Pages

“புலம்பல்கள்” (இது ஆதியின் பதிவல்ல!!)






இது எதற்கும் எதிர்பதிவல்ல!! எனது “புலம்பல்கள்” மட்டுமே!! நிறைய இருக்கு, நீளம் கருதி, பத்தோட நிறுத்தியிருக்கேன்.

1. வீட்டுல நான் என்ன கரடியா கத்துனாலும், நீ பாட்டுக்கு கத்திகிட்டேயிரு, எனக்குத் தோணுனதைத்தான் நான் செய்வேன்னு செய்யற நீங்க, உங்க அம்மா, அண்ணன் அல்லது அக்கா முன்னாடி மட்டும், அவங்க எதாவது செய்யச்சொல்லும்போது “என்னம்மா, அப்படியே செஞ்சுருவோமா, சரிதானே”ன்னு அவங்க முன்னாடியே என்கிட்ட கேட்டு ஏன் மானத்த வாங்கறீங்க?

2. அது எப்படி தினமும் காலையில கரெக்டா நீங்க ஷூ போட்டதுக்கு அப்புறம்தான் மொபைல்/ கார்ச்சாவி எடுக்கலைன்னு உங்களுக்கு ஞாபகம் வருது..

3. மொபைலையோ, லேப்டாப்பையோ வெளியே வைக்காதீங்கன்னு எவ்வளவு சொன்னாலும் கேக்காம, டேபிள்ல போட்டுட்டு அத நம்ம பிள்ளைங்க தொட்டுப் பாத்தாலே, பங்காளிச் சண்டை போடறீங்க...இதுவே உங்க நண்பர்கள்/ உங்க உறவினர் பிள்ளைங்களோ எடுத்து அது உயிரே போற அளவு நோண்டினாலும், சிரிச்சுகிட்டே இருக்கறதோட, “நல்ல இண்டெலிஜண்டா இருக்கானே உங்க பிள்ளை”ன்னு பாராட்டி சர்டிஃபிகேட் வேற கொடுக்கிறீங்க?

4. உங்க ஆஃபிஸ்ல நீங்க இல்லாம ஒரு வேலையும் நடக்காது; உங்க ஆஃபீஸே உங்கள நம்பித்தான் இருக்குங்கிற மாதிரி அப்படி ஒரு பில்ட்-அப் கொடுப்பீங்க. ஆனா, ஒரு மாசம் லீவுல ஊருக்குப் போகும்போது ஒருதரம் கூட ஆஃபிஸ் மேட்டராவோ, அட நீங்க நல்லாருக்கீங்களான்னு கேட்டு கூட ஒருத்தரும் ஒரு மெயில் அனுப்பவோ, ஃபோனோ பண்றதில்லையே ஏங்க?

5. ஒண்ணாங்கிளாஸ் படிக்கிற நம்ம சின்னவனுக்கு ஒரு சிம்பிளான 1+1 கூட்டல் கணக்கு சொல்லிக் கொடுக்கச் சொன்னா, அதுக்கு அல்ஜீப்ரா, கால்குலஸ், பிதோகிரஸ் தியரத்தையெல்லாம் இழுத்து, கடைசியில அவனுக்குத் தெரிஞ்ச ஒண்ணு, ரெண்டு, மூணைக் கூட மறக்க வச்சிர்றீங்களே, எப்படிங்க அது?

6. நம்ம வீட்டு ஏரியாவில பேங்க் இருக்கறதால பணம் கொடுத்து கட்டச் சொன்ன என் சொந்தக்காரரை என்னவெல்லாம் சொன்னீங்க என்கிட்ட! ஆனா, உங்க நண்பர் அவரோடபக்கத்து பில்டிங்க்ல இருக்க E.B.யில கரண்ட் பில் கட்ட உங்களக் கூப்பிட்டாகூட இதோ வந்துட்டேன்டான்னு ஓடிப் போறீங்களே எப்படிங்க?

7. சமைக்கும்போது கிச்சன்ல வந்து நின்னு, அதப் போடு, இத ஊத்துன்னு ஐடியா கொடுத்து, கொஞ்சம் சுமாராவாவது வந்துருக்கக்கூடியதை வாயிலயே வைக்கமுடியாம ஆக்குறீங்களே ஏங்க?

8. ஏதாவது ஒரு விஷயத்தைப் பத்தி எங்கப்பாகிட்ட பேசி, கஷ்டப்பட்டு என் வழிக்கு கொண்டு வந்துகிட்டு இருக்கும்போது, மேட்டர் என்னன்னே தெரியாம,
நடுவுல பூந்து உங்கப்பா சொல்றதுதான் சரின்னு சொல்லி, ”மாப்பிள்ளையே சொல்லிட்டாரும்மா”ன்னு எனக்கெதிரா எங்கப்பாவையே திருப்பி விட்டுர்றீங்களே எப்படிங்க அது?

9. இன்னிக்கு ஸ்டாக் கிளியரன்ஸ், அப்பாடா, சமைக்க வேண்டாம்னு சந்தோஷமா சொன்னதுக்கப்புறமும், அன்னைக்குன்னு நேரங்காலம் தெரியாம குடும்பத்தோட வந்து நிக்கிற உங்க ஃப்ரண்டை சாப்பிடாம போகக்கூடாதுன்னு பிடிச்சு வைப்பீங்களே, அது ஏங்க?

10. இவ்வளவும் நீங்க தெரிஞ்சே செய்றீங்கன்னு தெரிஞ்சும் உங்க மேல என்னை பைத்தியமா இருக்க வச்சுருக்கீங்களே, அதுதான் எப்படின்னு கொஞ்சம்கூட புரியவேயில்லைங்க!!

இது தொடர் பதிவு இல்லதான்; இருந்தாலும், தோழிகள் அவங்கவங்க ரங்ஸ் மேலே பாடவேண்டிய பாட்டுக்கள் இருந்துதுன்னா தொடர்ந்து பாடுங்க!!

பெருநாளை முன்னிட்டு கடை 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. பின்னூட்டம் போட்டு வைங்க, வந்து கண்டுக்கிறேன். வீட்டுலயும் ரொம்ப பிஸியா இருக்கும். 3 நாள்ல என்னை மறந்துறாதீங்க.(மறந்தா என்ன, சோனியா காந்தியை ஏன் பிடிக்கும்னு ஒரு பதிவு போட்டா எல்லாரும் ஓடி வந்துற மாட்டீங்க?)

எல்லாருக்கும் பெருநாள்/ விடுமுறை வாழ்த்துக்கள்!!(பெருநாள் வெள்ளிக்கிழமை வந்ததால, ரெண்டு நாள் லீவு போச்சு!!)

Post Comment

42 comments:

நாஸியா said...

கலக்குறீங்க லாத்தா... சூபெரா இருக்கு!!!

\\சமைக்கும்போது கிச்சன்ல வந்து நின்னு, அதப் போடு, இத ஊத்துன்னு ஐடியா கொடுத்து, கொஞ்சம் சுமாராவாவது வந்துருக்கக்கூடியதை வாயிலயே வைக்கமுடியாம ஆக்குறீங்களே ஏங்க\\

இங்கயும் அதே கதை தான்..

இதோ நானும் வாரேன்

Anonymous said...

புலம்பல் பிடிச்சிருந்தது...ரசிக்கும்படியாகவும் இருந்தது...

S.A. நவாஸுதீன் said...

ஆகா!

இவ்வளவு சொன்னது பத்தாதுன்னு குரூப் வேற சேக்குறீங்களா. சொல்லவேண்டியதை எல்லாரும் சொல்லுங்க. அதுக்கு கடைசியில வந்து பதில் சொல்றோம்.

அ.மு.செய்யது$ said...

7,9 செம ஹைலைட்...!!!!!!

ஹா ஹா...!!!!! போதாது..இன்னும் கொளுத்திப் போடுங்க..!!!

நர்சிம் said...

;)

அது ஒரு கனாக் காலம் said...

சூப்பர்.... இப்ப தான் தெரிகிறது ... ஒவ்வொரு காசுக்கும் ரெண்டு பக்கம் !!!!! ஹி ! ஹி ! ஹி!

குசும்பன் said...

//கஷ்டப்பட்டு என் வழிக்கு கொண்டு வந்துகிட்டு இருக்கும்போது, மேட்டர் என்னன்னே தெரியாம, நடுவுல பூந்து உங்கப்பா சொல்றதுதான் சரின்னு சொல்லி, ”மாப்பிள்ளையே சொல்லிட்டாரும்மா”//

அப்பா: ஒருவருசம் எல்லாம் உன் கூட இருக்கமுடியாதும்மா...

பெண்: இல்லப்பா அவரு நொம்ப நல்லவரு, தம்பி,அம்மா,தங்கச்சி எல்லாரையும் அழைச்சுக்கிட்டு இந்த சிங்கிள் பெட்ரூம் வீட்டுக்கு வந்துடுங்க, அவரு ஹாலில் படுத்துப்பாரு

அப்பா: அதெல்லாம் சரி வராதும்மா....

கணவன்: (இடையில் புகுந்து) அப்பா சொல்வதுதான் சரி!

(இது தப்பா:)

குசும்பன் said...

//உங்க மேல என்னை பைத்தியமா இருக்க வச்சுருக்கீங்களே,//

அது மேனிபேக்சரிங் செட்டிங்ஸ், புதுசா எல்லாம் ஒன்னும் செய்யமுடியாது:))

ஹுஸைனம்மா said...

//குசும்பன் Says:
25/11/09 13:39

//உங்க மேல என்னை பைத்தியமா இருக்க வச்சுருக்கீங்களே,//

அது மேனிபேக்சரிங் செட்டிங்ஸ், புதுசா எல்லாம் ஒன்னும் செய்யமுடியாது:))//

பாம்பின் கால் பாம்பறியும்!!

pudugaithendral said...

:))) நல்லாத்தான் புலம்பியிருக்கீங்க.

பெருநாள் வாழ்த்துக்கள்.

லெமூரியன்... said...

\\ வீட்டுல நான் என்ன கரடியா கத்துனாலும், நீ பாட்டுக்கு கத்திகிட்டேயிரு, எனக்குத் தோணுனதைத்தான் நான் செய்வேன்னு செய்யற நீங்க, உங்க அம்மா, அண்ணன் அல்லது அக்கா முன்னாடி மட்டும், அவங்க எதாவது செய்யச்சொல்லும்போது “என்னம்மா, அப்படியே செஞ்சுருவோமா, சரிதானே”ன்னு அவங்க முன்னாடியே என்கிட்ட கேட்டு ஏன் மானத்த வாங்கறீங்க?....//

அங்கதான் நாங்க(ஆம்பளைங்கதான்) உங்களுக்கு எவ்வளோ மரியாதை குடுக்கறோம்னு உங்களுக்கே தோன வெச்சி எங்க மேல ஒரு அன்பு ஊற வைப்போம்..! :-)

\\அது எப்படி தினமும் காலையில கரெக்டா நீங்க ஷூ போட்டதுக்கு அப்புறம்தான் மொபைல்/ கார்ச்சாவி எடுக்கலைன்னு உங்களுக்கு ஞாபகம் வருது..//

இங்கதான் தப்பா புரிஞ்சிக்கிறீங்க.... எங்கள்ள பாதி நீங்கன்னு சொல்லாம சொல்றோம்..! :-) :-)

லெமூரியன்... said...

\\மொபைலையோ, லேப்டாப்பையோ வெளியே வைக்காதீங்கன்னு எவ்வளவு சொன்னாலும் கேக்காம, டேபிள்ல போட்டுட்டு அத நம்ம பிள்ளைங்க தொட்டுப் பாத்தாலே, பங்காளிச் சண்டை போடறீங்க...இதுவே உங்க நண்பர்கள்/ உங்க உறவினர் பிள்ளைங்களோ எடுத்து அது உயிரே போற அளவு நோண்டினாலும், சிரிச்சுகிட்டே இருக்கறதோட, “நல்ல இண்டெலிஜண்டா இருக்கானே உங்க பிள்ளை”ன்னு பாராட்டி சர்டிஃபிகேட் வேற கொடுக்கிறீங்க?...//

வெளிய சிரிச்சி பேசினாலும்....மனசுக்குள்ள நாங்க அலறினது உங்களுக்குமா புரியல...! :-( ( தினமும் உங்ககிட்ட சிரிச்சி தானே பேசறோம்..)


\\உங்க ஆஃபிஸ்ல நீங்க இல்லாம ஒரு வேலையும் நடக்காது; உங்க ஆஃபீஸே உங்கள நம்பித்தான் இருக்குங்கிற மாதிரி அப்படி ஒரு பில்ட்-அப் கொடுப்பீங்க. ஆனா, ஒரு மாசம் லீவுல ஊருக்குப் போகும்போது ஒருதரம் கூட ஆஃபிஸ் மேட்டராவோ, அட நீங்க நல்லாருக்கீங்களான்னு கேட்டு கூட ஒருத்தரும் ஒரு மெயில் அனுப்பவோ, ஃபோனோ பண்றதில்லையே ஏங்க?...//
நாங்க கடமையை மட்டுமே செய்துட்டு பலனை எதிர் பாக்காத சிங்கங்கள்....( எவ்ளோ செஞ்சிருப்போம் உங்களுக்கெல்லாம்.....என்னைக்காவது சொல்லிருக்கோமா..) :-) :-)

லெமூரியன்... said...

\\ஒண்ணாங்கிளாஸ் படிக்கிற நம்ம சின்னவனுக்கு ஒரு சிம்பிளான 1+1 கூட்டல் கணக்கு சொல்லிக் கொடுக்கச் சொன்னா, அதுக்கு அல்ஜீப்ரா, கால்குலஸ், பிதோகிரஸ் தியரத்தையெல்லாம் இழுத்து, கடைசியில அவனுக்குத் தெரிஞ்ச ஒண்ணு, ரெண்டு, மூணைக் கூட மறக்க வச்சிர்றீங்களே, எப்படிங்க அது?...//

:-) :-) சுருக்கமா சொல்லனும்னா....நாங்கல்லாம் அறிவாளின்னு உங்கட்ட ப்ரூப் பண்ண இத விட வேற சந்தர்ப்பம் கிடையாதே...(பாவம் அந்த நண்டு சின்டுக...அடுத்த தடவை எங்கள கண்டாலே பயபுள்ளைக பேயடிச்ச மாதிரி ஓடி போயிடறாங்க :-( )

\\நம்ம வீட்டு ஏரியாவில பேங்க் இருக்கறதால பணம் கொடுத்து கட்டச் சொன்ன என் சொந்தக்காரரை என்னவெல்லாம் சொன்னீங்க என்கிட்ட! ஆனா, உங்க நண்பர் அவரோடபக்கத்து பில்டிங்க்ல இருக்க E.B.யில கரண்ட் பில் கட்ட உங்களக் கூப்பிட்டாகூட இதோ வந்துட்டேன்டான்னு ஓடிப் போறீங்களே எப்படிங்க?.........//

என்ன பண்றது அவங்க வீட்டம்மா கைப்பக்குவம் அப்டி....அவங்க சமையலை சாப்டுகிட்டே இருக்கலாம் போல இருக்குமே :-)

லெமூரியன்... said...

குறிப்பு: இது வரைக்கும் பொதுவான விஷயங்கள தொற்றுக்கீங்க அதனால ஒட்டுமொத்த சிங்ககூட்டம் சார்பா( எங்கள நாங்களே புகழ்ந்துக்கலேன்னா அப்புறம் வேற யாரு.........அய்யோ கண்ணீரா வருதே....) நான் உங்களுக்கு பதில் போட்ருக்கேன்...!
இதுக்கு மேல உள்ள கருத்துகளுக்கு பின்னூட்டம் இட சிறையில் மாட்டின(கல்யானத்ல) சிங்கங்கள் காதித்ருக்கும் .....அதனாலா சிங்கங்களே மானத்த காப்பாத்துங்க....

சின்ன புள்ளைங்க ஏதோ சொன்ன சொல்லிட்டு போறாங்கனு நம்ம மானத்த காத்துல பறக்க விட்ராதீங்க....! :-) :-)

இராகவன் நைஜிரியா said...

இந்த ஆட்டத்துக்கு நான் வரலை...

எனக்கு ஒழுங்கா சாப்பாடு கிடைக்கணும்...

எஸ்கேப்.........

எம்.எம்.அப்துல்லா said...

ஈத் முபாரக்கா :)

எம்.எம்.அப்துல்லா said...

இராகவன் நைஜிரியா Says:
25/11/09 14:00
இந்த ஆட்டத்துக்கு நான் வரலை...

எனக்கு ஒழுங்கா சாப்பாடு கிடைக்கணும்...

எஸ்கேப்.........


//

இது பொழைக்கத் தெரிஞ்ச புள்ள :)

செ.சரவணக்குமார் said...

ஹீஸைனம்மா..

நீங்க, விக்னேஸ்வரி எல்லாரும் ஒரு குரூப்பா கொலவெறியோட கிளம்பியிருக்குற மாதிரி தெரியுது..

செ.சரவணக்குமார் said...

பெருநாள் வாழ்த்துக்கள் ஹீஸைனம்மா.

Unknown said...

10 புலம்பலே இப்படியா??? :D

நல்லாத்தான் இருக்கு.

<<<
ஒண்ணாங்கிளாஸ் படிக்கிற நம்ம சின்னவனுக்கு ஒரு சிம்பிளான 1+1 கூட்டல் கணக்கு சொல்லிக் கொடுக்கச் சொன்னா, அதுக்கு அல்ஜீப்ரா, கால்குலஸ், பிதோகிரஸ் தியரத்தையெல்லாம் இழுத்து, கடைசியில அவனுக்குத் தெரிஞ்ச ஒண்ணு, ரெண்டு, மூணைக் கூட மறக்க வச்சிர்றீங்களே, எப்படிங்க அது?
>>>
எனக்கு ரெம்ப புடுச்சது இதுதான்... ஹிஹி

அதுக்குள்ளே ஈத் கொண்டாட போயாச்சா? ஈத் முபாரக்

பதி said...

:-))

Prathap Kumar S. said...

புருஷன், பொன்சாதி சண்டை ... நமக்கெதுக்கு வம்பு...எஸ்கேப்....

ஷாகுல் said...

//வீட்டுல நான் என்ன கரடியா கத்துனாலும், //

எதுக்கு நீங்க கரடியா கத்துரீங்க. இனி அப்படி செய்யாதீங்க. K

// அது எப்படி தினமும் காலையில கரெக்டா நீங்க ஷூ போட்டதுக்கு அப்புறம்தான் மொபைல்/ கார்ச்சாவி எடுக்கலைன்னு உங்களுக்கு ஞாபகம் வருது..//

நீங்க ஞாபக படுத்த வேண்டியத ஷீ பன்னுது.

//நல்ல இண்டெலிஜண்டா இருக்கானே உங்க பிள்ளை”ன்னு பாராட்டி சர்டிஃபிகேட் வேற கொடுக்கிறீங்க?//

பின்ன சைத்தான் மாதிரி வருதுன்னு உண்மையா சொல்ல முடியும். புரிஞிக்கல எப்படிக்கா?

ஷாகுல் said...

//அட நீங்க நல்லாருக்கீங்களான்னு கேட்டு கூட ஒருத்தரும் ஒரு மெயில் அனுப்பவோ, ஃபோனோ பண்றதில்லையே ஏங்க?//

ஏண்? ஏண்?

//ஒண்ணாங்கிளாஸ் படிக்கிற நம்ம சின்னவனுக்கு ஒரு சிம்பிளான 1+1 கூட்டல் கணக்கு சொல்லிக் கொடுக்கச் சொன்னா, அதுக்கு அல்ஜீப்ரா, கால்குலஸ், பிதோகிரஸ் தியரத்தையெல்லாம் இழுத்து,//

நாங்கல்லாம் அட்வான்ஸா இருக்கோம்.

// கடைசியில அவனுக்குத் தெரிஞ்ச ஒண்ணு, ரெண்டு, மூணைக் கூட மறக்க வச்சிர்றீங்களே, எப்படிங்க அது?//

No Comments

//சமைக்கும்போது கிச்சன்ல வந்து நின்னு, அதப் போடு, இத ஊத்துன்னு ஐடியா கொடுத்து, கொஞ்சம் சுமாராவாவது வந்துருக்கக்கூடியதை வாயிலயே வைக்கமுடியாம ஆக்குறீங்களே ஏங்க?//

எவ்வளவு நாள் தான் நீங்களே மச்சான டெஸ்ட் பன்னுவீங்க?


//மேட்டர் என்னன்னே தெரியாம, நடுவுல பூந்து உங்கப்பா சொல்றதுதான் சரின்னு சொல்லி,//

ஆண்ட்களின் மனது ஆண்களுக்குத்தான் தெரியும்.அது உங்களுக்கு புரியாது.

// இன்னிக்கு ஸ்டாக் கிளியரன்ஸ், //உங்க ஃப்ரண்டை சாப்பிடாம போகக்கூடாதுன்னு பிடிச்சு வைப்பீங்களே, அது ஏங்க?//

ஸ்டாக் எப்படி கிளியர் பன்னுறது? அதுதான் Wதாவது ஒரு அப்பாவிய கூட்டிட்டு வந்து மாட்டி விடுறது. நல்ல கேக்குறாங்கயா டீடெய்லு? ஹையோ ஹையோ.

//இது தொடர் பதிவு இல்லதான்; இருந்தாலும், தோழிகள் அவங்கவங்க ரங்ஸ் மேலே பாடவேண்டிய பாட்டுக்கள் இருந்துதுன்னா தொடர்ந்து பாடுங்க!!//

//இங்கயும் அதே கதை தான்..

இதோ நானும் வாரேன்//

ஆஹா ஒரு குருப்பாதாயா இருக்காங்க!

//எல்லாருக்கும் பெருநாள்/ விடுமுறை வாழ்த்துக்கள்!!//

உங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்

//பெருநாள் வெள்ளிக்கிழமை வந்ததால, ரெண்டு நாள் லீவு போச்சு!!)//


ஆஹா வடை போச்சே!

shabi said...

ஈத் முபரரக்

கிளியனூர் இஸ்மத் said...

ரொம்ப நல்லா தாளிச்சிருக்கீங்க....காரம் கொஞ்சம் அதிகம் தான்...
எங்க ஊட்டு அம்மனிகிட்ட உங்க பிளாக்க படிக்க சொல்லலாம்னு இருந்தேன்....
எனக்கு காரம் ஒத்துக்காது....!

பினாத்தல் சுரேஷ் said...

இந்தப் புலம்பல்கள் மேம்போக்காக படிக்கும்போது குபீரென சிரிப்பை வரவழைத்தாலும் சிந்தித்துப் பார்க்கையில் தினமும் சந்திக்கும் புலம்பல்களென அடையாளம் தெரிந்துவிடுகிறது.

வரிக்கு வரி பதில் சொல்லமுடியும் என்றாலும் சொல்லாமல் இருந்தே பழக்கமாகிவிட்டது. வாழும் கலையை வாழ்ந்தே பயின்றவர்கள் நாங்கள்.

அவதூறுகளை அடுக்குவது அம்மணிகளுக்கும் புதிதல்ல, அடங்கியதாய் காட்டுதல் ஆடவர்க்கும் புதிதல்ல.

யானைக்கு வரும் காலம் பூனைக்கு வந்திடலாம், அதை பூனையே யானைக்கு அன்பளிப்பாய் தந்தும் விடலாம் (வழக்கம்போல!)

பீர் | Peer said...

http://www.saravanakumaran.com/2009/11/blog-post_25.html

இந்த லிங்க்ல இருக்கிற கொலம்பஸ் மேட்டர படிங்க..

Anonymous said...

ஹுசைனம்மா, பதிவும் பின்னூட்டங்களும் ரசிச்சேன்.

அபி அப்பா said...

அட ஆண்டவா இப்படி எல்லாமா புலம்புவாங்க! ரைட்டு இந்த பதிவை மறைச்சிட வேண்டியது தான்! நல்லா கிளம்புறாய்ங்கய்யா:-))

ஸாதிகா said...

தங்கச்சி..தங்கச்சி..இதை படித்த உங்கள் ரங்க்ஸின் ரீஆக்சன் எப்படி என்று ஒரு பதிவைப்போட்டு விடுங்கள்.(பத்தாவதா ஒரு பதிவைப்போட்டு ஐஸ் வைத்து விட்டீர்கள்)

ஹுஸைனம்மா said...

//பீர் | Peer Says:
http://www.saravanakumaran.com/2009/11/blog-post_25.html
இந்த லிங்க்ல இருக்கிற கொலம்பஸ் மேட்டர படிங்க..//


பீர், அவர் பதிவில் நான் அளித்த பின்னூட்டம் இதோ:

”கொலம்பஸ் மட்டும் கல்யாணம் பண்ணிட்டு பொண்டாட்டி பேச்சைக் கேட்டு இருந்தா, அமெரிக்காவைக் கண்டுபிடிச்சிருக்க முடியாது. இவ்வளவு பிரச்னைகளும் வந்திருக்காது.

அவர் மனைவி பேச்சைக் கேட்காத்தினால்தான் நாம் அமெரிக்காவைப் பாத்து பயந்துகிட்டிருக்கோம்!!”

பீர் | Peer said...

இப்டி வச்சுக்கலாமா?

'அவர் மனைவி பேச்சை கேட்டிருந்தால், நம்மை பார்த்து அவர்கள் பயந்துகொண்டிருப்பார்கள்.' :)

Menaga Sathia said...

ஈத் முபாரக்!!

Thamira said...

என்னதான் நக்கல் கேள்விகள் கேட்டாலும் பத்தாவது பாயிண்டில் உங்கள் காதலை வெளிப்படுத்திவிட்டீர்கள்.

சுவாரசியமான பதிவு. உங்களுக்கு என் பெருநாள் நல்வாழ்த்துகள்.!

காண்க :
பரிசலின் பதிவு - http://www.parisalkaaran.com/2009/02/blog-post_19.html
அதற்கான என் எதிர்பதிவு - http://www.aathi-thamira.com/2009/02/10.html

SUFFIX said...

என்னப்பா இது இதுக்கு ஒரு எதிர் பதிவு போட இதுவரை யாரும் முன் வரலையா, எல்லோரும் இப்படித்தான்யா இருக்காங்க!!

ப்ரியமுடன் வசந்த் said...

//. சமைக்கும்போது கிச்சன்ல வந்து நின்னு, அதப் போடு, இத ஊத்துன்னு ஐடியா கொடுத்து, கொஞ்சம் சுமாராவாவது வந்துருக்கக்கூடியதை வாயிலயே வைக்கமுடியாம ஆக்குறீங்களே ஏங்க?//

இல்லாட்டினாலும்...ஹெ ஹெ ஹெ..

சூப்பரப்பு...

ஹுஸைனம்மா said...

//நாஸியா Says:

இங்கயும் அதே கதை தான்..//

வீட்டுக்கு வீடு வாசப்படி...

//தமிழரசி Says:
25/11/09 11:22

புலம்பல் பிடிச்சிருந்தது...ரசிக்கும்படியாகவும் இருந்தது...//

நன்றி தமிழரசி!!

//S.A. நவாஸுதீன் Says:
சொல்லவேண்டியதை எல்லாரும் சொல்லுங்க. அதுக்கு கடைசியில வந்து பதில் சொல்றோம். //

சொல்லமுடியும்னு நினைக்கிறீங்க?


//அ.மு.செய்யது$ Says:
போதாது..இன்னும் கொளுத்திப் போடுங்க..!!! //

சின்னப்புள்ள, அறியாமப் பேசுறீங்கன்னு மத்தவங்க விட்டுட்டாச் சரி‌!!

//நர்சிம் Says:
;) //

நன்றி நர்சிம்!! :‍_))


//அது ஒரு கனாக் காலம் Says:
இப்ப தான் தெரிகிறது ... ஒவ்வொரு காசுக்கும் ரெண்டு பக்கம் !!!!!//

ஏங்க, காசை இவ்வளவு நாளா கண்ணில காட்டுனதே இல்லையா வீட்டில?


//குசும்பன் Says:
(இது தப்பா:) //

உங்க கோட், சூட் படத்தப் பாத்துட்டு என்னவர் அடிச்ச கமெண்டக் கேட்டா இப்படி சப்போர்ட் பண்ண மாட்டீங்க!!

(அந்தப் படத்த மாட்டி வச்சா யோகம் வருமாமே, என் வீட்டு வாசல்ல மாட்டலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன். வர்ற யோகராணி படத்தைப் பாத்து பயந்துடக்கூடாதே...)


//புதுகைத் தென்றல் Says:
:))) நல்லாத்தான் புலம்பியிருக்கீங்க. //

நன்றி அக்கா.


//லெமூரியன்... Says:
இதுக்கு மேல உள்ள கருத்துகளுக்கு பின்னூட்டம் இட சிறையில் மாட்டின(கல்யானத்ல) சிங்கங்கள் காதித்ருக்கும் .....அதனாலா சிங்கங்களே மானத்த காப்பாத்துங்க.... //

காப்பாத்த யாரையும் காணோமே?


//இராகவன் நைஜிரியா Says:
இந்த ஆட்டத்துக்கு நான் வரலை...
எனக்கு ஒழுங்கா சாப்பாடு கிடைக்கணும்...//

நீங்கதானே வீட்டுல சமையலாம், அதுவும் உரல்,அம்மி யூஸ் பண்ணி!! அப்புறம் என்ன?

//எம்.எம்.அப்துல்லா Says:
ஈத் முபாரக்கா :)//

பதிவப் பத்தி ஒண்ணும் சொல்லாமப் போனா எப்படி? "பொழைக்கத் தெரிஞ்ச புள்ள"??

//செ.சரவணக்குமார் Says:
கொலவெறியோட கிளம்பியிருக்குற மாதிரி தெரியுது.. //

சாது மிரண்டால்...

ஹுஸைனம்மா said...

//..:: Mãstän ::.. :
10 புலம்பலே இப்படியா??? :D
நல்லாத்தான் இருக்கு. //

நன்றி மஸ்தான்!!

//பதி Says:
:-)) //

நன்றி பதி.

//நாஞ்சில் பிரதாப் Says:
நமக்கெதுக்கு வம்பு...எஸ்கேப்.... //

அதான் பேச்சிலர்ஸ் புலம்பல் எழுதினீங்களோ?


//ஷாகுல் Says:
ஆண்ட்களின் மனது ஆண்களுக்குத்தான் தெரியும்.அது உங்களுக்கு புரியாது. //

அடேயப்பா, என்ன ஒரு கண்டுபிடிப்பு!!

//நீங்க ஞாபக படுத்த வேண்டியத ஷீ பன்னுது.//

அப்ப, ஷூவே போதும், நான் எதுக்குங்கிறீங்களா?

//shabi Says:
ஈத் முபரரக் //

நன்றி ஷபி.


//கிளியனூர் இஸ்மத் Says:
ரொம்ப நல்லா தாளிச்சிருக்கீங்க... //

வருகைக்கு நன்றி இஸ்மத்தண்ணே. அங்க தாளிப்பு எப்படி?

//பினாத்தல் சுரேஷ் Says:
யானைக்கு வரும் காலம் பூனைக்கு வந்திடலாம், அதை பூனையே யானைக்கு அன்பளிப்பாய் தந்தும் விடலாம் (வழக்கம்போல!) //

இதைப் பூனையின் சாமர்த்தியம் எனலாமா அல்லது யானையின் சோம்பேறித்தனம் என்லாமா?

//Mrs.Menagasathia Says:
pls see this லின்க்//

மேனகா, விருதுக்கு நன்றி. சீக்கிரம் எடுத்துக் கொள்கிறேன்.

ஹுஸைனம்மா said...

/சின்ன அம்மிணி Says:
ஹுசைனம்மா, பதிவும் பின்னூட்டங்களும் ரசிச்சேன். //

நன்றி சின்னம்மணி!!

//பீர் | Peer Says:
இந்த லிங்க்ல இருக்கிற கொலம்பஸ் மேட்டர படிங்க..

'அவர் மனைவி பேச்சை கேட்டிருந்தால், நம்மை பார்த்து அவர்கள் பயந்துகொண்டிருப்பார்கள்.' :)//

நிச்சயமா பீர்!!

//அபி அப்பா Says:
அட ஆண்டவா இப்படி எல்லாமா புலம்புவாங்க! :‍))//

உங்க வீட்டுல புலம்பல்கள் வேற மாதிரி இருக்குமோ?

//ஸாதிகா Says:
இதை படித்த உங்கள் ரங்க்ஸின் ரீஆக்சன் எப்படி //

அதுக்குத்தானே பத்தாவாது பாயிண்ட்ல பஞ்ச் வெச்சேன்!! நல்லா ரசிச்சுச் சிரிச்சார்!! (வேற வழி?)

//ஆதிமூலகிருஷ்ணன் Says:
சுவாரசியமான பதிவு. உங்களுக்கு என் பெருநாள் நல்வாழ்த்துகள்.!

காண்க : பரிசலின் பதிவு, அதற்கான என் எதிர்பதிவு//

முதல் வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ஆதி!! பதிவுகள் பார்த்தேன்.

//SUFFIX Says:
என்னப்பா இது இதுக்கு ஒரு எதிர் பதிவு போட இதுவரை யாரும் முன் வரலையா//

நீங்க எழுதிப் பாக்கறது??

நன்றி நிஜமா நல்லவன்.

//பிரியமுடன்...வசந்த் Says:
இல்லாட்டினாலும்...ஹெ ஹெ ஹெ..//

அதத்தான் ஒத்துகிட்டேனே, சுமாராத்தான் வரும்னு!! நாங்க உங்கள மாதிரி பில்ட்‍ அப்பெல்லாம் விடுறது இல்ல!!

cheena (சீனா) said...

ஆகா இது எங்க வூட்டம்மா சொல்ர மாதிரியே இருக்கே - எப்பூடி

நல்வாழ்த்துகள் ஹூசைனம்மா

Shahul Hameed said...

3. Shaakir !!!
6. Naan illa
9. Yenkala thaana sollureenka
10. En vettukarikitayum sollunga

Shahul Hammed