Pages

தங்கத்தாவரம்”பணங்காய்க்கும் மரம்”னு கேள்விப்பட்டிருப்போம். நிஜத்துல அப்படி பணம் மரத்துல காய்க்காதுன்னாலும், பணப்பயிர்களையோ, பணம் சம்பாதிக்கும் ஆட்களையோ இப்படிக் குறிப்பிடுவதுண்டு. “இங்க பணம் என்ன மரத்துலயா காய்க்குது?” என்பதும் பிரபல சொல்வழக்கு.

பணம் மரத்தில் காய்ப்பதில்லைதான்; ஆனா, தங்கம் மரத்தில் காய்க்குதாம்!! நிஜம்மாத்தான் சொல்றேங்க!!

ஸ்திரேலியாவில் ஆராய்ச்சிக்காக, விஞ்ஞானிகள் சில மரங்களைப் பரிசோதித்தபோது அவற்றின் இலைகளில் தங்கம் படிந்திருந்ததைக் கண்டறிந்தார்கள். மேலும் ஆராய்ந்தபோது, வறட்சி காலத்தில் தண்ணீரைத் தேடி  மரத்தின் வேர்கள் பூமியின் ஆழத்திற்கு நீண்டபோது, அங்கு இருந்த  கனிமங்களிலிலிருந்து தங்கத்தையும் நீரோடு சேர்த்து உறிஞ்சி, இலைகளுக்குக் கடத்தியுள்ளன. அத்தங்கத்தினால் மரத்திற்குப் பயன் இல்லை என்பதால், அதை இலை வழியாக வெளியேற்ற முயற்சித்ததில் அவை இலைகளில் படிந்துள்ளன.http://www.nature.com/ncomms/2013/131022/ncomms3614/full/ncomms3614.html

அவ்வாறு ஒரு மரத்தில் படிந்துள்ள தங்கத்தின் அளவு, ஒரு மனித முடியில் ஐந்தில் ஒரு பங்குதான் இருக்குமாம்!!  குறைந்தது ஐநூறு மரங்களாவது இருந்தால்தான், ஒரு மோதிரத்திற்கான தங்கம் கிடைக்குமாம்.

டனே, அடுத்த அக்‌ஷய திரிதியைக்கு ”தங்க மரம்” வாங்குங்கன்னு நகைக்கடைகளுக்குப் போட்டியா ‘ஈமு ஃபார்ம்ஸ்’ பார்ட்டிகள் கடைபோட ஐடியா செய்வதற்குமுன் ஒரு தகவல்:  எல்லா மரங்களிலும் இப்படிக் கிடைக்காது. எங்கு பூமிக்கடியில் தங்கம் இருக்க வாய்ப்பிருக்கிறதோ, அங்குதான் - அதுவும் வேர் ஆழமாகச் செல்லக்கூடிய யூகலிப்டஸ் போன்ற மரங்கள் வைத்தால் மட்டுமே - இது சாத்தியம். 

மேலும் இது தங்கத்திற்கு மட்டுமல்ல, எல்லாவகையான கனிமங்களுக்கும் பொருந்தும். பொதுவாகவே ஒரு இடத்தில் கிடைக்கும் தண்ணீரும், காய்கனிகளும் பூமியின் தன்மையைத்தானே பிரதிபலிக்கும். இங்கு தங்கம் நிறைய இருந்ததால், தங்கம். 

ந்தக் கண்டுபிடிப்பு விஞ்ஞான உலகில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். ஏனெனில்,  Oil exploration, Mineral mining போன்ற துறைகளில்  அகழ்வாராய்தல்தான் பெருத்த செலவு பிடிக்கும் பணி.  அதனாலேயே பல ஆராய்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் கிடைக்காமல், தடைபடுகின்றன. இனி, இம்மாதிரி மரங்களின்மூலம்,  அவற்றினடியில் உள்ள பூமியில் என்ன வகையான கனிமம் இருக்கின்றன என்று நிச்சயப்படுத்திக் கொள்வது சுலபமாகிவிடுகிறது.  செலவு கணிசமாகக் குறைந்துவிடும் என்பதால்,  பயனுள்ள ஆராய்ச்சிகள் அதிகமாகலாம். 

ன்னொரு விஷயம் பாத்தீங்கன்னா, இக்கண்டுபிடிப்பில் பங்காற்றியவை  யூகலிப்டஸ் மரங்கள். இவற்றின் வேர்கள், சுமார் 30 மீட்டர்கள் ஆழத்தையும் தாண்டி நீண்டு நெடிந்து செல்லும் தன்மை உடையவை என்பதால்தான் இது சாத்தியமானது.  தமிழகத்திலும் யூகலிப்டஸ் மரங்கள் ஊட்டி/கொடைக்கானல் பகுதிகளில் உண்டு.  பல வருடங்களுக்குமுன்பே, ஒரு பத்திரிகையில் (கல்கண்டு என்று ஞாபகம்) இவற்றின் வேர்களின் நீருறிஞ்சும் தன்மையின் அபாயத்தினால், நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்று எச்சரித்திருந்தது.

தற்போது இந்தக் கண்டுப்பிடிப்பின்மூலம் அது உண்மையென நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சீமைக்கருவேல மரத்திற்கு இருக்கும் எதிர்ப்பில் சிறிதளவுகூட இதற்கு இல்லையென்பது ஆச்சரியமே.

தே ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், இந்தக் கண்டுபிடிப்பை தம் ஆராய்ச்சி மையங்களின் பசுமைக் குடில்களில், இப்பரிசோதனையை யூகலிப்டஸ் மற்றும்
கருவேல வகை (Acacia aneura) மரங்களைக் கொண்டு மீண்டும் செய்துபார்த்து உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.  

இப்பரிசோதனையில் கருவேல வகை (
Acacia) மரத்தை ஏன் எடுத்துக் கொள்ளக் காரணம், பொதுவாகவே வறட்சி நிலத்தில் அதிகம் காணப்படும் இந்த Acacia வகை மரங்கள் நிலத்தடி நீரை ஆழமாகச் சென்று அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டவை.  


சீமைக் கருவேல மரம்
கருவேல மரம்


ஒருவகைக் கருவேலமரமான  Acacia nilotica தமிழகத்தில் மிகுந்து காணப்படுகிறது!!   ஆனால், ஆஸ்திரேலியாவில், நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சியெடுத்து, சூழலியல் ஏற்றத்தாழ்வு (ecological imbalance)  மூலம் பல்லுயிர்ப்பெருக்கத்திற்கு அச்சுறுத்தல் உண்டாக்குவதால், இந்த கருவேல மரத்தை  “களைச்செடி” - Pest என்று அறிவித்து அவற்றை முழுமையாக அழிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்கள்!!

(இந்த  கருவேல மரமும் Acacia nilotica,  சமீபகாலமாக தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பைக் கிளப்பியிருக்கும் “சீமைக்கருவேல மரம் - Prosopis juliflora, வேறுவேறு என்றாலும் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்).

”என்னாச்சு உனக்கு? மரத்தில தங்கம்னு ஆரம்பிச்சு, சுத்தி வளைச்சு யூகலிப்டஸ், கருவேல மரம்னு வந்தாச்சு; இப்ப என்னதான் சொல்ல வர்றே”ன்னு ஏன் சலிச்சுக்கிறீங்க? ஒருவேளை உங்க கனவுல புதையல் காக்கும் பூதம் வந்து தங்கம் இருக்குதுன்னு சொன்னால்,  சத்தங்காட்டாம, அந்த நிலத்தை வளைச்சுப் போட்டு  இந்த மரங்களை வளர்க்க ஆரம்பிச்சிடுங்க!! யாருக்கும் பங்கு கொடுக்காம, எந்தச் சந்தேகமும் வராம நீங்க மட்டும் தங்கத்தை அனுபவிக்கலாம்னு சொல்ல வந்தேன்... ஹூம்... நல்லதுக்குக் காலமில்ல!!

Post Comment

15 comments:

துளசி கோபால் said...

ஓக்கே! வளைச்சுட்டேன்:-)

தகவல் பகிர்வுக்கு டேங்கீஸ்.

திண்டுக்கல் தனபாலன் said...

நம்ம ஆட்கள் இருப்பதை வெட்டாமல், நிலத்தை வளைச்சுப் போட்டு மரங்களை வளர்த்தால் சரி...!

இராஜராஜேஸ்வரி said...

தங்கமான பகிர்வுகள்..!

ADHI VENKAT said...

பரவாயில்லையே..... நல்ல தகவல் தான்...:)

புதையல் காக்கற பூதம் கனவுல வந்தா நல்லா இருக்கும்.....:(((

அப்பாதுரை said...

ஆஸ்திரேலியாவுல மரம் வெட்ட ஆரம்பிச்சுருவானுங்களே?

இமா said...

;)

கோமதி அரசு said...

நிலத்தை வளைச்சுப் போட்டு பயனுள்ள மரங்களை வளர்க்க சொல்லும் தங்கமான பகிர்வு.(நீர் ஆதாரத்தை மேலும் அதிகப்படுத்த்)
வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நேற்று நானும் இது பற்றிய செய்தி எங்கோ படித்தேன்....

அதை பதிவாக்கியமை நன்று!

வல்லிசிம்ஹன் said...

ஆஹா தங்கமே.

உங்கள் ஊரில் காணப்படும் பசுமை இந்த மரத்தின் மூலம் இங்கயும் வந்தால் ஸ்ரீஇதான். அரிசி விளைத்தால் அதுவே தங்கம் தானே.நன்றி ஹுசைனம்மா.

ராமலக்ஷ்மி said...

அழகுக்காக நம் ஊர்ப்பக்கம் பல வீடுகளின் வாசலில் வரிசையாக 7,8 யூகலிப்டஸ் வைத்திருப்பார்கள். இப்போது நிலத்தடி நீருக்கு எல்லாப் பகுதிகளிலும் சிரமம் வந்துள்ளது. நீர் உறிஞ்சும் இவற்றின் தன்மை குறித்த விழிப்புணர்வு இப்போதுதான் பரவ ஆரம்பித்திருக்கிறது. வெட்டிச் சாய்க்கிறார்கள் தெரிய வந்தவர்கள்.

அமுதா கிருஷ்ணா said...

கருவேல மரம் வளர்த்தால் விறகுக்காவது உதவுமே என்று காமராஜர் காலத்தில் வறட்சியான இடங்களில் வளர்க்க வெளிநாட்டிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டது என்று சொல்வார்கள். இப்போ தமிழ்நாடு முழுவதும் இந்த மரம் தான்.

enrenrum16 said...

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி.

கீத மஞ்சரி said...

இச்செய்தியைக் கேள்விப்பட்டவுடனேயே மனம் அடித்துக்கொண்டது, ஐயையோ... இனி தங்கம் தங்கம் என்று அடித்துக்கொண்டு ஆளாளுக்கு மரம் வெட்ட ஆரம்பித்துவிடுவார்களே என்று. யூகலிப்டஸ் மரங்கள் நம் நாட்டில் வளர்வது நிலத்தடி நீருக்கு அபாயம். ஆனால இங்கு அம்மரங்கள்தாம் கோவாலா போன்ற உயிர்களுக்கு வாழ்வாதாரம். ஏற்கனவே நகரவளர்ச்சித் திட்டங்களில் பல யூகலிப்டஸ் காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன என்பது வருத்தம் தரும் செய்தி. இதில் தங்கமும் சேர்ந்தால்... என்னாகுமோ?

தகவல் பகிர்வுக்கு நன்றி ஹூஸைனம்மா. கடைசி பத்தி நச்.

Sangeetha RG said...

appa eppadiyo blog open agivittathu summa oru purali kilappi vitta atleat ellarum maram valpanga illa

Sangeetha RG said...

Atleast ithai puraliya killapi vittal ellorum niraya maram valarpargal