டீனேஜ்ங்கிறது
13 லருந்து 19 வயசுவரைதானே? அதாவது எட்டாங்கிளாஸ்லருந்து காலேஜ்
ஃபர்ஸ்ட் இயர் வரைக்கும். இப்பத்தான் அந்த வயசெல்லாம் ரொம்ப உற்சாகமான
வயசு, சிறகடிக்கும் வயசு, பட்டாம்பூச்சி வயசு, ரொம்ப கேர்ஃபுல்லா ஹேண்டில்
பண்ணனும், (அளவோட) சுதந்திரமா விடணும், அவங்க கருத்துக்களையும் கேட்கணும்,
ஃபிரண்ட்லியாப் பழகணும் அப்படி இப்படின்னு சொல்றாங்க. நான் அந்த வயசுல
இருந்தப்போல்லாம் அது ஒரு டெரர் வயசாத்தான் இருந்துது, பொண்ணப்
பெத்தவங்களுக்கு!! கிராமத்துல வளர்ந்ததுனால, உறவினர்கள் தயவால
எங்கம்மாவுக்கும் அந்த டெரர் அதிகமாத்தான் இருந்துது . வாப்பாவின் ஆதரவால்
தொடர்ந்து படித்தாலும் சிலபல எழுதப்படாத சட்டங்களும் கடைபிடித்தாக வேண்டிய
கட்டாயம்.
உள்ளூர்ல சில பள்ளிகள் இருந்தாலும், ஆங்கில
வழிப் படிப்புக்காக பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிகளில்தான் படித்தது.
அப்போ எங்க தெருவில கார்ப்போரேஷன் குழாய் கிடையாது. அதனால, காலையில பக்கத்துத் தெருக்கள்ல போய் ஒரு ஏழெட்டு குடம் தண்ணி பிடிச்சு வச்சிட்டு,
தெருக்கடைசியில ஓடுற வாய்க்கால்ல குளிச்சு, துணி துவைச்சிட்டு, வந்து
சாப்பிட்டுட்டு, சாப்பாடு எடுத்துட்டு ஸ்கூலுக்குப் போகணும். எதில? மாட்டு
வண்டியில!! சிரிக்காதீங்க!! பஸ்ல போறேனேன்னு லேசா கேட்டுப் பாத்ததுக்கே,
”இதுல போய் படிச்சுக் கிழிச்சாப் போதும்”னு வந்த பதில்ல அதுபத்திப்
பேசுறதே கிடையாது.
ஏழாங்கிளாஸ் வரை அதில்தான். அதிர்ஷடவசமாக, எட்டாம் வகுப்பில், தந்தையின் நண்பர் ஒருவர் ஒரு வேன் (மாதிரி ஒண்ணு) வாங்கி, ஸ்கூல் டிரிப் அடிக்கப் போவதாகச் சொல்ல, மாட்டு வண்டியிலிருந்து வேனுக்குப் பிரமோஷன் கிடைத்தது. ஆனால் போன பிறகுதான் தெரிந்தது, அதுக்கு மாட்டு வண்டியே எவ்வளவோ பரவாயில்லைன்னு. பிறகு வாடகை கட்டுப் படியாகாமல் அவரே நிறுத்திவிட, அடுத்து ஆட்டோ பயணம் ஆரம்பித்தது. அது சுவாரசியமாகவே இருந்தது. ஊரெல்லாம் சுற்றி, ஒவ்வொருத்தர் வீட்டிலும் சென்று பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு, கதை பேசிக் கோண்டே போனதும் சுவாரசியம்தான் என்றாலும், ஜனநெருக்கடி அதிகமானது கடுப்பாக இருக்கும். இறங்கும்போது கை, காலை உருவித்தான் எடுத்து வரவேண்டியிருக்கும்.
காலேஜ் வரை இந்த ஆட்டோ பயணம்தான். இடையிடையே சில காரணங்களால், பஸ் பயணம் வாய்க்கும். பஸ்ஸுக்குக் காத்திருத்தலும், கூட்டத்தில் நசுங்குவதும், வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டிற்கு 15 நிமிடம் நடக்க வேண்டும் என்பதும் அலுப்பைத் தந்தன. ஆனாலும் அரிதாகவே வாய்த்ததால், பஸ் பயணம் சுவையாகவே இருந்தது.
இதுக்கிடையில எங்க தெருவுக்கும் முனிசிபல் தண்ணிர் விநியோகம் ஆரம்பிச்சதுல
தண்ணி எடுக்குற வேலையும் மிச்சமாச்சு. வீட்டிலயே துணி துவைக்கற அளவு
தண்ணியும் வந்தது. நேரம் அதிகம் கிடைத்தது. எண்பதுகளின் நடுவில் சென்னைத் தொலைக்காட்சி, கொடைக்கானல் ரிலே மூலம் தென்மாவட்டங்களுக்கும் ஒளிபரப்பு சேவையைத் தொடங்க, அந்த அதிகப்படி நேரம் அதில் செலவழிந்தது.
படிச்சது கிறிஸ்தவப் பள்ளிகள்ங்கிறதால பைபிள் கதைகளும், துதிப் பாடல்களும் மனப்பாடமாயின. இடையில் இரண்டு வருடம் ஒரு இந்துப் பள்ளியில் படித்ததால் (ஓரளவு) மஹாபாரதமும் கேட்கக் கிடைத்தது. டி.வி.யில் பின்னாளில் மஹாபாரதம் ஒளிபரப்பப்பட்டபோது பார்ப்பவர்களுக்கு நான் முன்கூட்டியே கதையைச் சொல்லி சஸ்பென்சை உடைத்துத் திட்டு வாங்கினேன்!!
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, கணக்கு டீச்சர், என்னையும், நல்லா படிக்கும் சில தோழிகளையும், நீங்கல்லாம் எஞ்சினியரிங் போகணும்னா இந்த மார்க்கெல்லாம் காணாது; உங்களுக்குள்ள கோட்டாவில கிடைக்க இந்த மார்க்கெல்லாம் பத்தாது என்று திட்ட, என்னவென்றே புரியாமல் தோழிகளிடம் விசாரித்ததில் FC, BC, MBC, SC எல்லாம் விளக்கினார்கள்.
வேறு ஒன்றும் சுவாரசியமாய் நடக்கவில்லை (நீங்களெல்லாம் எதிர்பார்ப்பதுபோல). எனக்கு வாய்த்த தோழிகளும், ஒரு பூவைப் பார்த்தால் கூட petals, sepal, anther, stamen என்று அதன் அனாட்டமியும், பாட்டனியும் பேசுபவர்களாக அமைந்ததில் நானும் ரொம்பவே நல்ல பிள்ளையாக இருந்துவிட்டேன்!!
இந்த பதிவு என் சிறுவயசு நினைவுகளை ரொம்பவே ஞாபகப்படுத்திவிட்டது. நன்றி அம்பிகா!!
|
Tweet | |||
62 comments:
//நான் முன்கூட்டியே கதையைச் சொல்லி சஸ்பென்சை உடைத்துத் திட்டு வாங்கினேன்!!//
நானும் இது மாதிரி பண்ணி திட்டு வாங்கியிருக்கேன்.
அருமை ஹூசைனம்மா ,
பள்ளிக்கால நினைவுகளை அலசியிருக்கீங்க ... அற்புதமான நினைவுகள் மறக்கவே முடியாதே !!
//நான் முன்கூட்டியே கதையைச் சொல்லி சஸ்பென்சை உடைத்துத் திட்டு வாங்கினேன்!!//
:)
நல்லது..
ஆனால் போன பிறகுதான் தெரிந்தது, அதுக்கு மாட்டு வண்டியே எவ்வளவோ பரவாயில்லைன்னு //
:)))))) என்னை மறந்து சிரிச்சிட்டேங்க.
நல்லா எழுதியிருக்கீங்க.
நானும் அஞ்சாம் கிளாஸ் வரை குதிரை வண்டியில போனேன், அப்புறம் தான் சைக்கிள்!!
//வேறு ஒன்றும் சுவாரசியமாய் நடக்கவில்லை (நீங்களெல்லாம் எதிர்பார்ப்பதுபோல).///
நம்புகிறோம்.
// எண்பதுகளின் நடுவில் சென்னைத் தொலைக்காட்சி, கொடைக்கானல் ரிலே மூலம் தென்மாவட்டங்களுக்கும் ஒளிபரப்பு சேவையைத் தொடங்க, அந்த அதிகப்படி நேரம் அதில் செலவழிந்தது.
படிச்சது கிறிஸ்தவப் பள்ளிகள்ங்கிறதால பைபிள் கதைகளும், துதிப் பாடல்களும் மனப்பாடமாயின. இடையில் இரண்டு வருடம் ஒரு இந்துப் பள்ளியில் படித்ததால் (ஓரளவு) மஹாபாரதமும் கேட்கக் கிடைத்தது. டி.வி.யில் பின்னாளில் மஹாபாரதம் ஒளிபரப்பப்பட்டபோது பார்ப்பவர்களுக்கு நான் முன்கூட்டியே கதையைச் சொல்லி சஸ்பென்சை உடைத்துத் திட்டு வாங்கினேன்!!
//
ஆனாலும் இந்த தூர்தர்ஷன் ரெம்ப மோசம்.. வெள்ளிக்கிழமைல பகல்ல எந்த நிகழ்ச்சியும் இல்லாம.. இரவில் மட்டும் ஒலியும் ஒளியும்.... பின்ன எங்களுக்கு எல்லாம் வெள்ளி சனி தாங்க விடுமுறை... நாங்க படிச்சது முஸ்லீம் பள்ளியாச்சே..
பழைய நினைவுகள்.ம்ம்ம்ம்.
நல்லா இருக்கு.
ஸ்கூல்லே பஸ் கேங்க்ன்னே ஒன்னு இருக்கும். அவங்க எல்லாம் சேர்ந்து பஸ் டே ன்னு ஒன்னு செலிபிரேட் செய்வாங்க. காலேஜ் பசங்க, ஸ்கூல் பசங்க, ஆபீஸ் போறவங்கன்னு ஏல்லோரும் எல்லோருக்கும் சாக்லேட் கொடுபாங்கன்னு சொல்வாங்க! எனக்கு பஸ் பயணம்னா. தொலை தூர பயணம்தான்! நல்லா இருக்கு..உங்க டைரி! :-)
அப்படியே 7,8 வருடம் என்னையும் பின்னாடி போக வைத்துவிட்டிங்க.. உங்களின் பள்ளி நினைவுகளுடன் என் பள்ளி நினைவுகளும் மனதில் அசைபோட செய்த உங்கள் இந்த பதிவுக்கு நன்றி
//எனக்கு வாய்த்த தோழிகளும், ஒரு பூவைப் பார்த்தால் கூட petals, sepal, anther, stamen என்று அதன் அனாட்டமியும், பாட்டனியும் பேசுபவர்களாக அமைந்ததில் நானும் ரொம்பவே நல்ல பிள்ளையாக இருந்துவிட்டேன்!!//
சேர்க்கை சரியில்லீங்க :-)))
பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய வாழ்க்கை வரலாறு...
//சாப்பாடு எடுத்துட்டு ஸ்கூலுக்குப் போகணும். எதில? மாட்டு வண்டியில!! //
மாட்டு வண்டியா??? அப்ப இது
நடந்து ஒரு 40-50 வருஷம் இருக்குமா?
ஆக மொத்ததுல.... முன்ன வீட இப்போ சோம்பேறி ஆயட்டேனு சொல்லாம சொல்ற மாதரியே இருக்கு.... ஹுஸைனம்மா.... ஹி ஹி...
ஆமா பின்ன.. ஆரம்பத்துல எவ்ளோ பொறுப்பா அம்புட்டு வேலை பாத்துருகீங்க..... அப்றம் அப்டியே போக போக கொரஞ்சுட்டே போறத படிக்கிற எல்லாருமே உணர்ந்துருப்பாங்க....
உண்மைய ஓலரிட்டோமோ.... ?? :-)
//தந்தையின் நண்பர் ஒருவர் ஒரு வேன் (மாதிரி ஒண்ணு) வாங்கி//
வேன் மாதரியா... அப்போ அது வேன் இல்லையா.... நல்லா பாத்தீங்களா.... எனக்கு அப்போவே டவுட்டு வந்துச்சு ஹுஸைனம்மா... மாட்டு வண்டிய modify பண்ணி நல்லா ஏமாத்திட்டாரு உங்கள.... நீங்க ம்ம்னு ஒரு வார்த்த சொல்லுங்க consumer court la கேஸ் போடலாம்.... ;-).....
//பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய வாழ்க்கை வரலாறு...//
ஹுஸைனம்மா.... நம்ம நாஞ்சில் சார் வாங்குன காசுக்கு கரெக்டா கமெண்ட் போட்டுருகாருல... ஆனாலும் ரொம்ப நல்லவருங்க நாஞ்சில் நீங்க....
சார்க்கு ஒரு மாட்டு வண்டி டிக்கெட் முற்றிலும் இலவசமா வழங்கப்படும்....
Sponser - நம்ம ஹுஸைனம்மா தான்..... he he
ஆமா, தலைப்பு வரவே இல்லையே!
மாட்டு வண்டில போகும்போது `ஓரம்போ ஓரம்போ’னு பாடினீங்களா??
நினைவுகள் சுவாரஸ்யம்.
\\பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய வாழ்க்கை வரலாறு...\\
இத தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வைக்கனும், வருங்கால சந்ததி இத பார்த்து தெரிஞ்சுக்குவாங்க பாரு.
ஹூசைனம்மா.....எனக்கு கொசுவத்தி சுத்துது...
//கணக்கு டீச்சர், என்னையும், நல்லா படிக்கும் சில தோழிகளையும், நீங்கல்லாம் எஞ்சினியரிங் போகணும்னா இந்த மார்க்கெல்லாம் காணாது என்று திட்ட//
என்ன தைரியம் அவங்களுக்கு..... அதெப்புடி உங்கள போயி திட்டலாம் அவங்க...
மார்க் எப்புடி டீச்சர் காணும் அதுக்கு கண்ணா இருக்குனு அங்கனகுல்லையே ஒரு மொக்கைய போட்டுருந்தீங்கனா இப்டி திட்டிருபாங்களா....
//பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய வாழ்க்கை வரலாறு//
நாஞ்சில் சார் இருந்தும் உங்களுக்கு ஓவர் குசும்பு தான்..... ஹுசைனம்மாவையே கலாய்க்ரீங்கலா...? அவங்க டெரர் ஆகி நீங்க பாத்ததில்லையே...
//ஹூசைனம்மா.....எனக்கு கொசுவத்தி சுத்துது//
ஆஹா.... சுத்திடுசுய்யா... சுத்திடுச்சு...
இனமே அந்த கைப்புள்ள வந்தா கூட காபாத்த முடியாதே... ;-)
தம்பி தோழா,
இன்னைக்கு என்ன உங்க டேமேஜர் லீவா? மஹா கும்மியா இருக்கு?
எனிவே, டேங்ஸ்!!
//ஒரு பூவைப் பார்த்தால்.......நானும் ரொம்பவே நல்ல பிள்ளையாக இருந்துவிட்டேன்//
அத நீங்களே சொல்லிகிட்டா....
ஸ்ஸப்பா.... இப்போவே கண்ணா கட்டுதே..... யாராச்சும் கொஞ்சம் தண்ணி இருந்தா குடுங்கப்பா...
//இன்னைக்கு என்ன உங்க டேமேஜர் லீவா? மஹா கும்மியா இருக்கு?//
சாரி தொழியக்கா.... அவரைலாம் கூப்புட்டு கும்மி அடிக்க சொல்ல முடியாது... வெளிநாட்டு கார பயலாக்கும்..... நம்ம கலாசாரம் தெரியாது பாருங்க... ஹி ஹி ;-)
:)
அருமையான பகிர்வு ஹுஸைனம்மா.
சுவராஸ்யமான பதிவு ஹூசைனம்மா!!
சரி சரி..... ஓவர் கும்மியா போச்சோ....
எல்லாம் ஒரு பாசத்தோட வெளிபாடுதான் ஹுஸைனம்மா.... கோச்சுக்கப்டாது....
இப்டியெல்லாம் குடுக்கல் வாங்கல்லாம் இருந்தா தான் சொந்தம் நிலைக்கும்னு எங்கும்மா சொல்லிருக்காங்க.... :-)
அட கோவமெல்லாம் இல்லைப்பா, அன்புத்தோழன். எனக்கு எங்கம்மா சிக்கனமா இருக்கத்தான் சொல்லிக்கொடுத்தாங்க. ;-)
//பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, கணக்கு டீச்சர், என்னையும், நல்லா படிக்கும் சில தோழிகளையும், நீங்கல்லாம் எஞ்சினியரிங் போகணும்னா இந்த மார்க்கெல்லாம் காணாது; உங்களுக்குள்ள கோட்டாவில கிடைக்க இந்த மார்க்கெல்லாம் பத்தாது என்று திட்ட, என்னவென்றே புரியாமல் தோழிகளிடம் விசாரித்ததில் FC, BC, MBC, SC எல்லாம் விளக்கினார்கள்//
உண்மை..நச்ன்னு சொல்லீட்ங்க....
நெல்லையில் பள்ளிகாலங்களில் பலருக்கும் அப்போதுதான் விளக்கங்கள் நடக்கும்
//மாட்டு வண்டியிலிருந்து வேனுக்குப் பிரமோஷன் கிடைத்தது. ஆனால் போன பிறகுதான் தெரிந்தது, அதுக்கு மாட்டு வண்டியே எவ்வளவோ பரவாயில்லைன்னு//
ஹா..ஹா...செம காமெடியா எழுதிருக்கீங்க... சிரிச்சு மாளலை....
மனதின் பள்ளி நினைவுகளை அசை போட வைத்து விட்டீர்கள்...
ஹுசைனம்மா,உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் உங்கள் பதின் பருவத்து விடயங்களை அழகுற பகிர்ந்து கொண்டீர்கள்.அதுசரி,மாட்டுவண்டியில் பள்ளி சென்ற நீங்கள் என்னை அக்கா என்று கூப்பிடுகிறீர்களே?விளக்கம் பிளீஸ். :)
பஸ்ல போறேனேன்னு லேசா கேட்டுப் பாத்ததுக்கே, ”இதுல போய் படிச்சுக் கிழிச்சாப் போதும்”னு வந்த பதில்ல அதுபத்திப் பேசுறதே கிடையாது
:) நல்லா இருக்குங்க,,பதிவு...
/ஸாதிகா Says:
அதுசரி,மாட்டுவண்டியில் பள்ளி சென்ற நீங்கள் என்னை அக்கா என்று கூப்பிடுகிறீர்களே?விளக்கம் பிளீஸ். :)//
அக்கா, என் மூத்த புள்ளை இப்பத்தான் ஏழாங்கிளாஸ் படிக்கிறான். உங்களுக்கோ பேரப்புள்ளையே இருக்கு!! இதுக்குமேலயும் விளக்கம் வேணுமா?
அக்கா, எங்க ஊர் ஒரு கிராமம் (அப்போ). எங்க தெருவுல மொத கலர் டி.வி. எங்க வீட்லதான், 1984ல. போதுமா?
எங்க மாமியார் சொல்வாங்க நாங்க முன்று பேர் (அவங்க அவங்க தங்கை, எங்க சின்ன பாட்டி ) முன்று நாங்க மாட்டு வண்டியில் பாளையங்கோட்டையில் போய் படிப்போம்( நாங்க லலிதா , பத்மினி , ரஹினி போல்) எங்களை சைட் அடிக்க நிறைய கூட்டம் காத்து கொண்டு இருக்கும். ( நீங்க மாட்டு வண்டி என்றதும் அந்த நினைவு வந்து விட்டது
நீங்களாவது பரவாயில்லை 7, 8 குடம் தண்ணீர் குடம் , நாங்க எங்க வீட்டில் ஜனத்தொக ஜாஸ்தி அண்டா அண்டாவா தண்ணீர் குடம் தூக்கி வந்து நிறைத்து விட்டு அப்பரம் ஆளுக்கொரு வேலைய முடிச்சிட்டு ஓடனும்.
நானும் ஏழாம் வகுப்பு வரை வெளியூர் தான் எங்கூரில் குதிரை வண்டிதான் ஆனால் அதில் சென்னை வர பஸ் டாண்டுக்கு மட்டும் தான் போவோம்.
நடுவில் ஸ்கூல், பின்னாடி பிளே கிரவுண்டு வீடு, ஸ்கூல் முன்னாடி ரொட்ட தாண்டினா எங்க கடை.
ஆனால் அப்போ கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கனும்.
எனக்கும் அப்படியே பழைய ஞாபகம் எல்லாம் அசை போடுது நினைக்க நினைக்க அந்த காலம் ரொம்ப நல்ல இருக்கு.
எக்கா! கொசுவர்த்தியா? நல்லாஇருக்கு :))))
ok welden
ரொம்பவும் சுவாரஸ்யமா எதிர்பார்த்தோம்... இன்னும் இருந்தா எழுதுங்களேன்.. ;-)
நைஸ்:)))
நல்லா இருக்கு ஹூஸைனம்மா. இன்னும் நிறைய எழுதியிருக்கலாம் உங்க ஸ்டைல :)
அமைதிச்சாரல் said...
//எனக்கு வாய்த்த தோழிகளும், ஒரு பூவைப் பார்த்தால் கூட petals, sepal, anther, stamen என்று அதன் அனாட்டமியும், பாட்டனியும் பேசுபவர்களாக அமைந்ததில் நானும் ரொம்பவே நல்ல பிள்ளையாக இருந்துவிட்டேன்!!//
சேர்க்கை சரியில்லீங்க :-)))
hahaha husainammaa superb...and u too amaithisaaral
நாங்க எட்டாங்கிளாஸ் வரைக்கும் நடைராஜா சர்வீஸ்தான்.
நல்ல பகிர்வு அக்கா.
அருமை
தந்தையின் நண்பர் ஒருவர் ஒரு வேன் (மாதிரி ஒண்ணு) வாங்கி, ஸ்கூல் டிரிப் அடிக்கப் போவதாகச் சொல்ல, மாட்டு வண்டியிலிருந்து வேனுக்குப் பிரமோஷன் கிடைத்தது. ஆனால் போன பிறகுதான் தெரிந்தது, அதுக்கு மாட்டு வண்டியே எவ்வளவோ பரவாயில்லைன்னு.
........பாவங்க, நீங்க. ஆனால், படிச்சிட்டு சிரிப்பை அடக்க முடியல.
//மாட்டு வண்டியே எவ்வளவோ பராவாயில்லைன்னு//
நல்ல அனுபவங்கள்.
எனக்கும் சின்ன பிள்ளையில் நான் போன குதிரை வண்டியும், கிணற்றில் தண்ணீர் எடுத்து எடுத்து குளித்த நினைவு வந்து விட்டது,
unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)
Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof
Download Youtube Videos free Click here
தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here
//வேறு ஒன்றும் சுவாரசியமாய் நடக்கவில்லை (நீங்களெல்லாம் எதிர்பார்ப்பதுபோல). எனக்கு வாய்த்த தோழிகளும், ஒரு பூவைப் பார்த்தால் ..... நானும் ரொம்பவே நல்ல பிள்ளையாக இருந்துவிட்டேன்!!//
- நிஜமாவா?
//நான் அந்த வயசுல இருந்தப்போல்லாம் அது ஒரு டெரர் வயசாத்தான் இருந்துது, //
எனக்கு தெரிந்த, கிராமத்தில் வளர்ந்த,ஒரு பெண் தன்னுடைய டீனேஜ் பெண்ணை ரொம்பவும் பொத்தி பொத்தி தான் வளர்க்கிறார். அவர் இருப்பது ஒரு அரபு நாட்டில். அதனால அந்த டெரர் இன்னும் பொண்ணை பெத்தவங்களுக்கு இருக்குன்னு நினைக்கிறேன்.
ஜலீலா அக்கா...//எங்க வீட்டில் ஜனத்தொக ஜாஸ்தி அண்டா அண்டாவா //...நல்ல காமடியா எழுதி இருக்கீங்க..
Hussainammaa..Good Post.
என்றும் பசுமை இந்த பள்ளிக்காலங்கள்தான்
அருமையான கொசுவர்த்தி சுத்தி சில இடத்டுலே சிந்திக்கவும் வெச்சிருக்கீங்க
ஹுஸைனம்மா .....சூப்பர்
இன்ன வாரேன் .எனக்கும் கொசுவத்தி சுத்துது...
//வேறு ஒன்றும் சுவாரசியமாய் நடக்கவில்லை (நீங்களெல்லாம் எதிர்பார்ப்பதுபோல). எனக்கு வாய்த்த தோழிகளும், ஒரு பூவைப் பார்த்தால் கூட petals, sepal, anther, stamen என்று அதன் அனாட்டமியும், பாட்டனியும் பேசுபவர்களாக அமைந்ததில் நானும் ரொம்பவே நல்ல பிள்ளையாக இருந்துவிட்டேன்!!//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஅ !!!! இப்பவே கண்ண கட்டுதே !!!
நேற்று அவசரத்தில் படித்து பின்னூட்டம் போட்டேன் ...என் மகன் ஐடி இருந்ததை கவனிகாமல் கமெண்ட் பப்ளிஸ் என்று போட்டுவிடேன்.
அமீன் என்ற பெயரில் வந்து இருக்கும் .
நல்ல நினைவுகள் ....
நானும் நீங்கள் சொன்ன காலகட்டதில் என் வாப்பாவுடன் சைகிளில் சென்று பின்பு உங்களை போல் வேனுக்கு பதில் வாடகை காரில் 25 பிள்ளைகளுடன் எங்க ஊர்
சென் .ஜொசப் கான்வென்டில் படித்தேன்.எனது தோழி பெயர் மலர்.
சின்னம்மிணிக்கா - ஸேம் பிளட்!!
ஸ்டார்ஜன் - நன்றி.
சென்ஷி - ஒண்ணு ஸ்மைலி இல்லைன்னா ஒத்தை வார்த்தை!! வெல்கம் பேக்! (back, பேக்கு இல்லை ;-) )
அமித்தம்மா - நன்றி.
ஷஃபி - குதிர வண்டியா, வசதியான இடம்போல!
ரீது அப்பா - அப்படியா, முஸ்லிம் பள்ளியா? அனுபவம் எழுதுங்க. எங்க ஊர்ல வெள்ளி, ஞாயிறுதான் லீவு.
ஜெய்லானி - நன்றி.
ஃபாயிஸா - நன்றி.
அமைதிச்சாரல் - ஆமாங்க, ஸ்கூல்ல சேர்க்கை சரியில்லை. அதுக்கு சேத்துவச்சு, காலேஜ்ல பின்னிட்டோம்ல.
பிரதாப் - கண்டிப்பா என் வரலாறையும் உங்க பிள்ளைங்க ஸ்கூல்ல படிப்பாங்க பாருங்க!! :-)
அம்பிகா - ஆமா, தலைப்பு வரல. ஆனா, இதுபத்தி எழுதணும்னு நெனச்சவுடனே ஏனோ இந்தத் தலைப்புதான் போடணும்னு தோணுச்சு.
நாஸியா - கல்வெட்டெல்லாம் வேண்டாம், யாராவது பேத்தெடுத்துட்டுப் போயிடுவாங்க!!
அன்புத்தோழன் - டேமேஜருக்கு மட்டும் தமிழ் சொல்லிக்கொடுத்துடாதீங்க, பாவம் தமிழ்!!
அப்துல்லா - :-) பெங்களூர் எப்படிருக்கு?
சரவணக்குமார் - நன்றி.
மேனகா - நன்றி.
கண்ணா - ஆமாங்க, அப்பத்தான் விவரம் தெரிஞ்சுது. கம்யூனிட்டி சர்டிஃபிகேட், நேட்டிவிடி சர்டிஃபிகேட்ன்னு அலைஞ்சு திரிஞ்சு..
ஸாதிகாக்கா - நீங்க தெரிஞ்சுகிட்டேதான கேக்குறீங்க, நான் சின்னப் பொண்ணுன்னு?
கண்ணகி - ஆமாங்க, ரொம்ப கண்டிப்புதான் வீட்டில.
ஜலீலாக்கா - நிறைய விஷயங்கள் நமக்கு ஒத்துப்போகுது, சமையலைத் தவிர!!
//அண்டா அண்டாவா தண்ணீர் குடம் தூக்கி//
இது குடிக்க, சமைக்க மட்டுந்தான்; வீட்டில அடிபம்பு இருந்துது. அது அடிக்கிற வேலை தனி!!
ஷாஹுல் - நன்றி தம்பி.
தஞ்சாவூர்க்காரன் - நன்றிங்க.
தமிழ்ப்பிரியன் - புரியுது, எழுதுறேன், எழுதுறேன்!!
வித்யா - நன்றி.
ஆதவன் - எழுதினதுல நிறைய கட் பண்ணி வச்சுருக்கேன், 3 பதிவு வரும் அதுவே!!
தேனக்கா - நன்றிக்கா.
அக்பர் - நன்றி.
யாதவன் - நன்றி.
சித்ரா - ஆமாங்க, அந்த வேனை நினைச்சா...
கோமதிக்கா - நன்றிக்கா.
அதிரை எக்ஸ்பிரஸ் - (பேரைச் சின்னதா வக்கக்கூடாதா?) - அதிரையில குதுர வண்டிதான் போல!!
ஹென்றி - போனதரமே சொன்னேன், என் பங்கக் கொடுத்துடுங்கன்னு!!
என்றும் - எங்கங்க ஆளக் காணோம்? நிஜமா நல்லவங்க நான்!!
அபுஅஃப்ஸர் - நன்றிங்க.
அமீன்/ மலர் - நன்றிங்க. நான்கூட அட, புது வாசகர் கூடுதலான்னு சந்தோஷப்ப்ட்டேன்; நீங்கதானா டபுள் ஆக்ட் குடுக்குறது? நன்றிங்க.
செய்யது - கட்டும், கட்டும். ஊருக்கு ஊர் சோகக்கதை வச்சுகிட்டு இருக்க உங்கள் மாதிரி நெனச்சீங்களா?
ஹுஸைன்னாம்மா ஆமாம் நீங்கள் எழுதும் போது என் கதை அப்படியே வருதேன்னு நினைப்பேன்.
கிணறி குடிக்க தண்ணீ வெளியில், அது எங்க சாச்சிக்கும் சேர்த்து, அடுத்து அடிபம்பும் உண்டு, அடித்து அடித்து கை கட்டையாக வே போச்சு,
இது என்னா இம்பூட்டு லேட்டா வந்திருக்கேன் எல்லாம் வண்டியும் ஓரம் போயாச்சு போல
--------------
பதின்ம ஸ்பெஷலா - நிறைய பேர் போடுறாங்க...
---------------------------
அது ஒரு டெரர் வயசாத்தான் இருந்துது, பொண்ணப் பெத்தவங்களுக்கு!!]]
ஹா ஹா ஹா
உங்க நே. நெ.பி
-----------
நானும் ரொம்பவே நல்ல பிள்ளையாக இருந்துவிட்டேன்!! ]]
வருத்தம் தெளிவா தெரியுது
//அதிரை எக்ஸ்பிரஸ் - (பேரைச் சின்னதா வக்கக்கூடாதா?) - அதிரையில குதுர வண்டிதான் போல!!//
என் உண்மையான பேரு இதவிட பெருசா இருக்குமே அப்பா என்ன பண்ணுவிங்க, அதிரையில் குதிரையெல்லாம் இப்போ காணோம் , நாலஞ்சு மாட்டு வண்டிய வாங்கி உங்க பேருதான் வைக்கலாம்னு, ஒரு யோசனை இருக்கு , என்ன சொல்லுறிய வச்சிடுவோம?
ஜலீலாக்கா, நன்றி.
ஜமால், லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்னு டயலாக் விடத் தெரியலையே உங்களுக்கு!! நன்றி.
அதிரை எக்ஸ்., தாராளமா என் பேரில மாட்டுவண்டிகள் விடுங்க. லாபத்துல பட்டும் பங்கு கொடுத்துடுங்க!!
Post a Comment