Pages

கண்காட்சி, இல்லயில்ல பொருட்காட்சி, நோ நோ, எக்ஸிபிஷன்!!






கடந்த வாரம் இங்கே அபுதாபியில் "World Future Energy Summit" நடந்தது. (முழிபெயர்ப்பு: உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு??) ரங்க்ஸ் ஆப்பீஸிலிருந்து போய்ட்டு கொண்டுவந்திருந்த brochures பாத்துட்டு, எனக்கும், பெரியவனுக்கும் ஆர்வம் தொத்திகிடுச்சு. போய்ப் பார்த்துட்டு வந்ததும், நாலு வருஷமா இது இங்கே  நடக்குதுன்னாலும், ரொம்ப டெக்னிக்கலா இருக்குமோன்னு நினைச்சு, கண்டுக்காம விட்டுட்டோமேன்னு தோணுச்சு.

நாம பதிவருல்ல, என்ன பாத்தோம்னு எழுதிடணும்ல. நாளைக்கு வரலாறுல நம்ம பேர் வரவேண்டாமா?

இதை மாநாடுன்னு சொன்னாலும், இது சம்பந்தமா நடக்குற கண்காட்சிதான் ரொம்ப விசேஷம். குறைந்து வரும் எண்ணெய் வளம், அழிந்து வரும் சுற்றுச் சூழல், பெருகி வரும் உலக வெப்பமயமாதலும், அதன் விளைவுகளையும் முன்னிருத்தி, இவற்றிற்கு மாற்றாகவும், சுற்றுச் சூழலை அழிக்காமல், வெப்பமயமாதலைத் தடுக்கவும் விழிப்புணர்வை மேம்படுத்தி, நாம் என்னென்ன செய்யலாம் என்பதைக் கலந்துரையாடி, , அவற்றிற்கான பொருட்களைச் சந்தைப்படுத்துவதுமே இதன் நோக்கம்.

http://algarvedir.com
 நிலத்தடி நீர் போல, எண்ணெய் வளமும் குறைந்து கொண்டே வருவதாலும், பெட்ரோல் போன்ற எரிபொருட்களால் வெளிப்படும் நச்சுப் புகைகளால் சுற்றுச்சூழல் மாசைத் தடுக்கவும் வேறு எரிபொருட்கள் கண்டுபிடித்து, பயன்படுத்த வேண்டிய சூழலில் உள்ளோம். அந்த இன்னொரு எரிபொருளும் பெட்ரோல் போல அல்லாமல், Renewable energy-ஆக, அதாவது, தீர்ந்துபோகாமல், மீண்டும் மீண்டும் புதுப்பிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்; அதேசமயம், சுற்றுச் சூழல் மாசையும், உலக வெப்பமயமாதலைக் குறைப்பதாகவும் இருக்க வேண்டும்.

http://johnsoncontrols.com
அந்த வகையில் சூரிய ஒளி, காற்று, மின்சாரம், உயிரி-எரிபொருள் (bio-fuel) ஆகியவை மாற்றாகக் கண்டறியப் பட்டுள்ளது மட்டுமல்ல, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அவற்றைப் பெருமளவில் பயன்படுத்தவும் ஆரம்பித்துவ்ட்டன. ஸோலார் பேனல்கள், காற்றாலை, கழிவுகளிலிருந்து மின்சாரம், கரும்பு, சோளம் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் பயோ-ஃப்யூயல் போன்றவை இன்னும் பரவலாகாததற்குக் காரணம், அவற்றின் விலை மற்றும் efficiency rate. ஆனால், அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் அரசே இதற்கு பெருமளவில் மானியம் மற்றும் வரிவிலக்கு போன்ற சலுகைகளித்து ஊக்குவித்ததாலும் அங்கே இவை இன்றியமையாதவையாகிவிட்டன. உதாரணமாக, ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் 40% மின்சாரம் இவற்றிலிருந்தே பெறப்படுகிறது. மேலும், மொத்த வாகனங்களில் 10% மின்சார சக்தியினால் (Electric cars) ஓடுகின்றன.

உலக Carbon footprint-ல் அமீரகத்தின் பங்கு அதிகமென்பதால், அமீரகமும் இவ்வுண்மைகளை உணர்ந்து, இங்கே அபரிமிதமாகக் கிட்டும் சூரிய ஒளியின் மீது தற்போது தீவிர கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது. மேலும், அமீரகத்தின் முதல் முயற்சியாக, அபுதாபியில் முற்றிலும் இயற்கை எரிபொருள் மற்றும் குறைந்த கார்பன் வெளியீடு என்ற அடிப்படையில் “மஸ்தார்” என்ற சிறு நகரத்தையே உருவாக்கி வருகிறது.

இந்தக் கண்காட்சியில் நான் அறிந்துகொண்ட புது விஷயம் "Carbon capture and storage" - CCS என்ற இதன் அடிப்படை என்னவென்றால், தொழிற்சாலைகள், எண்ணெய்க் கிணறுகள், வாகனப் புகை போன்றவற்றிலிருந்து வெளிப்படும் நச்சான கார்பனை பிரித்தெடுத்து, சேமித்து, அதை வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்துவது. புதிய விஷயம், இன்னும் வாசிக்க வேண்டும் இது குறித்து.

இந்தக் கண்காட்சியில், 80% ஸோலார் பேனல்கள் மற்றும் காற்றாலைகள் மட்டுமே இருந்தாலும், கண்ட சில புதிய ஐடியாக்கள் புதுமையாகவும், ஆச்சர்யமாகவும், கவரக் கூடியதாக இருந்தது. ஓரளவு Feasible கூட!! ஒண்ணொண்ணா பாப்போம் - அடுத்த பதிவுல!!
  
 

Post Comment

22 comments:

அரபுத்தமிழன் said...

பெட்ரோலுக்கு மாற்று என்றால் இங்கே
வைப்பார்களே வேட்டு :)

சாந்தி மாரியப்பன் said...

//தொழிற்சாலைகள், எண்ணெய்க் கிணறுகள், வாகனப் புகை போன்றவற்றிலிருந்து வெளிப்படும் நச்சான கார்பனை பிரித்தெடுத்து, சேமித்து, அதை வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்துவது. புதிய விஷயம்//

இது பயன்பாட்டுக்கு வந்தாலே பூமியின் சுற்றுப்புறமாசு கொஞ்சம் குறையும் போலிருக்கு..

தராசு said...

ரைட்டு, ஒரு தொடர் பதிவு ஸ்டார்ட்டு,

இன்ட்ரஸ்டிங் ஹுஸைனம்மா, தொடருங்கள்.

pudugaithendral said...

புது புதுத்தகவல்கள் அறிந்து கொள்ளும் தளம்னு ஒரு கேப்ஷன் உங்க வலைப்பூவுல வெச்சிருங்க ஹுசைனம்மா. வலையுலகுக்கு வந்த பிறகு நிறைய்ய படிக்கிறேன், நிறைய்ய கத்துக்கறேன். உங்க வலைப்பூவும் அதுல ஒண்ணு.

Vidhya Chandrasekaran said...

பல விஷயங்கள் புதுசா இருக்கு. தொடருங்கள் மேடம்.

வல்லிசிம்ஹன் said...

மாற்று சக்தி நமக்கு மிகவும் அவசியம்.
அதைப் பற்றி இவ்வளவு தீவிரமாக ஆராய்ந்து அதை நமக்குப் புரியும்படி கண்காட்சி நடத்தினார்கள் என்றால் பாராட்டப் படத்தான் வேணும். அதை நீங்கள் அக்கறையோடு எடுத்துப் பதிந்திருப்பதற்கு நன்றி ஹுசைனம்மா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சரியாச்சொன்னீங்க..நாம பதிவருங்க .. நடப்பதை பதிஞ்சு வைப்பது அவசியம்.. தொடருங்க..:)

Thenammai Lakshmanan said...

சுற்றுச் சூழலை கெடுக்காத ஃப்யூயல் அவசியம் தேவை.. உங்க அடுத்த பதிவுக்காக காத்து இருக்கேன்.. ஹுஸைனம்மா

ஸாதிகா said...

//"Carbon capture and storage" - CCS என்ற இதன் அடிப்படை என்னவென்றால், தொழிற்சாலைகள், எண்ணெய்க் கிணறுகள், வாகனப் புகை போன்றவற்றிலிருந்து வெளிப்படும் நச்சான கார்பனை பிரித்தெடுத்து, சேமித்து, அதை வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்துவது. புதிய விஷயம், இன்னும் வாசிக்க வேண்டும் இது குறித்து. //ஆஹா..இப்படிக்கூட இருக்கா?

Chitra said...

இப்போ எனக்கு நெல்லை பொருட்காட்சி - கண்காட்சி - exhibition ஞாபகம் வந்துடுச்சு.....MISSING IT!!!!

Muniappan Pakkangal said...

CCS nice Hussainamma.

Menaga Sathia said...

புதுப்புது தகவல்களை நிறைய தெரிந்துக் கொள்கிறேன் உங்கள் வலைப்பூவில்...தொடருங்கள்...

R. Gopi said...

தொடருங்கள்

எம் அப்துல் காதர் said...

//"கண்காட்சி, இல்லயில்ல பொருட்காட்சி, நோ நோ, எக்ஸிபிஷன்!!"//

மூணு தலைப்பு (குழப்பமில்லாமல்) வச்சாலும் அழகா விவரமா எழுதியிருக்கீங்க. :-)))

ADHI VENKAT said...

நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன். தொடருங்கள்.

ஆர்வா said...

செம இண்ட்ரஸ்டிங்கான மேட்டர்.. கலக்குறீங்க போங்க.. சுற்றுசூழல் சார்பா இந்த பதிவுக்கு ஒரு பொக்கே..

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ..
காலத்துக்கு ஏற்ற அவசியமான பதிவு..

மஸ்தார் - புதிய செய்தி அறியத்தந்தமைக்கு நன்றிகள்.

மாற்று எரிபொருள் தற்கால,எதிர்கால உலகின் தேவை..மாற்றித்தான் ஆகனும்..

அதோட..reduce-reuse-recycle அத ஃபாலோ பண்ணுரது அவசியம்.இன்றைய குழந்தைகளுக்கு அதை கற்றுத்தருவது முக்கியமான ஒன்று.
தேவை இல்லாமல் மின்சாரம்,தண்ணீர் வீண்விரையமாவதை தடுக்க பழக்கிக்கொடுக்க வேண்டும்..

அன்புடன்
ரஜின்

தூயவனின் அடிமை said...

காலத்துக்கு ஏற்ற அவசியமான பதிவு..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Very nice useful post akka...

எல் கே said...

//மெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் அரசே இதற்கு பெருமளவில் மானியம் மற்றும் வரிவிலக்கு போன்ற சலுகைகளித்து//

இதுதாங்க பிரச்சனை. அவங்க மானியம் கொடுத்து அவங்க தேவையை பூர்த்தி செஞ்சிகிறாங்க, ஆனால் வளரும் நாடுகள் இந்த மாதிரி மானியம் தரக் கூடாது அப்படின்னு பிரச்சனை. இந்த பிரச்சனை ரொம்ப நாளா போயிட்டு இருக்கு

Jayadev Das said...

Renewable Energy sources, Reduction of Carbon in air: இந்த வழியில் வெற்றி காண்பதில் தான் எதிர்காலம் இருக்கிறது.

Anisha Yunus said...

//நாம பதிவருல்ல, என்ன பாத்தோம்னு எழுதிடணும்ல. நாளைக்கு வரலாறுல நம்ம பேர் வரவேண்டாமா?//

ஏன் அந்த மாநாடு நடந்த எடத்துக்கு பக்கத்துலயே கல்வெட்டுல செதுக்கி வச்சிருங்களேன். ஆஃபீஸ்ல இருந்து அனுப்பிவிட்டாலும் விட்டாங்க இப்ப பதிவெழுதறதுக்காக மேட்டரை தேத்தறதே முழு நேர வேலையா ஆக்கிட்டீங்க போல. தோட்ட வேலை என்னாச்சுங்கக்கோவ்??