Pages

கதைசொல்லி




பொதுவா, சின்னப் பசங்களுக்கு தாத்தா, பாட்டிதான் கதைகள் சொல்வாங்க. என் அம்மா வீட்டில் நான் வளர்ந்த சமயம்,  தாத்தாவுடன் நல்லா கலகலப்பாகப் பேசி விளையாடுவோம் என்றாலும், கதைகள் எதுவும் சொன்னதில்லை; பிஸினஸ், அரசியல் என்று பிஸியாக இருந்ததால்தான் அப்படி என்று நினைக்கத் தோன்றவில்லை. என் அம்மாவுக்குப் பத்து வயதிருக்கும்போதே பாட்டியும் இறந்துவிட, அம்மாவின் சாச்சி, எங்களோடு சரிக்குச்சமமாகப் பேசுவதுண்டு என்றாலும் கதைகள் எதுவும் சொன்னதில்லை. இன்னும் சொல்லப்போனால், நானெல்லாம் பள்ளிவிட்டு வந்தால் வீட்டில் இருப்பதே அபூர்வம். தெருவில் பசங்களோடு ஐஸ்பால், கொக்கோ, பாண்டி, கோலி, இன்னபிற விளையாடுவதும், ஆற்றில் குளிப்பதும்,  பின் ஓடிவந்து வீட்டுப்பாடம் செய்து விட்டுத் தூங்கவுமே நேரம் இருந்தது; இதில் கதை கேட்கவில்லை என்பதே இப்போ இந்தத் தொடர்பதிவுக்காக யோசிக்கும்போதுதான் தெரிகிறது!! மற்ற நேரங்களில் சாச்சிகள், மாமாக்கள், அடுத்த, எதிர்வீடு உறவினர்களும் பேசும் குடும்பக் கதைகளைக் கேட்டு நேரம் போகும்!!

சிலகாலம், என் வாப்பும்மா, பெத்தாப்பாவோடு இருந்தபோது, நிறைய “கதைகள்” சொல்வார்கள் - தன் 13 பிள்ளைகளில் இப்போ இருக்கும் நால்வர் தவிர மீதி குழந்தைகள் இறந்த கதை, பெத்தாப்பா தன் சகோதரர்களால் (சொத்து குறித்து) ஏமாற்றப்பட்ட கதை, நண்பர்களால் வியாபாரத்தில் ஏமாற்றப்பட்ட கதை,  அவர்களிருவரும் ஊறுகாய், அப்பளம், வடகம் விற்றுப் பிழைத்த கதை, ராமேஸ்வரத்தில் வியாபாரம் செய்த கதை, என் வாப்பா ஸ்காலர்ஷிப் வாங்கி இஞ்சினியரிங் படித்தது, ஹாஸ்டல் ஃபீஸ்கூட கட்ட முடியாமல், வாப்பா பட்டினி கிடந்த கதை..  இப்படி எல்லாமே அவர்கள் வாழ்வியல் கதைகளாகவே இருந்தன!!

எனது எட்டு, ஒன்பது வயது வரை இந்தக் கதைகள் எல்லாம் எனக்கு மிகச் சுவாரஸ்யமாகவும், அவர்கள்மீது பரிதாபமும், மிகுந்த மரியாதையும் வரவைப்பதாகவும் இருந்தன; ஆனால், எப்போ அவர்கள் என் அம்மாவைக் குற்றம் சொல்வதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேனோ, அப்போதே அவர்களின் கதைகள் சுவைகுன்றத் துவங்கி அவர்களிடம் எதிர்வாதம் செய்யத் தொடங்கினேன். எனக்கும் அப்போது கதைகள் கேட்பதைவிட, படிப்பதில் ஆர்வம் தலைதூக்கத் தொடங்கியிருந்தது; இன்னப் பத்திரிக்கை, புத்தகம்தான் என்றில்லாமல்,  துவரம்பருப்புப் பொட்டலப் பேப்பர் உட்படக் கிடைத்ததை எல்லாம்,  வாசித்துக் கொண்டிருந்தேன்.

என் அம்மா வீட்டில் கதை சொல்வோர் யாருமில்லையென்றாலும், புத்தகங்கள் நிறையக் கிடைத்தன. அதனாலேயே வாசிக்கும் ஆர்வம் வளர்ந்தது. ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், என் வாப்பாவும், அவரின் இரு சகோதரிகளும் படித்தவர்கள். ஆனால், அவர்கள் வீட்டில் பாடப் புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்கள் கிடையாது. என் அம்மா வீட்டிலோ, தாத்தாவைத் தவிர அப்போது வேறு யாரும் பட்டப் படிப்பு படித்திரவில்லை; ஆனால் அங்கு ஓரளவு புத்தகங்களும், எல்லாவிதப் பத்திரிகைகளும் குவிந்து கிடக்கும். அம்மா உட்பட வீட்டுப் பெண்கள் எட்டுப் பேரும் அதிகபட்சம் ஐந்தாம் வகுப்புதான் படித்திருந்தனர். ஆனால் எல்லாருக்கும் வாசிக்கும் ஆர்வம் இருந்தது.

பின்காலங்களிலும், என் வாசிக்குமார்வத்திற்குத் தீனிபோட என் அம்மா புத்தகங்கள் (அம்புலிமாமா வகையறாக்கள்) வாங்கித் தருவார். மற்ற செலவுகளில் கறார் பேர்வழியான அம்மா இதற்குமட்டும் சற்று அதிகமாகச் செலவு செய்ததற்கு, அவரின் ஆர்வமும் காரணமாக இருக்க வேண்டும். பள்ளியிறுதி படிக்கும்போது, ரீடர்ஸ் டைஜஸ்ட்டுக்கு சந்தா கட்ட அனுமதி கேட்டபோது வழக்கமான கேள்விக்கணைகள் தொடுக்காமல், ஒன்றிரண்டோடு அனுமதி கிடைத்தது!! என் வாசிப்பார்வம் என் அம்மாவின் ஜீனிலிருந்துதான் அதிகம் வந்திருக்கவேண்டுமென்று நினைக்கத் தோன்றுகிறது. என் வாப்பாவும் நிறைய வாசிப்பதுண்டு, ஆனால் ஆங்கிலசெய்தி/ டெக்னிக்கல்/ பிஸினஸ் குறித்த விஷயங்களில்தான் ஆர்வம் அதிகம்.

தற்பொழுது என் பெரிய மகனிடம், என்னைப் போலவே, வாசிக்கும் ஆர்வத்தைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது; வாப்பா & தாத்தாவைப் போல, டெக்னிக்கல் புத்தகங்களும் பிடித்திருக்கிறது. சின்னவனுக்கு ஆரம்ப காலத்தில் கதைகள் சொன்னேன்; ரொம்ப கேள்விகள் கேட்டதால், அடிக்கடி  பதில் சொல்லத் தெரியாமல் முழிக்க நேர்ந்ததால், குறைத்து விட்டேன். புத்தகங்கள் வாசிக்க, தற்போதுதான் ஆர்வம் காட்டிவருகின்றான். இப்போ அவன் வாசித்து எனக்குக் கதை சொல்லுகிறான்!!

Post Comment

58 comments:

CS. Mohan Kumar said...

கதைகள் கேட்பது பின்னாளில் நல்ல பலன் அளிக்கும் என்பது பொதுவான கருத்து.

புத்தகம் படித்தல் நல்ல விஷயம்; உங்கள் மகன் செய்வது அறிந்து மகிழ்ச்சி.

ராமலக்ஷ்மி said...

//இப்படி எல்லாமே அவர்கள் வாழ்வியல் கதைகளாகவே இருந்தன//

ஒரே கதையை அலுக்காமல் திரும்பத் திரும்ப சொல்லுவார்கள். கேட்கவும் அப்படியே. மாற்றிச் சொன்னால் திருத்தம் சொல்லும் அளவுக்கு நம் மனதில் பதிந்து போயிருக்கும் அக்கதைகள்:)!

அழகான பகிர்வு ஹுஸைனம்மா.

Prathap Kumar S. said...

ஆக...நீங்க சின்ன வயசுல கதைகள் கேட்கவே இல்லை... இதை முதல்லயே சொல்லியிருக்கலாமே...:) அதுக்கு ஒரு கதையா??? :))

ஸாதிகா said...

//சின்னவனுக்கு ஆரம்ப காலத்தில் கதைகள் சொன்னேன்; ரொம்ப கேள்விகள் கேட்டதால், அடிக்கடி பதில் சொல்லத் தெரியாமல் முழிக்க நேர்ந்ததால், குறைத்து விட்டேன்// நீங்க முழிச்சீங்க...ஏற்கனவே காது குத்தியாச்சு..

சைவகொத்துப்பரோட்டா said...

அப்போ, உங்க பையன் சொன்ன
கதை ஒன்னு சொல்லுங்க :))

ஜெய்லானி said...

நமது வாழ்க்கையே ஒரு கதை மாதிரிதான், அதில் வரும் அனுபவங்கள் தான் பின் வரும் தலைமுறையை நேர் வழியில் நடக்க வைக்கிறது.

angel said...

படிப்பதில் ஆர்வம் தலைதூக்கத் தொடங்கியிருந்தது; இன்னப் பத்திரிக்கை, புத்தகம்தான் என்றில்லாமல், துவரம்பருப்புப் பொட்டலப் பேப்பர் உட்படக் கிடைத்ததை எல்லாம், வாசித்துக் கொண்டிருந்தேன்.

school books listல வரவே இல்ல?

பித்தனின் வாக்கு said...

என்னைப் போலவே இருக்கீங்க. பையனுக்கு நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கவும்.

சந்தனமுல்லை said...

நல்ல நினைவுமீட்டல்!

Anonymous said...

அருமையா அனுபவங்களைப்பகிர்ந்துக்கறிங்க ஹுசைனம்மா.

Ahamed irshad said...

புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை ஊக்குவிப்பது நல்லது..

தமிழ் உதயம் said...

குழந்தைகளிடம் தேடுதல் குணம் உண்டு. அவர்கள் சரியானதை எடுத்து கொள்வார்கள். நாம் தான் பயப்படுகிறோம்- நம்மை பார்த்து நம் பெற்றோர்கள் பயந்த மாதிரி.

அன்புத்தோழன் said...

//நானெல்லாம் பள்ளிவிட்டு வந்தால் வீட்டில் இருப்பதே அபூர்வம். தெருவில் பசங்களோடு ஐஸ்பால், கொக்கோ, பாண்டி, கோலி, இன்னபிற விளையாடுவதும்//

சரியான ஆளுதான் நீங்க... இம்புட்டு வேலை பாத்துருக்கீங்களா... கிரேட்டு...

//ஆற்றில் குளிப்பதும், பின் ஓடிவந்து வீட்டுப்பாடம் செய்து விட்டுத் தூங்கவுமே நேரம் இருந்தது//

என்னதான் இருந்தாலும் காரியத்துல கண்ணா இருந்துருக்கீங்கனு தெரியுது.... :-)

அன்புத்தோழன் said...

//என் வாப்பா ஸ்காலர்ஷிப் வாங்கி இஞ்சினியரிங் படித்தது//


எது!!! உங்க வாப்பா அந்த காலத்துலயே இன்ஜீனியரா!?!?!? மை டாடி பிசினஸ் மேனாக்கும்... மூனாங்க்லாஸ்ல மிஸ்ஸுக்கு முருங்கக்காய் பரிச்சுகுத்ததோட சரியாம்... அதுக்கப்புறம் மழைக்கு கூட பள்ளி பக்கம் ஒதுங்கினதில்லையாம்... இதுக்கு வறுமையும் ஒரு காரணம்... அவங்க பாக்காத வேலையே இல்லாத அளவுக்கு எடுபுடி, பீடா கடைலேந்து எல்லா வேலையும் பாத்து..... பல சொல்ல முடியாத கஷ்டங்கள் பசி பட்டினி எல்லாத்தையும் first half ரஜினி படம் மாதுரி தாண்டி..... second half ரஜினி படம் மாதுரி இப்போ மாஷா அல்லா ரொம்ப பெருசா இல்லாட்டியும் he's one of the best businessman i've ever seen... என்னோட insipiration.... எங்களோட வருங்காலத்துக்காக தன்னோட 30 வருஷ நிகல் காலத்தை சவுதியில் துளைத்த தியாகி...

தராசு said...

//தற்பொழுது என் பெரிய மகனிடம், என்னைப் போலவே, வாசிக்கும் ஆர்வத்தைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது//

அப்ப நீங்க படிச்சவங்களா, ரைட்டு.

அன்புத்தோழன் said...

//எனது எட்டு, ஒன்பது வயது வரை இந்தக் கதைகள் எல்லாம் எனக்கு மிகச் சுவாரஸ்யமாகவும், அவர்கள்மீது பரிதாபமும், மிகுந்த மரியாதையும் வரவைப்பதாகவும் இருந்தன//

இன்றும் நாங்க(உம்மா, வாப்பா, என் 4 அக்காக்கள்) ஒன்னு கூடினா அதிகாலை நாலு மணி வரை கூட பல கதைகள பத்தி பேசிகிட்டே இருப்போம்... அதே சுவாரசியத்துடன்...

உம்மாவ பெத்தவங்க ரொம்ப சின்ன வயசுல போயி சேர்ந்துட்டாங்களாம்... சொந்த காரங்க கிட்ட இருந்து தான் வளந்திருக்காங்க... கஷ்டமான நேரத்துல கண்டவன் தலைல கட்டிவைக்க போன நேரத்துல, எங்க உம்மாவ ஹீரோவா போயி நா கட்டிக்குறேனு Dad சொல்ல... அதுக்கப்புறம் எவ்ளோ கஷ்ட பட்டாங்க... எல்லாம் கேக்க கேக்க படம் மாதுரி ஓடும் கண் முன்னாடி.....

இது போன்ற பகிர்தலே வருங்கால சந்ததியினருக்கு குடும்பத்தின் மீது பாச பிணைப்பும், பொறுப்புணர்ச்சி மிக்க சிறப்பான குழந்தைகளை உருவாக்கவும் உதவும்னு நினைக்கிறேன்.... மாற்று கருத்து இருந்தா சொல்லுங்க....

அன்புத்தோழன் said...

//இன்னப் பத்திரிக்கை, புத்தகம்தான் என்றில்லாமல், துவரம்பருப்புப் பொட்டலப் பேப்பர் உட்படக் கிடைத்ததை எல்லாம், வாசித்துக் கொண்டிருந்தேன்//

சரியான புத்தக புளுவா நீங்க.... இப்புடி மேஞ்சுருக்கீங்க.... பொட்டல பேப்பர் கூட விடாம... ஹ ஹ....:)

க.பாலாசி said...

இப்பவே பசங்களோட வாசிப்பனுபவங்கள ஊக்குவிக்கறது நல்லது... அதை தவறாம செய்யுங்க....

அன்புத்தோழன் said...

//என் வாசிப்பார்வம் என் அம்மாவின் ஜீனிலிருந்துதான் அதிகம் வந்திருக்கவேண்டுமென்று நினைக்கத் தோன்றுகிறது//

//என் பெரிய மகனிடம், என்னைப் போலவே, வாசிக்கும் ஆர்வத்தைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது//

எல்லாம் ஜீன்ஸ் பண்ற வேலை... ஹி ஹி....

எதிர்காலத்தில் இன்னும நிறைய படித்து பெரிய பெரிய மேதைகளை (என்ன) போல சாதனைகள் பல புரிய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக... ஆமீன்... ஹ ஹ....

கண்ணா.. said...

ஓரு கதை சொல்ல சொல்லி தொடர்பதிவிற்கு கூப்பிட்டா நீங்க உங்க சொந்தகதையை சொல்லீட்டீங்க...! நடக்கட்டும்...நடக்கட்டும்..

//தற்பொழுது என் பெரிய மகனிடம், என்னைப் போலவே, வாசிக்கும் ஆர்வத்தைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது//

வாசிப்புதான் பலவிதமான யோசிக்கும் திறனை வளர்க்கும்னு சொல்லுறாங்க. நல்ல விஷயம்தான். நிறைய புத்தகங்களை வாங்கி கொடுங்கள்.

கண்ணா.. said...

நான் இதுக்கு முன்னாடி கமெண்ட் போடுறப்போ... மத்தவங்க கமெண்ட் இருந்ததே..இப்போ ஓண்ணையும் காணோம்....!!!!!!!!!!!!!!


மறுபடியும் கிணத்த காணுமா......

:))))

நாடோடி said...

நீங்க‌ள‌ க‌தை சொல்ல‌வில்லை.... க‌தை தெரியாத‌த‌ற்கான‌ க‌ர‌ண‌த்தை சொல்லியிருக்கீர்க‌ள்... செல்லாது செல்லாது...எங்க‌ப்ப‌ அந்த‌ நாட்டாமை?......

கண்ணா.. said...

நான் போட்ட கமெண்ட்ட காணுமே...

:((

அபி அப்பா said...

ஹுசைனம்மா!

உங்க அப்பா அரசியல்ல பிசியா? என்ன கட்சி! சும்மா ஒரு க்யூரியாசிட்டி தான் தெரிஞ்சுக்க:-))

"உழவன்" "Uzhavan" said...

நான் எப்படி கதை சொல்லப் போறேனோ தெரியல :-)

அப்துல்மாலிக் said...

கதை சொல்ல சொல்லி கதைப்பதுக்கும் ஒரு தனிதிறமை வேணும்தான்...

சிநேகிதன் அக்பர் said...

ஒரு கதை சொல்ல சொன்னா, உங்க கதையைச்சொல்லி அசத்திட்டீங்க. நல்ல படிக்க வாழ்த்துகள்.

Anonymous said...

நீங்க ஆத்துல எல்லாம் விளையாடிருக்கீங்களா!! குடுத்து வெச்சவங்கப்பா நீங்க..

***
எங்க வாப்சா காக்கா குருவி கதையக்கூட அவ்வளவு சுவாரசியமா சொல்லுவாங்க!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

கதை நிறைய அனுபவங்களை நமக்கு கத்துக்கொடுக்குது.

நல்லா சொல்லிருக்கீங்க.

ஆமா ஹூசைனம்மா.. இதுல கதையே வரலியே.. :))

ரிஷபன் said...

வாசிப்பு அனுபவம் தருகிற ஆனந்தம் வேறெதில் உண்டு?!

ஹுஸைனம்மா said...

அக்பர்/ஸ்டார்ஜன்: கதை சொல்லச் சொல்லி சொல்லலையே, கதை கேட்ட அனுபவத்தைத்தானே சொல்லச் சொன்னார் ஸ்டார்ஜன். இதோ அவர் வார்த்தைகள் கீழே:

//உங்கள் சின்ன வயதில் கதைகேட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். //

ஏற்கனவே இந்தத் தொடர்பதிவு பதிவுலகில இப்படித்தான் ரவுண்ட்ஸ் போயிட்டிருக்கு. அதேமாதிரிதான் நினைச்சு நானும் எழுதிட்டேன். சரிதானே?

ஸ்ரீராம். said...

வீட்டிலுள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்ல வேண்டும். நீங்கள் எழுதியதில் இருந்து பெரியவர்கள் தங்கள் குடும்பம், மூதாதையர்கள் பற்றியே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நிறையப் பேர் தங்கள் குடும்ப மூதாதையர்கள் பற்றியே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

Madumitha said...

உங்கள் பையனுக்கு
என் வாழ்த்துக்கள்.

அம்பிகா said...

நினைவலைகள் அருமை.
\\ ஸாதிகா said...
//சின்னவனுக்கு ஆரம்ப காலத்தில் கதைகள் சொன்னேன்; ரொம்ப கேள்விகள் கேட்டதால், அடிக்கடி பதில் சொல்லத் தெரியாமல் முழிக்க நேர்ந்ததால், குறைத்து விட்டேன்// நீங்க முழிச்சீங்க...ஏற்கனவே காது குத்தியாச்சு..\\
அதான...

Chitra said...

ஆஹா..... நமக்கும் ஒரு தொடர் பதிவு அழைப்பு இதில் இருக்கு...... கதை சொல்லணுமா .... அனுபவத்தை சொல்லணுமா...... ம்ம்ம்ம்......

I like the way that you have discussed about the life's lessons.

மனோ சாமிநாதன் said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!
வாழ்க்கையில் அனுபவங்களே சுவையான கதைகள்.
கேட்டுத் தெரிந்த கதைகள் சொல்லி பிள்ளைகளை வளர்ப்பதைவிட, அனுபவக்கதைகளைப் பகிர்ந்து கொள்வது மனதளவில் அவர்களை நல்ல சிந்தனைகளுடன் வளர வைக்கும்.
உங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

துபாய் ராஜா said...

இனிமையான பகிர்வுகள்.

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பாத்திமா ஜொஹ்ரா said...

கதைக்குள் கதை - அருமை

Prathap Kumar S. said...

:))

ஜெய்லானி said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

கவிதன் said...

பகிர்வு அருமை!!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஹுசைனம்மா....!!

Jaleela Kamal said...

ஹை ஆத்துல ஜாலியா இருந்திருக்குமே.
சின்ன வயதில், வெளியூரில் இருந்ததால் கதை கேட்க முடியாமல் போய் விட்டது. அதற்கு பதில் கொஞ்சம் பெரிய வயதில் என் கிரான்மாவின் நிறைய அறிவுரைகள், டிப்ஸ்கள் போன்றவைதான், எனக்கும் அவ்வளவா புக் படிக்கும் பழக்கம் இல்லை.

பிள்ளைகளுக்கு எனக்கு தெரிந்த சின்ன சின்ன கதைகள் சொல்வேன்.
ஆனால் என் பிள்ளைகள் இருவருக்கும் வாசிக்கும் பழக்கம் ரொம்ப வே இருக்கு.

Jaleela Kamal said...

ஜெய்லாணி சொல்வது போல் வாழ்க்கையே ஒரு கதை தான்

சாந்தி மாரியப்பன் said...

//அடிக்கடி பதில் சொல்லத் தெரியாமல் முழிக்க நேர்ந்ததால்//

உங்க மகனோட வேவ்லெங்த்துக்கு நீங்க இல்லை ஹுஸைனம்மா ;D

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்>

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//மற்ற நேரங்களில் சாச்சிகள், மாமாக்கள், அடுத்த, எதிர்வீடு உறவினர்களும் பேசும் குடும்பக் கதைகளைக் கேட்டு நேரம் போகும்!!//

அது தாங்க ரெம்ப சுவாரஸ்யமா இருக்கும்.... ஆன பெரியவங்க பேசுறப்ப வாய பாத்துட்டு நிக்கதேன்னு கொட்டு விழும். நல்ல பதிவு

பனித்துளி சங்கர் said...

///தற்பொழுது என் பெரிய மகனிடம், என்னைப் போலவே, வாசிக்கும் ஆர்வத்தைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது;///////////


மகிழ்ச்சி வாழ்த்துக்கள் .
மிகவும் சிறப்பான பதிவு .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

pudugaithendral said...

எனக்கு எங்க அவ்வா(தாத்தாவோட அம்மா) கதை சொன்னது ஞாபகம் வந்திருச்சு.(அதைப்பத்தி பதிவு போடணும்னு நினைச்சிருந்தேன்)அந்த டாபிக்ல நீங்க ஒரு பதிவு போட்டுட்டீங்க.

:))

enrenrum16 said...

ஹுஸைனம்மா....கற்பனைக் கதைகளை கேட்பதைவிட நிஜக்கதைகள் சுவாரசியமாகவும் உபயோகமானதாகவும் இருந்திருக்குமே...

/என் வாப்பாவும், அவரின் இரு சகோதரிகளும் படித்தவர்கள். ஆனால், அவர்கள் வீட்டில் பாடப் புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்கள் கிடையாது./ அதான் நீங்களே சொல்லிட்டீங்களே...சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டவர்கள் என்று...புத்தகங்கள் வாங்காமல் இருந்ததற்கு அது காரணமாக இருந்திருக்கலாம்.

உங்களுக்கு கதை சொல்லி நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவது என்றே உங்களுக்கு யாரும் கதை சொல்லாமல் விட்டிருக்கலாம்.
/ரொம்ப கேள்விகள் கேட்டதால், அடிக்கடி பதில் சொல்லத் தெரியாமல் முழிக்க நேர்ந்ததால், குறைத்து விட்டேன். / நீங்க எட்டடி...உங்க வாரிசுகள் பதினாறடி....

நல்ல பதிவு....சிறுவர்மலர், குமுதம், ஆனந்த விகடனை கவர் டூ கவர் படித்த நாட்கள் ஞாபகம் வந்துவிட்டது.Thanks Hussainamma.

ஹுஸைனம்மா said...

மோகன் - வாங்க; நன்றி.

ராமலக்‌ஷ்மி அக்கா - வாங்க நன்றி அக்கா. ஆமாக்கா, சின்னத் திருத்தம் வந்ந்தாலும் அன்னிக்கு இப்படிச் சொன்னீங்களேன்னு கேப்போமில்ல.

பிரதாப் - நீங்க எழுதுற மொக்கைகளைப் படிச்சுட்டு இதெல்லாம் படிச்சா இப்படித்தான் இருக்கும். நன்றி.

ஸாதிகாக்கா - நம்புங்கக்கா, பேய்முழி முழிக்க வைக்கற அள்வுக்கு கேள்வி வந்துது சின்ன வயசுல!! இப்பப் பரவால்ல.

சைவக்கொத்ஸ் - வாங்க; சின்னப் பசங்க கதை, அவங்க சொல்லும்போதுதான் பாக்க/கேக்க நல்லாருக்கும்.

ஜெய்லானி - உண்மைதாங்க.

ஹுஸைனம்மா said...

ஏஞ்சல் - வாங்க; பரிட்சை முடிஞ்சவுடனே பாஞ்சு வந்துட்டீங்க போல!! பாடப்புத்தகங்கள் விருப்பமில்லைன்னாலும், படிச்சுத்தானே ஆகணும்!!

சந்தனமுலை - வாங்க முல்லை; நன்றி!

பித்தன்வாக்கு - வாங்க; நன்றி. ஆமாம், புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பதுண்டு.

சின்னம்மிணிக்கா - வாங்க; நன்றி.

இர்ஷாத் - வாங்க; நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

அன்புத்தோழன் - வாங்க; உங்க கலகலப்பான கமெண்டுகளுக்கு ரொம்ப நன்றி!! வாப்பா இஞ்சினியர்தான்; ஆனா பொறுப்புகள் நிறைய இருந்ததால், 1978 - 2008 வரை சவூதி, அபுதாபி வாசம். இபப்த்தான் உம்மாவோட தனிக்குடித்தனம் போயிருக்காங்க!!

உங்க உம்மாவுக்கு நல்லது நடந்தத கேட்டு சந்தோஷம்!! இப்படித்தான் குடும்ப கதைகள் பேச ஆரம்பிச்சா, போயிட்டே இருக்கும்!! நன்றி!!

தமிழ் உதயம் - வாங்க; நன்றி. ஆமாங்க, குழந்தைங்க நாம எதிர்பார்க்காதவிதமா படிச்சுக்கீறாங்க.

தராசு - ஆமாங்க, நெம்பப் படிச்சுட்டோம்!!

ஹுஸைனம்மா said...

பாலாசி - வாங்க; நன்றி தொடரப் போகும் வருகைக்கும், கருத்துக்கும்!! நிச்சயமா ஊக்குவிக்கத்தான் செய்கிறேன்!!

கண்ணா - வாங்க; என்ன செய்ய, எனக்கு கதை கட்டத் தெரியலையே!! எனக்கு இப்பவும் கமெண்டுகள்லபிரச்னை இருந்துகிட்டேதான் இருக்கு!!

அபி அப்பா - வாங்க; அரசியல்னு ஒரே ஒரு வார்த்தையைப் பார்த்தவுடனே ஓடி வந்துட்டீங்க பாருங்க!! எங்கப்பாவுக்கு அரசியல்னா ஆகவே ஆகாது!! என் தாத்தாத்தான் அரசியல்ல இருந்தது; கவலைப்படாதீங்க, நாமல்லாம் கூட்டணிக் கட்சிங்கதான்!!

உழவன் - வாங்க; நான் கத சொன்ன கதையெல்லாம் ஒரு பெருங்கதை!! இப்பவே டிரெயினிங் எடுக்க ஆரம்பிங்க!!

அபுஅஃப்ஸர் - வாங்க; ஆமாங்க அதுக்கு ஒரு தனித்திறமை வேணும்!!

அக்பர் - வாங்க; என் கதயே நல்லாத்தானே இருக்கு, இல்லியா?

ஹுஸைனம்மா said...

நாஸியா - வாங்க; நாங்க குளிச்ச ஆத்தைக் காணோம் இப்ப!!

ரிஷபன் - வாங்க; ஆமாங்க, இப்பவும் புஸ்தகம் கிடைச்சா எல்லாத்தையும் மறந்துடுறேன்னு கம்ப்ளெயிண்ட் இருக்கு!!

ஸ்டார்ஜன் - வாங்க; என் கதையச் சொல்லிருக்கேனே, கணக்கில வராதா?

ஸ்டீஃபன் - வாங்க; நாங்கல்லாம் நாட்டமைக்கே தீர்ப்புச் சொல்றவங்க தெரியுமா!!

ஸ்ரீராம் சார் - வாங்க; ஆமா, நிச்சயமா நம்ம வீடு, குடும்பம், பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் எல்லாம் சொல்லணும் பிள்ளைகளுக்கு.

மதுமிதா - வாங்கங்க. நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

அம்பிகா - வாங்க; நன்றி!!

சித்ரா - வாங்க; நன்றி சித்ரா.

மனோக்கா - வாங்கக்கா; நீங்க சொல்றது சரியே அக்கா. நிச்சயம் நம் வாழ்க்கைக் கதைகளைக் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

துபாய் ராஜா - வாங்க; நன்றி!!

ஃபாத்திமா - வாங்க; நன்றி!!

ஜெய்லானி - நன்றி வாழ்த்துகளுக்கு!!

கவிதன் - நன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள்!!

ஜலீலாக்கா - வாங்கக்கா. ஆத்துல குளிச்சதெல்லாம் இப்பவும் பசுமையா இருக்கு!! இப்பத்திய பசங்களுக்கு வாசிக்க ரொம்ப ஆர்வம் இருக்கு!!

ஹுஸைனம்மா said...

அமைதிச்சாரல் - வாங்க; ஆமாங்க, வேவ்லெந்த் சரியா வரல போல!! நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள்!!

அப்பாவி தங்ஸ் - வாங்க; ஆமாங்க, குடும்பக்கதைகள்தான் நல்லாருக்கும்; ஆனா, கேக்கும்போது ஒண்ணுமே புரியாதாமாதிரி உக்காந்துக்கணும்!!

பனித்துளி சங்கர் - வாங்க; நன்றிங்க. தொடர்ந்து வாங்க.

தென்றல் - வாங்க; நீங்களும் எழுதுங்க!!

ஹுஸைனம்மா said...

என்றும் - என்னங்க, அடிக்கடி காணாமப் போயிடுறீங்க? நிச்சயமா, நான் அந்தக் கதைகள் இப்பவும் நினைச்சிக்கிறதுண்டு.

//சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டவர்கள் என்று...புத்தகங்கள் வாங்காமல் இருந்ததற்கு அது காரணமாக இருந்திருக்கலாம்.//

என் வாப்பா வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு ஓரளவு நல்ல நிலைமைதான். ஆனால் அத்தைகளுக்கு ஆர்வம் இல்லை!!

ஆமாங்க, நான் எங்கம்மாவக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம், இப்ப என் பிள்ளைங்ககிட்ட வாங்கிக்கிறேன்!! :-(

நன்றிங்க, எப்பவும் வாங்க.

R.Gopi said...

நம் ஒவ்வொருவர் வாழ்க்கையுமே ஒரு சிறுகதையென ஆரம்பித்து, பின் வரும் நிகழ்வுகள் கோர்வையாகி, தொடர்கதையாகி விடும்...

ஆயினும், பழைய நினைவை கிண்டும் போது, கிடைக்கும் அந்த நினைவுகள்/கதைகள் சுவாரசியமானதாகவே இருக்கும்...