Pages

முதலும், இரண்டாவதும்






 prufrock.com

முதலாவதில்:

“என்னங்க, “You and your baby"ன்னு ஒரு புக் இருக்கு; பிரக்னன்ஸி, குழந்தை வளர்ப்பு பத்திலாம் நல்லா டீடெய்லா சொல்லிருக்காங்களாம். சைக்காலாஜிக்கல் அப்ரோச்ல இருக்காம். எங்க கிடைக்கும்னு தேடி வாங்கித் தந்துடுங்க, சரியா?”

“ஏம்மா, இதுக்கெல்லாமா புக்? நம்மள பெத்தவங்க புக் படிச்சா வளத்தாங்க?”

“அதெல்லாம் அந்தக்காலம்; இப்ப அதெல்லாம் சரி வராது. சொன்னதைச் செய்வீங்களா பேசாம?”

இரண்டாவதில்:

“ஏம்மா, போன தடவை அந்த குழந்தை வளர்ப்பு பத்தி ஒரு புக் வாங்கினோமே, அத வேணுன்னா எடுத்து வாசியேன்.”

“ஆமா, இருக்க வேலைக்கு நடுவுல அந்த புக்கைத் தேடிக் கண்டுபுடிக்கத்தான் நேரம்?!! அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.”


முதலாவதில்:

“என்ன நீங்க? குழந்தையோட டம்ளர், தட்டு தொடாதீங்கன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்? இப்ப மறுபடியும் அத ஸ்டெரிலைஸ் பண்ணனும்!!”

இரண்டாவதில்:

 “ஏம்மா, இது புள்ளயோட டம்ளரில்லியே? எடுக்கலாமா?”

“என்னது, புள்ளயோட டம்ளரா? அவனுக்கெதுக்கு தனி டம்ளர்? எல்லாருக்கும் எல்லாமும்தான்.”

முதலாவதில்:

“என் செல்லம்ல, கண்ணுல்ல! இந்த ஒரு வாய் வாங்கிக்கோம்மா. தங்கம்ல. சாப்பிடலன்னா எப்படி ஸ்ட்ராங்க்காகுறது? பாத்தியா, உனக்குப் பிடிச்ச சிக்கன் பிரியாணி, சிக்கன் ஃபிரை. ஓடாதடா, எவ்ளோ நேரமா உன் பின்னாடியே ஓடிகிட்டிருக்கேன் பாரு!”

இரண்டாவதில்:

“டேய்! இந்தா இங்க உக்காரு. சாப்பிட்டு முடியிற வரை கீழே இறங்கக்கூடாது.  தயிர் சாதத்தைக் கடகடன்னு அஞ்சு நிமிஷத்துல முடிச்சிடணும். தெரியுதா?”


முதலாவதில்:

“ஏம்மா ரெண்டரை வயசுப்பிள்ளைக்கு ரைம்ஸும், ஏபிசிடியெல்லாம் தேவையா? இந்த வயசுல விளையாடட்டுமே?”

“நானும் விளையாட்டாத்தானே சொல்லிக் கொடுக்கறேன்; அவனும் எவ்வளவு ஆர்வமாக் கத்துக்கிறான் பாருங்க?”

இரண்டாவதில்:

“ம்மா, உன்ன டீச்சர் ஃபோன் பண்ணச் சொன்னாங்க.”

“எதுக்காம்?”

“தெரியலை. டீச்சர் எனக்கு ஏன் இங்லீஷ் பேச வரமாட்டேங்குதுன்னு கேட்டாங்கம்மா.”

“ம்ம்.. அதுக்குத்தானே ஸ்கூலுக்கு அனுப்புறேன்; எல்லாத்தையும் நானே சொல்லிக்கொடுத்துட்டா அப்புறம் எதுக்கு ஸ்கூல்?”

முதலாவதில்:
 
“ஹுஸைன்! நாளைக்கு டெஸ்டுக்குப் படிச்சிட்டியா? இந்தா இதுல ஒரு மாடல் கொஸ்டின் பேப்பர் எழுதிருக்கேன் பாரு.  அதுல ஆன்ஸர் எழுது. எக்ஸாமுக்குப் பிராக்டீஸ் வேணும்ல?”

இரண்டாவதில்:

“ம்மா! நாளைக்கு இங்லீஷ் டெஸ்ட்.”

“சரி, சரி. போய்ப் படி.”

“படிச்சுட்டேன்; கொஸ்டீன் கேக்கிறியா?”

“படிச்சாச்சுல்ல; போதும். கொண்டு உள்ள வையி. ”

முதலாவதில்:

"ஏங்க அந்த கிளப்ல ஸ்விம்மிங் கிளாஸ் பத்தி கேட்டுட்டு வந்தீங்களா? ஸ்கூல்ல ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடியும் கிடையாது. நீங்க சொன்னீங்கன்னு பிள்ளையச் சேத்தேன் பாருங்க, என்னைச் சொல்லணும்.”

இரண்டாவதில்:

“ பக்கத்துல ஒரு கராத்தே கிளாஸ் நடக்குதாம். சின்னவனை அங்க  சேப்போமாம்மா?”

“ம்.. அவனை,  அங்க கூட்டிட்டுப் போறதும், வர்றதும் உங்கப் பொறுப்பு; சரின்னா சேத்து விடுங்க. எனக்கென்ன வந்துது?”






Post Comment

45 comments:

எல் கே said...

shabba ippadilam irukka, ipapve kanna kattudhee

ஸாதிகா said...

ஹுசைனம்மா,நீங்க தைரியமான பெண்மணிதான்.ஏன்னா..அனுபவத்தை அழகாக புட்டு புட்டு வைத்து விட்டீர்களே.பார்த்து மக்கா..சின்னவன் படிச்சுப்பார்த்தாருன்னா உங்களை குதறிவிடப்போகிறார்.

நாஸியா said...

ஆஹா! ஆனா எனக்கு இப்படி நடக்கலையேப்பா...

தம்பி படிக்கலைன்டா எனக்கு தான் திட்டு விழும்.

Jaleela Kamal said...

அதே அதே..
எல்லாம் உண்மை

Prathap Kumar S. said...

இப்பல்லம் அடிக்கடி புலம்ப ஆரம்பிச்சிடறீஙக ஏன்??? ஏதாச்சும் வேண்டுதலா???

Ahamed irshad said...

ம்ம்ம்....

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

இம்பூட்டு நேர்மையான ஆளா நீங்க ...

பதிவு சுவாரஸ்யம் :)

ஷாகுல் said...

No Comments :-))))

தராசு said...

முதல் : அம்மா எனக்கு அந்த பொம்மை வேணும்.

சரி, வாங்கித் தரேன்.

இரண்டாவது : அம்மா, அந்த பொம்மை வேணும்.

ஹூம், அந்த பழைய பொம்மையே நல்லாத்தான இருக்கு, அத வெச்சு விளையாடு.

ஜெய்லானி said...

ம்...வீட்டுக்கு வீடு வாசல்படி...

Abu Khadijah said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?
எழுதுன அந்த ஃப்லோ வே தனி கலைதான், சின்னவன கராத்தே கத்திட்டு என்னுடன் வந்து டெஸ்ட் பன்ன சொல்லுங்க.

கண்ணா.. said...

இப்பவாது ரெண்டாவதோட துக்கம் புரிஞ்சா சரிதான். நான் வீட்டுல ரெண்டாவது :(

Riyas said...

வானாம் அழுதுடுவேன்..

Anonymous said...

நான் எங்க வீட்டுல மூணாவது. சுத்தமா கண்டுக்கவே மாட்டாங்க என்னை.

SUFFIX said...

ஹி..ஹி..ரியலி சேலஞ்சிங் தான், பதிவிட்ட விதம் நல்லா இருக்கு.

Thenammai Lakshmanan said...

ஆஹா உண்மையை புட்டு புட்டு வைக்கிறீங்களே தோழி

Thenammai Lakshmanan said...

ஆஹா உண்மையை புட்டு புட்டு வைக்கிறீங்களே தோழி

ராமலக்ஷ்மி said...

அழகாய் அலுத்துக் கொண்டுள்ளீர்கள்.

@ சின்ன அம்மிணி,
நாங்க அஞ்சு பேர். வளர்ந்தது கூட்டுக் குடும்பத்தில். ஆகையால் யாரைக் கண்டுக்கிட்டாங்கன்னே தெரியாது:))!

அப்துல்மாலிக் said...

ஆமாம்மா, அதான்.. எல்லாமே உண்மை

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நேர்மையா பதிவு பண்ணியிருக்கீங்க ஹுஸைனம்மா.

இரண்டாவது மகனிடம் இந்த இடுகையைக் காட்டினீர்களா?

ரிஷபன் said...

அத்தனையும் நிஜம்..
ரசிக்க வைத்த பதிவு

நாடோடி said...

அய்ய‌ய்யோ இவ்வ‌ள‌வு பிர‌ச்ச‌னை இருக்கா...

Anisha Yunus said...

ஆஹா...இதுவல்லவா தாய்ப்பாசம்...என்னத்த சொல்ல?

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பதிவு ரசிக்கும்படியாக உள்ளது.

கோமதி அரசு said...

அன்பு சகோதரி,
நகைச் சுவையாக உண்மையை சொல்லி
உள்ளீர்கள்.

Jaleela Kamal said...

முதலாவதில்:

“ஹுஸைன்! நாளைக்கு டெஸ்டுக்குப் படிச்சிட்டியா? இந்தா இதுல ஒரு மாடல் கொஸ்டின் பேப்பர் எழுதிருக்கேன் பாரு. அதுல ஆன்ஸர் எழுது. எக்ஸாமுக்குப் பிராக்டீஸ் வேணும்ல?”

இரண்டாவதில்:

“ம்மா! நாளைக்கு இங்லீஷ் டெஸ்ட்.”

“சரி, சரி. போய்ப் படி.”

“படிச்சுட்டேன்; கொஸ்டீன் கேக்கிறியா?”

“படிச்சாச்சுல்ல; போதும். கொண்டு உள்ள வையி. //


hi hi
இதே கதை தான்

Jaleela Kamal said...

முதலாவதில்:

"ஏங்க அந்த கிளப்ல ஸ்விம்மிங் கிளாஸ் பத்தி கேட்டுட்டு வந்தீங்களா? ஸ்கூல்ல ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடியும் கிடையாது. நீங்க சொன்னீங்கன்னு பிள்ளையச் சேத்தேன் பாருங்க, என்னைச் சொல்லணும்.”

இரண்டாவதில்:

“ பக்கத்துல ஒரு கராத்தே கிளாஸ் நடக்குதாம். சின்னவனை அங்க சேப்போமாம்மா?”

“ம்.. அவனை, அங்க கூட்டிட்டுப் போறதும், வர்றதும் உங்கப் பொறுப்பு; சரின்னா சேத்து விடுங்க. எனக்கென்ன வந்துது?”



அதெப்படி எல்லாம் ஒரே மாதிரி

அரபுத்தமிழன் said...

முதல் குழந்தை மேலே எப்பவுமே கரிசனம் அதிகமாக இருக்கும், அதன் பின் வரும் எல்லாக் குழந்தைகள் மீதும் முன்பிருந்த கவனம் இருக்காது, இருந்தாலும் தாய்க்கு இரண்டாம் குழந்தை மீது கொஞ்சம் கூடுதல் பாசம் இருக்கும் என்பது என் கணிப்பு, எல்லோருக்கும் பொருந்துமா எனபது தெரியவில்லை.

Vidhoosh said...

:)) ஆனாலும் இப்டி போட்டு உடைச்சிருக்க கூடாது :))

அம்பிகா said...

இல்லாதவனா பொறந்தாலும்
இளையவனா பொறக்கக் கூடாதுன்னு
இதுக்குத்தான் சொன்னாங்களோ...

அன்புத்தோழன் said...

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல... எங்க வீட்டுல நான் ஐந்தாவது.... கடகுட்டி சோ எக்ஸ்ட்ரா செல்லம் தான்.... ஆனா இதுல இவ்ளோ பிரச்சன இருக்கா???? இருந்தும் அதெல்லாத்தையும் தைரியமா உண்மைய அப்டியே ஒலிக்காம மறைக்காம சொன்ன உங்களோட எழுத்துத்திறமைய பாத்து அப்டியே பூரிச்சு போய்ட்டேங்க... என்னமா யோசிக்குரீங்கப்பா கிரேட்டு...

Vidhya Chandrasekaran said...

:))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா... சூப்பர்... இப்படி எல்லாம் இருக்கா? கஷ்டம் தான்... உங்க சின்ன பிள்ளை இதை படிக்கற வயசு வர்றப்ப வம்பு தான் உங்களுக்கு... (அப்போ மூணாவதுன்னா என்ன ஆகும்? பாவம் அது...)

athira said...

சே....சே...சே..... என்னமாதிரியெல்லாம் சிந்திக்கிறீங்க...

சிநேகிதன் அக்பர் said...

அடிச்சு தூள் கிளப்புறீங்க.

Anonymous said...

//ஹா ஹா ஹா... சூப்பர்... இப்படி எல்லாம் இருக்கா? கஷ்டம் தான்... உங்க சின்ன பிள்ளை இதை படிக்கற வயசு வர்றப்ப வம்பு தான் உங்களுக்கு... (அப்போ மூணாவதுன்னா என்ன ஆகும்? பாவம் அது...)//

நான் ரொம்ப கேள்வி கேக்கறேன்னு என்னை இந்த புவ்வ்வ்வ்வ்ன்ன்ன்ன்னாக்கா ஒரே திட்டறாங்க. இவங்க கேக்கறதுக்கு பேர் என்னானு ஒரு தடவை கேட்டு சொல்லுங்க ஹூகைன்னம்மா.

வாய்விட்டு சிரிச்சேன். ஹி ஹி.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஹாஹ்ஹா.. நல்லா எழுதியிருக்கீங்க ஹூசைனம்மா.. நானும் முதலாவது தான்.. நீங்களும் கூட முதலாவது தான்னு ஒருக்கா படிச்ச மாதிரி நினைப்பு இருக்கு.. :))

சாந்தி மாரியப்பன் said...

சின்னவன் கிட்ட இதை வாசிச்சு காமிச்சீங்களா :-)))

ஹுஸைனம்மா said...

எல்.கே - வாங்க; நன்றி.

ஸாதிகா அக்கா - சின்னவர்ட்ட பெரியவர் சண்டைபோடும்போதெல்லாம் இதத்தான் சொல்லி, அவனுக்கு விட்டுக்கொடுக்கச் சொல்றது. இநதக் காரணத்தினாலத்தான் பெத்தவங்களுக்கு கடைக்குட்டிங்க மேல ஒரு தனி பாசம் போல!!

நாஸியா - அதுவும் இருக்குங்க ஒரு தனி பதிவு போடற அளவு, மூத்த பிள்ளைகளுக்கு பொறுப்புகள் என்னென்னனு!!

ஜலீலாக்கா - அதே, அதே, சபாபதேன்னு நாம ரெண்டு பேரும் பாடிகிட்டே இருக்கலாம்போல!!

பிரதாப் - தம்பி, இந்த புலம்பல் நீங்களும் புலம்புற காலம் வரும்!!

ஹுஸைனம்மா said...

இர்ஷாத் - என்னா தம்பி, ரொம்ம்ம்ப்ப்ப்ப யோசிக்கிறீங்க போல!!

ஜமால் - ஹி.. ஹி.. நேர்மையா.. என்னது அது?

ஷாகுல் - ஏங்க? கமெண்ட் எழுதக்கூடாத அளவு மோசமா பதிவு? :-))

தராசு - அதேதான், பழைய பொம்மை, டிரஸ், கதை புக்...

ஜெய்லானி - ம்ம்.. நன்றி.

அதிரை எக்ஸ். - சின்னவர் கராத்தே கொஞ்ச நாள் போயிட்டு அப்புறம் டிமிக்கி கொடுத்துட்டார்.
//எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?// ஏதோ உள்குத்து இருக்கும் போல?!! ;-)))

ஹுஸைனம்மா said...

கண்ணா - ஹலோ, இதுக்குச் சேத்துமாத்துதான் கடைக்குட்டிகளுக்கு அவ்ளோ செல்லம் தர்றாங்க தெரியுமா? நான் மூத்ததுங்க!! :-(

ரியாஸ் - ஏந்தம்பி, அழுவாச்சி வருது? நீங்களும் என்னப்போல மூத்ததா?

சின்ன அம்மிணிக்கா - கொடுத்து வச்சவங்க நீங்க!! மூத்ததுன்னாதான் ரொம்ப கண்டுகிட்டுப் பாடாப்படுத்துவாங்க!! அன்புத்தொல்லை!!

ஷஃபி - நன்றி!!

தேனம்மையக்கா - உண்மையை மறைக்க முடியாதே, அதான்!! நன்றிக்கா.

ராமலக்‌ஷ்மி அக்கா - வாங்க; நம்ம காலத்துலயெல்லாம் மூத்ததைக் கூட கண்டுக்கமாட்டாங்கக்கா!! நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

அபுஅஃப்ஸர் - ம்ம்.. நீங்களும் அம்பயரிங் ஆரம்பிச்சாச்சு போல!!

சரவணக்குமார் - நன்றிங்க. சின்னவன்கிட்ட பெரியவன் சண்டை போடுறப்ப சொல்லிக்கிறதுதான்!!

ரிஷபன் சார் - வாங்க; நன்றி!!

நாடோடி - இதுக்கே அலறினா எப்படி? இன்னும் எவ்ளோ இருக்கு!!

அன்னு - //இதுவல்லவா தாய்ப்பாசம்// புரியுது.. புரியுது.. அங்க ரெண்டாவது வரும்போது இதேபோல ஒரு பதிவு நீங்க போடலன்னா, உங்க பேரை மாத்திடுறேன்!!

ஸ்டார்ஜன் - வாங்க; நன்றி.

கோமதி அக்கா - வாங்க; நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

அரபுத்தமிழன் -நீங்க சொன்னது சரிதான்; அந்தக் கூடுதல் பாசத்துக்குக் காரணமும் இதுதான்!!

விதூஷ் - என்ன செய்ய? நமக்கு உண்மையைப் பட்டுன்னு உடச்சி சொல்லித்தான் பழக்கம்!! நன்றிப்பா.

அம்பிகா - வாங்க; சரியாச் சொன்னீங்க. ஆனாலும், இளையவனா இருந்தா கிடைக்கிற சுதந்திரம் தனிதான்!!

அன்புத்தோழன் - அஞ்சாவதா? நாந்தான் சொன்னேனே, இதெல்லாம் இந்தக் காலத்து பிள்ளைகளுக்குத்தான்னு!! அந்தக் காலத்துல எல்லாம் ஒண்ணுமண்ணாத்தான் வளரும்!!

வித்யா - நன்றி.

அப்பாவி தங்க்ஸ் - சின்னவருக்கும் சிலது தெரியும். அப்பப்ப புலம்புரதுதான் வீட்டிலயும்!! :-)

ஹுஸைனம்மா said...

அதிரா - வாங்க! //சே....சே...சே..... // இது என்ன மாதிரியான ‘சே’? சீ.. ந்னு சொல்றதா, இல்லை “அட,அட”ன்னு பாராட்டுறதா?

அக்பர் - வாங்க;நன்றி.

அனாமிகா - வாங்கப்பா; ஆமா, புவனா ஒரு கேள்விக்குறி!! சிரிச்சதுக்கு நன்றி. நீங்க ஒரே பொண்ணா?

எல் போர்ட் - வாங்க; நானும் முதலாவதுதான்!! அது வேற விதமானக் கொடுமை!!

அமைதிச்சாரல் - இல்லப்பா; பதிவு ரங்ஸ் மட்டும்தான் வாசிப்பார். பசங்க வாசிக்கிறதில்லை. ஆனா, இதெல்லாம் அவனுக்கும்தெரியும்!! அவனுக்கு எந்த எக்ஸ்ட்ரா கிளாஸும் அனுப்பலைன்னு ஜாலிதான்!!

goma said...

மனமாற்றங்களை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
அருமை.