பெட்ரோல் விலை ஒரு வாரம் முன்னே ஏறிடுச்சு!! இது எப்போன்னு யோசிக்காதீங்க. இந்தியாவில இல்லை, இங்கே அமீரகத்தில!! ஆமாங்க. நம்பமுடியலல்ல?? ஒரு லிட்டருக்கு 15 ஃபில்ஸ் (100 ஃபில்ஸ் = 1 திர்ஹம்) கூடியிருக்கு. இனி ஒரு லிட்டர் 1.52 திர்ஹம்கள் விலை (கிட்டத்தட்ட 20 ரூபாய்)!! அடிக்க வராதீங்க மக்களே! இங்க இருக்கதுல இந்த பெட்ரோல் ஒண்ணுதான் சீப்பா கிடைச்சுகிட்டு இருந்துது. இனி அதுவும் அதிக விலைன்னா, கார் வைத்திருக்கும் மத்தியதரக் குடும்பங்களுக்கு பட்ஜெட்டில் வேட்டியே விழும்!! ஸ்கூல் பஸ் கட்டணங்களும் கூடும்.
அதிலயும், விசேஷம் என்னன்னா, இன்னும் கூட விலையேற்றம் இருக்கும், படிப்படியாக அதிகப்படுத்தப்படும்னு வேற அறிவிச்சுருக்காங்க!! இதுக்குக் கண்டனம் தெரிவிக்கும்முகமா, புதனன்று ஒருநாள் பெட்ரோல் பங்குகளைப் புறக்கணிக்கணும்னு எஸ்.எம்.எஸ்.கள் சுற்றி வருகிறதாம். எந்தளவுக்கு சாத்தியம்னு தெரியலை.
இதுவரை கேலன்களில் அளவிடப்பட்ட பெட்ரோலை, இப்பத்தான் சில நாட்கள் முன், லிட்டர்களில் அளவீடு செய்யப்படும்னு அரசாங்கம் அறிவிப்பு செய்து, செயல்படுத்தப்பட்டது. (1 gallon = 4 litres) இதுவும் ஒரு தந்திரம்னு ஒருவர் கருத்துத் தெரிவிச்சுருக்கார்; அதாவது 1 கேலனுக்கு, 60 ஃபில்ஸ் விலை கூடுதுன்னு சொன்னா அதிகமாத் தெரியும்; அதனால லிட்டர்ல மாத்தி, 15 ஃபில்ஸ்தானேன்னு தோணும்படியா செய்திருக்காங்க, அப்படின்னு புலம்பிருக்கார். அப்படியும் இருக்குமோ!!
நம்ம தலைவர், பஸ் கட்டணத்தை அதிகப்படுத்திட்டு, அந்த ஊர்ல இவ்வளவு, இந்த ஊர்ல இவ்வளவு, தமிழ்நாட்டுலதான் இன்னும் குறைவுன்னு சொல்றதுதான் ஞாபகத்துக்கு வருது!! ஒருவேளை அங்க ரிடையர்டான தலைமையகச் செயலாளர்கள் யாராவது இங்க வந்து அரண்மனையில வேலைக்குச் சேந்திருப்பாங்களோ??
&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$
எங்க வீட்ல டி.வி.ல ஒன்லி டி.டி. சேனல்கள் மட்டும்தான் தெரியுதுன்னு சொன்னேனில்லையா? ஒருநாள் அதுல, யோகா பத்தி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில யோகாவில் அதிகத் திறமை பெற்ற ஒருவரின் யோகா போஸ்களைக் காண்பிச்சுகிட்டிருந்தாங்க. “யோக வலிமையால் இவரால், கண்ணாடித்துகள்களை உண்ணவும், மூன்று இஞ்ச் நீளமுள்ள ஆணியைத் தன் கையில் ஏற்றிக் கொள்ளவும் முடியும்”னு அறிவிப்பாளர் சொல்ல, அச்சச்சோ, இதெல்லாம் காமிக்கப் போறாங்களா, ரிமோட் எங்க, சேனல் மாத்துன்னு சொல்லிகிட்டிருக்கும்போதே, “ஆனால் இவையெல்லாம் குரூரமான காட்சிகளாக இருக்கும் என்பதால் இவற்றைத் தவிர்க்கிறோம்.” அப்படின்னு சொன்னாங்களே பார்க்கணும்!!
அதான் டி.டி.!! இதுதான் மற்ற தனியார் சேனல்களுக்கும் டி.டி.க்கும் உள்ள வித்தியாசம்!!
90-களில், நேயர் கடிதங்களை வாசிக்கும் “எதிரொலி” நிகழ்ச்சியில், ஒரு நேயரின் “தனியார் தொலைக்காட்சிகள் போல நீங்கள் சுவையான நிகழ்ச்சிகள் வழங்குவதில்லையே” என்ற கேள்விக்குப் பதிலளித்த ஒருவர் (நடராஜன் என்று நினைக்கிறேன்) “தனியார் தொலைக்காட்சிகள், உங்கள் நாவின் ருசியை மட்டுமே நிறைவு செய்யும் ஹோட்டல் போல; எங்கள் நிகழ்ச்சிகளோ, உங்கள் வயிற்றைக் கெடுக்காத, முழு உடலுக்கும் தேவையான போஷாக்கான வீட்டு உணவு போல!!” என்றது நினைவுக்கு வந்தது.
&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$
துபாய்லருந்து கொச்சி போன எமிரேட்ஸ் விமானம், கொச்சி பக்கத்துல வந்தப்போ, பயங்கர டர்புலன்ஸ்ல (Turbulence - தமிழ் வார்த்தை என்ன?) அகப்பட்டதுல 20 பேர் வரை காயமடைஞ்சுருக்காங்க. டர்புலன்ஸ்னா, நாம் ஆட்டோல போகும்போது பள்ளத்துல போனா குலுக்குமே அந்த மாதிரி இருக்கும். இடி மழை இருக்கும் இடங்களில் அதிகமா இருக்கக்கூடுமாம். 35,000 அடி உயரத்துல பறந்துகிட்டிருந்த விமானம், இதற்குக் காரணமான, கீழ்நோக்கிச் செலுத்தும் காற்றுப் பொட்டலத்தில (air pockets) சிக்கியதில், 15,000 அடி தூரத்திற்குக் கட்டுப்பாடின்றி ஒரேயடியாகக் கீழிறங்கியிருக்கிறது. இம்மாதிரிச் சூழ்நிலையில் காயம்படாம இருக்கணும்னா, எப்பவும் சீட் பெல்ட் போட்டுட்டே இருக்கணும். ஃபிளைட்ல போறவங்க இனி கவனமா இருங்க.
&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$&$
பெட்ரோல் விலையேற்றம் பற்றி என் ரங்ஸ் ரொம்பக் கவலையாப் பேசிகிட்டிருந்தார். இனிமே ஒரு ஃபுல் டாங்க் பெட்ரோல் போடும்போது இவ்வளவு அதிகமாகும்; இன்னும் அதிகமாகிடுச்சுன்னா அவ்வளவு அப்படின்னு கணக்குப் போட்டுகிட்டிருந்தார். எனக்குப் புரிஞ்சுது இந்தப் பில்ட்-அப்பெல்லாம் எதுக்குன்னு. “ஆமாங்க, இனி துபாயில இருக்க உங்க அண்ணன் வீட்டுக்கும், அல்-அய்ன்ல இருக்க உங்க அக்கா வீட்டுக்கும் மாசம் ஒருமுறை போறதை இனிக் குறைச்சுக்கலாம். எவ்ளோஓஓஓ பெட்ரோல் ஆகும்!!” அப்புறம் சவுண்டைக் காணோம்!! யார்கிட்ட?
நல்லவேளை என் தங்கச்சிங்க அபுதாபிலயே இருக்காங்க!!
|
Tweet | |||
58 comments:
எனக்குப் புரிஞ்சுது இந்தப் பில்ட்-அப்பெல்லாம் எதுக்குன்னு. “ஆமாங்க, இனி துபாயில இருக்க உங்க அண்ணன் வீட்டுக்கும், அல்-அய்ன்ல இருக்க உங்க அக்கா வீட்டுக்கும் மாசம் ஒருமுறை போறதை இனிக் குறைச்சுக்கலாம். எவ்ளோஓஓஓ பெட்ரோல் ஆகும்!!” அப்புறம் சவுண்டைக் காணோம்!! யார்கிட்ட?
நல்லவேளை என் தங்கச்சிங்க அபுதாபிலயே இருக்காங்க!!
.....ha,ha,ha,ha,ha......
ட்ரங்கு பெட்டி - பெட்ரோல் டாங்கு பெட்டி .............. மதிப்பு கூடிட்டு இருக்கிறது.
// எங்கள் நிகழ்ச்சிகளோ, உங்கள் வயிற்றைக் கெடுக்காத, முழு உடலுக்கும் தேவையான போஷாக்கான வீட்டு உணவு போல!!// கன்னா பின்னா ரிப்பீட்டு!!!!
எமிரேட்ஸ் விமானம் மேட்டர்- ஆமாம் நான் கூட கேள்விப்பட்டேன். ஏதோ இந்த மட்டும் தலை தப்பிச்சான் தம்பிரான் புண்ணியம் தான். விதிமுறைகளுட்பட்டு பிரயாணம் பண்ணினாலே எந்த பிரச்சினையும் வராது.
கடைசி பாரா பஞ்ச் சூப்பர் போங்க.. ரசிச்சு சிரிச்சேன்!
//“ஆமாங்க, இனி துபாயில இருக்க உங்க அண்ணன் வீட்டுக்கும், அல்-அய்ன்ல இருக்க உங்க அக்கா வீட்டுக்கும் மாசம் ஒருமுறை போறதை இனிக் குறைச்சுக்கலாம். எவ்ளோஓஓஓ பெட்ரோல் ஆகும்!!” //
சைக்கிள் கேப்புல லாரி ஓட்டறதுங்கறது இதுதானா.....,
பாவம் ஹுஸைனப்பா... தல, அப்பிடியே சைலன்ஸ மெயின்டெயின் பண்ணுங்க தல, நமக்கும் ஒரு காலம் வரும். அப்ப வெச்சு வூடு கட்டிறலாம்.
கேலனிலிருந்து லிட்டருக்கு மாத்தியாச்சா? எதற்காக இந்த விலையேற்றம்? இருக்கிற தேவையில்லாத ஆடம்பர செலவைக் குறைத்தாலே போதும், சவூதி பாய்ஸ் என்ன செய்யப்போறாங்களோ!! இங்கே விலை கூட்டமாட்டார்கள் என நம்புவோமாக, இங்கே 0.45 ஹலாலா (@Rs 6/-).
1:56 தானா? குறைச்சலா இருக்கே.. ஷேக் கலிபாவிடம் சொல்லி இன்னும் கூட்டச் சொல்லலாம்.. ;-)
அடடா பெட்ரோலும் இனி தண்ணி மாதிரி ஆகப்போகுதா? ஹ்ம்ம்ம்
//ஃபிளைட்ல போறவங்க இனி கவனமா இருங்க.///
ரைட்டு...
கலக்கல். வூட்டுகாரரை அடக்குவதில் கெட்டிகாரர்ங்க நீங்க.
sms வச்சி அமீரகத்தில் ஒன்னும் பன்ன இயலாது
-----------------
அதான் டி.டி.!! இதுதான் மற்ற தனியார் சேனல்களுக்கும் டி.டி.க்கும் உள்ள வித்தியாசம்!!]]
புரியுது புரியுது ...
----------------
அப்புறம் சவுண்டைக் காணோம்!! யார்கிட்ட?
நல்லவேளை என் தங்கச்சிங்க அபுதாபிலயே இருக்காங்க!!]]
நீங்க எவ்வளவு நல்லவங்கன்னு ரங்ஸுக்கு இன்னும் தெளிவு படுத்திட்டீங்க போல ...
// நாஸியா said...
அடடா பெட்ரோலும் இனி தண்ணி மாதிரி ஆகப்போகுதா? ஹ்ம்ம்ம்
//
இந்தக் கமெண்டு டாப்பு :))))
//Turbulence தமிழ் வார்த்தை என்ன?
//
காற்றுக் கொந்தளிப்பு
அங்கேயே, பெட்ரோல் விலை ஏறிபோச்சா!!!
ம்...ம்....கஷ்டம்தான்.
:))
//கார் வைத்திருக்கும் மத்தியரக் குடுபங்களுக்கு பட்ஜெட்டில் வேட்டியே விழும்//
//ஆனால் இவையெல்லாம் குரூரமான காட்சிகளாக இருக்கும் என்பதால் இவற்றைத் தவிர்க்கிறோம்.//
நல்லவேளை என் தங்கச்சிங்க அபுதாபிலயே இருக்காங்க!!//
ஹீஸைனம்மா,இவற்றை ரசித்து சிரித்தேன்.
ட்ரங்கு பெட்டியில இருந்து நிறைய செய்திகள் கொட்டுதே..!
கடைசி பாரா வழக்கம் போல உங்க ஸ்டைல்.
பெட்ரோல் விலையை ஏத்தியாச்சா ?.... ரைட்டு..
’’’இன்னிக்கும் இவர் அந்த புரஃபசர் ஏன் இப்படி செஞ்சார்னு புலம்பிட்டுத்தான் இருக்கார்!’’
என்று ஒரு பதிவில் எழுதி இருந்தேங்க..
உண்மை தாங்க...
இந்த் போடு போட்டா....
பாவங்க உங்க வீட்டுக்காரர்....
ட்ரங்குப் பெட்டி பொக்கிஷம்தான்!
//ஆமாங்க, இனி துபாயில இருக்க உங்க அண்ணன் வீட்டுக்கும், அல்-அய்ன்ல இருக்க உங்க அக்கா வீட்டுக்கும் மாசம் ஒருமுறை போறதை இனிக் குறைச்சுக்கலாம். எவ்ளோஓஓஓ பெட்ரோல் ஆகும்!!//
பாவம். அந்த ரெண்டாவது மேட்டர் உண்மைலேயே உண்மைதான்
’’ஸ்கூல் பஸ் கட்டணங்களும் கூடும்.’’
நிங்களே ஐடியா கொடுப்பீங்க போல...
’’’90-களில், நேயர் கடிதங்களை வாசிக்கும் “எதிரொலி” நிகழ்ச்சியில்’’
நினைவு வைதிருக்ரேங்க..கீப் ட் அப்
ஒரு கேலன் 3.75 லிட்டர்தான் 4 லிட்டர் அல்ல.
குறை கண்டு பிடிப்பது சுலபம்,பதிவு எழுதுறது ரொம்ப கஷ்டம்னு நீங்க சொல்றது கேக்குது..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//sriram said...
ஒரு கேலன் 3.75 லிட்டர்தான் 4 லிட்டர் அல்ல.//
ரெண்டு விதமான கேலன்கள் உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன்; ஒண்ணு 4லி; இன்னொண்ணு 4.54லி ன்னு கேள்விப்பட்டிருக்கேன்; அது 4லி இல்லியோ, 3.75- ஆ? தகவலுக்கு நன்றி ஸ்ரீராம்!!
கூகுளிச்சதுல கிடைச்சது!!
1 US gallon equals 3.78541178 Liter
1 Imperial gallon equals 4.54609188 Liter
நான் ரெண்டுக்கும் பொதுவா 4லின்னு சொல்லிருக்கேன், சரிதானே? நாங்க நடுநிலைமைவாதியாக்கும்!!! ;-))))
//1 US gallon equals 3.78541178 Liter
1 Imperial gallon equals 4.54609188 Liter //
Imperial Gallon is something which I learnt today. Thanks for sharing
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//அப்புறம் சவுண்டைக் காணோம்!! யார்கிட்ட?//
பாவம் ஹுஸைனப்பா.. :-))))
அமீரகத்தில் இருந்த அல்லது இருக்கும் கேலன் முறை இதுதான்
1 US gallon equals 3.78541178 Liter
ட்ரங்கு பெட்டியிலிருந்து வருவதெல்லாம் லேட்டஸ்ட் செய்திகளாக இருக்கிறதே.
பெட்ரோல் விலை கூடிப்போச்சா. அப்ப இந்தியாவுல இன்னும் கூடுமே.
நல்லாவே ட்ரங்குபொட்டி திறந்திருக்கு..
நல்ல அருமையான தகவல்களை தெரிந்து கொண்டேன்.
//ஃபிளைட்ல போறவங்க இனி கவனமா இருங்க.//
ஓகே..
பெட்ரோல் விலையும் கூடிருச்சா..அப்ப சவூதியிலேயும் கூட்டிருவாங்க.. 1 லிட்டர் 45 ஹலாலாவுக்கு (100 ஹலாலா = 1 ரியால்) வித்துக்கிட்டு இருந்தது இப்போ எவ்வளோ ஆகப்போகுதோ..
பெட்ரோல்லயும் இரண்டு ரகம் இருக்கு. 91, 95. 91 பெட்ரோல்= 45 ஹலாலா, 95 பெட்ரோல்= 65 ஹலாலா..
//இராகவன் நைஜிரியா said...
கலக்கல். வூட்டுகாரரை அடக்குவதில் கெட்டிகாரர்ங்க நீங்க.//
அடப் போங்கண்ணே, அடங்குறதாவது!! அபூர்வமா நடக்கும் அதிசய நிகழ்வுகளைத்தான் பதிவில எழுதி சந்தோஷப்பட்டுக்கிறேன், அவ்வளவுதான்!!
////அப்புறம் சவுண்டைக் காணோம்!! யார்கிட்ட?//
பாவம் ஹுஸைனப்பா.. :-))))//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
//ஆமாங்க, இனி துபாயில இருக்க உங்க அண்ணன் வீட்டுக்கும், அல்-அய்ன்ல இருக்க உங்க அக்கா வீட்டுக்கும் மாசம் ஒருமுறை போறதை இனிக் குறைச்சுக்கலாம். எவ்ளோஓஓஓ பெட்ரோல் ஆகும்//
பெரிய ஆளா இருப்பீங்க போலிருக்கே!!!
நல்ல நியூஸ் ரீல்.. அது சரி கொச்சியில யாரு இருக்காங்க ஹுஸைனம்மா?? நான் அங்க தான் இருக்கேன்.
பதிவு சூப்பர்...
//கூகுளிச்சதுல கிடைச்சது!!
1 US gallon equals 3.78541178 Liter
1 Imperial gallon equals 4.54609188 Liter
நான் ரெண்டுக்கும் பொதுவா 4லின்னு சொல்லிருக்கேன், சரிதானே? நாங்க நடுநிலைமைவாதியாக்கும்!!! //
ஆனா யக்கோவ், இந்த சமாளிபிகேசன் அருமையிலும் அருமை...
டீ டீ பத்தின உங்க கமெண்ட் சேம் ப்ளட்.
//எனக்குப் புரிஞ்சுது இந்தப் பில்ட்-அப்பெல்லாம் எதுக்குன்னு. “ஆமாங்க, இனி துபாயில இருக்க உங்க அண்ணன் வீட்டுக்கும், அல்-அய்ன்ல இருக்க உங்க அக்கா வீட்டுக்கும் மாசம் ஒருமுறை போறதை இனிக் குறைச்சுக்கலாம். எவ்ளோஓஓஓ பெட்ரோல் ஆகும்!!” அப்புறம் சவுண்டைக் காணோம்!!//
:))
பெட்ரோல் விலை :(( இந்த விசயத்துல இந்தியாவை பின் தொடர ஆரம்பிச்சுட்டாங்க போல.
அந்த விமானம் தலை கீழா பல்டியெல்லாம் அடிச்சுதாமே!
ஹி ஹி உங்களை துபாய்ல நடக்குற பதிவர் சந்திப்புக்கு வராம இருக்குறததுக்காக அவர் அப்படி ஒரு பிட்டை போட்டிருக்கார்... :)))
யக்காவ் வீட்டுகரங்களை இப்படி எல்லாம் கூட படுத்தலாமா. யோசனை நல்லாவே இருக்கு. எங்க அம்மாவிடம் சொல்லணும். பாவம் எங்க அப்பா தான்...!! ஹும் ))))
//☀நான் ஆதவன்☀ said...
அந்த விமானம் தலை கீழா பல்டியெல்லாம் அடிச்சுதாமே! //
யாருங்க இப்படிலாம் புரளி கிளப்புனது??!! அதெல்லாம் இருக்கவே முடியாது!! (ஏற்கனவே நான் ஃபிளைட்ல போகும்போது பயத்தோடத்தான் இருப்பேன், இப்ப இன்னும் பீதியக் கிளப்பாதீங்க மக்கா!!)
ஃப்ளைட் குலுங்கும்போது, சீட் பெல்ட் மாட்டாம இருந்தவங்க, கீழே விழுந்து அடிபடலாம்; இங்கச் சிலருக்கு, தலை கூரையில அடிபட்டதாச் சொல்றாங்க.
//Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...
அது சரி கொச்சியில யாரு இருக்காங்க ஹுஸைனம்மா?? நான் அங்க தான் இருக்கேன்.//
கொச்சியில எனக்குத் தெரிஞ்சவங்கன்னு நீங்கதான் இருக்கீங்க இப்ப!! ;-))
//அதான் டி.டி.!! இதுதான் மற்ற தனியார் சேனல்களுக்கும் டி.டி.க்கும் உள்ள வித்தியாசம்!!//
டிடி இன்னும் தரமாதான் இருக்குன்னு கேக்கவே சந்தோசமா இருக்கு
“ஆமாங்க, இனி துபாயில இருக்க உங்க அண்ணன் வீட்டுக்கும், அல்-அய்ன்ல இருக்க உங்க அக்கா வீட்டுக்கும் மாசம் ஒருமுறை போறதை இனிக் குறைச்சுக்கலாம். எவ்ளோஓஓஓ பெட்ரோல் ஆகும்!!” அப்புறம் சவுண்டைக் காணோம்..
அச்சச்சோ இப்படி சொன்னா எப்புடி சத்தம் வரும்.
ஆகா இனி அடக்கி வாசிக்கனும் ஊரு சுத்துறத, மல்லி உனக்குதான் இந்த தகவல் கேட்டுக்கோ நல்ல கேட்டுக்கோ..
நீங்க நல்லாயிருக்கோனும்..
///யார்கிட்ட?///
அதானே...!
:))
டிரங்குப் பெட்டிக்குள்ளருந்து பற்பல
வாசனைகள் கலந்து வந்தன.....
Petrol vilai angeyum appadithaanaa ?
//யார்கிட்ட? //
:-))
போன பதிவுல சொல்லமறந்திட்டேன்.. வரும்போது ஒரு ஹீரோ பேனா வாங்கிட்டு வாங்க :-)
ஆ... ஏறிடுச்சா? அபுதாபியிலயுமா????.
நல்லாவே முடிச்சிருக்கிறீங்க:):) சவுண்டே இல்லையோ?:)
ஹா ஹா வழக்கம் போல் டிரெங்கு பெட்டியில் நலல் தகவல்க<
அப்ப மாதம் ஒரு முறிஅ துபாய் வரமாட்டீஙக்ளா?
இனி அப்ப அப்ப பார்க்கலாம் நினைத்தேனே ஹிஹி
வழக்கம் போலவே டிரங்குப் பொட்டியிலிருந்து முத்துக்கள தான் தெளிச்சிருக்கீங்க..
எப்பவும் போல ரிசர்ச் பன்னாம எழுதிட்டீங்களோ.. காலனிலும் & விமானத்தாழ்விலும்..!?
20000 அடின்ன... யாரும் கொச்சி போய் சேர்ந்திருக்க மாட்டங்கங்றது நிபுனர்களின் கனிப்பு.. 200 அடிங்கறதே உண்மையாயிருக்கும்..
அதும் இதுமாதிரு டர்புலன்ஸ் மற்ற நாடுகளில் அதிகமாக உண்டே.. இந்த பக்கம் இப்போ தான் நம்ம கேள்வி படுறோம்.. !!
சரி டி டி வச்சு பசங்களை இவ்ளோ நாள் கொடுமைப்படுத்துனது போதும் ஹுசைனம்மா... டிஷ் டிவி கனெக்சன் எடுங்க.. நாட் ஜியோ, அனிமல் ப்ளானட் னு நல்ல சானல்களும் இருக்கு தானே??
பெட்ரோல் இங்க இன்னும் 120 (1000 பைசா 1 ரியால், 1 ரியால் = 116 இந்திய ரூபாய்) பைசால இருக்கு.. அங்க எல்லாம் கூட்டிட்டா இங்கயும் கூடலாம்.. பார்க்கலாம்..
போட்டிகடைய மறுபடி தொறந்தாச்சா... ஆனா நான் தான் லேட் அடண்டன்சு... பெட்ரோல் விளைய ஏத்திட்டாய்ங்களா?!?! என்ன கொடுமைங்க இது... என்ன இருந்தாலும் டி டி டி டி தான்... அட தூர்தர்ஷன சொன்னேங்க... வெள்ளிகிழமை நைட்டு மட்டும் படம்... சக்திமான்... ஒலியும் ஒளியும்... வயலும் வாழ்வும்... அடடா... அப்புடியே சின்ன வயசுக்கு மறுபடி போனும்போல இருக்கு... அப்புறம் ஒரு சின்ன டவுட்டு ஹுஸைனம்மா.... காற்று வெற்றிடத்தில புகுந்த ஏரோப்ளேனு கட்டுப்பாடில்லாமல் தொபக்கடீர்னு விழுந்தது 1500 அடின்னு தான் கேள்வி பட்டேன்.... 15000 அடின்னு போட்டுருக்கீங்க.... சரி தானா?
அடப்பாவமே பெட்ரோல் 1 . 52 திர்ஹம்ஸ்ஆ இப்போ? நாங்க அங்க இருந்தப்ப ஒரு திர்ஹாம்க்கும் கீழனு ஞாபகம்... நான் சொல்றது 2002 ல (அடிக்காதீங்க சிஸ்டர்)....கஷ்டம் தான்... அதுவும் அந்த டிராபிக் கொடுமைல இன்னும் கஷ்டம் தான்...
கடேசீல சொன்ன family மேட்டர் சூப்பர் பஞ்ச்....
ரீத்து அப்பா & அன்புத் தோழன்:
எமிரேட்ஸ் ஃபிளைட் குறித்து ஆரம்பத்தில் வந்த தகவல்களில் 15,000 அடி தாழ்ந்ததாகத்தான் செய்தி வந்தது. இதோ கீழேயுள்ள சுட்டி பார்த்தால் புரியும். எனினும் தவறைச் சுட்டிக் காண்பித்ததற்கு நன்றிகள்!!
Gulf News
Earlier reports had cited local airline officials in Kochi saying the plane had dropped more than 15,000 feet before the pilot regained control and landed the Boeing 777 safely at Nedumbasserry airport in Kochi, but senior airline officials later dismissed the figure.
//“யோக வலிமையால் இவரால், கண்ணாடித்துகள்களை உண்ணவும், மூன்று இஞ்ச் நீளமுள்ள ஆணியைத் தன் கையில் ஏற்றிக் கொள்ளவும் முடியும்”//
That's so silly. யோகால எவ்ளவோ நல்லது எல்லாம் இருக்க, இப்படி முட்டாள் தனமானது தான் சொல்லிகாட்டுவாங்களாமா? இவங்கள எல்லாம் தூக்கில போடணும்.
சித்ரா - வங்க. நன்றிப்பா.
அநன்யா - வாங்க; நன்றி.
தராசு - வாங்க. அப்படியே பாடிகிட்டு மட்டும் இருங்க “எங்களுக்கும் காலம் வரும்”னு!!
ஷஃபிக்ஸ் - வாங்க; அடுத்த விலையேற்றத்தோடு, சவூதியின் விலைக்கு இரு மடங்காகிவிடுமாம் இங்கு!!ஹூம்...
நாஸியா - எப்படிங்க இப்படில்லாம்?!! தண்ணியும் கிட்டத்தட்ட இதே விலைதான் இல்லியா?
இர்ஷாத் - வாங்க; நன்றிப்பா.
ராகவன் சார் - வாங்க. நன்றி.
ஜமால் - வாங்க. இன்னுமா புரியாம இருக்கும் ரங்க்ஸுக்கு!! ஆமா, எஸ்ஸெம்ஸ்லாம் வேலைக்காவல அன்னிக்கு!!
அப்துல்லா - வாங்க புலவரே!! நன்றி தமிழ் வார்த்தைக்கு.
சைவக்கொத்ஸ் - வாங்க.
சென்ஷி - அட, நம்ம புன்னகை மன்னன்!! வாங்க.
கோமதி அக்கா - வாங்கக்கா; ரசித்தமைக்கு நன்றி.
அம்பிகா - வாங்க; நன்றி.
நாடோடி - வாங்க; ஆமாங்க.
மலரக்கா - வாங்கக்கா. அவரெங்கே பாவம்!!?? அதெல்லாம் சும்மா சொல்லிகிறதுதான்!! அப்புறம் பல பள்ளிகளுக்கு போக்குவரத்து சேவை வழங்குற “ஸெனித்” பஸ் கம்பெனி, 25 திர்ஹம் கூட்டப்போறதாச் சொல்லிருக்காங்க!!
எல்.கே. - வாங்க; உண்மையேதாங்க!!
வாங்க அருணா டீச்சர் - நன்றிக்கா.
ஸ்ரீராம் - வாங்க; நன்றி.
அமைதிச்சாரல் -- வாங்க; நன்றிப்பா.
தமிழ்ப்பிரியன் - தகவலுக்கு நன்றி.
ஸ்டார்ஜன் - வாங்க; நன்றி. இங்கயும் பெட்ரோல் ஸ்பெஷல், ஸூப்பர், ஈகோன்னு வகைகள் இருக்கு.
ஜெய்லானி - வாங்க; நன்றி. அவரொன்னும் பாவமில்ல. நாந்தான்!!
மைதிலி - வாங்க; நன்றிப்பா.
செந்தில்நாதன் - வாங்க; சமாளிஃபிகேஷன் தெரியாம ஒண்ணும் பண்ண முடியாதே, அதான் அப்பப்ப!!
தென்றல் - வாங்கப்பா. நன்றி.
ஆதவன் - வாங்க. நன்றி. அதெல்லாம் அதுக்குன்னா வராம விட்டுடுவோமா?
ஹரீகா - புதுசா இருக்கீங்க; வாங்க; நன்றிங்க.
சின்ன அம்மிணிக்கா - வாங்க; இன்னும் நிறைய நிகழ்ச்சிகள் நல்ல நல்லதா இருக்குப்பா. பார்க்க சந்தோஷ்மா இருந்துது. ஆனா அதுவும்கூட இப்பத் தெரியல!!
மலிக்கா - உங்களை மிஞ்ச முடியுமா ஊர் சுத்துறதில?
விதூஷ் - வாங்கப்பா; நன்றி!!
நிஸாம் அண்ணே - வாங்க; நன்றி.
டாக்டர் சார் - வாங்க; ஆமாங்க பெட்ரோல் இங்கயும் அப்பிடித்தான்!!
உழவன் - வாங்க; ஹீரோ பேனாவா, வாங்கிடலாம்; மறக்காம திருநெல்வேலி வந்து வாங்கிக்கங்க.
ஷர்ஃபுதீன் - வாங்க; நன்றி.
ரீத்து அப்பா - வாங்க. ரிஸர்ச்செல்லாம் பண்றதில்லை; தினமும் நியூஸ் படிச்சாப் போதுமே!!
பசங்களுக்கு நல்ல சானல்கள் பார்க்க வைக்கணும்னு ஆசைதான்; ஆனா கூடவே வர்ற சன், கலைஞர் இன்னபிறக்கள் நம்மக் கட்டுப்பாட்ட இழக்க வச்சுடுது. டி.வி. இல்லாம ரொம்ப ஃப்ரீயா இருக்கோம். ரங்ஸ் சின்னவனக் கூட்டிட்டு வாக்கிங் போறார். பெரியவன் நியூஸ்பேப்பர் நிறைய வாசிக்கிறான். எனக்கும் ரொம்ப நேரம் கிடைக்குது. இதக் கெடுக்க வேண்டாமேன்னுதான்...
ஆனா, லேப்டாப் அந்த நேரத்துல கொஞ்சத்த முழுங்கிடுறதத்தான் தவிர்க்க முடியல. விரைவில் அதுக்கும் ஒரு வழி பண்ணனும்.
அதிரா - வாங்க; “அபுதாபிலயுமா”ன்னா, அங்கயுமா?
ஜலீலாக்கா - வாங்கக்கா. அதெல்லாம் சும்மா சொல்றதுதான். வழக்கம்போல வந்துகிட்டுத்தான் இருப்போம்; இதோ இந்த வாரம் அல அய்ன் ப்ரோக்ராம் போட்டாச்சு!!
அன்புத் தோழன் - ரொம்பப் பிஸி போல பங்காளிங்க நீங்க மூணு பேரும்!!
அப்பாவி தங்ஸ் - வாங்க; ஆமாங்க, இனி 1.65 திர்ஹம் ஆகிடுமாம் சீக்கிரம்!!
ஹஹ்ஹா.. அந்த யார்கிட்ட ரொம்பப் பிடிச்சிருந்தது :))
Post a Comment