Pages

பயாஸ்கோப்




மீண்டும் ஒரு தொடர்பதிவு!! நம்ம செந்தில்வேலன், பிடிச்ச 10 தமிழ்த் திரைப்படங்களை எழுதச் சொல்லி வேண்டி கேட்டுகிட்டார். அதனாலத்தான் எழுதுறேன்.

இதுவரை என் பதிவைப் படிக்கிறவங்க கவனிச்சிருப்பீங்க, நான் எவ்வளவோ நல்ல விஷயங்கள்( !! ) எழுதிருந்தாலும், பட விமரிசனமோ, சமையல் குறிப்போ ஏன் டிப்ஸ் கூட எழுதினதில்லைன்னு!! காரணம் பெரிசா ஒண்ணுமில்லை; எனக்கே தினம் சமையல் தரிகிடதோம்தான், அப்புறம் எங்க எழுத!! ஏதோ நல்ல வீட்டுக்காரர் வாய்க்கப் போய் தப்பிச்சேன்!! அவர்தான் சமையல்னு நான் சொல்றதா நீங்க கற்பனை பண்ணா, நான் பொறுப்பில்ல!!

எப்பேர்ப்பட்ட நல்ல படமாருந்தாலும், அது திரைக்கு வந்து, “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...” என்று ஏதாவதொரு சானலில் போட்டாலும் பார்க்காமல் (அந்த சேனல் தெரிஞ்சாத்தானே பாக்கிறதுக்கு?), அதுக்கப்புறம் டிவிடி கடையில “ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்”ல அந்தப் படத்த வாங்கிப் பாக்கிற நான், அதுவும் மூணுமணிநேரப் படமாருந்தாலும், ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் பண்ணி முப்பதே நிமிஷத்தில் பாத்து முடிக்கிற நான் எப்படி விமர்சனம் எழுதமுடியும்? அதான், நீங்க தப்பிச்சுகிட்டீங்க!!

ஆனாலும் இந்தத் தொடர் எழுதறதுக்காக நான் முன்காலத்துல பார்த்த, ரசித்த, மறக்கமுடியாத சில நல்ல படங்களை நினைவுக்குக் கொண்டுவந்து எழுதுறேன்!!


விதிகள்:  (உங்க தலைவிதியைச் சொல்லல, அதை மாத்த முடியாது!!)

1. தமிழ்ப் படங்கள் மட்டுமே பட்டியலில் வரவேண்டும்.

2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.

3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை.

1. நிறம் மாறாத பூக்கள்:

 ராதிகா, சுதாகர், விஜயன், ரதி நடிச்சது. ”ஆயிரம் மலர்களே”, ”இரு பறவைகள் மலை முழுவதும்” என்ற மெலடி சாங்ஸ் இருந்தாலும், ராதிகாவும், சுதாகரும் பாடின “முதல் முதலாகக் காதல் டூயட் பாட வந்தாயோ” என்ற காமெடிப் பாடல் மிகவும் ரசிக்கத்தக்கது. எண்பதுகளின் ஆரம்பத்தில் பார்த்தது. பிறகு நான் இந்தப் படம் பார்த்ததில்லையென்றாலும், பாடல்களின் மூலம் அந்தப் பாட்டின் காட்சிகளை நான் ரசித்துப் பார்த்தது நினைவுக்கு வரும்.

இங்கே  இப்படத்தின் பாடல்கள் இருக்கின்றன; கேட்டுப் பாருங்க!!

2. காதலிக்க நேரமில்லை:

இதுக்கு நான் விளக்கமே சொல்லத் தேவையில்லை; பலமுறை பார்த்து ரசித்த படம். அதுவும், அந்த ‘விஸ்வநாதன் வேலை வேணும்’, ‘பொன்னான கைகள் புண்படலாமா’வும் பார்த்துகிட்டேயிருக்கலாம்.

3. மை டியர் குட்டிச்சாத்தான்:

தமிழில் வந்த முதல் முப்பரிமாணப் படம். இதுவும் அப்பப் பாத்ததுதான், ஆனா அந்த முதல் பிரமிப்பு இன்னும் மனதை விட்டு அகலவில்லை.

4. விதி:

இந்தப் படம், வழக்காடு மன்றத்தில் நடக்கும் பரபரப்பான விவாதங்களுக்காகவே பார்க்கலாம். இதில் முக்கியமான விஷயம், கற்பழித்தவனைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற விதி மீறப்பட்டிருந்தது பிடித்திருந்தது. முதல்ல ரேடியோவில வசனங்கள் கேட்டுட்டு, அப்புறம் ரொம்ப நாள் கழிச்சுத்தான் படம் பாத்தேன்.

5. அச்சமில்லை அச்சமில்லை:

சரிதா, ராஜேஷ் நடிச்சது. ஒரு சாதாரண மனுஷன், அரசியலுக்கு வந்ததும் கெட்டுப்போகிற கதை. “ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை” பாட்டு கேட்டுகிட்டேயிருக்கலாம். ஒரு காட்சியில சரிதா ”இது மட்டும் நடந்துட்டா, உள்ளங்கையில சோறாக்குறேன்”னு சவால் விட்டு, அதுமாதிரியே, ஆக்கிக் காமிப்பாங்க, நடுங்கிட்டேன் அந்தக் காட்சியில்!!

6.  அன்னை ஓர் ஆலயம்:

அந்த குட்டி யானைக்காகவும் “அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே” பாட்டுக்காகவும் இன்னும் பார்க்கலாம்!! என் பிள்ளைங்களுக்கு நான் வாங்கிக் கொடுத்த சி.டி.களில் ஒன்று!! ஒருவகையில, மிருகங்களை அழிக்கக்கூடாதுன்னு அப்பவே சுற்றுச்சூழல் சேதி சொன்ன படம்!!

7.  அன்னை:

நடிகை பானுமதி ராமகிருஷ்ணா, எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர். அவரது ஆளுமைத்திறனுக்காகவே அவரைப் பிடிக்கும்.  ஒருமுறை ஒரு படப்பிடிப்பில், வில்லனிடமிருந்து பானுமதியைக் காப்பாற்றப் போடும் வாள்சண்டையில் எம்.ஜி.ஆர். திணறியதால், ”மிஸ்டர்.எம்.ஜி.ஆர், அந்த வாளைக் கொடுங்க இப்படி!! நானே சண்டை போட்டு என்னைக் காப்பாத்திக்றேன்” என்று சொன்னாராம்!!

அவர் நடித்த எத்தனையோ படங்கள் இருந்தாலும், இந்தப் படக்கதை, அவர் நடிப்பால் மேலும் சிறப்பாக இருக்கும். “பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று” என்ற இனிமையான பாட்டும், சந்திரபாபுவின், “புத்தி உள்ள மனிதரெல்லாம்” பாடலும் உண்டு.

8. வீடு:

அர்ச்சனா, பானுசந்தர் நடிச்ச படம். ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் வீடு கட்ட படுற சிரமங்களைச் சொல்ற படம். இப்பப் போல ஹெச்.டி.எஃப்.ஸி, பேங்குகள்,  ஹவுஸிங் லோன், இண்ஸ்டால்மெண்ட்ல ரெடிமேட் வீடு, அபார்ட்மெண்ட் பில்டர்ஸ் இதெல்லாம் இல்லாத காலம் அது!! அர்ச்சனாவின் நடிப்பை மிஞ்சும், அதில் நடித்த சொக்கலிங்க பாகவதரின் பாத்திரம்!!

9. ஆண்பாவம்:

இந்தக் கதையை இப்ப நினைச்சாலும் தன்னால சிரிப்பு வந்திடும்!! பாண்டியராஜனின் முதல் படம்; கொல்லங்குடி கருப்பாயிக்கு பேர் வாங்கிக் கொடுத்தப் படம்!! சிரிப்புப் படம்னாலும், தாயில்லாததால ஒரு குடும்பம் படுற கஷ்டமும் பிண்ணனியில் இருக்கும்.

10. சதிலீலாவதி:

இந்தப் படம் ரசிக்காதவங்க இருக்க முடியாது. கோவை சரளாவின் நடிப்புக்குப் புது பரிமாணம் கொடுத்த படம். பொண்டாட்டியைத் தள்ளிவச்சுட்டா, புள்ளை குட்டிகள், வயதான பெற்றோர், இன்னும் எல்லாப் பொறுப்பையும் அவதலைல கட்டிகிட்டு அடுத்தவளோட தனியா ஜாலியா இருக்கலாம்கிற டிபிகல் ஆம்பிளைங்க மெண்டாலிட்டிக்கு கல்பனா கொடுக்கிற ஷாக் டிரீட்மெண்ட்தான் எனக்கு இதில ரொம்ப ரொம்பப் பிடிச்சது!! அந்த அபார்ட்மெண்ட் வாசல்ல எருமையும், பாத் டப்ல பெரியவரும் - சிரிச்சுகிட்டே இருக்கலாம்!!

யோசிக்க யோசிக்க நிறைய படங்கள் நினைவுக்கு வருது!! நல்ல திரைப்படங்களை நினைவுகூற வாய்ப்பு கொடுத்த செந்திலுக்கு நன்றி!!

Post Comment

44 comments:

Thamiz Priyan said...

படங்களை எல்லாம் பார்த்தா ஓல்டு கெட்டப்பா இருக்கே.. ;-)

Chitra said...

நல்லா "படம்" காட்டி இருக்கீங்க. :-)

கண்ணா.. said...

அட அதுக்குள்ள தொடர்ந்தாச்சா...

எனக்கு இன்னும் ரெண்டு தொடர்பதிவு எழுத வேண்டியிருக்கு :(

இதுல நீங்க வீடு படத்தை குறிப்பிட்டது ஆச்சர்யமா இருக்கு..

எனக்கு சின்ன வயசுல பார்க்க பயங்கரமா போரடிச்ச படம். ஆனா ரொம்ப வருஷம் கழிச்சு திரும்ப பார்த்தப்போ.. அந்த அதிர்வில் இருந்து மீள ரொம்ப நேரம் ஆச்சு.

இந்த படத்தில் வரும் இளையராஜாவின் வயலின் BGM அட்டகாசமா இருக்கும்.


அப்புறம் ஆண்பாவமும் எனக்கு மிகவும் பிடித்த படம்

()

அப்புறம் சமையல் விஷயத்துல நீங்க சொன்னத நான் நம்ப மாட்டேன். (ஆண் பாவம்)

:))

சிநேகிதன் அக்பர் said...

உங்கள் பட வரிசை அருமை.

Ananya Mahadevan said...

super selection ஹுஸைன்னம்மா. முக்கியமா அச்சமில்லை அச்சமில்லை & அன்னை! ஜோர் படங்கள்.

பனித்துளி சங்கர் said...

எனக்குத்தான் முதல் டிக்கெட் . ஹல்லோ நான் படம்பார்க்க சொன்னேன் .

பனித்துளி சங்கர் said...

உங்களின் பார்வையில் உங்களின் அனைத்தும் அருமை .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்

settaikkaran said...

ஆஹா! நீங்களும் போட்டு விட்டீர்களா இந்தப்பதிவை? :-)
"அச்சமில்லை அச்சமில்லை," "வீடு","காதலிக்க நேரமில்லை" இந்த மூன்று படங்கள் குறித்தும் நிறைய பதிவர்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நன்று!

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல சாய்ஸ்தான்!!!

நாஸியா said...

ellaam romba palaya padangal pola ;)

enaku idhula kadaisi rendu mattum theriyum..

aan paavam ethana vaatti venumnaalum paapen

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல நல்ல படங்கள் அனைத்தும்.. நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தும் அருமை.

bilgaizi said...

இந்த பட வரிசை சரியில்லை.
கர்ணன் படம் விடு பட்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

ஹுஸைனம்மா said...

//தமிழ் பிரியன் said...
....ஓல்டு கெட்டப்பா இருக்கே.. ;-)//

உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோவைவிடவா? :-))

Old is always Gold!!

ஹுஸைனம்மா said...

// bilgaizi said...

இந்த பட வரிசை சரியில்லை.
கர்ணன் படம் விடு பட்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.//

அப்படியா? ஒவ்வொருத்தர் விருப்பம் ஒவ்வொரு விதம்!! நீங்களும் எழுதுங்களேன்!!

கர்ணன் படம் ஞாபகமும் இல்லை; நான் பார்க்கவும் இல்லை!! அதான் எழுதலை. இதுமாதிரி எத்தனியோ படங்கள்!!

அம்பிகா said...

பழைய படங்களாயினும், வரிசை அருமை.

ஸ்ரீராம். said...

நல்ல வித்யாசமான தெரிவு. இதையெல்லாம் பத்துக்குள் அடக்க முடியாது என்பது என் கருத்து

ஜெய்லானி said...

சேம் பிளட்.

ரிஷபன் said...

நல்ல சாய்ஸ்.. அதுவும் வெரைட்டியாய்..

GEETHA ACHAL said...

படங்கள் வரிசை அருமை....

செ.சரவணக்குமார் said...

நல்லா சொல்லியிருக்கீங்க ஹுஸைனம்மா.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகா எழுதியிருக்கீங்க.

இதில்.. என் ஹிட் லிஸ்ட்..

ஆண்பாவம்... (நான் அதிகமாகப் பார்த்த படம்) அந்த லட்டுக்குத் துட்டா.. துட்டுக்கு லட்டா.. காமெடி.. கலக்கல்.
சதிலீலாவதி (எங்க ஊரு வட்டார வழக்கிற்காக)

விதி, கா.நே, வீடு, அன்னை என அனைத்துமே அருமையான தேர்வு :)) நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

எல்லாமே நல்ல தேர்வுகள். ஆண்பாவம் பயங்கர காமெடி இல்லையா!!!.

நாடோடி said...

அனைத்துமே அருமையான‌ தேர்வு....

☀நான் ஆதவன்☀ said...

எல்லாம் பழைய படமா இருக்கே! புது படம் சொன்னா யூத்துன்னு ஒத்துப்பாங்க. தெரியாதா உங்களுக்கு?

நம்மளையும் செந்தில் கூப்பிட்டு இருக்கார். போட்டுருவேண்டியது தான் :)

ஹுஸைனம்மா said...

//☀நான் ஆதவன்☀ said...
புது படம் சொன்னா யூத்துன்னு ஒத்துப்பாங்க//

அதெல்லாம் உங்கள மாதிரி அங்கங்க முடி நரைச்ச/ முடி கொட்டின பார்ட்டிகள் செய்யவேண்டிய வேலை!!

இப்பல்லாம் பழசுக்குத்தான் மவுசு!! இதெல்லாம் எவர்கிரீன் படங்கள்!!

Mahi said...

நல்ல படங்கள் ஹூசைனம்மா! சதிலீலாவதில கமல் பேசும் எங்க ஊர் தமிழுக்காகவே எத்தனை முறை வேணாலும் பாக்கலாம்.
அதிலே வர "நீ எப்படியும் செருப்படி வாங்கப் போறே",ஆம்பளைங்களுக்கு சான்சோ,சாய்சோ குடுக்கக் கூடாது..எல்லாத்தையும் செலக்ட் பண்ணிடுவாங்க" இந்த டயலாக்ஸ் எல்லாம் எங்க வீட்டுல அடிக்கடி பார்த்து சிரிக்கிற விஷயம்!

ஸாதிகா said...

குட்டியாக விமர்சனம் செய்து பழைய நினைவுகளில் மூழ்கடித்துவிட்டீர்கள்.நான் தியேட்டருக்கு போய் 10 வருடங்களாகிறது.தொலைகட்சியில் முழுதாக படம் பார்த்து நாலைந்து வருடங்கள் இருக்கும்.நீங்கள் குறிப்பிட்ட சில படங்கள் லைப்ரரியில் கேசட் வாங்கி வி சி ஆரில் போட்டு பார்த்தவை.

அரசு said...

காதலிக்க நேரமில்லை
இதுக்கு நான் விளக்கமே சொல்லத் தேவையில்லை; பலமுறை பார்த்து ரசித்த படம்.பேஷ் பேஷ் ரெம்ப நன்னாருக்கு

பித்தனின் வாக்கு said...

உங்கள் பட விரிசை அருமை. இதில் ஏழு படங்கள் எனக்கும் பிடிக்கும்.

pudugaithendral said...

நீங்க சொல்லியிருக்கும் பல படங்கள் பாட்டுக்காகவே எனக்குப்பிடிக்கும்.
அருமையான தெரிவுகள்.

எம்.எம்.அப்துல்லா said...

குறுகிய காலத்தில் 100 ஃபாலோயர்களைப் பெறப்போவதற்கு வாழ்த்துகள் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹுஸைனம்மா said...
//☀நான் ஆதவன்☀ said...
புது படம் சொன்னா யூத்துன்னு ஒத்துப்பாங்க//

அதெல்லாம் உங்கள மாதிரி அங்கங்க முடி நரைச்ச/ முடி கொட்டின பார்ட்டிகள் செய்யவேண்டிய வேலை!!

//:)))))))) ஆதவன் பாஸ், தவளை தான் வாயால இல்ல கையால கெடுமாம், பெரியவஙக் சொல்லுவாங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதல்ல ரேடியோவில வசனங்கள் கேட்டுட்டு, அப்புறம் ரொம்ப நாள் கழிச்சுத்தான் படம் பாத்தேன். //

அட, நானும் அப்படித்தாங்க இந்தப் படத்தை பார்த்தேன்.

அப்புறம் வீடு //

அய்யோ சாமி, தேசியவிருது வாங்குன படம்னு தூர்தர்ஷன்ல போட்டே சாகடிச்சாங்க.

ஆனா அர்ச்சனாவுக்காகவும், அந்த தாத்தாவுக்காகவும் எத்தனை தடவை வேணா இந்தப்படத்தை பார்க்கலாம்.

பானுமதி ராமகிருஷ்ணா : my favorite tooo :)

Ahamed irshad said...

Ok Ok.....

Vidhya Chandrasekaran said...

நல்ல லிஸ்ட்:))

கோமதி அரசு said...

உங்கள் படத்தேர்வு அனைத்தும் அருமை.

அன்புத்தோழன் said...

Padangalukketha title("பயாஸ்கோப்")....

Ana Idhula oru padam kuda Na paathadhilla.....

So just attendance.....

Present miss.... he he :-)

DREAMER said...

நல்ல தெரிவுகள்ங்க..! சில படங்களைப் பற்றி நீங்கள் எழுதியதைப் படிக்கும்போது மீண்டும் பார்க்கவேண்டும் போலிருக்கிறது. அருமையான ஒரு தலைப்புக்கு உங்களை எழுத அழைத்த நண்பர் செந்தில்வேலன் அவர்களுக்கும் நன்றி!

-
DREAMER

Muniappan Pakkangal said...

Nice selection of films Hussainamma.Why there is no new film?

Jaleela Kamal said...

ஹாஹா பயாஸ் கோப்புன்னு படிச்சதும் ஒரு சிரிப்பு, கவுண்ட்,செந்தில், கோவை , முன்றும் ஹே பாரு பாரு பயாஸ்கோப்பு படத்த பாருன்னு சொல்வது ஞாபகம் வந்து விட்டது.

பழைய படம் பாடல் நல்ல தேர்வு, அனைத்தும் எனக்கும் ரொம்ப பிடித்ததே

பழைய பாடல்களை கேட்டாலே இனிமை என்றும் இனிமை தான்.

சுதாகர், ராதிகா அந்த பாடல் எப்ப முனு முனுத்தாலும் நல்ல இருக்கும்.

காதலிக்க நேரமில்லை சூப்பரோ சூப்பர்,

மைடியர் குட்டி சாத்தானும் ( அப்ப ஏதோ கண்ணாடி போட்டு கொண்டு தான் பார்க்கனுமான்னு ரொம்ப இன்ரஸ்டிங்கா இருந்தது)

விதி வாவ் என்ன சூப்பர், சுஜாதாவின் வாதம், பூர்னிமா, மோகன் எதுவுமே தெரியாத மாதிரி ஒரு ஆக்ட்

அச்சமில்லை அச்சமில்லை அதுவும் நல்ல இருக்கும்


அன்னை ஓர் ஆலயம் அந்த யானைக்காவே இப்ப பார்த்தால் கூட சின்ன குழ்ந்தையாகிடுவேன். ஸ்ரீப்ரியா, ரஜினி ரொம்ப நல்ல இருக்கும்.

அன்னை போன வாரம் கூட என் தங்கையிடம் ஊறுக்கு பேசும் போது அப்ப அந்த பாடல் ஓடி கொன்டு இருந்தது, இரண்டு பேரும் அத பற்றியும் ஒரு நிமிடம் பேசியாச்சு ,பானுமதி பேச்சும் நடிப்பும் நல்ல இருக்கும்,

வீடு பார்த்திருப்பேன் அவ்வளவா ஞாபகம் இல்லை

ஆண்பாவம் சொல்லும் போதே பாண்டியராஜன் சிறிப்பு வருது.


சதி லீலாவதி, அப்பா எத்தனை முறை பார்த்தாச்சு. கோவைக்கு கமல் கூட நடித்த பெருமை வேற சரி காமடி படம்.

R.Gopi said...

அருமையான பயாஸ்கோப்...

படங்களின் தொகுப்பு அருமை... கூடவே சிறு சிறு நொறுக்ஸ் செய்திகளுடன் (அந்த பானுமதி செய்தி மாதிரி)...

வாழ்த்துகள் ஹூஸைனம்மா...

enrenrum16 said...

Good selection...i thought ur list may include 'manathil uruthi vendum' .... forgot or ....? ur comment on banumathi's comments brings smile.

துபாய் ராஜா said...

அருமையான தொகுப்பு.

ஹுஸைனம்மா said...

பதிவைப் படித்தும், கருத்து தெரிவித்தும் மகிழ்வித்த எல்லாருக்கும் நன்றி.

கண்ணா, ஹி..ஹி.. நமக்கு BGM மீஜிக்கைக் கூட ரசிக்கிற அளவுக்கு “கலைக் காது” இல்லை!!

நிறைய “யூத்”களுக்கு இதில உள்ள சில படங்களே தெரிந்திருக்கவில்லை!! ஒருமுறை டிவிடி/ டவுண்லோட் செஞ்சு பாருங்க, மிஸ் பண்ணதுக்கு ரொம்ப வருத்தப்படுவீங்க!! இன்னும் எவ்வளவோ நல்ல படங்கள் மத்தவங்க பதிவுகளைப் பாத்துத் தெரிஞ்சுக்கோங்க!!

என்றும் (வேற பேர் வச்சுக்கக் கூடாதா?): வாங்க. “மனதில் உறுதி வேண்டும்” - ஞாபகமில்லை; அதோடு ஏனோ, அது எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்னு சொல்ல முடியலை.