Pages

முகமலர் இற்றைகள் - 5




எனது ஃபேஸ்புக் பதிவுகள் இங்கும் இற்றைப்படுத்திக் கொள்வதற்காக....
வலைப்பதிவைப் போலவே, ஃபேஸ்புக்கிலும் பின்னூட்டப் பதிவுகளில்தான் சுவாரசியம் நிறைய இருக்கும். ஒவ்வொரு பதிவின் அருகே இருக்கும், தேதியை (Date stamp) க்ளிக் செய்தால், அந்தப் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் பார்க்கலாம். நாங்க என்ன வெட்டியாவா இருக்கோம்னு எகிறாதீங்க. தேதியோடு பதிவுகளைக் கொடுத்துள்ளதால், தொடர்புபடுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.


December 7, 2013
மூன்று புலிகளுக்கிடையில் ஒரு புள்ளிமான் #நானேதான்!!

feeling irritated.

"....சரி அதெல்லாம் இருக்கட்டும், எனக்கொரு சந்தேகம் சகோதரிகளே!...... உங்கள் ரெண்டு பேருடைய தந்தைகளும் மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர்கள்தாம். அனேகமாய் அவர்களின் புத்தகங்கள் மற்றும் சிந்தனைகளை முன் வைத்துத்தான் இலங்கையில் தஃவாவே செய்து வருகிறார்கள். அது வேறு விஷயம்.

நான் என்ன கேட்க வந்தேன்னா, இந்த... பாலிடிக்ஸ், கெமிஸ்ட்ரி, நியூக்ளியர் ஸயன்ஸ் ஆகிய துறைகளில் உங்களை சிறப்புத் தேர்ச்சி உடையவங்களாய் உங்கள் தந்தையர் உருவாக்கி இருப்பதாய் நீங்களே சொல்றீங்க. ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு அவளுடைய குடும்பத்தைப் பார்த்துப் பணிசெய்து பராமரிக்கிறது மட்டும்தானே மகத்தான, மேன்மையான பணி? அப்படியிருக்க, மேற்கின் சடவாத உலகு போற்றுகின்ற இந்த... பாலிடிக்ஸ், கெமிஸ்ட்ரி, நியூக்ளியர் ஸயன்ஸ் இதெல்லாம் முஸ்லிம் பெண்களுக்கு எதுக்கு? அதனால், இஸ்லாத்துக்கும் இஸ்லாமியக் குடும்பத்துக்கும் என்ன பிரயோசனம்? சும்மா, வீட்டை மட்டும் பராமரிச்சிட்டு 'அல்ஹம்துலில்லாஹ்' என்று நிம்மதியா இருக்கிறதைவிட இவ்வளவெல்லாம் கஷ்டப்பட்டு பி.எச். டி எல்லாம் முடிக்கிறதெல்லாம் சும்மா வீண் வேலைதானே?"

எனக்கும் சமையல் தெரியும் என்று மாமியாரை நம்ப வைப்பதைவிட, அம்மாவை நம்ப வைப்பதுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு!!
#அம்மா_வீட்டில்_நான்!!
feeling determined.


அம்மா வீட்டுக்கு நான் அல்லது அம்மா நம் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அம்மாவின் சேலையையோ அல்லது குறைந்தபட்சம் ஒரு மக்கன்னா (தொழுகைத் துணி)வையோ 'அழகா இருக்கே' என்ற ஒற்றை வரியின்மூலம் சுட்டுவிடுவதில் இருக்கும் சுகமே அலாதி!!
#அம்மா_வீட்டில்_நான்!!
— feeling excited.

இணையம் போன்ற கூடுதல் வசதிகள் இல்லாத, எளிமையான மொபைல் ஃபோன்கள் வைத்திருக்கும் என்னையும், என் கணவரையும் - கருப்பாக இருக்கும் மகளின் பெற்றோரைப் பார்ப்பதுபோலவே பரிதாபமாகப் பார்க்கிறார்கள் சிலர்!!feeling confident.
கணவரிடம் இருக்கக்கூடிய கொஞ்சநஞ்ச ஆணாதிக்கத்தையும் வெகு “அன்பாக” எடுத்துச் சொல்லித் திருத்திவிட முடிகிறது. ஆனால், மகனை ஒன்றும் செய்யமுடிவதில்லை, “என்னை மாதிரியே ஒரு நல்ல்ல்ல்ல பெண்ணே மனைவியாக உனக்கு வாய்க்கணும்” என்று வாழ்த்துவதைத் தவிர!! — feeling better.
”கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினுங்கொடிது இளமையில் வறுமை”

-ஔவை சொன்னது!

அனைத்தையும்விடக் கொடியது “முதுமையில் தனிமை”

-நான் கண்டதும், அஞ்சுவதும்!!

//கணவனை இழந்த பெண்கள் ஒருவாறு சமாளித்து, வாழ்க்கையை எதேனும் ஒரு வகையில் சுவாரஸ்யப்படுத்திக் கொள்கின்றனர். பெரும் சிக்கல்கள் ஏதுமின்றி எஞ்சிய வாழ்வை ஓட்டி விடுகின்றனர்.

ஆனால், மனைவியை இழந்த கணவர்கள் பாடுதான் பிரச்சினகள் நிறைந்ததாகிறது. பரிதாபத்திற்குரியதாகிறது.//

http://orbekv.blogspot.com/2014/01/blog-post_16.html






கடற்கொள்ளையர்களின் தோற்றம் (origin) குறித்த கட்டுரை. விளக்கமான அதே சமயம் சுவாரசியமான எழுத்தில்.

படித்து முடிக்கும்போது கண்டிப்பாக, அல் கொய்தாவை கொம்பு சீவிவிட்ட கதையும் மனதில் வரும்!!

http://www.darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/420-captain-jack-sparrow.html


There's no weapon that slays its victim so surely (if well aimed) as praise- Edward Bulwer Lytton

நம்மைப் புகழ்ந்து பேசுபவர்களிடம் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்- ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி

ஒருவரின் முன்னிலையில் அவரைப் புகழ்வது அழிவை ஏற்படுத்தும்- நபி (ஸல்)

அதிகமதிகம் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களது முகத்தில் மண்ணை எடுத்து வீசுங்கள் - நபி (ஸல்)


இரு வருடங்களுக்குமுன், கேன்ஸர் சம்பந்தமாக ஒரு பதிவு எழுதுவதற்காகத் தகவல்கள் திரட்டியபோது கிடைத்த அதிர்ச்சித் தகவல்களில் ஒன்று:

அழகுசாதனப் பொருட்கள் மட்டுமல்லாது, நாம் பயன்படுத்தும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களிலும் கலந்திருக்கும் ஒரு வேதிப் பொருள் “#PARABEN". லிப்ஸ்டிக், க்ரீம்கள், லோஷன்கள், குளியல் சோப்புகள், ஷாம்பூ, டியோடரண்ட், ஷேவிங் க்ரீம், ஷேவிங் லோஷன்கள் ஏன் பற்பசைகள் உட்பட அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களில், அவை நீண்ட நாள் கெடாமலிருக்க வேண்டி “பாராபென்” எனப்படும் வேதிப்பொருள் preservative-ஆகச் சேர்க்கப்படுகிறது. இது நம் உடலில் சேரும்போது, எஸ்ட்ரோஜன் ஹார்மோன் போல செயல்படும்.

மார்பகப் புற்று வந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட திசுக்களில் பரிசோதனை செய்தபோது, 60 சதவிகிதத்தில் இந்த பாராபென் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!! ஆண்களின் இனப்பெருக்க செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்த வல்லவை இவை.

இதனால், நான் ‘ஹெர்பல்’ பிராண்டுகளுக்கு மாறிவிடலாம் என்று முடிவு செய்து, பிரபல ஹெர்பல் சோப், க்ரீம்களின் உட்பொருட்களை வாசித்தபோது அவற்றிலும் இந்த “பாராபென்” இருந்தது!! அட அவ்வளவு ஏன்... பல பிரபல ஹெர்பல் பற்பசைகளிலும் இந்த ‘பாராபென்’ இருக்கிறது!!

வறண்ட சருமத்திற்கென நான் பயன்படுத்திவந்த moisturising cream-க்குப் பதிலாக தற்போது ‘பாதாம் எண்ணெய்’ உபயோகிக்கிறேன். சோப்பும், பற்பசையும் (லேபிளிலாவது) ’பாராபென்’ இல்லாததாகத் தேடித்தேடி வாங்கிக் கொள்கிறேன்.
http://hussainamma.blogspot.ae/2012/01/blog-post_31.html


அம்மா வீட்டில் ஒரு முறை நான் பிரியாணி செய்தேன். சூப்பராக வந்திருந்தது. ஆனாலும் கொஞ்சம் மீந்திருந்ததைக் கண்டு ”ஆஹா, நாளை மதியம் சமைக்கும் வேலை இல்லை” என்று இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் தூங்கப் போனேன். எழுந்து வந்து, மகிழ்ச்சியைப் புதுப்பித்துக் கொள்வதற்காக பிரியாணி வாசனை பிடிக்க எண்ணி, பாத்திரத்தைத் திறந்து பார்த்தால் பாத்திரம் காலி! பகீரென்றது!! கேட்டால், இரண்டு பக்கத்து வீடுகளுக்கும், எதிர் வீட்டுக்கும் கொடுத்து விட்டேன் என்கிறார், என்.ஆர்.ஐ. மகளின் கிராமத்து அம்மா!!

(இன்னிக்கும் பிரியாணி மீதியிருக்கதைப் பார்த்ததும் சுத்திய கொசுவர்த்தி)
#அம்மா_வீட்டில்_நான்
— feeling Nostalgic.


படுக்கை என்பது மடித்து வைக்கக்கூடியதாக இருந்த வரை, தூக்கமும் இரவுக்கானதாய் மட்டுமே இருந்தது.

(எங்கோ படித்தது இங்கே என் வார்த்தைகளில்)

சமைத்து மட்டுமே உண்ணக்கூடியதாக இருந்த வரை, உணவு பசிக்கானதாக இருந்தது.

தைத்து மட்டுமே உடுத்துவதாக இருந்தவரை, புத்தாடைகள் பண்டிகைகளுக்கானதாய் இருந்தன.

(நேற்றைய ஸ்டேட்டஸின் தொடர்ச்சியாக நானே ஜிந்திச்சது!!)
— feeling சிந்தனாவாதி!!

Post Comment

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம்...

கொடியது கேட்கின் வரிவடி வேலோய்...
கொடிது கொடிது வறுமை கொடிது...
அதனினும் கொடிது; இளமையில் வறுமை...
அதனினும் கொடிது; ஆற்றொணாக் கொடு நோய்...
அதனினும் கொடிது; அன்பு இல்லாப் பெண்டிர்...
அதனினும் கொடிது; அவர் கையால் இன்புற உண்பது தானே...!

வெங்கட் நாகராஜ் said...

அங்கே படிக்க முடியாதவற்றை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.