போன வாரம் இங்கே அமீரகத்தில் தலைப்புச் செய்தி, ‘உடல் உறுப்புகள் தானம் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது’ என்பதுதான். ஏற்கனவே 1993ல் உடல் உறுப்புகள் தானம் அங்கீகரிக்கப்பட்டிருந்த சட்டத்தில், மூளைச்சாவு குறித்த சில தெளிவின்மைகளை நீக்கி, மீண்டும் இப்போது உறுதி செய்துள்ளனர்.
ஒரு படிவத்தில் தனது விருப்பத்தை எழுதி, இரு சாட்சிகள் கையொப்பமிட்டால் போதும் என்று மிகவும் எளிமையாக்கியுள்ளனர். இல்லையென்றாலும், இறந்தபின் நெருங்கிய உறவினர் விரும்பினாலும் போதும்.
ஒருவரின் பணம், பொருள், உணவு, கல்வி தானங்கள், அவரவர் வசதி போன்ற தகுதிகளைப் பொறுத்து வேறுபடலாம். ஆனால், ஏறக்குறைய அனைவரும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாது ஒருபோலச் செய்யக்கூடியது உடலுறுப்பு தானங்களே!!
உயிரோடிருக்கும்போது, உயிர் பிரியும் நிலையில், உயிர் பிரிந்த பின் என எல்லா நிலைகளிலும் செய்யக்கூடிய உறுப்புகள் பெற்ற மனித உடல், இறைவனின் அற்புதப் படைப்பு. மூன்று நிலைகளிலும் சேர்த்து 25 உறுப்புகள் தானம் செய்யக்கூடிய பேறு படைத்தவர்கள் நாம்.
உயிரோடிருக்கும்போது தானம் செய்யக்கூடிய உறுப்புகள் (ஒரு பகுதி மட்டும்):
1. கிட்னி
2. கல்லீரல்
3. நுரையீரல்
4. மண்ணீரல்
5. குடல்
6. இரத்தம்
7. எலும்பு மஜ்ஜை
8. கணையம்
இதுவே மரணத் தருவாயில் இதயம் உள்ளிட்ட மேற்கூறியவற்றில் சில உறுப்புகளும், இறந்தபின் எலும்புகள், தோல், கண்கள், இதய வால்வுகள் போன்றவை தானமாக வழங்கலாம்.
ஒருவருக்கு மாற்று உறுப்பு பொறுத்தப்பட்ட பின், அவரது உடல் அவ்வுறுப்பினை ஏற்றுக் கொள்ளவேண்டும். அதற்குரிய சோதனைகள் முதலிலேயே செய்யப்படும் என்றாலும், உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தி அதை உடலில் நுழைந்த நோய்த் தாக்குதலோ என்றெண்ணி புறந்தள்ள முயலும். அதைத் தவிர்க்க, செயற்கையாக அவரின் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபாடீஸ்) குறைக்கப்படும்; சில சந்தர்ப்பங்களில், இரத்தத்தில் ஆன்டிபாடீஸ் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் மண்ணீரல் (Spleen) நீக்கப்படுவதுமுண்டு. இதன் வேலையை, நுரையீரல் செய்துகொள்ளும் என்பதால், இதை நீக்குவதால் பாதிப்பில்லை.
கிட்னி மாற்று சிகிச்சைகளே அதிகமாக நடக்கின்றன. பரம்பரை காரணங்கள், உணவு முறைகள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றால் எளிதில் பாதிப்புக்குள்ளாவது சிறுநீரகமே. இறைவன் கொடையாக ஒருவருக்கு இரு சிறுநீரகங்கள் இருப்பதால் மாற்று உறுப்பு கண்டடைவதும் எளிதாக இருக்கிறது. ஆனாலும், சிகிச்சைக்கு முன்னும், பின்னும் செய்துகொள்ளவேண்டிய அன்றாட நடைமுறை மாற்றங்கள் பெருமளவு உண்டு என்பது நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால் அலட்சியமாக இருந்து விடுகின்றனர்.
உடலுறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களும் ஆரோக்கியமானவர்களே என்று நிரூபிக்கவும், உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும் ஏற்படுத்தப்பட்டது, "World Transplant Games"!!
அமீரகத்தில் 2008ம் வருடத்திலிருந்து, அரசாங்க மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் இலவசமாகச் செய்யப்படுகின்றன. தானமளிப்பவர் உறவினராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை மட்டுமே. இந்தியாவில் பல லட்சங்கள் செலவில் செய்ய வேண்டிய சிகிச்சை, மற்றும் பின்னர் எடுத்துக் கொள்ளவேண்டிய விலையுயர்ந்த மருந்துகள் போன்றவை இங்கு இலவசமாகவே தரப்படுகிறது. சிறுநீரக மாற்று சிகிச்சை, மருத்துவக் காப்பீடுகளின்கீழ் வராது என்பதால், இது பேருதவியாக இருக்கிறது.
இப்போது புதிய சட்டத்தின்மூலம், உடலுறுப்புகள் தானமும் அதிகரிக்கும் என்பதால், மற்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளும் செய்யுமளவு இங்குள்ள மருத்துவமனைகளின் கட்டமைப்பும் உயர்த்தப் படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இச்சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை குறையும்.
இறக்கும்போதும் நாம் பிறருக்கு உதவும்வண்ணம் நமது உடலுறுப்புகளைத் தானம் செய்ய முடிவதற்கு, உயிரோடிருக்கும்போது நல்ல மனமும், இறக்கும்போது நல்ல மரணமும் தர இறைவனை வேண்டுவோம்!!
|
Tweet | |||
53 comments:
நல்லதொரு விழிப்புணர்வூட்டும் பகிர்வு. நன்றி ஹுஸைனம்மா.
இரத்த தானத்தின் முக்கியத்துவத்துவத்தையும் அதன் பலனையும் அனுபவித்தவனில் நானும் ஒருவன். மதம், மொழி, இனம் இது போன்ற எல்லைகளை கடந்தது இவ்வகை தானங்கள். வழக்கம்போல் நல்லதொரு இடுகை ஹூசைனம்மா!!
நல்ல பகிர்வு
Good post.
நானும் தானம் பண்ண எழுதிக்குடுத்துருக்கேன்.
நல்ல விசயம் ...
வழக்கம் போல் கலக்கல் விழிப்புணர்வு பதிவு ஹுஸைனம்மா.... நல்ல பகிர்வுக்கு நன்றி...
Nice Post...
உடலுறுப்பு தானம் பற்றிய அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை! வழக்கம்போல நல்லா இருந்தது!
//நல்ல மனமும், நல்ல மரணமும் //
wow.. nice post husain amma.
நல்ல பகிர்வுக்கு நன்றிகள் பல...
நல்லதொரு பதிவு.மனதில் பதியும்படி எழுதியிருக்கிறீர்கள் தோழி.
நல்லதொரு விழிப்புணர்வு மிகுந்த தகவல்.. இறைவன் காக்கட்டும்..யாருக்கேனும் இதுபோன்ற மூளைச்சாவு ஏற்பட்டால் அவர்களது உறவினர்கள் இதை துணிந்து முடிவுசெய்ய வேண்டும்..
நல்ல பதிவு,சகோதரி.
//உயிரோடிருக்கும் போது நல்ல மனமும், இறக்கும் போது நல்ல மரணமும் தர இறைவனை வேண்டுவோம்.//
நல்ல பிராத்தனை.
அருமையான பதிவு ஹுசைன் அம்மா!!!
சிறப்பான பகிர்வு! பாராட்டுக்கள்!!
நல்ல பதிவு...இதுவரை எலும்பு எல்லாம் தானம் செய்யலாம் என்று தெரியாது...
நல்லதொரு விழிப்புணர்வூட்டும் பகிர்வு.
நல்ல விளக்கங்களுடன் ஒரு பதிவு அருமை..
உயிரோடிருக்கும்போது நல்ல மனமும், இறக்கும்போது நல்ல மரணமும் தர இறைவனை வேண்டுவோம்!!
அருமையான வரி! அவனருள் இருந்தாலே இது நடக்கும்
சிறந்த பதிவு. , உயிரோடிருக்கும்போது நல்ல மனமும், இறக்கும்போது நல்ல மரணமும் தர இறைவனை வேண்டுவோம்!!
நேர்மையான கோரிக்கை.
அயித்தானோட அண்ணன் இறந்தப்போ அவரது கண்களை தானமா கொடுத்தாங்க. தலைப்பும் பதிவும் அருமை ஹுசைனம்மா
விழிப்புணர்வுப் பதிவு...உபயோகமான ஒன்று.
நல்ல விழிப்ப்புணர்வு தந்து இருக்கின்றீர்கள்.இறந்த பின் முழு உஅடலையும் தானம் செய்வது பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது என்பதை நான் அறியவில்லை.
very nice post.
//இறக்கும்போதும் நாம் பிறருக்கு உதவும்வண்ணம் நமது உடலுறுப்புகளைத் தானம் செய்ய முடிவதற்கு, உயிரோடிருக்கும்போது நல்ல மனமும், இறக்கும்போது நல்ல மரணமும் தர இறைவனை வேண்டுவோம்!!//
நிச்சயமா!!!
உடல் உறுப்புக்களைத் தானம் செய்யும் அளவுக்கு இன்னும் பக்குவம் வரலை.. :(
ஆனா 3 மாதத்திற்கு ஒரு தடவை இரத்த தானம் செய்ய முடியுது.
மிக நல்ல பதிவு ஹுஸைனம்மா.
நல்லதொரு தெரிந்துகொள்ள வேண்டிய கட்டுரை ஹூசைனம்மா.
very nice post!!
Nice article Hussainamma & itz heartening to know Renal Transplant & follow up is absolutely free in Ameeraham.
பயனுள்ள பதிவு!!! மறுஜென்மம் இதன் மூலம் சாத்தியப்படும்...
மிக நல்லா பதிவு
\\இறக்கும்போதும் நாம் பிறருக்கு உதவும்வண்ணம் நமது உடலுறுப்புகளைத் தானம் செய்ய முடிவதற்கு, உயிரோடிருக்கும்போது நல்ல மனமும், இறக்கும்போது நல்ல மரணமும் தர இறைவனை வேண்டுவோம்!!\\
எனக்காக நானும் இப்படி வேண்டிக்கொள்கிறேன் :)
//உயிரோடிருக்கும்போது நல்ல மனமும், இறக்கும்போது நல்ல மரணமும் தர இறைவனை வேண்டுவோம்!!//
ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க மேடம்.. நல்ல பகிர்வு
அக்பர் - நன்றி.
ஷஃபி - நன்றி.
எல்.கே. - நன்றி.
பிரதாப் - நன்றி.
சின்ன அம்மிணி - அப்படியா! சந்தோஷம்ங்க. இந்தச் செய்தி பலருக்கும் ஊக்கமா அமையும்.
நாடோடி- நன்றி.
அன்புத்தோழன் - நன்றி.
இர்ஷாத் - நன்றி.
அநன்யா - நன்றி.
விதூஷ் - ஆமாம்பா, மனம் இருந்தால் மட்டும் போதுமா, செயலபடுத்த மரணமும் நல்லதாக இருக்க வேண்டுமே. மங்களூர் விபத்தைப் போல இருக்கக்க்கூடாது!!
கரிசல்காரன் - நன்றி.
ஹேமா - நன்றி.
நிஜாம் - ஆமாம், இறைவன் அந்தச் சம்யத்தில் திடமனதைத் தரவேண்டும்.
கோமதி அக்கா - நன்றி.
அபி அப்பா - நன்றி.
சேட்டை - நன்றி.
கீதா - எனக்கும் நுரையீரல் கூட தானம் பண்ணமுடியும்னு இப்பத்தான் தெரியும்பா!
அபுஅஃப்ஸர் - நன்றி.
ரியாஸ்- நன்றி.
ரிஷபன் சார் - நன்றி.
உதயம் - நன்றி.
தென்றல் - நிறைவு தரும் விஷயம்; இப்ப கண் தானம் சகஜமான ஒன்றாகிட்டு வர்றது மகிழ்ச்சியாருக்கு. நன்றி.
ஸ்ரீராம் சார் - நன்றி.
ஸாதிகா அக்கா - முழு உடல் தானத்தை விட, உறுப்பு தானம் முக்கியம் என்று கருதுகிறேன். அதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையுமில்லை. “நான் உங்களுக்குத் தந்ததைக் கொண்டு தானம் செய்யுங்கள்” என்றுதானே இறைவன் சொல்லுகிறான் குர் ஆனில்.
சித்ரா - நன்றி.
ஜெய்லானி - நன்றி.
தமிழ்ப்பிரியன் - வழக்கமா இரத்ததானம் செய்யுற உங்களுக்கு, இந்தப் பக்குவமும் தானே வரும்!!
சரவணக்குமார் - நன்றி.
ஸ்டார்ஜன் - நன்றி.
மேனகா - நன்றி.
டாக்டர் சார் - நன்றி டாக்டர்; மிக்க மகிழ்ச்சி.
ப்ரின்ஸ் - //மறுஜென்மம் இதன் மூலம் சாத்தியப்படும்// அட, இப்படியும் யோசிக்கலாமோ? நல்லாருக்கே இது!!
நன்றி!!
காற்றில் எந்தன் கீதம் - வாங்க; எங்க ரொம்ப நாளா காணோம்?
உழவன் - நன்றி.
பகிர்வுக்கு நன்றி சகோதரி! இதே விடயம் குறித்த இன்னொரு பதிவு இங்கே: http://positiveanthonytamil.blogspot.com/2010/05/blog-post_13.html
எல்லோருக்கும் ஒரு விழுப்புணர்வான பதிவு+ பகிர்வு
நல்லதொரு இடுகை ஹூசைனம்மா!மனதில் பதியும்படி எழுதியிருக்கிறீர்கள்
ரெம்ப நல்ல பதிவுங்க்கா. உண்மையில எல்லாரும் பண்ண வேண்டிய தானம் அது. யாருக்கு தெரியும். ஒரு வேளை செத்ததுக்கு அப்புறம் பண்ணற அந்த தானமே நம்மளை ஜன்னத்துக்கு கொண்டு போகலாம். எல்லாரும் முயற்சிப்போம், இன்ஷா அல்லாஹ்.
உங்க இடுகை ஒன்னொன்னும் அறிவியல் பாடம் படிக்கறா மாதிரி இருக்குது ஹூசைனம்மா.. முறைக்கக் கூடாது.. பாராட்டியிருக்கேன்.. இப்போதைக்கு மேலோட்டமா பார்த்ததில சொல்லிட்டுப் போறேன்.. மறுபடியும் வந்து பொறுமையாப் படிச்சுப் பார்க்கறேன்..
Jazakallahu khair.
படிப்பதோடு, அதைப் பின்பற்றினால்
அனைவருக்கும் நன்மை பயக்கும்.
நல்ல இடுகை.
பாஸிடிவ் அந்தோணிமுத்து - வாங்க, வாங்க. ரொம்ப மகிழ்ச்சி. உங்கப் பதிவும் பார்த்தேன். நன்றிங்க.
ஜலீலாக்கா - நன்றி.
ஜெஸ்வந்தி - நன்றி.
அன்னு - ம்ம், சரியாச் சொன்னீங்க. நன்றி.
எல் போர்ட் - அறிவியல் பாடமா? வஞ்சப் புகழ்ச்சியோ? சரி, நம்புறேன், வெறும் புகழ்ச்சிதான்னு!! நன்றி. மறுபடியும் படிச்சுட்டு கருத்து சொல்லுங்க.
நாஸியா - நன்றி. நலம்தானே?
நிஸாம் அண்ணே - நன்றி.
பாஸிடிவ் அந்தோணிமுத்து - வாங்க, வாங்க. ரொம்ப மகிழ்ச்சி. உங்கப் பதிவும் பார்த்தேன். நன்றிங்க.
ஜலீலாக்கா - நன்றி.
ஜெஸ்வந்தி - நன்றி.
அன்னு - ம்ம், சரியாச் சொன்னீங்க. நன்றி.
எல் போர்ட் - அறிவியல் பாடமா? வஞ்சப் புகழ்ச்சியோ? சரி, நம்புறேன், வெறும் புகழ்ச்சிதான்னு!! நன்றி. மறுபடியும் படிச்சுட்டு கருத்து சொல்லுங்க.
நாஸியா - நன்றி. நலம்தானே?
நிஸாம் அண்ணே - நன்றி.
இது குறித்த தொடர்புடைய இன்னும் சிலரின் பதிவுகள்:
http://www.payanangal.in/2008/09/blog-post_21.html
http://delphine-victoria.blogspot.com/2008/09/blog-post_30.html
http://thekkikattan.blogspot.com/2008/09/donation-of-organs.html
http://www.payanangal.in/2008/09/blog-post_28.html
hussainamma thanks for a sensitive post. Really it will bring up more donators...
மிக உபயோகமான சிந்திக்க வைத்த பதிவு....நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
Post a Comment