Pages

டிரங்குப் பொட்டி - 14






துபாய்ல ஒரு தமிழ் நண்பர் - வயசு அம்பதைத் தாண்டிடுச்சுன்னாலும், டீக்கா டிரஸ் பண்ணி “யூத்”தாகக் காமிச்சுக்க விரும்புவார். எப்பவும் டிப்-டாப்தான். ஒருநாள் அவர் ஆஃபிஸுக்கு வந்த ஒரு அமீரகக் குடிமகன் அவரிடம் “Are you from UK?" என்று கேட்டிருக்கிறார். அவ்வளவுதான், மிதக்க ஆரம்பித்துவிட்டார். தன்னை வெள்ளைக்காரன் என்று நினைக்குமளவு இருக்கிறோமா என்ற நினைப்பில், தடுமாற்றத்தில், என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் நிற்க.. தொடர்ந்த அந்த அரபி, “I asked are you from United Kerala?" என்று சொல்ல, அவ்வளவுதான். நொந்து நூடுல்ஸாகிப் போனார்!!

%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&

நம்ம பதிவர்களில் நிறையாப் பேர் ஹோட்டல் உணவு அனுபவங்கள் பற்றி எழுதுறாங்க. அப்படித்தான், குவைத்ல ஒரு பதிவர், ஒரு புது ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு, சாப்பாடு நல்லால்லன்னு எழுதப்போக, அவர்மேல நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துருக்கு நிர்வாகம். பதிவரோ, சக பதிவர்களின் (ட்விட்டர்) சப்போர்ட்டோட, வர்றதப் பாப்போம்னு சொல்றார்.

%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&

அரபுநாடுகளில் அடிக்கடி சொல்லப்படுற குற்றச்சாட்டு, வீட்டுப் பணியாளர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது. ஆனா, வித்தியாசமா, தங்கள் வீட்டில் வேலை பார்த்த இந்தோனேஷியப் பணிப்பெண்ணைப் படிக்கவைத்து, ஒரு பல்கலைக் கழக விரிவுரையாளராவும் ஆக்கிருக்காங்க ஒரு சவுதி அரேபியக் குடும்பத்தினர். இதெல்லாம் வெளிச்சத்துக்கே வராது!! செஞ்சவங்க விளம்பரத்தை விரும்பலை போல!! 

%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&

இதேமாதிரி வெளிச்சத்துக்கு வராத இன்னொரு நியூஸ், ஒரு குண்டுவெடிப்பு வழக்குல கைது செய்யப்பட்ட ஒரு நிரபராதியும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஜெயில்ல தற்செயலாச் சந்திக்க நேர, நிரபராதியோட கஷ்டங்களைக் கேட்ட குற்றவாளி மனம்திருந்தி அப்ரூவரா மாறிட்டார்!! சினிமா மாதிரியே இருக்குல்ல? அந்த நிரபராதி - அப்துல் கலீம்; குற்றவாளி - அஸிமானந்தா; அவர் தனக்காக ஆர்.எஸ்.எஸ்.-ஆல் நியமிக்கப்பட்ட வக்கீலையும் ஏற்க மறுத்துட்டார்.

%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&

கர்நாடக முதல்வர், தனக்கும் பில்லி-சூனியம் வைக்கப்பட்டதாகச் சொல்லி, அதற்கு பரிகாரம்கிற பேரில செய்யும் கூத்துகளை செய்திகளில் வாசிக்கிறீங்களா? ஐடியில் கொடிகட்டிப் பறக்கும் பெங்களூர்லயா இப்படின்னு இருக்கு. அதுசரி, புதுமை வந்துட்டாலும், பழமையை விட்டுடக் கூடாதுல்ல? சிலர் இப்படி வெளிப்படையா, சிலர் மறைமுகமா மஞ்சத் துண்டோட..! எட்டி சாருக்கு ஒரு சின்ஸியர் அட்வைஸ். வயசுபோன வயசுகாலத்துல, இந்தக் குளிர்ல, வெறுந்தரையில டிரஸ் போடாம படுத்தா ஜல்ப்பு பிடிச்சுக்கும்.

%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&

போன வாரம் ஒரு நாள், உளுந்து சாதம் செய்திருந்தேன். சின்னவன், (வழக்கம்போல), இது என்ன சாப்பாடுன்னு கேட்டான். சொன்னதும், உளுந்துன்னா என்னன்னான். உளுந்துவடைக்குப் போடுவோம்ல, அதுதான்னேன். எப்படிச் செய்வேன்னான். இட்லிக்குப் போடுற மாதிரி, அரிசியும், உளுந்தும் போட்டு, ஆனா அரைக்காம, அப்படியே குக்கர்ல வைக்கணும்னேன். அப்புறம் கொஞ்சம்கூட யோசிக்காம, “ஓ, இட்லி செய்யணும்னா கிரைண்டர்ல அரைக்கணும், அப்புறம் இட்லிச் சட்டியில அவிக்கணும். அதான், அப்படியே சோறா ஆக்கிட்டியோ?”ன்னான். அவ்வ்வ்வ்.... டேய்.. அப்படியே அப்பா மாதிரியே சிரிக்காம கவுக்குறியேடா???

%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&%&
  
 

Post Comment

49 comments:

Jaleela Kamal said...

பையன் அப்பா மாதிரிஏ ரொமப் ஷார்பாஅ.

இந்தோனோசிய பெண் தகவல் ஆச்சரியமா இருக்கு, அந்த அரபி ரொம்ப நல்லவரு

CS. Mohan Kumar said...

//குவைத்ல ஒரு பதிவர், ஒரு புது ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு, சாப்பாடு நல்லால்லன்னு எழுதப்போக, அவர்மேல நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துருக்கு நிர்வாகம்//

Thank God. we are not there!!

CS. Mohan Kumar said...

There are some new news. Thanks Madam.

MANO நாஞ்சில் மனோ said...

//குவைத்ல ஒரு பதிவர், ஒரு புது ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு, சாப்பாடு நல்லால்லன்னு எழுதப்போக, அவர்மேல நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துருக்கு நிர்வாகம்//

ஆத்தீ நான் பஹ்ரைன்'ல இருப்பதால் தப்பிச்சேன்.....

நட்புடன் ஜமால் said...

அவர்மேல நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து]]

always better to write good things ...

ஹுஸைனம்மா said...

ஜமால்,

அதுவும் நல்ல விஷயம்தானே, எச்சரிக்கை என்று எடுத்துக் கொண்டால்?

ADHI VENKAT said...

பலதரப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

ஸ்ரீராம். said...

வழக்கம் போல சுவாரஸ்யம்.

உளுந்து சாதம்?

சேக்காளி said...

அந்த நிரபராதி - அப்துல் கலீம்; குற்றவாளி - அஸிமானந்தா
இந்த ஆனந்தா ரொம்ப நல்லவரா இருக்காரு.

தமிழ் உதயம் said...

சாப்பாடு நல்லா இருந்தாலும், நல்லா இல்லாட்டினாலும் பேசாம்ம இருக்கிறது நல்லது. பார்த்த படம் சரியில்லைன்னு விமர்சனம் போட்டதால் யாரும் கேஸ் போட்டாலும் போடலாம்.

R. Gopi said...

\\துபாய்ல ஒரு தமிழ் நண்பர் - வயசு அம்பதைத் தாண்டிடுச்சுன்னாலும், டீக்கா டிரஸ் பண்ணி “யூத்”தாகக் காமிச்சுக்க விரும்புவார்.\\

உங்களைப் பாத்துக் கெட்டுப் போயிருக்கார்:-)

வெளிச்சத்திற்கு வராத ரெண்டு செய்திகளுமே சுவையானவை. பகிர்விற்கு நன்றி.

எங்க சிஎம்மை கிண்டல் பண்ணாதீங்க. ஆட்டோ அனுப்பி இருக்கேன்:-)

நீங்க ஊரையே கலாய்க்கிறீங்க. உங்க பையன் உங்களைக் கலாய்க்கிறார்:-)

ராமலக்ஷ்மி said...

நல்ல தொகுப்பு.

Prathap Kumar S. said...

//துபாய்ல ஒரு தமிழ் நண்பர் - வயசு அம்பதைத் தாண்டிடுச்சுன்னாலும், டீக்கா டிரஸ் பண்ணி “யூத்”தாகக் காமிச்சுக்க விரும்புவார். எப்பவும் டிப்-டாப்தான். //

இந்த சம்பவத்தின் உண்மை அப்படியே திரித்துக்கூறப்பட்டுள்ளது:))


//நீங்க ஊரையே கலாய்க்கிறீங்க. உங்க பையன் உங்களைக் கலாய்க்கிறார்//

:)))))))))))

ரங்குடு said...

எடியூரப்பா போன்ற பிற்போக்கு வாதிகள் இருப்பதை விட போய்ச்சேர்ந்தால் நாட்டுக்கு நல்லது.

வெங்கட் நாகராஜ் said...

உளுந்து சாதம்? பையன் நல்ல ஷார்ப் தான் போங்க! :)))))

ஜெய்லானி said...

//உளுந்து சாதம் செய்திருந்தேன் //

பச்சைபயறு கஞ்சி தெரியும் இது என்ன புதுசா..??? !!! அதோட ரெஸிபி போடுங்க ....!!!

கேக்கவே டெரரா இருக்கே :-))

ஜெய்லானி said...

///குவைத்ல ஒரு பதிவர், ஒரு புது ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு, சாப்பாடு நல்லால்லன்னு எழுதப்போக, அவர்மேல நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துருக்கு நிர்வாகம்//

கை கால் இப்பவே ஆடுது.. அவங்களுக்கு பிரான்ச் யூ ஏ இ ல இருக்கான்னு முதல்ல கேளுங்க ...:-))

Chitra said...

இது வரைக்கும் வந்ததில், த பெஸ்ட் பெட்டி ...இதுதான்.... சூப்பர்!

பீர் | Peer said...

இப்பவும் டிரங்குப் பொட்டி புதுசாத்தான் இருக்கு.

shafi-Sabiudeen said...

இந்த பதிவில் ஜாக்கி சேகர் சாயல் தெரிகிறது

Angel said...

thanks for sharing these infos.
bangalore... silicon valley of india ...awwww.

Anisha Yunus said...

//“ஓ, இட்லி செய்யணும்னா கிரைண்டர்ல அரைக்கணும், அப்புறம் இட்லிச் சட்டியில அவிக்கணும். அதான், அப்படியே சோறா ஆக்கிட்டியோ?”ன்னான். அவ்வ்வ்வ்.... டேய்.. அப்படியே அப்பா மாதிரியே சிரிக்காம கவுக்குறியேடா???//

இதையெல்லாம் "பல்பு"ன்னு தனி லேபிள்ல போட்டாக்க வரப்போற
ஜெனெரேஷன் பார்த்து பக்குவமா நடந்துப்பாங்க இல்ல?? :D

ஸாதிகா said...

சுவாரஸ்யமான பொருட்கள் அடங்கிய டிரங்குபொட்டி .துபாயில் யூத் ஆக காட்டிக்கொள்ளும் அந்த ஐம்பது வயதுக்காரர் மீது ஏன் ஹுசைனம்மா இந்த கொலவெறி??????

ஸாதிகா said...

கேக்கவே டெரரா இருக்கே :-))//

அதான் ஹுசைனம்மா.நம்ம ஹுசைனம்மா சாப்பாடிலும் டெரர் காட்டுவாங்க.

Sakthi said...

good i mean great

எம் அப்துல் காதர் said...

// இந்தோனேஷியப் பணிப் பெண்ணைப் படிக்கவைத்து, ஒரு பல்கலைக் கழக விரிவுரை யாளராவும் ஆக்கிருக்காங்க ஒரு சவுதி அரேபியக் குடும்பத்தினர். இதெல்லாம் வெளிச்சத்துக்கே வராது!! செஞ்சவங்க விளம்பரத்தை விரும்பலை போல!! //

நிச்சயமா!! இதுலேந்து என்ன தெரியுது நீங்க arab news தொடர்ந்து படிக்கிறிங்க!! அதுபோல நீங்களும் விளம்பரத்தை விரும்பலை போல!! :-))

எம் அப்துல் காதர் said...

ஜெய்லானி said

//பச்சைபயறு கஞ்சி தெரியும் இது என்ன புதுசா..??? !!! அதோட ரெஸிபி போடுங்க ....!!! //

என்ன இது பாஸ், ஹுசைனம்மா ப்ளாக் ஸ்பாட்லையா சமையல் குறிப்பு போடச் சொல்றீங்க அவ்வ்வ்வவ்!!

enrenrum16 said...

வெளிச்சத்துக்கு வராத செய்திகள் நிஜமாவே வியப்பளிக்கின்றன...

கர்நாடக முதல்வர் செய்தி - தலையில் அடிச்சுக்கிறத தவிர வேற என்ன செய்ய?!

உளுந்து சாதம் - அந்த கஷ்டமான நேரத்திலையும் பையன் எப்படி யோசிக்கிறான் பாருங்க...;)

Geetha6 said...

super!!

எல் கே said...

//உளுந்து சாதம் செய்திருந்தேன்/

செய்முறை வேண்டும்... அடுத்தப் பதிவாக இதை போடவும் ... நேயர் விருப்பம்

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ ஹுஸைனம்மா..

கலவையான செய்திகள் அத்துனையும் அருமை..
கடைசியாக உங்க பையன் உங்களுக்கு கொடுத்த பல்புதான் ஹைலைட்..

தொடர்ந்து பல்பு வாங்க வாழ்த்துக்கள்ஸ்..

அன்புடன்
ரஜின்

தூயவனின் அடிமை said...

நல்ல தொகுப்பு, இன்றைய பிள்ளைகளிடம் பேச்சு கொடுத்து மீள முடியாது, அது எனக்கு தான் தெரியும்.

R.Gopi said...

//“I asked are you from United Kerala?" என்று சொல்ல, //

ஹா…ஹா… ஹா… ஓப்பனிங்கே டெர்ர்ரா இருக்கே….

//ஒரு புது ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு, சாப்பாடு நல்லால்லன்னு எழுதப்போக,//

அவரோட நேரம் பாருங்க... நல்லா இல்லாத சாப்பாடு சாப்பிட்டு பில்லும் பே பண்ணி, இப்போ நஷ்ட ஈடுமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்..........

//இதெல்லாம்வெளிச்சத்துக்கே வராது!//

வாவ்... அதான் இப்போ வெளிச்சத்துக்கு வந்துடுச்சே.... பாராட்டத்தக்க முயற்சியை பாராட்டி விடுவோம்...

//அந்த நிரபராதி - அப்துல் கலீம்; குற்றவாளி – அஸிமானந்தா//

நிரபராதி விடுதலை ஆனால் மகிழ்ச்சி...

//சிலர் இப்படி வெளிப்படையா, சிலர்
மறைமுகமா மஞ்சத் துண்டோட..! //

ஹா..ஹா...ஹா... செம உள்குத்து, வெளிகுத்து... “தல” இந்த வயசுல இம்மாம் குத்து குத்தினா தாங்குவாரா... தாங்குவாராமாம்... அவரு “தில்லுதுரை”யாம்...

சின்னவனின் வழக்கமான கலாய்த்தல் இந்த முறை உளுந்து வடிவில் வந்த்து ரசிக்கத்தக்கதாக இருந்த்து...

ஹூஸைனம்மா... டிரங்கு பொட்டி படு சூப்பர்... வாழ்த்துக்கள்....

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா உளுந்து சாத ரெசிபி கொடுக்கவும்.

ஹுஸைனம்மா said...

ஜலீலாக்கா - வாங்க. ஆமா, அப்பா மாதிரி பையனும் ‘ஷார்ப்’தான். நீங்களுமா? :-(((

மோகன் - ஏன், இந்தியாவுல யாருமே மானநஷ்ட வழக்கு போடமாட்டாங்களா? :-)))

நாஞ்சில் மனோ - மேலே உள்ள பதில்தான் உங்களுக்கும்!! :-)))

ஜமால் - வாங்க; நன்றி.

கோவை2தில்லி - நன்றி.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் - வாங்க. ஏன் உளுந்து சாதத்துக்கு கேள்விக்குறி?

சேக்காளி - (எல்லா சமயத்திலும்) ஆனந்தாக்களில் நல்லவர்களும் இருப்பதில் ஆச்சர்யமும் வருது, இல்லையா? காலம் அப்படி!!

தமிழ் உதயம் - நானும் படவிமர்சனம் எழுதுறவங்கமேல கேஸ் போட ஆரம்பிச்சா என்னாகும்னு யோசிச்சேன்.

கோபி ராமமூர்த்தி - ஆட்டோ இங்க பத்திரமா வந்து சேந்திடுமா? ”அங்க கொண்டதை இங்க இறக்கு”னு சொல்வாங்க. அதான், என் பையனே என்னைக் கலாய்க்கிறான். :-(((

ஹுஸைனம்மா said...

ராமலஷ்மிக்கா - நன்றி.

பிரதாப் - இதில திரிக்க என்ன இருக்கு? அதென்ன அரிசியா, ரவையா திரிக்கிறதுக்கு? :-)))))

ரங்குடு - நன்றி.

வெங்கட் சார் - உளுந்து சாதம் யாருமே கேள்விப்பட்டதில்லை போல?? அப்ப நானும் சமையல் பிளாக் ஆரம்பிக்கலாம் போலயே?

ஹுஸைனம்மா said...

ஜெய்லானி - வாங்க. நீங்களுமா? “என்னைப் பாடச் சொல்லாதே” மாதிரி “என்னை ரெஸிப்பி போடச் சொல்லாதே”யின்னு பாடணும் போல வருதே!! :-)))))

அவங்களுக்கு இங்கே பிராஞ்ச் இருக்காயில்லையான்னு நீங்க ஏன் கவலைப்படுறீங்க? நீங்கதான் சாப்பாட்டுக் கடை எழுதுறதில்லையே? :-))))

சித்ரா - நிஜமாவே கலாய்க்கிறமாத்ரி இருக்கே!!

ஹுஸைனம்மா said...

பீர் - ஆமா, அப்பப்ப சுத்தமா துடைச்சு, கழுவி, காய வைக்க்றோம்ல, அதான் புதுசாவே இருக்கு!! :-)))) ஆமா, புது ப்ரொஃபைல் ஃபோட்டோவைப் பாத்தா ரொம்ப அடிபட்ட மாதிரி இருக்கே? :-))))

ஷஃபி - என்னது, ஜாக்கி சேகர் சாயல் தெரியுதா? அவ்வ்வ்வ்வ்.... யாருங்க நீங்க? நான் ஹாட்/ஹாட்டர்/ஹாட்டஸ்ட்னு படம் போட்டு இங்க்லீஷ் பாடம் நடத்துறதில்லையே, அப்புறம் எப்படி? பதிவ எழுதினா, ரெண்டுமூணு தரம் வாசிச்சு செக் பண்ணித்தான் பப்ளிஷ் பண்ணுவேன்; அப்புறமும் ஏன்? ஏன்? ஏன்? ஏன்? வொய் திஸ் மர்டர்வெறி?

ஏஞ்சலின் - வாங்க; நன்றி, நானும் அதே அவ்வ்வ்வ்.. தான்!!

ஹுஸைனம்மா said...

மலிக்கா - நன்றிப்பா!!

அன்னு - ரொம்ப சிரிக்காதீங்க. உங்க பசங்களும் வளர்ந்து வருவாங்க. கேள்விகள் கேப்பாங்க. அப்ப நானும் இதையேச் சொல்றேன். காலச்சக்கரம் சுழலாமலாப் போகும்!!

ஸாதிகாக்கா - துபாய்க்காரருமேல எனக்கென்னாக்கா கோவம்? அந்த அரபிக்குத்தான் ஏதோ காண்டுபோல!!
சக்தி - நன்றி.

காதர் - அரப் நியூஸ் அப்பப்போதான் படிக்கிறேன். தொடர்ந்து படிக்க முடியல, முன்னைப்போல. //ஹுசைனம்மா ப்ளாக் ஸ்பாட்லையா சமையல் குறிப்பு// - அதானே, நீங்களே எடுத்துச் சொல்லுங்க எல்லாருக்கும், வேலில போற ஓணான் கதையை!!

ஹுஸைனம்மா said...

என்றென்றும் 16 - //அந்த கஷ்டமான நேரத்திலையும் பையன் எப்படி யோசிக்கிறான் பாருங்க// நான் சமைக்கப் படுற கஷ்டத்தவிட இது பெரிய கஷ்டமா என்ன? அவங்கப்பா மாதிரியே கஷ்டத்தைச் சிரிச்சு, சிந்திச்சு கடக்கிறான்போல!!

கீதா6 - நன்றி.

எல்.கே. - வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு!! என் சபதத்தை மீற வச்சுடாதீங்க!! :-))))))

ரஜின் - வாழ்த்துக்களா? தினம் ஒரு பல்பாவது கிடைக்குதுதான். இருந்தாலும், சுயகௌரவம் கருதி...

ஹுஸைனம்மா said...

தூயவன் - ஆமாங்க. நன்றி.

ஆர்.கோபி - ’மஞ்சத்துண்டு’ தலக்கு இந்தக் குத்தெல்லாம் ஜுஜுபி!! நன்றி.

வல்லிம்மா - அது 10-12 வருஷங்களுக்கு முன்னே, சன் (அல்லது டிடி)யில் பிரபல பேச்சாளர் திருமதி. சாரதா நம்பி ஆருரன் கொடுத்த ரெஸிபி. அரிசி,உளுந்து, தண்ணீர் = 4:1:3 என்ற அளவில் வைத்து, 5-6 பூண்டு, சிறிய துண்டு கருப்பட்டி, 4-5 டீஸ்பூன் நல்லெண்ணை, ஒருகை தேங்காய்ப்பூ போட்டு, குக்கரில் வேகவைக்க வேண்டும். இதன் காம்பினேஷன் எள்ளூத் துவையல். பெண்களுக்கு அவசியமான சத்தான உணவு என்பதால் அவ்வப்போது செய்வேன். ஆனால், என் பிள்ளைகளிடம் இதற்கு வரவேற்பில்லை!!

மாதேவி said...

"டிரங்குப் பொட்டி" :))

அமுதா கிருஷ்ணா said...

இந்தோனேஷியா பெண் படிப்பு அருமையான விஷயம்.பையன் அருமையான கேள்வி கேட்டுள்ளான்.

சாந்தி மாரியப்பன் said...

நம்மூர் ஸ்பெஷல் உளுந்தஞ்சோறு, என் பொண்ணுக்கும் பிடிக்காது :-)))

ஸ்ரீராம். said...

உளுந்து சாதம் பற்றி நான் கேள்விப் பட்டதில்லை. என்ன என்று கேட்கத்தான் "?"

vanathy said...

யுனைட்டட் கேரளாவா??? இப்பதான் கேள்விப்படுறேன்.
நல்ல பதிவு.

ஹுஸைனம்மா said...

மாதேவி - நன்றி.

அமுதா கிருஷ்ணா - நன்றி. பசங்க கேள்வியெல்லாம் அம்மாகிட்டதான். பொண்டாட்டிட்ட கப்சிப்தான்!!

அமைதிச்சாரல் - அப்படியா? உளுந்துச்சோறு எந்த ஊர் ஸ்பெஷல்னு சொல்றீங்க? நான் முதமுதல்ல டிவியிலத்தான் பார்த்தேன். அதுவும், அவங்க ஊர் சமையல்னுதான் சொன்னாங்க (எந்த ஊர்னு நினைவில்லை). அது டேஸ்ட் ரொம்ப ரசிக்கும்படியா இருக்காது. அதனாலத்தான் பிள்ளைகளுக்குப் பிடிக்காது. எங்க ஊர்ல உளுந்துகஞ்சி, உளுந்துகளி செய்வாங்க. எனக்குத் தெரியாது. தங்கச்சிதான் செஞ்சு தருவா எனக்கு!! (ஹி..ஹி..)

ஸ்ரீராம் சார் புரிஞ்சுது, ஆனாலும்..

வானதி - ஆமா, மலையாளிகளின் இயல்பு பற்றி அரேபியர்களுக்கும் தெரிஞ்சிருக்கதாலத்தான் இந்தப் பேர்சூட்டல்!!

apsara-illam said...

டிரங்கு பெட்டி பார்க்க,படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது....
ஒவ்வொன்றும் புதிய தகவல்கள்.
நன்றி... மற்றும் பாராட்டுக்கள்.

அன்புடன்,
அப்சரா.