Pages

அம்மா பொண்ணும், அப்பா பையனும்







 பெண் குழந்தைகளுக்கு அப்பா மீது ரொம்பப் பாசம் இருக்கும்; ஆண் பிள்ளைகள் அம்மா மீது பாசம் அதிகம் கொள்வார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எனக்கும் சிறுவயதில் என் வாப்பா மீதுதான் பாசம் அதிகம் என்பதால் நானும் அதை உண்மை என்றே நம்பினேன். வளர வளர ஒரு விஷயம் புரிந்தது; அம்மா எப்பவும் கூடவே இருக்காங்க; வாப்பா சவூதில இருக்கதுனால, ஊருக்கு வர்ற சமயம் ரொம்பவே அன்பா இருப்பாங்க. அதனால் கண்டிப்பும், அறிவுரைகளும் அதிகம் இருக்காது. அம்மா, எல்லா அம்மாக்கள் மாதிரியே (இப்ப என்னை மாதிரியும் கூட) கண்டிப்பா இருக்கதுனால அம்மாமீதான என் பாசம் கொஞ்சம் கம்மியாச்சுங்கிறதும் புரிஞ்சுது.

ஆனாலும் பெண்குழந்தைகள்னு பாராம, எங்களையெல்லாம் படிக்க வச்சதுனால வாப்பாமீதான பாசம் கொஞ்சம் அதிகமாத்தான் ஆச்சு. ஆனாலும் ஏதாவது வாக்குவாதம் வந்தால் நாங்க நாலுபேரும் அம்மா பக்கம்தான், நியாயம் எந்தப் பக்கமானாலும்!!



ஒரு தோழிக்கு ஒரு பையனும், ஒரு பொண்ணும் இருக்காங்க. அவங்க சொன்னாங்க, சண்டை வர்ற நேரம், பையன் கிச்சன்ல இவங்க பக்கத்தில இருந்துகிட்டு, “நீ பேசாதம்மா. ஏன் பதிலுக்குப் பதில் பேசிகிட்டே இருக்கே”ன்னு சொல்வானாம். பொண்ணு, ஹால்ல அப்பாட்ட, “சும்மா சும்மா சத்தம்போட்டுகிட்டே இருக்காதீங்க”ன்னு சொல்வாளாம்.


இப்ப எனக்கு ரெண்டும் பசங்கன்னதும், எல்லாரும், பையன்களுக்கு அம்மா மேலத்தான் பாசம் அதிகம்; கொடுத்து வச்சவன்னெல்லாம் சொன்னாங்க. அதே மாதிரி நல்லா பாசமா  நேசமாத்தான் இருக்காங்க. ஆனா எனக்கு சப்போர்ட்டெல்லாம்  பண்றதே இல்லை. சப்போர்ட் பண்ணாட்டியும் சும்மா இருக்கிறதுதானே. அதில்லாம எனக்குத்தான் அட்வைஸ் பண்றாங்க, நீ அமைதியா இரும்மான்னு.

இன்னொரு தெரிஞ்ச அக்காவுக்கு மூணுமே பையன்! இதப் பத்தி பேசும்போது அவங்களும் புலம்புனாங்க, மூணு பேரும் சேந்துகிட்டு “நீ பேசறதுதான் சரியில்ல”ன்னு இவங்ககிட்டதான் கடுப்படிப்பாங்களாம். ஆனா, அம்மாவுக்கு இங்லீஷ், கம்ப்யூட்டர், இ-மெயில் எல்லாம் சொல்லிக் கொடுத்ததும் அவங்க பசங்கதான்!!

என் தங்கை மகளைக் கவனித்ததிலும் ஒரு விஷயம் தெரிந்தது. அவளுக்கும், அம்மாவுக்கும் ஏழாம் பொருத்தம்னாலும், அப்பாவைத் தன் கண்ட்ரோலில்தான் வைத்திருக்கிறாள்.

ஏன் நானே இப்ப உம்மா, வாப்பாட்ட ஃபோன் பேசும்போது அம்மாட்ட நலங்கள் விசாரிச்சுட்டு, வாப்பாட்டதானே அட்வைஸ் பண்றேன்!! ஃபோனை வைக்கிறதுக்கு முன்னாடி தவறாம சொல்ற வாக்கியம், “அம்மாட்ட சண்டை போடாதீங்க. அம்மா கோவத்துல எதும் சொன்னாலும் நீங்க பதில் பேசாதீங்க”ங்கிறதுதான். ஒருதரம் இப்படி சொல்லும்போது பொறுக்கமுடியாம என் வாப்பா சொன்னாங்க, “இல்லம்மா, நானே தனியாவேற இருக்கேன் இங்க. நான் சாப்பிட மட்டும்தான் வாயத் திறப்பேன்மா.  அதனால நீ கவலைப் படாதே.”  அதுலருந்து ரொம்பச் சொல்றது இல்ல.

என்னமோ எனக்கு இப்பல்லாம் சின்ன வயசில அடிக்கடி எங்கம்மா புலம்பினதுதான் ஞாபகம் வருது. “நாலு பொண்ணான்னு எல்லாரும் கவலப் பட்டாங்க. ஆனா நான், நாலும் பொண்ணு,  என்னை அடுக்களையிலயே விடாம எல்லா வேலையையும் அவளுகளே செஞ்சுடுவாங்கன்னு சந்தோஷப் பட்டேனே. ஒருத்தியக் கூட இந்தப் பக்கம் காணோமே” ன்னு சொல்வாங்க. அதனாலத்தான் என்னையும் புலம்ப வச்சிட்டானோ என்னவோ?

என்ன புரியுதுன்னா, பெண்குழந்தைகள் அப்பாமேலே ரொம்பப் பாசம்னாலும், அம்மாவுக்குத்தான் ஆதரவா இருப்பாங்க. அதே மாதிரி, ஆண்பிள்ளைங்க, அம்மாகிட்ட பாசம்னாலும், சண்டைன்னு வர்றப்ப கட்சி மாறிடுவாங்க!!

Picture source: www.donnabellaas.com

Post Comment

43 comments:

கண்ணகி said...

அனுபவம் பேசுதுல்ல...

கிளியனூர் இஸ்மத் said...

நீங்க சொல்வது சரிதான்....
எங்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள். அம்மாவைவிட என்மேலேதான் பாசம் அதிகம்னு நானெச்சுப்பேன்
ஆனா சின்ன சண்டை வந்தா உடனே அம்மாப் பக்கம் தான் பேசுவாங்க...
சின்ன பொண்ணையாவது என் பக்கம் பேசவைக்க ரொம்ப ஐஸ் எல்லாம் வச்சி பேசினாலும்... ம்கூம்...அம்மாவை விட்டுக் கொடுக்க மாட்டாங்க....
ஊட்டுக்கு ஊடு வாசப்படிதாங்க.

ஜீவன்பென்னி said...

நாங்க அண்ணன் தம்பி மூணு பேரு. எங்க ஆதரவு இரண்டு பேருக்குமே இருக்கும். நான் மட்டும் சில சமயம் இரண்டு சைடுலயும் கோல் போடுவேன். ஆனா நான் அம்மாபிள்ளை.

எம்.எம்.அப்துல்லா said...

இங்கயும் இஸ்மத் அண்ணன் கதைதான் :)

Rithu`s Dad said...

நல்ல அலசல் பதிவு ஹுஸைனம்மா.. ஒரு விஷயம் மட்டும் உண்மை.. இந்த கால பசங்க அம்மா பக்கமோ அப்பா பக்கமோ எப்பவும் இல்லாமல் ...வேண்டியதை சாதிக்க யார் பக்கமும் மாறிப்பாங்க..! ஆனால் இதிலும் பெண் குழந்தைகள் ரெம்ப கெட்டி...!!

S.A. நவாஸுதீன் said...

இது நீங்க பசங்களோட கண்ணோட்டத்துல சொல்லியிருக்கீங்க. ஒரு வகைல சரிதான்.

ஆனா அப்பாக்களுக்கு பெண் பிள்ளைகள் தான் பிடிக்கும், அம்மாக்களுக்கு ஆண் பிள்ளைகள் மேல்தான் பாசம் அதிகம் என்று ஒரு குற்றச்சாட்டும் பொதுவா இருக்கிறதே, அதைப் பத்தியும் சொல்லியிருக்கலாம்.

எங்க வீட்ல கூட உங்க மகளைப்பத்திதான் அதிகம் விசாரிக்கிறீங்க, மகனைப்பத்தி சரியா விசாரிக்கிறதில்லைன்னு அடிக்கடி குறை சொல்றாங்க. நிஜமாவே அப்படி இல்லேன்னாலும் அவங்களுக்கு ஏன் அப்படி தோனுதுன்னுதான் எனக்கு புரியலை. (அவங்க இப்படி சொல்லி சொல்லியே எனக்கே டௌட் வந்திடுச்சு)

Unknown said...

அனுபவ குறிப்பு அருமை அக்கா.

கண்ணா.. said...

ஆனா நான் சண்டை வந்தா அப்பாக்குத்தான் அட்வைஸ் பண்ணுவேன்...

அம்மா பக்கம் தவறிருந்தாலும் அப்பாவிடம்தான் விடுப்பான்னு சொல்லுவேன்..

நமக்கு யாரிடம் அதிக உரிமை இருக்கிறதோ அவரிடம்தானே உரிமையுடன் சொல்ல முடியும் :)

Prathap Kumar S. said...

அம்மாக்கும் அப்பாவுக்கும் வயசனாதுக்கப்புறம் சில மகன்களும், மகள்களும்
ரெண்டு பேருக்குமே சப்போர்ட் பணறதில்லையே அவங்களை பத்தி ஏன் சொல்லாம வுட்டீங்க...

SUFFIX said...

நல்ல ரிப்போர்ட் ஹுசைனம்மா, இதெல்லாம் ப்ளேன் பண்ணியா வரும், அது அது அப்பொபோ அங்கேயும் இங்கேயும் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் மாறி மாறி வரும், வரணும். ஏன்னா இங்கே 2:2!!:)

நட்புடன் ஜமால் said...

ஒத்த புள்ளைய வச்சிகிட்டு என்னன்னு சொல்ல

-------------------

இருப்பினும் சகோதரியின் ஆண் குழந்தைகளை அதிகம் கொஞ்சியது நான் தான்.

☀நான் ஆதவன்☀ said...

//சண்டைன்னு வர்றப்ப கட்சி மாறிடுவாங்க!!
//

என்னா வில்லத்தனம்! :)

ஸாதிகா said...

அனுபவத்தை அழகா புட்டு புட்டு வைத்து இருக்கிறீர்கள் ஹுசைனம்மா.என மகன்கள் மட்டுமல்ல, என்னை சுற்றி இருப்பவர்களின் பிள்ளைகளும் இப்படித்தான்.

அன்புத்தோழன் said...

ஹ்ம்ம்.... எங்க வீட்ல நா தாங்க கடகுட்டி... so ம்மா வாப்பா ரெண்டு பேரு கிட்டயும் போனஸ் செல்லம் தான்... வாப்பா சவுதில இருந்ததால நா படுத்னது பூரா உம்மாவ தான்.... வெளிலேந்து வந்து நேரா உம்மாவ தேடி பாப்பேன் ரூம்ல படுத்துட்டு இருப்பாங்க... நா பாட்டுக்கு systemo இல்ல TV போட்டுட்டு உக்காந்துருவேன்... அங்கேந்து வந்து ஏன்டா மனுஷி ஒருத்தி தல வலின்னு படுத்துட்டு இருக்கேனே வந்து என்னம்மா தலவளியானு கேக்காம ஒன் பாட்டுக்கு வேலைய பாத்துட்டு இருக்கேனு கேப்பாங்க.... நா சொல்வேன் அதான் நீயே சொல்லிட்டியமா தலைவலின்னு, அதையே மறுபடி நா என்னத்த உனக்கு தல வலியாமானு கேக்ரதுனு சொல்வேன்னு எங்க ம்மா இப்பவும் அடிகடி சொல்லி காட்டுவாங்க... அதுக்கப்றம் இன்னொன்னு வேற சொல்வாங்க இப்போவே இப்டி இருக்கே நாளைக்கு கல்யாணம் ஆகி அப்டி இப்டின்னு ஒரே பொலம்பல்ஸ் of India தான்.... ஆனா பசங்க்லளுக்கு வாப்பா தான் வில்லன் மாத்ரி இருப்பாங்க நெறைய வீட்ல.... எனக்கு ஏன் வாப்பா தான் hero... தோள்மேல கை போட்டு நடக்ற அளவுக்குனா பாத்துகோங்களேன்.... கண்ணு வெச்ராதீங்கப்பா... மாஷா அல்லா சொல்லுங்க எல்லாரும்.... ஹி ஹி.....

அன்புத்தோழன் said...

ஹுசைனம்மா!!! டைட்டில் "அம்மா பையனும் ,அப்பா பொண்ணுன்னு" வெக்க நெனச்சு மாதி போட்டீன்கிலோ...?

Menaga Sathia said...

எனக்கும் கணவருக்கும் சண்டை வந்தால் என் பொண்ணு அவங்க பாஷையில் என் கிட்ட வந்து கத்துவாங்க.என் முகத்தையும்,கையையும் பூனை பிரண்டுறமாதிரி பிரட்டி எடுத்துடும் .என் கணவருக்கு ஒரே சந்தோஷமா இருக்கும்.

எம்பொண்ணுக்கு பிடிக்கல நீ பண்ற அட்டகாசம்னு சொல்லி சிரிப்பார்.இத்தனைக்கும் என்பொண்ணுக்கு 16 மாதம்தான் ஆகுது.என்னத்த சொல்றது....

ஷாகுல் said...

:)

Thenammai Lakshmanan said...

நல்ல அலசல் ஹுசனம்மா நானும் அப்பா பக்கம் இருந்தாலும் முக்கியமான நேரத்துல அம்மாவைத்தான் சப்போர்ட் பண்ணுவேன்

தாரணி பிரியா said...

ம் சரிதான் நானெல்லாம் எப்பவும் அம்மாவுக்கு தான் சப்போர்ட் செய்வேன்.

Sakthi said...

சரிதான்.

Thamiz Priyan said...

எங்க வீட்ல மகன், மகள் ரெண்டு பேரும் இருக்காங்க... இனி தான் இதெல்லாம் தெரிய வரும்ன்னு நினைக்கேன்.. ;-))

ஜெய்லானி said...

ஹுஸைனம்மா...உங்கள் பதிவில் குற்றம் உள்ளது. அது சொல் குற்றமா? பொருள் குற்றமா? கேளுங்க..
1. பிள்ளைகளின் முன் பெற்றோர் சண்டை போடுவது யார் குற்றம்...
2. பெற்ற பிள்ளைகளை (இரண்டோ,, மூண்றோ ) ஒரே மாதிரி வளர்காதது யார் குற்றம்...
3.இரண்டாவது பிள்ளை பிறந்ததும் முதல் பிள்ளையிடம் நெருக்கத்தை குறைத்துக் கொள்வது யார் குற்றம்...
4.இப்படி; பெற்ற பிள்ளையை பற்றி குறை சொல்வது யார் குற்றம்...
...நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே....

(( நாஞ்சில் பிரதாப் கவுஜ படித்ததால் வந்த வினை ))

Anonymous said...

அம்மா பையனா இருந்தா பின்னாடி அவன் மனைவிக்குதான் கஷ்டம் :)

நாஸியா said...

ஹிஹி.. உண்மைதான்.. என்னதான் அடிச்சாலும் பேசினாலும் நான் எங்கும்மாவோடத்தான் ரொம்ப நெருக்கம்.. எனக்கு கல்யாணம் பண்ணி அனுப்பி வெச்ச பிறகு எங்கும்மா எப்பவும் போல வேலைய பார்க்க, எங்க வாப்பா என்னை தேடி ரொம்பவே ஒரு மாதிரி ஆகிட்டாங்க (வீடு கொஞ்சம் அமைதி ஆயிட்டுல்ல). :((( ஐயோ வீட்டு நினைவு வந்துட்டே :(((

பாத்திமா ஜொஹ்ரா said...

இங்க மட்டும் என்ன வாழுதாம்,ஹி ஹி

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா நீங்கள் சொல்வது
100 % உண்மை. நான் அப்பா செல்லம் தான் ஆனால் ஒரு காலத்தில் , இது வரை அவர் திட்டியதில்லை. ஆனால் சின்ன வயதில் இருந்தே கிச்சனில் கூட ஹெல்ப் பண்ணுவேன். குழந்தைகள் நிறைய என்பதால் அம்மாவுக்கு ரொம்ப எரிச்சல் கோபம் வரும் ஆனா என்ன ஆனாலும் வித விதமா வாய்க்கு ருசியா ஆக்கி போடுவதில் அவர்களை மிஞ்ச யாராலும் முடியாது.



ஆனால் இப்ப போன் செய்தால் முதலில் ரொம்ப விசாரிப்பது அம்மாவை தான்,நீங்க சொல்வது போல் தான் என் டாடி கிட்டேன் மம்மிக்கிட்ட எதுவும் சண்டை போடாதீர்கள் அவர்களுக்கு முடியல அதான் கோபம் வருது, என் என்பேன் , இல்லை நான் ஒன்றும் சொல்லல,,என்பார்கள்.

அன்பு தோழன் , ஸாதிகா அக்கா சொல்வது எல்லாமே உண்மை தான் ஆண் பிள்ளைகள் அம்மா மேலே ரொம்ப பாசமா இருந்தாலும் சப்போட் செய்வது அப்பாவிற்கு தான்.


ஆனால் பிள்ளை சப்போட் பண்ணல, அன்பு தோழன் சொன்ன மாதிரி தலைவலி ந்ன் கூடா தெரியாது தான் ,

காலம் போக போக அம்மா மேல் தான் பாசம் அதிகமாகும், பிள்ளைகள் பின்னொரு நாளில் இதை, நினைத்து வருந்துவதுண்டு.

Chitra said...

என்னமோ எனக்கு இப்பல்லாம் சின்ன வயசில அடிக்கடி எங்கம்மா புலம்பினதுதான் ஞாபகம் வருது. “நாலு பொண்ணான்னு எல்லாரும் கவலப் பட்டாங்க. ஆனா நான், நாலும் பொண்ணு, என்னை அடுக்களையிலயே விடாம எல்லா வேலையையும் அவளுகளே செஞ்சுடுவாங்கன்னு சந்தோஷப் பட்டேனே. ஒருத்தியக் கூட இந்தப் பக்கம் காணோமே” ன்னு சொல்வாங்க.

.....ரொம்ப சிரிச்சேன். நல்லா எழுதி இருக்கீங்க.
மம்மி செல்லமா? டாடி செல்லமா? நேரத்துக்கு தகுந்தபடி, சூழ்நிலைக்கு தகுந்தபடி............
ரெண்டு பேர்ல ஒருத்தர் செல்லம் கொடுத்தா போதும் என்று இருக்கும்.

Vidhya Chandrasekaran said...

சேம் பிளட்.

அப்பா பக்கத்துல இருந்தாலும் சரி வேற நாட்டுல இருந்தாலும் சரி கேர்ள்ச் ஆர் ஆல்வேஸ் டாடிஸ்:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

எங்க அம்மா, அப்பாவுக்கு நாங்க ரெண்டு பேருமே பெண்கள். அக்காவுக்கு அப்பா பாசம் ஜாஸ்தி, விட்டுக்கொடுக்க மாட்டாங்க.
எனக்கு எங்கம்மா மேல தான் பாசம். ஆனா, அக்காவும் எனக்கு அம்மா மாதிரி இருந்ததால ரொம்ப சண்டையேதும் வரலை.

ஆனா என் பொண்ணு அப்பா பாசம் ஜாஸ்தி ;) இப்பவே.

சீமான்கனி said...

அனுபவம்...ம்ம்ம்ம்ம்..
நானும் ஒருநாள் எங்க அத்தா கிட்ட கேட்டேன் அதுக்கு அவரு சொன்னாரு நீங்க ரெண்டு பெரும் ரெண்டு கண்ணுனு....ஆமாவா....

செ.சரவணக்குமார் said...

எல்லோருடைய‌ வீட்டிலும் இதே கதைதான் ஹுஸைனம்மா. நல்ல பகிர்வு.

Abu Khadijah said...

நீங்கள் உங்களுடைய கணோட்டத்தில் சொல்லி இருக்கீங்க , என் மனம் தாயுக்கு ஒரு பாசம், தந்தைக்கு ஒரு பாசம் என்று ஒரு நாள்கூட பிரித்து பார்த்ததில்லை.

ஹுஸைனம்மா said...

கண்ணகி - நன்றி. ம், அனுபவந்தான்.

இஸ்மத்தண்ணே - சந்தோஷம், பொண்ணுங்க அம்மாவுக்கு சபோர்ட் பண்றதுல. வருகைக்கு நன்றி.

பென்னி - அப்பவே அப்படித்தானா?

ஹுஸைனம்மா said...

அப்துல்லா - எங்க கொஞ்ச நாளா ஆளக் காணோம்? மறுபடியும் டூரா?

ரித்து அப்பா - அவ்ங்களுக்கு காரியம் ஆகணும்னாலும் பசங்க அம்மாகிட்டயும், பொண்ணுங்க அப்பாகிட்டயும்தான் ரெகமண்டேஷனுக்கு வர்றாங்க.

நவாஸ் - எனக்கு அந்த வித்தியாசம் தெரிஞ்சுக்க கொடுத்து வைக்கலை. ரெண்டுமே பையந்தான்!!

ஃபாயிஸா - வாங்க, நன்றி.

ஹுஸைனம்மா said...

கண்ணா - பெரியவங்களா ஆனதுக்கபுறம் பசங்க அப்பாகிட்ட நெருக்கமாகிடுவீங்க போல!!

பிரதாப் - அவங்களுக்கெல்லாம் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. சிரிப்பு மேட்டர்ல சீரியஸ் பண்ணிகிட்டு..

ஷஃபி - நான் சொன்னது சரியா இல்லையா? அத மட்டும் சொல்லுங்க; குழப்பாதீங்க வழக்கம்போல. நவாஸோட சந்தேகத்துக்கும் விடை சொல்லுங்க.

ஜமால் - உங்க பிள்ளைங்கன்னு வரும்போதுதான் வித்தியாசமே தெரியும்.

ஹுஸைனம்மா said...

ஆதவன் - நீங்க ஒருத்தர்தான் கரெக்டா நோட் பண்ணிருக்கீங்க அதை. பாம்பின் கால்..?

ஸாதிகாக்கா - கரெக்டா சொல்லிட்டேனா? சந்தோஷம், நன்றி.

அன்புத் தோழன் - என்னைப்போல வளவளதானா நீங்களும்? :-) வாப்பாவே தோழனா கிடச்சதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்.
தலைப்பெல்லாம் வேணுன்னேத்தான் தப்பாப் போட்டிருக்கேன்!!

மேனகா - வளர்ந்து அப்பாவை ஒருவழி பண்ணிடுவாங்க பாருங்க!!

ஹுஸைனம்மா said...

ஷாஹுல் - :-D

தேனம்மையக்கா - நன்றி கருத்துக்கு.

தாரணி - நன்றி கருத்துக்கு.

சக்திமனம் - இந்த “சரிதான்”க்கு என்ன அர்த்தம்? சரிங்கிறீங்களா? இல்ல “சரியாப்போச்சு”ங்கிறீங்களா? :-)

தமிழ்ப்பிரியன் - வளர்ந்ததும் தெரியும்.

ஜெய்லானி - அல்லோ, ஏன் இப்படி? அந்தக் கவுஜையெல்லாம் ஏன் படிக்கிறீங்க? ஓதிப்பாக்க சொல்லுங்க. அப்பத்தான் தெளியும்!! :-)

ஹுஸைனம்மா said...

சின்னம்மணிக்கா - அக்கா, அதுசரிதான். என்னவரும் சடக்னு சிலசம்யம் அம்மாப்பக்கம் சாஞ்சிருவாரு. நானும் கிண்டல் பண்ணுவேன், அப்பாமாதிரியே நீங்களும் இருங்கடான்னு!!

நாஸியா - நன்றி கருத்துக்கு. வீடு அமைதியாச்சேன்னு சந்தோஷப்பட்டிருப்பாங்களே உங்கம்மா? ;-)

ஃபாத்திமா - அப்ப சொல்லிருக்கது சரிதானே?

ஜலீலாக்கா - நிறைய விஷயங்கள் நமக்கு ஒத்துப்போவுதுல்ல?

சித்ரா - நன்றி கருத்துக்கு.

ஹுஸைனம்மா said...

வித்யா - 0+ தானா நீங்களும்? சேம் பிளட்ன்னீங்களே, அதான் கேட்டேன். ;-)

அமித்தம்மா - நீங்க கடைக்குட்டியில்லியா, அதான் அம்மா செல்லம் ஆயிட்டீங்க போல!!

சீமான்கனி - அப்பாம்மாஅப்படித்தான் சொல்வாங்க.

சரவணக்குமார் - நன்றி கருத்துக்கு.

அதிரை எக்ஸ்பிரஸ் - ஏங்க ரொம்ப சீரியஸா எடுத்துக்குறீங்க?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.. ம்ம்..

எம்.எம்.அப்துல்லா said...

அப்துல்லா - எங்க கொஞ்ச நாளா ஆளக் காணோம்? மறுபடியும் டூரா?

//

ஆமாம் :(

சாந்தி மாரியப்பன் said...

அம்மா பிள்ளை, அப்பா பிள்ளைன்னெல்லாம் ஒன்னும் கிடையாது. அந்தந்த நேரத்துக்கு,யார் பக்கம் சாஞ்சா காரியம் ஆகுமோ,அதில் இக்கால பிள்ளைகள் கெட்டிக்காரர்கள் :-))))

enrenrum16 said...

அப்ப நீங்க அப்பா பொண்ணு தானே.அம்மாவுக்கு சப்போர்ட் என்பதெல்லாம் அவர் ஒரு பெண் என்ற காரணம் தானே.

நானும் அம்மா பொண்ணாதான் இருந்தேன். இப்ப பிள்ள குட்டியானதுக்கப்புறம் இரண்டு பேருக்கும் சப்போர்ட். அதாவது இப்ப அப்பாவை விட்டு கொடுக்க மனசு வரமாட்டேங்குது.