Pages

வருக, வருக..




(முன்குறிப்பு: ப்ளாக்கர்களின் (அய்யோ, சரியா வாசிங்க. அது கெட்ட வார்த்தை இல்லை. ப்ளாக்கர் - Blogger, அதாவது என்னைப் போல ப்ளாக் எழுதுறவங்க!!) பாஷையில் ரங்கமணின்னா புருஷன், தங்கமணின்னா மனைவி, புரியுதா? ஷார்ட்டா, ரங்ஸ், தங்ஸ்!!)

நேத்து பெய்ஞ்ச மழையில முளைச்ச காளானாட்டம் இப்பதான் பதிவு எழுத ஆரம்பிச்சுட்டு, மூத்தகுடி பதிவர்களான நமக்கே தங்ஸ், ரங்ஸ் விளக்கம் சொல்றாளேன்னு தயவுசெய்து யாரும் தப்பா நினைக்காதீங்க!!

இதுவரை பலமுறை கெஞ்சியும் என் ப்ளாக் பக்கமே வராத எங்க ரங்ஸ் (வீட்லத்தான் நீ எழுதிவைக்கிற ஜாப் லிஸ்ட், ஷாப்பிங் லிஸ்ட் தினமும் படிக்கிறேனே, அங்கயுமா?) இன்னிக்குத்தான் என் ப்ளாக் பக்கம் வரப் போகிறார் என்பதால் இந்த விளக்கம். (யாராவது இதான் சாக்குன்னு முந்தைய பதிவுகள்ல நான் அவரைப் பத்தி எழுதுனதெல்லாம் போட்டுக் கொடுத்தீங்க....)

பத்திரி்கைகள் அவ்வப்போது சிறப்பிதழ்கள் வெளியிடுவார்கள், எங்கள் ஊருக்கு வரும் சிங்கமே வருக என்று அவரின் சிறப்பெல்லாம் போட்டு வரும். இதுவும் அதுபோல ஒரு பதிவுதான்!! முதன்முதல் என் பிளாக் பக்கம் வரும் என் ரங்ஸே, வருக, வருக என்று வரவேற்கிறேன். என்னாங்க, என் தோழர்கள் உங்களை வரவேற்றுப் போடும் கோஷம் விண்ணை முட்டுவது கேட்கிறதா உங்களுக்கு?

எங்க ரங்க்ஸ் பத்திச் சொல்லணுன்னா, அபுதாபியில எஃப் 1 ரேஸ் நடந்துதே, அந்த யாஸ் தீவிலதான் இஞ்சிநீரா இருக்கார். எஃப் 1 ரேஸ் வரைக்கும் பிஸின்னா அப்படி ஒரு பிஸி!! ஏதோ இவர் அங்க இருக்கப் போயி ரேஸ் நல்லபடியா எந்த அசம்பாவிதமும் இல்லாம நடந்து முடிஞ்சுது!!

அப்புறம், ரொம்ப நல்லவர், வல்லவர், அன்பும், பண்பும் நிறைந்தவர்.


இந்த நல்லவரை பதிவுலகச் சார்பாக மீண்டும் வருக வருகவென வரவேற்கிறேன். ம்ம்ம்...இனி கொஞ்சம் கவனமாத்தான் எழுதணும் :-(








Post Comment

16 comments:

S.A. நவாஸுதீன் said...

மச்சானை வருக வருக என் அன்புடன் வரவேற்கிறோம்.

சந்தனமுல்லை said...

:))

ஷாகுல் said...

//இந்த நல்லவரை பதிவுலகச் சார்பாக மீண்டும் வருக வருகவென வரவேற்கிறேன்//

இதை கன்னா பின்னா வென வழிமொழிகிறேன்.

// எஃப் 1 ரேஸ் வரைக்கும் பிஸின்னா அப்படி ஒரு பிஸி!! //

அப்போ இப்போ சும்மதான் இருக்கருன்னு சொல்றீங்களா!

அவ்வ்வ்வ்வ்வ்

ஷாகுல் said...

//வீட்லத்தான் நீ எழுதிவைக்கிற ஜாப் லிஸ்ட், ஷாப்பிங் லிஸ்ட் தினமும் படிக்கிறேனே, அங்கயுமா?//

அக்கா எழுத கூடிய ஷாப்பிங் லிஸ்டை போல பதிவுகள் உங்கைன் பாக்கெட்டை பதம் பார்க்கதென்பதினை இந்த பொன்னான நாளில் கூறிக் கொள்ள அவாகொள்கிறேன், ஆசைபடுகிறேன்,

வருக வருக என உங்களை மறுக்கா பதிவுலகின் சார்பாக வரவேற்கிறோம்.

தராசு said...

வெல்கம் மச்சான்

SUFFIX said...

(யாராவது இதான் சாக்குன்னு முந்தைய பதிவுகள்ல நான் அவரைப் பத்தி எழுதுனதெல்லாம் போட்டுக் கொடுத்தீங்க....)

ஆமாம் ஹுசைன் காக்கா அதயெல்லாம் படிச்சுத்தான் ஆவேன்னு அடம் பிடிக்காதிங்க, நான் வேணும்னா ஷார்ட்டா அதுல என்ன சொல்லி இருக்காங்கன்னு சொல்லிப்புடுறேன். வருக வருக அண்ணே!!

எம்.எம்.அப்துல்லா said...

வருக!வாழ்க!வெல்க!

:)

நாஸியா said...

Ada paravallaye.. enga veetla ullavanga title a paathutte escape aayidren.. edhavadhu tips kudungalen.. :)

ஸாதிகா said...

ரங்க்ஸ் வருகையால் இந்த தங்க்ஸ் தங்கச்சி கொஞ்சம் அட்க்கிவாச்ப்பார்கள் என்று சொல்லுகின்றீர்களா? :-(

Unknown said...

எந்த 'தங்ஸும்' அவ்வளவு லேசுல தனது 'ரங்ஸை'ப்
பாராட்டினது கிடையாது. நீங்கதான் உண்மையில்
'தங்க'மணி ; உங்க 'ரங்ஸ்' ஒரு வைர மணி :)

ஹுஸைனம்மா said...

வரவேற்று, வாழ்த்திய எல்லா நண்பர்களுக்கும் நன்றி. இதை பார்த்த எங்க ரங்ஸும் நன்றியைத் தெரிவிச்சுக்கிறாராம். அதுமட்டுமில்ல, //ரொம்ப நல்லவர், வல்லவர், அன்பும், பண்பும் நிறைந்தவர்// அப்படின்னு நான் எழுதியிருக்கிறதப் பாத்து எம்மேலே உனக்குள்ளே இவ்ளோ நல்லெண்ணம் இருக்கும்னு தெரியாமப் போச்சேன்னு கலங்கிப் போய்ட்டார்.

உங்கள் தோழி கிருத்திகா said...

அண்ணா வனக்கமுங்க.....

Prathap Kumar S. said...

ஹஹஹஹ நீங்க உங்க ரங்ஸை வரவேற்கிறமாதிரி தெரியல... கலாயக்கிறமாதிரி தெரியுது...பாவம்...

ஹுஸைனம்மா said...

//நாஞ்சில் பிரதாப் Says:
14/11/09 20:03

ஹஹஹஹ நீங்க உங்க ரங்ஸை வரவேற்கிறமாதிரி தெரியல... கலாயக்கிறமாதிரி தெரியுது...பாவம்...//

நீங்க ஒரு ஆளுதான் கரெக்டா புரிஞ்சுகிட்டீங்க போங்க!!

Jaleela Kamal said...

///முன்குறிப்பு: ப்ளாக்கர்களின் (அய்யோ, சரியா வாசிங்க. அது கெட்ட வார்த்தை இல்லை. ப்ளாக்கர் - Blogger, அதாவது என்னைப் போல ப்ளாக் எழுதுறவங்க!!) பாஷையில் ரங்கமணின்னா புருஷன், தங்கமணின்னா மனைவி, புரியுதா? ஷார்ட்டா, ரங்ஸ், தங்ஸ்//
ஒகே ஒகே நல்ல புருஞ்சிதுங்கோ..

வருக வருக‌

cheena (சீனா) said...

உங்க ரங்க்ஸ் ரொமப் நல்லவரா இருக்காரே - ம்ம்ம்ம்ம்

வாழ்க அவர்

நல்வாழ்த்துகள் அவருக்கு