Pages

ஊசல்மணி மதியம் 1.30. சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ஆஃபீஸ் கிச்சனுக்குச் சென்றேன்.  கிச்சனின் ஜன்னல் வழியே வெளியே தெரியும் குடியிருப்பின்  வில்லாக்களையும் (பங்களா), மரங்களையும் பார்த்துக்  கொண்டே சாப்பிட்டுவது வழக்கம். ஆஃபிஸ் ரூமின்வழி  வெளியே பார்க்க முடியாது. வெயிலோ, மழையோ, காற்றோ எதுவானாலும் மாலை வீட்டுக்குப் போகும்போதுதான் தெரியும்! உள்ளே ஏ.ஸி. குளிர் மட்டும்தான். ஆகையால் இந்தப் பத்து நிமிடங்கள் காணும் உலகு கண்ணுக்குக் குளிர்ச்சி!!

அந்த வீடுகளும், பாலைவன மணல் நிறத்தில் அதன் சுவர் அமைப்புகளும், அவற்றோடு உள்ள மரங்களும் ஏக்கம் கொள்ள வைக்கும்.  இந்த வில்லாவிலெல்லாம் நம்மளப் போல சாதாரணப்பட்டவங்க இருக்க முடியுமா? கொள்ளை வாடகை. அல்லது வாடகைக் கொள்ளையோ?

வீட்டோடு சேர்த்து நீச்சல்குளம் உண்டாம். பொதுவில் ஒரு உடற்பயிற்சிக் கூடம், கம்யூனிட்டி ஹால் கூட இருக்காம். பேப்பரில் விளம்பரம் பார்த்து தெரிஞ்சிகிட்டது. நினைத்துக் கொண்டே வெளியே பார்த்தவள் அதிர்ந்தேன்.  ஐயோ, வெளியே மணற்காற்று!! காலையில் வரும்போது வீட்டில் ஜன்னல் திரைச்சீலைகளை மூடவில்லையே!! அப்போதொன்றும் இந்தக் காற்று இல்லையே!

ஜன்னல் கண்ணாடிகள் மூடியிருந்தாலும், அதன் ஓரங்கள் வழியே நுண்ணிய தூசித் துகள்கள் உள்ளே வரும். முதல்மாடி என்பதால் அதிகமாகவே வரும். ஸோஃபா, கட்டில், துணிமணிகள், தரை எல்லாம் தூசிப்படலம் இருக்கும். பால்கனியோ, கேட்கவே வேண்டாம். அப்படியே கிச்சனும்!!

காற்று வேறு பலமா இருக்கே!! சாயங்காலம் வீட்டு வேலை செய்ய வரும் ரஃபீக் இன்னிக்கு வருவானா என்னவோ? சைக்கிளில் வருபவன். எதிர்க்காற்றில் மிதித்து வரவேண்டுமே. பாவம். வீட்டுக்கு அண்மையில் இருந்த அவனது கேம்ப்-ஐ, போன மாதம் நகர அழகுபடுத்துதலின் விளைவாக தொழிற்பேட்டைக்கு மாற்றிவிட்டார்கள்.  அங்கிருந்து சைக்கிளில் வர முக்கால் மணிநேரமாவது ஆகுமாம். அவனுக்குக் கஷ்டமாச்சே என்று, நாசூக்காக வேறு ஆள் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியாச்சு. ஆனால், அவனோ, பரவால்லக்கா, நானே வர்றேன் என்று பிடிவாதமாக வருகிறான்.

பன்னெண்டு மணிநேரம் ஆஃபீஸ்ல வேலை பாத்து கிடைக்கிற சம்பளம், அவனுக்கு இப்படி 3 மணி நேரம் பார்ட் டைம் பாக்கறதில கிடச்சுடும்கிறதால, இத விட அவனுக்கு மனசில்ல. இவனை விட்டா, புதுசா ஆளு நல்லதாக் கண்டுபிடிச்சு, அப்புறம் வேலைகளைப் பழக்கணும். அதனால இவனைவிட மனசில்ல எனக்கு.

அவன் இருக்கும் ஏரியாவில் பஸ் கிடையாது. டாக்ஸியில் வாப்பா, அதற்குரிய பணம் நான் தந்துவிடுகிறேன் என்று சொன்னதற்கும், அதெல்லாம் வேணாம்க்கா, யாரு பணம்னாலும் வேஸ்டாக்கக் கூடாது. நான் சைக்கிள்லயே வந்துடுவேன்னு சொல்றவங்கிட்ட பேசிச் சமாளிக்க முடியல.  சரி, அவன்  இஷ்டம்னு சம்பளத்தில் சேர்த்துக் கொடுத்தாச்சு. இலங்கையைச் சேர்ந்தவன்; பேசியதில் பிரச்னைக்கு மறுபக்கமும் உண்டெனத் தெரிந்தது.

 காலையிலயே கொஞ்சமாவது காத்து இருந்திருந்தா, கர்ட்டனையெல்லாம் இழுத்து மூடிட்டு வந்திருக்கலாம். அப்படின்னா ஜன்னல் பக்கம் மட்டும்தான் தூசி இருக்கும்; சுலபமா சுத்தம் செஞ்சிடலாம். ஆனா இப்ப வீடு முழுக்க பொடி மணல் பரவியிருக்கும். நடக்கும்போது நரநரன்னு இருக்கும். கதவு, டி.வி., அடுப்பு, ஃபிரிட்ஜ், புத்தகங்கள், காயப்போட்ட ஆடைகள்னு எதைத் தொட்டாலும் தூசியா இருக்கும். ஒரு வேலைக்கு இருவேலை!!

இன்னிக்கு வந்துடுவானா? வரல்லன்னா? இதப் பாக்கிறதா, சமையல், துணி துவைக்க, ஹோம்வொர்க், இப்பப் புதுவரவா பிளாக், மெயில்கள்னு அதைப் பார்க்கவா? ஆனா, எதிர்க்காத்துல சைக்கிள மிதிச்சு வரணுமே.

முதல்மாடியில இருக்கும்போதே, இவ்வளவு தூசி. இதுவே இந்த மாதிரி வில்லாக்கள்னா, எவ்வளவு மண் வரும்? பத்திருவது வருஷமா வில்லாவில இருக்கிற அல்-அய்ன் மாமி சொன்னாங்களே, மணல்காத்து அடிக்கிற அன்னைக்கு, ஏண்டா வில்லாவுக்கு வந்தோம்னு நொந்துக்குவாங்களாம். அந்தளவுக்கு, கார், தோட்டம், செடிகள், போர்டிகோ, வராந்தா, வீடுன்னு ஒரே மணலா இருக்கும். கூட்டிப் பெருக்குறதுக்குள்ள இடுப்பு ஒடிஞ்சுடுமாம். நல்லவேளை நான் வில்லாவுல இல்லைப்பா...Post Comment

56 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

நேத்து அடிச்ச‌ காத்துக்கு ஆபிஸே சும்மா அதிர்ந்த‌து

Anonymous said...

போட்டோ புடிச்சு போட்டிருக்கலாம்

அரபுத்தமிழன் said...

ஆடிக்காத்துல அம்மிதான் பறக்கும்
ஆனா அபுதாபி காத்துல‌
வில்லாவே பறந்துடுச்சு
(உங்க மனதிலிருந்து) :‍-)

LK said...

இக்கரைக்கு அக்கறை பச்சை. இன்னிக்கு இங்க காத்து + மழை ஜாஸ்தியா இருக்கு .. வீட்டுக்கு எப்படி போறதுன்னு யோசிக்கணும்

நாஞ்சில் பிரதாப் said...

ஹலோ யாரு ஷேக் கலீபாவா? ஹுசைனம்மாவுக்கு ஏதோ பிரச்சனையாம் கொஞ்சம் என்னன்னு கேளுங்க சார்...

Vidhoosh(விதூஷ்) said...

சீ சீ இந்தப் பழம் புளிக்கும்... :))

அருமையாக இருக்குங்க ஹுசைனம்மா. நலம்தானே?

நாடோடி said...

ம‌ண‌ற்காற்று பெரிய‌ பிர‌ச்ச‌னைதான்.... அதிலும் வ‌ண்டி ஓட்டினால் அவ்வ‌ள‌வுதான்..

ஸாதிகா said...

சீ..சீ..இந்த பழம் புளிக்கும் .நல்ல பாலிஸிதான்.

வடுவூர் குமார் said...

வில்லாவுக்கு வெளியிலும் இவ்வ‌ள‌வு பிர‌ச்ச‌னையா?
இந்த‌ அலுவ‌ல‌க‌த்தில் குளிர்சாத‌னம் ஏன் இவ்வ‌ள‌வு க‌ம்மியாக‌ வைக்கிறார்க‌ளோ தெரிய‌வில்லை.சாப்பாடு முடிந்து ஒரு 20 நிமிட‌ம் அன‌ல் போல் அடிக்கும் காத்து மூச்சியில் ப‌டும் மாதிரி வெளியே நிழ‌லில் நிற்ப‌து சுக‌மாக‌ இருக்கு.இப்ப‌டி நிற்ப‌தை பார்த்து "த‌லை" ஏன்? ஏன் ? என்று க‌ண்ணால் கேட்டுவிட்டுப்போவார்.இந்த‌ மாதிரி பாலைவ‌ன‌காற்றை சென்னையிலா அனுப‌விக்க‌ முடியும்??

நாஸியா said...

ஹிஹிஹி..

:)

அநன்யா மஹாதேவன் said...

சாதாரணமா புலம்புற மாதிரி ஆரம்பிச்சுட்டு வழக்கம்போல ஒரு அருமையான பஞ்ச் வெச்சு முடிச்சுட்டீங்க! நடுவுல நம்ம ரஃபீக் விஷயம் சாண்டுவிச் பண்ணினது அருமை போங்க! நீங்க ஒரு ஐடியா களஞ்சியம் உங்களப்போயி கலாய்ச்சுட்டேனே!
ஆமா நேத்திக்கி கதவு ஜன்னல் எல்லாம் மூடி கூட, ஒரு இஞ்ச்சுக்கு தூசு படர்ந்தாச்சு. பாழடைஞ்ச வீடுமாதிரி இருக்கும்!

Mrs.Menagasathia said...

நல்லவேளை எங்களுக்கு அந்த பிரச்னையில்லை,குளிர் தான் வாட்டிஎடுத்துடும்...

புதுகைத் தென்றல் said...

ஞாயிற்றுக்கிழமை மழை, காத்துக்கு அப்புறம் நாங்க வீடை க்ளீன் செய்யப் பட்ட பாடு, நீங்க பதிவுல சொல்லியிருப்பதை நல்லா உணர முடியுது.

SUFFIX said...

இங்கே அடிக்கிற பாலைவனக் காற்றுக்கு ப்ளாட் வீடு தான் பெஸ்ட்டு, அங்கேயும் வானிலை சரியில்லையா? ஜித்தாவிலும் ரெண்டு நாளா ஒரு மாதிரி தான் இருக்கு. ரஃபிக் நெகிழ வச்சிட்டார்!!

அபுஅஃப்ஸர் said...

நா முதல்லே வீட்டுக்கு ஃபோன் பண்ணி சொன்னே ஜன்னல்களை திறக்கவேண்டாம், காயப்போட்ட துணிகளை எடுத்துடுனு...

மணல் அதிகம் இருக்குறதாலே மணல் காத்து அடிக்குது மலைகள் இருந்தால் அதுக்கு என்னா பேரு?

Chitra said...

காத்து, தூசி, வில்லா, வாடகை, காட்சி என்று ஒரு கலக்கல் இடுகை கொடுத்து இருக்கீங்களே...... சூப்பர்!

தமிழ் பிரியன் said...

இப்படி மணல் காற்று வீசினா அடுத்த நாளு எங்க பாடு திண்டாட்டமாயிடும்.. :(

நியோ said...

" நல்லவேளை நான் வில்லாவுல இல்லைப்பா... "
எப்படியெல்லாம் நம்பள திருப்தி படுத்திக்க வேண்டியிருக்கு ...
சரி தானே ஹுசைன் அம்மா ...
தஞ்சாவூர்லேயும் நல்ல காத்து வீசுது ... மணல் மிஸ்ஸிங் ...
வர்றேன் ஹுசைன் அம்மா ...
ஊசல் தலைப்பு பல வாசிப்புகளுக்கு இடம் கொடுக்குது ...
நன்றி ...

--------------------------------------
advt.
தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...
http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.html

ஜெயந்தி said...

சென்னையிலயும் வெயில் காலத்துல வீட்டுக்குள்ள ஒரே தூசி மழைதான். துடைத்தாலும் நான்கு நாட்களுக்குள் திரும்பவும் வந்துவிடும்.

ஜெய்லானி said...

அப்ப நீங்க ஷார்ஜா வரலியா .ஒரு வேளை நீங்க வரதுக்குதான் இந்த அளவு காத்தோன்னு நினைச்சிட்டேன்.
:-)))

கோமதி அரசு said...

மனதின் ஊசல் ஆட்டத்தை நன்கு எழுதி
உள்ளீர்கள்.

ஹேமா said...

இயல்பாய்ச் சொன்ன விதம் அசத்தல்.

அம்பிகா said...

மிக இயல்பாய் எழுதியிருக்கிறீர்கள்.
நல்ல பகிர்வு.

அக்பர் said...

வளைகுடா நாடுகள்ல இதுதான் முக்கிய பிரச்சனை.

ஹுஸைனம்மா said...

கமெண்ட் பப்ளிஷ் பண்ண முடியலை; அதான் டெஸ்டிங்!!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

புழுதிகாத்துதான் கல்ப் கன்ட்ரீஸ்ல ஸ்பெஷல். அது இல்லாம கல்ப் கன்ட்ரீயா..

நட்புடன் ஜமால் said...

சென்னையில் வந்து இருந்து பாருங்க

குறிப்பா மன்னடி,ப்ராட்வே,பாரிஸ் என சொல்லப்பட்டும் இடங்களில்

நேற்றைய மழையில் ...

வேண்டாம் அழுதுறுவேன் ...

malar said...

அப்புற்ம் என்னங்க ஆச்சு?வேலைக்கு ஆள் வந்துதா?

நிறைய பேர் கமெண்டு பப்ளிஸ் ஆகல்லன்னு சொல்றாங்க என்ன ஆச்சு?

ஹுஸைனம்மா said...

வாங்க கரிசல் - நன்றி.

அம்மிணிக்கா - ஃபோட்டோ புடிச்சேன்; ஆனா காத்துல தெளிவாயில்ல. அதான் போடல.

எல்.கே. - நல்லவேளை, நான் அங்க இல்ல; அப்றம் எப்டிப் போனீங்க வீட்டுக்குன்னு ஒரு பதிவு போட்றுங்க, சரியா?

அரபுத்தமிழன் - கவிஞர் இல்லியா, அதான் அழகாச் சொல்லிருக்கீங்க!!

ஹுஸைனம்மா said...

பிரதாப் - வாங்க; ஷேக் கலீஃபாட்ட பேசிட்டுத்தான் பதிவே போட்டேன் தெரியுமா? நாங்க யாரு!!

விதூஷ் - வாங்கப்பா; கொஞ்சம் நெருங்கிட்டீங்க “பழம் புளிக்கும்” - கரெக்ட்!!
நான் நலமே; நீங்களும்தானே?

நாடோடி - வாங்க; ஆமாங்க, கிட்டத்தட்ட மழை பெய்யும்போது ஓட்டுறமாதிரிதான், காத்தடிக்கும்போது ஓட்டுறது!!

ஸாதிகா அக்கா - வாங்கக்கா; ஆமாக்கா, நமக்கு வாய்க்காததை இப்டித்தான் சொல்லி ஆறுதல் பட்டுக்க வேண்டியிருக்கு!!

ஹுஸைனம்மா said...

வடுவூர் குமார் - வாங்க; ஆஃபீஸ்ல நடுங்கிட்டுத்தான் இருக்க வேண்டிருக்கு!! ஆனா, இந்த அரபிகளுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இதுவும் போதாதாம்!!

நாஸியா - ஒண்ணும் புரியலையா, இப்டிச் சிரிக்கீறீங்க?

அநன்யா - வாங்க; நமக்கு புலம்பல்தானே தொழிலே!! ;-))
அதுசரி, என்னத்துக்கு இப்டி ஓவர் ஐஸ்? நானே ஆல்ரெடி ஃப்ரீஸர்ல இருக்க மாதிரி இருக்கேன்!!

ஹுஸைனம்மா said...

மேனகா - வாங்கப்பா; குளிரும் படுத்தும்; ஆனா, ஸ்னோவுக்கு இது பரவால்லைதான்!!

ஷஃபிக்ஸ் - வாங்க; ஆமாங்க, ஃப்ளாட்தான் வசதி!! ரஃபீக் நல்லவர்தான்!! என்கிட்ட வேலைசெய்றார்னா பொறுமையானவரா இருந்தாத்தேன் முடியும்!! :-))

அபுஅஃப்ஸர் - பரவால்ல, பொறுப்பா இருந்திருக்கீங்க. அதுசரி, காயப்போட்ட துணியை எடுக்காட்டி, அப்றம் உங்களுக்குத்தான் கூடுதல் வேலை, அதனாலயா?

ஹுஸைனம்மா said...

சித்ரா - வாங்கப்பா; ஹி..ஹி.. நாம வேற எங்கப் போய் புலம்புறது, இல்லியா?

தமிழ்ப்பிரியன் - ஏங்க திண்டாட்டம்? காயவச்ச வடகம் பறந்துபோய்டும்னா?

நியோ - வாங்க; முதல்வருகை தொடர்க!! ஆமாங்க, மனமெனும் குரங்கை இப்டித்தான் தட்டி வைக்க வேண்டியிருக்கு!!

ஹுஸைனம்மா said...

ஜெயந்தி - வாங்க; ஆமாஙக், நம்ம ஊர்ல சும்மாவே தூசிபடியும்!! துடைச்சு மாளாது!!

ஜெய்லானி - நாம வந்தா மழைதான் பெய்யும்!! 3 வாரம் முன்னாடி வந்தேன், அப்றந்தானே மழை அங்க, துபாய்லெல்லாம்!!

கோமதிக்கா - வாங்கக்கா!! கரெக்டா பிடிச்சது நீங்கதான்!! “மனதின் ஊசலாட்டம்” இத வச்சுத்தான் எழுதினேன்!!

ஹுஸைனம்மா said...

ஹேமா - வாங்கப்பா; நன்றி!!

அம்பிகா - வாங்க, நன்றி!!

ஸ்டார்ஜன் - ஆமாங்க; இது இல்லாம அரபு நாடுகளா!! ராஜஸ்தான்லயும் இப்படிக் காத்து உண்டாம்!!

ஜமால் - வாங்க; சென்னையில இருக்கறதுக்கு நீலாங்கரையில பங்களா கொடுத்தாக்கூட முடியாதுன்னு சொல்லிடுவேன். எனக்குப் பிடிக்காத ஊர்! (ஊர் மட்டும்தான், ஊர்வாசிகளை இல்லை. அவர்களைக் கண்டு ஒரு பரிதாபம்தான் வரும், எப்டித்தான் சமாளிக்கிறாங்களோன்னு!)

ஹுஸைனம்மா said...

மலரக்கா - வாங்க; அதெல்லாம் ரஃபீக் கரெக்டா வந்துடுவார்.

கமெண்ட் பப்ளிஷ் பண்றது இப்பச் சரியாகிடுச்சு!! நன்றி!!

ஹுஸைனம்மா said...

ப்ளாட் - வில்லா ஆசை;
ரஃபீக் கஷ்டப்பட்டு வரவேண்டாம் - ஆனா வந்தாத்தான் வசதி
இப்படி ஊசலாடும் மனது!!

வேற யாருமே கண்டுபுடிக்கலியே, அப்ப நானும் பி.ந. பாணியில எழுதுறேனோ? எலக்கியவாதின்னு சொல்லிக்கலாம் போல இனி!! ;-)))

NIZAMUDEEN said...

அதோ அந்த வில்லா-
இல்லவே இல்லை நல்லா!

அமைதிச்சாரல் said...

//இன்னிக்கு வந்துடுவானா? வரல்லன்னா? இதப் பாக்கிறதா, சமையல், துணி துவைக்க, ஹோம்வொர்க், இப்பப் புதுவரவா பிளாக், மெயில்கள்னு அதைப் பார்க்கவா? //

மனுஷனுக்கு கவலை எப்படில்லாம் வருதுப்பா :-))))))

ஜெகநாதன் said...

இயற்கை எல்லாவற்றையும் சமப்படுத்திவிடுகிறது.
சிலசமயம் சமாதானப்படுத்தியும்.
மணற்காற்றும் அது திறந்து விட்ட ஜன்னல்களையும் புதிதாக இங்கு தரிசிக்கிறேன்.
ரசித்து வாசித்தேன் ஹுஸைனம்மா! வாழ்த்துக்கள்!!

அன்புடன் அருணா said...

இங்கே ராஜஸ்தானிலும் இதே கதைதான்!எப்போதும் மணல் பற்றிய கவலையே!

Anonymous said...

நல்லா சமாளிச்சுட்டீங்க

ஸாதிகா said...

//ஜமால் - வாங்க; சென்னையில இருக்கறதுக்கு நீலாங்கரையில பங்களா கொடுத்தாக்கூட முடியாதுன்னு சொல்லிடுவேன். எனக்குப் பிடிக்காத ஊர்! (ஊர் மட்டும்தான், ஊர்வாசிகளை இல்லை. அவர்களைக் கண்டு ஒரு பரிதாபம்தான் வரும், எப்டித்தான் சமாளிக்கிறாங்களோன்னு!)//ஹுசைனம்மா தங்கச்சி..இந்த குசும்புதானே வேண்டாங்கறது.அதிரா பாஷையில் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஹுஸைனம்மா said...

//NIZAMUDEEN said...
அதோ அந்த வில்லா-
இல்லவே இல்லை நல்லா!//

ஹை..கவித..கவித..

வாங்க நிஜாம் அண்ணே - நன்றி.

அமைதிச்சாரல் -வாங்க; ஆமா, புதுப்புது கவலைகள்!!

ஹுஸைனம்மா said...

ஜெகநாதன் - வாங்க;

//இயற்கை எல்லாவற்றையும் சமப்படுத்திவிடுகிறது.
சிலசமயம் சமாதானப்படுத்தியும்.
மணற்காற்றும் அது திறந்து விட்ட ஜன்னல்களையும் புதிதாக இங்கு தரிசிக்கிறேன்.//

உண்மைங்க; மனதை சமப்படுத்துவதும், சமாதானப்படுத்துவதும்கூட ஒரு கலைதான்!!
நன்றி வருகைக்கும், ரசிக்கும்படியான கவித்துவ கருத்துக்கும்!!

ஹுஸைனம்மா said...

வாங்க அருணா டீச்சர் - ஒரு சம்யம் மெயில் வந்த மணற்காற்று படங்கள், சவூதியில் எடுத்ததோ என்று நினைத்துப் பார்த்தால், ராஜஸ்தானாம்!! ஆச்சர்யமா இருந்தது!! நன்றி!!

கிறுக்கல்கள் - வாங்கப்பா; சமாளிச்சுகிட்டுத்தான் வாழ்க்கை ஓடுது!! நன்றி, தொடர்ந்து வாங்க!!

ஹுஸைனம்மா said...

ஸாதிகா அக்கா - அச்சோ நீங்களும் அங்கதான்னு மறந்துட்டேனே!! ;-))

ஆனா, உண்மையிலேயே எனக்கு அந்த ஊர்னா கொஞ்சம் அலர்ஜிதான்!! முக்கிய காரணம், இடநெருக்கடி, ஜனத்திரள், கொஞ்சம் மழை பெய்தாலும் சகதிக்காடு ஆவது, சுத்தம்/சுகாதாரமின்மை, போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்கள்தானே தவிர வேறொன்றுமில்லை!!

சிறுவயதிலேயே என் தந்தையின் மருத்துவத்திற்காகப் பலமுறை சென்னை வந்து செல்வதனால் கிடைத்த அனுபவங்கள்!!

ஆனால் இப்போ திருநெல்வேலி உட்பட மற்ற நகரங்களும் அப்படித்தான் ஆகிவிட்டன!! :-(((

ஸ்ரீராம். said...

அபுதாபிக் காத்துக்கு சேட்டைதான்...

மனோ சாமிநாதன் said...

புழுதிக்காற்று என்பது இங்கே அடிக்கடி பார்ப்பதுதான்.
புயல் போன்ற புழுதிப்புயல் நடுவே சச்சின் வேறொரு புயலாக இங்கே சதம் அடித்ததுதான் நினைவுக்கு வருகின்றது.
மற்றபடி ஒரு சாதாரண நிகழ்வாக மறைந்து செல்லும் அதற்கு கவிதை மாதிரி எண்ணங்களை செதுக்கி உயிரூட்டம் கொடுத்திருக்கிறீர்கள்!

Jaleela said...

இந்த மண்காற்று, தீடிரென அடித்தால் காய போட்ட துணி பால்கனி எல்லாம் புழுதி தான்.

ம்ம் உங்களுக்கு ஒரு ராபீக் இருக்கிறார். இங்கு எல்லாம் நானே நானே தான்/

மண் காற்றை பற்றியும் ஒரு விளக்கமான பதிவு.

Jaleela said...

எனக்கும் முன்பெல்லாம் வெளியில் என்ன நடக்குத்துன்னு ஒன்றூமே தெரியாது , பால்கனியும் துணிகாய போடுவதொடு சரி, நின்றூ வேடிக்கையும் பார்க்க முடியாது.

Jaleela said...

வில்லாவில் இருப்பதை விட பிடாட் தான் பெட்டர்.

Jaleela said...

உங்கள் பதிவ பார்க்கும் போது எனக்கும் சொல்ல விஷியம் நிறைய இருக்கு ஆனால் எழுத தான் நேரமில்லை.

Jaleela said...

எந்த ஊரா இருந்தாலும், மண்ணு காற்று, மழை என்றால்,சேரும் சகதியும் எல்லாம் ஒரே மாதிரிதான் .//

அன்புத்தோழன் said...

அட இந்த பதிவு எப்புடி மிஸ் ஆச்சு... எனக்கு எந்த notificationum வரல... சரி எது எப்புடியோ..... உங்க மணல் புயல் வில்லா கனவு படிக்குரதுகுள்ள நம்ம ஊருபக்கம் வந்த லைலா அந்த்ராவுக்கே போய்டா.... ரஃபிக் அநியாயத்துக்கு நல்லவரா இருப்பாரு போல(என்ன மாத்ரி ;-) ஹி ஹி)...

அப்பாவி தங்கமணி said...

அக்கரைக்கி இக்கரை பச்சை தான் போங்க... அந்த மணல் காத்து அனுபவம் எனக்கும் உண்டு. என்னவருக்கு eye infection வந்தது ஒரு முறை நாங்க அங்க இருந்தப்ப... ரெம்ப கொடுமைப்பா...
பாவம் தான் அந்த வேலைக்கு வருபவர்.. என்ன செய்ய?