Pages

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என் குமாரா - 2
முதல் பகுதி இங்கு

"இந்தக் குழந்தை மட்டும் பெண் குழந்தையா பிறந்தா, அது நமக்கு வேணாம். யாருகிட்டயாவது தூக்கிக் கொடுத்துடு. நீ எத்தனைவாட்டி கேட்டாலும் என் பதில் இதுதான்!!
தற்கு மேல் பொறுமை காக்கத் தெம்பில்லை!! கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.... ஒரு ஐந்து வயது சிறுவனுக்கு பெண் குழந்தையை வெறுக்க என்னதான் காரணம் இருக்க முடியும்

ஏண்டா தங்கச்சி வேணாம்கிற...?”

கேர்ள்ஸ்லாம் ஃபைட் பண்ண மாட்டாங்க. பாய்ஸ்தான் ஃபைட் பண்ணுவாங்க. அதனால எனக்கு தம்பிதான் வேணும்!!

அடிங்.... இவனையெல்லாம் ஒரு ஆளுன்னு மதிச்சு நான் உக்காந்து பேசிகிட்டிருக்கேன் பாரு.... இதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்... அதெல்லாம் புள்ளையப் பெத்து கையில கொடுத்துட்டாச் சரியாகிடும். ஆனாலும் ஒரு மனக்கிலேசம். இப்பவே இப்படிப் பேசுறானே.... கொஞ்சம் கொஞ்சமா மனச இப்பவே மாத்துறதுதான் நல்லது என்று அவ்வப்போது கேட்டாலும், “என் வயசு எப்பவுமே பதினாறுதான்என்கிற மாதிரி... ம்ஹூம்... கொண்ட கொள்கையிலிருந்து இம்மியும் பிசகவில்லை.

அவனுடைய பாட்டிகள், சித்திகள், அத்தைகள், கஸின்ஸ் யார் கேட்டாலும் அதே பதில்தான்!! ஒரு பையனும், ஒரு பொண்ணும் இருந்தாத்தானே "balanced familyஆ இருக்கும். அதனால பொண்ணு கண்டிப்பா வேணும்ல...பாட்டி எடுத்துச் சொன்னபோதும்.... ம்ஹூம்..... பெட்ரோமாக்ஸேதான் வேணும்!!

இது வெறும் சிறுபிள்ளைத்தனம்; பின்னர் மாறிவிடும் என்று நினைத்த எனக்கு இப்போத்தான் ரொம்ப கவலையாகிப் போனது!! இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கானே, குழந்தையை வெறுத்துவிடுவானோ என்ற பயம்... (அதுல பாருங்க, பொண்ணுதான்னு நான் எப்படி ரொம்ப உறுதியா நம்பிகிட்டு இருந்தேன்??)  

ஒரு நாலஞ்சு மாசம் இருக்கும்போது அவன் என்னிடம் கேட்டான், “இந்த பேபி பாய் பேபியா பிறக்கணும்னா நான் என்ன செய்யணும்?” ம்க்கும்... வயித்துல வச்சிருக்க நானே ஒண்ணும் செய்ய முடியாது.... இதில இவுக என்ன செய்யணும்னு கேள்வி வேற....

இருந்தாலும் இம்மாதிரி சந்தர்ப்பங்கள் சுளையாகச் சிக்கும்போது விடக்கூடாது என்ற பாடம் கற்றுக் கொண்டிருந்ததால், “நீ அல்லாஹ்கிட்ட துஆ செய். உம்மா சொன்னபடி கேட்டு நீ நல்ல பிள்ளையா நடந்துகிட்டா, அல்லாஹ் நீ கேட்டதைத் தருவான்.தூண்டில் போட்டேன். ஒன்றும் பதில் சொல்லவில்லை அவன். (துஆ = பிரார்த்தனை)

ரவு படுக்கும்முன் ஓதவேண்டிய துஆ, குர் ஆன் வசனங்களை ஓதிமுடித்தபின், கையை ஏந்தியபடி வெளியே கேட்காபடி கிசுகிசுவென ஏதோ சொல்லிக் கொண்டான். என்ன ஓதுறே என்று வாய் வரை வந்த கேள்வியை விழுங்கி விட்டேன். ஏன்னா... இப்படித்தான் போன மாசம் கிசுகிசுவென ஓதியதை என்னதுன்னு கேட்டப்போ, “நாளைக்கு டெஸ்ட் இருக்குலம்மா.. அதுல என் ஃப்ரண்ட் ஃபர்ஹானா ஃபர்ஸ்ட் மார்க் வாங்கணும். நான் அதுக்கடுத்த ஃப்ர்ஸ்ட் மார்க் வாங்கணும்னு துஆ செஞ்சேன்என்றதும் அவங்க அப்பாவுக்கு வந்ததே கோவம்... 

எலேய் உன்னிய காசு கொடுத்து படிக்க வக்கிறது நானு... இதுல நீ வேற யாரோ ஃபர்ஸ்ட் மார்க் வாங்கணும்னா துஆ செய்றேஎன்று வெகுண்டு எழுந்துவிட்டார்!! அய்யே... சும்மாருங்க...சின்னப் புள்ளட்டப் போயி.... விவரம் தெரியற வயசா இது?” என்று நான் நடுவில் புக... நீ சும்மாரு.... அதுவும் அந்த பொண்ணு பாகிஸ்தானி...  அட, கேரளாப் பொண்ணச் சொல்லிருந்தாகூட வுட்டுருப்பேன்...என்று பொங்க.... இப்படியொரு கோணத்தைஎதிர்பார்க்காததால் அப்படியே ஷாக்காகி விட்டேன்!! ஆனாலும் சுதாரித்து, பையனை அப்பாவிடமிருந்து காப்பாற்றி விட்டேன்!!

இந்த எபிஸோட் நினைவுக்கு வந்ததால், அப்போது கேட்காமல் விட்டுவிட்டேன். ஆனால் இந்த கிசுகிசு துஆசில நாட்களாகவே தொடரவும், பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டேன். என்னத்தடா அப்படி தெனம் துஆ கேக்கிறே? இப்ப டெஸ்ட் எதுவும் இல்லியே...” 

நீ சொன்னல்ல... அதான் தம்பிதான் வேணும்னு கேட்கிறேன்என்றதும் எனக்கு அதிர்ச்சி..... இவ்ளோ சீரியஸாவா இருக்கான்.... 

னக்கு இப்போ இன்னொரு பெருங்குழப்பம்..... இவ்வளவு நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறானே... ஒருவேளை பெண் குழந்தை பிறந்துவிட்டால்?? அவனுக்கு பிரார்த்திப்பதில் நம்பிக்கை போய்விடுமோ.... அப்போதுதான் சிறுகச்சிறுக அல்லாஹ், தொழுகை, துஆக்கள் என்று  சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்த நாட்கள் அவை. 

அவனது நம்பிக்கை பலப்படுவதற்காக நானும் இனி ஆண் குழந்தைக்காகப் பிரார்த்திக்கணுமா..... கேட்டது கிடைக்கவில்லையென்றால், பெரியவர்கள் புரிந்துகொள்ளலாம். சின்ன பிள்ளை அதை எப்படி எடுத்துக் கொள்வான்நான் கேட்டபடி பெண்ணே பிறந்தாலும் அது இப்போதைய சூழலில் மகிழ்ச்சி கொடுக்குமா? “சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகபுத்திசாலி போல அவனைத் தூண்டிவிட்டதில், இப்போ என் பெண்குழந்தை கனவைக் காவு கொடுக்க வேண்டிய நிலை!!

பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியம், என் உடல்நிலை என்று பல்வேறு மன உளைச்சல்களுக்கிடையில் இந்த டென்ஷன் வேறு!! அந்த ஆறு மாதங்களும் என் மனக்குழப்பங்கள் கூடிக் கொண்டேதான் இருந்தன.
இதற்கிடையில் குடும்பத்தினரும் அவனை ப்ரெய்ன் வாஷ்செய்ய முயற்சித்தார்கள். ம்ஹும்.... ஃபோட்டோ ஷாப் கதைகளை எடுத்துச் சொன்ன பிறகும் மோடி மாயையில் முங்கியவர்களைப் போல திருந்தவேயில்லை!! 

ந்த நாளும் வந்தது!! கிளைமேக்ஸ் காட்சி!! அவன் ஒருவன் மட்டும் ஆண் குழந்தை துஆ, குடும்பத்தில் உள்ள எல்லோரும் பெண் குழந்தை துஆ, கடைசிவரை இதுவா அதுவா என்ற குழப்பத்திலேயே நான்...  ஜெயித்தது அவனே!! 

நம்பிக்கையோடு பிரார்த்திப்பதன் பலனை அவன் அறிந்துகொண்டதோடு, பெரியவர்களான எங்களுக்கும் அறியத் தந்தான்!! அவனுக்கு துஆவைக் குறித்து நான் சொல்லிக் கொடுக்கப் போக, அவன் வழியே ஆண்டவன் எங்களுக்கு பாடம் கற்பித்த நினைவுகள் என்றும் மறக்காதவை. 

ப்போ தம்பியாப் புள்ளையைப் பற்றி அண்ணன் கம்ப்ளெயிண்ட் கொண்டு வரும்போதெல்லாம் ஒரே பதில்தான், “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என் குமாரா!!

Post Comment

12 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பதில்தான்:)!

Durai A said...

அற்புதம்!

(இதை அல்லாஹ்வின் அருள் என்று சொல்வது அறியாப்பிள்ளையை ஏமாற்றுவது போலாகும் என்று எண்ணினாலும்..)

முகுந்த் அம்மா said...

Great.. Your writing style with emotions is amazing.. Keep rocking Hussain Amma :)

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பாவிடமிருந்து பையனை காப்பாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.... மன்னிக்கவும்... பையன்களை...

வெங்கட் நாகராஜ் said...

இரண்டு கட்டுரைகளையும் ஒருங்கே படித்தேன்.

நல்ல கட்டுரை - பாராட்டுகள்.

ஸ்ரீராம். said...

நல்லது!

RAMA RAVI (RAMVI) said...

குழந்தையின் பிராத்தனைக்கு எத்தனை சக்தி பார்த்தீர்களா?
மிக அருமையான பகிர்வு..
நான் போன பதிவிலேயே கண்டுபிடித்துவிட்டேனே உங்க பையன் தான் சொல்லியிருப்பான என்று??

கீத மஞ்சரி said...

அட, அருமையா எழுதியிருக்கீங்க ஹூஸைனம்மா. இதைப் போலத்தான் எங்கள் வீட்டிலும் நடந்தது. இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும்போது என் மகளுக்கும் ஐந்து வயதுதான். ஒருநாள் அவளுடைய டீச்சர் அவளிடம் உனக்கு தம்பி வேணுமா தங்கச்சி வேணுமா என்று கேட்க, தங்கச்சிப்பாப்பாதான் வேணும் என்று சொல்லியிருக்கிறாள். உடனே அவள் டீச்சர், 'தங்கச்சி பாப்பா இருந்தால் உன் தோடு வளையல் மணி எல்லாவற்றிலும் பங்கு கேட்பாள், பொம்மை கேட்டு சண்டை போடுவாள் அதனால் தம்பி வேணும் என்று சாமியிடம் கேள் என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான் தினமும் சாமி எனக்கு தம்பிதான் வேணும் என்று காலண்டரிடம் பிரார்த்தனை. (வீட்டில் காலண்டரைத் தவிர சாமி படங்கள் கிடையாது என்பதால் :)) எனக்கோ பகீரென்று ஆகிவிட்டது. பெண் குழந்தை பிறந்தால் போட்டி அதிகரித்து பாசமே இல்லாமல் போய்விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக பையன் பிறந்தான். இப்போது இருவரின் பாசத்துக்கும் ஒரு குறைவும் இல்லையென்றாலும் குழந்தைகளின் மனத்தில் அப்படியொரு எண்ணத்தை விதைப்பது தவறு என்று அந்த டீச்சருக்கு தெரியவில்லையே என்ற ஆதங்கம் எப்போதும் இருக்கிறது.

மோகன்ஜி said...

மிக அழகாய் விவரித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

Durai A said...

போட்டோ ஷாப் மோடி மாயையா்? என்ன அது? தெரியாம போச்சே!!

Shamee S said...

மிகவும் அருமை ஹுசைனம்மா..
ரசித்து படித்தேன்.உங்கள் எழுத்து நடை யதார்த்தமான அழகு......

Shamee S said...
This comment has been removed by the author.