Pages

அவர் ஏன் அதைப் பாடினார்...




எங்க வீட்டில சன், கலைஞர் மற்றும் இன்ன பிற சேனல்கள் கிடையாது. ராஜ் நியூஸ், மக்கள், தமிழன், மெகா இந்த மாதிரி உருப்படாத(!!) சேனல்கள்தான் உண்டு. இதனால நாங்க மிஸ் பண்றது எதுவுமில்லன்னாலும், அப்பப்ப போடற பட்டிமன்றங்கள் மட்டும் பார்க்க முடியலையேன்னு ஒரு ஏக்கம் உண்டு. அவ்ளோ தமிழார்வம் எங்களுக்கு!!

இப்படியா இருக்கும்போது, துபாயில தமிழ்ச்சங்கத்தில பட்டிமன்றம் நடத்தப்போறதா மெயில் வந்துது. அந்த சங்கத்தில உறுப்பினரானதுக்காக ஒரே ஒரு நிகழ்ச்சிக்குப் போனதோட சரி. இதுக்குப் போவோம்னு முடிவுசெஞ்சு போனோம். திருப்பித்திருப்பி மெயில் அனுப்பியிருந்தாங்க, சீக்கிரம் வந்துருங்க, கரெக்டா 6 மணிக்கு ஆரம்பிச்சுருவோம்னு.

நம்மால லேட்டாயிரக்கூடாதேன்னு 5.45க்கெல்லாம் உள்ளே போயிட்டோம். பிள்ளைகளை விட்டுட்டு, நானும், அவரும் மட்டும் போயிருந்தோம். பிள்ளைங்களுக்கு இம்மாதிரி நிகழ்ச்சிகளில் ஆர்வமிருக்காது; நமக்காக அவர்களை ஏன் அரங்குக்குள் கட்டிப் போடவேண்டும்? எங்க ரெண்டு பேருக்குமே ஒரு இடத்தில அரைமணி நேரத்துக்குமேல உக்காந்திருக்கிறது கஷ்டம். இதனாலேயே நாங்க இதுமாதிரி எந்த நிகழ்ச்சிகளுக்கும் போறதில்ல. பட்டிமன்றத்துக்காக வந்தோம். எங்களுக்குப் பின்னாடி 3 பாலக்காட்டுப் பெண்மணிகள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கிட்டுருந்ததனால ஒரு மணி நேரம் சுவாரசியமாகப் போனதே தெரியவில்லை. என்னவருக்கு அவல் நிறையவே கிடைத்தது!! சரியா 6.50க்கு நெப்போலியன் வந்தார்.

நிறைய பேர் கைக்குழந்தைகளோடும், சிறுவர்களோடும் வர்றதைப் பரிதாபமா பார்த்தேன். தமிழ்க் கலாசாரப்படி 6.50க்கு நிகழ்ச்சி ஆரம்பிச்சாங்க. வரவேற்பு நடனம் நல்லாருந்துது. ஃபோட்டோ எடுக்கலாம்னு பாத்தப்போ, கேமரா கொண்டுவர வழக்கம்போல் மறந்தது தெரிந்தது. மொபைலில் எடுத்தோம். ஈரோடு மகேஷ் நிகழ்ச்சி நல்லா சிரிக்கும்படியா இருந்துது. கணவன் - மனைவிகளைக் கிண்டல் செய்யத் தவறவில்லை. கோகுலின் கடைசி நடனம் (மட்டும்) நல்லா இருந்தது. சின்னஞ்சிறுவர்கள் நிறைய பாடல்களுக்குச் சிறப்பாக நடனம் ஆடினார்கள். பிறகு, வந்திருந்த விருந்தினர்கள் பேசினார்கள். தமிழ்க் கலாசாரப்படி, அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசும் கொடுத்தாங்க.

திரு. நெப்போலியன் சுவையாகப் பேசினார். Social Justice & Empowerment துறை மந்திரியான அவர் சமூகவாரியாக ஒதுக்கீடு செய்வதுதான் தன் துறையின் வேலை என்று சொன்னார். கலைஞர் புகழ்பாடவும் மறக்கவில்லை. குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் தம்மை வெகுவாகக் கவர்ந்ததாகவும், அவர்கள் துபாய் வந்தும் தமிழ்க் கலாசாரத்தை மறக்காமலிருப்பது பெருமகிழ்வைத் தருவதாகவும் குறிப்பிட்டார். சினிமாப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதுதான் தமிழ்க் கலாசாரமா என்ற கேள்வி வருகிறதா உங்களுக்கும்? கடைசியில் “கிழக்குச் சீமையிலே” பாட்டைப் பாடினார். ரசித்தோம். அதோடு நிறுத்தியிராமல், “ஜீன்ஸ்” படத்தின், “பூவுக்குள் ஒளிந்திருக்கும்” பாடலின் 4,5 வரிகள் பாடினார். இனி அந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் நெப்போலியன் குரல்தான் ஞாபகம் வந்துத் தொலைக்கும்!!

மற்றபடி நல்ல கலகலப்பானவராக இருந்தார். முக்கியமாக மாணவர்களுக்குப் பரிசு வழங்கும்போது, அவர்களின் பெயர்களைக் கேட்டுச் சரியானப் பதக்கங்களை எடுத்துக் கொடுத்து, ஃபோட்டோவுக்குச் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தார். நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற எல்லாரையும் மறக்காமல் மேடையில் குறிப்பிட்டுப் பாராட்டினார். மேடையின் கீழே உட்கார்ந்திருக்கும்போது சரமாரியாக எல்லோரும் ஆட்டோகிராஃப் கேட்டு, ஃபோட்டோ எடுத்தனர். முகம் சுளிக்காமல் ஒவ்வொரு குழந்தையாக மடியில் வைத்துப் படம் எடுத்துக் கொண்டது ஆச்சர்யம் தந்தது.

கொஞ்சம் பிரபலமானாலே பயங்கர பந்தா விடுபவர்கள் போலல்லாமல் இவரைப்போல் எளிமையான ஒருவரைக் காண்பது அரிது. E.T.A. வின் திரு. சலாஹுத்தீன் பேசும்போது பால்கனியிலிருந்து வந்த முழக்கங்கள், ETAகாரர்களுக்கென்று பால்கனி ரிசர்வ் செய்யப்பட்டதோ என்ற ஐயம் தந்தது. அமீரகப் பதிவர்களின் சுற்றுலாப் படங்கள் பார்த்திருந்ததால், யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தேன். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கதையாக எல்லோருமே அப்படித்தான் தெரிந்தார்கள். கீழை ராஸா (சாருகேசி) போலிருந்த ஒருவர் அடிக்கடி மேலேயும் கீழேயும் நடந்து கொண்டே இருந்தார். உடல் இளைக்கப் பயிற்சியோ என்னவோ!!

அப்படி இப்படி என்று பட்டிமன்றம் ஆரம்பிக்க 10 மணியாகி விட்டது. நாங்கள் அபுதாபியிலிருந்து வந்தபடியால், பத்து, பத்தரைக்கு நிகழ்ச்சி முடிந்துவிடும், கிளம்பிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தோம்.
நாங்கள் வந்தது பட்டிமன்றத்துக்காகத்தான் என்பதால் நேரமானாலும் போக மனமில்லை. நடுவர் ராஜாவும் இதைப் பலமுறைச் சுட்டிக் காட்டினார். இதற்கிடையில் எதிர்பார்த்தது போலவே, கைக்குழந்தைகள் அழ ஆரம்பிக்க, சிறார்கள் ஓடியாடி விளையாட, கூட்டட்த்தில் சலசலப்பு அதிகமானது. என் வலது இருக்கையில் 3 பெண் குழந்தைகள். அவர்களாவது பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். என்னவரின் இருக்கையின் இடதுபுறம் 3 பையன்கள். குதித்து, அடித்து, சண்டை போட்டு என்று அதகளம்தான். ராஜா குழந்தைகளை அமைதிப் படுத்துமாறு வேண்டியும், யாராலும் முடியவில்லை. பின்னால் 3 சேச்சிகளின் சத்தமான லைவ் கமெண்ட்ஸ் வேறு, அந்த சேலையைப் பாத்தியா, இதைப் பாத்தியான்னு. அங்கங்கே சோர்வில் அழும் பிள்ளைகளைப் பெற்றோர்கள் கோபத்தில் அடிப்பதையும் பார்க்க முடிந்தது.

பட்டிமன்றம் கலகலப்பா இருந்தது. பேசிய 6 அமீரகப் பேச்சாளர்களுமே நன்றாகப் பேசினர். ராஜா சொன்னதுபோல, துபாயில் மேடை வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத நிலையிலும் இவ்வளவு பேச்சுத்திறன் இருப்பது ஆச்சர்யமே. ராஜாவும் ஏமாற்றாமல் கலகலப்பாக நடத்திச் சென்றார் நிகழ்ச்சியை. நடுவர் தீர்ப்பு சொல்ல ஆரம்பிக்கும்போது 11.55 ஆகிவிட்டது. அதற்குமேல் லேட்டாகப் போய் (குழந்தைகளை விட்டுவந்த துபாய்) உறவினர் வீட்டைத் தட்டிக் கொண்டிருப்பது நாகரீகமல்ல என்பதால் கிளம்பி விட்டோம். அதனால், தீர்ப்பு என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா.

பொதுவாக நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் இன்னும் நேரத்தைச் சரியாகக் கணித்து. குறித்த நேரத்தில் ஆரம்பிப்பது, பிந்தினால், அதற்கேற்றவாறு சில நிகழ்ச்சிகளை விரைவுபடுத்துதல் என்று செய்திருந்தால் பலரும் நிகழ்ச்சியின் ஹைலைட்டான பட்டிமன்றத்தைத் தவிர்க்க நேராதிருந்திருக்கும். இம்மாதிரி நிகழ்ச்சிகளின் நடுவில் குழந்தைகளின் நடனங்கள் இல்லாமலிருப்பதே நல்லது என்பது என் கருத்து. எத்தனை பேர் அதை ரசித்துப் பார்த்தார்கள்? கடனே என்றுதான் நிறைய பேர் இருந்தார்கள்.அதுபோல இம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள் குழந்தைகளை அழைத்து வராமல் இருப்பதே நல்லது. குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள உறவினர்கள்/ நண்பர்கள் இல்லையென்றால் போகாமலிருப்பது நல்லது.

மேடையில் பேசிய அமீரகத் தமிழ் நண்பர்கள் சிலர் தமிழ் உச்சரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பங்கு பெற்ற முதல் பெரிய நிகழ்ச்சி என்பதால் ஏற்பட்ட பதற்றமாகவும் இருக்கலாம் ஒருவேளை.

இந்நாள் நல்லதொரு நாளாக இருக்கும் எங்கள் நினைவில்! நன்றி யூ.ஏ.இ. தமிழ்ச்சங்கம்!!

(படங்கள் பின்னர் இணைக்கிறேன்.)

Post Comment

43 comments:

சென்ஷி said...

:)

//ஜீன்ஸ்” படத்தின், “பூவுக்குள் ஒளிந்திருக்கும்” பாடலின் 4,5 வரிகள் பாடினார். இனி அந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் நெப்போலியன் குரல்தான் ஞாபகம் வந்துத் தொலைக்கும்!!//

சேம் ப்ளட்.. நண்பர் ஒருவர் நெப்போலியன் பாடியதை யு-டியுப்பில் ஏற்றி விடப்போவதாக பயமுறுத்தி இருக்கிறார் :(

SUFFIX said...

தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு, இங்கே, ஜித்தாவிலும் அடிக்கடி தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு, நிறை குறைகளை அலசி அழகிய நடையில் எழுதியிருக்கிங்க, வீட்டை விட்டு கிளம்பும்போதே பிளாகர் கண்ணாடியை மாட்டியாச்சு போல!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல தொகுப்பு ஹூசைனம்மா!! நான் 10மணிக்கே கிளம்பி விட்டதால் பட்டிமன்றத்தைப் பார்க்க வில்லை. :)

shabi said...

பகிர்வுக்கு நன்றி... எனக்கும் mail வந்தது அபுதாபிலேர்நத்ு அங்க வர சிரமமா இருக்கும்னு வரல

உங்கள் தோழி கிருத்திகா said...

3 சேச்சிகளின் சத்தமான லைவ் கமெண்ட்ஸ் வேறு, அந்த சேலையைப் பாத்தியா, இதைப் பாத்தியான்னு. அங்கங்கே சோர்வில் அழும் பிள்ளைகளைப் பெற்றோர்கள் கோபத்தில் அடிப்பதையும் பார்க்க முடிந்தது.////////////
நிகழ்ச்சிக்கு போறது ப்ரோக்ராம பாக்குரத்துக்கு மட்டும் இல்ல...இதுக்கும் தான்....ஹா ஹா
நல்ல அனுபவம்ங்க

பீர் | Peer said...

துபாய்க்கு மாற்றலாகி வந்திடலாமான்னு யோசிக்கிறேன். நல்லா பொழுது போகும் போலயே... :)

Prathap Kumar S. said...

//எங்க வீட்டில சன், கலைஞர் மற்றும் இன்ன பிற சேனல்கள் கிடையாது. ராஜ் நியூஸ், மக்கள், தமிழன், மெகா இந்த மாதிரி உருப்படாத(!!) சேனல்கள்தான் உண்டு.//

அப்ப சன்,கலைஞர் சேனல்லாம் உருப்படியான சேனல்னா சொல்றீங்க...? என்ன கொடுமைங்க இது.

//அமீரகப் பதிவர்களின் சுற்றுலாப் படங்கள் பார்த்திருந்ததால், யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தேன். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கதையாக எல்லோருமே அப்படித்தான் தெரிந்தார்கள். கீழை ராஸா (சாருகேசி) போலிருந்த ஒருவர் அடிக்கடி மேலேயும் கீழேயும் நடந்து கொண்டே இருந்தார். உடல் இளைக்கப் பயிற்சியோ என்னவோ!!//

ஹஹஹ ஆனாலும் கீழைராஸாவை நீங்க இப்படி கலாய்க்க கூடாது.
நான் வந்திருப்பேன்...வந்தால் நெப்போலியன் டவுன் ஆகிருப்பார் அதனாலதான் வர்ல :-)

GEETHA ACHAL said...

////எங்க வீட்டில சன், கலைஞர் மற்றும் இன்ன பிற சேனல்கள் கிடையாது. ராஜ் நியூஸ், மக்கள், தமிழன், மெகா இந்த மாதிரி உருப்படாத(!!) சேனல்கள்தான் உண்டு.//

அப்ப சன்,கலைஞர் சேனல்லாம் உருப்படியான சேனல்னா சொல்றீங்க...? என்ன கொடுமைங்க இது.//

நான் சொல்ல நினைத்ததை நாஞ்சில் பிரதாப் சொல்லிவிட்டார்..எப்படி ஹுஸைனம்மா...நல்ல எழுதி இருக்கின்றிங்க..

நாஸியா said...

மக்கள் தொலைக்காட்ச்சியில் நல்ல நிகழ்சிகள் இருக்குமே..

ரொம்ப அழகா எழுதி இருக்கீஙக.. :) நாங்க நேத்து கொஞசம் ஊர சுத்தினோம் :)

S.A. நவாஸுதீன் said...

//ஜீன்ஸ்” படத்தின், “பூவுக்குள் ஒளிந்திருக்கும்” பாடலின் 4,5 வரிகள் பாடினார். இனி அந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் நெப்போலியன் குரல்தான் ஞாபகம் வந்துத் தொலைக்கும்!!//

ஹா ஹா ஹா. செம நக்கல்

நல்லா அருமையா எழுதி இருக்கீங்க

ஹுஸைனம்மா said...

// சென்ஷி Says:
14/11/09 17:35

சேம் ப்ளட்.. நண்பர் ஒருவர் நெப்போலியன் பாடியதை யு-டியுப்பில் ஏற்றி விடப்போவதாக பயமுறுத்தி இருக்கிறார் :(//

நன்றி சென்ஷி, சிரித்துவிட்டு மட்டும் போகாததற்கு!! :-))

ஹுஸைனம்மா said...

//ஷ‌ஃபிக்ஸ்/Suffix Says:
14/11/09 17:50

நிறை குறைகளை அலசி அழகிய நடையில் எழுதியிருக்கிங்க, வீட்டை விட்டு கிளம்பும்போதே பிளாகர் கண்ணாடியை மாட்டியாச்சு போல!!//

ஆமா ஷஃபிக்ஸ், போகும்போதே இதப்பத்தி ஒரு பதிவு போடணுன்னு நிஅனிச்சிட்டுத்தான் போனேன். பாராட்டுக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) Says:
14/11/09 18:24

நல்ல தொகுப்பு ஹூசைனம்மா!! //

நன்றி செந்தில்.

ஹுஸைனம்மா said...

//shabi Says:
14/11/09 18:25

பகிர்வுக்கு நன்றி..//

நன்றிக்கு நன்றி, ஷபி.

ஹுஸைனம்மா said...

//உங்கள் தோழி கிருத்திகா Saய்ச்:
14/11/09 18:27

நிகழ்ச்சிக்கு போறது ப்ரோக்ராம பாக்குரத்துக்கு மட்டும் இல்ல...இதுக்கும் தான்....ஹா ஹா//

ஆமாம் கிருத்திகா, நானும் நல்லா வேடிக்கை பாத்தேன். நன்றி!!

ஹுஸைனம்மா said...

//பீர் | Peer Says:
14/11/09 19:42

துபாய்க்கு மாற்றலாகி வந்திடலாமான்னு யோசிக்கிறேன். நல்லா பொழுது போகும் போலயே... :)//

பீர், பொழுது மட்டுமல்ல, பணமும் போகும்!!

ஹுஸைனம்மா said...

//நாஞ்சில் பிரதாப் Says:
14/11/09 19:48

அப்ப சன்,கலைஞர் சேனல்லாம் உருப்படியான சேனல்னா சொல்றீங்க...? //

இல்லையா பின்ன? மானாட மாதிரி எவ்ளோ நல்ல நிகழ்ச்சியெல்லாம் வருது!!

//நான் வந்திருப்பேன்...வந்தால் நெப்போலியன் டவுன் ஆகிருப்பார் அதனாலதான் வர்ல //

அதெப்படிங்க நாஞ்சில்காரங்க எல்லாருமே இப்படித்தானா? என்னவரும் உங்க ஊர்தான், அதான் கேட்டேன்!!

ஹுஸைனம்மா said...

//Geetha Achal Says:
15/11/09 09:34

நான் சொல்ல நினைத்ததை நாஞ்சில் பிரதாப் சொல்லிவிட்டார்..எப்படி ஹுஸைனம்மா...நல்ல எழுதி இருக்கின்றிங்க..//

இது வஞ்சப்புகழ்ச்சி கீதா!! வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா.

ஹுஸைனம்மா said...

//நாஸியா Says:
15/11/09 11:18


ரொம்ப அழகா எழுதி இருக்கீஙக.. :) நாங்க நேத்து கொஞசம் ஊர சுத்தினோம் :)//

நன்றி நாஸியா!!

ஹுஸைனம்மா said...

//S.A. நவாஸுதீன் Says:
15/11/09 11:20


ஹா ஹா ஹா. செம நக்கல் நல்லா அருமையா எழுதி இருக்கீங்க//

நன்றி நவாஸ்!!

Barari said...

dubaiyil irunthum neril poi parkka iyalavillai.anal thangalin idukai neril parththa paravasaththai erppaduththi vittathu.mika sirappaka irukkirathu thanlin vivarippu.vazthukal sakothari.

Prathap Kumar S. said...

உங்க பேரு ஜலீலா தானே...?
எப்டி புடிச்சேன் பாருங்க...

நாஞ்சில்காரங்க ரொம்ப அறிவாளிங்க...வேணும்னா சார்கிட்ட கேட்டுப்பாருங்க...

ஹுஸைனம்மா said...

//நாஞ்சில் பிரதாப் Says:
15/11/09 16:04

உங்க பேரு ஜலீலா தானே...?
எப்டி புடிச்சேன் பாருங்க... //

நாஞ்சில்காரந்தான்னு நல்லா ப்ரூவ் பண்றீங்க தேவையில்லாத ஆராய்ச்சியெல்லாம் பண்ணி!! அதுவும் தப்புதப்பா...

//நாஞ்சில்காரங்க ரொம்ப அறிவாளிங்க...வேணும்னா சார்கிட்ட கேட்டுப்பாருங்க.//

அந்த அறிவாளித்தனத்தைத்தான் 15 வருஷமா பாத்துகிட்டிருக்கேனே!! :-D

pudugaithendral said...

நல்லாத்தான் எஞ்சாய் சென்சிருக்கீங்க. நெப்போலியன் பாடினதைக் கேட்டு பயந்திடலியே. பஞ்சுமிட்டாய் சீலைக்கட்டி பாட்டுக்கு வேட்டிய தொடை தெரிய ஏத்திக்கட்டிக்கிட்டு அவரு ஆடின ஆட்டத்துக்கு கேமரா காரவுகளே பயந்தாங்களாம். :)

தராசு said...

//பின்னால் 3 சேச்சிகளின் சத்தமான லைவ் கமெண்ட்ஸ் வேறு, அந்த சேலையைப் பாத்தியா, இதைப் பாத்தியான்னு.//

3 பொம்பளைங்க (உலகத்தின் எந்த மூலைல இருக்கறவங்களாயிருந்தாலும் சரி) சேர்ந்தாங்கன்னா வேற என்ன பேசுவாங்கன்னு எதிர்பார்க்கறீங்க....,,,,,

ஹா, ஹா, எதோ நம்மனால முடிஞ்சது.....

சரி, அந்த பெண்ணிய வாதிகள் எல்லாம் எங்கப்பா, ஆரம்பிங்க, ரெடி. ஸ்டார்ட் மீயூஜிக்.....

ஹுஸைனம்மா said...

//தராசு Says:
16/11/09 12:58

3 பொம்பளைங்க (உலகத்தின் எந்த மூலைல இருக்கறவங்களாயிருந்தாலும் சரி) சேர்ந்தாங்கன்னா வேற என்ன பேசுவாங்கன்னு எதிர்பார்க்கறீங்க....,,,,,//

3 ஆம்பளைங்க (உலகத்தின் எந்த மூலைல இருக்கறவங்களாயிருந்தாலும் சரி) சேர்ந்தாங்கன்னா வேற என்ன பேசுவாங்கன்னு எதிர்பார்க்கறீங்க....,,,,, மொபைல்/ கார்/ பைக் மாடல்கள், உலகப் பொருளாதாரம் (வீட்டுப் பொருளாதாரமே நமக்குக் கட்டுப்பட மாட்டேங்குது), மன்மோகன்சிங், ஒபாமா மெட்வடேவ், பெர்லுஸ்கோனி, (இவங்கல்லாம் நம்மளை கலந்துக்காம ஒண்ணும் செய்யமாட்டாங்க பாருங்க..)

அவங்கவங்க வீட்டுல புள்ள என்ன கிளாஸ் படிக்கிறான்னு தெரியாது!!

அடப் போங்க தராசு, இப்படித்தான் நானும் என்னவரும் சண்டை போட்டுகிட்டு இருந்தோம் அவங்க பேச்சால!!

ஹுஸைனம்மா said...

//புதுகைத் தென்றல் Says:
16/11/09 11:41

நெப்போலியன் பாடினதைக் கேட்டு பயந்திடலியே. //

அக்கா, எனக்கென்னவோ “பூவுக்குள் ஒளிந்திருக்கும்” பாட்டும் “கிழக்குச் சீமையில” பாட்டோட தொடர்ச்சி மாதிரிதான் தோணுச்சி!!

எம்.எம்.அப்துல்லா said...

//அவர் ஏன் அதைப் பாடினார்... //

நான் என்னையத்தான் ஏதோ திட்டுறீங்களோன்னு நினைச்சு வந்தேன். நல்லவேளை.. :))

ஹுஸைனம்மா said...

//எம்.எம்.அப்துல்லா Says:
16/11/09 13:34

நான் என்னையத்தான் ஏதோ திட்டுறீங்களோன்னு நினைச்சு வந்தேன். நல்லவேளை.. :))//

அப்ப ஒரு பயம் இருக்கத்தான் செய்யுது இல்ல!! நீங்க புரொடியூஸருங்கிறதுனால யாரும் திட்டமாட்டாங்க, கவலைப் படாதீங்க!!

எம்.எம்.அப்துல்லா said...

//நீங்க புரொடியூஸருங்கிறதுனால யாரும் திட்டமாட்டாங்க, கவலைப் படாதீங்க //

என்னாது நான் புரொடியூஸரா?? எந்த ஊர்ல? i am always just a track singer only :)

ஹுஸைனம்மா said...

எம்.எம்.அப்துல்லா Says:
16/11/09 14:08

என்னாது நான் புரொடியூஸரா?? எந்த ஊர்ல? //

நீங்க சில பதிவர்களின் குறும்படத்துக்கு ஃபைனான்ஸ் பண்ணினதா படித்த நினைவு. இது தவறான தகவல்னா, நான் சொன்ன நேரம் இனிமேல் பெரிய படங்களுக்கு ஃபைனான்ஸியர் ஆகிடுவீங்க பாருங்க!!

pudugaithendral said...

நீங்க சில பதிவர்களின் குறும்படத்துக்கு ஃபைனான்ஸ் பண்ணினதா படித்த நினைவு. இது தவறான தகவல்னா, நான் சொன்ன நேரம் இனிமேல் பெரிய படங்களுக்கு ஃபைனான்ஸியர் ஆகிடுவீங்க பாருங்க!!//

எங்கனயோ இருக்கற ஹுசைனம்மாவுக்குத் தெரியுது அப்துல்லா தம்பிப்ரொடிய்சரானா விசயம், இங்கன கிட்டத்துல இருக்குற எனக்குத் தெரியாம போச்சே.

:))) என்ன தம்பி அப்துல்லா நலமா???

எம்.எம்.அப்துல்லா said...

//நீங்க சில பதிவர்களின் குறும்படத்துக்கு ஃபைனான்ஸ் பண்ணினதா படித்த நினைவு. //

அது நண்பர்கள் கிண்டலுக்காக எழுதியது :)


//இது தவறான தகவல்னா, நான் சொன்ன நேரம் இனிமேல் பெரிய படங்களுக்கு ஃபைனான்ஸியர் ஆகிடுவீங்க பாருங்க!!

//

வேணாம் லாத்தா. பாடும் ஹராமில் இருந்தே என்று விடுதலை எனத் தெரியவில்லை :)

எம்.எம்.அப்துல்லா said...

// என்ன தம்பி அப்துல்லா நலமா??? //

மிக்க நலம்க்கா. போன் செய்தேன், ஆஷிஷ் எடுத்து நீங்க தூங்குறதா சொன்னான்.

Anonymous said...

mhoom.. :)

அன்புடன் மலிக்கா said...

ஹுசைனம்மா. வரமுடியலையேன்னு வருத்தப்பட்டேன் அப்பாடா இங்குவந்து பார்த்தாச்சி தமிழ்சங்க நிகழ்ச்சிகளை..

ஹுஸைனம்மா said...

//அன்புடன் மலிக்கா Says:
18/11/09 07:30

ஹுசைனம்மா. வரமுடியலையேன்னு வருத்தப்பட்டேன் அப்பாடா இங்குவந்து பார்த்தாச்சி தமிழ்சங்க நிகழ்ச்சிகளை..//

வாங்க மலிக்கா, நன்றி!!

ஹுஸைனம்மா said...

//Anonymous Says:
17/11/09 23:09

mhoom.. :)//

வாங்க அனானி, நன்றி!!

கீழை ராஸா said...

//கீழை ராஸா (சாருகேசி) போலிருந்த ஒருவர் அடிக்கடி மேலேயும் கீழேயும் நடந்து கொண்டே இருந்தார். உடல் இளைக்கப் பயிற்சியோ என்னவோ!!//

ஏனக்கா இந்த கொலைவெறி...?

அருமையா தொகுத்திருக்கீங்க....அண்ணாச்சி கேட்ட அமீரகத்தில் புயலென புறப்பட்டிருக்கும் மற்றுமொரு பெண் பதிவர் நீங்கள் தானா?

ஹுஸைனம்மா said...

கீழை ராஸா Says:
21/11/09 10:40

ஏனக்கா இந்த கொலைவெறி...?//

அப்போ அது நெசம்மாவே நீங்கதானா?

//அருமையா தொகுத்திருக்கீங்க....அண்ணாச்சி கேட்ட அமீரகத்தில் புயலென புறப்பட்டிருக்கும் மற்றுமொரு பெண் பதிவர் நீங்கள் தானா?//

நன்றி ராஸா. அதே, நானேதான், பதிவர் சந்திப்புல சரியா பதில் சொல்லி பிரைஸ் வாங்கினியளா?

cheena (சீனா) said...

அன்பின் ஹூஸைனம்மா

நல்ல நினைவாற்றல் - எழுத்துத் திறமை - மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லும் குணம் - நல்ல நகைச்சுவை - அசத்தறீங்க போங்க

நல்வாழ்த்துகள்

நிஜாம் கான் said...

ஹூசைனம்மா! இப்ப தமிழ் பாக்ஸ் ஆபிஸ் சேனல் அதே அலைவரிசையில் கிடைக்கிறது.

Sat : Insat 2E
Freq : 4042
Symbal: 7420
Pol: V 7/8

நிஜாம் கான் said...

நெப்போலியன் பாவம்