Pages

நகர்வலம் - 1




 
இந்தியா வந்த பயணக் குறிப்புகள் எழுதுறேன்னு சொல்லிருந்தேன்லியா, இதோ: (வாக்குத் தவறக்கூடாதுல்லா!)

சிங்காரச் சென்னை:

##  கிட்டத்தட்ட எட்டு வருஷங்கள் கழிச்சு சென்னைக்கு வந்தேன். நிறைய மாற்றங்கள்!! புதுப்புது கண்ணாடி வேய்ந்த கட்டிடங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் அபரிமித வளர்ச்சியைக் காட்டுகின்றன. 

##  சென்னையில எங்குநோக்கினும் காணக்கிடைப்பது ரெண்டு விஷயங்கள்: மேம்பாலங்களும், பைக்குகளும்!!

##  ”சைக்கிள் கேப்பில ஆட்டோ நுழைவது” எல்லாம் பழைய மொழி; புதுசு, “காற்றுபுகா இடத்துலயும் ரெண்டு பைக் நுழையும்!!” அதுலயும் “தூணிலயும் இருப்பான், துரும்புலயும் இருப்பான்”கிற மாதிரி, எதிர்பார்க்கவே முடியாத சைடுலருந்து ஒரு பைக் வந்து உங்களத் திணறடிக்கலாம்.

##  பைக் ஓட்டுநர்கள் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தினர் ஹெல்மெட் போட்டுருப்பதைப் பாத்து ரொம்ப சந்தோஷமாருந்துச்சு!!

##  ஆனா, அதுல 80 சதவிகிதத்தினர் ஹெல்மெட்டின் ஸ்ட்ராப்பை மாட்டாமல் விட்டிருந்ததப் பாத்து ...

##  நந்தனம் ஷெரட்டான் நுழைவாயிலில், காருக்கு பாம் டிடெக்டர், ஆளுக்கு மெட்டல் டிடெக்டர், மொபைல், பர்ஸ், பெல்ட் உட்பட எல்லா பொருட்களுக்கும் ஸ்கேன்னர் என்று ஏர்போர்ட் ரேஞ்சில் செக்யூரிட்டி சோதனைகள்!! (திருநெல்வேலியில் ஆரெம்கேவி யிலயும் இது போல சோதனைகள்!!)

##  சங்கீதாவில் சாப்பிட்டுட்டு, ஒரு மில்க் ஷேக் குடிச்சோம். பில்லைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது, (லிமிடெட்) மீல்ஸ் 60 ரூபாய், மில்க் ஷேக் 90 ரூபாய்!! தமிழ்நாட்டுல அரிசி பருப்பு ரொம்ப சீப் போல!!

##  டிராஃபிக் ஜாம் - துபாய், அபுதாபியெல்லாம் தோத்துடும். புதுச்சேரியிலருந்து சென்னை நுழையிற புறநகர்ப்பகுதிகள்லயே  கடும்நெரிசல் ஆரம்பிடுச்சு!! இத்தனை மேம்பாலங்கள் இருந்துமே, இவ்ளோ நெரிசல்னா....

##  சென்னை மக்களைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபம் இன்னும் அதிகமாகுது; தமிழ்நாட்டுல செட்டில் ஆகறப்போ, சென்னையில் மட்டும் செட்டில் ஆகிவிடக்கூடாதுன்னு வழக்கம்போல வேண்டிகிட்டேன்!!


 புதுச்சேரி:

##   கேரளா போல பசுமை, காலநிலை உடைய நகரம்.

## ஆரோவில் - அமைதியான, பசுமையான சூழ்நிலை, இயற்கை முறை உணவு,  சூரிய மின்சாரம் என்று எல்லாமே மனதைக் கவருகிறது.

## ஆரோவில் வளாகத்தில் உள்ள பெரிய ஆலமரத்தின் விழுதுகள், தனியே ஒரு மரம் போல உறுதியாக வியக்கவைக்கின்றன. (ஆனாலும் அடையாறு ஆலமரம்தான்..)

##  நகர் முழுவதும் வித விதமான மதுபானக் கடைகள் ... லிக்கர், விஸ்கி, பிராண்டி, ஒயின்.. இன்னும் என்னென்னவோ... இதுக்கெல்லாம் என்ன வித்தியாசம் என்று பெரியவன் கேட்டான். “ஏண்டா என்னைப் பாத்தா எப்படித் தெரியுது?” ன்னு கேட்டேன்.  இதுல ஒரு “லிக்கர் ஹோல்சேல் ஷாப்” வேற.. இதுக்குமா ஹோல்சேல்?!!

##   ”பொட்டானிக்கல் கார்டன்” என்று ஒரு பூங்கா இருக்குது. ரொம்ப ஆர்வத்தோட போனோம். உள்ளே போனால், ஓங்கி உயர்ந்த ஒரு அடர்ந்த காட்டுக்குள் போன ஃபீலிங். ஆனால் பராமரிப்பு என்பதும் இல்லை; மேற்பார்வையும் இல்லை என்பது அங்கங்கே வழியில் “கிடப்பவர்”களாலும், கும்பல்களாக இருந்தவர்களாலும் தெரிந்தது. போன சுருக்கில் வெளியே வந்துவிட்டோம். யாரும் போய்டாதீங்க!!

## ”ஸண்டே மார்க்கெட்” - பிளாட்பாரக் கடைகளில் பேரம்பேசி வாங்கும் அனுபவம் பல வருடங்களுக்குப் பின் கிடைத்தது. நிறையப் புத்தகக் கடைகளும் இருந்தன; ஆசையாப் போய்ப் பாத்தா, எல்லாமே மெகா சைஸ் பொறியியல், மருத்துவப் புத்தகங்கள். நம்ம ஏரியா இல்லை!!
 
 
 

Post Comment

52 comments:

Menaga Sathia said...

ஆஹா நம்ம ஊர் புதுச்சேரி பத்தியும் எழுதிருக்கிங்க..

முன்பெல்லாம் பொட்டானிக்கல் கார்டன் ரொம்ப நல்லாயிருக்கும்...ஆனா இப்போ பராமரிப்பு இல்லாம காடு மாத்ரி ஆகிடுச்சு நானே அந்த இடம் போய் பல வருஷம் ஆகிடுச்சு...

Prathap Kumar S. said...

நாட்டு மக்கள் எப்படி வாழ்க்கிறார்கள் என்று காண தாங்கள் நகர்வலம் சென்றது மாறுவேடத்திலா... ???
ஏன்னா எந்த நியுஸ்பேப்பர்லயும், டிவி நியுஸ்லயும் வரவே இல்லையே அதான் கேட்டேன்...

Prathap Kumar S. said...

அப்ப தமிழ்நாடு டெவலப் ஆயிட்டு வருதுன்னு சொல்றீங்க... சென்னைல தாத்தாவைப்பார்த்து
ஒரு நன்றி சொல்லிட்டு வந்திருக்கலாமே.....

செ.சரவணக்குமார் said...

நகர்வலம் நல்லாருக்குங்க.

நட்புடன் ஜமால் said...

சிங்கார சென்னையில் நான் அதிகம் கண்டது காசு கேட்பவர்களும், த.ப.வும் தான்

நட்புடன் ஜமால் said...

ஹெல்மெட்டின் ஸ்ட்ராப்பை மாட்டாமல் விட்டிருந்ததப் பாத்து ...]]


ட்ராஃபிக் இன்ஸ்பெக்ட்டரா வேலை செய்தீர்களா :P

ஹுஸைனம்மா said...

ஜமால், அதென்ன த.ப.?

நட்புடன் ஜமால் said...

ரொம்ப நல்ல வேண்டுதல்

நட்புடன் ஜமால் said...

த.ப = தரை படை என்று சொல்வார்கள், கொடுக்கப்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு ப்ளாட்ஃபாரத்தில் வாழ்(?)பவர்கள்

ஹுஸைனம்மா said...

நான் சென்னைல ஒரே நாள்தான் இருந்ததால என் கண்ல யாரும் படலை. அதுவும் எக்மோர் கூவம் பக்கம் நிறைய பிளாட்பாரவாசிகள் உண்டு. இம்முறை அங்கே யாருமே இல்லை; அப்பகுதியைச் சுத்தப்படுத்தி வைத்திருந்தார்கள்.

Anonymous said...

//சென்னை மக்களைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபம் இன்னும் அதிகமாகுது; தமிழ்நாட்டுல செட்டில் ஆகறப்போ, சென்னையில் மட்டும் செட்டில் ஆகிவிடக்கூடாதுன்னு வழக்கம்போல வேண்டிகிட்டேன்!!
//

:) கோவைக்கு வாங்க :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா கோவை பக்கத்துல செட்டில் ஆகுங்க.. :)

துளசி கோபால் said...

சென்னையில் வீட்டுவாடகை கொடுத்தோ இல்லை வீடு ஒன்னு வாங்கியோ இருக்கமுடியாது என்பது உண்மை.

அப்படி ஏகத்துக்கும் விலைவாசி ஏறிக்கிடக்கு.

இந்த நிலையில் அந்த த.ப. எல்லாம் ஒன்னும் சொல்லப்பிடாது. ஹவுஸ் ஓனர்ஸ் அவுங்க.

Deepa said...

சென்னையைப் பற்றிச் சொன்னதெல்லாம் உண்மை!
ஆனா புதுச்சேரியிலயும் வெயில் கொளுத்தி எடுக்குதாம் இப்பல்லாம்.

//இதுக்கெல்லாம் என்ன வித்தியாசம் என்று பெரியவன் கேட்டான். “ஏண்டா என்னைப் பாத்தா எப்படித் தெரியுது?” ன்னு கேட்டேன். //

:)))

GEETHA ACHAL said...

//”சைக்கிள் கேப்பில ஆட்டோ நுழைவது” எல்லாம் பழைய மொழி; புதுசு, “காற்றுபுகா இடத்துலயும் ரெண்டு பைக் நுழையும்!!” அதுலயும் “தூணிலயும் இருப்பான், துரும்புலயும் இருப்பான்”கிற மாதிரி, எதிர்பார்க்கவே முடியாத சைடுலருந்து ஒரு பைக் வந்து உங்களத் திணறடிக்கலாம்.//
அது தான் எங்கள் சிங்கார சென்னையாக்கும்....

// சென்னை மக்களைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபம் இன்னும் அதிகமாகுது; தமிழ்நாட்டுல செட்டில் ஆகறப்போ, சென்னையில் மட்டும் செட்டில் ஆகிவிடக்கூடாதுன்னு வழக்கம்போல வேண்டிகிட்டேன்!! //
இது எல்லாம் ரொம்ப ஒவர் ஹுஸைனம்மா...

சென்னையில் செட்டில் ஆவது என்றால் சும்மாவா என்னா....

ரிஷபன் said...

//சங்கீதாவில் சாப்பிட்டுட்டு, ஒரு மில்க் ஷேக் குடிச்சோம். பில்லைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது, (லிமிடெட்) மீல்ஸ் 60 ரூபாய், மில்க் ஷேக் 90 ரூபாய்!! தமிழ்நாட்டுல அரிசி பருப்பு ரொம்ப சீப் போல!!//
என்னத்தை சொல்ல..

ஜெயந்த் கிருஷ்ணா said...

## ஆனா, அதுல 80 சதவிகிதத்தினர் ஹெல்மெட்டின் ஸ்ட்ராப்பை மாட்டாமல் விட்டிருந்ததப் பாத்து ...

//

இது போல சில விசயங்கள் கண்டும் காணாம போகணும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

## சென்னை மக்களைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபம் இன்னும் அதிகமாகுது; தமிழ்நாட்டுல செட்டில் ஆகறப்போ, சென்னையில் மட்டும் செட்டில் ஆகிவிடக்கூடாதுன்னு வழக்கம்போல வேண்டிகிட்டேன்!!

//

இப்படி சொன்னா எப்படிங்க... சென்னைல வாழ பழகிக்கிட்டவன் செவ்வாய் கிரகத்தில கூட வாழலாம்

(யப்பா நான் இன்னும் சென்னை போனதில்ல)

மனோ சாமிநாதன் said...

நகர்வலங்கள் பற்றி படிக்க சுவாரஸ்யமாக இருந்தது ஹுஸைனம்மா! சென்னை இன்னும் அதிகமான புழுதிப்படலமாகத்தான் மாறி வருகிறது. நானும் சென்னை போயிருந்தேன். இதே அனுபவங்கள் தான். கிளம்பும்போது ஒரே சந்தோஷம்!!

ஜெய்லானி said...

நகர் வலம்ன்னா ராத்திரி மாறுவேடத்துலதானே சுத்தனும் நீங்க பகல்ல சுத்துனா டிராப்பிக்காதான் இருக்கும்

தூயவனின் அடிமை said...

அருமையாக உள்ளது தொடருங்கள்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உங்க நக்கல்ஸ் கமெண்ட்களோட நகர்வலம் ஜூப்பர்..

//கோவைக்கு வாங்க :)//

ஏன் அங்க வந்துபாத்து பரிதாபப்படனுமா?? :))

ஸாதிகா said...

//சென்னை மக்களைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபம் இன்னும் அதிகமாகுது; தமிழ்நாட்டுல செட்டில் ஆகறப்போ, சென்னையில் மட்டும் செட்டில் ஆகிவிடக்கூடாதுன்னு வழக்கம்போல வேண்டிகிட்டேன்!!//நெனைச்சேன்..ஹுசைனம்மா சென்னை வர்ராங்க..இப்படி ஒரு வார்த்தை அவங்களிடம் இருந்து வராமல் போகாதுன்னு நெனைச்சேன்

ஸாதிகா said...

த.ப=தரைப்படை நல்ல விளக்கமாக இருக்கே!

kavisiva said...

நகர்வலம் நல்லாயிருக்குங்கோ. உங்க பையன் கேட்ட கேள்வி... அதுவும் உங்களைப்பார்த்து.... ஹி ஹி

KarthigaVasudevan said...

நல்லாருக்குங்க பயணக்குறிப்புகள் ;

சென்னைல வீடு வாங்கறது கஷ்டமான வேலை தான். அதை விட எங்க சொந்தக்காரர் ஒருத்தர் வழக்கமா ஒரு வார்த்தையை சொல்லி அடிக்கடி பீதி கிளப்பி விடுவார்.

சென்னை இன்னும் 50 வருசத்துல கடலுக்குள்ள போயிடும்,பார்த்துட்டே இருங்கம்பார். சற்றேறக் குறைய இது நிஜமாக வாய்ப்பு இருக்குமோ !

அப்போ அங்க வீடு வாங்கினவங்க கதி! (சரியான பொறாமை பிடிச்ச மனுஷன்னு நினைச்சு மனசை தேத்திக்குவோம் :)))

கோமதி அரசு said...

நகர்வலம் அருமை சகோதரி.

அமைதி வேண்டுமென்றால் எங்க ஊர் பக்கம் வாங்க.

ராம்ஜி_யாஹூ said...

where r the photos

நாடோடி said...

ந‌க‌ர்வ‌ல‌த்தில் முத‌ல் நாள் சொந்த‌ ஊரை ப‌ற்றி சொல்லுவீங‌க‌னு பார்த்தா?.. இப்ப‌டி சென்னையும், புதுவையும் ப‌ற்றி சொல்லியிருக்கீங்க‌.. :))))))

Unknown said...

நகர்வலம் அழகாக இருக்கு.. நீங்கள் பார்த்தது பாதி சென்னை தான் என்று நினைக்கிறேன்.....

தூயவனின் அடிமை said...

நகர்வலம் தொடரட்டும்.

முகுந்த்; Amma said...

//சைக்கிள் கேப்பில ஆட்டோ நுழைவது” எல்லாம் பழைய மொழி; புதுசு, “காற்றுபுகா இடத்துலயும் ரெண்டு பைக் நுழையும்!!” அதுலயும் “தூணிலயும் இருப்பான், துரும்புலயும் இருப்பான்”கிற மாதிரி, எதிர்பார்க்கவே முடியாத சைடுலருந்து ஒரு பைக் வந்து உங்களத் திணறடிக்கலாம்.//

கரெக்டா சொன்னீங்க. சின்ன இடைவெளி இருந்தா கூட அங்க ஒரு ஆட்டொ நிக்குது.

Thenammai Lakshmanan said...

சென்னை மக்களைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபம் இன்னும் அதிகமாகுது; தமிழ்நாட்டுல செட்டில் ஆகறப்போ, சென்னையில் மட்டும் செட்டில் ஆகிவிடக்கூடாதுன்னு வழக்கம்போல வேண்டிகிட்டேன்!!
// நல்ல வேளையாப் போச்சு ,, நாம இருக்குறது சென்னைதான் அம்மிணி,, விட முடியலையே..

Chitra said...

## சங்கீதாவில் சாப்பிட்டுட்டு, ஒரு மில்க் ஷேக் குடிச்சோம். பில்லைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது, (லிமிடெட்) மீல்ஸ் 60 ரூபாய், மில்க் ஷேக் 90 ரூபாய்!! தமிழ்நாட்டுல அரிசி பருப்பு ரொம்ப சீப் போல!!


......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... என்னங்க கொடுமை இது!

Muniappan Pakkangal said...

Helmet strap maataamal,airport maathiri security checking,chennaiyil kudiyerakkoodaathu-Puduchery patri nalla thahaval-nice Hussainamma.

DREAMER said...

நகர்வலம் அருமைங்க..!

-
DREAMER

☀நான் ஆதவன்☀ said...

இந்த தடவை சென்னை போனப்ப எனக்கு தோணனதும் கிட்ட தட்ட இதேதான். இங்க வந்து செட்டலாகி எப்படி வாழ்க்கையை ஓட்ட போறோம்னு கவலை :( எப்படியும் வந்து ஒரு வருசமாவது ஆகும்...சென்னையில கலக்க :)

pudugaithendral said...

தமிழ்நாட்டுல செட்டில் ஆகறப்போ, சென்னையில் மட்டும் செட்டில் ஆகிவிடக்கூடாதுன்னு வழக்கம்போல வேண்டிகிட்டேன்!! //

same blodd. nemba santhosham :))

pudugaithendral said...

flyovers create more traffic james and makes the place most conjusted. :((

"உழவன்" "Uzhavan" said...

// சென்னையில் மட்டும் செட்டில் ஆகிவிடக்கூடாதுன்னு வழக்கம்போல வேண்டிகிட்டேன்//

எங்க நிலைமை புரிஞ்சதா :-)

ஹைஷ்126 said...

//தமிழ்நாட்டுல அரிசி பருப்பு ரொம்ப சீப் போல!!// பின்ன என்னங்க துபாய் ஷேக் கை போய் தமிழ்நாட்டு அரிசி பருப்பு கூட ஒப்பிட்டு பார்க்கறீங்களே:)))

//இதுக்கெல்லாம் என்ன வித்தியாசம் என்று பெரியவன் கேட்டான். “ஏண்டா என்னைப் பாத்தா எப்படித் தெரியுது?” ன்னு கேட்டேன்.// இது அங்க பூஸால வந்த வினையின் தொடர்தான்:)))

//இதுல ஒரு “லிக்கர் ஹோல்சேல் ஷாப்” வேற.. இதுக்குமா ஹோல்சேல்?!!//

நீங்க சரியா கவனிக்கவில்லை போல் இருக்கு, புதுசேரியில் மட்டும் அல்ல தமிழ் நாட்டிலும் ஹொல்சேல் மட்டுமதான், ரிடெயில் ரொம்ப கம்மி.

காரணம்: எல்லாம் தண்ணி போட்ட பின் தகராறு செய்து எதையாவது உடைத்துவிடுவார்கள் என எல்லா கடைகளிலும் இரும்பு கம்பி (Grills)போட்டு ஒரு சின்ன ஹோல் (Hole) பேங்கில் பணம் கொடுக்க வைத்து இருப்பாங்களே அதுபோல் ஹோல் வழியாதான் சேல் நடக்கும்:)))

ஸ்ரீராம். said...

சென்னையில் ஒரே நாள்தானா,,,, அதுதான் சுருக்கமா எழுதிட்டீங்க,,,! ஃபோட்டோஸ் கூட ஒண்ணும் போடலையே....

ஹுஸைனம்மா said...

மேனகா, நீங்க புதுச்சேரியா? பொட்டானிக்கல் கார்டன் ரொம்ப ஆசையாப் போய் ஏமாந்துட்டேன்.

பிரதாப் - வாங்க; மாறுவேஷத்துல போக நான் என்ன கோமாளியா? தாத்தாவை நான் பாக்கணுமா?? என்னா கொலைவெறி உங்களுக்கு??

சரவணக்குமார் - நன்றி.

ஜமால் - ட்ராஃபிக் இன்ஸ்பெக்டரா இருந்தாத்தான் இதெல்லாம் கவனிக்கணுமா? எப்பவும் ரொம்பக் கவனமா இருப்போமில்ல, அதான் இதெல்லாம் கண்ணுல படுது.

ஹுஸைனம்மா said...

சின்ன அம்மிணிக்கா - அழைப்பிற்கு நன்றி. கோவையும்தானே தொழில் நகரம், அங்க நெரிசல் இருக்காதா? :-))

முத்தக்கா - நன்றிக்கா. திருநெல்வேலியே அதுக்குப் பரவால்லை!!

துளசி டீச்சர் - உண்மைதான், அவங்க சாமர்த்தியம் நமக்கு வராது!!

தீபா - வாங்க, நன்றி.

ஹுஸைனம்மா said...

கீதா ஆச்சல் - நிஜமா ஓவர் இல்லை கீதா; சென்னைன்னாலே எனக்கு என்னவோ ஒரு பயம் ஆகிப்போச்சு, அதான்.

ரிஷபன் சார் - வாங்க, நன்றி.

வெறும்பய - காணாததுபோலத்தான் வந்தேன்; ஆனாலும் வருத்தமா இருக்குது.

சென்னையும் வேணாம்; செவ்வாயும் வேணாம்!!

மனோக்கா - நன்றிக்கா.

ஜெய்லானி - ராத்திரில சுத்தமுடியுற ஊரா சென்னை?

ஹுஸைனம்மா said...

தூயவன் - நன்றி.

எல் போர்ட் - நன்றிப்பா; ஒருவேளை அதுக்குத்தான் கோவைக்குக் கூப்ப்டுறாங்களோ? ஆமா, நீங்களும் அந்தப்பக்கம்தானே?

ஸாதிகாக்கா - ஹி.. ஹி.. உங்களுக்கு என்ன்னைத் தெரியாதாக்கா?

கவிசிவா - ஆமாப்பா, கவுண்டமணி மாதிரி “என்னைப் பாத்து ஏண்டா கேட்டே?”ன்னு புலம்புனேன்!!

கார்த்திகா - நன்றி. ஆமாங்க, அப்பப்ப அப்படியும் பீதி கிளம்புது.

கோமதிக்கா - நன்றிக்கா; நீங்க எந்த ஊர்க்கா?

ஹுஸைனம்மா said...

ராம்ஜி யாஹூ - ஃபோட்டோவெல்லாம் எடுக்கவுமில்லை; புதுசா என்னத்த இருக்கு ஃபோட்டோ புடிக்க? வருகைக்கு நன்றி.

நாடோடி - சென்னையும், புதுவையும் புதுசில்லியா, அதான் அது முதல்ல!! நம்ம ஊரும் வரும் அடுத்த வலத்துல!!

சிநேகிதி - ஆமாங்க, பாத்தது பாதிகூடக் கிடையாது, அதுக்கே இப்படி...

முகுந்த் அம்மா - ஆட்டோ நான் ரொம்பப் பாக்கலை; பைக்தான் எங்கப் பாத்தாலும்!!

ஹுஸைனம்மா said...

தேனக்கா - இந்த ஊர்ல இருந்தாலும் எப்படிக்கா கவிதை எழுத முடியுது உங்களால? :-))

சித்ரா - அதே, என்னக் கொடுமை இது!!

டாக்டர் சார் - வாங்க, நன்றி.

ட்ரீமர் - நன்றிங்க.

ஆதவன் - ஸேம் பிளட்!! இன்னும் ஒரு வருஷமா -அதுக்குள்ள இன்னும் எப்படி ஆகுமோ?

ஹுஸைனம்மா said...

புதுகைத் தென்றல் - நிறையப் பேர் என்னப்போலவெ இப்படியொரு முடிவோட இருக்கீங்க போல!!

உழவன் - நல்லாவே புரியுது!! ரோட்டில வண்டியோட்டுறதே உழவோட்டுற மாதிரித்தான் மெதுவா இருக்கு!!

ஹைஷ் சார் - (துபாய்) ஷேக் - (தமிழ்நாட்டு) அரிசி, பருப்பு .. ஹா.. ஹா.. சூப்பர்!!

whole sale ஐயும் Hole sale ஆக்கிட்டீங்களே !! உங்க ஊர் பத்தி நீங்கச் சொன்னாச் சரியாத்தான் இருக்கும்!!

ஸ்ரீராம் சார் - ஒருநாளுக்கே ஐயோடான்னு இருக்கு!! ஃபோட்டோ ஒண்ணும் விசேஷமா இல்லை, அதான் போடல. நன்றி.

Jaleela Kamal said...

//நந்தனம் ஷெரட்டான் நுழைவாயிலில், காருக்கு பாம் டிடெக்டர், ஆளுக்கு மெட்டல் டிடெக்டர், மொபைல், பர்ஸ், பெல்ட் உட்பட எல்லா பொருட்களுக்கும் ஸ்கேன்னர் என்று ஏர்போர்ட் ரேஞ்சில் செக்யூரிட்டி சோதனைகள்!! (//

சென்னையில் மட்டும் இல்ல நாங்க டூர் போயிருந்தோம் எல்லா ஹோட்ட்டலில் இப்படி தான் . ஏர்போட் செக்கிங்கே பரவாயில்லை என்று அப்ப தோனுச்சு.

Jaleela Kamal said...

சிங்கார சென்னையில் த.ப மக்க்கள் அதிகம் தான்.ஆனால் எல்லா நாடுக்ளிலும் இப்படி தான்

ஆனால் நல்ல இடங்களும் உண்டு.

அவரர்ருக்கு அவரவர் ஊர் சொர்க்கம்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் ரவுண்டு அப்... எங்க ஊரு பக்கம் போகலயா மேடம்... (தமிழகத்தின் குளு மணாலி கோவை... ஹி ஹி ஹி). யாராவது ஊர் அப்டேட்ஸ் சொல்லுங்கப்பா...