Pages

ட்ரங்குப் பொட்டி - 10




சில மாதங்கள் முன், வீட்டில் டிவியில் செய்திகள் (சன் நியூஸ் இல்லை) பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தபோது, ரங்ஸ் காலேஜ் (பிரைவேட்) ஹாஸ்டலில் தங்கி படிச்சுகிட்டிருக்கும்போது, ஒரு நாள் அதிகாலை தொழுகைக்குப் போய்விட்டு, பக்கத்தில் டீ கடைக்குப் போனபோது, நின்றிருந்த ஒரு போலீஸ், இவரைக் கூப்பிட்டு,  ”எம்.ஜி.ஆர். இறந்துட்டதா தகவல் வந்திருக்குப்பா. நீ உடனே ஊருக்குக் கிளம்பிடு” என்று சொன்னதாகவும், அதனால் உடனே கிளம்பி ஊர் வந்ததாகவும், அந்தக் காவலர் மட்டும் எச்சரிக்கவில்லை என்றால் பஸ் கிடைக்காமல் தானும் ஹாஸ்டலிலேயே மாட்டிக் கொண்டிருப்பேன் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

கேட்டுக்கொண்டிருந்த பெரியவன், “எம்.ஜி.ஆர். இறந்தா, பஸ் ஏன் கிடைக்காது?” என்று கேட்டான். எல்லாம் விளக்கமா சொல்லி முடிச்சதும், “அது ஏன் ஒருத்தர் இறந்தா, பஸ்ஸை எரிக்கணும், கடையை உடைக்கணும்?”னு கேக்க ஆரம்பிச்சான். ஒருமாதிரியா சொல்லி விளங்க வைச்சேன். ஆனாலும், “ஏன்?ஏன்?”ன்னு கேட்டுகிட்டேயிருந்தான்.

1987ல அரசியல்ல கொஞ்சமே கொஞ்சமாவது நாகரீகச் சூழல் இருந்துது. இந்நாளைய அரசியல் நிலைமைகளைக் கவனிச்சா, இன்னிக்கு இருக்கிற வயசான/ வயசாகாத அரசியல்வாதிகள் யாரும் இறக்கவே வேண்டாம், நூறென்ன, இருநூறு வயசுகூட  வாழட்டும்னு மனசார “வாழ்த்த”த் தோணுது!!


!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!

 அமீரகத்தில் இந்த மாசம்,  இந்த வருஷத்தின் பன்னிரெண்டாவது “தொட்டில் குழந்தை”யை அஜ்மான் நகரில் ஒரு பள்ளிவாசலிலிருந்து கண்டெடுத்திருக்கிறார்கள். அடுத்த நாள் கல்பா நகரில், பிறந்து 12 மணிநேரமே ஆன இன்னொன்று !! எந்த நாட்டுக் குழந்தைகள் என்று தெரியவில்லை என்றபோதிலும் உடன் தத்து எடுக்கப்படவிருக்கின்றன!!

அதே சமயம், மருத்துவமனைகளில்  IVF ட்ரீட்மெண்டில் உருவாக்கப்பட்ட கருமுட்டைகளை உறையச் செய்து (Frozen embryos - கருவா, கருமுட்டையா?)  வைத்திருப்பது சட்டப்படி அனுமதிக்கப்படாது என்று இம்மாதம் இங்கு சட்டம் நிறைவேறியதால், அக்கருக்களை அவற்றின் பெற்றோர் விரும்பினால் வேறு நாட்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்துகொள்ளலாம் என்று  அம்மருத்துவமனைகள் கருவைச் சேமித்து வைத்தவர்களைத் தேடியபோது, அவற்றில் சிலர்  (சொல்லாமலே) ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்களாம். ஒரு சிறு சதவிகிதத்தினர் தவிர, மற்றவர்கள், அந்தக் கரு தமக்குத் தேவையில்லையெனவும், அழித்துவிடலாம் எனவும் சொல்லிவிட்டார்களாம்!! எத்தனை அழிக்கப்பட்டவிருக்கின்றன என்று எண்ணிக்கையைச் சொல்ல மனம் வரவில்லை.


!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!

 ஒரு முறை ஒரு சித்த(ஆயுர்வேத?) மருத்துவர் சொன்னதாகப் படித்தது: இயற்கை உணவுப் பொருட்கள் பெரும்பாலும், அதன் ஒரு நிலையில் உள்ள குணம், அடுத்த நிலையில் நேர்மாறாக இருக்குமாம். அதாவது, மாங்காய் குளிர்ச்சி என்றால் மாம்பழம் சூடு. தேங்காய் - குளிர்ச்சி; தேங்காயெண்ணெய் - சூடு; தே.பால் - குளிர்ச்சி; பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகியவையும் அப்படியே!! (சரியா?)

அதை வைத்து யோசித்துப் பார்த்தால், மனிதர்களும் அப்படித்தான் என்று தோன்றுகிறது. குழந்தைகள் - குளிர்ச்சி; டீனேஜ் - சூடு; நடுத்தர வயது - பெற்றோராவதால், பெற்றோரின் அருமைகள் தெரியவருவதால், கொஞ்சமாகக் குளிர்ச்சி; நாப்பது வயசு - நாய்க்குணம்!! அறுபதுகளில் - மீண்டும் குளிர்ச்சி!!

அதுக்காக, எனக்கும் சித்தர் பட்டம்லாம் தரவேண்டாம்!!

!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!

போன வாரம், ஒரு நாள், ரங்க்ஸ், பிள்ளைகளோட அலுவலகம் வந்து என்னை அழைத்துச் செல்வதாகப் பிளான்!! வந்துவிட்டதாக மிஸ்ட் கால் வந்ததும், கீழே இறங்கிச் சென்று, வெயிலுக்குப் பயந்து வெளியே செல்லாமல், உள்ளிருந்தே தலையை மட்டும் நீட்டி, இடது பக்கம் பார்த்தேன் - காரைக் காணோம்; வலதுபக்கம் பார்த்தேன் - இல்லை; வர்றதுக்கு முந்தியே என்னைக் கீழே வரவைச்சிட்டாங்களேன்னு எரிச்சலோட உள்ளே தலையை இழுத்துக் கொண்டபோது ஹார்ன் சத்தம் கேட்டது. பார்த்தால் எனக்கு நேரெதிரே, என் முன்னால் ஏற்கனவே வண்டி நிக்குது!! ஹி..ஹி.. வழிஞ்சுகிட்டே காரில ஏறினா, புள்ளைங்க, “ஏம்மா, ரோடு கிராஸ் பண்றமாதிரி இடமும், வலமும் மட்டும் பாத்துட்டு போறே?”ன்னு கிண்டல்!! நமக்கென்ன பல்ப் புதுசா என்ன!!

!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!

ஒரு நாள் ஒரு ஷாப்பிங் மால் வாசல்ல ஒரு டாக்ஸி டிரைவர்க்கும் (மலையாளி) அதில் வந்த சூடான் நாட்டுப் பெண்ணிற்கும் “சில்லறை”த் தகராறு!! ஒரு சிறு கூட்டம் கூடியது. அந்தப் பெண் அழகான ஆங்கிலத்தில் கோபப்பட, டிரைவரும்  என்னவோ சொல்ல, ஒரு சிலர், டிரைவரை அமைதிகாக்கும்படி மெதுவாக அறிவுறுத்திக் கொண்டிருக்க.. நான் வேடிக்கை பார்க்க..  கூட்டத்திலிருந்து ஒரு சூடான் நாட்டு ஆண் பாய்ந்து வந்தார். டிரைவரை,  பெண்ணிடம்போய் தகராறு பண்ணுவதற்காகக் கோபித்துவிட்டு அந்த வார்த்தைகளைச் சொன்னார்!!

இம்மாதிரிச் சூழ்நிலைகளில் நம் தங்கத் தமிழ்நாட்டில் மட்டுமே சொல்லப்படும் வார்த்தைகள் என்று நினைத்துக் கொண்டிருந்தவற்றை அவரிடம் கேட்டதிலிருந்து அது ‘உலகப் புகழ்’ பெற்றது என்று நிரூபணமானது. அதாங்க ... “நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலையா?”

 !!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!
 

Post Comment

61 comments:

ஸாதிகா said...

///1897ல அரசியல்ல கொஞ்சமே கொஞ்சமாவது நாகரீகச் சூழல் இருந்துது. இந்நாளைய அரசியல் நிலைமைகளைக் கவனிச்சா, /// அப்பவே அரசியலையும்,அரசியல் வாதிகளையும் பார்த்தாச்சா?அப்போ?????

ஹைஷ்126 said...

பெட்டி நல்லாவே இருக்கு சித்தரே :))

வாழ்க வளமுடன்

ஸாதிகா said...

//நமக்கென்ன பல்ப் புதுசா என்ன!!
// அதான் ஹுசைனம்மாங்கறது.

SUFFIX said...

பஸ்ஸை உடைப்பதன் தத்துவம் இன்னை வரைக்கும் எனக்கும் புரியல :(,

இந்த சூடு/குளிர்ச்சி நவீன மருத்துவத்தில் ஒத்துக்கமாட்டேங்கிறாங்களே

):பல்ப்:(

ஹுஸைனம்மா said...

///1897ல அரசியல்ல //

/// அப்பவே ... பார்த்தாச்சா?அப்போ?????/

ஹலோ, உங்களுக்கு வயசாச்சுன்னு தெரியுது!! சரியாப் பாருங்க, அது 1987!!

(ஹி..ஹி.. உங்க கமெண்டுக்கு முன்னயே மாத்திட்டன்ல.!! கீழே வுழுந்தாலும் மீசைல.... ஹி..ஹி..)

எல் கே said...

பல பல்புகள் வாங்கிய சித்தி (சித்தருக்கு பெண் பால் ???) ஹுசைனம்மா

ஹுஸைனம்மா said...

// LK said...

பல பல்புகள் வாங்கிய சித்தி //

ச்ச்சித்தீஈஈஈஈஈஈஈஈ.... ???!!

:-))))

எல் கே said...

/ச்ச்சித்தீஈஈஈஈஈஈஈஈ.... ??///

athe athe :P

தராசு said...

அதான பல்ப் புதுசா என்ன??

அந்த பொம்பள காசு குடுக்காம ஏமாத்தீட்டாளோ? சேட்டன் ஏன் டென்ஷன் ஆனாரு??

ஹுஸைனம்மா said...

// தராசு said...
அந்த பொம்பள காசு குடுக்காம ஏமாத்தீட்டாளோ? சேட்டன் ஏன் டென்ஷன் ஆனாரு??//

சில்லறைத் தகராறுங்க!! ராத்திரி 11 மணிக்கு, அவர் ட்யூட்டி முடிக்கிற சமயத்தில, 500 திர்ஹம் நோட்டை நீட்டிருக்காப்ல அந்தம்மா!! (இதுக்குமேலே எனக்கு டீடெய்ல்ஸ் தெரியாது!!)

ஹுஸைனம்மா said...

//ஹைஷ்126 said...
பெட்டி நல்லாவே இருக்கு சித்தரே :))//

நன்றி ஹைஷ் சார்!!

ஜெயந்தி said...

//“ஏம்மா, ரோடு கிராஸ் பண்றமாதிரி இடமும், வலமும் மட்டும் பாத்துட்டு போறே?”ன்னு கிண்டல்!! நமக்கென்ன பல்ப் புதுசா என்ன!!//
அதுதானே. வழக்கம்போல் உங்கள் எழுத்து கலகலா.

ஹுஸைனம்மா said...

// SUFFIX said...
இந்த சூடு/குளிர்ச்சி நவீன மருத்துவத்தில் ஒத்துக்கமாட்டேங்கிறாங்களே//

அதிகாரபூர்வமா ஒத்துக்க மாட்டாங்க!! ஆனாலும், சைடுல மெதுவா, இளநீர், மோர் கொடுங்கன்னு சொல்லுவாங்க!!

ஹுஸைனம்மா said...

//ஜெயந்தி said...
அதுதானே. வழக்கம்போல் உங்கள் எழுத்து கலகலா//

நன்றி ஜெயந்திக்கா.

நாடோடி said...

//நூறென்ன, இருநூறு வயசுகூட வாழட்டும்னு மனசார “வாழ்த்த”த் தோணுது!!//

நாடு தாங்குமா......

"பெட்டி" சுவ‌ர‌ஸ்ய‌ம் குறைய‌வில்லை..

Anonymous said...

//எனக்கும் சித்தர் பட்டம்லாம் தரவேண்டாம்!!//

சித்தி பட்டம் தர்ரோம். :)

தயிர் குளிர்ச்சி, மோர் குளிர்ச்சி இல்லையாம்

Anonymous said...

//“நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலையா?”//

இண்டர்நேஷனலா பிரபலம் ஆகியிருக்க வசனம் போலிருக்கே

அம்பிகா said...

டிரங்கு பெட்டிய தெறந்தா நிறைய விஷயங்கள் கொட்டுதே..!
அடிக்கடி தெறங்க ஹூஸைனம்மா.

Vidhya Chandrasekaran said...

நான் கூட ரொம்ப கெட்ட வார்த்தையோன்னு நினைச்சிட்டேன்:)

ட்ரங்கு பெட்டி - மல்டி சரக்கு பெட்டகம்:))

Unknown said...

சுவாரசியம் சித்தரே ...

சாந்தி மாரியப்பன் said...

ட்ரங்குப்பொட்டில நிறைய விஷயங்கள் கொட்டுது. அடிக்கடி திறங்க.

athira said...

BBC News வாசிச்சது போல இருக்கு. ரங்குப்பெட்டியில அப்பப்ப சூடான நியூஸை எதிர்பார்க்கிறேன்.... நன்றி ரங்குப்பெட்டிக்கு.

Prathap Kumar S. said...

/////1897ல அரசியல்ல கொஞ்சமே கொஞ்சமாவது நாகரீகச் சூழல் இருந்துது. இந்நாளைய அரசியல் நிலைமைகளைக் கவனிச்சா, /// அப்பவே அரசியலையும்,அரசியல் வாதிகளையும் பார்த்தாச்சா?அப்போ????? ///

அப்போ... அதிலென்ன சந்தேகம்... கனப்பார்ம்டு...

Prathap Kumar S. said...

அஜ்மன்ல குழந்தை கிடைச் நியுசை படிச்சசேன்..பிறந்து 12 மணிநேரம் ஆன குழந்தையே போட்டுட்டு போய்ருக்கானுங்க... கொடுமை

//அவரிடம் கேட்டதிலிருந்து அது ‘உலகப் புகழ்’ பெற்றது என்று நிரூபணமானது. அதாங்க ... “நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலையா?”//

தாலி சென்டிமென்டை தவிர எல்லா சென்டிமென்டும் உலகம் பூரா இருங்குங்க...

கண்ணா.. said...

டிரங்கு பெட்டி சுவாரஸ்யமாக இருக்கு...

சித்த ஆராய்ச்சியெல்லாம் பயங்கரமா இருக்கே.....

Prathap Kumar S. said...

/சித்த ஆராய்ச்சியெல்லாம் பயங்கரமா இருக்கே.....//

வயசானா இப்படித்தான் சித்த மருத்துவம், ஆயுர்வேதம்... இப்படி நாட்டு மருந்து தேவைப்படும்
பாவம்...என்ன முடியும்...

Menaga Sathia said...

டிரங்கு பெட்டியை ரசித்தேன்...

Anonymous said...

//// SUFFIX said...
இந்த சூடு/குளிர்ச்சி நவீன மருத்துவத்தில் ஒத்துக்கமாட்டேங்கிறாங்களே//

அதிகாரபூர்வமா ஒத்துக்க மாட்டாங்க!! ஆனாலும், சைடுல மெதுவா, இளநீர், மோர் கொடுங்கன்னு சொல்லுவாங்க!!//

True.

////“ஏம்மா, ரோடு கிராஸ் பண்றமாதிரி இடமும், வலமும் மட்டும் பாத்துட்டு போறே?”ன்னு கிண்டல்!! நமக்கென்ன பல்ப் புதுசா என்ன!!//

I could not stop laughing. haa haa haa haa

vanathy said...

ஹூசைனம்மா, நீங்கள் பாட்டுக்கு 100, 200 வயது வரை வாழ வாழ்த்துகிறீர்கள். இந்த லஞ்சம், ஊழல் எல்லாமே சேர்ந்து வளருமே. பரவாயில்லையா?


// நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலையா?” //
உலகெங்கும் இதே சென்டிமென்ட் இருக்கும் போல.

ரிஷபன் said...

சரக்குள்ள பொட்டிதான்.. சுவாரசியமாய் இருந்தன..

செ.சரவணக்குமார் said...

கதம்பப் பகிர்வு நல்லாயிருந்தது ஹுஸைனம்மா.

பையன் கேட்டது சூப்பரான கேள்வி.

Riyas said...

//.பால் - குளிர்ச்சி; பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகியவையும் அப்படியே!! (சரியா?)//

சரிதானே.. ஏன் குழப்பம்.. நாங்க தெளிவா இருப்போமில்ல.

ஸ்ரீராம். said...

//நம் தங்கத் தமிழ்நாட்டில் மட்டுமே சொல்லப்படும் வார்த்தைகள் என்று நினைத்துக் கொண்டிருந்தவற்றை..."//

“அது ஏன் ஒருத்தர் இறந்தா, பஸ்ஸை எரிக்கணும், கடையை உடைக்கணும்?”//

இரண்டாவது சொல்லியிருப்பதும் அங்கே எல்லாம் நடந்தால் ஒரு அல்ப திருப்தி இருக்கும்...!!!

சிநேகிதன் அக்பர் said...

டிரங்கு பெட்டியிலிருந்து நீயூஸ் வந்து கொண்டே இருக்கு. சுவாரஸ்யம்.

kavisiva said...

பஸ்ஸை எரிக்கற கலாச்சாரம் கண்ணகி காலத்துலயே ஆரம்பிச்சிடுச்சே! அப்போ பஸ் இல்லாததுனால பஸ்ஸை எரிச்சாங்க 1987ல் பஸ். கூடிய விரைவில் எதை எரிக்கப் போறானுங்களோ...தமிழ்நாட்டில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும்.

பல்ப் மேட்டர் சூப்பர்.

ஸாதிகா said...

ஹுசைனம்மா இந்த பருப்பெல்லாம் என் கிட்டே வேகாது.நான் அதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து போட்டேனாக்கும்.மாற்றி விட்டு இப்ப திருப்பி அடிக்கறீங்களா?ஹா ஹா ஹா

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நம்ம தமிழ் நாட்டில தான் இப்படித் திட்டறாங்கன்னுப் பார்த்தா,சூடானிலும், சூடா இருக்கிறவங்க இப்படித் தான் திட்டறாங்களா..அடக் கடவுளே!!!

goma said...

ட்ரங்க் பெட்டி என்னா கனம்,என்னா நேர்த்தி...நல்லாவே ஸ்டஃப் பண்ணியிருக்கீங்க

தமிழ் உதயம் said...

இன்னிக்கு இருக்கிற வயசான/ வயசாகாத அரசியல்வாதிகள் யாரும் இறக்கவே வேண்டாம், நூறென்ன, இருநூறு வயசுகூட வாழட்டும்னு மனசார “வாழ்த்த”த் தோணுது!!


சரியா சொன்னீங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

//நூறென்ன, இருநூறு வயசுகூட வாழட்டும்னு மனசார “வாழ்த்த”த் தோணுது!!//

அப்போ நம்ம பொது சனங்க வாழ்க்கை ஒரு 20, 30 வயசு மட்டும்ம்ன்னு சொல்லுங்க...

Chitra said...

////அதுக்காக, எனக்கும் சித்தர் பட்டம்லாம் தரவேண்டாம்!!////


..... நான்தான் late ...... அவ்வ்வ்வ்.... ஆனாலும் "சித்தர்" பட்டம் கொடுக்கிறேன்.... ட்ரங்கு பெட்டியில அதையும் ஒரு ஓரமா வச்சுக்கோங்க.... நன்றி.

ஹுஸைனம்மா said...

நாடோடி - இவங்க இருந்தா நாடு தாங்குதோ, இல்லியோ, இறந்தா, நாட்டுமக்கள் நாம தாங்குவோமா?

சின்ன அம்மிணிக்கா - மோர்தானே குளிர்ச்சி அக்கா? அதனாலதானே வெயில்ல அதைக் குடிக்கிறோம்?

அம்பிகா - நன்றி!! விஷயம் சேர்த்தபின்னதானே திறக்கமுடியும் ட்ரங்குப் பெட்டிய?

வித்யா - நன்றி. கெட்ட வார்த்தையெல்லாம், நம்மூரை மிஞ்ச முடியுமா?

ஹுஸைனம்மா said...

செந்தில் - நன்றி.

அமைதிச் சாரல் - நன்றி. அடிக்கடி திறந்தா சுவாரஸ்யம் இருக்காதே!!

அதிரா - பிபிஸி நியுஸ் போலன்னு சொல்லிட்டு, சூடான நியூஸ் வேணும்னும் சொல்றீங்க? அப்ப பிபிஸி நியூஸ் ஆறிப்போய் இருக்குமா? :-)))))

பிரதாப் - எனக்கு வயசாகிடுச்சுதான்; நான் மறுக்கலையே? காலாகாலத்துல கல்யாணமானவங்கதான் வயசை மறைப்பாங்க!!

ஏன் உங்க ப்ரொஃபைல்ல போடுற போட்டோவிலல்லாம் கன்னத்துல கைய வச்சு தாங்கிப் பிடிச்சுக்கிறீங்க? கல்யாணமாகலைன்னு கவலையில இப்படி நாடியைத் தாங்கினா மட்டும் நடந்துடுமா? வாழ்வே மாயம் கமல் எஃபெக்ட் (எஃபெக்ட் மட்டும்தான்) வருது!!

ஹுஸைனம்மா said...

மேனகா - நன்றி!!

அனாமிகா - சிரிக்க வச்சது சந்தோஷம்!! நன்றி.

வானதி - வாங்க; லஞ்சம் ஊழலைக் கூட எப்படியாவது பொறுத்துக்கலாம். இவங்க இறந்தா, தொண்டரெனும் குண்டருங்க பண்ற அநியாயத்தை?? நன்றிப்பா.

ரிஷபன் - நன்றி சார்.

சரவணக்குமார் - நன்றிங்க.

ரியாஸ் - நன்றி.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் - ஏன் சார் இப்படி? அதெல்லாம் இல்லாததுனாலத்தான், இங்கே கொஞ்சம் நிம்மதியா இருக்கோம்!! எப்பவுமே, “மாத்தி யோசி”தானா? :-))))
நன்றி!!

அக்பர் - நன்றி.

கவிசிவா - ஆமால்ல? கரெக்டு, கண்ணகிதானே தொடங்கிவச்சது? நன்றி.

ஆ.நி.ரா.மூர்த்தி - சார், பேரைக் கொஞ்சம் சுருக்கிக்கப்படாதா? நன்றிங்க.

ஹுஸைனம்மா said...

ஸாதிகாக்கா - நீங்க கமெண்டை டைப்பும்போது, நான் மாத்திட்டேன்!! ஒரு நல்ல உள்ளம் என்னிடம் சுட்டிக்காட்டியதால!! நீங்க செஞ்சீங்களா? :-))) என்னைக் கவுக்கறது எப்படின்னே குறியா இருக்கீங்க!! ;-)))))

கோமாக்கா - நன்றி. கனமா இருக்கிறதுனாலதானே டிரங்குப்பெட்டின்னு பேர்?

தமிழ் உதயம் - நன்றி!!

வசந்த் - ஓ, நீங்களும் “மாத்தி யோசி”க்கிறீங்களா? :-))) நன்றி!!

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... சூப்பர். கலக்கல்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

பல்பு ஜூப்பரு..

மாதேவி said...

"ட்ரங்க் பெட்டி" நன்றாக இருக்கிறது.

அம்பிகா said...

ஹூஸைனம்மா,

உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

அன்புத்தோழன் said...

1.//“அது ஏன் ஒருத்தர் இறந்தா, பஸ்ஸை எரிக்கணும், கடையை உடைக்கணும்?”///

இதுலாம் நமக்குள்ள உள்ள ஆதங்கத்துல ஒன்னு... எவன் செத்தாலும் மக்களுக்கு நிம்மதி இல்ல... இது போன்ற தருணங்களில் பொது சொத்த சூறையாடுவதில் அப்படி என்ன அலாதி பிரியமோ தெரியல அரசியல் வாதிகளுக்கு....

2.//மனிதர்களும் அப்படித்தான் என்று தோன்றுகிறது. குழந்தைகள் - குளிர்ச்சி; டீனேஜ் - சூடு; நடுத்தர வயது - பெற்றோராவதால், பெற்றோரின் அருமைகள் தெரியவருவதால், கொஞ்சமாகக் குளிர்ச்சி; நாப்பது வயசு - நாய்க்குணம்!! அறுபதுகளில் - மீண்டும் குளிர்ச்சி!///

ஹுஸைனம்மா இப்போ உங்களுக்கு எத்தன வயசு??? :-p

3.//நமக்கென்ன பல்ப் புதுசா என்ன!!//
இந்த மாதுரி பல்பு வாங்கும் சமாச்சாரங்களுக்கு மட்டும் நமக்குன்னு போதுவுடமையாக்கிட வேண்டியது... இது நல்லாருக்கே.... :-)

4.//“நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலையா?”//

அங்கயுமா...?? வொய் ப்ளட்.. சேம ப்ளட்.... ஹி ஹி...

-----
சூப்பர் தொகுப்பு ஹுஸைனம்மா...

நட்புடன் ஜமால் said...

சூடான் ஜீன்ஸும் (சுடி எல்லாம் கேக்கப்படாது) நம்மளுதும் ஒன்று தான்

சாந்தி மாரியப்பன் said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்.

http://amaithicchaaral.blogspot.com/2010/07/blog-post_06.html

தூயவனின் அடிமை said...

பரவயில்லையே பெட்டியை திறக்க நிறைய விஷயங்கள் வெளியில் வருகிறது.

ராஜவம்சம் said...

நல்லா இருக்கு தாயி.

Thenammai Lakshmanan said...

அதுக்காக, எனக்கும் சித்தர் பட்டம்லாம் தரவேண்டாம்!!//

ஹாஹாஹா .. பல்பா அது வேறயா... நல்லா இருக்குப்பா.. ஜோடிக்கு ஆள் இருக்கே.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அரசியல்வாதிகள் யாரும் இறக்கவே வேண்டாம், நூறென்ன, இருநூறு வயசுகூட வாழட்டும்னு மனசார “வாழ்த்த”த் தோணுது!!//
ஏனுங்கக்கா... அதுல வேற பல பிரச்சனைகள் இருக்கே... இருந்தாலும் உங்களுக்கு நல்ல மனசுங்க...

//எத்தனை அழிக்கப்பட்டவிருக்கின்றன என்று எண்ணிக்கையைச் சொல்ல மனம் வரவில்லை//
வேண்டாங்க...சொல்ல வேண்டாம்... நன்றி

//அதுக்காக, எனக்கும் சித்தர் பட்டம்லாம் தரவேண்டாம்!!//
இல்ல இல்ல... குடுத்தே ஆகணும்...

//நமக்கென்ன பல்ப் புதுசா என்ன!!//
ஹி ஹி ஹி... இது தான் டாப்பு....

//“நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலையா?”//
ஆஹா... இப்ப இது universal language ஆயடுசோ....சூப்பர்...

Karthick Chidambaram said...

உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுங்க ...சித்தரே

Guruji said...

வாழ்க பல்லாண்டு

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் மிஸஸ் ஹூஸைன்! நலமா? உங்க பதிவுகள் நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்!

அப்படியே இங்கேயும் பாருங்க!

http://payanikkumpaathai.blogspot.com/

கோமதி அரசு said...

அன்பு சகோதரி ,உங்கள் ட்ரங்குப் பெட்டியை பார்க்க இப்போது தான் நேரம் கிடைத்தது. பார்த்து விட்டேன். மிக நன்றாக இருக்கிறது.