Pages

ஒரு ஐஸ் எரிமலையாகிறது!!






என்ன, “தென்றல் புயலாகிறது”, “பூ ஒன்று புயலானது” வரிசையில் சினிமாத் தலைப்புப் போல இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இதுவும் அப்படித்தான், “பொறுத்தது போது பொங்கியெழு” என்று பூமி எரிமலையாகப் பொங்கிய கதைதான்!!

mapsofworld.com

ஐஸ்லாந்து நாடு - கிரீன்லாந்து பக்கத்தில், அட்லாண்டிக் கடலில் இத்தணூண்டு தீவு என்று ஏழு அல்லது எட்டங்கிளாஸில் புவியியலில் படித்திருப்போம். பேரிலிருந்தே தெரிகிறது, முழுதும் ஐஸால் மூடியிருக்கும். இவ்வளவுதான் அதிகப்டசத் தகவல் எனக்கும் தெரியும் ஐஸ்லாந்து குறித்து!! இந்தக் குட்டித் தீவுதான், இப்ப ஐரோப்பாக் கண்டத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது!!

நீரும், நெருப்பும்!!

ஐஸ்லாந்து, பொதுவாகப் பனிப் பிரதேசம் என்றாலும், சில எரிமலைகளையும் உள்ளடக்கியது!!  எல்லா எரிமலைகளையும்போல, இவையும் சில சமயம் குழம்பைக் கக்கினாலும், பெரிதும் அமைதியாகவே இருக்கும். இங்குள்ள ”ஐயாஃப்யாத்லாஜோகுத்ல்”  (Eyjafjallajokull) என்ற பனி ஆற்றின் (Glacier) அடிவாரத்தில் உள்ள எரிமலை சென்ற புதனன்று (14-ஏப்ரல்) குழம்பைக் கக்க ஆரம்பித்ததில் ஏற்பட்ட புகைமண்டலம் ஏற்படுத்தும் பாதிப்புத்தான் ஐரோப்பாவை ஸ்தம்பிக்க வைத்துள்ளது!!

bbcnewscom
இந்த எரிமலைக் குழம்பினால் ஏற்பட்ட புகைமண்டலம், ஐஸ்லாந்தில் தரைவழிப்போக்குவரத்தைத் தடை செய்ததோடல்லாமல், வான்வழிப் போக்குவரத்தையும் பாதித்துள்ளது. இது அப்படியே பரவி, பிரிட்டன், செர்மனி, ஃப்ரான்ஸ், டென்மார்க் என்று ஐரோப்பாவின் வளிமண்டலத்திலும் பரவ, ஐரோப்பா முழுவதும் வான்வழிப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது!!  இப்போது இப்புகை ரஷ்யாவிலும் பரவத்தொடங்கியுள்ளதாகத் தகவல்!! இந்நாடுகளுக்கு உலக முழுவதுமிருந்தும் விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது!!

இன்றோடு மூன்றாவது நாளாக விமானங்கள் நிறுத்திவைக்கப் பட்டுள்ளதால், நாளொன்றுக்கு 200 மில்லியன் டாலர்கள் விமானத் துறைக்கு மட்டுமே நஷ்டமாகிறது என்றால், அதன் தொடர்புடைய தொழிற்துறைகளுக்கு நஷ்டம் எவ்வளவோ!!

cbsnews.com
ஏன் பறக்கக்கூடாது?

1. புகைமண்டலம், வான்வெளியை அடைத்திருப்பதால், தெளிவான காட்சி (visibility)  இருக்காது.
2.  புகையினால், வானில் பறக்கும் இரண்டாவது நிமிடமே, மூச்சுமுட்டல் ஏற்படலாம்.
3. எரிமலைக் குழம்பில் கண்ணாடி போன்ற கூரிய பனிக்கட்டித் துகள்களும், தூசி, மண், உலோகத் துகள்களும் கலந்திருப்பதால், அவை விமான இஞ்சினில் சென்று அவற்றைச் செயலிழக்கச் செய்யும். மேலும் விமானத்தின் கண்ணாடிகளையும் உடைக்கவோ, சேதப்படுத்தவோ செய்யலாம். (முன்பு சிறிய அளவில் நடந்திருக்கின்றன).

இன்னொரு முக்கியக் காரணம்,  இம்மாதிரிச் சம்பவம் வரலாற்றில் முன்நடந்திராததால், பாடம்படிக்க முன்அனுபவமும் இல்லை.1783ல் இதேபோல வேறொரு எரிமலையின் புகை 1784 வரை ஐரோப்பாவின்மீது பரவியிருந்ததாகவும், அதனால் தட்பவெப்ப மாறுதலால் பல ஆயிரம் உயிரிழப்பு நேர்ந்ததாகவும் தெரிந்தாலும், வான்வழியில் பாதிப்பு என்னவாக இருக்கும் என்பது அறுதியாக யூகிக்க முடியவில்லை.

ஏற்கனவே, பொருளாதாரத் தாழ்வால் ஆட்டம்கண்டிருக்கும் நிலையில், இன்னுமொரு ரிஸ்க் எடுக்க அவை தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

என்ன செய்வது?

1. புகைமண்டலம் 20-30,00 அடிஉயரே மட்டும் இருப்பதால், தாழ்நிலையில் (3000 அடி) விமானங்கள் பறக்கலாம். ஆனால், பல நாடுகளும் தாழ்நிலையில் பறப்பதை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறுகாரணங்களுக்காகத் தடை செய்திருக்கின்றன!!

லூஃப்தான்ஸா, கே.எல்.எம். ஆகியவை இம்முறையில்  பரிசோதனை ஓட்டங்கள் செய்துவருகின்றன. அவசரத் தேவைகளுக்காக, இராணுவ விமானங்கள் அவ்வாறே தற்போது பறந்துகொண்டிருக்கின்றன. சுவிஸ் நாடு, 36,000 அடிக்கு மேலே பறக்க அனுமதியளித்துள்ளதாம்.

2. புகைமண்டலம் நீங்கும்வரை காத்திருப்பது. இதற்கு எத்தனை நாளாகும் என்று தெரியவில்லை. இந்த எரிமலை தொடர்ச்சியாக ஆறுமாதம் வரை குழம்பைக் கக்கக்கூடும் என்பதால், இதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

3. மாற்றுவழிகள் - சாலை, ரயில், கடல் வழிப் போக்குவரத்தை நாடுவது. ஆனால், பிரிட்டனிலிருந்து ஆஸ்திரேலியா போகவேண்டியவர் என்ன செய்வார்?

தொடர் விளைவுகள்:

இதுகுறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. 

1. எரிமலை வெடித்தது, பனிப்பிரதேசம் என்பதால், பனிப்பாறைகளை உருக்கி, வெள்ள அபாயம் ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், (முன் நடந்ததைப் போல) இது தொடரப்போகும் மற்ற எரிமலை வெடிப்புகளுக்கும், பூகம்பங்களுக்கும் அறிகுறி என்றும் சொல்கின்றனர். அதன் விளைவுகள் என்னென்னவோ?

2. எரிமலைக் குழம்பில் வெளிப்படும் ஸல்ஃபர்  வாயு, ஹைட்ரோசல்ஃபியூரிக் அமிலமாக மாறக்கூடும் என்றும், அதனால் வளிமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பொதுவான விளைவு.

3. புகை கீழிறங்கி பூமியின் மேற்பரப்பில் வந்தால், சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம்.

4. ஆனால், இதே எரிமலைக் குழம்பின் அடர்ந்த புகை, வளிமண்டலத்தின் (atmosphere) Stratosphere என்ற மண்டலத்திற்குப் போகும்போது, பூமியைக் குளிரவைக்கும் என்றும், வெப்பமயமாக்குதலைத் தடுக்கும் என்றும் கூறப்பட்டாலும், அதன் (ஓஸோன் பாதிப்பு போன்ற) பின்விளைவுகள்  அதிகம் என்பதால், இவை விரும்பத்தக்கவையுமல்ல.


5. ஐஸ்லாந்தின் புவியியல் அமைப்பு, அமெரிக்கன் பூமித்தட்டு (American plate) மற்றும் யுரேஷியன் தட்டு (Eurasian Plate) ஆகியவற்றிற்கு மத்தியில் அமைந்ததால், அதன் ஒவ்வொரு நிகழ்வும் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. 

லகின் எங்கோ ஒரு மூலையில் நடந்த ஒரு சிறு நிகழ்வு, உலகத்தையே ஓரளவு ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பது, “உலகம் சுருங்கிவிட்டது” என்ற சொல்லாடலின் அர்த்ததையே மாற்றியமைக்கிறது!!


Post Comment

60 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல தெரிந்துகொள்ளவேண்டிய அருமையான கட்டுரை ஹூசைனம்மா.

Ahamed irshad said...

ஐய் நாந்தான் 1ஸ்ட்டு...?!

ஜெய்லானி said...

அக்கோவ் 2012 க்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு. ஒரு வேளை அதுக்கு அறிகுறியோ என்னவோ ?

இறைவனின் என்னங்களை யார் அறிவார் ?

தமிழ் உதயம் said...

போகிற போக்கில் படித்த ஒரு செய்திக்கு பின்னால், இத்தனை விஷயங்கள் இருப்பதை இந்த கட்டுரையின் மூலமே தெரிந்து கொண்டேன். அதற்கு நன்றி ஹுஸைனம்மா.

கண்ணா.. said...

எக்ஸ்லெண்ட்... !!

நிறைய விஷயங்களை தேடி, கோர்வையான, அழகான வரிகளில் கொடுத்திருக்கீங்க...

நிறைய தகவல்கள் எனக்கு புதுசு. உங்க பதிவில்தான் படிக்கிறேன்.

இது போலவும் அடிக்கடி தொடருங்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அழகான கட்டுரை. பீம்சிங் படம் பார்ப்பது போல இருக்கிறது

ராஜ நடராஜன் said...

அருமையான விளக்கம்.இந்தியாவில் பலபேர் இன்னும் ஐரோப்பா திரும்ப இயலாமல் நிற்பதாக அறிந்தேன்.

ஜீவன்பென்னி said...

நல்ல தகவல். பதிவர் வினையூக்கியும் இதனைப்பற்றி எழுதியிருக்கின்றார்.


http://vinaiooki.blogspot.com/2010/04/blog-post_17.html

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

Nice Post Hussainamma.. with lot of details.

Well researched too!!

Lets C when this situation calms down!!

Anonymous said...

//3. மாற்றுவழிகள் - சாலை, ரயில், கடல் வழிப் போக்குவரத்தை நாடுவது. ஆனால், பிரிட்டனிலிருந்து ஆஸ்திரேலியா போகவேண்டியவர் என்ன செய்வார்? //

நண்பர் குடும்பம் மாட்டிக்கிட்டு தவிக்குது அங்கே

Vidhya Chandrasekaran said...

நல்ல தகவல்கள்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கேக்கவே பயமா இருக்குங்க. தேடி தேடி படிக்கணும் விவரத்தைன்னு நெனச்சுட்டு இருந்தேன். இங்க ஒண்ணா படிச்சுட்டேன். நன்றி நேரம் எடுத்து தகவல் சேகரித்ததர்க்கு.
எங்க நண்பரோட நண்பர் ஒருத்தர் இந்தியால இருந்து இங்க கனடா வர்றதுக்கு வந்து Brussels ல சிக்கிட்டார் பாவம்.... என்ன ஆகுமோ தெரியல

ஸாதிகா said...

"படைத்தவனின் கோபப்பார்வை"

சாந்தி மாரியப்பன் said...

நல்ல தகவல்கள் ஹுஸைனம்மா.இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் அத்துடன் நிற்பதில்லை.butterfly effect என்னவெல்லாம் செய்யப்போகிறதோ!!
வழியில் மாட்டிக்கிட்டவங்களை நினைச்சாத்தான் கவலையா இருக்கு.

க‌ரிச‌ல்கார‌ன் said...

பகிர்வுக்கு ந‌ன்றி

வினையூக்கி said...

அருமையானக் கட்டுரை !! நான் வாசிக்கத் தவறிய பலவிசயங்ளை உங்களின் கட்டுரையில் கொடுத்து இருக்கிறீர்கள்.

நன்றி ஹூசைனம்மா

நட்புடன் ஜமால் said...

இன்று தான் இந்த மேட்டரே தெரியும், அப்பாலிக்கா இது ஏன் இன்னும் எத்தனை நாள் இப்படி யோசிக்க கூட இல்லை

இந்த இடுக்கையை படித்து பலது தெரிந்து கொண்டேன்.

மிக்க நன்றி.

நிறைய தகவல் திறட்டுறீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஹூசைனம்மா

☀நான் ஆதவன்☀ said...

சூப்பர். ரெண்டு நாளா பேப்பர்ல பார்த்து என்னென்னு சரியா புரியாம விட்டுட்டேன். ஏதோ எரிமலை வெடிக்குது. இதுக்கேன் விமான போக்குவரத்தை நிறுத்தனும்னு நினைச்சேன். தெளிவா அழகா சொல்லியிருக்கீங்க ஹூஸைனம்மா. நன்றி

ராமலக்ஷ்மி said...

தகவல்களை சேகரித்து மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். நன்றி ஹுசைனம்மா.

angel said...

இயற்கையின் கோவத்துடைய மதிப்பு ஓர் நாளுக்கு 200 மில்லியன் டாலர்

Menaga Sathia said...

எவ்வளவு அழகா விளக்கி சொல்லிருக்கிங்க,நன்றி ஹூசைனம்மா!! ஆனால் இதன் பாதிப்பு இன்னும் எங்கு போய் முடியும்னு தெரியல..

பனித்துளி சங்கர் said...

பல தகவல்களை திரட்டி தந்து இருக்கிறீர்கள் . பதிவு மிகவும் அருமை .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்

அன்புத்தோழன் said...

என்ன ஒரு அறிவு களஞ்சியம் ஹுஸைனம்மா நீங்க... அட... நெசமா தாங்க சொல்றேன்.... என்ன ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை எழுதிருக்கீங்க.... ரொம்ப அருமையா இருந்துச்சு.... :-)

SUFFIX said...

பல தகவல்களை திரட்டி, அருமையான ஆக்கம், பள்ளி மாணவர்கள் இதைப் படித்து வகுப்புகளில் ஒரு விளக்கவுரையே வழங்கலாம், அசத்திட்டிங்க ஹூசைனம்மா!!

அன்புத்தோழன் said...

எங்க dept head ரெண்டு நாளைக்கு முன்னாடியே ஐரோப்பா போயிருக்க வேண்டியது... அவர் கிளம்பிருப்பார்னு குஷியா ஆபீஸ் வந்தா மனுஷன் குத்துகல்லு மாதுரி உக்காந்துட்டு இருந்தாரு.... நான் அப்டியே ஷாக் ஆய்ட்டேன்.... என்னான்னு கேட்ட ட்ரிப் போச்ட்போநேத் பண்ணிட்டாராம்... :-(.... எல்லாம் எரிமல பண்ண வேலை... ஆனா என்ன நினைச்சாரோ தெரில இன்னிக்கி கெளம்பிட்டாரே.... tin tin ti din...ஹ ஹ :-)

Paleo God said...

இதப் பத்தி கூகிள் பண்ணலாம்னு இருந்தப்போ உங்க பதிவு பார்க்க கிடைத்தது. நல்ல தொகுப்பு.!

அன்புத்தோழன் said...

இப்படி சொல்லாதீங்க சாதிகா அக்கா.... இறைவன் எப்போதுமே நன்மையே நாடுவான் காரணம் சற்று முன் கிடைத்த statistics படி... அந்த எரிமலை வெளியிடும் கார்பண்டையாக்சைடை விட, தடைபட்ட விமான போக்கு வரத்தினால் வெளிபட்டிருக்க கூடிய கார்பண்டையாக்சைடின் அளவு புருவத்தை உயர்த்த வைக்குது.... அவ்வளவு அதிகமாம்.... இதனால் புவி வெப்பமயமாதலை kuraikka இறைவனின் செயலாக இது இருக்கலாம் அல்லவா?????

உங்களுக்கு அந்த statistics அனுப்புறேன் ஹுஸைனம்மா... முடிந்தால் பப்ளிஷ் செய்யவும்....

கோமதி அரசு said...

அருமையான கட்டுரை.

எங்கள் உறவினர் குடும்பம் ஒன்று இதனால் பாதிக்கப் பட்டு அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு போக முடியாமல் லண்டனில் இருக்கிறார்கள்.

இயற்கை சீராக அமைய இறைவனை வேண்டுவோம்.

கிளியனூர் இஸ்மத் said...

விபரமான தகவல்

அப்துல்மாலிக் said...

தகவலுக்காக நிறைய உழைச்சிருக்கீங்க, வாழ்த்துக்கள்

நல்ல பகிர்வு, நிறைய தெரிந்துக்கொண்டேன்

செ.சரவணக்குமார் said...

அருமையான கட்டுரை ஹுஸைனம்மா. பல புதிய தகவல்களை அறிய முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

ஹுஸைனம்மா said...

//அன்புத்தோழன் said...
இதனால் புவி வெப்பமயமாதலை kuraikka இறைவனின் செயலாக இது இருக்கலாம் அல்லவா?????//

அன்புத்தோழன், நன்றி. பதிவில் நன் சொல்ல நினைத்து மறந்த விஷயம் நினைபடுத்தியிருக்கீங்க, நன்றி!!

”இந்த விமானங்கள் வெளியிடும் கரியமில வாயுவிலிருந்து மேகங்கள் தற்காலிக நிம்மதிப் பெருமூச்சு விடும்”னு எழுதிவச்சிருந்தது, விட்டுப்போச்சு!!

நாடோடி said...

தெரியாத‌ த‌க‌வ‌ல்க‌ள் ப‌ல‌வ‌ற்றை சொல்லியிருக்கிறீர்க‌ள்.. சூப்ப‌ர்....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//புகைமண்டலம் 20- 30,00 அடிஉயரே மட்டும் இருப்பதால், தாழ்நிலையில் (3000 அடி) //
எரிமலை பொங்குவதால்தான் எத்தனை அபாயங்கள், ஆபத்துக்கள்,
சங்கடங்கள்? விரிவான கட்டுரை, காரண-காரியங்களுடன்
விளக்கினீர்கள்.
'20- 30,000' என்று நீங்கள் குறிப்பிட்டது,
'20-லிருந்து 30,000-வரை' என்றும் பொருள்படுகிறது.
அதை '20,000- 30,000' என்று மாற்றலாமே?

நாஸியா said...

ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க.. ஜஸகல்லாஹு க்ஹைர்.
**

ஆடாதடா ஆடாதடா மனிதான்னு சொல்ற மாதிரி இருக்கு இந்த நிகழ்வு.. இன்னும் என்னவெல்லாம் நம்ம காலத்துல நடக்க போகுதோ தெரியல‌

அன்புத்தோழன் said...

அடப்பாவிகளா..... யாரு வச்ச கண்ணோ தெரில... போன வேகத்துல மவராசன திருப்பி விட்டாங்க.... flight cancellaam.... மேனேசரு பேக் டு த பெவிலியன்....

அம்பிகா said...

செய்தியாய் அறிந்தோமே, தவிர இத்தனை ஆழமாய் தெரியவில்லை. எத்தனை விஷயங்கள்...
நல்ல பகிர்வு ஹூஸைனம்மா!

சாமக்கோடங்கி said...

பூமி எத்தனை நாள் தான் பொறுமையா இருக்கும்.. இது வெறும் சாம்பிள் தான்.. மெயின் பிச்சர் இன்னும் நாம பாக்கல..

நாம விதைச்சது.. நாம தான் அறுவடை பண்ணி ஆகணும்..

நாம சொன்னா எவன் கேக்கறான்..

நல்ல பயனுள்ள தகவலைச் சேகரித்துக் கொடுத்தமைக்கு நன்றி..

தாரணி பிரியா said...

Excellent post

malar said...

அருமையான விளக்கம்.....

அன்று மட்டும் நாள் 17000 பிளைட் கான்சல் 200m லாஸ் என்று படிதேன்.

உலகின் அழிவு எந்த ரூபதில் எல்லாம் வருது.

பிளைட் போகாமல் மக்கள் ஏர்போடில் எவ்வளவு அவதி படுறாங்க...

malar said...

எவ்வளவு அழகா விளக்கி சொல்லிருக்கிங்க,நன்றி

சிநேகிதன் அக்பர் said...

மிக அருமையாக தரவுகளோடு விளக்கியிருக்கிறீர்கள். பயனுள்ள தகவல்.

Chitra said...

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடந்த ஒரு சிறு நிகழ்வு, உலகத்தையே ஓரளவு ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பது, “உலகம் சுருங்கிவிட்டது” என்ற சொல்லாடலின் அர்த்ததையே மாற்றியமைக்கிறது!!

...... Superb! You have explained everything so well. Are you a teacher or professor? Your narrative style is amazing.

Muniappan Pakkangal said...

Nice info Hussainamma.Nature is the Great- always.

அன்புடன் மலிக்கா said...

நல்ல கட்டுரை ஹுசைன்னம்மா
ஒருவார லீவ் முடிந்துவந்தா அப்பப்பா என்னவெல்லாம் நடக்குது.

இறைவன் அனைவரின்மீதும் சாந்தியையும் நிம்மதியையும் தந்தருள்புரிவானாக..

Jaleela Kamal said...

இதெல்லாம் இறைவனின் கோபம் என்பார்கள்,

Jaleela Kamal said...

ரொம்ப மிகவும் அருமையான எல்லோருக்கும் தெரிய வேண்டிய பகிர்வு.

இவ்வளவு சிரமம் எடுத்து நன்றாக விளக்கி இருக்கீங்க பிராகாஷ் சொல்வது போல் பார்க்கும் போதே இபப்டி இருக்கு நமக்கு.நடக்கும் இடத்தில் ரொமப் வே வேதனை தான்.

எம்.எம்.அப்துல்லா said...

உங்களின் ஒவ்வொரு இடுகையிலும் ஒரு குறைந்தபட்ச உழைப்பு தெரிகின்றது.உங்களிடம் புதியவர்கள் மட்டுமல்ல...என்னைய மாதிரி சில பழைய ஆட்களும் கத்துக்கவேண்டிய பாடம் இது,

வாழ்த்துகள்.

மனோ சாமிநாதன் said...

மிக அருமையாக தொகுத்து எழுதியுள்ளீர்கள்!!

R.Gopi said...

ஒரு நாளைக்கு 200 மில்லியன் அளவிற்கு ஏர்லைன்ஸுக்கு லாஸ்னு நியூஸ் போட்டு இருக்காங்க...

எல்லாம் போதாத நேரம் தான்...

R.Gopi said...

மிக மிக அழகான தமிழில் அருமையாக எழுதப்பட்டுள்ள கட்டுரை...

ரொம்ப விரிவா படங்களுடன் விளக்கி இருக்கிறீர்கள்...

வாழ்த்துக்கள் ஹூஸைனம்மா...

ஸ்ரீராம். said...

அருமை.
பசங்களைப் படிக்கச் சொல்லணும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Very informative article at the right time. Thanks.

Rithu`s Dad said...

நல்ல தகவல் பதிவு. இதற்க்கான கமெண்ட்ஸ் பாத்து தான் ரெம்ப சிரிப்பு வருது.

கவலைப்படாதீங்க.. இதுவும் கடந்து போகும்...கடவுள் ஒன்னும் கோச்சுக்கல..

இன்னும் யாரும் கிளம்பலையா .. இது பத்தி எதாவது மத புத்தகத்தில ஏற்க்கனவே சொல்லியிருக்கு அப்படி இப்படினு...

(ரெண்டு மூனு பேர் இப்படி தான் கமெண்ட் போட்டிருக்காங்க இந்த புத்தகம் அந்த புத்தகம்னு.. யாகூவின் பக்கத்தில்)

துபாய் ராஜா said...

அழகான படங்களோடு அருமையான தகவல்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

எவ்வளவு அழகா விளக்கி சொல்லிருக்கிங்க,நன்றி

இவ்வளவு அழகாக தமிழை வலைப்பூக்களில் எழுதுவதற்கு காரணமாக இருந்த அதிரை உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தி தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோளுடன் எங்கள் வலைப்பூக்களில் பதிவாகி உள்ளது
http://thaj77deen.blogspot.com/2010/04/blog-post_14.html

http://bluehillstree.blogspot.com/2010/04/blog-post_17.html

http://vettippechu.blogspot.com/2010/04/blog-post.html

தமிழ் நேஞ்சங்களின் ஆதரவுடன் அவர்களுக்கு உலகத்தமிழர்களிடம் நிறந்தர அங்கீகாரம் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது, ஆதரவு தாருங்கள், பின்னோட்டங்களை பதியுங்கள், முடிந்தால் அதிக வாசகர்கள் வருகைதரும் உங்கள் வலைப்பூவில் உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தியை பதியுங்கள், சிறு துளி பெரு வெள்ளம். ஒரு சிறிய வேண்டுகோள்.

pudugaithendral said...

ரொம்ப நேர்த்தியா சொல்லியிருக்கீங்க. பாராட்டுக்கள்.

அமுதா said...

நல்ல பதிவு. அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

மறுபடியும் அருமை.. உங்ககிட்ட பிடிச்சதே இலகுத் தமிழ்ல இந்த தொகுத்தளிக்கும் பாங்கு தான்..

ஆனாலும் இந்தவாட்டி கொஞ்சம் அதிகமாவே பயமுறுத்திட்டீங்க.. :))நம்பிக்கையோட இருப்போம் - 2012 ஐ வெற்றிகரமா கடந்திடுவோம்ன்னு :)