Pages

முகவரி






பேப்பர்காரருக்குச் சொல்லியாச்சு
ஃபோனுக்குச் சொல்லியாச்சு
இண்டர்நெட்டுக்கும் சொல்லியாச்சு
ஸ்கூல் பஸ்ஸுக்குச் சொல்லியாச்சு
தண்ணிகேனுக்குக்கூடச் சொல்லியாச்சு

வீட்டுக்கு வந்த உறவுகளுக்கும்
இதுவரை வராத, இனி வரப்போகும்
உறவுகளுக்கும் சொல்லியாச்சு
இனியும் வரும் எண்ணமில்லாத
அன்புள்ளங்களுக்கும் சொல்லியாச்சு

தினந்தினம் தவறாமல் வந்து
என் கையால் உண்டு
என்னோடு கதைபலப் பேசி
களித்துச் சிரித்து மகிழ்ந்த
என் அருமைச் செல்லங்களே

உங்களுக்கு எப்படிச் சொல்லிப்
புரியவைப்பேன்
என் புது வீட்டு முகவரியை..........



Post Comment

17 comments:

ஸ்ரீராம். said...

அட!

ஸாதிகா said...

அழகு அழகு..கவிதை அழகோ அழகு.படத்துடன் கவிதையையும் நிரம்பவே ரசித்தேன்.புது வீடு மாறி விட்டிர்களா?

வல்லிசிம்ஹன் said...

கிளம்புகிறீர்களா ஹுசைனம்மா. எனக்கே என்னவோபோல இருக்கு.
இங்கிருந்து போகும் வீட்டில் எல்லா
வித நலன்களும் கிடைக்க வாழ்த்துகள்.

Seeni said...

arumai sako...

ezhil said...

கடைசி வரிகளில் வலி உணர்ந்தேன்... அவை நம்மை தேடுவது நமக்குத் தெரியாவிட்டாலும் தேடுதல் நிஜம்...

”தளிர் சுரேஷ்” said...

கஷ்டம்தான்! அருமையான படைப்பு! நன்றி!

இராஜராஜேஸ்வரி said...

தினந்தினம் தவறாமல் வந்து
என் கையால் உண்டு
என்னோடு கதைபலப் பேசி
களித்துச் சிரித்து மகிழ்ந்த
என் அருமைச் செல்லங்களே

தேடி வரும் தங்கள் முகவரியை
என் நேரடி அனுபவம்..!!

சாந்தி மாரியப்பன் said...

கவலைப்படாதீங்க.. இங்கியும் ஃப்ரெண்ட்ஸ் பறந்து வந்துருவாங்க.

மாதேவி said...

புதுஉறவுகள் தேடிவரும். மகிழ்ந்திருங்கள்.

அப்பாதுரை said...

ஆகா.

நிலாமகள் said...

அந்த வீட்டிலும் குருவிகள் வரும்; இந்த வீட்டுக்கும் உங்களைப் போல் ஒருவர் வரலாம்!

புரியுமா என்ற கவலையின்றி உங்கள் மொழியில் சொல்லிச் செல்லுங்கள்.

enrenrum16 said...

ஹ்ம்ம்.... கண்டிப்பா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவாங்க ....வாயில்லா ஜீவன்கள்... :(

ஒரு மாறுதலுக்கு அப்பறவைகள் எல்லாம் படிச்சுட்டு இருக்கும் இந்நேரம்...

“அவள் பறந்து போனாளே” :)

ராமலக்ஷ்மி said...

அடடா, அருமை! அருமை:)!

புது வீட்டில் புது நண்பர்கள் கிடைக்கவும் வாழ்த்துகள்!

pudugaithendral said...

வீடு மாறும்போது எனக்கும் ஏனோ ஒரு சோகம் இருக்கும்.

புது ஃப்ரெண்ட்ஸ் கிடைக்க வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

கவிதை மிக அருமை.....

கோமதி அரசு said...

தினந்தினம் தவறாமல் வந்து
என் கையால் உண்டு
என்னோடு கதைபலப் பேசி
களித்துச் சிரித்து மகிழ்ந்த
என் அருமைச் செல்லங்களே//

புது செல்லங்கள் வரும் கவலை படாதீர்கள்.

வந்து விட்டு இருக்கும் புது செல்லங்கள் இல்லையா!

LKS.Meeran Mohideen said...

மனது வலிக்கிறது.....அந்த சின்னஞ்சிறிய பறவைகள் வந்து தேடுமே என்று நினைக்கும்போது.....