தலைப்பைப் பாத்தே புரிஞ்சிருப்பீங்க என் நிலைமையை!! இப்ப நல்லா (பதிவு எழுதுற அளவுக்குத்) தேறிட்டேன். பசங்களுக்குப் பெரிசா உடல்நலம் பாதிக்காதவரை சந்தோஷம்!!
சின்னவனுக்கு 2 முறை காய்ச்சல் வந்து, டான்ஸில்ஸ் ஆபரேஷன் பண்ணியே ஆகணும்னு இங்க சொன்ன மாதிரியே அங்கயும் மருத்துவர்கள் சொல்லிட்டாங்க. ஆனாலும், மாற்று மருத்துவ முறை முயற்சி செய்து பாக்கலாம்னு, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துகிட்டிருக்கோம். ஏற்கனவே பயனடைஞ்சவங்க இருந்தீங்கன்னா சொல்லுங்க. கூடுதல் நம்பிக்கை வரும்.
இந்த முறை ஓடோமாஸ் புண்ணியத்துல கொசுக்கடியிலருந்தும் நல்லா தப்பிச்சுகிட்டோம், . டிப்ஸ் தந்து காப்பாத்துனது என் வாப்பா. பின்ன, வீட்டுக்குள்ள குட் நைட், ஆல் அவுட்னு வச்சு கதவடைச்சுகிட்டு தப்பிச்சுக்கலாம். வெளியே போகும்போது, முக்கியமா ரெயில்வே ஸ்டேஷன்லயும், ரயில்லயும் என்ன செய்ய முடியும்? ஓடொமாஸே துணை!!
இந்தியா போக முன்னாடி, சீக்கிரம் இந்தியாவில செட்டில் ஆகிறதுக்குண்டான வழிகளைப் பாக்கணும்னு நினைச்சிகிட்டுப் போனேன். இப்போ, இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமேன்னு தோணுது. வேறென்ன, வழக்கம்போல சுத்தம், சுகாதாரம்தான். அப்ப இங்க இருக்க நாங்கள்லாம் மனுசங்க இல்லையான்னு கேக்கக்கூடாது. என்கிட்ட பதிலில்ல. ஏன்னா, இருவத்தஞ்சு வருஷம் அங்கதான் நானும் இருந்தேன்.
இன்னொரு காரணம், விலைவாசி!! சென்னை அடையாறில தோழி வாங்கின நடுத்தரமான 3 அறை அடுக்குமாடி வீடு ஒண்ணேகால் கோடி ஆச்சாம்!! மூச்சு நின்னுடுச்சு ஒரு செகண்ட்!! ”புறநகர்ல கொஞ்சம் சீப்பா கிடைக்கும்; ஆனா, கணவர் ஐரோப்பாவில் இருப்பதால், பாதுகாப்பு கருதி இங்க வாங்கினேன்”னு சொல்றா.
இன்னொரு ஷாக், பள்ளி கட்டணங்கள் மற்றும் கடுமையான பாடவேளைகள். நாகர்கோவிலில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர (நன்கொடை உட்பட) ஒரு வருடக் கட்டணம் ரூ. 80,000!! இதை நான் அதிர்ச்சியோடு ஒருவரிடம் சொல்ல, அவரின் உறவினரோ தனது மகளைச் சென்னையில் மிகப் பிரபலமான பள்ளியில் எல்.கே.ஜி. சேர்க்க நன்கொடை (மட்டும்) ஒரு லட்சம் கொடுத்தாராம்!! நான் மயங்கி விழாத குறைதான்!!
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் முழுவதும் வகுப்பு நடந்துள்ளது. அப்பத்தானே சீக்கிரம் நவம்பரிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களைத் தொடங்க முடியும்!!
பதினொன்றாம் வகுப்பில் பாட நேரம் எப்படி தெரியுமா? காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை!! நெசமாத்தாங்க!! 6-8 am & 5-7 pm 12ம் வகுப்பு பாடங்களும், 9-4 ல் 11ம் வகுப்பு பாடங்களும் நடத்தப்படுமாம். கேட்டுக் கொண்டிருந்த எனக்கே மூளை குழம்பியது. படிக்கும் பிள்ளைகள் என்னாவார்களோ!!
என் பையனை இப்படிக் கொடுமைக்கு ஆளாக்கணுமானு தோணுது!! ஆனா, ’பொறுப்பான பெற்றோரா’ அப்படிப் படிக்க வைக்கலியேன்னு குற்ற உணர்வும் வருது!!
பல பள்ளிகளில், இம்மாதிரிக் கொடுமையெல்லாம் இல்லை. ஆனால், அம்மாணவர்கள் பிரைவேட்டாக டியூஷன் போவதால் அவர்களுக்கும் இந்நேர முறைதான்!! டியூஷன் ஃபீஸ் இப்பவெல்லாம் வருஷ முழுமைக்கும் முதல்லயே கட்டிடணுமாம்!! 9-ம் வகுப்பிலேயே டியூஷன் சேர்ந்து, 10-ம் வகுப்புக்கான முழு கட்டணத்தையும் கட்டினால், ரூ. 2000 தள்ளுபடி உண்டு!!
அரைமணிநேர தொலைவில் உள்ள கல்லூரியின் பேருந்து கட்டணம் ரூ. 3000/; ஐந்து பேர் மட்டும் பள்ளி செல்லும் ஆட்டோவுக்குக் கட்டணம் ரூ. 1000/. ஒரு மாசத்துக்கு மட்டும்ங்க!!
இப்படி பலப்பல ஷாக்குகளைக் கண்டு, கேட்டு வந்ததினாலத்தான் ஜுரம் வந்துடுச்சோ என்னவோ!!
|
Tweet | |||
38 comments:
எல்லாரும் லொக்கு லொக்குன்னதான்னு இருமுவாங்க...நிங்க என்ன லொக் லொக்ன இருமுறீங்க.
ஊர்ல விலைவாசி தாறுமாறா எகிறுது... அதான் நான் முடிவு பண்ணிட்டேன். இங்கேருந்து போகும்போது ஒரு அம்பானியாத்தான் போகனும்னு... :))
:( பசங்க மூளையில என்னென்னத்த திணிக்க போறாங்களோ. மாநகராட்சி பள்ளி கூடம் தான் ரொம்ப சரியான தேர்வு. மக்களுக்கு புரியாதே!
சொல்ல மறந்துட்டேன்.. வெல்கம் பேக் :))
சொல்ல மறந்துட்டேன்.. வெல்கம் பேக் :))
nan ihtagaya palligalil en pennai serpathu illai endru mudivu seythu vitten
take care of health
ஹுஸைனம்மா,
எல்லா பள்ளியும் இப்பிடி இல்லை. ஒரு சில பள்ளிகள் இப்படி இருக்கறதுக்கு முழுக்க முழுக்க பெற்றோர்தான் காரணம்னு நான் சொல்லுவேன்.
ஒரு ஏழு வயசு பொட்டப் புள்ள சரியா வாய் பேச பழகி, தன் சாப்பாட்டை தானே சாப்படறதுக்கு பழகறதுக்கு முன்னாடியே பெற்றோர்கள் அந்த குழந்தை அடுத்த லதா மங்கேஷ்கரா பாடணும், சானியா மிர்ஸாவா விளையாடணும், பரத நாட்டிய அரங்கேற்றம் நடத்தணும், அடுத்த ரவி வர்மாவா வரையணும் இன்னும் என்னென்னெல்லாம் பண்ண முடியுமோ அத்தனையும் ஏழு அல்லது எட்டு வயசு குழந்தை பண்ணனும். மாநிலத்துலயே முதல் மதிப்பெண் எடுக்கணும்.
இதுக்கெல்லாம் எத்தனை செலவாகும்னு ஸ்கூல்ல கேக்கறாங்க, அவங்களும் வந்துருச்சுடா ஒரு பலி ஆடு, ஆரம்பிங்கடானு ஒரு கூட்டல் கழித்தல் போட்டு, வருஷத்துக்கு ரெண்டு லட்சம்னு சொன்னா, நீங்க மூணா வாங்கிக்கோ, ஆனா என் பொண்ணுதான் எல்லாத்துலயும் ஃபர்ஸ்டா இருக்கணும்னு சொல்றாங்க. உடனே ஸ்கூலுக்கு கொண்டாட்டம்தான்.
ஆக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது செலவிடறாங்களான்னா அது கிடையாது. எல்லாவற்றிலும் ஒரு அவுட்சோர்சிங் மனப் பான்மை தான் வந்திருக்கு. ஏன்னா, பணம் பெருத்திருச்சு. நாம எல்லாம் சிலேட்டுல எழுதி, தரையில உக்கார்ந்து படிச்சதுனால நமக்கு இது ஒரு ஆச்சரியமா இருக்கு.
என் தங்கமணி இப்படிப்பட்ட ஒரு ஸ்கூல்ல இருக்கறதுனால இவ்வளவும் சொல்றேன்.
நான் ப்ளஸ் டூ படிக்கும் போது
காலை 6-8 மேத்ஸ் டியூசன்
பின் 9-5 ஸ்கூல்
6-8 கெமிஸ்ட்ரி/பிசிக்ஸ் (அல்டர்னேட் டேஸ்)
8-10 பயாலஜி...
வெறுத்தே போச்சு அந்த வருசம் எப்படா முடியும்னு...
ஆனா ஸ்கூல் ஃபீஸ் வருடக்கட்டணம் 75 ரூபாய் மட்டும்தான்... இப்போ பீஸை கேட்டாலே பயமா இருக்கு...
ரோமில் ரோமானியனா இரு என்பதை போல இருந்துக்க வேண்டியது தான். வேற வழி இல்லை ஹுசைனம்மா!
பள்ளி கட்டணம் எல்லாம் நீங்க சொல்வடு மாதிரி தான் உயர்தர பள்ளி கூடத்தில். ஆனா பாருங்க +2 முடிச்சு எல்லாமே அதே புண்ணாக்கு பி ஈ தான் சேர்ரானுங்க. அங்க போன பின்னே எல்லாம் ஒரே குட்டை தான். ஆனா கட்டணம் இந்த அளவு எல்லாம் இல்லை நிச்சயமாக.
நீங்க சொல்லும் உயர் தர பள்ளியில் படித்த எத்தனை பேர் சேருகின்றனரோ அதை விட அதிகமாக கார்ப்பரேஷன், முனிசிபல் பள்ளியில் இருந்தும் சேர்ராங்க அண்ணா யுனிவர்சிடியிலேயும் மற்றும் ரீஜினல் இஞினியரிங்லயும். ஆக இப்படி பசங்களை கொடுமைப்படுத்தி படிக்க வைப்பது அத்த்னை உத்தமமா படலை எனக்கு.
என் மாமா பொண்ணு MSc M.Ed, Mphil கெமிஸ்ட்ரி படிச்சுட்டு டீச்சரா இருந்தா. பின்ன தன் பொண்ணு சி பி எஸ் சி பள்ளியிலே சேர்த்து விட்டு அவளுக்கு(1 வது) சொல்லி குடுக்கவே தன் வேலையை விட்டுட்டு சொல்லி தர்ரா. பாட திட்டத்தை பார்த்தேன். அழுகையே வந்துடுச்சு. ஆனா அத்தனையும் பள்ளியிலே சொல்லி தருவதில்லையாம். சிலபஸ் மட்டும் தந்துடுவாங்களாம். என்ன கொடுமை இதல்லாம்!
கார்பரேஷன் பள்ளியே கண் கண்ட தெய்வம்!
welcome back. neengalum india poyittu neraya intha maathiri parthuttu vanthirupeengannu ninaikiren. once again welcome back.
நம்ம ஊர்லேயும் பணம் புடுங்க ஆரம்பிச்சாச்சா?... வாழ்க "கல்வித் தொழில்"
ஊருக்குப்போனோமா எஞ்சாய் செஞ்சமான்னு இல்லாம இப்படி எல்லாம் யோசிச்சா பாருங்க உடம்புக்கு வந்திடிச்சு!!!
அபி அப்பா சொல்லியிருப்பது போல ஜோதில குதிக்கணும் ஐக்கியமாகிடணும். (ஆனா நான் கொஞ்சம் லக்கி, பசங்களுக்கு நல்ல ஸ்கூல் கிடைச்சிருக்கு)
வெல்கம் பேக்.
//’பொறுப்பான பெற்றோரா’//
வேணாம் தோழர் ..வேணாம் ...
பொறுப்பில்லாத பெற்றோராகவே நீங்க இருங்க ..ப்ளீஸ் ..
அப்புறம் ...
வெல்கம் பேக் தோழர் !
எங்க கூட பயணிச்ச ஒரு ரயில் பயணி சொன்னார் கோவைக்கருகில் அவருடைய பையனை சேர்த்திருக்கும் ஒரு பள்ளியின் நேர அமைப்புகளையும் பாடத்திட்டத்தையும். அதுல அவருக்கு பெருமையோ பெருமை.. சுண்டல் ஜூஸ் இதெல்லாம் நடுவில் தருவாங்களாம்..யோகா உண்டாம்.. நாங்க கூட தில்லியிலேயே இருந்துடலாம்ன்னு தான் யோசிக்கிறோம்..:)))
இருமிக்கிட்டே வந்தாலும் குமுறிட்டீங்க..
என்ன பண்றது... சான்சே இல்லை , ஜோதில ஐக்கியமாக வேண்டியது தான் ... நாகர்கோவில் நல்ல ஊருன்னு கேள்வி, ஆனால் இந்த ஸ்பெஷல் வகுப்பு, நுழைவு தேர்வு ...அதெல்லாம் சென்னை மாதிரி ஆகாது ... ஆக மொத்தம் , எங்களை எல்லாம் ஊர் பக்கம் பாக்க கூட செய்யாதேன்னு உள்குத்தோட எழுதிய உங்கள் பதிவுக்கு நன்றி .
வந்தாச்சா - வாங்க வாங்க (எங்கன்னு கேட்கப்படாது)
ட்ரெங்கு பெட்டிய ரொம்ப தட்டியிருப்பிய அதான் லொக் லொக்
உங்களுக்கு கிடைச்ச ஷாக் கொஞ்சம் தான், இன்னும் இருக்கு நிறைய
வாங்க ஹுஸைனம்மா..
விலைவாசி உயர்வும் கல்விக் கொள்ளையும் பயமுறுத்துகின்றன.
// நாஞ்சில் பிரதாப் said...
ஊர்ல விலைவாசி தாறுமாறா எகிறுது... அதான் நான் முடிவு பண்ணிட்டேன். இங்கேருந்து போகும்போது ஒரு அம்பானியாத்தான் போகனும்னு... :))//
நாஞ்சிலு...
சீக்கிரம் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.
நீங்க சொல்கிற கணக்கு எல்லாம் காண்வென்ட் ஸ்கூலுக்குன்னு நினைக்கிறேன்.
அப்போ அரசு கொண்டு வந்த வரையறை என்னாச்சு?
//இங்கேருந்து போகும்போது ஒரு அம்பானியாத்தான் போகனும்னு... :))//
'அ'னா 'வ'னாவா மாற வாய்பிருக்கு பிரதாப் :)
வெல்கம் பேக்!.. :)
Welcome back!!!
இரவு நான் ஒரு கனவு கண்டேன், ஜலீலாக்கா வந்து “வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்” என ஒரு ஹெடிங் போட்டா, அதுக்கு முதலாவதாக ஆசியா “நல்வரவு” எனப் பதிவு போட்டிருந்தா.
ஆனால் அதுக்குப் பதிலா நீங்க வந்திருக்கிறீங்க.
உங்கட பதிவு பார்த்து, நானும் மயங்கி விழப்போய், கதவைப் பிடித்து நிமிர்ந்திட்டேன்.... இந்த ஸ்பீட்டிலே போனால்..... பணம் குறைவானோரின் நிலைமை என்னவாகும்....
welcome back,
//இப்படி பலப்பல ஷாக்குகளைக் கண்டு, கேட்டு வந்ததினாலத்தான் ஜுரம் வந்துடுச்சோ என்னவோ// ஹுசைனம்மா..இதுக்கே இப்படி சொன்னா?
// சிநேகிதன் அக்பர் said...
//இங்கேருந்து போகும்போது ஒரு அம்பானியாத்தான் போகனும்னு... :))//
'அ'னா 'வ'னாவா மாற வாய்பிருக்கு பிரதாப் :)// ஹாஆஆஆஆஆ..அக்பர் சார் கரீக்டா சொல்லிடாரு.
கல்வியை விற்று
காலத்தை ஊட்டி
பந்தய குதிரைகளை
தயார்படுதிரார்கள்
பாவம் மானுடம் அழிந்த
அறிவியல் எதற்க்கு
மனிதன் விலங்கினத்திலும்
மோசம் இதுவே அவ சாபம்
:)
உடல் நிலை இப்போ நல்லா ஆயிடுச்சா?
Take Care. :)
get well soon... :)
உங்க பதிவுகளை ரீடரில் படிக்க கூடாதா? இப்படி restrict பண்ணிட்டீங்களே ;(
Welcome back Husainamma :)
நீங்கள் ஆச்சர்யத்தோடும் அதிர்ச்சியோடும் சொல்லி உள்ள பள்ளி விவரங்கள் இங்கு பழகிப் போன விஷயங்கள்.
//இப்படி பலப்பல ஷாக்குகளைக் கண்டு, கேட்டு வந்ததினாலத்தான் ஜுரம் வந்துடுச்சோ என்னவோ!!//
இப்ப இதை கேட்டு எனக்கு வர மாதிரி இருக்கு..
பிரதாப், அதுசரி, நான் என்ன ’வாழ்வே மாயம்’ ஸ்டேஜிலா இருக்கேன், அப்படி இழுத்து இழுத்து இருமுவதற்கு? இதெல்லாம் ஒரு ’ஸிம்பாலிக் ஜெஸ்சர்’, அவ்வளவுதான்!!
ஆதவன், ஒரு சில மாநகராட்சிப் பள்ளிகள் சிறப்பாத்தான் இருக்கு; ஆனால் எல்லா அரசுப் பள்ளிகளும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டிருந்தா, நிச்சயம் என் சாய்ஸ் அதுதான். ஆனா, பெரும்பானமை அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ‘அரசு அலுவலர்’ என்ற மிதப்பில்தான் இருக்காங்களே தவிர, மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்துவோர் மிகச்சிலரே!!
எல்.கே, நன்றிங்க வரவேற்புக்கும், அக்கறைக்கும்!! உங்க முடிவு நல்லதே!!
தராசு, உங்க ஆதங்கம் நியாயமே. பெற்றோர்களும் பெரும்பாலும் குற்றவாளிகளே. ஆனால், என்னைப் போல அந்த மாதிரியெல்லாம் ஆசைப்படாமல், நல்ல கல்வி மட்டும் கற்றுக் கொடுக்கணும்னா கூட நியாமான கட்டணத்துல ஒரு பள்ளி கிடைக்காது போல!!
உங்க தங்கமணி வேலை செய்ற பள்ளியிலத்தான் உங்க பிள்ளைகளும் படிக்கிறாங்களா? ஃபீஸ்ல டிஸ்கவுண்ட் உண்டா?
கண்ணா, வாங்க. நான் ஒண்ணே ஒண்ணுதான் (மேத்ஸ்) போனேன், அதுக்கே நேரம் பத்தலை. உங்களால எப்படி முடிஞ்சுதுன்னு ஆச்சர்யமா இருக்கு.
வருகை தந்து கருத்து தெரிவித்த எல்லாருக்கும் நன்றிகள். விளக்கமா பதிலளிக்க நினைச்சு லேட்டாகிடுச்சு. மன்னிக்கவும்.
மீண்டும் நன்றிகள்.
தள்ளுபடியே 2000 மா !!!!! சரிதான்
லொக்கு லொக்கு ஊறில்லிருந்து பிடித்த் லொக்கு இன்னும் விடல
வாங்க் வாங்க நீங்க வந்த அன்று தான் நானும் வந்தேன்.
ஊரில் எல்லாம் நலமா? அம்மா அப்பா எப்படி இருக்காங்க/
எப்பா சாமி... கேக்கவே பயமாத்தான் இருக்குங்க... சுத்தம் சுகாதாரம் கூட கொஞ்ச நாளுல அட்ஜஸ்ட் ஆய்டுவோம்... பழகின நம்ம ஊரு தானே... ஆனா இந்த பீஸ் ஸ்கூல் மேட்டர் எல்லாம் கேக்கவே பயமா இருக்கு... பாவம் பசங்க... ட்ரிப் நல்லா என்ஜாய் பண்ணினீங்களா
India becomes developed country.But UAE becomes under developed ( I stayed in Dubai for more than 15 yrs)(
Ippo India Vanduten life is really good
Post a Comment