Pages

கேள்வியின் நாயகன்




  
 

பெரியவனின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லியே ஓய்ந்து போயிருந்த நிலையில், அடுத்தவன் பிறந்து, ஒன்றரை வயதாகியும் திருத்தமான பேச்சு வரவில்லை. பெரியவன் ஒரு வயதிலெல்லாம் அழகாகப் பேசினானே, இவன் ஏன் இன்னும் பேசவில்லை என்று கேட்பவர்களிடம், அவசரமென்ன, இவனும் சேந்து கேள்வி கேட்க ஆரம்பிச்சான்னா பதில் சொல்லிமுடியாது, மெதுவாப் பேசட்டும் என்று சொல்லுவேன்.

இவனும் அவனைப் போல் ஒருவன்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இரண்டு, இரண்டரை வயதில், ஒருநாள் பகலில் படுக்கையில் மூச்சா போய்விட, ஏண்டா போனாய் என்று கேட்ட என்னிடம் நானில்லை என்றான். வீட்டில் வேறு யாருமில்லாத நேரத்தில் நானில்லை என்றால் திகிலாயிருக்குமா இல்லையா? அவனை இழுத்துக் கொண்டுபோய் படுக்கை ஈரத்தைக் காண்பித்து, அப்ப இது என்ன என்று கேட்க, அவன் என்னை ஆழமாகப் (!) பார்த்து, ”நான் என் ஜட்டியில்தான் போனேன்” என்றான்!! இவன் அவனைப் போலில்லை, இவன்கிட்ட கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும் என்று புரிந்துகொண்டேன்.

அவன் அப்பாவின் பிறந்தநாளன்றே இவனும் பிறந்திருந்தாலும், வளர்க்கப் போவது நான்தானே, அதனால் அந்த எடக்குமடக்கெல்லாம் வராமப் பாத்துக்கலாம்னு நம்ம்ம்ம்பியிருந்தேன். ஆனா வளர, வளர, அப்பாவை முகச்சாயலில், உடல்வாகில், பாவனைகளில் மட்டுமல்லாமல், குணத்திலும் அப்படியே  உரித்துவைத்திருந்தான்!!

எல்.கே.ஜி. சேர்ந்து கொஞ்ச நாளிலேயே அவனுக்கு எழுதுவது அலுத்துப் போனது. ஹோம் வொர்க் செய்ய சலித்த அவனிடம், படிக்கலைன்னா மாடுமேய்க்கத்தான் போகணும் என்ற அரதப் பழசான அறிவுரையைச் சொல்லி மிரட்டிக் கொண்டிருந்தேன். கோபத்துடன் முறைத்துக்கொண்டே போய்விட்டான். சிறிதுநேரம் கழித்து வந்து கேட்டான், ”மாடெல்லாம் வீட்டுக்குள்ளதானே வச்சிருப்ப?”!!  மிரட்டிய நான்தான் அரண்டுபோய்விட்டேன்!!

பிறகு, But என்பது ”பட்”ன்னா, Put -ஐ ஏன் புட்னு சொல்லணும், Elephantல ஏன் f போடாம ph-போட்டிருக்கு, Iron-ஐ ஏன் ஐரன்னு சொல்லலை போன்ற வழக்கமான கேள்விகளையும் தாண்டி வந்தோம்.

ரொம்ப நாள் பதில் சொல்லத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த கேள்வி, “என்னை ஏன் முதலில் பெற்றெடுக்காமல் அவனைப் பெற்றாய்?” என்பது. என்னென்னவோ சொல்லியும் திருப்தியடையாதவன், “நீ முதல் பிள்ளையாய் இருந்தால் இன்னும் உன்னை என் மடியில் போட்டுக் கொஞ்ச முடியுமா? கடைக்குட்டியாய் இருப்பதால்தானே இன்னும் நீ செல்லம்” என்ற பதிலில் அடங்கினான்.

”நீ ஏன் இரண்டுமே boy-ஆ பெத்தே? ஒண்ணு boy, ஒண்ணு girlனு டிஃபரண்டா பெத்திருக்கலாம்ல?” என்று அடுத்த கணை தொடுத்தான். “நான் கேர்ள்தான் வேணும்னு அல்லாட்ட கேட்டேன். ஆனா உன் அண்ணந்தான் தம்பி வேணும்னு கேட்டான். அவன் குட் பாயா இருந்ததால அவன் கேட்டதையே கொடுத்துட்டான்”என்றேன். ”அப்ப நீ குட் கேர்ள் இல்லையா?” என்று பூமராங் அனுப்ப, அவன் அப்பா வாய்பொத்திச் சிரித்தார். ”சின்ன பிள்ளைங்க ஆசையா கேக்கிறதத்தானே எல்லாரும் கொடுப்பாங்க, அதான்” என்று சமாளித்தேன்.

பொதுவாகப் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் வயதுக்கேற்றவாறு ஓரளவு புரிய வைக்க முயற்சிப்பேன். ஆனால் “எங்க மீரா டீச்சர் பொட்டு வச்சிருக்காங்க. அழகாருக்கு. நீ ஏம்மா வைக்கலை?” என்று எல். கே.ஜி. படிக்கும்போது கேட்டபோது திகைத்துத்தான் போனேன். ”எங்க வீட்ல யாருமே வைக்கலை. அதான் நானும் வைக்கலை.” என்றதற்கு, “இப்ப வையேன்” என்றவனிடம், “முந்தியே வச்சுப் பாத்தேன். எனக்கு அது நல்லால்ல.” என்று சமாளித்த பின்னும், பவுடர் கொண்டு வைத்துப் பார்த்தவனுக்கு அது சரியே என்று தோன்றியிருக்க வேண்டும். பிறகு சொல்வதில்லை!!


பிள்ளை வளர்ந்து வருகிறான் என்பதைத் தெரிவிக்கும் விதமாக, யூ.கே.ஜி.யில் ஃபிரண்ட்ஸ்களை இஸ்லாமிக் க்ளாஸ் வருபவர்கள், மாரல் ஸ்டடீஸ் கிளாஸ் போகிறவர்கள் என்று அறிமுகப்படுத்தியவன், இப்போ முஸ்லிம்ஸ், ஹிண்டூஸ், கிரிஸ்டியன்ஸ் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறான். போன தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கணும் என்று ஆசைப் பட்டவனிடம் “அதெல்லாம் ஊர்லதான் முடியும். இங்கே வெடி வெடிக்கக்கூடாதுன்னு போலீஸ் சொல்லியிருக்காங்க” என்றதும், அப்ப தீபாவளியன்னிக்கு மட்டும் ஊருக்குப் போயிட்டு வரலாம் என்று அரிக்க ஆரம்பித்து விட்டான்!! உங்க வாப்பாட்ட ஒரு ஃபிளைட் வாங்கச் சொல்லு; அப்புறம் நினைச்சப்பெல்லாம் போயிட்டு வரலாம்னு அங்க தள்ளிவிட்டேன். அது நடக்காத காரியமென்று தெரிந்தோ என்னவோ கேட்கவேயில்லை.

பிறகு சில்ட்ரன்ஸ் டேக்கு புது உடை வாங்கி கேட்டது (என்னோட டே அது!! அன்னிக்கு நீ எனக்கு விஷ் பண்ணனும்), கிறிஸ்மஸ்க்கு வீட்டுக்கு சாண்டா க்ளாஸ் வருவாரா, கிஃப்ட் தருவாரா, சாண்டா என்றால் யார், கிறிஸ்மஸ் அன்று சர்ச்சுக்குப் போகலாமா என்று கேள்வி மேல் கேள்விகள்.


அவனுக்கு எவ்வளவு கோபம் வந்தாலும், கட்டிப்பிடித்து, ஒரு முத்தம்  கொடுத்தால் போதும், ஐஸாக உருகி, நாம் சொல்லும் வேலையைச் செய்து விடுவான். இவ்வளவு எளிதில் வழிக்கு கொண்டுவர முடிவது மகிழ்ச்சியாக இருந்தாலும், கொஞ்சம் கவலையும் தருகிறது.

இப்பவெல்லாம் கௌ எப்படி  மில்க் மேக் பண்ணும்,  ட்ரெயின் எப்படி, எங்க செய்வாங்க, சீஸ் எப்படி செய்யணும், ஃப்ளைட்ல எப்படி சாப்பாடு கிடைக்குது, அபுதாபில நாம இருக்கும்போது, நாகர்கோவில் எப்படி நம்ம சொந்த ஊராகும் என்று கேள்விகள்  கேட்டுக்கொண்டேயிருக்கும் அவனுக்குப் பதில் சொல்லிக்கொண்டேருக்கிறேன்.

ஒரே ஒரு சந்தேகம்தான் எனக்கு; அவங்கப்பாவிடம் இந்த மாதிரி கேள்விகள் எதுவுமே கேட்பதில்லை, என்னிடம் மட்டும்தான் கேட்கிறான். அவனுக்கு புரிஞ்சிருக்குதா...?? அல்லது அவனுக்கும் தெரிஞ்சுடுச்சா...?
 
 

Post Comment

40 comments:

Prathap Kumar S. said...

உங்க பையன் அப்பா மாதிரின்னு தெரியுது.... இவ்ளோ புத்திசாலியா இருக்காரு..:))

Ahamed irshad said...

கேள்விக்கு விடைதேடும் குழந்தை(கள்) அறிவாளிகள்.. எங்கயோ படித்தது.

அஜீம்பாஷா said...

fine, i miss my kids too much, whenever i go vacation or when they come here to renew the iqama, they ask lot of questions i used the golden chances to explain them everything. now they are 7(girl) & 5 (boy).Even if i am not with them they used to tell my wife that abba told like this. In my last vacation my daughter & son told that dont go to saudi stay here we will open an office for you.

Anonymous said...

அம்மாடி, பய படு புத்திசாலி. படிச்ச நானே திணறிப்போயிட்டேன். உங்க பாடு :)

அம்பிகா said...

\\ ”மாடெல்லாம் வீட்டுக்குள்ளதானே வச்சிருப்ப?”!! மிரட்டிய நான்தான் அரண்டுபோய்விட்டேன்!!\\
இது நல்லாயிருக்கு. சந்தோஷபடுங்க ஹூஸைனம்மா! பையன் ரொம்ப புத்திசாலி.

நாடோடி said...

த‌லைப்புகேத்த‌ ஆளாய்தான் இருக்கிறான்... ந‌ல்லா வ‌ருவான்..

கண்ணா.. said...

// அவன் குட் பாயா இருந்ததால அவன் கேட்டதையே கொடுத்துட்டான்”என்றேன். ”அப்ப நீ குட் கேர்ள் இல்லையா?”//

சிரிச்சு முடியலை :))))

தூயவனின் அடிமை said...

இந்த தருணத்தில் பிள்ளைகளுக்கு, மிக பொறுமையாக பதில் சொல்ல கடமை பட்டுள்ளோம்.
நாம் அன்பாக சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், நம் பிள்ளையின் எதிர்காலத்திற்கு உரிய வழிகாட்டி.

அப்பாதுரை said...

ரசித்தேன்

Katz said...

//என்னிடம் மட்டும்தான் கேட்கிறான். அவனுக்கு புரிஞ்சிருக்குதா...?? அல்லது அவனுக்கும் தெரிஞ்சுடுச்சா...?//

laughed a lot...

நட்புடன் ஜமால் said...

கடைசி கேள்வி சிரி சிரின்னு சிரிச்சேன்

சுந்தரா said...

புத்திசாலிப் புள்ள :)

ரசித்துச் சிரிச்சேன் ஹுசைனம்மா.

வல்லிசிம்ஹன் said...

நல்ல நாயகன் உங்க பையன்.:)

அவங்க அப்பாவும் கேள்வி கேட்பாரோ;)
தயாரா இருங்கப்பா. பதிவைப் படிச்சுட்டு அவரும் ஆரம்பிக்கப் போறாரு!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பயன் உங்களை விட புத்திசாலின்னு படிக்கும் போதே தெரியுது...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\சின்ன அம்மிணி said...

அம்மாடி, பய படு புத்திசாலி. படிச்ச நானே திணறிப்போயிட்டேன். உங்க பாடு :)//

அதே அதே யம்மாடி :)

ப.கந்தசாமி said...

நல்லா இருக்கு.

சாந்தி மாரியப்பன் said...

யம்மாடி.. அசந்துட்டேம்ப்பா. கடைசிக்கேள்வி சூப்பரு. பதிலு யாருகிட்டே கிடைக்குதோ அவங்ககிட்டேதான் கேள்வியும் கேக்கமுடியும் :-))))))

ஜெய்லானி said...

//ஒரே ஒரு சந்தேகம்தான் எனக்கு; / என்னிடம் மட்டும்தான் கேட்கிறான். அவனுக்கு புரிஞ்சிருக்குதா...?? அல்லது அவனுக்கும் தெரிஞ்சுடுச்சா...?//


ரெண்டாவது..ஹா...ஹா..

செ.சரவணக்குமார் said...

பையன் செம்ம சூட்டிகையா இருக்கார். சுத்திப் போடுங்க செல்லத்துக்கு.

//ரொம்ப நாள் பதில் சொல்லத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த கேள்வி, “என்னை ஏன் முதலில் பெற்றெடுக்காமல் அவனைப் பெற்றாய்?” என்பது//

பல கேள்விகளை ரசித்து சிரித்தேன்.

ஸ்ரீராம். said...

கேள்விகளை அலட்சியப் படுத்தாமல் அலுக்காமல் பதில் சொல்வது நம் கடமை! கடமை என்னும்போதே தெரியுமே, அதை நாம் சரியாய்ச் செய்வதில்லை!

Angel said...

enakkum indha doubt romba varshama irukku ,why these tiny tots are always targeting their moms .en magalum ippadithan aval appavai oru kelvi kooda ketpadhillai.ella pillaigalum thelivaga irukkirargal.

Mahi said...

:):)
உங்க மகன் படுபுத்திசாலியா இருக்கார் ஹூஸைன்அம்மா! பல கேள்விகளும்,நீங்களே வாயை குடுத்து, மாட்டிகிட்டதும் காமெடியா இருக்கு.

நல்ல பதிவு!

Unknown said...

பையன் கேட்ட கேள்விகள் ரசிக்கும் படி இருக்கிறது...

Unknown said...

ஸ்ஸ்... யப்பா.. உதை படுவ! உங்கத்தாகிட்ட போடா!! என்று சொல்லாத அம்மாதான் நல்ல அம்மா.

ஸாதிகா said...

ரசித்து சிரித்தேன் ஹுசைனம்மா.

ஹேமா said...

மூணு பேர்கிட்ட நல்லா மாட்டிக்கிட்டு முழிக்கிறீங்கன்னு மட்டும் தெரியுது தோழி.

Chitra said...

ஒரே ஒரு சந்தேகம்தான் எனக்கு; அவங்கப்பாவிடம் இந்த மாதிரி கேள்விகள் எதுவுமே கேட்பதில்லை, என்னிடம் மட்டும்தான் கேட்கிறான். அவனுக்கு புரிஞ்சிருக்குதா...?? அல்லது அவனுக்கும் தெரிஞ்சுடுச்சா...?

......நீங்கள் பதிவர் என்று உங்கள் புத்திசாலி செல்லத்துக்கு தெரிந்து விட்டது......

..He is very sweet and smart! May God continue to bless him!

ஹைஷ்126 said...

//ஒரே ஒரு சந்தேகம்தான் எனக்கு; அவங்கப்பாவிடம் இந்த மாதிரி கேள்விகள் எதுவுமே கேட்பதில்லை, என்னிடம் மட்டும்தான் கேட்கிறான். அவனுக்கு புரிஞ்சிருக்குதா...?? அல்லது அவனுக்கும் தெரிஞ்சுடுச்சா...?//

//அவனுக்கு எவ்வளவு கோபம் வந்தாலும், கட்டிப்பிடித்து, ஒரு முத்தம் கொடுத்தால் போதும், ஐஸாக உருகி, நாம் சொல்லும் வேலையைச் செய்து விடுவான். இவ்வளவு எளிதில் வழிக்கு கொண்டுவர முடிவது மகிழ்ச்சியாக இருந்தாலும், கொஞ்சம் கவலையும் தருகிறது.//


:)))))

அவனுக்கு புரிஞ்சுடுது...

அவக அப்பாவுக்கு தெரிஞ்சுடுது...

பாவம் உங்க பாடு திண்டாட்டம் தான் :)))

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

// அவன் குட் பாயா இருந்ததால அவன் கேட்டதையே கொடுத்துட்டான்”என்றேன். ”அப்ப நீ குட் கேர்ள் இல்லையா?”//

சோக்கா கேட்டான்பா கேள்வி, ஆனா பதில் தான் தெரியல.

//ஒரே ஒரு சந்தேகம்தான் எனக்கு; அவங்கப்பாவிடம் இந்த மாதிரி கேள்விகள் எதுவுமே கேட்பதில்லை, என்னிடம் மட்டும்தான் கேட்கிறான். அவனுக்கு புரிஞ்சிருக்குதா...?? அல்லது அவனுக்கும் தெரிஞ்சுடுச்சா...?//

சந்தேகமே வேனாம், பதில் பாஸிட்டிவ் தான் ஹுஸைனம்மா.

கேட்கிற கேள்விக்கு பதில் தெரியாமல் முழிப்பதை விட ஏதாவது சொல்லி சமாளித்தல் என்பதே ஒரு கலை. அது உங்களிடம் இருக்கிறது. நல்ல பதிவு, பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Rithu`s Dad said...

//ஒரே ஒரு சந்தேகம்தான் எனக்கு; அவங்கப்பாவிடம் இந்த மாதிரி கேள்விகள் எதுவுமே கேட்பதில்லை, என்னிடம் மட்டும்தான் கேட்கிறான். அவனுக்கு புரிஞ்சிருக்குதா...?? அல்லது அவனுக்கும் தெரிஞ்சுடுச்சா...?//

ஹுஸைனம்மா பன்ச் இது தானோ? இந்தப் பதிவை சிரித்துக்கொண்டே படித்தேன்..

எங்க வீட்லயும் இப்ப ரித்து ஆரம்பிசிருக்காங்க.. ரெண்டு பேர் கிட்டயும் எப்பவும் ஒரே கேள்விகள் தான்.. நான் பரவால்ல பாவம் அவங்க அம்மா தான் நாள் முழுதும் பதில் சொல்லிட்டு இருக்காங்க..


அடுத்த பதிவர் புத்தகம் ரெடி.. பப்ளிசர்ஸ் யாராது ரெடியா??

"உழவன்" "Uzhavan" said...

ரசனையான கேள்விகள் :-)

GEETHA ACHAL said...

குழந்தைகளுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லவே ஒரு பட்ட படிப்பு படிக்கனும்..இங்கேயும் அதே மாதிரி கேள்விகள்..பதில் தெரியாமல் நான்...எவ்வளவு சமாளித்தாலும் அக்ஷ்தா திருப்திஅடைவதில்லை என்னுடைய பதில்களால் சில சமயங்களில்.....

Abdulcader said...

மாஷாஅல்லாஹ்,புத்திசாலி பையன்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//மாடெல்லாம் வீட்டுக்குள்ளதானே வச்சிருப்ப?”!! //
ஹா ஹா ஹா சூப்பர் வாலு தான் போல இருக்கே...

//அப்ப நீ குட் கேர்ள் இல்லையா//
இது இன்னும் சூப்பர்... எப்படி சமாளிக்கறீங்க? ஹா ஹா ஹா

புல்லாங்குழல் said...

இத்தனை புத்திசாலியான பிள்ளையை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.அடுத்ததாக கணவருக்கு.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ச்சுவீட்.. ஹாஹ்ஹா.. எல்லாத்தையும் ரசிச்சேன்.. வச்சு சமாளிக்க வாழ்த்துக்கள் ஹூசைனம்மா.. :))

ராமலக்ஷ்மி said...

ரசித்தேன்:)!

enrenrum16 said...

/”அப்ப நீ குட் கேர்ள் இல்லையா?” என்று பூமராங் அனுப்ப, அவன் அப்பா வாய்பொத்திச் சிரித்தார். /

i coudlnt control my laugh when i imagine ur situation.

//அவனுக்கு எவ்வளவு கோபம் வந்தாலும், கட்டிப்பிடித்து, ஒரு முத்தம் கொடுத்தால் போதும், ஐஸாக உருகி, நாம் சொல்லும் வேலையைச் செய்து விடுவான். இவ்வளவு எளிதில் வழிக்கு கொண்டுவர முடிவது மகிழ்ச்சியாக இருந்தாலும், கொஞ்சம் கவலையும் தருகிறது.//
--What's there to worry hussainamma? i think he likes 'kattippudi vaithiyam'..

Enjoy with the brighter kids...and learn more samaalifications..

My kid also comes to me to clear his doubt...i too dont know why.

Enrenrum16

ஹுஸைனம்மா said...

பிரதாப்
இர்ஷாத்
அஸீம் பாஷா
சின்ன அம்மிணிக்கா
அம்பிகா
நாடோடி
கண்ணா
தூயவன்
அப்பாதுரை
வழிப்போக்கன்
ஜமால்
சுந்தரா
வல்லிம்மா
வெறும்பய
முத்துலட்சுமிக்கா
கந்தசாமி சார்
அமைதிச்சாரல்
ஜெய்லானி
சரவணக்குமார்
ஸ்ரீராம் சார்
ஏஞ்சலின்
மஹி
சிநேகிதி
சுல்தான் பாய்
ஸாதிகாக்கா
ஹேமா
சித்ரா
ஹைஷ் சார்
அபு நிஹான்
ரீத்து அப்பா
உழவன்
கீதா ஆச்சல்
காயலாங்கடை காதர்
அப்பாவி தங்ஸ்
நூருல் அமீன் சார்
எல் போர்ட்
ராமலெக்‌ஷ்மிக்கா
என்றென்றும் 16

எல்லோருக்கும் எனது நன்றிகள். தாமதத்திற்கு மன்னிக்கவும். எனது மகனிற்கான உங்களது பாராட்டுகளும், வாழ்த்துகளும் மிக்க மகிழ்வைத் தந்தன. மிகவும் நன்றி!!

Jaleela Kamal said...

பிள்ளைங்க அப்ப்படி பேசுவது கோபமா வந்தாலும், பிறகு நினைத்தால் ஒரே சிரிப்பு தான் வரும்.
இந்த் மாடு மேய்ப்பது, குப்ப வண்டி தள்ளட்னும், இதெல்லாம் நானும் அடிகடி சொல்ல்ம் டயலாக் தான்

நானும் அவனுக்கு அடுத்து பிற்ந்து இருந்தா காலேஜ் லைஃப என் ஜாய் பண்ணி இருக்க லாமே என்று ஒரு பெருமூச்சு ஓடி கொண்டு இருக்கு.

பதிவு சிரிப்பானா பதிவு.