Pages

இதுவும் முன்னேற்றம்தானோ




இன்றைய அட்வான்ஸ்ட் உலகத்துல சகட்டுமேனிக்கு முன்னேறியிருக்கிற நாகரீகத்துக்கும், தொழில்நுட்பங்களுக்கும் கொஞ்சமும் குறைவில்லாம அதிகரிச்சிருக்கிற இன்னொரு விஷயம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள்!!

கோவை சிறுமி முஸ்கானுக்கு நேர்ந்த கொடூரத்திலிருந்து நாம கொஞ்சம் மீண்டு இருக்கிற இந்த சமயத்துல, அதேபோல இன்னொரு சம்பவம்!! நடந்தது இங்கே துபாயில் - ஆமாம், தண்டனைகள் கடுமையா இருக்கிற துபாயில்தான்!!

ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயது சிறுமியை மூன்று பேர் சேர்ந்து கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். செய்தது சிறுமி வழக்கமாகச் செல்லும் பஸ் டிரைவர், கண்டக்டர் இருவர். மூவருமே இந்தியர்கள், முறையே 26, 31, 44 வயதுள்ளவர்கள். இச்சிறுமிதான் கடைசியில் இறக்கி விடப்படுவதால், துணிந்து செய்துள்ளார்கள். குற்றவாளிகள் தற்போது போலீஸின் பிடியில்.

குற்றத்தை ஒப்புக் கொண்ட குற்றவாளிகள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? குழந்தை வீட்டில் எதுவும் சொல்ல மாட்டாள்; சொன்னாலும் பெற்றோர் தம் அவமானம் கருதி வெளியில் சொல்ல மாட்டார்கள் என்பதால்தான் செய்தோம் என்று!!

அவர்கள் சொல்லியிருப்பது சரியே. ஏனெனில், சம்பவம் நடந்தது நவம்பர் 11 அன்று, ஆமாங்க 2010ல்தான். கோவையில் மோகன்ராஜ் சுட்டுக் கொல்லப்பட்டானே அதே சமயத்தில்தான். ஆனால், பெற்றோர் இதை வெளியில் சொல்லத் தயங்கி, ஜனவரியில்தான் பள்ளி நிர்வாகத்திடம் சொல்ல, அவர்கள் போலீஸுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள். பின்னரே இது பத்திரிகைகளில் வந்தது.

எனில், அந்த டிரைவர் கூட்டம் அக்குடும்பத்தினரை எவ்வளவு சரியாகக் கணித்து வைத்திருக்கிறார்கள்? அதுவும் துணிவாக, சம்பவத்தன்று, ஒரு மணிநேரம் தாமதமாகத்தான் பஸ் வரும் என்றுவேறு தாயைத் தொலைபேசியில் அழைத்துச் சொல்லியிருக்கிறார்கள். வீட்டுக்கு வந்த குழந்தை அழுதுகொண்டிருந்ததால், விசாரித்தபோதும் எதுவும் சொல்ல மறுத்திருக்கிறாள். உடைகளின் கறைகளையும், குழந்தையின் வலியின் காரணமாகவும் மருத்துவரிடம் சென்றபோது, அவர் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதைத் தெரிவித்தார். ஆனால், பெற்றோரோ மேல்நடவடிக்கை எடுக்காமல், இந்தியா சென்று சிகிச்சை எடுத்திருக்கின்றனர்.

பின்னர், ஒருவழியாக ஜனவரி 5ம் தேதி பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கின்றனர். ஏன் இந்தத் தயக்கமோ? குழந்தையின் தாய் சொல்வதைப் பார்த்தால், தந்தைதான் தயங்கியிருக்கிறார் போலத் தெரிகிறது. தந்தையோ, சின்னக் குழந்தைக்கு இப்படியொரு கொடூரம் செய்ய யாருக்காவது மனம் வருமா என்றுதான் நினைத்துத் தயங்கினேன்; மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட பிறகுதான் நம்பினேன் என்கிறார்.

அக்குழந்தை படிக்கும் பள்ளியில் மாதக்கட்டணம் 25,000 ரூபாய்; பேருந்துக் கட்டணமோ 4000 - முதல் 6000 வரை மாதத்திற்கு. எனில், அப்பள்ளியில் பிள்ளைகளைப் படிக்க வைப்பவர்கள் மேல்தட்டு மக்களாகத்தானே இருக்க முடியும்? அவர்களுக்கே இவ்வளவு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் என்ன சொல்ல? இடைப்பட்ட இரண்டு மாதங்களில், குற்றவாளிகள் தப்பியிருந்தாலோ அல்லது இச்சம்பவம் தந்த தைரியத்தில் இன்னும் சில குழந்தைகளைக் கொடுமைபடுத்தியிருந்தாலோ?

நல்லவேளையாக, குழந்தை அச்சமயத்தில் அணிந்திருந்த உடைகள் சலவை செய்யப்படாமல் இருப்பது கூடுதல் ஆதாரமாக உள்ளது. நிச்சயமாக மரண தண்டனைதான் என்பதில் சந்தேகமேயில்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன் நடந்த, 4 வயது பாகிஸ்தானியச் சிறுவனைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தந்த அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் (குற்றவாளி போதைக்கடிமை, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது), இன்னுமொரு சம்பவம், அதுவும் இந்தியக் குழந்தை, குற்றம் புரிந்தவர்களும் இந்தியர்கள் என்பது அமீரக வாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, கோவை முஸ்கன் மரணத்திற்குப் பின் ஏற்பட்டதைப் போல. குற்றவாளிகள் கிட்டத்தட்ட 7 முதல் 14 வருடங்கள் வரை இங்குதான் வேலை செய்கிறார்கள்.

அவ்வப்போது இங்கு 7 முதல் 10 வயது சிறுமிகள் (சில சமயம் சிறுவர்களும்) மால்களின் பாத்ரூம்களில், அல்லது பில்டிங் லிஃப்ட்களில் சிலர் முத்தம் கொடுத்தனர், அல்லது முறையற்று தொட்டனர் என்பது போன்ற செய்திகள் வரும். அதிலும் ஆசியாவைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலும் குற்றவாளிகளாக இருப்பர். அதற்கே 10 வருடங்கள் சிறைத் தண்டனை வரை கிடைக்கும். இதுதான் முதல்முறை ஒரு பெண்குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டது.

குற்றவாளிகள் தைரியமாக இக்குற்றத்தைச் செய்வதற்குமுன், குழந்தையிடம் முன்னோட்டமாகச் சில சில்மிஷங்கள் செய்திருக்கக்கூடும்; அது குறித்து எந்த விசாரணையும் யாரும் செய்யாததாலேயே, துணிந்து தங்கள் திட்டத்தை நிறைவேற்றியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுப்பதின் முக்கியத்துவம் மேலும் கூடுகிறது. அவ்வப்போது, குழந்தை தினப்படி வாழ்வில் எதிர்கொள்ளும் இதுபோன்ற ஆண் பணியாளர்கள் (டிரைவர், கண்டக்டர், ஆண் ஆசிரியர்கள், சுத்தம் செய்பவர்கள், லிஃப்ட் ஆபரேட்டர்கள், பில்டிங் வாட்ச்மேன்கள், வீட்டருகில் உள்ள கடை சிப்பந்திகள் போன்றவர்கள்) குறித்து சிறுவர்களிடமும் விசாரிக்க வேண்டும்.

அமீரகங்களில் கீழ்நிலைத் தொழிலாளர்கள் தனியே, கடும் வேலைப்பளுவால் துயரப்படுகின்றனர் என்பதால், எல்லாருக்குமே அவர்கள்மீது ஒரு பரிவு வரும். அதுவும் நம் குழந்தைகளின் பள்ளி பஸ் டிரைவர்கள் போன்றவர்கள் நமது நம்பிக்கைக்குரியவர்கள். இவ்விழிந்தவர்களின் செயலால், நல்லவர்களையும் சந்தேகமாகப் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.
   
  Dubai Police investigates child's rape  

Rapist bus driver worked at school for 14 years

 

Post Comment

45 comments:

ஆர்வா said...

இவர்களை எல்லாம் பார்க்கும் போது அந்த நாடுகள் கொடுக்கும் சில தண்டனைகள் சரியே என்று தோன்றுகிறது..


வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்

எல் கே said...

கொடுமையான செய்தி

ADHI VENKAT said...

இதை படித்ததும் பதைபதைக்க வைத்தது. இப்படிப் பட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்து வேறு யாரும் நினைத்துக் கூட பார்க்காத தண்டனை வழங்க வேண்டும். யாரைத் தான் நம்புவது என்று தெரிய வில்லை. ஐந்து வயதாகும் என் மகளிடம் இப்போதே குட் டச் ,பேட் டச் பற்றி ஓரளவு சொல்லியுள்ளேன். பள்ளியில் இருந்து குழந்தைகள் வந்தவுடன் அன்றைக்கு நடந்த விஷயங்களை அம்மா கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களும் அனைத்தையும் நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்படி நாம் நடந்து கொள்ள வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

படிக்கும்போதே கஷ்டமாக இருக்கிறதே அந்தப் பெண் எத்தனை கஷ்டப்பட்டு இருக்கும்! சாதாரணமாக capital punishment என்பதற்கு எதிர்ப்பு இருந்தாலும், இது போன்றவர்களுக்கு அதுவே சரி.

வெங்கட் நாகராஜ்
http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_17.html

Rithu`s Dad said...

இச் செய்தியை படித்ததுமே மிகுந்த வருத்தத்திற்க்குள்ளானேன்..

நாம் தான் இனி மிக கவனமாக இருக்கவேண்டும்.. வேறு என்ன சொல்ல!!

MANO நாஞ்சில் மனோ said...

// நல்லவர்களையும் சந்தேகமாகப் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.///


நல்ல பதிவு....

enrenrum16 said...

அந்த குழந்தை பட்ட வேதனையை நினைத்தால்தான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அந்த அம்மாவின் தைரியம் பாராட்டப்படக்கூடியது. வெளியுலகத்துக்கு வராத கொடுமைகள் எத்தனையோ...நினைக்க நினைக்க கோபமாகவும் வெட்கக்கேடாகவும் இருக்கிறது.

தமிழ் உதயம் said...

மனதை கஷ்டப்படுத்தி விட்டது பதிவு.

அமுதா கிருஷ்ணா said...

VERY BAD.

கோமதி அரசு said...

// நல்லவர்களையும் சந்தேகமாகப் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. //

யாரைத் தான் நம்புவது.

இந்த பதிவைப் படித்தவுடன் மனம் மிகவும் வேதனை அடைந்தது.

அந்த பிஞ்சு குழந்தையை நினைத்தால்
என்ன சொல்வது. இறைவா இனி எந்த குழந்தைக்கும் இந்த கொடுமை நடக்க கூடாது அதற்கு அருள் புரிவாய் என்று வேண்டத்தான் தோன்றுகிறது.

Thenammai Lakshmanan said...

சே என்ன கொடுரமான மனம் படைத்த மனிதர்கள்..

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

அந்த பாவிகளுக்கு எப்படி மனசு வந்தது.

இந்த காம வெறியர்கள்,ஒவ்வொரு நாளும் வேதனையை அனுபவிக்கிற தண்டனையை கொடுக்கணும் சட்டம்.

நமக்கே இவ்வளவு வேதனையாக இருக்கும்போது,பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும்.அந்த
குழந்தையின் எதிர்காலம்?

ஸாதிகா said...

சே.என்ன கொடூரம்.உடனடியாக அந்த கயவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுத்து இது போன்ற கயவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவேண்டும்.மேல்த்தட்டோ,கீழ்த்தட்டோ,அவமானத்திற்கு பயந்து இது போன்ற விஷயங்களை மறைத்து வாழ்வது இன்றைய சமூகத்தின் நிகழ்வாக உள்ளது.

நட்புடன் ஜமால் said...

கண்களும் உள்ளமும் கலங்கிடுச்சிங்க ...

Chitra said...

அமீரகங்களில் கீழ்நிலைத் தொழிலாளர்கள் தனியே, கடும் வேலைப்பளுவால் துயரப்படுகின்றனர் என்பதால், எல்லாருக்குமே அவர்கள்மீது ஒரு பரிவு வரும். அதுவும் நம் குழந்தைகளின் பள்ளி பஸ் டிரைவர்கள் போன்றவர்கள் நமது நம்பிக்கைக்குரியவர்கள். இவ்விழிந்தவர்களின் செயலால், நல்லவர்களையும் சந்தேகமாகப் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.


......மனதை உலுக்கி பதற வச்சுட்டீங்க....

.....குழந்தைகளை இப்படி கொடுமை படுத்த எப்படித்தான் மனம் வருகிறதோ?

Vidhya Chandrasekaran said...

மனித மிருகங்கள்:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:(

சாந்தி மாரியப்பன் said...

அந்தக்குழந்தைதான் பாவம்..

Jaleela Kamal said...

ஆமாம் ஹுஸைனாம்மா, மிக்கொடுமை. நேற்றிலிருந்து ரொம்ப வே என்க்கு பதட்டம், பெண்குழந்தை வைத்திருப்பவர்களி எல்லாம் நினிஅத்து
சில வீடுகளி வேலை பார்ப்பாதால்
வாச் மேன் தான் பஸிலிருந்து இரக்கிவைத்து இருப்பார்களாம்
வழியில் லன்ச் டைம் ஆபிஸ் விட்டு வரும் போது பஸ் கார பொம்மள பிள்ளைகளி இரக்கி விடும் போது ஒரு வித பட படப்பு எனக்கு ஏற்படும்,

Jaleela Kamal said...

வயது வந்த பிள்ளைகளை தான் கயவகளிடம் இருந்து பாதுக்கனும் என்றால்.
இப்ப பச்ச மண் களையும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கும் நிலை.

Jaleela Kamal said...

எப்படி இந்த நியுச எழுதுவதுன்னு நினைத்து கொண்டி இருந்தேன்

இப்படி ஒரு விழிப்புணர்வுக்கு விளக்கமாக பதிவு போட்டு எல்லா, பெற்றொர்களையும் மேலும் சிந்திக்க வைத்துள்ளீர்கள்,

Jaleela Kamal said...

கண்டிப்பாக இதை படிக்கும் பலர் மற்றவர்களுக்கு விழிப்புணவ்ர்வை ஏற்படுத்துங்கள் ( பெண்க்குழந்தைகளுக்கு சின்னதில் இருந்தே, குட் டச் , பேட் டச் சை சொல்லி கொடுத்து வளர்ப்பது நல்லது).

Jaleela Kamal said...

நான் வழியில் பார்க்கிறேனே

அப்படியே பிடிச்சி தள்ளி விடுவானுங்க

Jaleela Kamal said...

ஆண் குழந்தைகளை கண்டு கொள்வதே இல்லை
பின்னாடி ஒருவனுக்கு ஒருவன் க்கூரிய ஆயிதஙக் வைத்து தாக்கினால் கூட கவனிப்ப்பத்தில்லை/

ஆமினா said...

கொடுமையான விஷயம்...

கேட்கும் போதே கண் கலங்குது

Angel said...

nenje valikkudhu .
that child is just4 yrs.i pray for that poor little child.
andha manidha mirugangalukkum idhe vayadhil kuzhandhaigal ooril irukkum.eppadithan indha kevalamana kaariyam seyya mudigiradho
sariyana thandanai .
self protection,good touch bad touch
ivai ellam 3 vayadhil irundhe kuzhanthaigalukku kandippaga kattru kodukka vendum.

Mahi_Granny said...

பதற வச்சுடீங்க ஹுசைனம்மா

ஸ்ரீராம். said...

நாளுக்கு நாள் நம்பிக்கை இழக்க வைக்கும் நிகழ்வுகள்... படித்தவர்களிடம்தான் பயமும் தயக்கமும் இருக்கிறது. என்ன தண்டனை தந்தாலும் தகும்.

pudugaithendral said...

:(

தராசு said...

அதிர்ச்சிதான்.

இந்த சைக்கோத்தனமான மனிதர்கள் மானிடப் பதர்களல்லாமல் வேறென்ன???

அரபுத்தமிழன் said...

இப் பதிவை நேற்று படித்தவுடன் பின்னூட்ட நினைத்தது 'கோமதி அரசு' அவர்களின் பிரார்த்தனையைத்தான்.

ஆனால் இந்தக் கொடூரமான செய்திக்கு நீங்கள் கொடுத்த தலைப்பு கொஞ்சம் கூடப் பிடிக்காததால் கோபமாகச் சென்று விட்டேன்.

தலைப்பு 'ராஸ்கல்ஸ்' அல்லது 'இவனுகள என்ன செய்யலாம்' அல்லது 'கோமதி அரசு' வின் பின்னூட்டத்தில் உள்ளது போல் 'யாரைத்தான் நம்புவது'
போன்று காரசாரமாக இல்லாமல் 'போகிற போக்கில்' இருக்கிறது.

இருந்தாலும் நீங்கள் பதிவு போட்டதால்தானே இது நமக்கெல்லாம் தெரிய வந்திருக்கிறது என்று மனமிர(ற)ங்கி 'நன்றி'க்கான பின்னூட்டம் இது.

மேலும் கோவை2தில்லியின் பின்னூட்டத்திற்கு ஒரு ரிப்பீட்டும் சகோ ஜலீலா கமாலின் உணர்வு பூர்வமான பின்னூட்டத்திற்கு ஒரு சல்யூட்டும் வைத்துக் கொள்கிறேன்.

ஹுஸைனம்மா said...

கவிதை காதலன்
எல்.கே.
கோவை2தில்லி
வெங்கட் சார்
ரீத்து அப்பா
நாஞ்சில் மனோ
என்றென்றும் 16
தமிழ் உதயம்
அமுதாக்கா
கோமதிக்கா
தேனக்கா
ஆயிஷா (வ அலைக்கும் ஸலாம்)
ஸாதிகாக்கா - யாரா இருந்தாலும் கண்டிப்பா இதுபோன்ற விஷயங்களை காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டுவரவேண்டும். தயங்குவது, குற்றவாளிகளுக்குத்தான் சாதகமாக இருக்கும்.
ஜமால்
சித்ரா
வித்யா
முத்துக்கா
அமைதிச்சாரல்
ஜலீலாக்கா - உங்க படபடப்பான கமெண்டுகளிலிருந்து நீங்களும் என்னைப் போல பதறிப்போய் இருக்கிறீர்கள் என்று புரிகிறது. கடும்தண்டனைகளும், பாதுகாப்பும் அதிகமான ஊர் என்று நம்பி இருக்கும் நமக்கு மிக்க அதிர்ச்சிதான்.
ஆமினா
ஏஞ்சலின்
மஹி மேடம்
ஸ்ரீராம் சார்
தென்றல்
தராசு

அனைவருக்கும் நன்றி. இதுகுறித்த விசாரணை துரிதப்படுத்தப்பட்டு நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட பள்ளி, இனி பஸ்களில் ஆண் கண்டக்டர்களுக்குப் பதில் பெண்களை நியமிப்பதாய் உறுதியளித்துள்ளது. பள்ளியில் நடந்த பெற்றோர்-ஆசிரியர் மீட்டிங்கில், இதுபோன்ற சம்பவங்கள் முன்னரே நடந்துள்ளதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். ஏந்தான் மூடிமறைக்கிறார்களோ? :-(((((

ஹுஸைனம்மா said...

அரபுத்தமிழன் - தலைப்புக்குக் காரணம், எதிலெல்லாமோ மனித இனம் முன்னேற்றம் கண்டுள்ளது என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் நாம், இவ்வகைக் குற்றங்கள் பெருகியுள்ளதையும் முன்னேற்றம் என்று கருதவேண்டுமோ என்ற ஆதங்கம்தான். காரசாரமாகத் தலைப்பு வைக்க, பரபரப்புக்காக எழுதப்பட்ட பதிவல்ல இது. பதறிப்போய், மனம் நடுங்கி, நொந்து எழுதியிருக்கிறேன்.

இதுபோன்ற வன்முறைகள் பெருகுவதற்கு இன்றைய டிவி,சினிமா போன்ற மீடியாக்களும் ஒரு முக்கியக் காரணம். இவற்றையெல்லாம் மிஞ்சுமளவிற்கு, பலரும் இன்று எழுத்திலும் காமத்தை வடிக்கிறார்கள். கேட்டால் கருத்து/எழுத்துச் சுதந்திரம் என்கிறார்கள்!! இவற்றைப் பார்க்கும்/படிக்கும் ஒருவன், தன் உணர்வுகளுக்கு வடிகால் இல்லையென்றால் என்ன செய்வான்?

இன்று அமீரகக் காவல்துறைத் தலைவர்கூட இதுபோன்ற ஒருகருத்துதான் தெரிவித்துள்ளார், ஆனால் வேறு தொனியில். பேச்சிலர்களாக இருக்கும் வெளிநாட்டினர்தான் இங்கு பாலியல் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் என்கிறார்.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஹூஸைனம்மா.... அப்பப்பா இந்த அதிர்ச்சியான தகவலை படித்ததும் ஒரு நிமிடம் ஆடி போய்ட்டேன்.தொடர்ந்து குழந்தைகளுக்கு இப்படி கொடுமைகள் நேருவது வருத்தத்திற்க்கு உரியதாகவும்,கவலைக்கு உரியதாகவும் உள்ளது.
இப்படிபட்ட மனிதர்களை நினைத்தால் மிகவும் கேவலமாக உள்ளது.இறைவன் இதுபோன்ற எண்ணங்களை கொண்ட மனிதர்களிடமிருந்து ஒவ்வொரு குழந்தையையும்,பெண்களையும் காப்பாற்றுவானாக....

அன்புடன்,
அப்சரா.

Avargal Unmaigal said...

ஹுசைனம்மா. உங்கள் பதிவை படித்த உங்களுக்காக எழுதிய பின்னூட்டம் பெரிதாக போனாதால் எனது ப்ளாக்கில் அதை பதிவாக போட்டுள்ளேன். நேரம் கிடைத்தால் படிக்கவும். அதற்கான லிங்க் http://avargal-unmaigal.blogspot.com/2011/01/child-sexual-abuse.html

எம் அப்துல் காதர் said...

//"குழந்தை வீட்டில் எதுவும் சொல்ல மாட்டாள்; சொன்னாலும் பெற்றோர் தம் அவமானம் கருதி வெளியில் சொல்ல மாட்டார்கள் என்பதால்தான்"//

இது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை ஹுசைனம்மா. இது ஒரு கலாச்சாரம் மாதிரியே சமீபகாலங் களில் பரவி வருகிறது.

உங்களின் இந்த பதிவுக்கு தொடர்ச்சியாக இங்கே இன்னும் கூடுதல் தகவல் பகிரப் பட்டிருக்கிறது..

http://avargal-unmaigal.blogspot.com/2011/01/child-sexual-abuse.html

அரபுத்தமிழன் said...

கண்ட கண்ட மொக்கைப் பதிவுகள் கவர்ச்சித் தலைப்பின் கீழ்
பதிவுலகில் பவனி வரும் வேளையில் இது போன்ற
அவசர / எச்சரிக்கைப் பதிவுகளுக்கு 'FLASH NEWS' ற தலைப்போடு
'கேட்சியாய்' வருவதில் தவறில்லை என்ற என் கருத்தில்
எந்த மாற்றமுமில்லை.

ஹுஸைனம்மா said...

அப்ஸரா
அப்துல் காதர்
அரபுத் தமிழன்
நன்றி.

அவர்கள்-உண்மைகள்:
நன்றி அவர்கள்-உண்மைகள். என்ன நடந்தது என்று சொன்னதுடன், எப்படி தடுக்க முடியும், என்ன செய்ய வேண்டும் என்றும் நான் சொல்லியிருக்க வேண்டும். நீங்கள் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

”என் இனிய தமிழ் மக்களே” என்ற பதிவு எழுதும் அன்னு என்பவர் இதுகுறித்து ஒரு தொடரே எழுதியிருந்தார், அந்த லிங்க் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், மறந்துவிட்டேன். இதோ: http://mydeartamilnadu.blogspot.com/2010/11/blog-post_09.html

baleno said...

நல்ல எச்சரிக்கை பதிவு. இப்படிப் பட்டவர்களின் செயல்களும், தொழிலாளர்களை கடும் வேலைப்பளுவால் துயரப்படுகினற நிலையில் வைத்திருக்கும் அமீரகங்களின் செயல்களும் மிகவும் கேவலமானவை.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..
ம்ம்..இந்த செய்தியை நானும் கண்ணுர நேர்ந்தது..பிஞ்சுகள் கண்கலங்குவதையே என்னால் தாங்கிக் கொள்ள முடியாது..பெரும்பாலும் ஷாப்பிங் மால்களில் பார்க்கும் பிள்ளைகள் ஏதும் அறியாமல் ஏன் இங்கு வந்தோம் என அறியாமல்,தாய் தந்தையின் கவனமின்றி கதறிக்கொண்டிருக்கும் காட்சியே என் மனதை உறுக்கிவிடும்.

சமீபத்தில் நடந்த கோவை குழந்தைகள் கொலை என்னை எந்த அளவு பாதித்து என்பதும் அதற்கான என்கவுண்டர் எனக்கு எத்துனை மகிழ்வை தந்தது என்பதும் எனக்கும்,என் ரப்புக்கும் மட்டுமே தெரியும்,

இந்த விஷயத்தில் பெற்றோர்களின் கவனக்குறைவை வெளியாட்கள் உணரும் வண்ணம் எத்துனை இயல்பான ஒன்றாகிவிட்டது என்பதை உணரமுடிகிறது..

இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் இந்த நிலை வரத்தான் செய்யும்.

பிள்ளைகளை அதீத கவனத்துடனும்,இது போன்ற பாதகர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் விழிப்புணர்வுகளையும் கொடுத்து வளர்க்க வேண்டியது அவசியத்திலும் அவசியம்..

johney,johney yes papa,
என்றே கற்றுக்கொடுத்து வளரும் பிள்ளைகளுக்கு,வாழ்க்கை சில வேலைகளில் no சொல்லும் போதும்,இப்படிப்பட்ட கிராதகர்களை முன்னோக்கும் போதும்,எப்படி எதிர்கொள்ளவேண்டும் என கற்றுத்தருவது அவசியமான ஒன்று,,,

இதை ஸ்பெஷல் கோச்கள்,மனநலமருத்துவர்கள் கொண்டு,பள்ளிகளே வாரமோ,அல்லது மாதம் ஒரு முறையோ வகுப்புகள் நடத்தினால் நன்மை பயக்கும்...
செய்வார்களா?

அன்புடன்
ரஜின்

மனோ சாமிநாதன் said...

நானும் இந்த விஷயம் தெரிந்து மிகவும் வேதனைப்பட்டேன் ஹுஸைனம்மா!
என் வீட்டில் வேலை செய்யும் பெண்கூட புலம்பித்தள்ளி விட்டது!
மிகப் பெரிய கொடூரமான குற்ற‌ங்களுக்குத் தரும் அதிகப்பட்ச தண்டனையை இந்தக் கொடுமையை செய்தவனுக்கும் தர வேன்டும். ஒரு சிறு குழந்தை தெய்வத்துக்கு சமானம் என்பார்கள். தன் புன்னைகையாலும் மழலையாலும் அது எப்படியெல்லாம் மனதுக்கு இதம் தருகிறது! மனிதனாயிருப்பவன் இந்த கீழ்த்தரமான செயலை செய்ய மாட்டான். அந்தக் குழந்தையின் பெற்றோரை நினைத்தாலும் மனம் கனக்கிறது! எந்த அள‌விற்கு மனதில் சித்திரவதையை அனுபவித்திருப்பார்கள்! ஆனால் பெற்றோர்கள் இந்த காலத்தில் பல மடங்கு விழிப்புணார்வுடன் இருக்க வேன்டும்.

மாதேவி said...

மிகுந்த வேதனைக்குரியது.

Anisha Yunus said...

//இதுபோன்ற வன்முறைகள் பெருகுவதற்கு இன்றைய டிவி,சினிமா போன்ற மீடியாக்களும் ஒரு முக்கியக் காரணம். இவற்றையெல்லாம் மிஞ்சுமளவிற்கு, பலரும் இன்று எழுத்திலும் காமத்தை வடிக்கிறார்கள். கேட்டால் கருத்து/எழுத்துச் சுதந்திரம் என்கிறார்கள்!! இவற்றைப் பார்க்கும்/படிக்கும் ஒருவன், தன் உணர்வுகளுக்கு வடிகால் இல்லையென்றால் என்ன செய்வான்?//

இதுதான் மிக மிக முக்கிய காரணம். ஒரு கார் டயரை விக்கவும் அரைகுறை ஆடை
அணிந்த பெண்ணை போடுவதாலும், குழந்தைகளுக்கும் அதிக கவர்ச்சி காட்டும் உடைகளை இன்றைய உலகம் வலுக்கட்டாயமாக் திணிப்பதாலும் இத்தகையவர்களின் மனம் தடுமாறுகிறது. நான் அவர்கலுக்காக வாதாடவில்லை, ஆனால், ஊடகம் முதல் இத்தகைய படங்கலையும் விளம்பரங்களையும்
அனுமதிக்கும் அரசு வரை எல்லோருமே உடந்தை...

என்ன சொல்லி என்ன பயன், பெற்றோரே இப்படி நடந்து கொண்டால்...

ஹுஸைனம்மா said...

பலேனோ - கடும் வேலைப் பளுவால துயரப்பட்டாலும், இதுபோன்ற கொடுமைகள் செய்வதை நியாயப் படுத்த முடியாது. அமீரகத்தின் செயல்கள் அத்தனை கேவலமானவை என்றால், இங்கே 30-35 வருடங்கள் என்று பலரும் தொடர்ந்து இருக்க மாட்டார்களே?

ரஜின் - ஆமாம், பள்ளியின் பாடத்திட்டங்களில் இதுபோன்ற பயிற்சிகளும் சேர்க்கப்படவேண்டும்!!

மனோக்கா - ஆமாக்கா, அந்தப் பெற்றோர்களின் நிலையும் வருத்தப்படக்கூடியதே.

மாதேவி - நன்றி.

அன்னு - குழந்தைகளுக்குக் கவர்ச்சியான உடை அணிவிப்பதின் ஆபத்துகளை இப்போதாவது அவர்கள் உணரட்டும்!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா, என்ன கொடுமைப்பா இதெல்லாம். அன்னு சொல்வது போல குழந்தைகளைத் தனியே அனுப்புவதோ, அபார்ட்மெண்ட் பொது இடங்களில் கண்காணிப்பு இல்லாமல் விடுவதோ மிகவும் தவறு.
எச்சரிக்கையான பதிவுக்கு மிகவும் நன்றி.