போன வருடம் ஜூலையில் நானும், பிள்ளைகளும் பாண்டிச்சேரியில் வேலை நிமித்தம் தங்கியிருந்த என் வாப்பாவோடு ஒரு நாலு நாள் தங்கிவிட்டு, பின் திருநெல்வேலி போவதாக ப்ளான். ப்ளான் படி பாண்டிச்சேரி போன உடனே பெரியவனுக்கு வயிறு வலியும் ஆரம்பிச்சிட்டுது. நானும் பயணக் களைப்பு அல்லது வாயுவாக இருக்கும் என்று ஓமம், மிளகு என்று கைமருந்து கொடுத்தேன். குறையவில்லை. அங்குள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அட்மிட் செய்தோம்.
ஸ்கேன் செய்ததில் குடல்வால் நீக்க அறுவைசிகிச்சைதான் செய்யணும் என்று தெரிந்தது. எனக்கோ பதற்றம்; என்னவரோ அபுதாபியில். என் அம்மாவும் தங்கையின் பிரசவத்துக்காக ஊர் சென்றிருந்தார். துறுதுறுவென்று நிற்கும் சின்னவன் வேறு. வாப்பாவுக்கும், அலுவலக நண்பர்களை மட்டுமே தெரியும். சின்னவனைக் கவனிக்க யாரும் இல்லாததால், பாண்டிச்சேரியில் செய்யாமல் திருச்சியில் செய்யலாம் என்று நினைத்தேன். அங்கிருந்து காரில் மூன்று மணிநேரம்தான்; மச்சினர் குடும்பம் அங்கு இருப்பதால் சின்னவனையும் பார்த்துக் கொள்வார்கள். எனக்கும் தைரியமாக இருக்கும்; இருந்தாலும் டாக்டரிடம் கேட்டுக்கொள்வோம் என்று நினைத்திருந்தேன். தலைமை மருத்துவர் மாலை ஆறு மணிக்கு வந்தார். அவரும் அறுவை சிகிச்சையை உறுதிபடுத்திக் கொண்டு மறுநாள் காலை எட்டு மணிபோல செய்யலாம் என்றார்.
நான் அவருக்கு என் நிலைமையை விளக்கமாகத் தெரியப்படுத்தி, திருச்சிக்குப் பயணம் செய்யலாமா என்று கேட்டதுதான் தாமதம், பயங்கரக் கோபம் வந்துவிட்டது அவருக்கு. “கொண்டு போங்க; ஆனா வழியிலயே வெடிச்சிரும். அப்புறம் என்ன வேணா நடக்கும். பரவாயில்லையா?” என்றாரே பார்க்கலாம். நான் அப்படியே விதிர்விதிர்த்து விட்டேன். பிள்ளையைப் பார்த்துப் பேசுகிற பேச்சா அது? அதுவும் ஆபரேஷன் செய்ய வேண்டிய டாக்டர்!! நானோ இன்னும் பொறுமையாகப் பேசினேன். அவரோ சாபம் கொடுப்பதுபோல இப்படி ஆகிவிடும் அப்படி ஆகிவிடும் என்றே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அவரின் பேச்சில் நோயாளியைக் குறித்த அக்கறை தெரியவில்லை. மருத்துவமனையை விட்டு நாங்கள் போவதைத் தடுக்கும் எண்ணம் மட்டுமே தெரிந்தது. எமர்ஜென்ஸியாக உடனடியாகச் செய்ய வேண்டியிருந்தாலும் அவர் கையால் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். அவரிடம் டிஸ்சார்ஜ் செய்ய வலியுறுத்தினேன்.
டிஸ்சார்ஜ் செய்வதற்காக அவர்கள் ஒரு வெள்ளைத் தாளில் தமிழில், அவர் பேசியதைவிடக் கொடூரமாக எழுதியிருந்தார்கள் (அந்தக் கையெழுத்து அதைவிடக் கொடுமை!!). அதில் எழுதியிருந்த வாசகங்களை இப்போ நினைத்தாலும் நடுங்குகிறது!! அதில் கையெழுத்திடச் சொன்னார்கள். என்னால் முடியாதென்று சொல்லி சண்டைக்குப் போனேன். ஆனால் என் வாப்பா, இங்கிருந்து உடனே கிளம்ப வேண்டும்; தாமதப்படுத்துவது நல்லதல்ல என்று எடுத்துச் சொல்லி தானே கையெழுத்திட்டார்கள். பின் அங்கிருந்து காரில் திருச்சி வந்து உடனே அங்கு ஒரு மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். இங்கும் மருத்துவர் காலை பத்து மணிக்கு செய்யலாம் என்று சொன்னார்.
பாண்டிச்சேரியில் அந்த மருத்துவமனையில் நான் செய்யக்கூடாது என்று முடிவுசெய்ததின் காரணம், இவ்வாறு நோயாளியையும் முன்வைத்துக் கொண்டே ஈவிரக்கம் இல்லாமல் பேசுபவரிடம் நான் எப்படி மனநிம்மதியுடன் என் மகனை ஒப்படைக்க முடியும்? சிகிச்சைக்குமுன்பே இப்படிப் பேசுபவர், நாளைபின்னே ஏதாவது பிரச்னை என்றால் எப்படி விளக்கம் தருவார்? மருத்துவர் என்றால் அவரின் பரிமாற்றங்கள் நமக்கு மனநிம்மதியைத் தரவேண்டாமா? அதனால் பாண்டியிலேயே வேறு மருத்துவமனையில் செய்யலாம் என்று நினைத்தேன். பின்னர் திருச்சி மருத்துவரிடமும், திருநெல்வேலியில் ஒரு டாக்டர் நண்பருடனும் கலந்தாலோசித்து, திருச்சி செல்லலாம் என்று முடிவு செய்தோம். மேலும் இங்கும் அவர் மறுநாள் காலை எட்டு மணிக்குத்தானே செய்வதாகச் சொன்னார். மகனும் சம்மதித்திருந்தான். மேலும் திருச்சி - புதுவை சாலையும் புதிதாகப் போட்டது; நன்றாக இருக்கும். கரடு முரடான பயணமில்லை.
மறுநாள் காலை மயக்கமருந்து கொடுப்பவர் (அனஸ்தீஸிஸ்ட்) டிராஃபிக் ஜாமில் (!!!) மாட்டிக்கொண்டு லேட்டாக வந்ததில், 12.30க்கு சிகிச்சை தொடங்கியது. டாக்டரிடம் ஏற்கனவே விபரங்கள் கேட்டிருந்தேன். அப்பெண்டிக்ஸ் பகுதியில் இன்ஃபெக்ஷன் அளவைப் பொறுத்து, அரைமணி முதல் ஒன்றரை மணி நேரத்தில் சிகிச்சை முடிந்துவிடும் என்று சொல்லியிருந்தார். லேப்ரோஸ்கோபி முறை என்பதால் நேரமும் அதிகமாகாது என்பதோடு, அடுத்த நாளே வீட்டுக்கும் சென்று விடலாம் என்று சொல்லியிருந்தார். ஆனாலும் மூன்றரை மணிநேரம் ஆகும் என்று நினைக்கவில்லை.
அந்த மூன்றரை மணிநேரமும் என் வாழ்நாளில் மிகக் கொடிய நேரம்!! ஆபரேஷன் முடிய ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது என்று புரியாமல் தவித்த தவிப்பு!! இப்படி ஆகியிருக்குமோ, அப்படி ஆகியிருக்குமோ, இந்த மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர் வேற சின்னப் பையனா இருந்தாரே, கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம பத்து மணி ஆபரேஷனுக்கு பன்னென்டரைக்கு வந்தாரே, அவர் ஏதாவது தப்பு பண்ணிருப்பாரோன்னு கற்பனை செய்து... அழுது,.. ரூமில போய் உக்காந்து அழவும் முடியாது, அங்க வாப்பா இருக்காங்க. நான் அழறதைப் பாத்தா அவங்களும் பதறி அழ ஆரம்பிச்சுடுவாங்க. மச்சானும், அழாதே, அழாதேன்னு சொல்லி அலுத்துப் போயிட்டார்.
நேரம் போகப் போக, அனஸ்தீஷியா கொடுப்பதில் தவறு நேர்ந்ததால் பாதிக்கப்பட்ட நடிகை விஜி, விளையாட்டு வீரர் சந்திரசேகர், இன்னும் பல சம்பவங்கள் திடீர் திடீரென்று நினைவுக்கு வந்ததில் ரொம்பவே பயந்துவிட்டேன்.
செவிலியர்கள் மட்டுமல்லாமல், துப்புரவுத் தொழிலாளர்கள் வரை எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி, செருப்பை மட்டும் கழட்டிவிட்டு, ஆபரேஷன் தியேட்டர் உள்ளே போக, வர இருக்கிறார்கள். அவ்வாறு வெளியே வந்த ஒரு நர்ஸ், இன்னொரு நர்ஸிடம் சொன்னது இது: “கேமரா பிடிக்க ஆள் வேணுமாம்; அதான் மேடத்தைப் போய் கூப்பிடப்போறேன்”!! ஆத்தீ, என்னது கேமரா பிடிக்க ஆளா? என்னதான் நடக்குது இங்க? அவரே சொன்னார், டாக்டரால் கேமராவையும், சிகிச்சையையும் ஒருசேர கையாள முடியவில்லையாம். அதனால், ஒரு கை எக்ஸ்ட்ரா தேவைப்படுதாம். இப்ப இப்படிச் சொல்லிட்டேன், அங்க நான் நடுங்கின நடுக்கம் இருக்கே!! அப்புறம் டாக்டரம்மா (டாக்டரின் மனைவி, குழந்தைப் பேறு மருத்துவர்) வந்தார்.
பிறகு சிகிச்சை முடிந்து, மகனும் இறையருளால் நல்லபடியாக வந்தான். டாக்டரும் வாலை வெட்டமுடியாத காரணத்தை விளக்கினார். ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க வேண்டி வந்தது.
ஒருவிதத்தில் பாண்டியில் சிகிச்சை செய்யாமல் இங்கு வந்தது நல்லதாகவே பட்டது. அங்கே செய்திருந்தாலும், இதே பிரச்னை வந்திருக்கும். எனக்கும் அந்த டாக்டர்தான், கோபத்தில் வேண்டுமென்றே அப்படிச் செய்துவிட்டாரோ என்று தோன்றியிருக்கும். மருத்துவர்களுக்கென்று ethics உண்டு, அப்படிச் செய்ய மாட்டார்கள்தான். ஆனாலும், சிஸேரியன் என்றால், வேண்டுமென்றே செய்தார்களோ என்று தோன்றுமில்லையா, அது போலத்தான். அதுவுமில்லாமல் ஒரு வாரம், சின்னவனை வைத்துக் கொண்டு அந்த ஊரில் என்னால் தனியே இருந்திருக்கவும் முடியாது. நல்லவேளை நான் திருச்சி வந்தேன்!! இம்மாதிரி சமயங்களில்தான் உறவினர்களின் அவசியமும், அருமையும் அதிகம் புரிந்து, உறவு மென்மேலும் வலுப்பட உதவுகிறது.
மேலும், திருச்சி மருத்துவரிடமும், சிலவற்றைக் குறித்த என் அதிருப்தியை வெளிப்படுத்தியபோது, பொறுமையாகத் தன் தரப்பை விளக்கிச் சரிப்படுத்த ஆவன செய்தார்.
நேற்றுகூட பேப்பரில் படித்தேன், "Placebo" எனப்படும் மருந்துகளின் மாற்று, ஒருவரை மனரீதியாக நம்பிக்கையை பலப்படுத்தி குணப்படுத்த உதவுகிறதாம். என்னதான் ஸ்பெஷலிஸ்டாக இருந்தாலும், நோயாளிக்கு நம்பிக்கை வருமளவில் தன்மையாக பழகவில்லையென்றால், என்ன பயன்? மருந்துகளைவிட நம்பிக்கைதான் நோயாளிக்கு அதிகம் தேவை!! அதை மருத்துவர்கள்தான் தர வேண்டும்.
நேரம் போகப் போக, அனஸ்தீஷியா கொடுப்பதில் தவறு நேர்ந்ததால் பாதிக்கப்பட்ட நடிகை விஜி, விளையாட்டு வீரர் சந்திரசேகர், இன்னும் பல சம்பவங்கள் திடீர் திடீரென்று நினைவுக்கு வந்ததில் ரொம்பவே பயந்துவிட்டேன்.
செவிலியர்கள் மட்டுமல்லாமல், துப்புரவுத் தொழிலாளர்கள் வரை எந்த விதக் கட்டுப்பாடும் இன்றி, செருப்பை மட்டும் கழட்டிவிட்டு, ஆபரேஷன் தியேட்டர் உள்ளே போக, வர இருக்கிறார்கள். அவ்வாறு வெளியே வந்த ஒரு நர்ஸ், இன்னொரு நர்ஸிடம் சொன்னது இது: “கேமரா பிடிக்க ஆள் வேணுமாம்; அதான் மேடத்தைப் போய் கூப்பிடப்போறேன்”!! ஆத்தீ, என்னது கேமரா பிடிக்க ஆளா? என்னதான் நடக்குது இங்க? அவரே சொன்னார், டாக்டரால் கேமராவையும், சிகிச்சையையும் ஒருசேர கையாள முடியவில்லையாம். அதனால், ஒரு கை எக்ஸ்ட்ரா தேவைப்படுதாம். இப்ப இப்படிச் சொல்லிட்டேன், அங்க நான் நடுங்கின நடுக்கம் இருக்கே!! அப்புறம் டாக்டரம்மா (டாக்டரின் மனைவி, குழந்தைப் பேறு மருத்துவர்) வந்தார்.
பிறகு சிகிச்சை முடிந்து, மகனும் இறையருளால் நல்லபடியாக வந்தான். டாக்டரும் வாலை வெட்டமுடியாத காரணத்தை விளக்கினார். ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க வேண்டி வந்தது.
ஒருவிதத்தில் பாண்டியில் சிகிச்சை செய்யாமல் இங்கு வந்தது நல்லதாகவே பட்டது. அங்கே செய்திருந்தாலும், இதே பிரச்னை வந்திருக்கும். எனக்கும் அந்த டாக்டர்தான், கோபத்தில் வேண்டுமென்றே அப்படிச் செய்துவிட்டாரோ என்று தோன்றியிருக்கும். மருத்துவர்களுக்கென்று ethics உண்டு, அப்படிச் செய்ய மாட்டார்கள்தான். ஆனாலும், சிஸேரியன் என்றால், வேண்டுமென்றே செய்தார்களோ என்று தோன்றுமில்லையா, அது போலத்தான். அதுவுமில்லாமல் ஒரு வாரம், சின்னவனை வைத்துக் கொண்டு அந்த ஊரில் என்னால் தனியே இருந்திருக்கவும் முடியாது. நல்லவேளை நான் திருச்சி வந்தேன்!! இம்மாதிரி சமயங்களில்தான் உறவினர்களின் அவசியமும், அருமையும் அதிகம் புரிந்து, உறவு மென்மேலும் வலுப்பட உதவுகிறது.
மேலும், திருச்சி மருத்துவரிடமும், சிலவற்றைக் குறித்த என் அதிருப்தியை வெளிப்படுத்தியபோது, பொறுமையாகத் தன் தரப்பை விளக்கிச் சரிப்படுத்த ஆவன செய்தார்.
நேற்றுகூட பேப்பரில் படித்தேன், "Placebo" எனப்படும் மருந்துகளின் மாற்று, ஒருவரை மனரீதியாக நம்பிக்கையை பலப்படுத்தி குணப்படுத்த உதவுகிறதாம். என்னதான் ஸ்பெஷலிஸ்டாக இருந்தாலும், நோயாளிக்கு நம்பிக்கை வருமளவில் தன்மையாக பழகவில்லையென்றால், என்ன பயன்? மருந்துகளைவிட நம்பிக்கைதான் நோயாளிக்கு அதிகம் தேவை!! அதை மருத்துவர்கள்தான் தர வேண்டும்.
|
Tweet | |||
42 comments:
முதல் பிரசவத்தின் போது அலறிய பெண்ணிடம் நர்ஸ் ... இனிக்குது இப்ப கத்தற .இது போல நாங்க எத்தனைப் பாத்திருப்போம்னாங்களாம்.
அவங்களுக்கு பழகியிருக்கலாம்.அந்த பெண்ணுக்கு அது முதல்னு புரிஞ்சிக்காம கடுப்படிப்பது ஏன்
உங்களுடையது ஒரு தாயின் மனநிலை அதனால்தான் பயங்களும் குழப்பங்களும்.கோபப்பட்டாலும் டாக்டர்கள் பழிவாங்க மாட்டாங்க.ஆனாலும் பெரும்பாலான டாக்டர்கள் முசுடு ங்கதான்.
என்னுடைய அனுபவமும் இதுவே, மருத்துவர் முதலில் நம்பிக்கை ஏறபடுத்துபவராக இருக்க வேண்டும் அடுத்ததே சிகிச்சை முறைகள். தற்பொழுது உள்ள் சூழ்நிலையில் சேவை மனப்பான்மையுள்ள நேர்மையான மருத்துவர் கிடைத்தாலே பகுதி நிவாரணம் கிடைத்த மாதிரி தான்.
//மனரீதியாக நம்பிக்கையை பலப்படுத்தி குணப்படுத்த உதவுகிறதாம்//
இந்த நம்பிக்கை முதலில் நோயுற்றவர்களிடம் வரவேண்டும், இவ்வுணர்வினை தளர விடாமல் சுற்றமும, நட்பும் முழு மனதுடன் ஒத்துழைக்க வேண்டும். நல்ல தகவல்களை வரிசையாக தருகிறீர்கள் ஹுசைனம்மா. Keep it up!!
குழந்தை நல மருத்துவர்களே இந்தக் காலத்தில் குழந்தைகளிடம் கடுப்பைக் காட்டுகிறார்கள். நிறைய நல்ல மருத்துவர்களுக்கெல்லாம் திருஷ்டி மாதிரி இவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
/டிஸ்சார்ஜ் செய்வதற்காக அவர்கள் ஒரு வெள்ளைத் தாளில் தமிழில், அவர் பேசியதைவிடக் கொடூரமாக எழுதியிருந்தார்கள் (அந்தக் கையெழுத்து அதைவிடக் கொடுமை!!)//
ஆபரேசனுக்கு தானே கையெழுத்து கேப்பாங்க..... இதென்ன இது புதுசா டீஸ்சார்ஜுக்க்கு.... நீங்க சொல்றத பாத்தா ஆஸ்பத்திரி கட்டபஞ்ஜாயத்த விட மோசமா இருக்கு...
என்ன கொடும சார் இது....
சரியான தகவல் போட்டு இருக்கிறீர்கள்.
சில டாக்டரின் அனுகு முறை பார்த்தாலே நமக்கு நல்லாகிடும் என்று நினைக்க தோனும்.
சில டாக்டர்கள் பேஷன்டே கிடைக்காமல் துபாய் என்றது பணத்தை மணி பிளாண்ட்டில் இருந்து எடுத்து வந்த மாதிரி ஒரு கணக்கு போட்டு திரும்ப திரும்ப வரசொல்லி பயம்புடுத்தி விடுவதும் உண்டு.
எனக்கும் இது போல் இரண்டு அனுபவம் உண்டு, இப்போது இங்கு டைப் பண்ணேன் பதிவு ரொம்ப பெருசா போகுது, இதை தொடர்ந்து பிறகு பதிவாகவே போடுகிறேன்.
நீங்கள் பாண்டி போன இடத்தில் திடீரென்று என்றால் ரொம்ப கழ்டமா தான் இருந்திருக்கும்.
படித்ததும் நினைத்து பார்க்கவே பயமா இருக்கு.ஒவ்வொரு டாக்டரும் நோயாளியிடம் பொறுமை,நம்பிக்கை,ஆறுதல் இதெல்லாம் கொடுக்க வேண்டாம்.அதிலேயே அவர்கள் பாதி குணமாயிடுவாங்க.இப்ப இருப்பவர்கள் பணத்தை பிடுங்கத்தானே பார்க்கிறாங்க...
நீங்கள் செய்தது சரியான, தைரியமான, உறுதியான செயல்
உங்களுக்கு என் வாழ்த்துகள்..
நம்பிக்கைதான் நோயாளிக்கு அதிகம் தேவை!! அதை மருத்துவர்கள்தான் தர வேண்டும்
ரொம்ப சரியா சொன்னீங்க... .... எனக்கு தெரிஞ்சு ஒரு டாக்டர் வாரம் இரண்டு நாட்கள் 5 ரூபாய்க்கு மருத்துவம் பாக்றாரு.... அதுவும் டோக்கன் பீஸ் தான் கன்சல்டன்சி இலவசம்.....
இன்னொருத்தர் வருஷம் பூராவுமே 5 ரூபா தான்.... இத்தனைக்கும் இவங்க ரெண்டு பேருமே ரொம்ப பெரிய டாக்டர்ஸ் மெட்ராஸ்ல....
நல்ல் வேளை அந்த பாண்டிச்(சேரி)டாக்டரிடம் ஆபரேசன் பன்னாமல் போனது...
//அந்த மூன்றரை மணிநேரமும் என் வாழ்நாளில் மிகக் கொடிய நேரம்!! ஆபரேஷன் முடிய ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது என்று புரியாமல் தவித்த தவிப்பு!! இப்படி ஆகியிருக்குமோ, அப்படி ஆகியிருக்குமோ, இந்த மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர் வேற சின்னப் பையனா இருந்தாரே, கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம பத்து மணி ஆபரேஷனுக்கு பன்னென்டரைக்கு வந்தாரே, அவர் ஏதாவது தப்பு பண்ணிருப்பாரோன்னு கற்பனை செய்து... அழுது,.. ரூமில போய் உக்காந்து அழவும் முடியாது, அங்க வாப்பா இருக்காங்க. நான் அழறதைப் பாத்தா அவங்களும் பதறி அழ ஆரம்பிச்சுடுவாங்க. மச்சானும், அழாதே, அழாதேன்னு சொல்லி அலுத்துப் போயிட்டார்.//
இந்த தாய் பாசத்திற்கு ஈடு இனை, வேறேதுண்டு இவ்வுலகினிலே,
பேஷண்டக்கு நம்பிக்கை தருவதற்க்கு பதிலாக பயத்தை ஏற்ப்படுத்துகின்றனர் சில மருத்துவர்கள் அவர்களை முற்றிலும் ஒதுக்குவது தான் சரி.
நல்ல பதிவு.
பேசி தைரியப்படுத்துகிற டாக்டர்களும் இருக்கிறார்கள். ஒரு டாக்டர் சொன்னதை இன்னொருவர் ஏற்க மறுத்து நம்மைக் குழப்பி விடுகிற வகையும் உண்டு..
நாம் எந்த நோய்க்காக மருத்துவரை பார்த்தாலும் அந்த மருத்துவர் நம் மனசுக்கு பிடிக்கனும்.. மருத்துவர்கள் பேசும் பேச்சிலே நமக்கு பாதி நோய் குணமாகி விடும்..
சரியாகச் சொன்னீர்கள். டாக்டர்கள் கொடுக்கும் மருந்தும், அவர்களின் கனிவான பேச்சுமே குணப்படுத்தும் மாமருந்துகள்.
அன்று நீங்கள் இருந்த மனநிலை புரிந்து கொள்ள கூடியதாக இருக்கின்றது.
எங்கள் ஊரில் ஒரு டாக்டர். எப்போது போனாலும் ஒரே பேச்சுதான். 'ஊசி போட்டு மாத்திரை எழுதி தருகிறேன்' - அதற்கு மேல் எதுவம் பேச மாட்டார்.
ஆனால் எங்கள் ஊரில் மட்டுமல்லாது பக்கத்திலுள்ள அனைத்து ஊர்களுக்கும் அவர்தான் கைராசி மருத்துவர். விஷக்கடி, பாய்ஸன் கேஸ் விவகாரங்களில் படு கில்லாடி. ஆனால் என்னிடம் நன்றாக பேசுவார்.
உங்களுக்குள்ள டென்ஷன் அது மாதிரி யோசிக்க வைத்திருக்கிறது. அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் இப்போதெல்லாம் சாராதண விடயம்தான். ஆனால் அது வெடித்து விட்டால் நிலைமை விபரீதமாகி விடும். ஏதாவது கெட்டது நடந்திருந்தால் வாழ்நாள் முழுதும் உங்களை நீங்களே மன்னித்திருக்க மாட்டீர்கள். இதுமாதிரியான நேரங்களில் பொறுமையையும் இறை உதவியையும் நாட வேண்டும். வல்ல இறைவன் உங்கள் மகனுக்கு நீண்ட ஆயுளைத் தரட்டும் ஹுஸைனம்மா.
"உங்களுடையது ஒரு தாயின் மனநிலை அதனால்தான் பயங்களும் குழப்பங்களும்.கோபப்பட்டாலும் டாக்டர்கள் (பெரும்பாலும் - இது என் கருத்து) பழிவாங்க மாட்டாங்க.ஆனாலும் பெரும்பாலான டாக்டர்கள் முசுடுங்கதான்"
என்ற கண்மணி டீச்சர் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன்
ஹீசைனம்மா... படிக்கவே மனம் பதட்டமைகிறது.
சொந்தபந்தமும் உடன்பிறப்புக்களும் எப்பவுமே எமக்கு கைகொடுப்பவர்கள்தான்.
என்னதான் ஸ்பெஷலிஸ்டாக இருந்தாலும், நோயாளிக்கு நம்பிக்கை வருமளவில் தன்மையாக பழகவில்லையென்றால், என்ன பயன்? மருந்துகளைவிட நம்பிக்கைதான் நோயாளிக்கு அதிகம் தேவை!! அதை மருத்துவர்கள்தான் தர வேண்டும்.
...............well-said!
//நேற்றுகூட பேப்பரில் படித்தேன், "Placebo" எனப்படும் மருந்துகளின் மாற்று, ஒருவரை மனரீதியாக நம்பிக்கையை பலப்படுத்தி குணப்படுத்த உதவுகிறதாம். என்னதான் ஸ்பெஷலிஸ்டாக இருந்தாலும், நோயாளிக்கு நம்பிக்கை வருமளவில் தன்மையாக பழகவில்லையென்றால், என்ன பயன்? மருந்துகளைவிட நம்பிக்கைதான் நோயாளிக்கு அதிகம் தேவை!! அதை மருத்துவர்கள்தான் தர வேண்டும்.//
அழகாக சொல்லிட்டீங்க....
எனக்கும் மருத்துவருடன் இதுபோல அனுபவங்கள்தான் அதிகம்.
மருத்துவர்கள் யாராவது இந்த விவாதத்தில் கலந்து கொண்டால் அவர்களின் மனோநிலையையும் அறிய வாய்ப்பு கிடைக்கும்.
///ஆபரேசனுக்கு தானே கையெழுத்து கேப்பாங்க..... இதென்ன இது புதுசா டீஸ்சார்ஜுக்க்கு.... நீங்க சொல்றத பாத்தா ஆஸ்பத்திரி கட்டபஞ்ஜாயத்த விட மோசமா இருக்கு.///
அதான் என்கேள்வியும்... இப்படியும் மருத்துவர்களா? பள்ளிகள் மாதிரி இப்ப மருத்துவமனைகளும் வியாபாரமாயிடுச்சு. காசு மட்டுமே குறிக்கோள்...நோயாளி எக்கேடும்கெட்டுப்போனாலும் பரவாயில்ல..
நல்ல இடுகை ஹூசைனம்மா. அன்பும், கருணையும் அதிமுக்கியமான இத்தொழிலில் இப்படியும் சிலர். நீங்கள் வேறு மருத்துவமனை மாறியதே நல்லதாக போயிற்று. உங்கள் மகன் நல்ல நலமாக இருக்கிறான் தானே!
எல்லா மருத்துவர்களும் கெட்டவர்கள் இல்லை. நல்ல பதிவு ஹுஸைனம்மா
டாக்ட்டர் நம்பிக்கை தரும் விதத்தில் செயல்படாவிட்டால் ரொம்ப கஷ்ட்டம் தான்.
பிறந்த குழந்தையை கையிலேந்தி 1/2மணி நேரம் காத்திருந்திருக்கின்றேன் இப்போ நினைத்தாலும் கோபம் வருது.
எப்படியோ அல்லாஹ்வின் பேரருளால் யாவும் நலவாய் முடிந்ததே - சந்தோஷம்.
பயனுள்ள பகுதி !!! இன்னும் இது போன்ற அனுபவங்களை நிறைய எழுதுங்கள்.
ஆபரேஷன் அறுவை சிகிச்சை மருந்து நெடி என்றாலே பல நினைவுகள் வந்து அலைக்கழிக்கிறது.
//பேஷண்டக்கு நம்பிக்கை தருவதற்க்கு பதிலாக பயத்தை ஏற்ப்படுத்துகின்றனர் சில மருத்துவர்கள் அவர்களை முற்றிலும் ஒதுக்குவது தான் சரி.//
அது எப்படிங்க ஒதுக்குவிங்க ?
நீங்கள் சொல்லியிருந்த மாதிரி தான் பாண்டி டாக்டர் செய்திருப்பாரென்று தோன்றுகிறது - வெளியே செல்லுவதால் கோபமேற்ப்பட்டு.. என்ன மனிதர்? அந்த மாதிரி, அதுவும் சிறு குழந்தை முன்னாடி, பேசியிருக்கக்கூடாது.. பொறுமையாக விளக்கியிருக்க வேண்டும்.. நீங்கள் வெளியேறியது சரி தான்..
ஆனால் கடைசி பத்தியில் மட்டும் வேறுபடுகிறேன்.. :) மருத்துவரின் கடமை உள்ளதை உள்ளபடியே எடுத்துச் சொல்வது.. நம்பிக்கையை அளிக்க வேண்டியவர்கள் குடும்பத்தினரும் நண்பர்களுமே.. false hope கொடுப்பதும் தவறுதான்.. சரியாகிடும் சரியாகிடும் ந்னு சொல்லிட்டு அப்புறம் சரியாகவில்லையென்றால் - அவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுமில்லயா? இந்த மாதிரி சரியாகாத நோய்க்கெல்லாம் சரி செய்றேன்னு சொல்லி பணம் கறப்பவர்களும் இருக்கிறார்கள்..
ஆப்ரேஷன் தியேட்டருக்கு உள்ளே அதற்கென்று ரூமிருக்கும்.. அங்கு சென்று உடை, காலணி மாத்தி உள் ரூமுக்கு செல்வார்கள்..
இதெல்லாம் பரவாயில்லை ஹூசைனம்மா.. பாட்டிக்கு பித்தப்பை ஆபரேஷனை ரொம்ப நேரம் செய்துவிட்டு வந்து சொன்னார்கள் - பித்தப்பையை காணோம்.. கண்டுபிடிக்க முடியலைன்னு :)))
ம்ம்.. இன்னொன்னும் சொல்லிடறேனே.. நாம் சிகிச்சை மறுத்து வெளியேறும் போது (அதுவும் இது போன்ற அவரச சிகிச்சை) நம் விருப்பத்தினால் தான் வெளியேறுகிறோம் என்று கையெழுத்திட வேண்டியிருக்கும்.. அதாவது எல்லாம் தெரியுமென்றும் புரியுமென்றும் சுய விருப்பத்தினாலேயே செல்கிறேனென்றும்..
இங்குள்ள மருத்துவர்கள் பரவாயில்லை.. நல்ல பொறுமையாக இருக்கிறார்கள்..
மருத்துவம் வியாபாரமாகி ரொம்ப வருடம் ஆச்சு :(
கண்மணி - ஆமாங்க, இந்தத் துறையிலேயே இருந்து அவர்களுக்கு இவை பழகிப் போயிருக்கலாம். ஆனா, நமக்கு பயமாத்தான் இருக்கும். நன்றிங்க.
ஷஃபிக்ஸ் - உறவினர்கள், நண்பர்கள் நம்பிக்கை தருவார்கள் என்றாலும், நமக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரின் ஒரு புன்னகை அளிக்கும் நம்பிக்கைதான் முக்கியம் இல்லியா?
வித்யா - நன்றி கருத்துக்கும், வருகைக்கும். ஆமாங்க, மிகச் சிலர்தான் இப்படி.
அன்புத்தோழன் - வாங்க. டிஸ்சார்ஜுக்கும் கையெழுத்து வேணும். ஆனா, வெள்ளைத் தாளில் அல்ல; அவர்களின் அலுவலகப் படிவத்தில் வாங்க வேண்டும்.
ஜலீலாக்கா - வாங்க. ஆமாக்கா, புது ஊர் என்பதால் ரொம்ப பயமா இருந்துது.
மேனகா - வாங்க. நல்ல மருத்துவர்களும் இருக்காங்க; ஒரு சிலர் மட்டும்...
நிகழ்காலத்தில் - நன்றிங்க வருகைக்கும், கருத்துக்கும். (ஆமா, நீங்க எதிர்காலம், இறந்த காலம் குறித்தெல்லாம் நினைக்கவே மாட்டீங்களா? :-))) )
அதிரை எக்ஸ் - நன்றிங்க வருகைக்கும், கருத்துக்கும். தாய்ப்பாசத்தைவிட மேலானது தாத்தா-பாட்டி பாசம்னு சொல்வேன் நான்.
ஷாஹுல் - பயப்படுத்தும்போது, அவங்களை ஒதுக்கவும் பயமாருக்குங்க. நன்றி.
ரிஷபன் - வாங்க. ஆமாங்க, ஒரு டாக்டர் எடுத்த டெஸ்ட், ஸ்கேன் முதலியவற்றை ஏற்காமல், மீண்டும் செய்யச் சொல்வார்கள் இங்கும். செலவு மட்டுமல்லாமல் நேர விரயமும்.
சிநேகிதி - ஆமாங்க, டாக்டரைப் பிடிச்சுட்டா பாதி நோய் தீர்ந்த மாதிரிதான்.
ராகவன் சார் - நன்றிங்க.
சுல்தான் பாய் - வாங்க. எங்க ஊரிலும் இரத்தினசாமி என்று ஒரு கண் டாக்டர் உண்டு. கண் டாக்டர்தான் என்றாலும், எல்லா வகை உபாதைகளுக்கும் மக்கள் அவரிடம் செல்வார்கள். காரணம் கனிவான பேச்சும், பத்து ரூபாய் ஃபீஸும். (அதைக்கூட கொடுக்கலன்னாலும் கேக்கமாட்டார்).
/அது வெடித்து விட்டால் நிலைமை விபரீதமாகி விடும். ஏதாவது கெட்டது நடந்திருந்தால்//
அல்லாஹ் காத்துக்கொண்டான். அண்ணே, அந்த டாக்டர் மாலை ஆறு மணிக்கு பார்த்து, மறுநாள் காலை எட்டு மணிக்குத்தான் அறுவை சிகிச்சை செய்வதாகச் சொன்னார். அதோடு, இன்னும் சில மருத்துவர்களோடு ஆலோசித்துவிட்டுத்தான் வெளியேறினேன்.
அதிரா - வாங்க; உறவுகளும், நட்புகளும்தான் நமக்கு இம்மாதிரி சமயங்களில் இறைநம்பிக்கைக்கடுத்த பலமே.
சித்ரா - வாங்க; நன்றி.
கண்ணா - நல்ல மருத்துவர்கள் பலரும் நானும் கண்டிருக்கிறேன். அதே மருத்துவமனையில் உள்ள வேறு மருத்துவரும் மிக ஆதரவாகப் பேசினார்.
பிரதாப் - வாங்க; தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் மனநிலை இம்மாதிரி மாறிவருவதைக் காண்கிறேன். இப்ப இன்ஷ்யூரன்ஸ் வேறு இருப்பதால், அவசியமற்ற பரிசோதனைகள் மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றன.
அம்பிகா - வாங்க; ஆமாங்க, மகன் இறையருளால் நலமே!!
சின்னம்மிணி - மிகக் கனிவான மருத்துவர்களைக் கண்ட அனுபவங்களும் உண்டு அக்கா!!
ஜமால் - வாங்க. //பிறந்த குழந்தையை கையிலேந்தி 1/2மணி நேரம் காத்திருந்திருக்கின்றேன்// அப்படியா, எதுக்கு?
செய்யது - வாங்க. ஆமாங்க; இறையருளால் இனி ஆபரேஷனுக்காக மருத்துவமனை செல்லாத வரம்தான் இறைவனிடம் என்றும் நான் கேட்பது!!
எல் போர்ட் - வாங்க. /மருத்துவரின் கடமை உள்ளதை உள்ளபடியே எடுத்துச் சொல்வது..// இதில் நான் கொஞ்சம் வேறுபடுகிறேன். நோயாளியிடம் அதிக விவரங்கள் கூறுவதைவிட, அவரின் உறவினர்களிடம் சாதக, பாதகங்களைக் கூறுவது மிக நன்று. "Ignorance is bliss" - ஆபரேஷனுக்குச் செல்லும் நோயாளிக்கு இது பொருந்தும்.
இண்டர்நெட் மூலம் இன்று அறிந்து கொள்ளமுடிகிற அதிக விபரங்கள், முன்னெச்சரிக்கையாகவும் இருக்க உதவும் அதே சமயம் நமக்கு பயத்தையும் ஏற்படுத்துகின்றன அல்லவா? இது ஒருவரின் குணத்தைப் பொறுத்ததுதான்.
//எல்லாம் தெரியுமென்றும் புரியுமென்றும் சுய விருப்பத்தினாலேயே செல்கிறேனென்றும்.. //
இது மருத்துவமனையின் லெட்டர்ஹெட்டில் எழுதப்படாமல், ஒரு வெள்ளைத்தாளில் எழுதப்பட்டிருந்தது; அதனால்தான் கோபம்.
ஆதவன் - பலருக்கு சேவையாகவும் இருக்கிறது.
ஜெய்லானி - இல்லைங்க, அவரும் இங்கே அமீரகத்தில் பிரபல மருத்துவமனையில் பணிபுரிந்தவர்தானாம். என்னவோ கோவம் அவருக்கு, அந்நேரத்தில்.
//மருந்துகளைவிட நம்பிக்கைதான் நோயாளிக்கு அதிகம் தேவை!! அதை மருத்துவர்கள்தான் தர வேண்டும்.//
உண்மை ஹுஸைனம்மா.. இறைவன் அருளால் உங்க பையன் நலமா நீடூழி வாழ வேண்டுகிறேன்.
என் பையனுக்கு நல்ல வேளையாக ஒரு அருமையான டாக்டர் கிடைத்தார். ஆகவே, சரியான சந்தர்ப்பத்தில் ஆபரேஷன் செஞ்சு குணப்படுத்த முடிஞ்சது.
புதுஇடம் என்பதாலும்,துணைக்கு யாரும் இல்லாததாலும்,உங்களுக்கு வந்த பயத்தையும், குழப்பங்களையும் புரிஞ்சுக்க முடியுது,
உண்மை ஹுசைனம்மா நானும் இதுபோல என் குழந்தைகளோட சிரமப்பட்டு இருகேன் ஆனா நம்பிக்கைதான் மாமருந்து கடவுளோடு சேர்த்து
நாட்டுக்கு நாடு வேறுபடுது ஹூசைனம்மா.. இங்க நோயாளிக்கு தான் எல்லா விவரமும் சொல்லுவாங்க.. அவங்க விருப்பப்பட்டாத் தான் மனைவி மக்களுக்கே சொல்லுவாங்க.. ஏன்னா இவங்களப் பொறுத்த வரைக்கும் நோயப் பத்தி தெரிஞ்சுக்க நோயாளிக்கே முழு உரிமை..
நம்மூர்ல வேற மாதிரி.. உறவினர்களுக்கு எல்லாத்தையுஞ் சொல்லிட்டு, அவங்கள நோயாளிகிட்ட சொல்ல விடுவாங்க.. எங்க சின்னத் தாத்தா கேட்டுகிட்டே கிடந்தாரு - என்னன்னு சொல்லித் தொலைங்கன்னு (அவருக்கு கான்சர்ன்னு சொல்லாம விட்டிருந்தோம்)
என்ன இருந்தாலும், உங்க மகன் முன்னாடி அப்படி சொல்லியிருக்கக் கூடாது..
வெள்ளை பேப்பர்ல சும்மா உங்களுக்கு பயங்காட்ட எழுதியிருப்பாங்கன்னு நினைக்கறேன்.. முறையா லெட்டர் பேட் இல்ல அதுக்கான பேப்பர்ல எழுதியிருக்கனும்.. அதுவுந் தப்பு தான்..
ஆம், நம்பிக்கையே மாமருந்து. அதனுடன் எல்லா விசயத்தையும் தகுந்த முறையில் செயல்படுத்தினால் மட்டுமே மாமருந்து கூட வேலை செய்யும். நல்லதொரு அழகிய பதிவு, உங்கள் வேதனை எங்களின் வேதனையாகவும் இருந்தது.
ஆப்ரேஷன் தியேட்டருக்குள் குழந்தையை அனுப்பிவிட்டு நீங்கள் தவித்த தவிப்பை என்னால் உணர முடிந்தது.
உங்கள் மகன் பூரண நலம் பெற வாழ்த்துக்கள்.
நமக்கு நிலமையை பொறுமையாக விளக்கி,நம்பிக்கை வரும் படி கனிவாக பேசினால் தான்,அந்த மருத்தவரிடம் நமக்கு மதிப்பும் மரியாதையும் வரும்.
நோயை போக்கினால் அவரை கடவுளாய் வணங்குவோம்.
இந்த அப்பெண்டிசைஸ் வெடிச்சு இன்பக்ஷானித்தான் 11 நாள் ஹாஸ்பிட்டலில் 110 பாட்டிலில் சலைனோடு நான் போராடி உயிர்தெழுந்தது.
மருத்துவர்களுக்கே எப்போதும் இருக்கும் கர்வம் எனக்கு அந்த அனுபவங்கல் இருக்கு.
நம்பிக்கைதான் வாழ்க்கை
//ஆனாலும், சிஸேரியன் என்றால், வேண்டுமென்றே செய்தார்களோ என்று தோன்றுமில்லையா, அது போலத்தான் //
என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். 90% சதவிகித சிஸேரியன் வேண்டுமென்றே செய்வதுதான்.
வாங்க அமைதிச்சாரல் - ஆமாங்க, புது இடம்கிறதாலதான் ரொம்ப பயம்.
தேனக்கா - வாங்க அக்கா. இறைநம்பிக்கையே மாமருந்து. சரியே.
எல் போர்ட் - மீண்டும் வந்ததுக்கு நன்றி. நோயாளிகிட்ட சொல்றது டாக்டரோ, உறவினரோ, பக்குவமா எடுத்துச் சொல்லணும்.
வாங்க ராதாகிருஷ்ணன் சார் - வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
கோமதி அக்கா - மகன் தற்போது இறையருளால் நலமே இருக்கிறான். நன்றி அக்கா.
தென்றல் - வாங்க. 110 பாட்டிலா அடிச்சீங்க? ;-))
அப்துல்லா - வாங்க.
//90% சதவிகித சிஸேரியன் வேண்டுமென்றே செய்வதுதான்//
குழந்தையின் நலன் குறித்த சில பயங்களும் காரணமாக இருக்கலாம்.
ஒரு நாள்,டாக்டருக்கும்,டாக்டர் வேண்டும் என்பதை டாக்டர்கள் மறக்க கூடாது.
Post a Comment