Pages

விடைபெறுகிறேன் - 1




 
 
ஹி.. ஹி.. என்னடா, காணாமப் போய் ஒரு மாசம் கழிச்சு ஆற அமர வந்து விடை பெறுகிறேனேன்னு பாக்குறீங்களா? என்ன செய்ய, எவ்வளவு ப்ளான் பண்ணாலும், ஊருக்குப் போற சமயத்துல ஹரிபெரியாகி செய்ய நினைச்சு விட்டுப் போன பல விஷயங்கள்ல இந்த விடைபெறுகிறேன் பதிவும் ஒண்ணு.

வரும்போது சொல்ல விட்டுப்போனா என்ன, போகும்போது மறக்காம சொல்லிட்டுக் கிளம்பிடுவோம்ல!!  என் இனிய தமிழகமே!  என்னுயிர் தமிழ் மக்களே!! உங்களிடமிருந்து தற்போது விடை பெறுகிறேன்!! கூடிய சீக்கிரமே மீண்டும் சந்திப்போம்!! அதுவரை, என் பதிவுகளில் என்னைக் கண்டு ஆறுதல் கொள் தமிழினமே!!

அதென்னா தொடர்கதை மாதிரி 1,2ன்னு நம்பர்னு கேக்குறீங்களா? இது இப்ப ஊருக்கு வந்துட்டுப் போறதுனால விடை பெறுகிற பதிவு. அப்புறம், ஒருவேளை என்னை யாராவது ஏதாவது சொல்லி திட்டிட்டாங்கன்னா, கோவப்பட்டு இன்னொரு விடைபெறுகிறேன் பதிவு போடவேண்டி வரலாம்!! அப்புறம், என்னை வேற யாராவது `உங்கள் சேவை பதிவுலகுக்குத் தேவை`ன்னு கெஞ்சினதும்(!!)  திரும்பி வந்துடுவேன்; அப்புறம்,  அடுத்து ஊருக்குப் போகும்போது, வரும்போது விடைபெறும் பதிவு போடணும். இப்படி நிறைய தேவை இருப்பதால, இப்பவே முன்னெச்சரிக்கையா நம்பர் போட்டுட்டேன்!!

அப்புறம், இந்த ஒரு மாசமா கிட்டத்தட்ட பதிவுலக வனவாசம் இருப்பதனால, இங்க என்ன நடந்தது, நடக்குதுன்னே தெரியாது!! ஏன், என் வீட்டுக்கு வெளியே என்ன நடக்குதுன்னுகூடத் தெரியாத அளவுக்கு பிஸியா இருக்கேன்!! அதனால, யாராவது அப்டேட்ஸ் தாங்க.  தொடர்பதிவுகூட நடக்குதுபோல!!

அப்புறம், பதிவரா இருந்துகிட்டு, பயண அனுபவங்கள் எழுதலன்னா எப்படி? அதுவும், புதுச்சேரி, சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, குற்றாலம்னு ஒரு பத்து பதிவு போடற அளவுக்கு சூறாவளி சுற்றுப்பயணமேல்ல போயிருக்கேன்!! அதனால, கண்டிப்பாப் பயணத் தொடர் உண்டு, கவலைப் படாதீங்க!! (கவலைப்பட்டாலும் பிரயோஜனமில்லை!!)

அமீரகமே...  இதோ வருகிறேன்!! என்னைக் காணாமல் அனலாய்த் தவிக்கிறாயாமே? வந்தவுடன் குளிர்ந்துவிடு!! (அங்க அடிக்கிற வெயில்... கேட்டாலே பயமாருக்கு!! இப்படி ஐஸ் வச்சாலாவது, குறையுதா பாக்கலாம்!! ஹும்... )
 
இவ்வளவு தூரம் வந்துட்டு, பதிவுலக நண்பர்கள் யாரையும் சந்திக்க முடியலை, ஏன் நான்கைந்து பேரைத் தவிர யாரிடமும் தொலைபேசக்கூட முடியவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்குது. இருந்தாலும், பதிவுகளில் நாம் எப்போது சந்தித்துக் கொண்டுதானே இருக்கிறோம் என்று திருப்திபட்டுக் கொண்டேன். (வேறுவழி?) ஆனால், ஒருமுறையும் இல்லாதபடி, இம்முறை என் கல்லூரி நண்பர்கள் சிலரைச் சந்தித்தது எனக்குப் பெரிய மனநிறைவைத் தந்தது.  சில உறவினர்களை ஆற, அமர சந்திக்கவும் முடிந்தது, இறைவன் அருளால்.

சனிக்கிழமை அமீரகம் வந்து, செட்டிலானதும் அடுத்த பதிவு, இன்ஷா அல்லாஹ்!!

 
 

Post Comment

36 comments:

athira said...

ஐ நான் தான் பெஸ்ட்டு.... ஊரிலிருந்து கொண்டுவந்ததெல்லாம் எனக்குத்தான்:).

ராஜவம்சம் said...

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மத்துல்லாஹ்.

வெல்கம் பேக்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நான் நினைச்சுட்டே இருந்தேன்.. காணோமேன்னு..

தலைப்ப இப்படியா மொட்டையா போட்டு எங்களையெல்லாம் பயமுறுத்துறது? கண்டிக்கிறேன் :)))

செந்தில்குமார் said...

ஹுஸைனம்மா.....

சீக்கிரம் வாங்க வாங்கை வந்ததையெல்லாம் பங்கு போட்டு கொடுத்திடனும் ஆமம்

ஹைஷ்126 said...

பத்திரமா பாத்து போய்ட்டு வாங்க :))

வாழ்க வளமுடன்

பி.கு: அமீரகம் வந்ததும் பயண கட்டுரைகளை தொடரவும்.

GEETHA ACHAL said...

வந்துவிட்டிங்களா...நானும் உங்களை தேடினேன்...சீக்கிரம் அடுத்த பதிவினை போடுங்க...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க..வாங்க. அல்வா கொண்டு வந்திருக்கீங்களா?? :-)

ஜெய்லானி said...

ஐ.....அப்ப எனக்கு...?

pudugaithendral said...

welcome back

Prathap Kumar S. said...

அந்த கடலைஉருண்டையை மட்டும் எனக்கு கொடுத்திருங்க... :))

Prathap Kumar S. said...

வாங்க...வாங்க...வாங்க....ஒரு வார்த்தை ஜொல்லிருந்தா...
ஆளுயுர பள்க்ஸ் பேனரே வச்சு அசத்திருப்பேன்

டிரங்குபொட்டியோட சாவியை கொடுக்காம போய்ட்டீங்கேள....:))

Prathap Kumar S. said...

ஊருல ஒருமாசமா மழையே இல்லன்னு கேள்விப்படடேன்... இப்பல்ல தெரியுது... என்ன காரணனம்னு...உங்களை யாரு நாகர்கோவில்கெல்லாம் போகச்சொன்னது...:))

Prathap Kumar S. said...

விடைபெறுகிறேன்னு தலைப்பு பார்த்ததும் நான் வேறமாதிரி கணக்குப்போட்டு ரொம்ப ஹேப்பியாயிடடேன்... இப்பல்ல தெரியுது.... இது தமிழ்நாட்டு மக்கள் சந்தோசுப்படவேண்டிய விசயம்னு...

சௌந்தர் said...

கவலைப் படாதீங்க!! (கவலைப்பட்டாலும் பிரயோஜனமில்லை!!)//

அது தான் எங்களுக்கு தெரியுமே..வாங்க வாங்க தொடர் பதிவு தானே கவலை வேண்டாம் நிறைய பேர் ஆடு எங்க மாட்டும் தேடி கொண்டு இருக்கிறார்கள்....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

விடை பெறுகிறேன் - 1ற்குச் சொன்ன காரணங்கள் :)

கண்ணா.. said...

ஊருக்கு போயிருந்தீங்களா...... நல்லாருந்துச்சா பயணங்கள்.....

வெல்கம் பேக் டூ பதிவுலகம்

நீங்க என்ன வரும் போது விடை பெறுகிறேன்னு பதிவு போடுறீங்க.......

Chitra said...

நெல்லை மணத்தோடு, சீக்கிரம் வாங்க...

நாடோடி said...

ந‌ம்ம‌ ஊர் ப‌க்க‌மும் போயிட்டு வ‌ந்தீங்க‌ளா?... சீக்கிர‌ம் அனுப‌வ‌ தொட‌ரை எழுதுங்க‌!!!!!!!...

☀நான் ஆதவன்☀ said...

வெல்கம் பேக் :)))

மழையில ஜாலியா இருந்துட்டா வர்ரீங்க.. வாங்க வாங்க... இங்க வெயில் கொளுத்தது :))

Thamiz Priyan said...

வெல்கம் பேக்!

ஹுஸைனம்மா said...

பதிலளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

அதிரா: ஆசை, தோசை, அப்பள வடை!!

எல் போர்ட்: இப்படியா பயப்படுறது? கிராமத்து பொண்ணுங்க `கோவில்பட்டி வீரலட்சுமி` மாதிரி தெகிரியமா இருக்க வேணாம்? :-))

கண்ணா, இது தமிழகத்துகிட்டருந்து விடைபெறுகிற பதிவு!!

பிரதாப்பு, நா இஞ்ச நாரோயில்ல இருக்கும்போதுதான் மழ அடிச்சு பேஞ்சுது. நீங்க வந்திருக்கும்போது எப்டிருந்துச்சுன்னு புலம்புனீங்களே, மறந்துடுச்சா?

அமைதிச்சாரல்: ஒரு தின்னவேலிக்காரி அல்வா கொடுக்காம இருப்பாளா? அதெல்லாம் ரெடி! நேர்ல வந்து வாங்கிக்கணும். லேட்டாச்சுனா `வேற` அல்வாதான்!!

ராஜவம்சம்: அலைக்கும் ஸலாம்

செந்தில்குமார்,
ஹைஷ் சார்,
கீதா ஆச்சல்,
ஜெய்லானி,
புதுகைத் தென்றல்,
சௌந்தர் (புது வரவா? நன்றி.)
செந்தில்வேலன் (காரணங்கள் - பதிவுலகு சொல்லித் தந்ததுதான்!)
ஆதவன்,
சித்ரா,
நாடோடி,
தமிழ்ப்பிரியன்

எல்லாருக்கும் மீண்டும் நன்றி!!

நட்புடன் ஜமால் said...

fe amanillah

ரெங்கு பொட்டி நிறைய தூசி, சீக்கிரம் தட்டுங்க தூசிய

வல்லிசிம்ஹன் said...

ஊருக்கு வந்ததும் தெரியாம,போறதும் தெரியாம நாந்தான் என்ன செய்திட்டிருந்தேன்:)
பதிவுலகத்துக்குத் தலையை நீட்டினதுக்கு நன்றி. சீக்க்கிரம் எழுத ஆரம்பிங்க:) அமீரகம் குளிர்ந்திருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Riyas said...

வந்தாச்சா வந்தாச்சா...

Riyas said...

வந்தாச்சா வந்தாச்சா...

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

ஒரு மாத காலமாக காணாமல் போன ஹுஸைனம்மா 07.08.2010 அன்று இந்தியாவில் இருந்து திரும்புகிறார். பதிவுலக ஜாம்பவான்களே உஷார் அப்படின்னு கலீஜ் டைம்ஸ், கல்ஃப் நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுக்க சொல்லியாச்சு.

மறக்காம பயணக் கட்டுரையை எழுதுங்க.

"விடைபெறுகிறேன் - 1"

தலைப்பை படிச்சிட்டு கொஞ்ச நேரம் சந்தோசமாயிருந்தேன். பதிவ முழுசா படிச்சிட்டு அப்புறம் நொந்துட்டேன்.

அப்துல்மாலிக் said...

வாங்கோ.. கொஞ்சம் வெயில் தணியுதானு பாப்போம்..

பீர் | Peer said...

அட.. தமிழ்நாட்டுக்கு வந்திருந்தீங்களா? ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா? கடா வெட்டியிருக்கலாம்.. ;(

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாங்க...நாங்க ரெடி!

ஸாதிகா said...

ஹுசைனம்மா இங்கிருந்து கிளம்பறீங்களா?நல்லபடியாக பொய்ய்விட்டு வாருங்கள்.அடுத்த முறை இங்கு பதிவர் சந்திப்பு நிகழ்த்திவிடலாம்.சப்தமில்லாமல் இங்கும் ஒரு பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது.பயணத்தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

R.Gopi said...

ஹூசைனம்மா....

வாங்க....வாங்க.....

பெரிய அளவில் சுற்றுப்பயணம் போல இருக்கு ஊர்ல....

வாங்க...வாங்க.... எவ்ளோ விஷயம் இருக்கு, பகிருவதற்கு....

உங்களோட பயணக்கட்டுரை படிக்க இப்போதிலிருந்தே வெயிட்டிங்....

சிநேகிதன் அக்பர் said...

//இவ்வளவு தூரம் வந்துட்டு, பதிவுலக நண்பர்கள் யாரையும் சந்திக்க முடியலை,//

நல்ல வேளை தப்பிச்சிங்க. இல்லைன்னா இதுலயே பாதி நேரம் கழிஞ்சிருக்கும்.

சீக்கிரம் பயணத்தொடர் எழுதுங்க. உங்க புண்ணியத்துல ஊர் நிலவரத்தை தெரிஞ்சிக்கிறோம்.

Asiya Omar said...

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

'பரிவை' சே.குமார் said...

ஹுஸைனம்மா.....

சீக்கிரம் வாங்க .

ஸ்ரீராம். said...

ஊர்ப் பயணம் முடிந்து திரும்பியாச்சா?

கோமதி அரசு said...

வாங்க ,சகோதரி தாமிரபரணி இரு கரை தொட்டு ஓடுகிறாளாமே பார்த்தீர்களா?

ஊரில் எல்லோரும் நலமா?

உங்கள் வரவில் அமீரகம் நிச்சியம் குளிர்ந்து விடும்.