அன்று அச்செய்தியை வாசித்தபோது வியப்பு தாங்கமுடியவில்லை. அதைப் பார்த்ததும், முன்பு வாசித்த மற்றொரு தகவல் நினைவுக்கு வந்தது. தமிழக தனியார் தொலைக்காட்சியில், சமீபத்தில் ஒரு பெண் தொகுத்து வழங்குகின்ற வயது வந்தோருக்கான ஒரு நிகழ்ச்சி குறித்த முகநூல் விமர்சனங்கள், நிகழ்ச்சியின் தரம் முகச்சுளிக்குமளவு இருப்பதைக் கூறின. இந்திய தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும் சாதாரண நிகழ்ச்சிகளிலேயே பலவும் பெரியவர்கள்கூட பார்க்க முடியாதபடி இருக்க, தாம்பத்திய சந்தேகங்கள் குறித்த நிகழ்ச்சிகளைப் பற்றி கேட்க வேண்டுமா?
பெண்களுக்கு நியாயமான சந்தேகங்கள் இருப்பினும் அதைப்பற்றிக் கேட்டுத் தெளிவதற்கு எந்தவொரு வழியும் இல்லாத நிலையே இந்தியாவில் உள்ளது. படித்தவர்களுக்காவது இணையம் உள்ளது. படிக்காத பெண்களுக்கு?
இந்நிகழ்ச்சிகள் டிவிக்களின் டிஆர்பி ரேட்டை அதிகரிக்க மட்டுமே பயன்படுகின்றன என்பதல்லாமல், உரிய சந்தேகங்களை - ஆண்களுக்குக்கூட - நிவர்த்தி செய்ய உதவுவதில்லை என்பதுதான் உண்மை. ஆனந்த விகடனில் “பேசாத பேச்செல்லாம்” என்ற தொடரில் திருமதி. ப்ரியா தம்பி, ”தன்னை பாலியல்ரீதியாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பதற்கு” அப்பெண் உடன்படுகிறார் என்று இந்நிகழ்ச்சி குறித்து கூறுகிறார்.. இதுவா சுதந்திரம்?
தொலைக்காட்சி, வானொலிகளில் வரும் பெரும்பாலான நிகழ்ச்சிகளிலும் இதுதான் நடக்கிறது. இந்த வருடம் காதலர் தினத்தன்று, ஒரு தமிழ் வானொலியில் “தன் காதல் துணைக்கு வானொலி வழி சேதி சொல்லும்” ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பானது. அந்நிகழ்ச்சியை நடத்திய பெண் தொகுப்பாளரிடம் இதைச் சாக்காக வைத்து வழிந்தவர்கள்தாம் அதிகம். அதிலும் அரைமணிநேரம் ஒலிபரப்பான அந்நிகழ்ச்சியில் மூவர், காதல் கவிதைகள் வாசித்து அது அந்த தொகுப்பாளருக்கான தன் காதல் தூது என்றும் கூறினார்கள்!! அதற்கு அப்பெண்.....
தொடர்ந்து வாசிக்க....

|
Tweet | |||
1 comments:
நியாயமான கோபம்.
Post a Comment