Pages

ரீ-ஸைக்ளிங்கும், பழைய இரும்புச்சாமானும்
 
புதாபியின் நீலாங்கரையான அல்-பத்தீன் ஏரியா.

விதவிதமான வடிவங்கள், அமைப்புகள், நிறங்களில் பெரிய பெரிய பங்களாக்கள்.  பிரமிப்பு தரும் பிரமாண்டம!! வாயிற்கதவினூடே தெரியும் தோட்டங்களும் பச்சைப் பசேலென்று இருக்கும். பெரும்பாலும் இந்நாட்டு குடிமக்களும், ஆங்கிலேயே ஐரோப்பிய மக்களுமே இங்கு வசிக்கின்றனர். சில நிறுவனங்களில் உயர்பதவியில் இருக்கும் சில இந்தியர்களும் இங்கு உண்டு. ஒவ்வொரு வீட்டின் முன்னும் குறைந்தது இரண்டு பெரிய கார்களாவது நிற்கும். சில கார்களின்பின் ஒரு சிறுபடகும் இழுவையின் மூலம் மாட்டப்பட்டிருக்கும்.

அந்த பகட்டுக்கு ஒவ்வாத உருவமாக, கரீம்பாய் தனது மெலிந்த சரீரத்துடன், கட்டிடப் பணியாளருக்கேயான நீலநிற யூனிஃபார்ம் உடையில்,  கையில் கனத்த பெரிய கீஸுடன் அடுத்த குப்பைத் தொட்டி நோக்கி நடந்தார். அதைக் கிளறி, அதில் கிடக்கும் காலியான குளிர்பான டின்களைச் சேகரித்து வெளியே எடுத்தார்; ஒவ்வொன்றாகக் காலின் கீழ் வைத்து மிதித்து நசுக்கி, கீஸ் (பிளாஸ்டிக் பை) உள்ளே போட்டார்.  நசுக்காமல் முழுதாகப் போட்டால் கவரில் இடம் போதாமல் போய்விடும்.

அந்த ஏரியாவில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்கள் ஒன்றில் கட்டிட வேலை பார்க்கிறார் கரீம்பாய். காலை ஏழு மணிக்குத் தொடங்கும் பணிக்கு, ஐந்தரை மணிக்கே கம்பெனி பஸ் கொண்டுவந்து இறக்கிவிடும். பலப்பல சைட்களில் பணியாளர்களை இறக்கிவிட வேண்டியிருப்பதால் இப்படி சீக்கிரமே வந்துவிட வேண்டும்.

சக பணியாளர்கள், கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் துண்டையோ, பேப்பரையோ விரித்து, விட்ட தூக்கத்தைத் தொடர்ந்துகொண்டிருக்க, இவர் அந்நேரத்தில் ‘பார்ட்-டைம்’ ஜாப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தக் காலி டின்களைச் சேகரித்து வைத்து, சைட்டில் பழைய இரும்பு சாமான்கள் எடுக்க பிக்-அப் வண்டி கொண்டுவரும் பாக்கிஸ்தானியிடம் கொடுத்தால், எடையைப் பொறுத்து,  அஞ்சோ, பத்தோ திர்ஹம்கள் கிடைக்கும். இந்தியப் பணத்துக்கு, அம்பது, நூறு ரூபாய் கிடைக்குமே!! அப்போ ‘பார்ட்-டைம்’ ஜாப் தானே இது?

ஏழு மணி வரையிலும் இதைச் செய்யலாம் . பின் கட்டிட வேலை தொடங்கும். கரீம் பாய், கையிலிருக்கும் கீஸைப் பார்த்தார். ”ரொம்ப அழுக்கா இருக்கு. கிழியவேற ஆரம்பிச்சுட்டுது. வெள்ளிக்கிழம கடைக்குப் போவும்போது, இதவிடப் பெரிய கீஸ் ஒண்ணு கேட்டு எடுத்துட்டு வரணுன்னு எப்பவும் நினைக்கதுதான். எழவு மறந்துல்ல  தொலையுது.” சலித்துக் கொண்டார்.

அடுத்த குப்பைத் தொட்டியை அடையுமுன், வழியிலேயே அங்கொன்றும், இங்கொன்றுமாக டின்கள் கிடந்ததை எடுத்துக் கொண்டார். ”இளந்தாரிப் பயலுவ குடிச்சுட்டு ரோட்டில போட்டுட்டு போயிருக்கானுவளாருக்கும். குப்பைத் தொட்டி பக்கத்துல இருந்தும் கொண்டு போட என்னா வருத்தம்?” நினைத்துக் கொண்டே நடந்தார். இந்தக் குப்பைத் தொட்டியில் அவ்வளவாக காலி டின்கள் இல்லை. ”இப்பத்தான் பெப்ஸி, கோக்கெல்லாம் குடிக்காதீய. ஒடம்புக்கு நல்லதில்லன்னு பெரச்சாரம் பண்றாவளாமே. எல்லாரும் கேட்டுக்கிட்டாவ போல. அதான் இப்பல்லாம் நெறய கெடைக்க மாட்டுக்குது.”


டாடி, எங்க ஸ்கூல்ல இன்னிக்கு ”ரீ-சைக்ளிங் டே” அப்ஸர்வ் பண்றோம்.” மகள் கொஞ்சிக்கொண்டே காதர் பாஷாவின் அருகில் வந்தமர்ந்தாள்.

காதர் பாஷா அல்-பத்தீனில் வில்லாவில் (பங்களா) தங்கியிருக்கிறார். நகரில் ஒரு பெட்ரோலிய நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவர். அதன் பலன்களில் சில,  இந்த வில்லாவும், இண்டர்நேஷனல் பள்ளியில் பிள்ளைகளின் படிப்பும். காலை வேளைகளில் வீட்டுத் தோட்டத்தில் சிறு உடற்பயிற்சிகள் செய்துவிட்டு, அங்கேயே அமர்ந்து பேப்பர் படிப்பது அவர் வழக்கம். பத்தாவது படிக்கும் மகள் இந்நேரம் இந்தப் பக்கம் வருவது அரிதிலும் அரிது.

“அதுக்கென்னம்மா செய்யணும்? பணம் எதுவும் கொடுக்கணுமா? ப்ரோக்ராம் வச்சிருக்கீங்களா? ட்ரஸ் வாங்கணுமா?

“ஓ டாட்!! திஸ் இஸ் நாட் அவர் கல்ச்சுரல் டே டு டூ ப்ரோக்ராம்ஸ்! திஸ் இஸ் ரீ-ஸைக்ளிங், யூ நோ?” சிணுங்கினாள்.

“எனக்கென்னம்மா தெரியும்? அதுக்கு நான் என்ன செய்யணுன்னு சொல்லு? நீ அவசியமில்லாம என்கிட்ட இதெல்லாம் சொல்லமாட்டியே? உன் உம்மாகிட்ட சொல்லி நடக்கலன்னாதானே என்கிட்ட வருவ?”

“ஸோ கூல் டாட்!! யூ நோ மீ பெட்டர் தேன் மாம்!! “ரீ-சைக்ளிங் டே”வுக்கு, நாங்க எல்லாரும் ஆளுக்கொரு கவர்ல யூஸ்ட் பிளாஸ்டிக் பாட்டில்ஸ் ஆர்  கேன்ஸ் கொண்டு போணுமாம். ஸ்கூல் வில் கலக்ட் இட் அண்ட் கிவ் தெம் டு த ரீ-சைக்ளிங் கம்பெனி.”

“சரிம்மா. அதான் நம்ம வீட்டிலயே தண்ணி பாட்டில்கள், உன் தம்பி குடிக்கிற மவுண்டன் டியூ கேன்கள், நீ மணிக்கொருதரம் குடிப்பியே அந்த கோக் கேன்களச் சேத்தாலே நாலு கூடை வருமே?”

“ஓ டாட்! பட் ஐ வாண்ட் டு டேக் தெம் நவ், டுடே டு ஸ்கூல். இப்ப உடனே எங்கருந்து அவ்வளவு கேன்ஸ் கிடைக்கும்? மம்மி நேத்தே மெய்ட் சர்வண்ட்கிட்ட சொல்லி எல்லா டஸ்ட் பின்ஸையும் காலி பண்ணிட்டாங்க.”

“டெல் மீ வாட் யூ வாண்ட் எக்ஸாக்ட்லி?” அவள் பாஷைக்கே மாறினார்.

“நத்திங் டாட். இட்ஸ் ஆல்ரெடி 6.15 நவ். 7 ஓ க்ளாக் ஸ்கூல் பஸ் வந்துடும். ஸோ, வாட் ஐ சஜஸ்ட் இஸ், ஐ வில் பை அ பாக்ஸ் ஆஃப் கோக் கேன்ஸ் அண்ட் ஸ்பில் அவுட் த கன்டென்ட்ஸ் அண்ட் கிவ் டு மை டீச்சர். தட்ஸ் வாட் மை ஃப்ரண்ட்ஸ் ஆர் ஆல்ஸோ கோயிங் டு டூ. பட் மம்மி இஸ் அப்ஜெக்டிங் திஸ்.”

காதர் பாஷா பதில்சொல்லாமல் எழுந்து கிரில்கதவருகில் நின்று வெளியே பார்த்தார். ஒரு பெட்டி நிறைய கேன்களை குளிர்பானத்தோடு வாங்கி கீழே கொட்டிவிட்டு, காலி கேன்களை கொடுக்க நினைக்கும் மகள்!! தனது  வறுமையான இளமையை நினைத்து அவர் மனம் நொந்தது.

ரீம் பாய் நடந்துகொண்டிருந்தார். வேர்வை வழிந்து சட்டையெல்லாம் நனைந்து விட்டது. ’கோடை தொடங்கமுன்னயே இப்படி வெயிலடிக்குதே!!’  ஒரு பை நிறைந்து, இரண்டாவது பையும் அரைவாசி ஆகிவிட்டது. அப்படியே வேலை செய்யும் கட்டிடத்தின் திசையில் போனார். கிடைப்பதை எடுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தால், ஒரு அஞ்சு நிமிஷம் ரெஸ்ட் கிடைக்கும்.  காண்ட்ராக்டரின் சூபர்வைசர் வந்துவிட்டால் நிற்க விடமாட்டார். கோடை தொடங்கும் அடுத்த மாதத்திலிருந்து மதியம் மூன்று மணிநேரம் கட்டாய ரெஸ்ட் கொடுக்கவேண்டுமென்று அரசாங்க உத்தரவாம். வழக்கமா ரெண்டு மாசந்தான் இந்த ரெஸ்ட். அப்போ இன்னும் கொஞ்சம் சேத்துப் பாத்துக்கலாம். ஆனா, இந்த வருஷம் நோன்பும் கோடையிலதான்  வர்றதுனால, ரொம்ப அலையமுடியுமோ என்னவோ. 

ரீம்பாய் காலி டின்னை நசுக்கிப் பையில் போடுவதை, வீட்டு கேட்டில் நின்றிருந்த   காதர்பாஷா பார்த்தார். ‘பார்த்தால் இந்தியரென்று தெரிகிறது. மலையாளியாக இருக்குமோ’வென்று  எண்ணிக்கொண்டே அவரைச் சைகையால் அழைத்தார். “எவிடயா ஸ்தலம் நாட்டில?” கேட்க, அவர் தடுமாறி, “தமிழ்நாடானு” என்றார்.

“அட தமிழ்தானா!! நானும் தமிழ்தான். சரி, கையில என்னது?”

“அது.. இல்ல.. சும்மா இருக்க நேரத்துல.. இதச் சேத்துக் கொடுத்தா.. கொஞ்சம் காசு.. “

“எவ்ளோ கிடைக்கும்?”

“அது என்னத்த.. பத்து திர்கம் கெடச்சாப் பெரிசு!”

காதர்பாஷா உள்ளே திரும்பி மகளைப் பார்த்தார். பின் கரீம்பாயிடம் “இன்னிக்கு நான் வாங்கிக்கிறேன்” என்றார்.

Post Comment

57 comments:

Chitra said...

மனிதாபிமான உணர்வுள்ள கதை.... நல்லா இருக்குதுங்க....

அபுஅஃப்ஸர் said...

என்னா கருத்து சொல்லவாறீங்கனு தெளிவா(?) புரியலே. இருந்தாலும் நடந்துக்கொண்டிருப்பதை அழகா கண்முன்னே எழுத்தின் மூலம் கொண்டுவந்தமைக்கு ஒரு ஷபாஸ்

அகல்விளக்கு said...

வார்த்தைகள் வரவில்லை...
:(

மின்மினி said...

ரொம்ப அருமையா நெகிழ்வா இருக்கு ஹூசைனம்மா அக்கா.. இப்படியும் சில மனிதர்கள் உழைப்பில் உயர்வாக இருக்கிறார்கள். நல்லதொரு கதை.

நியோ said...

அன்பு ஹுசைன் ...
சுற்று சூழல் பற்றி பாடப் புத்தகங்களில் குறிப்பிடும் கல்வியமைப்புகள் தகுந்த தாக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த தவறிவிட்டன என்பதை அருமையாக தெரிவிக்கிறது உங்கள் புனைவு ...

அப்பாவி தங்கமணி said...

ரெம்ப அருமையான கதை மேடம். நிதர்சனம் சுடும்... என்ன செய்ய? சமுதாயத்தின் ஏற்றதாழ்வுகள் இன்னும் அப்படியே தான் இருக்கு..எல்லா ஊர்லயும்... ரெம்ப நல்ல அதை கதை வடிவத்துல பதிவு செஞ்சு இருக்கீங்க...சூப்பர்

தமிழ் பிரியன் said...

நல்லமுயற்சி!

எம்.எம்.அப்துல்லா said...

ஒன்னும் சொல்றதுக்கில்லை.

(நான் உங்க வளர்ச்சியைச் சொன்னேன்)

:)

Sumathi said...

அருமையா இருக்குங்க கதை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

aahaa!!!!

அப்துல்லாவை வழிமொழிகிறேன்.

(அப்புறம் நாங்க எல்லாரும் நல்லா இருக்கோங்க :))

அன்னு said...

நல்லா கொண்டு போனிங்க, ஆனா எவ்வளவு ரூவாக்கு அவர் எடுத்துக்கறேன்னு சொல்லியிருந்தால் இன்னும் நச்சுன்னு இருந்திருக்கும். நல்ல கதை.

தமிழ் உதயம் said...

கதை நல்லா இருக்குங்க ஹுஸைனம்மா.

ஜெய்லானி said...

உள்ளே ஏகப்பட்ட விசயம் வச்சிருக்கீங்க ஒரு வரி பதில் சரிவராது இருந்தாலும் மனதை தொட்ட பதிவு.

நாஞ்சில் பிரதாப் said...

என்னமோ போங்க வர வர நீங்க நல்லா எழுத ஆரம்பிச்சுட்டீங்க... நல்லதுகில்ல...அவ்ளோதோன் :))

நாடோடி said...

புனைவு ந‌ல்லா இருக்குங்க‌...

பனங்காட்டான் said...

அருமை! :)

இமா said...

கதை அருமை ஹுசேன். ;)

Adirai Express said...

கட்டுரை மிகவும் அருமை.
அந்த பணக்கார அப்பா ஒரு கனம் பழைய நிலமையை யோசித்தாரே, அதான் இந்த கதையோட ஹைலைட்டே.

அருமை! அருமை!

Mahi_Granny said...

நல்ல கற்பனை மட்டுமல்ல . நல்ல பாடமும் . ஹுசைன்னாமவுக்கு வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

வளைகுடாவின் இரு வேறுபட்ட வாழ்க்கை.

அமுதா said...

அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் சில யதார்த்தங்களை.

தராசு said...

இந்த அளவுக்கு ஆங்கில மோகத்தோடவா குழந்தைகள் வளர்றாங்க, to be honest அந்த குழந்தையின் ஆங்கில பேச்சு கதையோடு ஒட்டலை.

Riyas said...

நானும் அபுதாபியிலதானுங்கோ..

அந்த காதர் பாஷாட போன் நம்பர் ஏதும் இல்லியாங்க (சும்மா நலம் விசாரிக்கதானுங்க) பத்தாவது படிக்கும் அவர் மகள் பெயர சொல்லவேயில்லயே..

மதன்செந்தில் said...

இன்னும் அழுத்தமா இருந்திருக்கலாம்


www.narumugai.com

மனோ சாமிநாதன் said...

சிந்தனையைத் தூண்டும் அருமையான சிறுகதை ஹுசைனம்மா! ஒரு ஏழை தன் வயிற்றுப்பாட்டுக்காக செய்யும் பகுதி நேர வேலை அதுவாகவே ரீ-ஸைக்ளிங் ஆவதையும் ஒரு வசதியான சிறுமி அர்த்தம் புரியாமல் செய்யும் ரீ-ஸைக்கிளிங் முயற்சியும் வறுமையில் இளமையைக் கழித்த ஒரு மனிதரின் அர்த்தம் பொதிந்த ரீ-ஸைக்கிளிங் முயற்சியும் அவரவர் கோணத்தில் எப்படி ரீ-ஸைக்கிளிங் ஆகிறது என்பதை மிக அழகாக விவரித்திருக்கிறீர்கள்!!

ஸ்ரீராம். said...

ஒரு பக்கம் இப்படி...ஒரு பக்கம் அபபடி...எப்படியோ உழைப்புக்கேற்ற ஊதியம்..

இளம் தூயவன் said...

இதை கதையாக என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஏன் என்றால் நான் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் பொழுது ,என் கண்களால் இது போன்று பல சகோதரர்களை பார்த்து இருக்கின்றேன்,என் மனதில் கூட இவர்களை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. ரொம்ப அருமையாக எழுதயுள்ளிர்கள் வாழ்த்துகள் .

ஹேமா said...

ஹூசைனம்மா...மிக நெகிழ்வோடு உழைப்பின் உயர்வையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.எழுத்து நடையும் அருமை.

SUFFIX said...

'இளந்தாரிப் பயலுவ' அப்படின்னா உங்க ஊரு பாஷைல சின்னப் பசங்கன்னு அர்த்தமா?

SUFFIX said...

“இன்னிக்கு நான் வாங்கிக்கிறேன்” கதையை அழகாக நகர்த்தி இங்கே கொண்டு போய் முடித்தது அருமை, நல்லா இருக்கு.

"உழவன்" "Uzhavan" said...

வித்தியாசமான கதைக் களம். அருமை

UNIVERSAL said...

Really good,Keep writing.

Regard's,

Shahul

அன்புத்தோழன் said...

ஹ்ம்ம்... நெஞ்ச தொட்டுருச்சு... கரீம் பாய்... காதர் பாஷா... வாழ்கையின் இரு வேறு பரிணாமங்கள்...

காலி டின்னுக்காக முழுசா வாங்கி அதிலுள்ளவற்றை கீழே கொட்டிவிட்டு கொண்டு போறேன்னு சொன்ன அந்த பொண்ண பாத்து கோவம் கோவமா வந்துச்சு.... கதைங்குரதாள ஒகே...

One of your best...

NIZAMUDEEN said...

மனதைத் தொட்ட கதாபாத்திரங்கள்
கரீம் பாயும் காதர் பாட்ஷாவும்!
நெகிழ்ச்சியான முடிவு!

நாஸியா said...

அருமை சகோதரி! :)

அஹமது இர்ஷாத் said...

அருமையான கதைங்க ஹீசைனம்மா..

உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்..

http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

அன்புடன் மலிக்கா said...

ரொம்ப அருமையான கதை ஹுசைனம்மா.எப்படிப்பாயிருக்கீங்க..

அரபுத்தமிழன் said...

பிளாஷ்பேக் நினைவுகளோடு, கரீம் பாயைத் தந்தையாக்கி, தான் இந்தளவு உயர்வு பெற்றதற்கான‌ தந்தையின் தியாகத்தை மதித்து காலி டின்களை சேகரித்துக் கொண்டு வரும் 'யாரோ' ஒருவருக்கு பத்து திர்ஹம்களுக்குப்
பதிலாக 'ஐம்பதை'க் கொடுத்து, அதற்கான மகளின் Reaction ஐப் பதித்திருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்குமோ. Anyhow,
கதை மாந்தரோடு பயணிக்கிறீர்கள் அழகாக, அப்துல்லா ஆச்சர்யம் கொள்ளும் அளவுக்கு :-)

அம்பிகா said...

நல்லா எழுதியிருக்கீங்க ஹூஸைனம்மா.
அருமையான பதிவு.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அருமையான பதிவு சகோதரி, கதை படிக்க, படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. கரீம் பாய், காதர் பாஷா நினைவில் நின்ற பாத்திரங்கள். ஆனால் பள்ளிக்கூடங்கள் சொல்லிக் கொடுக்க மறந்ததை நீங்கள் சொல்ல முயற்சி செய்திருக்கிறீர்கள். வாழ்க்கையின் இரு கோணங்களையும் அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள். பள்ளிக்கூடங்கள் எப்படி குப்பைகளை சேமிப்பது என்பதை சொல்லிக் கொடுப்பதில்லை என்பது தெரிகிறது. நன்றி.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

மிகவும் அருமை ஹூசைனம்மா.. நல்லதொரு சிறுகதை.. நல்லதொரு களம்.. நல்ல சில பாத்திரங்கள்.. அனுபவித்தேன்..

ஹுஸைனம்மா said...

சித்ரா - நன்றி.

அபுஅஃப்ஸர் - நெசமாவே புரியலையா? பின்னூட்டங்களை வாசிச்சா நான் நினைச்சதை அழகா சொல்லிருக்காங்க நிறைய பேர். நன்றி.

அகல்விளக்கு - வாங்க; நன்றி.

மின்மினி- நன்றிப்பா.

நியோ - சரியாச் சொல்றீங்க நியோ. நன்றி.

ஹுஸைனம்மா said...

அப்பாவி தங்ஸ் - ஆமாம்ப்பா, எல்லா உர்லயும் இது இருக்கு. நன்றி.

தமிழ்ப்பிரியன் - நன்றி.

அப்துல்லா - ஏதோ சொல்ல வர்றீங்க; சொன்னீங்கன்னா திருத்திக்க வசதியா இருக்கும். நன்றி.

சுமதி - நன்றிங்க. முதல் பின்னுட்டமோ சுமதி?

அமித்து அம்மா - நலமே என்றறிந்து மகிழ்ச்சி. நன்றி பாராட்டுக்கு!

ஹுஸைனம்மா said...

அன்னு - அவ்ளோ நல்லவர் குறைச்சா எடுக்கப் போறார்? 50-100 திர்ஹத்துக்குக் குறையாமக் கொடுத்துடுவார், கவலைப்படாதீங்க!! நன்றி.

உதயம் - நன்றிங்க.

ஜெய்லானி - நன்றிங்க.

பிரதாப் - பெரியவங்க நீங்களே இப்படி ‘நல்லதுக்கில்லை’ன்னு மனசு வெறுத்துச் சொல்லலாமா? :-))

நாடோடி -நன்றிங்க.

பனங்காட்டான் - நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

இமா - நன்றி இமா!!

அதிரை எக்ஸ் - ஆமாங்க; நன்றி.

மஹி-கிரானி - நன்றிங்க. ஆமாம், பாடமும்கூடத்தான்!

ராஜ நடராஜன் - வாங்க; ஆமாங்க, இரு துருவங்கள் இங்கேயும் உண்டு. நன்றி.

அமுதா - வாங்க; நன்றி.

ஹுஸைனம்மா said...

தராசு - அப்படியா? அந்தப் பெண்ணின் ஆங்கிலம் கதையோடு ஒட்டவில்லையா? அந்தப் பொண்ணு படிக்கிறது ஒரு “International School", அதனாலதான் ரொம்பப் பீட்டர் விடுது போல!!

நன்றிங்க வெளிப்படையாச் சொன்னதுக்கு. இன்னும் சிலர் வேறு ஆலோசனைகளும் தந்தாங்க.

ரியாஸ் - வாங்க தம்பி; அவர் ஃபோன் நம்பர் எங்கிட்ட இல்லை; வீடுதான் தெரியும்; பத்தீன்ல மூணாவது குறுக்குச் சந்துல, நாலாவது வீடு. போய்ப்பாருங்க!! (பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல!!)

ஹுஸைனம்மா said...

மதன்செந்தில் - நன்றிங்க. ஆமாங்க, இன்னும்கூட சரியா எழுதிருக்கலாம்னு இப்பத் தோணுது. சில நண்பர்களும் சொன்னாங்க. அடுத்த முறை, இன்ஷா அல்லாஹ்!!

மனோ அக்கா - நான் எழுதியடதைவிடத் தெளிவா நிலையை உணர்த்திட்டீங்க அக்கா!! ஆமாக்கா, இன்றைய சில பிள்ளைகள் இப்படிச் செய்வதாகக் கேள்விப்பட்டுத்தான் இதை எழுதினேன்.

ஸ்ரீராம் - வாங்க; நன்றி.

இளம் தூயவன் - வாங்க. நானும் இதேபோல், ஒருவரல்ல, பலரைக் காண்பதுண்டு இங்கு. அதன் விளைவே இக்கதை!! நன்றி!!
உங்கள் வலைப்பூ முகவரி என்ன? கிடைக்கவில்லையே?

ஹுஸைனம்மா said...

ஹேமா - நன்றி.

ஷஃபி - ஆமாங்க, விடலப் பசங்கன்னு சொல்வாங்களே!! நன்றி.

உழவன் - நன்றி.

யுனிவர்ஸல் - நன்றி.

அன்புத் தோழன் - நன்றி.

நிஜாம் அண்ணே - நன்றி.

நாஸியா - நன்றி.

ஹுஸைனம்மா said...

இர்ஷாத் - நன்றி, விருதுக்கும், பாராட்டுக்கும்!! விருது வாங்கியதற்காகவே கதை எழுதிட்டேன், சரியா?

மலிக்கா - நன்றி. நல்லாருக்கேன்ப்பா. நீங்களும் நலம்தானே?

அரபுத்தமிழன் - வாங்க; நீங்க சொல்றதும் நல்ல கதைப் போக்கு. எனக்கும் இதுமாதிரி இன்னொன்னு தோணுச்சு. எழுதிமுடிச்சப் பிறகு, அப்படி எழுதிருக்கலாமோ, இப்படி மாத்திருக்கலாமோன்னு எனக்கே ஏகப்பட்ட ஐடியா வருது!! நீங்க சொன்னது எனக்குத் தோணல பாருங்க! நன்றி.

அப்றம், அப்துல்லா சொன்னது எனக்கு ஏதோ உள்குத்து மாதிரிதான் படுது!! ;-))

ஹுஸைனம்மா said...

அம்பிகா - நன்றி.

அபு நிஹான் - வாங்க; ஆமா, அவசர உலகத்துல ஏட்டுப்பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள், வாழ்க்கைப் பாடங்களைச் சரிவரப் படிப்பிப்பதில்லைதானே? ரொம்ப நன்றி.

எல் போர்ட் - வாங்கப்பா; நன்றி!! (இது ‘அன்பியல்’ பாடம் மாதிரித் தெரியலையா?) ;-)))

Jaleela Kamal said...

கரீம் பாய் போல் பல பணியாளர்கள் இது போல் பார்ட் டைம் பார்த்தால் தான் அவர்கள் கதை ஓடும், பாவம் அவர்களுக்கு ரெஸ்டும் கிடையாது,.
நம்ம ஊரா இருந்தா வீட்டில் உள்ளவர்களே பழைய இரும்பு சாமானுக்கு போட்டு காசாக்கிடுவாங்க

Naazar - Madukkur said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
மீண்டும் ஒரு பெருமூச்சு, உங்களின் இந்த இடுகையை இப்போது படித்து விட்டு.
recycling - ஆமாம் கரீம் பாயிடம் இருந்து காதர் பாஷா மகளுக்கு

ஸாதிகா said...

தங்கைக்கு நட்சத்திர வாழ்த்துகக்ள்!

தக்குடு said...

இப்ப உள்ள குழந்தைகளுக்கு பணத்தோட அருமை கொஞ்சம் கூட தெரியர்து இல்லை. பெத்தவங்களும் இதுக்கு முக்கிய காரணம்! :(

நட்சத்திர வாழ்த்துக்கள் மேடம்!

Muruganandan M.K. said...

வார நட்சத்திரம் ஹுஸைனம்மா
வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

Blogger ஹுஸைனம்மா said...

@தக்குடு

நன்றிங்க.

கரெக்டாச் சொன்னீங்க. பெற்றோர்களும் நாமதான் கஷ்டப்பட்டோம்; பிள்ளைகளாவது வசதியா இருக்கணும்னு நினைக்கிறாங்க. அது பாசத்தினாலதான் என்றாலும், அளவோடு இருக்கணும்.

ஹுஸைனம்மா said...

Blogger ஹுஸைனம்மா said...

@Muruganandan M.K. சார்,
நன்றி டாக்டர்.