Pages

உள்ளூர் உறவுகள்




"லோ, சாச்சி!! நல்லாருக்கியா?”

“அலோ!  நீயா? நாங்க நல்லாருக்கம். நீ நல்லாருக்கியா? மருமவேன், புள்ளையல்லாம் எப்பிடிருக்காங்க?”

“எல்லாரும் நல்லாருக்கோம் சாச்சி.  சாச்சா சொகமாருக்காங்களா?”

“ஆமா. அதாரு அங்கன இருமுற சத்தம் கேக்குது. சின்னவனா? ஏன் இப்பிடி இருமுறான்? குளுந்ததுகள குடிச்சானா? நாளக்கழிச்சு நம்ம மேலத்தெரு காஜா அங்க வர்றான்; அவன்ட்ட அக்கரா பொடி குடுத்துவுடுறேன், தேன்ல குழப்பி மூணுநாளைக்கி குடு புள்ளைக்கி, சரியாயிடும்.”


லோ, மாமா, நாந்தான் பேசுறேன். எல்லாரும் சொகமா?”

“ஆமாம்மா.  ஏம்மா, அங்க இந்த வருஷம் வெயில் ஜாஸ்தியாமே? மாப்பிளைக்கு இப்பவும் வெளிய சைட்ல வேலை இருக்கா? நிறைய தண்ணி, மோர் குடிக்கச்சொல்லு. பிள்ளைகளுக்கும் தலையில குளுகுளுன்னு நல்லெண்ணை தேச்சு விடும்மா. இங்கன உள்ள வெயிலே நமக்குத் தாங்க முடியலை?”

 ”சரி மாமா...”

“ஏம்மா, முந்தி வாங்கின நிலத்துக்கு வேலி போட்டாச்சுல்ல? இல்லன்னா சொல்லு, ஏற்பாடு செஞ்சிடலாம்.  சொத்து வாங்குறதவிட, அத முறையா பாதுகாக்கணும், அதான் முக்கியம்! ஆமா, அதுக்கப்புறம் ஒண்ணும் வாங்கலியா? கட்டுசெட்டா இருந்து சேத்தாத்தானேம்மா பின்னாடி ஒதவும்? சுதாரிப்பா இருந்துக்கம்மா? ”

லோ, மைனி நல்லாருக்கீங்களா?”

“நல்லாருக்கோம்; பிள்ளைகளுக்குப் பரிட்சைதானே இப்ப?”

“ஆமா மைனி; மைனி, இப்பத்தான் ஞாபகம் வந்துது, ரேஷன் கார்டுல சின்னவன் பேரைச் சேக்கலைன்னு நினைக்கிறேன். அண்ணன்ட சொல்லி கொஞ்சம் பாத்து சேத்துடச் சொல்லமுடியுமா மைனி? இப்ப சென்ஸஸ் வேற எடுக்குறாங்களே, அதுக்கும் வேணும்ல, அதான்..  அண்ணனுக்குக் கஷ்டம் இல்லியே?”

“அதெல்லாம் நீ கவலைப்படாதே. இதில என்ன பெரிய கஷ்டம்? நான் பாத்து  எல்லாம் முடிச்சுட்டு தகவல் சொல்றேன். நீ சின்னவன் முழுப்பேரும், பிறந்த தேதியும் மெஸேஜ் பண்ணு போதும். நேத்துதான் உனக்கும் சேத்து மாசி பொடிச்சேன். யார் வர்றான்னு பாத்து குடுத்து விடுறேன் என்னா?”

லோ, அண்ணே,  வீட்டில எல்லாரும் சுகம்தானே?”

“எல்லாரும் சுகம். அங்க எப்படி? ஆமா, அடுத்த மாசம் லீவாச்சே பிள்ளைகளுக்கு? ஊருக்கு வரலியா? அப்புறம், சொல்ல மறந்துட்டேன், எல்.ஐ.ஸி. பாலிஸி ரெண்டுத்துக்கும் பணம் கட்டியாச்சு. வீட்டுத் தீர்வையும் கட்டிட்டேன். நீ வரும்போது பில்லை மறக்காம வாங்கிக்கோமா!”

“அண்ணே...”

“நீ என்ன சொல்லுவன்னு தெரியும். தாங்க்ஸெல்லாம் சொல்ற அளவுக்கு உன் வீட்டுக்காரரோட எனக்கு மேலோட்டமான ஃப்ரண்ட்ஷிப் இல்லன்னு உனக்கும் நான் எத்தினிவாட்டி சொல்றது?”

லோ சின்னாப்பா, நாந்தான். நல்லாருக்கியளா?”

“அட நீயா? நல்லாருக்கம் மவளே. அங்கன எல்லாரும் சவுக்கியந்தானே? உன் வாப்பா, உம்மாட்ட நான் நெதம் பேசிட்டுதான் இருக்கேன். நீ ஊருக்கு வர்றியாமே? நம்ம ஃபைஸல் இந்த வருஷம் பி.ஈ. முடிச்சிட்டான் தெரியுமா? ”

“ஆமா சின்னாப்பா. என்ன செய்யப் போறானாம்? இந்தப் பக்கம் வர்ற மாதிரி ஐடியா இருக்காமா?”

“இல்லம்மா. அங்கல்லாந்தான் இப்ப நெலம சரியில்லன்னு சொல்றாங்களே. இருக்கிறவங்க வேலைகளுக்கே பிரச்னைன்னு சொல்றாங்க. அதில நீங்க வேற ஏம்மா இவனுக்கு விஸா, வேலைன்னு அலையணும்? இங்கயே எதாவது பாத்துக்கடான்னு சொல்லிட்டேன். சரிதானே? ஆமா, சின்னவனுக்குப் புடிக்கும்னு கோதுமைப் பணியம் கொடுத்துவுட்டேனே, விரும்பிச் சாப்பிட்டானா?”

ருகில் இல்லையென்றாலும் எனையும் மறவாது, உரிய அறிவுரைகளும் தந்து,  பலப்பல உதவிகளும் செய்யும் என் அருமை சொந்தங்களாலும், நட்புகளாலும்தான் என் நிம்மதியான வெளிநாட்டு வாழ்வு சாத்தியப்படுகிறது.  இதற்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? நான் தரும் சின்னச் சின்ன  அன்பளிப்புகள்கூட அவர்களின் அன்புக்கு முன் ஒன்றுமேயில்லை!!
  
  

Post Comment

61 comments:

pudugaithendral said...

கொடுத்துவைத்தவர் நீங்க ஹுசைனம்மா. ஆண்டவன் இந்த மகிழ்ச்சியை உங்களுக்கும் என்றும் நிரந்தரமாக வைக்கட்டும்

Ananya Mahadevan said...

அழகான சம்பாஷணைகள்! அதில் இழையோடும் அக்கறையும் அன்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது! கடைசி வரையில் நம்முடன் இருப்பவர்கள் சொந்தங்களேன்னு ஏதோ பட்டிமன்றதுல கேட்டமாதிரி இருக்கு.
அழகா இதை தொகுத்து இருக்கீங்க.
வாழ்த்துக்கள்! வாழ்க சொந்த பந்தம்!

சாந்தி மாரியப்பன் said...

இப்படி அருமையான உறவுகள் இருப்பத

ற்கு நீங்க ரொம்பவும் கொடுத்து வெச்சிருக்கணும்.

நாடோடி said...

வெளிநாடுக‌ளில் வாழ்ப‌வ‌ர்க‌ளுக்கு உற‌வுக‌ளின் விசாரிப்புக‌ள் உண்மையிலேயே ஒரு உற்சாக‌ம் தான்...

க.பாலாசி said...

உறவுகளும், நட்புகளும் கொடுக்கும் பலமும், ஆதரவான பேச்சுகளும்தான் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு வரம். உங்களுக்கும் அம்மாதிரியான உறவுகள் வாய்த்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி..

தூயவனின் அடிமை said...

ரொம்ப அருமையா சொல்லி இருக்கிறிர்கள். நமக்கு பிரச்சினை என்றவுடன் ,முன் வந்து நிற்பது நம் உறவுகள் தான்.

தராசு said...

ஹலோ, எப்படி இருக்கீங்க,

நல்லாருக்கீகளா

Prathap Kumar S. said...

//முந்தி வாங்கின நிலத்துக்கு வேலி போட்டாச்சுல்ல? இல்லன்னா சொல்லு, ஏற்பாடு செஞ்சிடலாம். சொத்து வாங்குறதவிட, அத முறையா பாதுகாக்கணும், //

அதானே ஊர்ல ஒரு நாலு சென்ட் இடத்தை வாங்கிப்போடலாம்னா... இடமே இல்லங்கறானுங்க...
எல்லாத்தையும் ஒரேடியடியா நீங்களே வாங்கிப்ப்போட்ட நாங்கல்லாம் எங்கப்போறது...
சுமார் 50 ஏக்கர் வச்சுருப்பீங்களா....?? :)))

Prathap Kumar S. said...

ஹலோ ஹுசைனம்மாவா??? ஊர்ல எல்லாரும் நல்லாருக்காங்களா??? திருட்டுப்பயம் அங்க சாஸ்தியாமே... டிரங்குப்பொட்டியை பத்திரமா பூட்டிவச்சுக்கோங்க... :))

ஹுஸைனம்மா said...

//நாஞ்சில் பிரதாப் said...
//முந்தி வாங்கின நிலத்துக்கு வேலி போட்டாச்சுல்ல? இல்லன்னா சொல்லு, ஏற்பாடு செஞ்சிடலாம். சொத்து வாங்குறதவிட, அத முறையா பாதுகாக்கணும், //

அதானே ஊர்ல ஒரு நாலு சென்ட் இடத்தை வாங்கிப்போடலாம்னா... இடமே இல்லங்கறானுங்க...
எல்லாத்தையும் ஒரேடியடியா நீங்களே வாங்கிப்ப்போட்ட நாங்கல்லாம் எங்கப்போறது... சுமார் 50 ஏக்கர் வச்சுருப்பீங்களா....?? //

பிரதாப்பு, அந்தப் பத்தி எழுதும்போது பிரதாப் கண்ணுல இதுமட்டுந்தாம் படும்னு நினைச்சேன், கரெக்டா இருக்குது!!

:-)))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) அழகான பதிவு ஹுசைனம்மா..

செ.சரவணக்குமார் said...

ஒரு சிறுகதை வாசித்த உணர்வு.

அன்பான சொந்தங்கள் கிடைப்பது பெரிய வரம்.

அந்த வகையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்தான் சகோதரி.

செ.சரவணக்குமார் said...

அருமையான நடையில் மிளிர்கிறது உங்கள் எழுத்து.

சிறுகதைகள் எழுத ஆரம்பியுங்கள் ஹுஸைனம்மா.

சிநேகிதன் அக்பர் said...

உறவுகள் நெருக்கமாயிருந்தால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. நன்று ஹுஸைனம்மா.

Starjan (ஸ்டார்ஜன்) said...

///இதற்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? நான் தரும் சின்னச் சின்ன அன்பளிப்புகள்கூட அவர்களின் அன்புக்கு முன் ஒன்றுமேயில்லை!!///

அருமையா சொன்னீங்க ஹூசைனம்மா.. உறவுபந்தம் என்றுமே நம்கைவிட்டு போகாது.. பின்ன சொக்காரவுகளா ஒன்னுக்குள்ளஒண்ணா இருக்கோம்.. லேசுல விட்டுடமுடியாமா..

ராஜவம்சம் said...

பத்து ரூபாய் கடலைமிட்டாயை ஊரில் இருந்து குடுத்துவிட்டார்கள் என்பதர்க்காக 70ரியால் செலவலித்து வாங்கியுள்ளேன் பொருளின் மதிப்பை விட அவர்களின் அன்புக்காக.

Jaleela Kamal said...

அந்த அக்கறா பொடியும் , எல் ஐ சியும் சேம் பின்ச்

அம்பிகா said...

///இதற்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? நான் தரும் சின்னச் சின்ன அன்பளிப்புகள்கூட அவர்களின் அன்புக்கு முன் ஒன்றுமேயில்லை!!///
நிஜம்தான் ஹூஸைனம்மா. அன்பான உறவுகள் முன் மற்றவை ஒன்றுமேயில்லாதவை தான்
நல்ல பகிர்வு

Unknown said...

உறவுகளை விட்டு நாம் தொலைதூரத்தில் இருந்தாலும் அவர்களின் பாசமும்,நேசமும்தான் நம்மை வெளிநாட்டில் கொஞ்சமாவது நிம்மதியாக இருக்கச் செய்கிறது.
எல்லா வகையிலும் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
அழகான பதிவு.

நட்புடன் ஜமால் said...

அருகில் இல்லையென்றாலும் எனையும் மறவாது, உரிய அறிவுரைகளும் தந்து, பலப்பல உதவிகளும் செய்யும் என் அருமை சொந்தங்களாலும், நட்புகளாலும்தான் என் நிம்மதியான வெளிநாட்டு வாழ்வு சாத்தியப்படுகிறது]]

வல்ல ஏகன் அல்லாஹ்வுக்கே நன்றி ...

எம் அப்துல் காதர் said...

எல்லா உறவுகளையும் சொந்தங்களையும் அலைபேசி, மெயில் மூலமாகவே தொடர்பு கொள்கிறோம், அதுவும் ஒரு வகையில் நம்மோடு கட்டிப் போட்ட சொந்தங்கள் மாதிரி ஆகிவிட்டது, அதையும் சொந்தங்கள் பட்டியலில் சேர்த்து குறிப்பிட்டிருக்கலாமோ ஹுசைனம்மா....!

Muruganandan M.K. said...

உங்க பக்க பேச்சுத் தமிழ் கவிதையாக இனிக்கிறது

ஜெயந்தி said...

உங்களைத் தாங்கும் வேர்களாக அவர்கள் உள்ளனர்.

Chitra said...

அருகில் இல்லையென்றாலும் எனையும் மறவாது, உரிய அறிவுரைகளும் தந்து, பலப்பல உதவிகளும் செய்யும் என் அருமை சொந்தங்களாலும், நட்புகளாலும்தான் என் நிம்மதியான வெளிநாட்டு வாழ்வு சாத்தியப்படுகிறது. இதற்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? நான் தரும் சின்னச் சின்ன அன்பளிப்புகள்கூட அவர்களின் அன்புக்கு முன் ஒன்றுமேயில்லை!!

....... It is a blessing! Enjoy..... Praise the Lord!

பனித்துளி சங்கர் said...

///இதற்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? நான் தரும் சின்னச் சின்ன அன்பளிப்புகள்கூட அவர்களின் அன்புக்கு முன் ஒன்றுமேயில்லை!!///


உண்மையான அன்பை விட உயர்ந்த அன்பளிப்புகள் ஒன்றும் இந்த உலகத்தில் இல்லையே !

Unknown said...

உறவுகள் பற்றி பெருமையாக சொன்ன முதல் ஆள் ... நன்றிங்க

ஸ்ரீராம். said...

இதற்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? நான் தரும் சின்னச் சின்ன அன்பளிப்புகள்கூட அவர்களின் அன்புக்கு முன் ஒன்றுமேயில்லை!//

ரொம்ப எதிர்பார்க்காதீங்க .... சின்ன பரிசுகள்தான் இந்த வாட்டி...ன்னு சொல்லாம சொல்றீங்க..அப்படிதானே?!!
சும்மா தமாஷ்...உணர்ந்து எழுதிய நல்ல இடுகை.

செந்தில்குமார் said...

உறவுகள் இல்லாத வாழ்க்கை வேர்கள் இல்லாத மரம் போல

அருமை ஹுஸைனம்மா...

உங்கள் வழக்கு தமிழில் .ம்ம் ..ம்ம்ம்.

கோமதி அரசு said...

அன்பு சகோதரி,உங்கள் பதிவை படித்து விழி ஓரத்தில் கண்ணீர் தளும்பியது.

அருனையான பதிவு.

சொந்தங்கள் வாழ்க!

Prathap Kumar S. said...

//பிரதாப்பு, அந்தப் பத்தி எழுதும்போது பிரதாப் கண்ணுல இதுமட்டுந்தாம் படும்னு நினைச்சேன், கரெக்டா இருக்குது!! //

நீங்கதான் என்னதான் நல்லவிசயங்கள் எழுதனாலும், எங்காச்சும் ஒரு இடத்துலயவாது மாட்டிக்கீறீங்க... இனிமே இப்படி நடக்காம இருக்கு முயற்சி பண்ணுங்க... :))

ஜெய்லானி said...

நா ஏதோ கதை எழுதறீங்களோன்னு படிச்சிகிட்டே வந்தேன் .. ஆனா கடைசி வரி .....

100 % உண்மைதான் ..

அப்துல்மாலிக் said...

நெகிழ்ந்தேன் ஹுஸைனாம்மா

வெளிநாட்டிலேர்ந்து வந்தா மொத பொட்டியின் வெயிட்டைதான் பாப்பாகளாம். இந்த சூழலில் இந்த பதிவு, படித்த பிறகு சொந்தங்களின் மேல் உள்ள அன்பு இன்னும் இறுக்கமானது

அன்புத்தோழன் said...

மாஷா அல்லாஹ்... எல்லாரும் ரொம்ப பாசக்காரவகளா இருக்காங்களே ஹுஸைனம்மா... ரொம்ப சந்தோசமா இருக்கு.... அப்புறம் அடுத்த வாட்டி ஊருக்கு பேசினா, நம்ம சொந்த கார பங்காளிங்கள எல்லாத்தையும் விசாரிச்சதா சொல்லிப்புடுங்க.... ஊருக்கு போறதுக்கு முன்னாடி நமகொரு கடுதாசி போட்ருங்க (ஜி மெயிலில்).... அடுத்த மாசம் முக்கியமான ஒரு விசேஷம் இருக்கு... :-)

SUFFIX said...

நெகிழ்ச்சியாகவும், ஆறுதலாகவும் இருக்கு!

Rithu`s Dad said...

அருமை ஹுஸைனம்மா.. வெளி நாட்டிலிருப்பவர்களனைவருக்கும் இந்த அளவுக்கு சொந்த பந்த கவனிப்பு இல்லை என்றாலும், நீங்கள் சொல்ல வந்த விஷயம் என்னமோ இங்கிருக்கும் எல்லாருக்கும் நடப்பது தான்.. என்னிக்கையில் தான் மாற்றமே தவிர அவர்களின் என்னத்தில் இல்லை.. எல்லோருமே அன்பைப் பொழிபவர்களே..

அப்படி இல்லைனு சொல்ரவங்க ஒன்னு நினைவில் வைத்துக்கொள்ளனும்.. “ நாம் எதை மற்றவர்களுக்கு கொடுக்கிறோமே அதே நமக்கும் மற்றவர்களிடமிருந்து கிடைக்கும்”


என்னுடைய சமீபத்திய ஊர் பயனத்தையும் சொந்தங்களையும் கன் முன் நிறுத்தியுள்ளீர்கள்.. வாழ்க வளமுடன்..

R.Gopi said...

ஹூஸைனம்மா...

என்ன சொல்றதுன்னே தெரியல...

இது போன்ற சொந்தங்கள் நம்மை நலம் விசாரித்து, நம்மை வாழ்த்துவதை எவ்வளவு அழகாக வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள்...

அதற்காக உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...

பரஸ்பர அன்பை பகிர்வதே அவர்களுக்கு நாம் செய்யும் மிக பெரிய கைமாறாக இருக்கும்...

ஹுஸைனம்மா said...

தென்றல் - வாங்க; உங்க வாக்கு பலிக்கட்டும் இறைவன் அருளால். அப்புறம், பிரச்னை பண்ற சொந்தங்களும் இருக்காங்கதான், ஆனா, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லையே...

அமைதிச்சாரல் - வாங்க; அருமையான உறவுகளை மட்டுமே இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்!! நன்றி.

அநன்யா - வாங்கப்பா; சொந்தங்கள், நண்பர்கள்னு யாராவது மனுஷங்க நமக்கு வேண்டியிருக்கத்தான் செய்யுது!! நன்றி!

ஹுஸைனம்மா said...

நாடோடி - வாங்க; ஆமாங்க, அவங்க அன்பா விசாரிக்கும்போது உற்சாகம்தான்!! நன்றி.

க.பாலாசி - வாங்க; மிக்க நன்றி.

இளம் தூயவன் - - வாங்க; மிக்க நன்றி.

தராசு - ஹலோ, நல்லாருக்கேன்!!

ஹுஸைனம்மா said...

பிரதாப் - வாங்க. உங்க ஊர்ல வாங்கற மாதிரி விலைக்கா நிலம் இருக்கு? கொள்ளையிலும் பெருங்கொள்ளை(க்காரங்க!!) விலை!! அதுக்கு இங்க துபாயிலயே வீடு வாங்கிடலாம்போல!!

என்னது, நீங்க இருக்க இடத்துல திருட்டுப் பயம் இருக்குமா? போங்க தம்பி!!

முத்துலட்சுமி அக்கா - வாங்க; மிக்க நன்றி.

சரவணக்குமார் - வாங்க; மிக்க நன்றி பாராட்டுக்கு. சிறுகதை எழுத முயற்சிக்கிறேன், ஊக்கத்திற்கு நன்றி. சொந்தங்கள் எல்லா வகையிலும் இருக்கிறார்கள் என்றாலும், பெரும்பாலானவர்கள் மகிழ்வு தருபவர்களே!!

அக்பர் - வாங்க; நன்றி

ஹுஸைனம்மா said...

ஸ்டார்ஜன் - ஆமாங்க; சரியாச் சொன்னீங்க! சொக்காரவுங்கக்குள்ள இன்னிக்கு அடிச்சுகிட்டாலும் நாளைக்கு சேந்துக்குவாங்களே!!

ராஜவம்சம் - ஆமாங்க, இங்கயும் அப்பிடித்தான்! அவங்க அன்புக்காகவே அலைந்து திரிந்து வாங்கி வர நேரிடும்! நன்றி!

ஜலீலாக்கா - வாங்கக்கா. நன்றிக்கா.

அம்பிகா - வாங்க; நன்றி!

அபுல் பசர் - இறைவன் அருள் எனக்கு அன்பான சொந்தங்களே அதிகம் கிடைத்தது. கண் திருஷ்டிக்காக ஒன்றிரண்டு பேர் ‘அப்படியும்’ உண்டு!! நன்றி!

ஹுஸைனம்மா said...

ஜமால் - மிக உண்மை! எல்லாம் இறைவன் கருணை! நன்றி.

அப்துல்காதர் - அட, ஆமாங்க! ஃபோனையும், இண்டர்நெட்டையும் நம்ம உடம்பொறப்புகள்னுதான் சொல்லணும்!! நன்றி!

டாக்டர் சார் - வாங்க. நாங்க உங்க தமிழை ரசிப்போம், நீங்க எங்க தமிழையா.. சரிதான்!! நன்றிங்க ஐயா!!

ஜெயந்தி - சரியாச் சொன்னீங்க, அவர்கள்தான் வேர்கள்!! நன்றி!!

சித்ரா - ஆமா, இறைவனுக்கு நன்றி!!

ஹுஸைனம்மா said...

பனித்துளி சங்கர் - வாங்க. நன்றிங்க!! (ஆமா, நீங்க இன்னும் அந்த கல்லை தள்ளி முடியலையா? ;-) )

செந்தில் - ம்ம்.. சும்மா குறையே சொல்லிகிட்டிருந்தா? நிறையையும் பாக்கணும்ல! அதான். நன்றி.

ஸ்ரீராம் - ஆஹா, இப்படியும் ஒரு கண்டுபிடிப்பா? நல்ல தமாஷ் சார்! நன்றி!!

செந்தில்குமார் - நன்றிங்க ரொம்ப.

கோமதி அக்கா - வாங்க அக்கா. மிக நெகிழ்ந்தேன்!!

ஹுஸைனம்மா said...

பிரதாப்பு - நான் ஒரு அப்பாவி வெகுளி!! அதான் மாட்டிக்கிறேன்!! :-)))

ஜெய்லானி - வாங்க; இதுவும் நம் கதைதானே!!

அபு அஃப்ஸர் - அந்தக் கதையும் உண்டு ஊருல! ஒரு உறவினர், ஊருக்கு வந்தப்போ, அவரின் சகோதரி வந்து சேர தாமதமாகியதால், மாற்றுத்துணி எடுக்கக்கூட பெட்டியைத் திறக்கத் தடை விதித்துவிட்டார்கள் அவர் வரும்வரை!! :-))

அன்புத்தோழன் - அடுத்த மாசம் விசேஷமா? ஆஹா, சொல்லிருந்தா நான் டிக்கட் போட்டிருக்கமாட்டேனே, அதான் நீங்களே எடுத்துக் குடுத்துடுவீங்களே!! :-)) எல்லாம் இறைவன் நல்லபடியா நடத்தித் தருவான், இன்ஷா அல்லாஹ்!

ஹுஸைனம்மா said...

ஷஃபி - வாங்க, நன்றி!

ரீத்து அப்பா - வாங்க, ரொம்ப நாளாச்சுன்னு நினைச்சேன். ஊருக்குப் போனீங்களா? ஒருவகையில், ‘நாம் கொடுப்பதே கிடைக்கும்’ - சரியேதான்!! நன்றி!!

கோபி - பரஸ்பரம் அன்பைப் பகிர்வது - ஆமாங்க, கரெக்ட்!! நன்றி!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

மிகவும் அருமை ஹூசைனம்மா. அவர்களை இவ்வாறு நினைந்து பார்ப்பதும், தேவையெனில் அவர்களுக்கு உதவுவதுமே கைமாறாகும்..

அபூ கதீஜா said...

அப்டியே எங்கூர்ல பேசுற மாதிரியே பேசுரியா, படிக்கும் போது எனக்கு அப்படியே ஊர் போய் வந்த ஞாபகம் வந்திடுச்சு

அருமையான பதிவு

Karthick Chidambaram said...

உறவுகள் பற்றி நீங்கள் பெருமையாய் சொல்லி உள்ளது. மனதுக்கு இதமாக உள்ளது.உறவுகளை விட நண்பர்கள் உயர்வு என்றுதான் பலரும் நினைகின்றனர். பாபா படம் பார்த்த பொது அதில் ஒரு காட்சியில்
மனிஷா கொய்ரால வீட்டில் உள்ள உறவினர்களை எல்லாம் வெளியேற சொல்லுவார் ரஜினி அப்போது நண்பனை மட்டும் விட்டுவிடுவார்.
அப்போது என் அருகில் அமர்ந்திருந்த நண்பன் - கைதட்டினான். நட்பின் பெருமைக்கு முன்னாள் உறவுகள் ஒன்றுமில்லை என்றான்.

இப்படிதான் பலரும் சொல்லுவர். நீங்கள் உறவுகளை பெருமையாய் சொல்லும்போது மனது இதமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

உங்கள் ஊர் பேச்சு வழக்கில் அருமையான உண்மைகளை பதிந்து இருக்கின்றீர்கள்.

சுந்தரா said...

இது பெரிய வரம் ஹுசைனம்மா...எல்லாருக்கும் இப்படி அமைந்துவிடுவதில்லை. அன்பும் பாசமும் என்றும் நிலைக்க இறையருள் நிறையட்டும்.

CS. Mohan Kumar said...

அருமை!! இந்த பதிவு இப்போது யூத் விகடனின் குட ப்ளாக்ஸ் பகுதியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

athira said...

எங்கே??? நான் உடனேயே பதில் போட்டேனே? இங்கு காணவில்லையே?:(.

enrenrum16 said...

Congratulations Hussainamma (youthful vikatan)!!! Good Postings... Most of the posts resemble the happenings in many of our homes...

//அதாரு அங்கன இருமுற சத்தம் கேக்குது// that's right...so i do call back home when the child is in the next room.
//மடிக்கணிணியை மேய்ந்துகொண்டே என்னவோ சொல்ல, ஏதோ பேசுகிறார் என்று தெரிந்தது, ஆனால் முழுசாக் கேட்கவில்லை; //when i imagined the scene...i cudnt help me laughing...happens at our home too.. when it happens again, will remember ur blog...

let me clear your doubt.. காதுக்கு ஏன் ‘இனிஷியல்’?..coz kathu's father's name is also kathu ;)

SUMAZLA/சுமஜ்லா said...

இறுதி பாரா மனதில் ஒரு நிறைவையும் உறவுகளின் சுவையையும் கொடுக்கிறது.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகான பதிவு.. வாஸ்துவம் தான்... உறவுகள் உன்னதமானவைனு சும்மாவா சொன்னாங்க... கவிதையா இருக்கு உங்க கோர்வை

GEETHA ACHAL said...

ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவங்க தான் நீங்க ஹுஸைனம்மா...எனக்கும் இப்படி கிடைத்தால் கண்டிப்பாக தலையில் வைத்து கொண்டாடமல் இருக்க மாட்டேன்..இங்கே எல்லாம் உல்டாவாக அல்லவா நடக்கின்றது...

ஹுஸைனம்மா said...

திரா - தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்! இங்கே வந்த எல்லா கமெண்டையும் பிரசுரிச்சுட்டேனே? என்ன பிரச்னைன்னு தெரியலையே?

மன்சூர் - நன்றிங்க. பொதுவா முஸ்லிம்கள் பேச்சு வழக்கு இதை ஒத்துதானே இருக்கும்.

கார்த்திக் - உறவுகள் மிக முக்கியம்; சில நட்புகளும் உறவுகள் போல நெருக்கமானவையாக மாறும்போது அவையும் உறவுகளாகவே ஆகிவிடும் இல்லையா?

எல் போர்ட் - நிச்சயமா உதவிக்கொள்ளணும். நன்றி.

ஸாதிகா அக்கா - நன்றிக்கா.

ஹுஸைனம்மா said...

சுந்தரா - நன்றி. எல்லாருக்குமே எல்லா உறவுகளுமே இபப்டி அமைவதுமில்லை இல்லையா?

மோகன்குமார் - வாங்க; நன்றி.

யெஷ்கா - நன்றி. அங்கும் வருகிறேன்.

என்றும் - உங்க கண்டுபிடிப்பு அருமைங்க!! காதுக்கு அப்பா காதுதானா? தெரியாதே!! நன்றி!! ;-)))

சுமஜ்லா - நன்றி; தொடர்ந்து வாங்க.

அப். தங்ஸ். - நன்றிப்பா.

கீதா - வாங்க; எனக்கும் எல்லா உறவுகளும் இப்படி இல்லை என்றாலும், அவர்களைக் கண்டுகொள்வதில்லை!! :-))

goma said...

நல்லகுடும்பம் பல்கலைக்கழகம்...
அங்கே நீங்கள் பல பட்டங்கள் பெற்றிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்

goma said...

நல்லதொரு குடும்பம்,பலகலைக்கழகத்தில் நிறைய டிகிரி வாங்கியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

ஏம்மா எதோ வந்தோமா ஏதோ கிறுக்கினோமா என்று இல்லாமல் குழைய குழைய எழுதி மனதை இறுக்கி பிடிக்கிறீர்கள். இந்தியாவை விட்டு வெகுதூரத்தில் வசித்துக் கொண்டு,சொந்தங்களை இழந்து தவிக்கும் எனக்கு உங்களது இந்த வலைப்பதிவு( எழுத்து) மிகவும் பிடித்து இருக்கிறது
உங்கள் சொந்தவூர் திருநெல்வேலியா?

Avargal Unmaigal said...

ஏம்மா எதோ வந்தோமா ஏதோ கிறுக்கினோமா என்று இல்லாமல் குழைய குழைய எழுதி மனதை இறுக்கி பிடிக்கிறீர்கள். இந்தியாவை விட்டு வெகுதூரத்தில் வசித்துக் கொண்டு,சொந்தங்களை இழந்து தவிக்கும் எனக்கு உங்களது இந்த வலைப்பதிவு( எழுத்து) மிகவும் பிடித்து இருக்கிறது
உங்கள் சொந்தவூர் திருநெல்வேலியா?