Pages

பசுமை நிறைந்த நினைவுகளே!!


தொடர்புடைய பதிவுகள்:

 இதற்குத்தானே ஆசைப்பட்டாய்.... 
பார்வைகள்

என் முதல் தோட்டத்தின் ஒரு பகுதி
 
 சுமார் 17 வருடங்களுக்கு முன் அமீரகம் வந்தபோது வசித்த முதல் வீட்டில்,  தோட்டவளத்துறையில் பணிபுரிந்த உறவினர் ஒருவர் பரிசளித்த செடிகள், கொடுத்த ஆலோசனைகளால், என் “முதல் தோட்டம்” உருவானது!!

வீடு முழுக்க செடிகளால் நிறைந்து பார்க்கவே மனதுக்கு இதமாகஇருக்கும்.  எல்லாரும்  அலங்காரப் பொருட்கள், நகை, புடவைன்னு ஷாப்பிங் போனா,  என் ஷாப்பிங்கோ, செடிகொடி, தொட்டி, மண் என்று இருக்கும். ‘விசித்திரமான பிறவி’ன்னு எங்கூட்டுக்கார் நினைச்சிருப்பார்.  ஆனாலும், செலவு குறைவா இருந்ததால ஆரம்பத்துல விட்டுட்டார்.

ஆனா, அந்தத் தொல்லை தொடர ஆரம்பிச்சு, ‘சிறுதுளி பெரு வெள்ளமா’ முழுக வைக்கும் லெவலில் போகத் தொடங்கவும்... வீட்டுக்குள்ள தொட்டி வாங்கிவச்சா சரிவராது, உனக்கு தோட்டம் இருக்கிற வீட்டுக்கே குடிவைக்கிறேன்னு சொல்லி அழைச்சுட்டுப் போனார். பாத்தா ஆளேயில்லாத ஒரு குக்கிராமத்துல பங்களா மாதிரி வீடு!!  தோட்டத்துக்காக அதையும் சகிச்சுகிட்டு இருந்ததுல அஞ்சு வருஷம் போனதே தெரியலை!!


கிராமத்துத் தோட்டம்.. நகரத்தில் பால்கனித் தோட்டம்...
அஞ்சு வருஷம் கழிச்சு, வீட்டைக் காலி பண்ண மாட்டேன்னு நானே சொல்லுமளவு தோட்டம், துரவு, வேம்பு, அகத்தி, கருவேப்பிலை, முருங்கை, வெண்டை, தக்காளி, லவ் பேர்ட்ஸ், முயல், ஊஞ்சல்னு ஒரு  மினி-ஜமீன்தாரிணியா வாழ்ந்த வசந்த காலம்!! பொறுக்குமா.... மறுபடி ஒரு ஃப்ளாட்டுக்குள்ள பிடிச்சுப் போட்டுட்டாங்க. அங்கயும் பால்கனில செடிகள் வச்சிருந்தேன், ஆனா, சுற்றுவட்டார கட்டுமானப் பணிகளால் செடிகள் எல்லாம் போயிடுச்சு!! :-(((

தோட்ட ஆசை மறுபடி தலைதூக்க... அடிச்சுப் பிடிச்சு இந்த வீட்டுக்கு வந்தோம்.  புறநகர்ப்பகுதியில் இருந்தாலும் விஸ்தாரமான வீடு, சுற்றி தோட்டம் வைக்க நிறைய இடம்,  முன்னாடி விளையாட இடம், ஊஞ்சல்... எல்லாத்தையும்விட  பார்க்கிங் பிரச்னை இல்லை!! என்னவரின் உதவியால், வெறும்தரையாக இருந்த தோட்டத்தில், மண் மாற்றி,  காய்கறிக் கழிவுகளைக் கொண்டு வளப்படுத்தி அப்படி இப்படின்னு,  மூணு வருஷத்துல இப்பத்தான் முருங்கை, வேப்பிலைனு நாங்க வெச்ச கன்றுகள் மரமாகி வருது... இப்ப மறுபடியும் ‘பெட்டியைக் கட்டு’ன்னுட்டார்!!!


வேப்பங்கொழுந்துக்கு பஞ்சமில்லை!
இதனருகில் காலையில் தேனீக்கள் கூட்டம் மொய்க்கும்!!
வலது ஓரத்தில் கற்பூரவல்லி...

முன்பு ஜமீந்தாரிணி என்றால், இம்முறை ‘பண்ணையாரம்மா’வாகக் கொடிகட்டிப் பறந்தேன். ’ஜன்னலைத் திறந்தால் வேப்பமரக்காற்று’ என்ற என் இலட்சியம் இந்த வீட்டில் நிறைவேறியது. சொந்த மண்ணில் சொந்தமாக ஒரு விளைநிலம் என்பது இதுவரை கனவாகவே இருப்பதால், கிடைத்த இந்த வாய்ப்பை  முழுதாக அனுபவித்தேன். இறைவனுக்கே எல்லாப் புகழும்.


Damas tree பிண்ணனியில்...
மரம் வளர்க்கும் ஆசையில், இங்கே சமீபகாலமாக அதிகம் வளர்க்கப்படும் ‘டமாஸ்’ என்ற மரக்கன்றுகளையும் வாங்கி நட்டுவைத்தோம். அசுர வேகத்தில் வளர்ந்த அவற்றை ஆச்சரியத்தோடு பார்த்தபோதுதான், செய்தி தெரிந்தது. இதுவும் சென்ற பதிவில் நாம் பார்த்த ‘யூகலிப்டஸ்’ மரம்போல, வேர்கள் ஆழமாகச் சென்று நீரை கபளீகரம் பண்ணுமாம். இருந்தாலும், வளர்ந்து நிழல் தரும் மரத்தை வெட்ட மனசில்லாமல் தவித்த நிலையில், வீட்டு ஓனர், காலி செய்யுமுன் அந்த மரங்களை வெட்டச் சொல்லி ஆணையிட்டார்!! அவர் கவலை நிலத்தடி நீரைக் குறித்தல்ல, அந்த மரம் அதிகமாக இலைகள் உதிர்க்கிறதாம்!! வெட்டிட்டோம்... :-(

இரண்டு தங்கைகளும், ஒரு கஸினும் இதே ஏரியாவில் இருப்பதால், அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பும் இருந்தது. இந்த வீட்டை விட்டுப் போவதால், இந்த வாய்ப்பும் குறையும் வருத்தமும்.
தொட்டிகளில் ‘சேமிப்பு’!!

இந்தச் செடி பூக்கும்னே தெரியாது; ஃப்ரீயா கிடைச்சதால், சும்மா அலங்காரத்துக்கு வச்சிருந்தோம். திடீர்னு போன வாரம் இதில் ஒரு அழகான பூ!! செடிக்கு பேரேல்லாம் தெரியாது. (ராமலக்ஷ்மிக்காவுக்குத் தெரிஞ்சுருக்கலாம்! :-) )

கரத்தினுள் குடியேறணும் என்ற அவசியத்தால் தோட்ட ஆசை மீண்டும் கனவாகும் நிலை. நகரமையத்தில் கிடைக்கும் வீட்டில் தோட்டத்தைவிட பார்க்கிங்கிற்கு இடம் இருந்தால் போதும் என்ற நிலையாகிவிட்டது!! என்றாலும்,  தொட்டிகளில் செடிகள் வைத்துக் கொள்ளலாம் என்பதால் முடிந்த வரை தொட்டிச் செடிகளைச் சேகரித்திருக்கிறேன்.  இப்போப் பார்த்திருப்பதும் நல்ல வீடுதான் என்றாலும், வீட்டு ஓனர் பக்கத்து வீட்டிலேயே குடியிருக்கிறார் என்பதுதான் கொஞ்சம் கிலியேற்படுத்துகிறது!! எந்த நாடானால் என்ன, ஹவுஸ்  ஓனர்கள் ஒரே மாதிரிதான்ப்பா இருக்காங்க!


ந்த பதினேழு வருட அமீரக வாசத்தில், எனக்கு அண்டைவீட்டுக்காரர்கள் என்ற ஒன்று வாய்த்ததே இல்லை. எப்போதும் பக்கத்து வீடுகளில் கம்பெனி அல்லது பேச்சிலர்ஸ்தான் இருப்பார்கள். பகல்முழுதும் தனிமை, அமைதிதான்!  இந்த வீடும் அப்படித்தான், ஆனாலும் பகல் நேரத்தில் தனியே இருக்கிறோம் என்ற நினைவே வரவிடாத அளவு பறவைகள் ஒலி இருந்துகொண்டே இருக்கும்! காலை எழுந்தது முதல் மாலை மங்கும் வரை  “கீச்.. மூச்... கிய்யா.. முய்யா...” என்று விதவிதமாகச் சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கும். மரங்களைவிட இதைத்தான் நான் அதிகம் மிஸ் பண்ணுவேன்!!


Post Comment

13 comments:

அமுதா கிருஷ்ணா said...

குட்டி செடிகளுடன் கொஞ்சம் குட்டி பறவைகளையும் பிடிச்சுட்டு போயிடுங்க பண்ணையாரம்மா!!!

Anonymous said...

வணக்கம்
பதிவு அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

பசுமை நிறைந்த நினைவுகள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா.... எவ்வளவு அழகு... மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

கோமதி அரசு said...

பகல்முழுதும் தனிமை, அமைதிதான்! இந்த வீடும் அப்படித்தான், ஆனாலும் பகல் நேரத்தில் தனியே இருக்கிறோம் என்ற நினைவே வரவிடாத அளவு பறவைகள் ஒலி இருந்துகொண்டே இருக்கும்! காலை எழுந்தது முதல் மாலை மங்கும் வரை “கீச்.. மூச்... கிய்யா.. முய்யா...” என்று விதவிதமாகச் சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கும். மரங்களைவிட இதைத்தான் நான் அதிகம் மிஸ் பண்ணுவேன்!! //

உண்மை.
போகும் புதுவீட்டிலும் பறவைகள் வந்து கிய்யா, முய்யா என்று உங்களுடன் வந்து உறவாட வாழ்த்துக்கள்.
அதன் குரலகளை பதிவு செய்து போய் விடுங்கள்.
பசுமை நிறைந்த நினைவுகள் மிக அருமை.

வல்லிசிம்ஹன் said...

அடிக்கடி வீட்டை மாற்றுவது கஷ்டமே ஹுசைனம்மா. .இருந்தும் முயற்சி செய்து நல்ல தோட்டத்தை உருவாக்கிவிடுவீர்கள் பாருங்கள். இனிய தோட்டம் அமைய வாழ்த்துகள்.

நம்பள்கி said...

ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

ஸ்ரீராம். said...

தோட்டம் அமைப்பதில் சுவாரஸ்யம் இருந்தால் உடலுக்கும் நல்லது. மனதுக்கும் நல்லது! :)))

நீங்கள் சொல்லும் அந்தப் பறவைகள் ஒலியை, பல வருடங்களுக்குமுன் ஸ்ரீவில்லிப்புத்தூரில் கேட்டிருக்கிறேன். உங்கள் வரிகளைப் படித்ததும் அது நினைவுக்கு வரும் அளவில் அது மனதில் பதிந்துள்ளது!

அமைதிச்சாரல் said...

தோட்டம் நல்லாருக்கு பண்ணையாரம்மா. அப்படியே படங்களையும் கொஞ்சம் பெரிசு செஞ்சுப் பார்க்கற மாதிரி இருந்துருந்தா இன்னும் நல்லாருந்துருக்கும் :-)

ராமலக்ஷ்மி said...

அப்படியொரு தூய வெள்ளையில் இருக்கும் அந்தப் பூக்கள். மேல் நோக்கிய பூவின் தோற்றம் ஆக்டபஸ் போல் தோன்றும் கீழ் நோக்கி விழும் இதழ்களின் நீட்சிகளால்:)! எடுத்திருக்கிறேன் பாருங்க இங்கே:

http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/4381508644/

http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/4601112946/

உத்தேசமாய் பெயர் Amaryllis (Hippeastrum) என சில தளங்கள் சொன்னாலும் இதுதான் என உறுதியாய் விக்கிப்பீடியா போன்ற தளங்களில் இல்லை. பூக்களின் சரியான பெயரைக் கண்டு பிடிப்பது பெரிய சவால்தான்:).

வீட்டுத் தோட்டம் தரும் மகிழ்ச்சியே அலாதியானது. பறவைகள், அணில்கள் என அதற்கு வருகிற விருந்தினர்கள் இன்னும் உற்சாகத்தைத் தருவார்கள். பால்கனி தோட்டங்கள் ஆறுதல் பட்டுக் கொள்ளவே.

தக்குடு said...

மறுபடியும் பண்ணயாரம்மா ஆக வாழ்த்துக்கள்! :)

ஹுஸைனம்மா said...

அமுதா: நல்ல ஐடியாதான். ஆனா, எனக்கு பயம்மாருக்குமே! :-)

ரூபன் - நன்றிங்க.

இராஜி மேடம் - நன்றிங்க.

தி.தனபாலன் - நன்றிங்க.

கோமதிக்கா - பறவைகளின் ஓசையை பதிவு செய்திருக்கிறேன். பதிவில் இணைக்கத் தெரியாததால் இணைக்கவில்லை.

மாதேவி said...

பறவைகளை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது.

இனிய தோட்டம் அமைய வாழ்த்துகள்.

எங்குசென்றாலும் நானும் சிறு அளவிலாவது தோட்டம் அமைத்து மகிழ்வேன்.பல்கனியாக இருந்தாலும் அணிலும்,புறாக்களும், வண்ணத்துப் பூச்சியாரும் வருகின்றன.