Pages

இன்றைய கடைசி
டூரிங் தியேட்டரில் படம் கடைசி நாளுக்குத்தான் பயங்கர விளம்பரம் இருக்கும்; முதல் நாளை விட அதிகமாக!! அதுபோல, ஆஃபீஸில் கடைசி நாளும் ரொம்ப செண்டியாக இருக்கும். ஏதோ பிறந்த வீட்டை விட்டுப் போகும் பெண்ணைப் போல எல்லோரும் பார்ப்பார்கள். ‘ஹா,ஹா எதிரி ஒழிந்தாள்/ன்’ எனும் தம்பி/தங்கை போல ஆஃபீஸிலும் சிலர் இருப்பார்கள். சமீபத்தில்தான் அந்த அனுபவம் கிடைத்தது என்பதால், அனைவரும் பயன்பெறும் வகையில், பதிவர் ட்ரேட்மார்க் பத்து டிப்ஸ் எழுதி பதிவுலகில் என் இருப்பை இன்னமும் இறுக்கமாகப் பதிந்து கொள்கிறேன்.

1. வேலை மாறுவதற்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் நோட்டீஸ் என்பதால், ஹெச்.ஆர்.ல் ராஜினாமா லெட்டர் கொடுத்த கையோடு, அப்போவே உடன் பணிபுரிபவர்களிடம் விஷயத்தைச் சொல்லிவிடக்கூடாது. வேறு வேலையில் சேரப் போகிறீர்கள் என்றால், அதைக் குறித்து அதிகத் தகவல்கள் தெரிவிக்க வேண்டி வரும். சம்பளம் இதைவிட எவ்வளவு கூட, கார், மொபைல், ஏர்டிக்கட், இன்ஷ்யூரன்ஸ் உண்டா என்று தினம் ஒன்றாக, அதுவும் ஒவ்வொருவராகக் கேட்பதற்கு விளக்கம் சொல்லிக் கொண்டே இருப்பதற்குப் பதில் பிட் நோட்டீஸ் அடித்து விடலாம்!! அத்தோடு, புகைமண்டலம் அதிகமாகும் வாய்ப்பும் உண்டு.

2. முன்பே சொல்லிவிட்டால், முடித்துக் கொடுக்க வேண்டிய வேலைகளோடு, அவர்களின் பெண்டிங் வொர்க்கையும் சேர்த்து நம் தலையில் தள்ளிவிடுவார்கள். மெதுவாக, கடைசிப் பத்து நாட்களுக்கு முன் சொன்னால், இதிலிருந்து தப்பிப்பதோடு, மிச்ச நாட்களையும் விஸா மாத்தணும், மெடிக்கல் இருக்கு, வீடு தேடணும், ஃபேமிலியை ஊருக்கு அனுப்பணும் என்று சாக்குச் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்.

3. செட்டில்மெண்ட் லேட்டாகாமல் இருப்பதற்காக, ரிஸைன் பண்ணுவதற்கு முன்பே அக்கவுண்ட்ஸில் ஒருவரை சிநேகமாக்கிக் கொள்வது உசிதம். (அக்கவுண்ட்ஸில் இருப்பது ஃபிலிப்பைன்ஸ் நாட்டவராக இருந்தால் ஒரு பாக்ஸ் Doughnut அல்லது ஒரு பக்கெட் கே.எஃப்.ஸி. போதும். இந்தியராக இருந்தால், செலவு அதிகமாகும்!!).

4. நமக்குத் தேவையான ஃபைல்களை நம் கம்ப்யூட்டரிலிருந்து ஃப்ளாஷ் டிஸ்க்கில் காப்பி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, எழுத ஆரம்பித்து பாதியில் நிற்கும் பதிவுகள், டவுண்லோட் செய்த படங்கள், பாடல்கள்.

5. அடுத்துச் சேரப்போகும் வேலையில், கொஞ்ச நாளாவது வேலை செய்வதுபோல ஃபிலிம் காட்ட வேண்டியிருக்கும் என்பதால், கொஞ்ச நாளுக்குத் தேவையான பதிவுகளை முழுதும் எழுதி ரெடி செய்து கொள்ளவும்.

6. மறக்காமல், ப்ரவுஸரில் நம்முடைய புக்மார்க்குகள், ப்ரவுஸிங் ஹிஸ்டரி, சேமித்து வைத்திருந்த பாஸ்வேர்டுகள் எல்லாம் டெலீட் செய்துவிட வேண்டும். பின்னர் பாஸ்வேர்டுகளைக் கட்டாயம் மாற்றியும் விட வேண்டும். சக அலுவலரோ அல்லது நமக்குப் பதில் வருபவரோ, பதிவராகவும் இருந்து நம் ட்ராஃப்டில் உள்ள ஐடியாக்களைச் சுட்டாலும் பரவாயில்லை. நம் சாட் ஹிஸ்டரியைத் திறந்து பார்த்துவிட்டால்??

7. இனி அடுத்து, ஆஃபீஸிலிருந்து கொண்டு போக வேண்டிய பொருட்கள். நோ, நோ, அப்படி சீப்பாவெல்லாம் பாக்கக்கூடாது. இதெல்லாம் நமக்குத் தரப்படும் சீர்வரிசை மாதிரி, நம் உரிமை. இவ்வளவு நாள் வேலை பாத்ததுக்கு இதாவது மிச்சமாகட்டும்னோ அல்லது இந்த ஆஃபீஸோட ஞாபகார்த்தமாவோன்னு வச்சிக்கோங்களேன். அத்தோட, அடுத்த ஆஃபிஸில கொஞ்ச நாள் வாலைச் சுருட்டிகிட்டு இருக்கணுமே, அதுவரை வீட்டுக்குத் தேவையான ஸ்டேஷனரீஸ்க்கு என்ன செய்றதாம்? அதனால, மெதுவா நம்ம டேபிள்லருந்து, ஒவ்வொரு நாளும் ஒண்ணொண்னா எடுத்துட்டுப் போறதிலதான் நம்ம சாமர்த்தியமே இருக்கு. அழகான பென் ஸ்டாண்ட், நோட் பேட், அஃபிஷியல் யூ.எஸ்.பி., காலி டி.வி.டி.... இதுக்கெல்லாம் எல்லையே இல்லை. நம்ம ஆஃபீஸ்தானே?

இதுல ஒரே ஒரு ட்ராபேக் என்னன்னா, வீட்டுல குழந்தைங்க இருந்தாச் சமாளிக்கறதுதான். அதுவும் உங்க ஆஃபீஸுக்குக் குழந்தைகளை கூட்டிட்டுப் போயிருக்கீங்கன்னா, வீட்டுக்கு பொரு(ட்க)ளை எடுத்து வந்தவுடனே “அப்பா, இது உங்க ஆஃபிஸ்ல உள்ளதுல்லா?”ன்னு கேட்கக்கூடும். அதைப் போல இது வேற என்றோ, ஆஃபிஸுக்கே நாந்தான் வாங்கி வச்சேன் என்றோ சமாளித்தாலன்றி, விருந்தினர் வரும்போது, ”இதெல்லாம் எங்க அப்பா ஆஃபீஸ்ல தந்தா தெரியுமா?”வென்று கடை பரப்பும் அபாயம் உண்டு.

9. ரிஸஷனால் வேலை இழக்கிறீர்கள் என்றால், ஆஃபீஸ் பாய் முதற்கொண்டு பார்ப்பவர்களெல்லாம், “அந்த ஆஃபிஸ்ல ஒரு வேகன்ஸி இருக்காம்; இந்த ஆஃபீஸ்ல ரெண்டு இருக்காம்” என்று நடமாடும் ”அப்பாயிண்ட்மெண்ட்ஸ் பேஜஸ்” & தற்காலிக ரெக்ரூட்மண்ட் கன்ஸல்டண்டாக மாறி நம்மைத் தினமும் அங்கே அப்ளை செஞ்சியா, இங்கே செஞ்சியா என்று நச்சு செய்யும் வாய்ப்புண்டு. இதற்கு ஒரே வழி, எல்லோரிடமும் ஒரு செட் பயோடேட்டா கொடுத்து, எங்கெல்லாம் வேகன்ஸி இருக்கோ, அங்கே நீயே ஒரு காப்பி எடுத்துக் கொடுத்திடு என்று சொல்லி, கொடுத்தியா, கொடுத்தியா என்று நாம் அவர்களை நச்சரிக்க ஆரம்பிப்பதுதான்.

10. கடைசி நாளன்று, மறக்காமல், உருகி உருகி எல்லாருக்கும் ஒரு மெயில் அனுப்ப வேண்டும். அலுவலர்களுக்குத் தனியேவும், மேனேஜ்மெண்டுக்குத் தனியாகவும் எழுதுதல் நலம். “நீங்களில்லையென்றால்... உங்களால்தான்... இனி எப்போ... இந்தக் காலம் போல்...” இப்படிப் போக வேண்டும் கடிதம். அடுத்தடுத்த வேலைகளில் எம்ப்ளாயி ரெஃபரன்ஸ் தேவைப்படலாம் ஒருவேளை.  காதல் கடிதம் எழுதிய அனுபவம் இருந்தால் எளிதாக இருக்கும்.

11. கடைசி நாளுக்கு உங்களை ட்ரீட் கொடுக்கச் சொல்லும் முன், உங்களுக்கு மற்றவர்களை ட்ரீட் தர வைப்பதும் உங்கள் சமத்து. ஒரு ஐடியா: கடைலெல்லாம் எதுக்கு ஸார்? வீட்டில சொல்லி பிரியாணி செஞ்சு கொண்டு வர்றேன்னு சொன்னா, அவர்களே ட்ரீட் தந்துவிடுவார்கள்.

12. சிலர் மிகவும் பாசமாக, “இனி என்ன வேணும்னாலும் என்னைக் காண்டாக்ட் பண்ணு. எனக்கு நீயும் ஒரு சகோதரி/தரன்தான்” என்று பாசமழை பொழிவார்கள். உடனே, “சார், ஒரு தௌஸண்ட் ருபீஸ்/திர்ஹம் கடனாக் கிடைக்குமா? அடுத்தச் சம்பளம் வர்ற வரைக்கும் என்ன செய்றதுன்னு நினைச்சேன். எவ்ளோ நல்ல மனசு உங்களுக்கு?”னு நீங்களும் அந்த மழைக்குக் குடைபிடிக்கவும். திருப்பிக் கொடுக்கிற அவசரமோ, அவசியமோ இல்லாத கடனை ஏன் விடணும்?

 உங்க அனுபவங்களையும் சொல்லலாம்..
 
   

Post Comment

45 comments:

தமிழ் உதயம் said...

பிரியா விடை.
வித்தியாசமான பகிர்வு.

Jaleela Kamal said...

ஹிஹி புட்டு புட்டு வைத்துட்டீங்க
பிலிப்பைனிகலுக்கு , ஒரு ஹாட் டாக்கும், டீ ஷர்டும் , கே, எஃப் சி வாங்கி கொடுத்துட்டா போதும்.

சரியான் பயனுள்ள காமடி டிப்ஸ்கள், இது அடுத்து எனக்கு உதவலாம்.

இளம் தூயவன் said...

ஆஹா ஆஹா சகோதரி உங்ககிட்ட நிறைய விஷயம் கத்துக்க வேண்டி உள்ளதே.

சின்ன அம்மிணி said...

//4. நமக்குத் தேவையான ஃபைல்களை நம் கம்ப்யூட்டரிலிருந்து ஃப்ளாஷ் டிஸ்க்கில் காப்பி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, எழுத ஆரம்பித்து பாதியில் நிற்கும் பதிவுகள், டவுண்லோட் செய்த படங்கள், பாடல்கள்//

ஆபீஸ்ல இதெல்லாம் செய்ய அனிமதிக்கறாங்களா!!!!

நல்ல பதிவு ஹுசைனம்மா

Chitra said...

கடைசி நாளுக்கு உங்களை ட்ரீட் கொடுக்கச் சொல்லும் முன், உங்களுக்கு மற்றவர்களை ட்ரீட் தர வைப்பதும் உங்கள் சமத்து. ஒரு ஐடியா: கடைலெல்லாம் எதுக்கு ஸார்? வீட்டில சொல்லி பிரியாணி செஞ்சு கொண்டு வர்றேன்னு சொன்னா, அவர்களே ட்ரீட் தந்துவிடுவார்கள்.


... I like it ஆ இருக்குதே....
சூப்பரா தொகுத்து தந்து இருக்கீங்களே! :-)

Avargal Unmaigal said...

ஹுசைனம்மா நீங்க சொன்ன ஐடியா எல்லாம் சூப்பர் அது என் பார்ட்டைம் ஜாப்புக்குதான் உதவும் ஆனா எனக்கு பார்ட்டைம் ஜாப்பில் இருந்து குயிட் பண்ண விருப்பம் இல்லை. எனவே உங்களின் அடுத்த பதிவில் முழுநேர ஜாப்பில் இருந்து குயிட் பண்ண ஐடியா ஏதும் உங்கள் கைவசம் இருந்தா அள்ளி விடுங்க? முழுநேர ஜாப்ன்னு நான் சொல்ல வருவது வீட்டு வேலையை. அந்த காலத்தில் வீட்டு வேலைய்ல் இருந்து ஆண்கள் குயிட்பண்ண ஒரே ஒரு ஐடியா கைவசம் வச்சிருந்தாங்க அதுதாங்க சன்னியாசம் போகிறது. இந்த காலத்திற்கு ஏற்ப ஒரு நல்ல ஐடியாவா சொல்லுங்களேன்.

Avargal Unmaigal said...

நாங்க அமெரிக்காவில் இப்படித்தான் ஜாப் குயிட் பண்ணுவோம் வீடியோ க்ளிப் பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்,
http://www.youtube.com/watch?v=5PJt0DXdZ0k / http://www.youtube.com/watch?v=BUjee5GZtPM

நாஞ்சில் பிரதாப்™ said...

ஹஹஹ.... உங்களையெல்லாம் வேலைக்கு வச்சானே அவனை சொல்லனும்...:)

//இனி அடுத்து, ஆஃபீஸிலிருந்து கொண்டு போக வேண்டிய பொருட்கள். நோ, நோ, அப்படி சீப்பாவெல்லாம் பாக்கக்கூடாது//

அதானே...அஞ்சு வருசத்துக்கு முன்னாடி வேலைபார்த்த கம்பெனில சுட்ட ஸ்டேப்லர் இன்னும் எங்கிட்ட இருக்கு. இது நமது உரிமை, எத்தனை தடவைதான் ஸ்டேப்லர், குண்டுசின்னு சுடறது... இந்த வாட்டி பெருசா ஏதாச்சும் கொண்டுப்போலாம்னு இருக்கேன்... :))

வேலைப்போனாலும் டிப்ஸ் கொடுக்கறீங்களே...எப்படிங்க.??:)

அமைதிச்சாரல் said...

நானும் வேலையை விட்டுட்டு புதுவேலை தேடணும்ன்னு நினைக்கிறேன்.. நடக்கமாட்டேங்குது!!


அதுக்கு,.. மொதல்ல வேலைல சேரணுமாமில்ல :-)))))))))))

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ...பின்னூட்டம் போடவே இல்ல ஆனா அதுக்குள்ள கருத்துரை வெளியிடப்பட்டதுன்னு msg வருது..

ok..

டிப்ஸ் எல்லாமே க்ளாஸ் தான்..

ஆனா இந்த அக்கவுண்ட்ஸ் பத்தி சொன்னீங்களே,எப்பா...அவங்கள்ள நல்லவங்களும் சிலர் இருக்காங்க..ஆனா சில இருக்காங்களே.கவுண்டமனி சொல்ரமாதிரி"எனக்கு நெரையா வேலை இருக்கு..நா ரொம்ப பிஸ்ஸ்ஸி"அப்டீன்னு தா அலட்டிப்பாங்க..
அப்ரோ இந்த பெர்சனல் டிபார்ட்மெண்ட் கொடுமைதா.அவங்களுக்கு தலைல கொம்பே மொலச்சமாதிரி..ஆடுவாங்க..

நல்ல நகைச்சுவை பதிவு..

அன்புடன்
ரஜின்

Anonymous said...

உங்களை வேலைக்கு வச்சவனை சொல்லனும். அவ்வ்வ்வ்வ்வ்வ்.. ஏன்க்கா? ஏன் எல்லா தங்குசும் ஒரு வில்லங்கமாகவே இருக்கீங்க. he he

அமுதா கிருஷ்ணா said...

பிரியாணி ஐடியா சூப்பர்ப்பா..

கோவை2தில்லி said...

டிப்ஸெல்லாம் நல்லா இருக்கு. நிறைய ஐடியா வெச்சிருக்கீங்களே!!!!!!!!!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நான் இதுவரைக்கும் எந்த வேலைக்கும் போனதில்லை..:))

அமைதிச்சாரல் லைக் யூடா..:))

முக்கியமாக, எழுத ஆரம்பித்து பாதியில் நிற்கும் பதிவுகள், டவுண்லோட் செய்த படங்கள், பாடல்கள்.

5. அடுத்துச் சேரப்போகும் வேலையில், கொஞ்ச நாளாவது வேலை செய்வதுபோல ஃபிலிம் காட்ட வேண்டியிருக்கும் என்பதால், கொஞ்ச நாளுக்குத் தேவையான பதிவுகளை முழுதும் எழுதி ரெடி செய்து கொள்ளவும்.

// நான் பார்த்ததிலே இவள் ஒருத்தியைத்தான் நல்ல பதிவர் என்பேன்.. நல்ல பதிவர் என்பேன்.. ஒண்ணில்லடா கானாமிர்தம் பதிவு எழுதின பாதிப்பு..:))

☀நான் ஆதவன்☀ said...

க்ளாஸ் :)))

ஸாதிகா said...

//அதுவரை வீட்டுக்குத் தேவையான ஸ்டேஷனரீஸ்க்கு என்ன செய்றதாம்? அதனால, மெதுவா நம்ம டேபிள்லருந்து, ஒவ்வொரு நாளும் ஒண்ணொண்னா எடுத்துட்டுப் போறதிலதான் நம்ம சாமர்த்தியமே இருக்கு. அழகான பென் ஸ்டாண்ட், நோட் பேட், அஃபிஷியல் யூ.எஸ்.பி., காலி டி.வி.டி..// ஹுசைனம்மா ஸ்டெஷனரிக்கு மாசாமாசம் ஒரு தொகை செலவாகிறது.அதனால் புது ஆஃபீஸில் சேர்ந்ததுக்கப்புறம் அப்பபோ எனக்கும் ஒரு பார்சல்.ஒகேவா?

ஸ்ரீராம். said...

ரொம்ப சுவாரஸ்யமா படிச்சேன். 'அட, ஆமாம், ஆமாம்'னு தலையை ஆட்ட வச்சுது ஒவ்வொரு குறிப்பும்..!

எம் அப்துல் காதர் said...

பதிவு டிப்ஸ் எல்லாம் ஓகே தான்... ஆனா உண்மையிலேயே வேலைய விட்டுடீங்களா? என்னால் நம்ப முடியல ஹுசைனம்மா!! உண்மையிலேவா??

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு ஹுஸைனம்மா. சொல்லிய விதமும் வழக்கம் போலவே ரசிக்க வைத்தது:)!

R.Gopi said...

ஹூஸைனம்மா...

பலே பயனுள்ள பத்து (12) டிப்ஸ்கள்..

அதென்ன 10 டிப்ஸ்கள்னு சொல்லிட்டு கூடவே எக்ஸ்ட்ரா 2 சேர்த்து 12 டிப்ஸ் போட்டு இருக்கீங்க...

ஆமாம், நீங்க எந்த ஆஃபீஸ்ல வேலை செய்யறீங்க!!? சும்மா கேட்டேன்... பாவம்க அந்த முதலாளி (இதுவும் சும்மா தமாசுக்குதான் சொன்னேன்...)

ஜலீலாவோட ஐடியா பார்த்தீங்களா? அவங்க பதிவா இருந்தாலும் சரி, உங்க பதிவுல கமெண்டா இருந்தாலும் சரி, இந்த ஃபிலிப்பைனிஸ மட்டும் விடவே மாட்டேங்கறாங்கப்பா...

எல்லா டிப்ஸும் நல்லா இருந்தாலும், அந்த 12வது டிப்ஸ் படிச்ச உடனே சட்டென்று சிரிப்பு வந்தது...

கலக்குங்க ஹூஸைனம்மா!!!

ஆமினா said...

//அத்தோடு, புகைமண்டலம் அதிகமாகும் வாய்ப்பும் உண்டு.
//
ஹா...ஹா..ஹா...

பயங்கரமா எழுதியிருக்கீங்க!!!

ரொம்பவே ரசிச்சு படிச்சேன்!! நல்ல டிப்ஸ்

Jaleela Kamal said...

ஹுஸனாம்மா
இந்த பிலிப்பைனிகல ப|ற்றீ பதிவு போட பக்கம் பக்க்மா இருக்கு, உட்கார்ந்து டைப் பண்ன தான் நேரம் கிடைக்கமாட்டுங்கிரது,

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அனுபவங்களே சிறந்த ஆசிரியர் என்று நிரூபித்து விட்டீர்கள்.

//ஆபீஸ்ல இதெல்லாம் செய்ய அனிமதிக்கறாங்களா!!!! //

ஆஃபீஸ் போறதே அதுக்குத் தானே.

enrenrum16 said...

அட..அட..என்ன டிப்ஸ் மழை...இப்படி ஒரு அருமையான employerஐ உங்க கம்பெனி இழந்து விட்டதே...

//எங்கெல்லாம் வேகன்ஸி இருக்கோ, அங்கே நீயே ஒரு காப்பி எடுத்துக் கொடுத்திடு என்று சொல்லி, கொடுத்தியா, கொடுத்தியா என்று நாம் அவர்களை நச்சரிக்க ஆரம்பிப்பதுதான்.
// ஷ்..அப்பா... எப்டி இப்டியெல்லாம்...

enrenrum16 said...

தமிழ்மணத்தில் 55-வது இடம்பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.

enrenrum16 said...

//ஆபீஸ்ல இதெல்லாம் செய்ய அனிமதிக்கறாங்களா!!!! //

ஆஃபீஸ் போறதே அதுக்குத் தானே.//

அட மக்கா..

//ஹுஸனாம்மா
இந்த பிலிப்பைனிகல ப|ற்றீ பதிவு போட பக்கம் பக்க்மா இருக்கு, உட்கார்ந்து டைப் பண்ன தான் நேரம் கிடைக்கமாட்டுங்கிரது,//

ஜலீலா அக்கா...ப்ளீஸ்..சீக்கிரம் பதிவு போடுங்கள்...

ஹுஸைனம்மா said...

தமிழ் உதயம் - வாங்க. நன்றி.

ஜலீலாக்கா - வாங்க. நீங்க என்னைவிட அனுபவஸ்தர்!! இதெல்லாம் நான் சொல்லியா தெரியணும்? :-)))

தூயவன் - கத்துத் தரலாமே - ஃபீஸ் நியாயமாத்தான் இருக்கும் நம்மகிட்ட.

சின்ன அம்மிணிக்கா - ஹை, அக்கா வந்துட்டீங்களா? பிளாக்தானே காணாமப் போச்சு, நீங்களும் அதோட சேந்து போயிட்டீங்க?
ஆஃபீஸ்ல இருக்க ஐடி அட்மினிஸ்ட்ரேட்டரைப் பொறுத்தது, எதெல்லாம் செய்யலாம்கிறது. :-))))

ஹுஸைனம்மா said...

சித்ரா - வாங்க. எல்லாம் உங்ககிட்டயிருந்து கத்துகிட்டதுதான்!!

அவர்கள் உண்மைகள் - அதுக்கு ஒரே வழி ஆஃபீஸ்ல ஓவர்டைம் பாத்து, அங்கேயே டேரா போடுறதுதான்!! ஆனா, அதுக்கான எக்ஸ்ட்ரா வரும்படியைக் கணக்கில் (மேடத்திடம்) காட்டணும், ஞாபகம் வச்சுக்கோங்க!!

பிரதாப் - திறமையான பதிவர்னா, எப்பேர்பட்ட ஸ்ட்டுவேஷனுக்கும் ஸாங்.. ச்சே.. பதிவு எழுதணும். அதான் பதிவர்களின் இலக்கணம்!!

//இந்த வாட்டி பெருசா ஏதாச்சும் கொண்டுப்போலாம்னு இருக்கேன்.// டேமேஜரா இருந்தா அல்லது ஐடி டிபார்ட்மெண்ட்ல இருந்தா, பி.ஸி., லேப்டாப் கூட கடத்திடலாம் தெரியுமா?? :-)))))

ஹுஸைனம்மா said...

அமைதிச்சாரல்க்கா - கொடுத்து வச்சவங்க. இருந்தாலும், இப்ப நீங்க பாக்கிற வேலைக்கு ஏது ரிடையர்மெண்ட்? :-))))

ரஜின் - வாங்க. நன்றிங்க.

அனாமிகா - நீங்களும் எதிர்கால தங்ஸ்தான் என்பதை மறந்துவிட வேண்டாமென இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகிறேன். ஆகவே... :-))))))

அமுதாக்கா - கரெக்டா பிரியாணியை மட்டும் கண்டுகிட்டீங்க!! :-)))

ஹுஸைனம்மா said...

தேனக்கா - உங்க தங்கச்சி நான், நல்ல பதிவராத்தானே இருப்பேன்? ஹி.. ஹி..

ஆதவன் - டம்ளர்!! ;-)))

ஸாதிகாக்கா - அதுக்கென்னக்கா கொடுத்தாப் போச்சு! நம்மகிட்ட மார்க்கெட் ரேட்டைவிட சீப்பாவே கிடைக்கும்!! :-))))

ஸ்ரீராம் சார் - வாங்க. தலையாட்டுனீங்களா? அப்ப நாமெல்லாருமே ஒரே குட்டையில..... :-))))

ஹுஸைனம்மா said...

அப்துல்காதர் - ஏன், ஏன்? இதுல நம்ப முடியாத அளவுக்கு என்ன இருக்கு? பட் ஒன் கரெக்‌ஷன்.. வேலையை நான் விடல.. வேலைதான் என்னைக் கைவிட்டுடுச்சு... யெஸ்.. ரிஸஷன்..

ராமலக்‌ஷ்மிக்கா - நன்றி.

கோபி ஆர். - ஜலீலாக்கா ஃபிலிப்பைனிகளால ரொம்பப் பாதிக்கப்பட்டுருக்காங்க போல. எனக்கும் முந்தைய கம்பெனில ரொம்பத் தொந்தரவு கொடுத்தாங்க. இப்ப இருந்ததுல அப்படி இல்லை.

10+2 டிப்ஸ் ஏன்னா, இப்பல்லாம் எது வாங்கினாலும், ஏதாவது ஃபிரீ கொடுக்கணுமாமே, அதனாலத்தான்!!

ஹுஸைனம்மா said...

ஆமினா - நன்றி.

அபு நிஹான் - //ஆஃபீஸ் போறதே அதுக்குத் தானே// ஹலோ, ஹலோ, என்னையேன் அதுக்கு கூட்டணி சேக்கிறீங்க? நான் அப்படிலாம் இல்லை தெரியுமா? நெசமாங்க!! எனக்குப் படம் டவுண்லோட் பண்ற பொறுமையெல்லாம் கிடையாது.

என்றென்றும் 16 - வாங்க. ஹி.. ஹி.. என் இழப்பு கம்பெனிக்கு ஈடுகட்ட முடியாததுன்னு அவங்களே சொல்லிட்டாங்க!! :-))))) (நல்லா கவனிங்க, “என்” இழப்புதான், “என்னால்” ஏற்பட்ட இழப்பு இல்லை!!
தமிழ்மண வாழ்த்துக்கு நன்றி!!

அபி அப்பா said...

ரொம்ப அருமையா இருக்கு. நான் செய்வதை எல்லாம் சொன்ன மாதிரியே இருக்கு. குறிப்பா நான் என் கீ போர்டை தள்ளிகிட்டு வந்துடுவேன். பத்து வருஷமா பழகின அந்த கீபோர்டு எனக்கு பிடித்தமான ஒன்று.(அதிலே எல்லா எழுத்தும் அழிந்து போயிருக்கும்)அதையும் சேர்த்தா இது நான் எழுதின பதிவாகத்தான் இருக்கும்!

R.Gopi said...

//Jaleela Kamal said...
ஹுஸனாம்மா
இந்த பிலிப்பைனிகல ப|ற்றீ பதிவு போட பக்கம் பக்க்மா இருக்கு, உட்கார்ந்து டைப் பண்ன தான் நேரம் கிடைக்கமாட்டுங்கிரது//

*****

ஹா...ஹா...ஹா...

ஜலீலா... இன்னும் அவங்கள விடலியா? அப்படி எழுதறதுக்கு பக்கம் பக்கமா என்ன தான் மேட்டர் வச்சு இருக்கீங்க.. அட்லீஸ்ட் எனக்கு மெயில் பண்ணினா, நானாவது படிச்சு பார்ப்பேன்...

அமைதிச்சாரல் said...

@தேனம்மை,

தேங்க்ஸுங்கோ :-))))))))

vanathy said...

இது வரை வேலைக்கு போனதில்லை. போகும் சந்தர்ப்பம் வந்தால் இதை பிரின்ட் அவுட் எடுத்து, ப்ரேம் போட்டு மாடிக்கறேன்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா வித்தியாசமான பகிர்வு. மிக்க நன்றி.

VAI. GOPALAKRISHNAN said...

நகைச்சுவை விருந்தளித்ததற்கு நன்றி. பாராட்டுகள்.You may like to visit gopu1949.blogspot.com

சிநேகிதன் அக்பர் said...

தங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். பங்கேற்று சிறப்பிக்கவும்.

http://sinekithan.blogspot.com/2011/01/blog-post_10.html

புதுகைத் தென்றல் said...

சிரிக்காம படிக்க முடியலை.

எதையும் வித்தியாசமா செய்யும் உங்களுக்கு இந்தப் பதிவு சூப்பர்.

புதுகைத் தென்றல் said...

பேரண்ட்ஸ் கிளப்பில் தோழி வித்யா இந்தப் பதிவை போட்டிருக்காங்க. அனைவரும் தெரிஞ்சிக்கணும்னு இங்கே இலவசமா விளம்பர ஒட்டிக்கறேன்.

http://parentsclub08.blogspot.com/2011/01/blog-post.html

கோமதி அரசு said...

ஹீஸைனம்மா, நல்ல நகைச்சுவை பகிர்வு.

வல்லிசிம்ஹன் said...

வேலையை விட்டுப் போவதிலும் நகைச்ச்சுவையக டிப்ஸ் கொடுப்பதில் ராணி ஆகிட்டீங்க.

இவ்வாளவு பாசிடிவ்வ் பதிவைப் படித்ததில் எனக்கு ரொம்பவே பெருமை.

ரிஷபன் said...

வித்தியாசமான பதிவு. நல்லவேளை எனக்கு இந்த சிக்கல் ஏதும் இல்லை

அன்னு said...

ஹெ ஹெ... நல்லா வாய் விட்டு சிரிக்க வச்ச பதிவு... :))

ஆனா... ஆஃபீஸ்ல யாருக்கும் நீங்க பதிவெழுதறது தெரியாதா?