பீஸியைக் கட்டிகிட்டு...”

“உன்னைப் புதுசா வாங்கக்கூடாதுன்னு யாராவது கையப் பிடிச்சாங்களா..?  சிக்கனம், சுற்றுச்சூழல், பொல்யூஷன்னு  புதுசு புதுசா நீ பல்லவி பாடிகிட்டு வாங்காம இருந்தா நானா பொறுப்பு...?”

“ஸ்ஸு.. எம்மா... அந்த ஆண்டி-வைரஸை ஆஃப் பண்ணுனா சிஸ்டம் பாஸ்ட் ஆகிடும்..  வெரி சிம்பிள்... இதுகூடத் தெரியாம... நீயெல்லாம் நெசம்மாவே காலேஜ்ல படிச்சியாம்மா?”

“அடிங்.. ரொம்பப் பேசாத.. என்னத்தப் படிச்சு என்னத்துக்கு? நீ சின்னவனா இருக்கப்ப, உன்ன ஒருவேளை சாப்பிட வைக்கிறதுக்கு நான் பட்ட பாட்டுல என் டிகிரியெல்லாம் காத்துல பறந்துபோச்சு! இப்பவும் உன்ன சாப்பிட வா, வான்னு கூப்பிட்டேதானடா நான் தேஞ்சு போறேன்?! இதுல இதயும் நானே பாக்கணுமாக்கும்...“

__________________________

ஐபிஎல்... சென்னை... தோனி.... என்று என்னென்னமோ அப்பாவும் புள்ளையும் பேசிகிட்டிருக்காங்க....

“என்னத்த ஐபியெல்லு... இன்னும் இது முடிஞ்சுத் தொலையலையா... ஆமா, மேட்ச் ஃபிக்ஸிங் போயி, இப்பப் புதுசா ஸ்பாட் ஃபிக்ஸிங் நடக்குதாமே..  என்னதுங்க அது?”

”ம்மா...,  க்ரிக்கெட் பத்திக்கூட தெரியுமா உனக்கு? க்ரேட்மா!!”

“ஹலோ, நாங்களும் காலேஜ் க்ளாஸ் கட் அடிச்சுட்டு, நைட் தூங்காம இருந்துன்னெல்லாம்கூட மேட்ச் பாத்தவங்கதான்; எப்ப கல்யாணமுன்னு ஒண்ணு ஆச்சுதோ, அப்பவே பழைய கஷ்டத்தயாவது தலைமுழுகுவோம்னு க்ரிக்கெட் பாக்கிறதை விட்டுட்டேன்!!”

__________________________________

”இந்த கிச்சன் ஸிங்க்ல பைப் ஆடிகிட்டே  இருக்கு.. என்னன்னு பாருங்க..”

“இந்த ஸ்பான்னர் எடுத்து, அத லேசா டைட் பண்ணா முடிஞ்சுது.. இதுக்கும் நான் வரணுமா...”

”ஓ அவ்ளோதானா”ன்னு என் மைண்ட் வாய்ஸ் சொன்னாலும், சுதாரிச்சுகிட்டு பதில் பேசுறதுக்கு முன்னே, மகன், “வாப்பா... நீங்க உம்மாவுக்கு இதெல்லாம் தெரியாதுன்னு நெனக்காதீங்க. ஆனா, உம்மா இப்ப ஜெனரல் மேனேஜர் ரேஞ்சுக்குப் போயாச்சு; இந்த மாதிரி சில்லி வொர்க்கெல்லாம் செய்யமாட்டாப்ல... இல்லம்மா?” 

“நக்கலு... ம்ம்? வரும்டா, எனக்கும் காலம் வரும்...”

போங்கடா போங்க.. 
என் காலம் வெல்லும்... 
வென்ற பின்னே 
வாங்கடா வாங்க...

________________________ 

 அந்தக் காலமும் வந்தது. பேப்பரில் “முப்பதே நாளில் ஆல்-இன்-ஆல் டெக்னிக்கல் பிஸினஸ் கோர்ஸ்” விளம்பரம் பார்த்து,  அதில் சேர்ந்து, எல்லாரும் பள்ளி, ஆபிஸ் போனதும் ரகசியமாக க்ளாஸுக்குப் போய் வந்து, கடைசி நாள் பரிட்சையன்று வீட்டிற்குத் திடீர் விருந்தினர் வந்த போதும்கூட மனம் தளர்ந்துவிடாமல், ஆன்லைனில் பரிட்சை எழுதி பாஸ் செய்து, ஸர்ட்டிஃபிகேட்டும் வாங்கிவிட்டேன்!! “வெற்றி, வெற்றி!!” என்னையுமறியாமல் கண்ணீரோடு சொல்லிக் கொண்டேன்...

‘ஹலோ, என்னாச்சு... தூக்கத்திலயே வெற்றிமுழக்கமெல்லாம் போடுற? என்ன, கனவுல பிரியாணி கஞ்சியாகாம பிரியாணியாவே வந்துடுச்சா?”

சடாரென்று எழுந்தேன்.. ச்சே.. கனவு!!

________________________________________

“டேய்.. இந்த  எரர் மெஸேஜ் என்ன செஞ்சாலும் போக மாட்டேங்குது.. என்னன்னு பாரு..”

வந்து நொடியில் சரிசெய்துவிட்டு, வழக்கம்போல என்னை நோக்கி “லுக்கு”விட்டு ஏதோ சொல்ல ஆரம்பிக்க... 

“வாயத் திறக்காத... எனக்கும் மூளை இருந்துச்சு... நீங்க ரெண்டு பேரும் என் வயத்துல இருந்தப்போ, அதை ஆளுக்குப் பாதியாப் பிரிச்சுக் கொடுத்ததுலத்தான் நான் இப்படி ஆகிட்டேன்... என்னோட பாதிமூளை வச்சிருக்க நீயே இப்படி அறிவாளியா இருக்கன்னா, முழு மூளையும் வச்சிருந்தப்போ நான் எவ்ளோ அறிவாளியா இருந்திருப்பேன்?”

என்னமோ அதிசயமா ஒண்ணும் பேசாமப் போய்ட்டான். ஆனாலும் எனக்கு அவன் எப்போ வந்து, “ஜீன்ஸ், டிஎன்ஏ ங்கிறதெல்லாம் தெரியாதாமா? உன் மூளையத் தந்தேங்கிறியே? அப்ப கைகால்லாம் யாரு தந்தது?”ன்னு கேப்பானோன்னு திக்திக்குன்னு இருக்கு!

___________________________

ஹி..ஹி.. “இங்லீஷ்-விங்லீஷ்” படம் பார்த்ததுல தோன்றிய நிஜம் கலந்த கற்பனைக்கதை!!

Post Comment

27 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... வளைச்சி வளைச்சி நல்ல தாக்குதல்...!

ரசிக்க வைக்கும் உரையாடல்... வாழ்த்துக்கள்...

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர்....

//எனக்கும் மூளை இருந்துச்சு... நீங்க ரெண்டு பேரும் என் வயத்துல இருந்தப்போ, அதை ஆளுக்குப் பாதியாப் பிரிச்சுக் கொடுத்ததுலத்தான் நான் இப்படி ஆகிட்டேன்... என்னோட பாதிமூளை வச்சிருக்க நீயே இப்படி அறிவாளியா இருக்கன்னா, முழு மூளையும் வச்சிருந்தப்போ நான் எவ்ளோ அறிவாளியா இருந்திருப்பேன்?”//

இது சூப்பரோ சூப்பர்..ஆனாலும் பல்பு வாங்குவதில் நாமெல்லாம் யாரு??

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர்....

//எனக்கும் மூளை இருந்துச்சு... நீங்க ரெண்டு பேரும் என் வயத்துல இருந்தப்போ, அதை ஆளுக்குப் பாதியாப் பிரிச்சுக் கொடுத்ததுலத்தான் நான் இப்படி ஆகிட்டேன்... என்னோட பாதிமூளை வச்சிருக்க நீயே இப்படி அறிவாளியா இருக்கன்னா, முழு மூளையும் வச்சிருந்தப்போ நான் எவ்ளோ அறிவாளியா இருந்திருப்பேன்?”//

இது சூப்பரோ சூப்பர்..ஆனாலும் பல்பு வாங்குவதில் நாமெல்லாம் யாரு?

எல் கே said...

ஹஹஹா

நாஸியா said...

செம்ம செம்ம செம்ம! நானும் இப்பத்தான் மேனேஜர் லெவல்ல இருக்கேன்.. நீங்க சொல்றத பார்த்தா சீக்கிரமா ப்ர்மோஷன் கிடைச்சிடும் போலயே!

பை த வே ரெண்டுமே பசங்கன்னால அப்படியா?

கவிதா | Kavitha said...

“ஜீன்ஸ், டிஎன்ஏ ங்கிறதெல்லாம் தெரியாதாமா?//

:)))))))))) எங்க வீட்டு கதை மாதிரியே இருக்கே..

நவீன் எப்பவும், நான் உன் புள்ளையான்னு எனக்கு சந்தேகமாகவே இருக்கு.. முதல்ல ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப்பார்க்கனும்னு சொல்லிட்டே இருப்பான்..

மாதேவி said...

ஹா...ஹா செம கலக்கல்.

ஸ்ரீராம். said...

வீ.வீ.வா.ப! கடைசியாகச் சமாளித்திருப்பது சூப்பருங்க..

கோமதி அரசு said...

முப்பதே நாளில் ஆல்-இன்-ஆல் டெக்னிக்கல் பிஸினஸ் கோர்ஸ்” விளம்பரம் பார்த்து, அதில் சேர்ந்து, எல்லாரும் பள்ளி, ஆபிஸ் போனதும் ரகசியமாக க்ளாஸுக்குப் போய் வந்து, கடைசி நாள் பரிட்சையன்று வீட்டிற்குத் திடீர் விருந்தினர் வந்த போதும்கூட மனம் தளர்ந்துவிடாமல், ஆன்லைனில் பரிட்சை எழுதி பாஸ் செய்து, ஸர்ட்டிஃபிகேட்டும் வாங்கிவிட்டேன்!! “வெற்றி, வெற்றி!!” என்னையுமறியாமல் கண்ணீரோடு சொல்லிக் கொண்டேன்...//

ஆஹா! கனவா!

அருமையான உரையாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது ஹுஸைனம்மா.

abdul said...

அருமையான உரையாடல்

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//போங்கடா போங்க..
என் காலம் வெல்லும்...
வென்ற பின்னே
வாங்கடா வாங்க...//

இது பசங்கள மட்டும் சொன்னா மாதிரி தெரியலையே, மச்சான், இங்க என்னானு வந்து கவனிங்க.

ஹூஸைனம்மா: அங்க என்ன சத்தம்?
ஹுஸைனம்மாவின் ஹஸ்பண்ட்: பேசிக்கிட்டு இருக்கம்மா:)

அப்பாதுரை said...

நோட்ஸ் எடுத்துக்கிட்டேன்.. இப்படியெல்லாம் சமாளிக்க முடியுமா?

Sangeetha RG said...

அருமையான பதிவு உங்கள் எழுத்து எப்போதுமே ரம்யமான காட்சிகாளாய் தெரிகிறது. இங்க்லீஷ் விங்க்லீஷ் ரசித்து பார்த்து இருக்கின்றீர்கள் என்றும் தெரிகிறது

Sangeetha RG said...

அருமையான பதிவு உங்கள் எழுத்து எப்போதுமே ரம்யமான காட்சிகாளாய் தெரிகிறது. இங்க்லீஷ் விங்க்லீஷ் ரசித்து பார்த்து இருக்கின்றீர்கள் என்றும் தெரிகிறது

ராமலக்ஷ்மி said...

நிஜம் கலந்த கற்பனைகளும்
நிஜமாகாமல் ஏமாற்றிய கனவும்
அபாரம்:)!

புதுகைத் தென்றல் said...

என்னத்த சொல்ல ஹுசைனம்மா,

நீங்க என் பதிவுல சொல்ற டயலாக் தான். நான் சொல்ல நீங்க டைப் அடிச்சா மாதிரி இருக்கு. அதுலயும் இந்த கார் மேட்டர், கேமரா...கிரிக்கட். ம்ம்ம்

புதுகைத் தென்றல் said...

என்னத்த சொல்ல ஹுசைனம்மா,

நீங்க என் பதிவுல சொல்ற டயலாக் தான். நான் சொல்ல நீங்க டைப் அடிச்சா மாதிரி இருக்கு. அதுலயும் இந்த கார் மேட்டர், கேமரா...கிரிக்கட். ம்ம்ம்

புதுகைத் தென்றல் said...

கெய்லு என்னமா காச்சு காச்சுறாருன்னு பசங்க பீலா விட்டுக்கிட்டு இருந்தாங்க. தம்பி ஊர்லேர்ந்து வந்திருந்த நேரம் இதைப்பத்தி சொல்ல தன் கிட்ட இருந்த சில வீடியோக்களை ஆஷிஷ், அம்ருதாவுக்கு போட்டுக்காட்ட அன்னையிலிருந்து கப்சிப் காராபூந்தி தான்!!!

என்ன வீடியோ!!!????

நம் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் அந்த 50 ஓவரிலேயே அடிச்சு விளாசியதை பார்த்தா இதுக்கு முன்னாடி கெய்லு ஒண்ணுமே இல்லையே!!! ரிச்சர்ட்ஸை கண்டால் காலில் விழுந்து கும்பிடணும்னு சொல்ல இப்படியாப்பட்ட ஆட்ட்டங்களை எல்லாம் பார்த்ததால தான் இப்பதோய ஆட்டத்தை பார்க்கலைன்னு சொல்லி வாயை மூட வெச்சோம்ல.... :))

enrenrum16 said...

ஹா....ஹா..ஹா.... பல்போ பல்ப்ஸ்... வாயுள்ள புள்ள பொழச்சுக்கும்.... (ஸ்ஸப்பா.. நம்மள மாதிரியே சிலர் (அதுவும் ஹுஸைனம்மாவே ;) )பல்பு வாங்குறத பார்த்து என்னே ஒரு நிம்மதி!!!)

அமைதிச்சாரல் said...

//எனக்கும் மூளை இருந்துச்சு... நீங்க ரெண்டு பேரும் என் வயத்துல இருந்தப்போ, அதை ஆளுக்குப் பாதியாப் பிரிச்சுக் கொடுத்ததுலத்தான் நான் இப்படி ஆகிட்டேன்.//

ஆஹா!!.. சொ.செ.சூ வெச்சுக்கிறீங்களே ஹூஸைனம்மா. ஆளுக்குப் பாதியாக் கொடுத்துட்டா அப்றம் உங்க கிட்ட என்ன மிஞ்சும்ன்னு பசங்க கேக்க மாட்டாங்களா? ஹைய்யோ.. ஹைய்யோ :-)))))))))))

ஹுஸைனம்மா said...

அமுதா - நன்றிப்பா.

எல்.கே. - ஹி.. ஹி..

நாஸியா - //ரெண்டுமே பசங்கன்னால அப்படியா?// ஓ.. அப்படியா??

பசங்க பொண்ணுன்னு வித்தியாசமெல்லாம் இல்லை இந்தக் காலத்துல; அப்பா சப்போர்ட் இருந்தாப் போதும்!! அவ்வ்.. :-))

ஹுஸைனம்மா said...

அமுதா - நன்றிப்பா.

எல்.கே. - ஹி.. ஹி..

நாஸியா - //ரெண்டுமே பசங்கன்னால அப்படியா?// ஓ.. அப்படியா??

பசங்க பொண்ணுன்னு வித்தியாசமெல்லாம் இல்லை இந்தக் காலத்துல; அப்பா சப்போர்ட் இருந்தாப் போதும்!! அவ்வ்.. :-))

ஹுஸைனம்மா said...

விதாக்கா - ஆ.... டி.என்.ஏ. டெஸ்டா!! அந்த ரேஞ்சுக்கெல்லாம் (இதுவரை) போகல இங்க! :-)

மாதேவி - நன்றிப்பா

ஸ்ரீராம் - //கடைசியாகச் சமாளித்திருப்பது சூப்பருங்க..//
எப்படித் தப்பிக்கலாம்னு யோசிச்சு யோசிச்சு, அது தானா வந்துடுது!!

ஹுஸைனம்மா said...

கோமதிக்கா - கனவுதான் - கண்ணைத் திறந்தே காணும் கனவு! :-))

அப்துல் -நன்றிங்க.

அபு நிஹான் - //இது பசங்கள மட்டும் சொன்னா மாதிரி தெரியலையே//
ஹி.. ஹி.. அப்பப்ப பசங்க பேரச் சொல்லி, முடியாததைச் சாதிச்சுக்க வேண்டியதுதான்!!

ஹுஸைனம்மா said...

அப்பாதுரைஜி - கஷ்டம் வந்தா துணிவு தானா வந்துடுமாம்! அதமாதிரி, இந்த மாதிரி சிச்சுவேஷன்ல சமாளிப்ஸும் நாளாக நாளாக வந்துடும்! :-)

சங்கீதா - நன்றிப்பா.

ராமல்க்ஷ்மிக்கா - நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

தனபாலன் - நன்றிங்க.

தென்றல் - // நான் சொல்ல நீங்க டைப் அடிச்சா மாதிரி // ஆல்வேஸ் ஸேம் ப்ளட்!!

விவ் ரிச்சர்ட்ஸ் - என் வூட்டுக்காரரும் இந்த மாதிரி ‘அந்தக் காலத்துல’ன்னு ஆரம்பிச்சு, பழைய கிரிக்கெட் கதையெல்லாம் சொல்லும்போது, பசங்க இப்பிடித்தான் ஆஃப் ஆகிடுவாங்க! :-)

ஹுஸைனம்மா said...

என்றென்றும் 16 - நிம்மதியா... க்ர்ர்... பேருல உள்ள பதினாறு போல, என்றும் குறைந்தது 16 பல்புகளாவது வாங்குவதற்கு ”வாழ்த்துகிறேன்”!! :-)

அமைதிக்கா - எனக்குப் பிறக்கும்போதே மூளை இல்லியோன்னு அவனுக்கு இருந்த சந்தேகத்தைப் போக்க அப்படிச் சொல்லவேண்டியதாப் போச்சு!! :-)