Pages

முகமலர் இற்றைகள் - 3




எனது ஃபேஸ்புக் பதிவுகள் இங்கும் இற்றைப்படுத்திக் கொள்வதற்காக....

வலைப்பதிவைப் போலவே, ஃபேஸ்புக்கிலும் பின்னூட்டப் பதிவுகளில்தான் சுவாரசியம் நிறைய இருக்கும். ஒவ்வொரு பதிவின் அருகே இருக்கும், தேதியை (Date stamp) க்ளிக் செய்தால், அந்தப் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் பார்க்கலாம். நாங்க என்ன வெட்டியாவா இருக்கோம்னு எகிறாதீங்க. தேதியோடு பதிவுகளைக் கொடுத்துள்ளதால், தொடர்புபடுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

September 12, 2013

“.... அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை”

”இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை;” — feeling amused.




September 15, 2013
சென்ற தி.மு.க. ஆட்சியில் தினமும் நான்கு மணிநேரம் கரண்ட் கட். ‘நாங்க ஆட்சிக்கு வந்தா மின்சாரத் தடையே இருக்காது’ன்னு சொன்ன அ.தி.மு.க.வின் ஆட்சியில், அது ”வளர்ச்சி” அடைந்து 12-14 மணி நேரம் வரை ஆனதால், தமிழர்கள் ஆற்காட்டாரிடம் மானசீகமாகவும், போஸ்டர் அடிச்சு ஒட்டியும் மன்னிப்பு கேட்டார்கள்.

#பெட்ரோல்_விலை_மற்றும்_வரவிருக்கும்_எலெக்‌ஷன்!!
#சூடு_கண்ட_பூனைfeeling determined.


September 23, 2013
அவ்வப்போது மகன்களை அதீத பாசத்துடன் ”அறிவுக்கொழுந்து” என்று “பாராட்டுவது” உண்டு. எப்போது கேட்டுக் கொண்டு சும்மா இருக்கும் பெரியவன், இன்று திடீரென்று “வேப்பங்கொழுந்து தெரியும்; (மாசத்துக்கொருக்க சாப்பிடுவதால்) அதென்ன அறிவுக் கொழுந்து?” என்று கேட்டதில் கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனேன். உடனே சமாளித்து, ”கொழுந்துன்னா அப்பதான் வளர்ந்து வரும் இளம் இலைன்னு அர்த்தம். ஆள் மரம் மாதிரி வளந்திருந்தாலும், அறிவு மட்டும் இன்னும் கொழுந்து ரேஞ்சுக்கே இருக்க்கிறவங்கதான் அறிவுக்கொழுந்துகள்!!!”

#ஃபீலிங்_தமிழம்மா....

(அடுத்த பகுதிகளில் ‘மடச்சாம்பிராணி’, ‘விளக்கெண்ணெய்’ ஆகியவற்றுக்கான விளக்கங்களைப் பார்க்கலாம்.)

October 2, 2013

மீட்டிங், ட்ரெயினிங், பார்ட்டி என்ற பெயரில் வாரத்துக்கு ஒருநாளாவது ‘நல்ல’ சாப்பாடு கிடைத்து விடுகிறது - அவருக்கு. — feeling jealous.

September 29, 2013

பாலிலிருந்து வெண்ணெய் செய்வது(?) எப்படி என்று தெரியும்தானே? பாலைத் தயிராக்கி, மோராக்கி, மோரைக் கடைந்தால் கிடைப்பது வெண்ணெய் - Butter!! டயட்டிங் ஆரம்பித்தபின் செய்த ஆராய்ச்சியில், “Peanut butter" எனப்படும் வேர்க்கடலையிலிருந்து கிடைக்கும் ‘வெண்ணெய்’ டயட்டுக்கு உகந்தது என்றறிந்ததில், அதுவும் தினப்படி காலை உணவில் சேர்ந்துகொண்டது.

பாலிலிருந்து வெண்ணெய் எடுக்கும் முறை மட்டுமே தெரியும் என்பதால், ‘வேர்க்கடலை வெண்ணெய்’ என்பதும் இதே போல ‘கஷ்ஷ்ட்ட்டமான செய்முறை’ கொண்டது என்றே நினைத்திருந்தேன். அதனால் அதன் செய்முறை பற்றி ஆர்வம் காட்டவில்லை.

சமீபத்தில், @Geetha.achalrecipes தனது பதிவில், Almond butter - பாதாம் வெண்ணெய் செய்முறையைப் பதிந்திருந்தார். மிக மிக இலகுவாய் இருந்தது. அதைப் பார்த்ததும்தான் இந்த ட்யூப்லைட்டுக்குள்ளும் ஒரு ஃப்ளாஷ்!! அப்ப, ‘வேர்க்கடலை வெண்ணெயும்’ இப்படித்தான் ஈஸியா இருக்குமோன்னு இணையத்தில் தேடியதில்... ஆமாம், பயங்கர ஈஸி!! வேர்க்கடலையை மட்டும் மிக்ஸியில் போட்டு சிறிது நேரம் அரைத்தால், "Peanut Butter!!" தயார்!!

இதுவரை நான் வாங்கிவந்த சுவையான ரெடிமேட் வேர்க்கடலை வெண்ணெயில் சேர்க்கப்பட்ட பொருட்கள் கீழே:

Sugar
Corn syrup
Hydrogenated oils
Molasses
Salt
Citric acid
Pectin
Pottasium Sorbate
Sodium Citrate
Flavour

நான் செய்ததில் இது எதுவுமே இல்லை, வேர்க்கடலை மட்டுமே!! எந்த additive-ம் இல்லை என்பதால், உடல்நலத்திற்குக் கேடு இல்லை; அதே சமயம் சுவையும் இல்லை!! அவ்வ்வ்வ்..... ஆமாம், இதுதான் ஒரிஜினல் செய்முறை என்றாலும், இதுவரை “கூடுதல் சுவையூட்டும் பொருட்கள்” சேர்த்துச் செய்தவற்றையே உண்டு பழகிவிட்டதால், இது சுவை குறைவாக இருக்கிறது!!!

இருந்தாலும், இதையே இனி பின்பற்றலாம் என்றிருக்கிறேன். இது மட்டுமல்ல, பீட்ஸா, நக்கெட்ஸ், பர்கர்.... ஏன் பட்டர் சிக்கன், நாண் இந்திய வகைகள்கூட வீட்டில் செய்யும்போது கடையில் வாங்கும் சுவை வருவதில்லை. இருப்பினும், ஆரோக்கியம் கருதி நாக்கைக் கொஞ்சம் சுருட்டி ஓரமா வச்சுகிட்டு சாப்பிட்டுகிடுறோம்.

”சப்புனு இருந்தாலும், நானே செஞ்சது”

feeling accomplished.


October 9, 2013

அம்மா சாப்பிடட்டும்னு பிள்ளைகள் விட்டு வச்சிருந்த (கடையில் வாங்கிய) கடைசி இனிப்பு...
......
பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல
ருள்ளம் படர்ந்த நெறி.

இதுவும் காதலே..... — feeling blessed.




இதுவே வீட்டுல செஞ்சதுன்னா, முழுசையும் எனக்கே விட்டுக் கொடுத்துருவாங்க!! பாசக்காரப் பயலுவோ...

October 10, 2013

மறைந்த விநோதினியின் தாய் சரஸ்வதியின் தற்கொலை குறித்து விகடனில்::
_________________________________________
''...சிகிச்சையின்போது உதவுவதற்காக, 'ஹெல்ப் வினோதினி டாட் காம்’ என்ற வெப்சைட் ஆரம்பித்தனர் அவரது உறவினர்கள். ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு தமிழ் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் அளித்த நன்கொடை கோடிகளைத் தாண்டியது. பிரதமர் ந¤வாரண ந¤தி, முதல்வர் நிவாரண நிதி என அரசு தரப்பில் இருந¢தும் உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில்தான் குடிப்பழக்கம் கொண்ட வினோதினியின் தந்தை ஜெயபால், பணத¢தை எடுத்து செலவு செய்திருக்கிறார். கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுகிற வகையில்தான் இதை செலவுசெய்ய வேண்டும் என்று சரஸ்வதியும் கண்டிப்புக் காட்டியுள்ளார். ... இறந்த பிறகும் பணத்தை எடுத்து செலவு செய்திருக்கிறார்கள்.

... எல்லாவற்றையும் நிர்வகிப்பது அவர்களது தூரத்து உறவுக்காரரான ரமேஷ். வங்கிக் கணக்கில் இப்போது 67 லட்சத்துக்கு மேல் இருக்கிறது. இவர்கள் எடுத்து செலவுசெய்ததைப் பார்த்து வங்கியினர், 'வினோதினி ஆசிட் வீச்சு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இப்போது பணத்தை எடுக்க முடியாது’ என தடை விதித்தனர். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான், வினோதினி பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சட்டப்படி உரிமம் வாங்கி இருக்கிறார்கள்.”
_____________________________________________

பணம், பத்து என்ன அதுக்கு மேலேயும் செய்யுமாம். — feeling depressed.

October 14, 2013

தெரிந்த குடும்பத்தில் ஒரு மாணவி, எதிர்பாராதவிதமாக கல்லூரித் தேர்வில் முக்கியமான இரு பாடங்களில் தோல்வியடைந்துவிட்டாள். மாணவியைப் போலவே, வீட்டினருக்கும் அதிர்ச்சிதான் என்றாலும், மாணவியைத் தேற்றும்விதமாக ஆறுதலாகவே நடந்துகொள்கின்றனர். மாணவியின் தோழி, மாணவியின் அம்மாவிடம், “உங்கள் மகள் தற்கொலை செஞ்சுக்க மாட்டாள்ல?” என்று கேட்கிறாள்!!!!!!

பிரச்னைகள் வரும்போது தற்கொலை (முயற்சியாவது) செஞ்சுகிட்டாதான் ”மானஸ்தி” போல!! — feeling meh.


October 17, 2013

நாற்பது வயதுக்கு மேல், கண்ணாடி அணியாமல், சின்ன எழுத்துகள் சரியாகத் தெரிவதில்லை. வாழ்க்கையின் சின்னச் சின்ன குறைகளும் பெரிதாகத் தெரியாமல் போக ஆரம்பிக்கும் காலமும் அதே நாற்பதில்தான்!! — feeling blessed.

Post Comment

7 comments:

ஸ்ரீராம். said...

கிளிக் செய்தால் இங்கேயே பக்கம் மாறி விடுகிறதே... அப்புறம் தேனீ டேபில் ஓபன் செய்தேன்.

//“.... அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை”//

"....யாருக்கும் அவனே எல்லை; அவனுக்கோ தந்தை இல்லை. அல்லா பெற்ற பிள்ளைதானே யாரும்" வரிகள் நினைவுக்கு வந்தன.

வேப்பங்கொழுந்து என்றதும் சிறு வயதில் பாட்டி கொடுத்து, சாப்பிட்ட உருண்டைகள் நினைவுக்கு வந்து நினைவிலேயே நாக்கு காரமாகக் கசந்தது!

கோமதி அரசு said...

முகமலர் இற்றைகள் அனைத்தும் அருமை.

கோமதி அரசு said...

அறிவுக் கொழுந்து! என்று என் தங்கை அவள் குழந்தைகளையும் மற்ற குழந்தைகளையும் கொஞ்சுவாள்.
நீங்கள் சொல்லும் அறிவு கொழுந்தின் விளக்கத்தை கேட்டால் நொந்து போய்விடுவாள்.

மனோ சாமிநாதன் said...

எல்லாமே சுவாரஸ்யமாக இருந்தன ஹுஸைனம்மா!

இராஜராஜேஸ்வரி said...

என ஒரு வாழ்க்கை தத்துவம்..!

ஹுஸைனம்மா said...

கோமதி அக்கா:

//அறிவு கொழுந்தின் விளக்கத்தை கேட்டால் நொந்து போய்விடுவாள்//

எனக்கே தெரியாது அக்கா. அவன் திடீரெனக் கேட்கவும் மனதில் தோன்றியதைச் சொன்னேன்!!

மனோ அக்கா: நன்றி அக்கா.

ராஜி மேடம்: நன்றி.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார்:

உட்பதிவுகள் தனி டேப்-ல் திறப்பது போல இனி செய்கிறேன். தகவல் சொன்னதற்கு நன்றி சார்.

//"....யாருக்கும் அவனே எல்லை; அவனுக்கோ தந்தை இல்லை. அல்லா பெற்ற பிள்ளைதானே யாரும்" வரிகள் நினைவுக்கு வந்தன.//

குர் ஆனின் கடைசியில் ஒரு அத்தியாயத்தில், இறைவன் தன்னைப் பற்றிக் கூறுகிறான்:

112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)

இஸ்லாமின் தனித்துவமான இதில்தான் மற்ற மதங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது.

தகவலுக்காகச் சொன்னேன் சார். நன்றி.