Pages

வில்லன் இல்லாத சினிமா




படம் ஓடிக்கொண்டிருந்தது. வழக்கம்போல ஒரு ஹீரோ, ஹீரோயின், வில்லன் கதைதான். வில்லனை ஜெயித்து, ஹீரோ ஹீரோயினைக் கைப்பிடிக்கும் கதை. இந்தப் படங்களிலெல்லாம் வில்லன் ஏன்தான் வர்றானோ? எப்பப் பாரு ஒரே மாதிரி கதை. ஒரு ஹீரோ, அவனுக்கு பிரச்னை கொடுக்கிறதுக்குன்னே ஒரு வில்லன்.

அதென்ன எல்லாப் படத்துலயும் ஒரு வில்லன்? வில்லன் இல்லாம ஏதாவது படம் வந்திருக்கா? ஆனா வில்லன் இல்லாத படத்துல என்ன சுவாரஸ்யம் இருக்கும், இல்லையா? வில்லன் இருந்தாத்தான் ஹீரோ அவனோட தீய எண்ணங்களையும், திட்டங்களையும் முறியடிச்சு, அவனை ஜெயிச்சு வெற்றி வாகை சூடி காதலியையோ, கம்பெனியையோ, நாட்டையோ கைப்பற்ற முடியும்.

இதுவே, வில்லன்னு ஒரு கேரக்டரே இல்லாம, ஹீரோவும், ஹீரோயினும் காதலிச்சு, கல்யாணமும் பண்ணி, குடும்பம் நடத்தி, வயசாகி.... இதுல என்ன சுவாரசியம் இருக்கு? படம்னா, ஒரு வில்லன் இருக்கணும், இருந்தாத்தானே விறுவிறுப்பு? அந்த வில்லன், எதிரி நாட்டவனா இருக்கலாம், இல்ல, சொந்த அக்கா புருஷனாவும் இருக்கலாம், ஏன், உடன்பிறந்த அண்ணனாகக் கூட இருக்கலாம். ஆனா வில்லன் வேணும்.

நிஜ வாழ்வில் வில்லன்கள் உண்டா? இருப்பாங்களே, எதிர்வீட்டுக்காரி, செட் பண்ணி வச்ச ஃபிகரை தள்ளிக்கொண்டுபோகும் நண்பன், மேனேஜரிடம் போட்டுக்கொடுத்தே பேர் வாங்கும் அக்கவுண்ட்ஸ் அஸிஸ்டண்ட், இப்படி விதம்விதமாக... யாருமே இல்லையென்றாலும், நம்மனமே நம் வில்லனாய் பல சமயங்களில்!!

ஆம், மனம்தானே நமக்கு வில்லனாய் நிற்கிறது பலபோதும்!! சரியான பாதை அறிவுக்குத் தெரிந்தாலும், மனம் வில்லனாய் மாறி, நம்மைத் தவறிழைக்க வைக்கிறதே!! மனதைக் கொண்டு, தீய எண்ணங்கள் எனும் வில்லனை ஜெயிக்க முடிந்தால், நாம் ஹீரோ!! வில்லனை ஜெயிக்காமல், அதன் பாதையில் நடந்தால், எனக்கு நானே வில்லன்!!

ஆக, நான் வில்லனாக இருப்பதும், ஹீரோவாக இருப்பதும் நம் கையில், அதாவது என் மனதில்!! மீண்டும் அந்தக் கேள்வி வந்தது. வில்லனின் அவசியம் என்ன? ஏன் எல்லாருமே நல்லவர்களாகவே இருக்கக்கூடாது? அப்படி இருந்தால் உலகம் அமைதியான இடமாக இருக்குமே!!

ஏதோ மெல்ல மெல்ல புரிந்தது. இதோ, நன்மையின் வடிவாக நான் இருக்கிறேன்; தீமையின் வடிவாக ஷைத்தான் இருக்கிறான். உனக்கென்று நான் கொடுத்த உன் ஆறாவது அறிவும் இருக்கிறது; அதனைக் கொண்டு, நன்மை, தீமை தெளிந்தாராய்ந்து, அதன்படி நட என்று சொல்கிறானோ வல்ல இறைவன்?

ஏன் ஷைத்தானைப் படைக்க வேண்டும்? அவன் இல்லையென்றால் எல்லாருமே நல்லவர்களாக இருப்பார்களே; உலகில் கொலை, கொள்ளை, வஞ்சம், துரோகம், அழுகை, கோபம் எதுமே இருக்காதே. இவை இல்லாத பூவுலகில் வாழ்வது எவ்வளவு சுகமாக இருக்கும்? சுகமாக இருக்கும்;  ஆனால் எல்லாருமே நல்லவர்களாக இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? அடிமைகள் அல்லவா, சுய விருப்பு, வெறுப்பு இல்லாது, உடையவன் இட்ட கட்டளைப்படி நடக்கும் நிர்பந்தத்தில் இருப்பர்.  அதாவது, சுய பகுப்பு என்ற ஒன்றே இல்லாது,  கிட்டத்தட்ட ஐந்தறிவு படைத்த விலங்குகள் போலவே மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மனிதர்களுக்கு மட்டும் ஆறாவது அறிவு எதற்கு? நன்மை, தீமை பகுத்தறிந்து, சரியானதைத் தேர்ந்தெடுத்து, அதன் வழி நடக்கவே இந்த ஆறாவது அறிவு!!

நம்முன், பலவகை உணவுகளையும் வைத்து, இதில் உன் விருப்பப்படியும், தேவைப்படியும் உணவைத் தேர்ந்தெடுத்து உண் என்று சொல்வதற்கும்; ஒரே வகை உணவை மட்டும் வைத்து, இதுதான் உன் அன்றாட உணவு என்பதற்கும் வேறுபாடு உண்டல்லவா?

ஆக, ஷைத்தானைப் (தீய சக்தியை) படைத்ததன்மூலம் மனிதர்களுக்கு நியாயமே செய்துள்ளான் இறைவன். வாய்ப்பே கொடுக்காமல், நல்லவர்களாக இருக்க வைப்பதைவிட, ஆப்ஷன்ஸ் கொடுத்து, Choose the best answer என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை நம்மிடமே தந்திருக்கிறான் இறைவன்!!



Post Comment

49 comments:

Prathap Kumar S. said...

புல்லரிக்குது.... :)

//செட் பண்ணி வச்ச ஃபிகரை தள்ளிக்கொண்டுபோகும் நண்பன்//

நீங்களுமா??? நீங்களே ஒரு பெண்ணை பிருன்னு சொல்லலாமா??? :))

நட்புடன் ஜமால் said...

அவன் உதவியாலேயே நல்லதை தேர்ந்தெடுப்போம் நல்லோர்களில் ஒருவராய் வாழ்வோம்.

இன்ஷா அல்லாஹ்.

அப்துல்மாலிக் said...

என்னா வில்லங்கம்...

விளக்கம் அருமை, தெளிவா எளிய நடையில் கையாண்ட விதம் சூப்பர்

Menaga Sathia said...

தெளிவான விளக்கம் ஹூசைனம்மா!!

எம்.எம்.அப்துல்லா said...

//நீங்களுமா??? நீங்களே ஒரு பெண்ணை பிருன்னு சொல்லலாமா??? :))


//

நாம் அவர்களைச் சொல்வதுமட்டுமில்லை. பெண்களும் நம்மை ஃபிகர் என்ற வார்த்தையாளேயே அழைக்கின்றார்கள்.

ஹுஸைனம்மா said...

அப்துல்லா & பிரதாப்,

சொல்ல வர்ற விஷயத்தையே கண்டுக்காம, ஃபிகரையே பிடிச்சுகிட்டு நிக்கிறீங்களே ரெண்டு பேரும்?

அதுசரி, இவ்ளோ பெரிய பிளாக்ல, அந்த ஒரு வார்த்தைதான் கண்னுக்குத் தெரியுதுன்னா, ஒண்ணு, உங்க இண்டரெஸ்ட் அப்படி இல்லன்னா, நான் எழுதின மேட்டர் புரியலையா? :-))

எம்.எம்.அப்துல்லா said...

//அதுசரி, இவ்ளோ பெரிய பிளாக்ல, அந்த ஒரு வார்த்தைதான் கண்னுக்குத் தெரியுதுன்னா, ஒண்ணு, உங்க இண்டரெஸ்ட் அப்படி இல்லன்னா, நான் எழுதின மேட்டர் புரியலையா? :-))

//

ஆபிஸில் இருந்து படித்து பின்னூட்டம் போடுறதால அடுத்த பின்னூட்டம் போடுறதுக்கு கொஞ்சம் டைம் ஆயிடுச்சு.அப்பப்ப வேலையும் பார்க்கணும்ல :) அதுக்குள்ள கோவுச்சுக்கிறீங்களே!!!

எம்.எம்.அப்துல்லா said...

இறைவன் எனக்கு ஷைத்தானைத் தனியாகவெல்லாம் வைக்கவில்லை.என்னுடனேயே வைத்து விட்டான் :))

Thamiz Priyan said...

நல்ல விளக்கம் கொடுத்து இருக்கீங்க...வெல்டன்!

Vidhya Chandrasekaran said...

புரியுது ஆனா புரியல:)))

enrenrum16 said...

ஹூசைனம்மா, நீங்க வருத்தப்படாதீங்க...நீங்க சொன்ன மேட்டர்களில் அவங்க இரண்டு பேரோட ஆறாவது அறிவு ச்ச்சூஸ் பண்ணிக்கிட்டது பிகர் மேட்டரை. மத்தபடி எங்க எல்லாருக்கும் நீங்க சொன்ன ஹீரோ மேட்டரும் பலவகை சாப்பாடு மேட்டரும் நல்லாவே புரிஞ்சுது.இறைவன் தான் நமக்கு எத்தனை வகை சாப்பாடு கொடுத்திருக்கான்...தினமும் என்ன சமையல் பண்ணலாமுன்னு ரொம்ப குழப்பமா இருந்தது. இனிமே பெஸ்ட் ஆப்ஷனை தெளிவா ச்சூஸ் பன்னிக்கிறேன் ஹூசைனம்மா... நன்றி நல்ல பதிவு போட்டதுக்கு.

அம்பிகா said...

ரொம்ப வித்யாசமா யோசிக்கீறீங்க ஹூஸைனம்மா நீங்க.

ஷாகுல் said...

தலைப்ப பார்த்த உடனே நீங்க உலகப்படம் பாத்துட்டு விமர்சனம் எமுதுறீங்களோனு நினைச்சேன். நல்லா விளக்கிருக்கிங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு விளக்கம் ஹுசைனம்மா.. சரியான ஆன்ஸ்வரை தேர்ந்தெடுக்கலன்னா.. தோத்தும் போவோம் வாழ்க்கைப் பரிட்சையில்.. ஆஹா..

இராகவன் நைஜிரியா said...

எங்கேயோ போயிட்டீங்க... (ஒரு படத்தில் ஜனகராஜை பார்த்து ஒரு ஆக்டர் சொல்வது மாதிரி படிங்க...)

விளையாட்ட்டுக்கு சொன்னேன். சீரியசா எடுத்துகிடாதீங்க.

ரொம்ப நல்லா அனலைஸ் பண்ணியிருக்கீங்க. வாழ்க்கையை ரொம்பவும் ரசிப்பவர்களால் மட்டுமே இவ்விதம் அனலைஸ் செய்ய முடியும்.

இராகவன் நைஜிரியா said...

// எம்.எம்.அப்துல்லா said...

ஆபிஸில் இருந்து படித்து பின்னூட்டம் போடுறதால அடுத்த பின்னூட்டம் போடுறதுக்கு கொஞ்சம் டைம் ஆயிடுச்சு.அப்பப்ப வேலையும் பார்க்கணும்ல :) அதுக்குள்ள கோவுச்சுக்கிறீங்களே!!! //

அண்ணே... என்னாது வேலை பார்க்குறீங்களா..... (படிச்ச உடனே ஷாக் அடிச்சமாதிரி இருந்துச்சண்ணே..) ஏன்.. ஏன்.. எப்ப இருந்து இப்படி ஆச்சு அண்ணே... அய்யோ பாவமண்ணே நீங்க

Chitra said...

Choose the best answer என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை நம்மிடமே தந்திருக்கிறான் இறைவன்!!


............ very simple explanation. Great!
கலக்கலா ஆராய்ஞ்சு, அருமையான விஷயத்தை எளிமையாய் சொல்லிட்டீங்க.

இராகவன் நைஜிரியா said...

// ஹுஸைனம்மா said...
அப்துல்லா & பிரதாப்,

சொல்ல வர்ற விஷயத்தையே கண்டுக்காம, ஃபிகரையே பிடிச்சுகிட்டு நிக்கிறீங்களே ரெண்டு பேரும்?

அதுசரி, இவ்ளோ பெரிய பிளாக்ல, அந்த ஒரு வார்த்தைதான் கண்னுக்குத் தெரியுதுன்னா, ஒண்ணு, உங்க இண்டரெஸ்ட் அப்படி இல்லன்னா, நான் எழுதின மேட்டர் புரியலையா? :-))//

இவ்வளவு பெரிய ப்ளாக்ல, இவ்வளவு வார்த்தைகளுக்கு நடுவுல அதை கவனிச்சு எழுதியிருக்காங்களே..

1. அதுக்காக அவங்கள பாராட்டணும்.
2. அவங்க ப்ளாக் முழுக்க படிச்சு இருக்காங்கன்னு இதன் மூலம் நமக்கு நன்கு தெரிகின்றது.
3. டெம்ப்ளேட் பின்னூட்டம் போடாம, நல்லா உன்னிப்பா கவனிச்சு படிச்சு இருக்காங்க அப்படின்றதே பெரிய விஷயம்.

இராகவன் நைஜிரியா said...

// எம்.எம்.அப்துல்லா said...
இறைவன் எனக்கு ஷைத்தானைத் தனியாகவெல்லாம் வைக்கவில்லை.என்னுடனேயே வைத்து விட்டான் :))//

ஹை... எனக்கு ஒரு ஜோடி கிடைச்சுடுச்சு..

இராகவன் நைஜிரியா said...

// மேனேஜரிடம் போட்டுக்கொடுத்தே பேர் வாங்கும் அக்கவுண்ட்ஸ் அஸிஸ்டண்ட் //

எனக்கு மத்ததை விட இதுதான் முதல்ல பட்டுதுங்க... மத்த டிபார்ட்மெண்ட் அசிஸ்டெண்ட் எல்லாம் போட்டு கொடுக்கமாட்டாங்களா அப்படின்னு கேட்கத் தோணிச்சு...

காரணம் என்ன தெரியுமா.. நான் அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மெண்டைச் சேர்ந்தவன்... ஹி...ஹி..

Prathap Kumar S. said...

//ஆபிஸில் இருந்து படித்து பின்னூட்டம் போடுறதால அடுத்த பின்னூட்டம் போடுறதுக்கு கொஞ்சம் டைம் ஆயிடுச்சு.அப்பப்ப வேலையும் பார்க்கணும்ல :) அதுக்குள்ள கோவுச்சுக்கிறீங்களே!!//

நான் அப்துல்லாண்ணன் மாதிரி பொய் சொல்ல மாட்டேன்... சத்தியமா எனக்கு பிகர் மட்டும் தான் கண்ணுக்கு தெரிஞ்சது... இந்த வயசுல இதைவிட வேறன்ன முக்கியமா இருக்க முடியும்?இதுக்குப்போய் டென்ஷனாயிட்டு....

இராகவன் நைஜிரியா said...

// வாய்ப்பே கொடுக்காமல், நல்லவர்களாக இருக்க வைப்பதைவிட, ஆப்ஷன்ஸ் கொடுத்து, Choose the best answer என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை நம்மிடமே தந்திருக்கிறான் இறைவன்!! //

ஆம். Choose the best answer செய்யும் போது, ஆண்டவனை நினைத்துச் செய்தால், அவரின் உதவியால், சரியான விடையை செய்ய இயலும். இங்கும் அவரின் உதவி நமக்கு தேவையாய் இருக்கு.

Prathap Kumar S. said...

ராகவன் சார்... சமயத்துல வந்து காப்பாத்துனீங்க... நல்லாச்சொலுங்கசார்... எவ்ளோ உன்னிப்பா பதிவை படிச்சிருக்கேன்...என்னைப்போய் தப்பா நினைச்சிட்டாங்க ஹுஸைனம்மா... கிரேட் இன்சல்ட் :))

ஸ்ரீராம். said...

Choose the best answer என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை நம்மிடமே தந்திருக்கிறான் இறைவன்!//

கரெக்ட். நல்ல சிந்தனை.
எல்லோரிடமும் நல்லவனும் (ஹீரோ) இருக்கிறான். கெட்டவனும் (வில்லன்) இருக்கிறான்.

ஜெய்லானி said...

/// யாருமே இல்லையென்றாலும், நம்மனமே நம் வில்லனாய் பல சமயங்களில்!!///

இதன் வலிமை நாம் உறங்க போகும் தான் தெரியும். எங்கிருந்து பிடிச்சிங்க இந்த வார்த்தை .சூப்பர்.....

Thenammai Lakshmanan said...

ஹுசைனம்மா நல்ல பதிவு அருமை எல்லாவற்றிலும் சரியானதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் அறிவையும் கடவுள் கொடுத்து இருக்கிறார் .. எனவே அவருக்கு நன்றி..

அப்துல்லா ராகவன் ரெண்டு பேரும் எப்புடீ ..? இப்புடீ..?

Anonymous said...

வில்லன் இல்லைன்னா சுவாரசியம் இருக்காதாம். போராடி ஜெயிச்சாதான் வெற்றிக்கனி ருசிக்கும் :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லா யோசிச்சிருக்கீங்க ஹூசைனம்மா.. குட் ஜாப்!

ம்ம்.. ஆனா எனக்குள்ள இருக்கற கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கலையே..

பாத்திமா ஜொஹ்ரா said...

Sura Al-Insan (1 - 31)
திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா? (76:1)

(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக, அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். (76:2)
நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான். (76:3)

நிராகரிப்பாளர்களுக்கு சங்கிலிகளையும், அரிகண்டங்களையும், கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம். (76:4)

நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காஃபூராக (கற்பூரமாக) இருக்கும், (76:5)

(காஃபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள். (76:6)

அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். (76:7)

மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். (76:8)

"உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை" (என்று அவர்கள் கூறுவர்). (76:9)

"எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்" (என்றும் கூறுவர்). (76:10)

எனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும், மனமகிழ்வையும் அளிப்பான். (76:11)

மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான். (76:12)

அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள். (76:13)

மேலும், அதன் (மர) நிழல்கள், அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும். (76:14)

(பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும். (76:15)
(அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள். அவற்றைத் தக்க அளவாக அமைந்திருப்பார்கள். (76:16)

மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள். (76:17)

'ஸல்ஸபீல்' என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது. (76:18)
இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர். (76:19)

அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர். (76:20)
அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர், அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான். (76:21)

"நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று" (என்று அவர்களிடம் கூறப்படும்). (76:22)

நிச்சயமாக நாம் தான் உம்மீது இந்தக் குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம். (76:23)

ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராக, அன்றியும், அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர். (76:24)
காலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருப்பீராக. (76:25)

இன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு(துதி) செய்வீராக. (76:26)

நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர், அப்பால் பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர். (76:27)


திருக்குர்ஆன்

பாத்திமா ஜொஹ்ரா said...

நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய அமைப்பையும் கெட்டிப்படுத்தினோம்; அன்றியும் நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டு வருவோம். (76:28)

நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக. (76:29)

எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன். (76:30)
அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான். (76:31)
திருக்குர்ஆன்

Muruganandan M.K. said...

"ஆக, நான் வில்லனாக இருப்பதும், ஹீரோவாக இருப்பதும் நம் கையில், அதாவது என் மனதில்...."

நல்ல தெளிவான கருத்து.

இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் அதை விட இனிய உலகு இருக்க முடியுமா?

Abu Khadijah said...

தலைப்ப படிச்ச உடனே, இவங்களுக்கு சினிமாக்கூட டேரக்ட் பன்னுவாங்க போலன்னு நினைச்சேன், உள்ளே படித்த பிறகுத்தான் தெரிந்தது இந்த கட்டுரையின் அருமையான விசயங்களை.
இறைவன் நம்மை படைத்து சோதிப்பதற்காகவே, இந்த உலகத்திற்கு அனுப்பியிருக்கிறான், நல்லது செஞ்ச சொர்க்கம் செல்வாய், கெட்டது செஞ்சா நரகம் செல்வாய்ன்னு அப்பயே குர் ஆன்ல சொல்லிட்டான்.

ஆக, இந்த இந்த உலகத்திலே கெட்டதுன்னு ஒன்னு இருக்கிறதுனாலத்தான் நல்லது எதுன்னு மனிதனால் அறிய முடிகிறது. கெட்டவைகளை விட்டுத்தள்ளி நல்லவைகளை பின்பற்றி சொர்க்கம் செல்லலாமே, இன்ஷா அல்லாஹ்

இமா க்றிஸ் said...

ஹுசேன், நீங்க சீரியசாப் பாடின பாட்டு அழகா இருக்கு.

அதுக்கு வந்திருக்கிற எசப்பாட்டுகளும் சுவாரசியமாக இருக்கு. ;)

ஸாதிகா said...

///
நம்முன், பலவகை உணவுகளையும் வைத்து, இதில் உன் விருப்பப்படியும், தேவைப்படியும் உணவைத் தேர்ந்தெடுத்து உண் என்று சொல்வதற்கும்; ஒரே வகை உணவை மட்டும் வைத்து, இதுதான் உன் அன்றாட உணவு என்பதற்கும் வேறுபாடு உண்டல்லவா? ///

அற்புதமான உவமானத்துடன் அழகிய கருத்துக்களை பறிமாறி இருக்கின்றீர்கள் ஹுசைனம்மா!

Unknown said...

அட அட அட

அன்புத்தோழன் said...

ஹுஸைனம்மா: ஏன்பா லேட்டு...?
அன்புத்தோழன் : சாரி மிஸ் லேட் ஆய்டுச்சு....?
(என்னா வில்லங்கம் பதிவை நினைத்துகொள்ளவும் ஹா ஹா)

சில நாட்களாக நான் ப்ளாக் பக்கம் வர்றதே இல்ல.... அதான் பின்னூட்டம் போட கால தாமதம்.... நலம் தானே ஹுஸைனம்மா.....

நான் கூட நீங்க ஏதோ படம் பார்த்துவிட்டு அதுக்கு தான் விமர்சனம் எழுதுரீங்கலோனு நினைச்சேன் முதலில்.... ஆனா மக்களுக்கு என்ன ஒரு நல்ல மெசேஜு சொல்லிபுட்டீங்க கடைசில....

நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல ஹுஸைனம்மா....
(உண்மையா இதுல உள்குத்து எதுவும் இல்லீங்)

☀நான் ஆதவன்☀ said...

எளிமையாக அழகான விளக்கம் :)

Jaleela Kamal said...

நல்ல விளக்கம், எடுத்துரைத்த விதம் மிக அருமை.

(நாஞ்சிலாருக்கு பொண்ணு தேடிக்கிட்டு இருக்கும் போது, பிகர், கில்மாக்கள் தான் கண்ணில் படும்,) அவரபோய் இப்படி பிலாக் முழுவதும் படிக்கலையான்னு கேட்கலாமா?

கண்ணா.. said...

//Choose the best answer என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை நம்மிடமே தந்திருக்கிறான் இறைவன்//

உண்மைதான்

நல்ல இடுகை..

கமெண்டல நாஞ்சிலையும், அப்துல்லா அண்ணனையும் வறுத்திட்டீங்க...


நான் லேட்டா வந்தது நல்லதா போச்சு.. இல்லேன்னா நானும் மாட்டிருப்பேன்...:)


அதற்கு ராகவன் அண்ணன் சொன்னதை வழிமொழிகிறேன்.

அன்புடன் மலிக்கா said...

ஹுசைன்னம்மா, பிகருன்னு பிகருன்னு என்னோ சொல்லிக்கிறாங்களே அப்படின்னா என்னம்மா..

வில்லங்கம் விளக்கமாயிருக்கு..

நிஜாம் கான் said...

//மனம்தானே நமக்கு வில்லனாய் நிற்கிறது பலபோதும்//

மனம் ஒரு குரங்கு அல்ல ஹூசைனம்மா! அது தான் சைத்தான் தங்குமிடம், நாம் தடுமாறாமல் இருக்கும் வரை. இறைவன் காப்பானாக.

நிஜாம் கான் said...

இருந்தாலும் பிகர் என்ற வார்த்தையைத் தவிர்த்திருக்கலாம். அதுக்குபதிலா வேறு ஏதாவது வார்த்தையை போடலாம்

ஹுஸைனம்மா said...

பிரதாப்:
//புல்லரிக்குது.... :)//

கவனம், ஏதாவது மேய்ஞ்சிறப்போவுது!!

ஜமால்: இன்ஷா அல்லாஹ். அவன் உதவியல்லாமல் எதுவும் நடப்பதில்லை.

அபுஅஃப்ஸர் - நன்றி.

மேனகா -நன்றி.

ஹுஸைனம்மா said...

அப்துல்லாஹ் - கோச்சுக்கலை; ச்சும்ம்மா..

// ஷைத்தானைத் தனியாகவெல்லாம் வைக்கவில்லை.என்னுடனேயே வைத்து விட்டான்//

யாருங்க அவர் எப்பவும் உங்களோடேயே இருக்கிறவர்? :-)))
இறைவன் துணை கொண்டு வெல்ல முடியாததில்லை.

தமிழ்ப்பிரியன் - நன்றி.

வித்யா - புரியலையா? நிஜமா? உங்க கொசுக்கடி பதிவையே நான் புரிஞ்சுகிட்டேன்??!!! ;-))

என்றும் - வாங்க, நன்றி. அப்பப்ப காணாமப் போயிடுறீங்களே!

அம்பிகா - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ஷாஹுல் - உலகப்படமா? தமிழ்ப்படமே தகராறு எனக்கு.

முத்துலெட்சுமி - வாங்க; நன்றி.

ராகவன் சார் - //வாழ்க்கையை ரொம்பவும் ரசிப்பவர்களால் மட்டுமே இவ்விதம் அனலைஸ் செய்ய முடியும்.//

ரசிப்பதெல்லாம் கொஞ்சமாத்தான். ஆனா சில விஷயங்களைக் கடந்து வர, பொறுமை ரொம்பத் தேவைப்படுகிறது. இப்படி எழுதியாவது வருகிறதா பாப்போம்னுதான்... :-)))

//இவ்வளவு பெரிய ப்ளாக்ல, இவ்வளவு வார்த்தைகளுக்கு நடுவுல அதை கவனிச்சு எழுதியிருக்காங்களே..//

அண்ணே, இதுக்குத்தான் பெரியவங்க சகவாசம் வேணுங்கிறது; நல்லவேளை எடுத்துச் சொன்னீங்க எனக்கு!!

சித்ரா - நன்றி;

ஹுஸைனம்மா said...

பிரதாப் - //சத்தியமா எனக்கு பிகர் மட்டும் தான் கண்ணுக்கு தெரிஞ்சது... இந்த வயசுல இதைவிட வேறன்ன முக்கியமா இருக்க முடியும்?இதுக்குப்போய் டென்ஷனாயிட்டு....//

//என்னைப்போய் தப்பா நினைச்சிட்டாங்க ஹுஸைனம்மா... கிரேட் இன்சல்ட்//

அவசரப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாச்சு, அப்றமென்னா?

ஸ்ரீராம் - வாங்க; நன்றி.

ஜெய்லானி - ஆமாங்க, உறக்கம் வரமுடியாதபடி தவிக்கும்போதுதான் என் தவறுகள் தெரியும்; ஆனால் காலையில் மீண்டும்..

தேனம்மையக்கா - நன்றி அக்கா.

சின்னம்மிணிக்கா - ஆமாங்க, கஷ்டப்பட்டு கிடைப்பதன் அருமையே அருமை.

எல் போர்ட்- கேள்வி என்னன்னே சொல்லலியே நீங்க? (நல்லவேளை!!)

ஹுஸைனம்மா said...

ஃபாத்திமா - நன்றி திருமறை வசனங்களுக்கு. இறைவன் உதவியோடு இவ்வினிய சுவர்க்கம் புக நாடுவோம், இன்ஷா அல்லாஹ்.

டாக்டர் சார் - நன்றி கருத்துக்கும், வருகைக்கும்.

அதிரை எக்ஸ். - ஆமாங்க, துன்பம் இருப்பதால்தான் இன்பத்தின் மதிப்பு அறிகிறோம்.

இமா - வாங்க, முதல் மற்றும் தொடரப்போகும் கருத்து(களு)க்கு நன்றி.

ஸாதிகாக்கா - நன்றி அக்கா.

பேநா மூடி - என்ன அப்படியே லயிச்சு போய் நின்னுட்டீங்க, ஒண்ணுமே சொல்லாம?

ஹுஸைனம்மா said...

அன்புத்தோழன் - //சில நாட்களாக நான் ப்ளாக் பக்கம் வர்றதே இல்ல//
//நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல ஹுஸைனம்மா//

உள்குத்து இல்லைன்னு.... நம்புறேன்... வேறென்ன செய்ய?

ஆதவன் - நன்றி.

ஜலீலாக்கா - நன்றி அக்கா.

கண்ணா - வாங்க, நன்றி. பட்டவர்களைப் பார்த்துத் திருந்திக் கொள்வதும் நல்லவர்களுக்கழகுதானே!!

மலிக்கா - ஃபிகர்னா தெரியாத அப்பாவிதான் நீங்க, நான் நம்பிட்டேன்!!

நிஜாம் - நன்றி; ஆம், இறைவன் காக்க வேண்டும்.

அரபுத்தமிழன் said...

நன்றி ஹுசைனம்மா. கண்டேன் வில்லனை இன்று :-)

உங்களைத் தொடர்ந்து படிக்கா விட்டாலும் அவ்வப்போது வந்து படித்திருக்கிறேன். சுவாரசியமாகவும் விளக்கமாகவும் எழுதக் கூடிய கைவரிசை உங்களுக்கு வாய்த்திருக்கிறது. வாழ்த்துக்கள். அதிலும் குறிப்பாக உங்களின் இறை தேடல் பதிவுகள் Excellent.
Keep writing.